• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் இறுதி அத்தியாயம்

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 35

"என்ன நந்தினி டக்குனு கிளம்பிட்ட? நீ கௌதம் அத்தான் கல்யாணம் முடிஞ்சி தான் வருவேன்னு சொல்லுவன்னு நினச்சேன்"

"ஹ்ம்ம்! நீங்களா வா போகலாம்னு கூப்டுவீங்கனு நினச்சேன். விட்டது தொல்லைனு நீங்க கிளம்பிட்டிங்க. அதான் அண்ணா சொல்லவும் நீங்க தொல்லையா நினைச்சாலும் பரவாயில்லைனு தொவ்விகிட்டேன்"

"அய்யயோ! அப்டிலாம் இல்ல நந்தினி. எனக்கும் கூப்பிடனும்னு ஆசைதான். நான் கூப்பிட்டு நீ வர்லைனா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் அதான்... "

"ஹ்ம்ம்! அப்ப நான் வர்றது உங்களுக்கு ஓகே தானே?"

"ஓகே வா? சந்தோசம்னு சொல்லனும். தனியா கிளம்பும் போதே இனி ஒரு வாரம் தனியா இருக்கணுமேனு நினச்சேன். நல்லவேளை ராம் அத்தான் காப்பாத்திட்டாங்க"

"அப்டியா? நான் வந்தா மட்டும் என்ன பண்ணிட போறீங்க?"

'என்ன பண்ணிட முடியும்' சக்தி முணுமுணுத்துக் கொள்ள,

“இப்ப உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்னு தோணுது. சொல்லலாமா?” நந்தினி கேள்வியாய் கேட்க,

“என்ன விஷயம் நந்தினி?”

“கௌதம் அண்ணா நீங்க அவங்ககிட்ட கல்யாணத்தன்னைக்கு பேசின விஷயத்தை எங்கிட்ட நேத்து தான் சொன்னாங்க” என்று அவள் சொல்ல, புரியாமல் பார்த்தான் சக்தி.

கௌதம் நேற்று நந்தினியிடம் பேசியதை சக்திடமும் சொல்லியிருந்தான் தான். ஆனால் கல்யானத்தன்று பேசியதை தான் அன்று இரவே இவள் கூறினாளே? நேற்று தான் பேசினார் என்றால் என் காதல் எப்படி இவளுக்கு முன்பே தெரியும்? என பல கேள்விகளோடு முகம் சுருக்கி யோசனையில் நின்றான் சக்தி.

“குலதெய்வ கோவிலுக்கு போறதுக்காக கல்யானத்துக்கு முன்னாடி நம்ம ஊருக்கு வந்தோம் நியாபகம் இருக்கா?” நந்தினி கேட்க, அந்த தினத்தை மறப்பானா என்ன? ஆம் என்றான்.

அன்னைக்கு தான் நீங்க வாங்கி வச்சிருந்த புக்ஸ் எல்லாம் பார்த்தேன். எல்லாமே நான் ரசிச்சு ரசிச்சு படிச்ச எழுத்தாளர்களோட புக்ஸ். அத்தோட சில வரிகள்ல நீங்க போட்டிருந்த கோடு… காதலிக்குற மனுஷனுக்கான எல்லா சிம்ப்டம்ஸ்ஸும் அதுல தெரிஞ்சது. அப்பவே அது…. நீங்க என்னை தான் நினச்சுட்டு இருக்கீங்கன்னும் புரிஞ்சது. ஆனால் அப்ப நான் உங்கள் உணர்வுகளை பெருசா எடுத்துக்கல” என்று அவன் முகம் பார்க்க, அவன் என்ன நினைக்கிறான் என்று அவன் பார்வையில் புரிந்துகொள்ள முடியவில்லை.
மீண்டும் அவளே தொடர்ந்தாள். “ஆனால் இப்ப அப்படி இல்ல சக்தி. ஏன் எப்ப எப்படி இந்த எந்த கேள்விக்கும் எங்கிட்ட பதில் இல்ல. ஆனால்… ஆனால் உங்களை எனக்கு புடிச்சிருக்கு” வேளியே வேடிக்கை பார்த்து அவள் சொல்லிவிட, சக்திக்கு அப்படி ஒரு ஆச்சர்யம்… அப்படி ஒரு சந்தோஷம்.

“நந்தினி நிஜமாவா சொல்றிங்க?” கண்களை முழுதாய் விரித்து அவன் கேட்க,

"எல்லாத்தையுமே வாயை திறந்து சொல்லிட்டு இருக்க முடியாது. சிலதெல்லாம் நீங்களே புரிஞ்சிக்கணும்" இருபொருளுடன் சொன்ன நந்தினி அவள் இடம் சென்று அமர்ந்து கொண்டாள் ரயிலில்.

சக்திக்கு முகத்தில் தானாக ஒரு புன்முறுவல் வந்து ஒட்டிக் கொண்டது. அப்படி ஒரு மகிழ்ச்சி கூட. சில நாட்களாகவே அவளின் மாறுதல் புரியாமல் இல்லை. மனதுள் ஒரு நிறைவும் கூட.

அவள் அவனை வெறுத்த காரணங்கள் எல்லாம் அப்படியே தானே இருக்கிறது. ஆனாலும் அவனை அவனாக, அவனுக்காகவே ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

ஏற்றுக் கொண்டாளா? ஆம்! ஏற்றுக் கொண்டாள் தானே!.

நேற்று அனுவை காப்பாற்றி கூட்டி சென்று மல்லிகாவிடம் விட்டு வந்த கௌதம் இரவு மொட்டை மாடியில் நின்ற சக்தியிடம் வந்தான்.

"என்ன மாப்பிள்ளை தனியா என்ன பண்றீங்க?" கௌதம் கேட்க,

"சும்மா தான் அத்தான்" என்றவனை விடாமல் கௌதம் பார்த்து நிற்க,

"உங்களையும் ராம் அத்தானையும் நினச்சா ரொம்பவே பெருமையா இருக்கு அத்தான். எவ்வளவு பெரிய வேலை எல்லாம் ஈஸியா செய்யுறிங்க!" நிஜமாகவே புகழ்ந்தான் சக்தி.

"அது இருக்கட்டும்! அதென்ன நாளைக்கு நீங்க மட்டும் ஊருக்கு? ஏன் நந்தினி திரும்ப வேதாளம் மாதிரி முருங்கை மரம் ஏறிக்கிட்டாளா?" ஆழம் பார்த்தான் சக்தியை.

"ச்ச! ச்ச! அப்படியெல்லாம் இல்ல அத்தான். சொல்லபோனா நந்தினி இப்ப முன்ன மாதிரி எல்லாம் இல்லை. ரொம்ப நல்லா பேசுறா"

"ஆஹான்! அப்புறம்?"

"என்னத்தான் நம்பலையா?"

"நம்பலாம் தான்! நந்தினி என்கிட்டயே சொன்ன அப்புறம் நம்பாமல் இருப்பேனா?"

"நந்தினியா? என்ன சொன்னா?" நிஜமான ஆச்சர்யத்தோடு சக்தி கேட்டான்.

"ம்ம்! நீ மட்டும் கிளம்புறேன்னு சொன்னியே! அதான் மேடம்கிட்ட பேசலாம்னு போனேன். போனதும் நந்தினி தேங்க்ஸ் சொன்னா" என்று சொல்ல, ஏன் என்றவாறு பார்த்து நின்றான் சக்தி.

"அன்னைக்கு நந்தினி மைண்ட் செட் வேற! அவ உங்ககூட வரத்துக்கே..." கௌதம் இழுக்க,

"தெரியும் அத்தான். அப்ப நந்தினிக்கு நிறைய கருத்து வேறுபாடு இருந்துச்சு. நீங்க சொல்ல வர்றது புரியுது"

"ஹ்ம்ம்! நானும் ராமும் அவகிட்ட பேசி உன்னோட அனுப்பி வச்சோம். அன்னைக்கு அப்படி அனுப்பி வச்சதால தான் இன்னைக்கு உன்னை பத்தி புரிஞ்சுக்க முடிஞ்சதாம். மேடம் இப்ப ரொம்ப சந்தோசமா இருக்காங்களாம். உங்களை அவளுக்கு ரொம்ப புடிச்சி போச்சாம்" கௌதம் கதை போல சொல்ல, சக்திக்குள் பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பித்தது.

"நிஜமாவா சொல்றிங்க?"

"ப்ச்! என்ன சக்தி நம்பிக்கை தானே வாழ்க்கை"

"அத்தான் கிண்டல் தானே பண்றிங்க?"

"கண்டுபுடுச்சிட்டியே சக்தி! பட் ஜோக்ஸ் அப்பார்ட், நந்தினி இப்ப ரொம்ப நல்ல மூட்ல இருக்கா. அண்ட் நல்ல சேன்ஜெஸ் கூட. அப்படியே கேட்ச் புடிச்சுக்கோங்க. நாளைக்கு போறதா இருந்தால் நந்தினியும் சேர்த்து கூட்டிட்டு போங்க" என்று கைகொடுத்தான்.

சக்தியிடம் இதற்கு பதில் இல்லை. வா என்று கூப்பிட ஒரு நிமிடம் போதும். அவளும் வந்து விடுவாள் தான். அவள் மனதில் தனக்கென ஒரு இடம் கொடுத்து வைத்திருக்கிறாள். அந்த மரியாதைக்காக வருவாள் தான். ஆனால் அவள் மனதார வருவாளா? அப்படி தானே எதிர்பார்க்கிறான்!.

"பார்க்கிறேன் அத்தான்" என்றவன் இறங்கிவிட, யோசனையுடன் நின்று விட்டான் கௌதம்.

இதை யோசித்த சக்தி அதன்பின் நடந்ததில் ஒரு சிரிப்புடன் நந்தினியிடம் சென்றான். அதன்பின் ஒரு அமைதியுடன் தான் அவர்கள் ரயில் பயணம் சென்றது. ஆனால் அதில் கூட ஒரு சந்தோஷம் இருக்கவே செய்தது இருவருக்கும்.

மல்லிகாவிற்கு சொன்னது போலவே கௌதம் கண் சிகிச்சைக்கு அழைத்து சென்று கொண்டு தான் இருக்கிறான். ஆனால் பொருத்தமான கண் தான் உடனே கிடைக்கவில்லை.

அது நடக்கும் போது தானே நடக்கட்டும் என்று எப்போதும் போலவே இருந்து கொள்வார் மல்லிகா. இப்போது ஏனோ கௌதமை தன் கண் நிறைய பார்க்க வேண்டும் என்ற ஆவலில் மருத்துவரை பார்க்க சென்றவருக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.

"என்னம்மா இன்னைக்கு ரொம்ப டல்லா தெரியுறீங்க? உடம்புக்கு எதுவும் பண்ணுதா?"

மருத்துவரை பார்த்துவிட்டு வரும் வழியில் கௌதம் கார் ஓட்ட, வாசு அன்னையிடம் கேட்டாள்.

"ஆமா!"

"என்னம்மா செய்யுது?...” “ஹாஸ்பிடல் போலாமா மல்லிம்மா?" வாசுவும் கௌதமும் மாறி மாறி கேட்க,

"அதெல்லாம் ஒன்னும் வேணாம் போங்க" எரிச்சலில் தான் வந்தது மல்லிகா குரல்.

"வாசு! வேற ஏதோ டென்ஷன் போலயே? என்னவா இருக்கும்?" கௌதம் யோசிப்பது போல பாவனை செய்ய,

"ஒருவேளை அனு அவ உட்பி கூட வெளில போனது பிடிக்கலையோ?" கிண்டலாய் கௌதம் கேட்க,

"வாயிலேயே போடுவேன்னு சொல்லு வாசு! அவளுக்கு ஒரு நல்லது நடந்திருக்குன்னு நான் சந்தோசமா இருக்கேன். அது பொறுக்காதே!" என வாசுவிடமே மல்லிகா புலம்ப,

"ஓஹ்! அப்ப கோபம் என் மேல தானா? நான் வேணா ஐஸ்கிரீம் வாங்கி தரவா?"

"நான் என்ன சின்ன புள்ளையா? சும்மா இருந்தவளை கண்ணு தர்றேன் கண்ணு தர்றேன்னு ஏமாத்திட்டு இருக்கீங்க. கேட்டா ஐஸ்கிரீம் வாங்கி தருவானாம்" உரிமையாய் அவன்மேல் கோபம் கொண்டார் மல்லிகா.

"பார்றா! அப்ப அத்தைக்கும் எல்லாரையும் பார்க்கனும்னு ஆசை வந்திடுச்சு போலயே! ஆனால் அதுக்கு நேரம் வரலையே! நான் என்ன மல்லிம்மா பண்ணுவேன்?" பாவம் போல கௌதம் சொல்ல,

இருவரையும் ரசனையோடும் ஆச்சர்யத்தோடும் பார்த்துக் கொண்டிருந்தாள் வாசு.

"அட போடா! அதான் எல்லாரையும் நான் பார்த்துட்டேனே! உன்னை மட்டும் ஒரேஒரு வாட்டி பார்த்துட்டா போதும். மறுபடியும் கண்ணு போனா கூட எனக்கு பரவால்ல"

"மல்லிம்மா.. ம்மா..." இருவரின் குரலும் ஒரே போல ஒலிக்க,

"அதான் இன்னும் வரலையே! வராத கண்ணுக்கு ஏன்டா எமோஷனல் ஆகுறீங்க?" மல்லிகா கூறிய தோரணையில்லை இருவரும் சிரித்து விட்டனர்.

"ம்மா! வரவர கௌதம் கூட சேர்ந்து சின்ன புள்ள மாதிரி ஆயிட்டீங்க மா. கௌதம் சொன்னா செய்வாரு" வாசு சொல்ல,

"நீ சொல்லாட்டியும் எனக்கு தெரியும் போ டி" என்றதும் கௌதம் சிரிக்க, அவனுக்கு அழகு காட்டினாள் வாசு.

"ப்ச்! ஆனாலும் எனக்கும் ஒரு ஆசை இருந்துச்சு மல்லிம்மா. அனு மேரேஜ்குள்ள உங்க கண்ணை சரி பண்ணிடலாம்னு நினச்சேன். சாரி என்னால பண்ண முடியலை" வருத்தத்துடன் கௌதம் சொல்ல,

"எனக்கு அது கவலையே இல்ல கௌதம். நீ இருக்கும் போது அனு கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு நம்பிக்கை இருக்கு" என்ற வார்த்தைகளில் உருகி தான் போனான் கௌதம்.

சகுந்தலா குரல் மனதில் ஒலித்தது. அவரும் இப்படி தானே உரிமையாய் ஒவ்வொரு விஷயத்தையும் கூறுவார்.

அம்மா இல்லை என்ற ஏக்கம் அதிகம் வந்தது இல்லை என்ற போதும் இப்போது சகுந்தலா, மல்லிகா இவர்களின் அன்பில் அப்படி கரைந்து கொண்டிருந்தான் கௌதம்.

இதோ சிவா-அனு திருமண நாள்.

கௌதமை போலவே அனுவுடன் வாயடித்து லூட்டி அடிக்கும் கொழுந்தனாய் விஷ்வா. விஷ்வா ரேகா காதலை ஏற்று ரேகாவும் அந்த திருமணத்தில் கலந்திருக்க, கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இல்லாமல் சென்றது அனுவின் திருமண வைபோகம்.

"நிவி! இங்கே என்ன பண்ற? வா அந்த ரூம் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.....”

“நிவி! நீ ஏன் இந்த வேலை எல்லாம் பாக்குற? இங்க வா இதோ இப்படி உட்காரு.....”
“நிவி! இந்தா இந்த ஜுஸ் குடி. ஏன் டல்லா இருக்குற? டையர்டா இருக்கா? நான் வேணா உன்னை உங்க அம்மா வீட்ல விட்டுட்டு வரவா? ராஜ் கூட வந்திருக்குறதா போன் பண்ணினான்...."

நிவியை எந்த வேலையும் செய்ய விடாமல் ராம் அவள் பின்னாடியே சுற்ற, அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பார்வையிலும் பட தவறவில்லை.

நிவி அன்னை தந்தையுடன் அவள் அண்ணன் ராஜ் குமாரிடமும் ராம் சகஜமாய் பேசக் காரணம் நிவி அல்ல கௌதம் தான். எல்லா உறவும் முக்கியம் என்ற தாரக மந்திரம் கௌதம் உடையது.

ராஜ் மனைவிக்கு 7 மாதம் என்பதால் நிவி குடும்பம் இன்று கலந்து கொள்ளவில்லை.

"அய்யோ ராம்! இப்படி பின்னாடியே சுத்தி நீங்களே காட்டி குடுக்காதிங்க. நாம ஹாஸ்பிடல் போய்ட்டு அப்புறமா தான் கான்போர்ம் பண்ணனும்" நிவி ராம் காதில் கிசுகிசுக்க, அவர்கள் அருகில் வந்தனர் சகுந்தலா, செல்லம்மா இருவரும்.

"என்னடா, நானும் அப்ப இருந்து பாக்குறேன் நீ அவளை ஓவரா தாங்குற.. அவ உன்னை முறைக்குறா? என்னடா நடக்குது? உண்மைய சொல்ல போறிங்களா இல்லையா?" சகுந்தலா சந்தேகம் கொண்டு பொறுக்க முடியாமல் கேட்டுவிட,

நிவி ராமை முறைத்தவள் "அத்தை! அது.. அது வந்து நாள் தள்ளி போயிருக்கு. ஹாஸ்பிடல் போய்ட்டு உங்ககிட்ட சொல்லலாம்னு..." என்றவளை பேசவிடாமல் அணைத்து நேற்றியில் முத்தம் கொடுத்து கொண்டாடிவிட்டார் சகுந்தலா.

அவர் சத்தத்தில் அனைவரும் கூடிவிட எல்லாருக்குமே விஷயத்துடன் ஸ்வீட்டும் பகிரப்பட, நிவி கண்களில் இருந்து தப்பித்து ஆட்டம் காட்டினான் ராம்.

கௌதம் ராம் சக்தி மூவரும் பெண் வீட்டு வேலைகளை சிட்டுகளாக பறந்து செய்ய, சகுந்தலா மல்லிகாவுடன் செல்லம்மாவும் அமர்ந்து கொள்ள, வாசு, நிவி, நந்தினி, ரேகாவுடன் கூட்டமைப்பை அமைக்க நல்லபடியாக நடந்தேறியது சிவா-அனு திருமணம்.

சக்தி நந்தினி இருவரும் மற்றவர் அறியாமல் அவ்வபோது பார்த்து கொள்ள, விடுவாளா ரேகா?

"என்ன நந்தினி அடிக்கடி கண்ணு அண்ணனை தேடுது போல? நான் வேணா கூப்பிடவா?" என கேட்க, மொத்த இளைஞர் கூட்டமும் அவளை கலாய்க்க, திருதிருவென முழித்த நந்தினியை கண்டு மென்சிரிப்புடன் கடந்தான் சக்தி.

திருமணத்திற்கு என்று ஆசிரமத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் புது உடை எடுத்து அவர்களை மதியம் சாப்பிடவும் மண்டபத்திற்கே வர ஏற்பாடு செய்து வைத்திருந்தான் கௌதம்.

அதன்படி சுந்தரம் மதியம் குழந்தைகளுடன் வந்து சேர, ஏற்கனவே கலகலத்த கும்பல் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடியது.

ஆட்டமும் பாட்டமுமாய் அன்று நாள் கலகலக்க இது தானே வேண்டும், அது நடந்த திருப்தியில் அங்கு நடக்கும் ஆட்டம் பாட்டத்தை கேட்டு மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார் மல்லிகா.

அன்றே மாலை அனைவரும் கூடி பேசி கௌதம் வாசு திருமண நாளையும் குறித்தனர். சரியாக இன்னும் மூன்று வாரம் முடிந்து திருமணம்.

கௌதம் விருப்பப்படி குழந்தைகள் இருக்கும் இடமே கோவில் என்பதாய் ஆசிரமத்தில் நடத்த ஏற்பாடு செய்யும் பொறுப்பும் ராமிடத்தில் வந்து சேர சந்தோஷமாய் ஏற்றுக் கொண்டான் அவன்.

அம்மா அப்பாவை இழந்த கௌதம் இன்று உறவுகள் என்று சொல்லிக்கொள்ள ஒரு பெரிய குடும்பத்தையே உருவாக்கிக் கொண்டான். காதல் நட்பு இரண்டுமே கடவுள் கொடுத்த வரம். நல்ல நண்பனாய் ராம் துணையிருக்க கௌதம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.

காப்பகம் என்பதை அமைக்கவோ குழந்தைகளை பாதுகாக்கவோ பணம் தேவை தான் ஆனால் அதை விட மனமும் தேவை.

மனம் இருந்தால் எல்லாம் சாத்தியமே!

அவர்களுக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுத்து அதில் தானும் சந்தோசமடைகிறான் அவன்.

முக அழகு மட்டும் முக்கியம் அல்ல, அதை தாண்டி ஒரு பெண்ணிற்கு என்னனென்ன வேண்டும் என்பதை சொல்லிக் கொடுத்ததோடு அதை செய்யவும் வைத்து அவளை அவளுக்காக அப்படியே ஏற்றுக் கொள்ளும் அவன் நேசம் மாறுமா என்ன?

தனக்கு அமையும் ஒவ்வொரு உறவும் சரியாய் அமைந்தால் அவனைவிட பாக்கியசாலி உலகில் இல்லை.

சுபம்
 
Top