• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 10

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 10

"வாட்ஸ் கோயிங் ஆன்? போலீஸ் எப்டி அங்க போச்சி? வேர் இஸ் ரெஜினா? இன்னும் அரைமணி நேரத்துல எனக்கு தெரிஞ்சாகணும். இல்லைனா நானே உங்களை ஷூட் பண்ணிடுவேன்"

பாதுகாப்பாக சிட்டிக்கு அவுட்டரில் உள்ள நண்பன் கெஸ்ட் ஹவுஸ்ஸில் இருந்தாலும் மூளை வருணை நிம்மதியாய் இருக்க விடவில்லை. போனில் தனது ஆட்களுக்கு அழைத்து பேசினான்.

'எப்படி? எப்படி? எப்படி?' என்ற கேள்வி மட்டுமே! ஆனால் துளிகூட ராம் கௌதம் மேல் அவனுக்கு சந்தேகம் வந்திருக்க வாய்ப்பில்லை. சிசிடிவியில் பார்த்தால் தெரியும்தான் ஆனால் இப்போது அங்கே சென்று மாட்டிக்கொள்ள முடியாது. வேறு ஆட்களையும் அனுப்ப முடியாது.

பர்சனல் செகிரேட்டரியிடம் இருந்து போன் வந்தது. "யாஹ் சொல்லு ரீனா!"

"இதெல்லாம் ஒரு ப்ரோப்லேம்னு என்கிட்ட கொண்டு வந்தா நீங்க எல்லாம் எதுக்கு இருக்கீங்க ஸ்டுபிட்ஸ்? அந்த கிளைன்ட்க்கு ப்ராஜெக்ட் பண்றது யாருனு பார்த்து பேச சொல்லு" கிளைன்ட் வருகை குறித்து பிஏ சொல்ல, இருக்கும் எரிச்சலில் அவளிடம் மட்டுமே கத்த முடிந்தது வருணால்.

"ப்ச்! ஷட்அப் ரீனா! அந்த பொண்ணு வரலைனா நாளைக்கு கிளைன்ட்ட வர சொல்லு. இல்லைனா ப்ராஜெக்ட் கான்செல் பண்ணிவிடு. அண்ட் டோன்ட் டிஸ்டர்ப் மீ ஓகே" யாரிடம் காட்டுவது என தெரியாத கோபத்தை ரீனா வாங்கி கொண்டாள்.

ரீனாவின் பதிலில் முதலில் வேறுபாடு தெரியவில்லை சில நிமிடங்களுக்கு பின்தான் சந்தேகம் தோன்றியது வருணுக்கு. மீண்டும் அவளை அழைத்தான்.

"ரீனா அந்த ப்ராஜெக்ட் பண்றது யாருனு சொன்ன? நிவிதாவா?"

"ஆமா சார்"

"பட் மார்னிங் வந்தாங்க இல்லையா?"

"எஸ் சார்! பட் நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்துல உங்ககிட்ட பெர்மிஸ்ஸன் வாங்கிட்டதா சொல்லி அவங்களும் மிஸ் வாசமிகாவும் கிளம்பிட்டாங்க சார்"

"வாட்? என்கிட்ட பெர்மிஸ்ஸன் வாங்கினங்களா?"

"ஆமா சார்! அப்படிதான் சொன்னாங்க"

"ஓகே அவங்க வந்ததும் என்னை காண்டாக்ட் பண்ண சொல்லுங்க" என்றவன் யோசனைக்கு சென்றான்.

"உங்க நாலு பேருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. அண்ட் ரியல்லி யூ கைஸ் ஆர் டூயிங் அ கிரேட் ஜாப்" சுரேஷ் மூர்த்தி மகளை பார்த்த சந்தோஷத்தில் பேசிக் கொண்டிருக்க, அவர் சந்தோஷத்தில் ராம், நிவி, கௌதம், வாசு நால்வரும் புன்னகை முகமாய் அவர்முன் நின்றனர்.

"இவளுக்கு அம்மா கிடையாது ராம். அதனாலயோ என்னவோ நான் கூடவே இருந்தாலும் இவ சேஃபா பீல் பண்ண மாட்டா. ரொம்ப பயந்த சுபாவம்" மகளின் தலையை வருடியவாறு அவர் பேச,

ராம் "சார் இனி உங்க பொண்ணு அப்படி இருக்க மாட்டாங்க. நீங்க வர்றதுக்குள்ள ரெண்டு மணி நேரம் இவங்க ரெண்டு பேரும் ரெஜினாக்கு கிளாஸ் எடுத்துருக்காங்க. இனி உங்க பொண்ணு போல்டா இருப்பாங்க" நிவி வாசுவை பெருமையாய் சொல்ல, கௌதம் நீயா பேசுவது என்ற ரேஞ்சுக்கு அவனை பார்த்தான்.

அதில் சிரித்த சுரேஷ் மூர்த்தி "கண்டிப்பா! உங்களை மாதிரி ரெஜியும் மாறினா எனக்கும் சந்தோசம் தான்" என்றார்.

"சார்! இந்த வருண் விஷயத்துல நீங்க என்ன முடிவு எடுத்துருக்கிங்க? ஆஃபீஸ்ஸியலா பிளாக் மார்க் வைக்குறது இனி ஈசி. அவன் உங்க பொண்ணுகிட்டயே வாலாட்டி இருக்கான். அண்ட் ஆல்ரெடி அந்த போதை மருந்து விஷயத்துல போலீஸ் கொஞ்சம் அவனை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுவாங்க. சோ இவனை மாதிரி ஆளுங்க வெளியில் இருக்குறது நல்லதில்ல. நீங்க என்ன பண்லாம்னு இருக்கீங்க சார்?" நேரடியாய் விஷயத்திற்கு வந்தான் கௌதம்.

"கரெக்ட் கௌதம்! நிவி, வாசு நீங்க ரெண்டு பேரும் தாராளமா வருண் பத்தி முழுசா உங்க பேப்பர்ல எழுதுங்க. அதுக்கு நானும் என் பொண்ணும் சாட்சி. ரெஜி உங்களுக்கு கண்டிப்பா ஒத்துழைப்பா" என்று ரெஜினாவின் முகம் பார்க்க, அவளும் சம்மதமாய் தலையசைத்தாள்.

"அப்புறம் கௌதம் இன்னொரு முக்கியமான விஷயம். நிவி அண்ட் வாசு ரெண்டு பேரையும் உங்க பொறுப்புல பத்திரமா பார்த்துக்கோங்க. மோர்ஓவர் உங்களுக்கு எல்லா டீடைல்ஸ்ம் வந்துடுச்சு சோ இனி எந்த ரிஸ்க்கும் வேணாம். ஒரு பொண்ணுக்கு அப்பா ஸ்தானத்துல இருந்து சொல்றேன் இனி நீங்க வருண் கம்பெனிக்கு போக வேண்டாம். அது ரொம்ப பெரிய ரிஸ்க். எங்கேயாவது சின்ன க்ளு போதும் வருணுக்கு. சோ இனி நீங்க உங்க வேலையை ஸ்டார்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்" மொத்த பிளானையும் தனி ஒருவராய் சுரேஷ் மூர்த்தி சொல்ல, பெரியவர் பேச்சை அனைவரும் கேட்கும் முடிவுக்கு வந்தனர்.

"உனக்கு ஏன் வாசு, கௌதம் அண்ணாவை பிடிக்கல?" சுரேஷ் மூர்த்தியிடம் பேசிவிட்டு ஸ்கூட்டியில் வீட்டிற்கு செல்லும் வழியில் நிவி கேட்க, அதுக்குள்ள உன் அண்ணா சொல்லிட்டாரா? ஆமா என்னை கேட்காம என்னை பத்தி நீ எப்படி டி அவன்கிட்ட சொல்லலாம்?"

"ப்ச் அது வேற வாசு! உன்னை பத்தி தெரியாம அவங்க உன்னை ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு தான் சொன்னேன். ஆனால் அதுக்கும் அண்ணா உன்னை லவ் பண்றதுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. அவரு ஒன்னும் உன் முகத்தை பார்த்து லவ் பண்ணல டி. புரிஞ்சிக்கோ"

"ஷட்அப் நிவி, அவன் உன்கிட்ட சொல்லி விட்டானா? எனக்கு யாரும் வேண்டாம். உனக்கு உன் அண்ணா தான் முக்கியம்னா நான் இங்கேயே இறங்கிக்குறேன்"

"வாசு நீ சம்மந்தம் இல்லாமல் எல்லாத்தையும் குழப்புற. நான் உன் மேலே இருக்குற அக்கறையில தான் சொன்னேன். அண்ணா என்கிட்ட எதுவுமே சொல்லல. உன் முகத்தை பார்த்தாலே தெரியுது. அவங்களை மாதிரி யாராலும் உன்னை பார்த்துக்க முடியாது.." நிவி பேசிக் கொண்டிருக்க,

"என்னை பார்த்துக்குவாங்க சரி! என் குடும்பம்?" ஒரே வரியில் அவள் மொத்த கவலைகளையும் கூறிவிட, சட்டென வண்டியை நிறுத்தி விட்டாள் நிவி.

"வாசு?"

"என்னடி பாக்குற? என் அம்மா என் அக்கா இவங்களை என்ன பண்ண சொல்ற? தூக்கி போட்றவா?"

"ஹேய் ஏன் டி இப்படி பேசுற?"

"வேணாம் நிவி! உன் அண்ணா நல்லவராவே இருக்கட்டும். என்னை மாதிரி ஒருத்தியை கல்யாணம் பண்ணி என் குடும்பத்தை பாத்துக்குற அளவுக்கு தியாகம் பண்ண யாராலும் முடியாது. அப்படி பண்ண தேவையும் இல்ல. எனக்கு கல்யாணம் பண்ற ஐடியா எல்லாம் இல்ல நிவி. ப்ளீஸ் இதுக்கு மேல இதை பத்தி பேச வேண்டாம்" என சொல்ல, நிவிக்கு அவளின் முழு கவலை புரிந்ததில் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் வண்டியை கிளப்பினாள்.

"டேய் அவங்க வீட்ல பத்திரிகை அடிக்க கேட்குறாங்க. நீங்க என்னடான்னா கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம போய்ட்டு வந்துட்டு இருக்கீங்க. நீங்க பாக்குறீங்களா இல்ல நானே தனியா எல்லா பக்கமும் போய்ட்டு வந்துடவா?" சகுந்தலா தான் கல்யாணம் இன்னும் ஒரு மாதத்தில் என்று சொல்லியும் இவர்கள் கண்டு கொள்ளவில்லையே என்று கோபம் கொள்ள,

"சகு அம்மா!! அந்த கவலை எல்லாம் உங்களுக்கு எதுக்கு? நாங்க இனி பிரீ தான் நாங்களே பத்துக்குறோம். நீங்க இன்விடேஷன் குடுக்குற லிஸ்ட் மட்டும் ரெடி பண்ணுங்க" கௌதம் கூலாய் சொல்லவும்,

"அம்மா, அப்போ நந்தினி மாமனார் மாமியார்கிட்டயும் கேளுங்க. ஒரே டைம் வேலையை முடிச்சிடலாம். மாப்பிள்ளை வந்தா நாங்களே கூட்டிட்டு போய்ட்டு வர்றோம்" நந்தினிக்கு பார்த்த மாப்பிள்ளை நிவியின் அண்ணன் என்பதை தெரியாமல் ராம் சொல்ல, கௌதம்

"டேய் அன்னைக்கே உன்கிட்ட சொல்லணும் நினச்சேன். நிவியோட..."

"அண்ணி"

கௌதம் உண்மையை சொல்ல வந்த நேரம் சகுந்தலாவை அண்ணி என்றவாறு உள்ளே வந்தனர் நிவி, ராஜ்குமாரின் அம்மா அப்பா.

"வாங்க வாங்க! உங்களை பத்தி தான் பேசிட்டு இருக்கோம்" சகுந்தலா வந்தவர்களை வரவேற்றவர் நந்தினி வாழ போகும் வீடு என்ற அடிப்படையில் ராமிடம் "நந்தினி அத்தை மாமா டா" என சொல்ல, அவனும் வந்தவர்களை வரவேற்றுவிட்டு கௌதமை பார்த்து கொள்ள சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.

இதுதான் ராம் அவ்வளவு எளிதில் யாரோடும் பேசிட மாட்டான். ஆனால் தொழிலில் அதற்கு எதிர்தான்.

இன்விடேஷன் பொறுப்பை தான் எடுத்து கொள்வதாக அவர்களிடமும் சொல்லிய கௌதம் அனைத்து விபரங்களையும் அவரிடம் கேட்டுக் கொண்டான்.

ராஜ்குமார் வருவாரா என கௌதம் கேட்க, அவன் பிசினஸ் விஷயமாக வெளியூர் சென்றிருப்பதாக அடுத்த பொய்யை நிவி வாழப் போகும் வீட்டிலும் சொல்லி விட்டார்.

அது கௌதமிற்கு உறுத்தலாக இருந்ததாலும் திருமணத்திற்கு முன் ராஜ்குமாரை நேரில் பார்த்து ஒருமுறை பேசிட வேண்டும் என முடிவு செய்தான்.

சகுந்தலாவிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்த நிவி அம்மா, ராஜ்குமார் வீட்டில் இருக்கவும் அவனிடம் சென்று அங்கு நடந்ததை கூறினார்.

"அம்மா நீங்க என்ன பண்றீங்கனு தெரியுதா? நான் ஒரு பொண்ண விரும்புறேன்னு சொல்லியும் நீங்க அங்க போய் பேசிட்டு.. அதுவும் இன்விடேஷன் வேற... ஏம்மா இப்படி பண்றீங்க? இது அவங்களுக்கு தெரிஞ்சா நிவி கல்யாணம் என்னம்மா ஆகும்? ப்ளீஸ் என்னை வச்சு நிவி வாழ்க்கைல விளையாடாதீங்க"

"அதே தான்டா உன்கிட்டயும் சொல்றேன். ஒழுங்கா நான் சொல்ற மாதிரி கல்யாணத்த பண்ண பாரு. உன்னால நிவி வாழ்க்கை போச்சுன்ற பேரு வராம பார்த்துக்கோ" கொஞ்சமும் அவனை பற்றி யோசிக்காமல் தங்கையை காரணம் காட்டி பிளாக்மெயில் செய்ய, ராஜ்குமாரும் பெண் வீட்டில் பேசுவது என முடிவெடுத்தான்.

"ம்மா! நானே நடக்குறது தான் நடக்கும்னு விட்டுட்டேன். நீங்க ஏன் இன்னும் அதையே நினைச்சுட்டு இருக்கீங்க? நேத்து பாத்திங்க இல்ல அந்த பொண்ண! என்ன இருந்தாலும் படிப்பு இருந்தா தான்மா ஒரு நிமிர்வு வரும். நேத்து அத பாத்தப்ப தான் என் புத்திக்கு அது தெரிஞ்சுச்சு. நான்லாம் எப்பவோ அந்த புள்ளைய மறந்துட்டேன்.சும்மா அதையே நினைக்காம போய் வேலைய பாரு மா"

சக்தி தன் மனதை மாற்ற முடியாவிட்டாலும் அன்னையை மாற்ற நினைக்க, தாய் அறியாத சூழா..

"என்ன இருந்தாலும் கடவுள் என் விஷயத்துல ஓரவஞ்சனை தான்டா கண்ணு வைக்குறாரு. உங்க அப்பாவை சீக்கிரம் எடுத்துகிட்டு இப்ப உன் வாழ்க்கைலையும் விளையாட பாக்குறாரு" எப்போதும்போல செல்லம்மா புலம்ப, இப்போதும் ஆறுதலாய் அவருக்கு சக்தி மட்டுமே!

"அட என்னங்கம்மா! இப்ப நான் நிம்மதியா இருக்கணுமா இல்லையா? இனிமேல் புலம்புற சத்தமே வரக்கூடாது" என்று சொல்லி சக்தி செல்ல, 'உன் நிம்மதி போய் ரொம்ப நாள் ஆனது எனக்கு தெரியும்" என போகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் செல்லம்மா.

தொடரும்...
 
Top