• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 13

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 13

"என்னடா வாசுவை பிக்கப் பண்ண போகும்போது உன் முகத்துல தௌஸண்ட் வாட்ஸ் பல்பு எரிஞ்சுது இப்ப ஃப்யூஸ் போய்டுச்சு?"

ராம் முகத்தில் சந்தோசம் பக்கெட்டில் நிரப்பும் அளவுக்கு வடிய, கௌதமின் யோசனையான முகத்தை கிண்டலாய் கேட்டான்.

கௌதம் "அதெல்லாம் அப்படியே தான் இருக்கு. வேற ஒரு யோசனையில இருந்தேன் டா"

"என்ன? காஜலுக்கு என்ன குழந்தை பிறக்கும்னா?" ராம் கிண்டல் முடிவதாய் இல்லை.

"ஆனாலும் காதல் ஒரு மனுஷனை இந்த பாடு படுத்த கூடாது டா. புள்ள பூச்சிக்கு எல்லாம் கொடுக்கு முளைக்குது. நீ எல்லாம் இப்படி பேசுவனு நான் கனவுல கூட நினச்சது இல்ல மச்சி. ஆமா இந்த சந்தோசத்துக்கு என்ன காரணம்? ஓவர் ரொமான்சோ?" கௌதம் ராகமாய் இழுக்க,

ராம் "ம்ம்ம்ம் அப்படி ஒரேயடியா சொல்லிட முடியாது. பட் ஸ்வீட் நத்திங்ஸ்னு சொல்லலாம்"

"அந்த கருமத்துக்கு தான்டா எங்க ஊர்ல ரொமான்ஸ்னு பேரு"

"நீ என்ன பேரு வேணா வச்சுக்கோ. முதல்ல என்ன யோசிச்சிட்டு இருக்க? அதை சொல்லு"

"அதுவா? அதான் வாசுவோட அக்கா அனு பத்தி நிவி சொன்னா இல்ல? அவங்க கால்ல இருக்கிற ப்ரோப்லேம் பத்தி டாக்டர் சுதாகர்கிட்ட பேசியிருந்தேன். அவரும் அனுவை அழைச்சிட்டு வர சொல்லியிருந்தாரு. பட் நான் இன்னைக்கு தான் அனுவை நேர்ல பார்த்தேன். நான் நினைச்சதை விட ரொம்ப அதிக பாதிப்பு தான் அவங்களுக்கு. அதான் டாக்டர்கிட்ட பேசலாமா இல்ல அனுவை கூட்டிட்டு போலாமான்னு யோசிக்குறேன்"

"இதுல யோசிக்க என்ன இருக்குடா. கூட்டிட்டு போ. செயற்கை கால் பொருத்துறது எல்லாம் இப்ப சாதாரணம். அவங்களை நேர்ல பார்த்தா தான் டாக்டரும் ஒரு முடிவுக்கு வருவாங்க"

"அது பிரச்சனை இல்ல ராம். இன்னைக்கு தான் வாசு அம்மா மல்லிகா ஆண்ட்டியையும் அக்கா அனுவையும் பார்த்தேன். இந்த கொஞ்ச நேரத்துல நல்ல பிரண்ட்ஸ் ஆகிட்டாங்க. அனுவும் ஆண்ட்டியும் தப்பா எடுத்துக் மாட்டாங்க. ஆனால் நான் பண்றதை வாசு ஏத்துக்கனுமே? காதலுக்காக உதவி செய்யுறதா நினச்சு என் காதலோட அந்த உதவியையும் கொச்சை படுத்திட்டா?"

"கௌதம் எப்ப இருந்து நீ இவ்வளவு சீரியசா எல்லாம் யோசிக்க ஆரம்பிச்ச? கௌதம்னாலே அவனோட முடிவை அவனே எடுக்குறது தான். ஏன் வாசு விஷயத்துல ஓவரா யோசிக்குற? நீ வாசு அம்மா அக்காவை நல்ல நிலைமைக்கு கொண்டு வரனும்னு நினைக்குற. இது வாசுக்காக தான்னாலும் வாசுவை நீ எப்ப ஏத்துக்கிட்டயோ அப்ப இருந்து அது உன்னோட பேமிலி. இப்ப சொல்லு... உன்னோட பேமிலிக்கு நல்லது செய்ய இவ்வளவு யோசிப்பியா?"

"இதுக்கு தான்டா ராம் வேணும்ங்குறது. எவ்வளவு குழப்பத்துல இருந்தேன். ஒரே நிமிஷத்துல என்னை சரி பண்ணிட்ட. தேங்க்ஸ் மச்சி. இப்பவே போய் டாக்டர்கிட்ட பேசிட்டு வரேன்"

"ஹ்ம்ம் இது சூப்பர். டைம் வேஸ்ட் பண்ணாம கிளம்பு. எனக்கு ஆஃபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. ஈவ்னிங் மீட் பண்லாம் பை" ராம் சொல்லிவிட்டு நகர, கௌதமும் ஹாஸ்பிடல் நோக்கி காரை விட்டான்.

"ச்ச! ரெண்டு பொம்பளைங்க என்னை வேவு பார்க்க என் இடத்துக்கே வந்துருக்காங்க. இது தெரியாம அவகிட்டயே வழிஞ்சு.. நினைச்சாலே அசிங்கமா இருக்கு டா நிரா" வருண் நிரஞ்சனிடம் புலம்ப,

"உன் வீக் பாயிண்ட் நல்லா தெரிஞ்சி யூஸ் பண்ணியிருக்காங்க வருண். அதுமட்டும் இல்ல கண்டிப்பா யாரோட துணையும் இல்லாம அவங்களா இதுல இறங்கி இருக்க சான்ஸே இல்ல. சோ அது யாருனு பாரு. அந்த பொண்ணுங்க பின்ன ரெண்டு பசங்க சுத்துறதா சொன்னானே! அந்த பசங்க யாருன்னு தெரிஞ்சா எல்லாமே முடிவுக்கு வரும். அந்த ரெஜினா உன்னை பத்தி வெளியில சொன்னா அவளுக்கும் கெட்ட பேருன்னு சொல்ல மாட்டா. ஆனா உன் கெஸ்ட் ஹவுஸ்ல இருந்து போலீஸ் சரக்கு மட்டும் தான் எடுத்திருக்கு. சோ அந்த பொண்ணுகிட்ட தான் மத்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் இருக்கணும். நமக்கு டைம் இல்ல சீக்கிரம் ரெஜினாவை புடிக்கணும். அதான் உனக்கு சேஃப்"

"புடிக்குறேன் டா. எனக்கு எதிரா இருக்க மொத்த கூட்டத்தையும் புடிக்குறேன்" அடுத்த நாளே தனக்கு எதிராய் அனைத்து சதிகளும் நடக்கும் எனக்கு தெரியாமல் வருண் கருவிக் கொண்டிருந்தான்.

ரெஜினாவை சுரேஷ் மூர்த்தி நிவியின் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். நிவி கையிலிருந்த வருணின் டாக்யூமன்ட்ஸ் மற்றும் ரெஜினாவின் வாக்குமூலம் இதனடிப்படையில் அத்தனை விபரமும் எடிட்டர் அறைக்கு செல்ல அவரும் அதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.

"நிவி, நீ தனியா வருண் கம்பெனிக்கு போறேன்னு சொல்லும்போது கூட சத்தியமா உன் மேல நான் இவ்வளவு நம்பிக்கை வைக்கல. யூ ஆர் அமேசிங்! ஐ ரியலி அப்பிரெஷட் யூ!"

எடிட்டர் நிவியை புகழ வாசு, ரெஜினா, சுரேஷ் மூர்த்தி மூவரும் புன்னகையுடன் அவளை பார்த்தனர்.

"எடிட்மேன் ஓவரா என்ன புகழாதீங்க! எனக்கு பின்னாடி ஒரு டீம்மே இதுக்காக வேலை பார்த்து இருக்கு. என்னாலயும் இது தனியா சாதிச்சிருக்க முடியும்னு நான் சொல்ல மாட்டேன். ஆனால் அந்த டீம்மை இப்போ உங்களுக்கு என்னால இன்ட்ரோடியூஸ் பண்ண முடியாது. கூடிய சீக்கிரமே சொல்றேன்" அழகாய் அனைவரின் ஒத்துழைப்பையும் நிவி எடிட்டருக்கு எடுத்துக் கூறினாள்.

"ஓகே நிவி! இந்த விஷயம் போலீஸுக்குத் சொல்லணும் கண்டிப்பா. பட் இப்ப சொல்ல முடியாது. எவிடென்ஸ் எல்லாமே நம்மகிட்ட ஸ்ட்ராங்கா இருக்கு. ரெஜினா நீங்களும் ரொம்ப ஸ்ட்ரோங்கா தானே இருக்கீங்க"

எடிட்டரின் கேள்விக்கு ரெஜினா ஒருமுறை நிவியை நிமிர்ந்து பார்த்தவள் அவளின் கண்ணசைவில் தைரியம்கூட நேராக எடிட்டரின் கண்களைப் பார்த்து அஃப்கோஸ் சார் என்று கூறினாள்.

"ஓகே கைஸ்! தேங்க்ஸ் ஃபார் யுவர் ஆல் கிரேட் வொர்க். வாசு யூ ஆல்சோ தி கிரேட்" என வாசுவிற்கு எடிட்டர் கைநீட்ட வாசுவும் குலுக்கிக் கொண்டாள்.

"ஓகே! இன்னிக்கு வேற ஒரு பிராசஸ் போயிட்டு இருக்கு. சோ நமக்கு நாளை மறுநாள் இதுதான் பிளாஷ் நியூஸ்! பீ ரெடி பார் தட். ரெஜினா நீங்க கூட நாளைக்கு இங்க வர வேண்டியிருக்கும். ஏன்னா நாளைக்கு போலீஸ் இங்க வருவாங்க. நாம பிரஸ்லே சொல்ற அதே நேரம் நியூஸ்லயும் இது கண்டிப்பா வரணும். அண்ட் வருண்ணால ஏதாவது உங்களுக்கு பிரச்சனை...?" எடிட்டர் இழுக்க, சுரேஷ் மூர்த்தி அதை தான் பார்த்துக் கொள்வதாக சொல்லவும் தான் அவருக்கு முழு திருப்தி வந்தது.

அன்றைய பொழுது வருணை பற்றிய சேகரிப்பு மற்றும் அதனை எப்படி வெளிப்படுத்துவது என அனைத்தையும் வாசுவும் நிவியும் தயார் செய்ய, ரெஜினா சுரேஷ் மூர்த்தியுடன் கிளம்பிவிட்டாள்.

மாலை மூன்று மணிக்கெல்லாம் வேலை அனைத்தும் நினைக்கும் படி முடிந்து விட அடுத்த நாள் காலை சீக்கிரமே வரவேண்டும் எனக் கூறிக்கொண்டு இருவரும் கிளம்பும் நேரம் நிவி ராமிற்கு அழைக்க, வாசு கௌதமை அழைப்பதா என்ற யோசனையில் நிற்கவும், வாசுவின் மொபைலில் கௌதம் என்ற நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

'திங்க் ஆப் தி டெவில்' மனதில் நினைத்த வாசு அதை வெளியில் சொல்லாமல் எடுத்ததும் ஹலோ என சொல்ல, "வாசு, முக்கியமான வேலையா விபுஸ் ஹாஸ்பிடல் வரை வந்தேன். நீ கொஞ்சம் இங்க வர முடியுமா?" என கௌதம் கேட்டதும் வாசு அதை நிவியிடம் சொல்ல, ராமுடன் நிவியும் வாசுவும் கிளம்பினர் அந்த ஹாஸ்பிடலிற்கு.

ராமிடம் ஏற்கனவே கௌதம் விஷயத்தைச் சொல்லி இருந்ததால் அவன் சாதாரணமாகவே இருக்க, வாசுதான் குழம்பி போனாள். நிவிக்கு கூட ஓரளவு யூகிக்க முடிந்தது. ஆனால் வாசு 'என்னை ஏன் ஹாஸ்பிடலுக்கு வரச் சொன்னான்?' என்ற எண்ணத்திலேயே சுழன்றாள்.

ஹாஸ்பிடல் வாசலில் வாசு இறங்க அங்கு அனுவும் மல்லிகாவும் நின்றனர்.

"அம்மா அக்கா! நீங்க எப்படி இங்க?" வாசு கேட்டுக்கொண்டிருக்க, டாக்டருடன் பேசியவாறு வெளியே வந்தான் கௌதம்.

"நத்திங் ப்ராப்ளம் கௌதம். இன்னும் ஒன் மந்த்ல நீங்க வந்தீங்கன்னா எல்லாம் சரியாக இருக்கும்" சொல்லிவிட்டு டாக்டர் சென்றுவிட அப்போதுதான் வாசு நிவி ராமை கவனித்தான் கௌதம்.

கௌதம் வருவதற்குள் மல்லிகா அனுவின் செயற்கைக்கால் விஷயத்தை வாசுவிடம் சொல்லிவிட, வாசு துளியும் சந்தோஷம் இன்றி நிவியை தான் முதலில் முறைத்தாள்.

"உங்க அண்ணா என்னடி நெனச்சிட்டு இருக்காரு? நிவி எனக்கு புரியல! எதுக்கு என்னோட அக்காவுக்கு அவர் செய்யணும்? எல்லாம் உன்னால தான். நானே வேணாம்னு சொன்ன அப்புறம் என்னோட அக்காவுக்கு செய்ய அவன் யாரு?" தாம் தூம் என வாசு நிவியிடம் கத்த, கௌதம் "நிவி! நீ ஆண்டியையும் அனுவையும் வீட்டுக்கு கூட்டிட்டு போ. நான் வாசுகிட்ட பேசிட்டு கூட்டிட்டு வரேன். ராம் பார்த்துக்கோ டா" என்றுவிட்டு வாசு கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு கேன்டினிற்கு நடந்தான்.

கேன்டீன் வாசலை அடைந்ததும் கௌதம் அவள் கைகளை விட, "அது எப்படி உங்களால பத்துநாள் தெரிஞ்ச பொண்ணுக்காக இவ்வளவு செய்ய முடியுது? அதுவும் என் அம்மாவையும் அக்காவையும் ஒரே ஒருநாள், இன்னைக்கு காலைல மட்டும்தான் பாத்தீங்க. அதுக்குள்ள ஹாஸ்பிட்டல் வரை கூட்டிட்டு வந்துட்டீங்க? பணம் இருந்தா..." வாசு பேச ஆரம்பித்தால் என்னவெல்லாம் பேசுவாள் என முன்னாடியே யோசித்த கௌதம் அவளை பேசவிடாமல் தடுத்தான்.

"ஹலோ ஹலோ! உன் லுக்'லேயே நீ என்ன நினைக்கிறனு தெரியுது. அந்த கேவலமான கேள்விய உன் வாயால என்ன பார்த்துக் கேட்டுடாத. நான்கூட நினைச்சேன், அனுவுக்கு நான் இந்த மாதிரி ஹெல்ப் பண்ணா, அதை நீ 'உன் காதலுக்கான லஞ்சமா இதை செய்றியா?'ன்னு என்னை பாத்து கேட்பன்னு.. ராம் சொன்ன பிறகுதான் எனக்கு ஒன்னு புரிஞ்சுது. யாராயிருந்தாலுமே அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு நாம நினைக்கிற வர, அது நம்மள போட்டு சாகடிக்கும். எனக்கு இதான் புடிச்சிருக்கு, இதுதான் செய்வேன்னு செஞ்சா உலகம் எப்படி வேணாலும் பேசும். அந்த உலகத்துல இருக்கிற நீயும் பேச தான் செய்வ! ஆனாலும் தயவு செஞ்சு என்னை பார்த்து அப்படி ஏதாவது பேசி வச்சிடாத! என்னால தாங்க முடியாது. நான் உன்ன மட்டும்தான் விரும்புறேன் அதுக்கு லஞ்சம் கொடுக்கணும்னு எனக்கு தேவை இல்லை. ஆனா எனக்கு பிடிச்ச உனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுது. என்னால முடியும்னும் போது ஏன் அனுவுக்கு ஒரு லைஃபை ஏற்படுத்தி கொடுக்கக்கூடாது? அப்படின்னு நினைச்சு தான் நான் இதை செய்றேன். ஐ திங் யூ அன்டர்ஸ்டேன்ட் மீ. இன்னும் ஒரு மாசம் ஆகும்னு சொல்லியிருக்காங்க. அதுவரை நீ ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்திடாத. நீ நீயாக இரு. நான் நானாக இருக்கேன்" தெளிவாகக் கூறிய கௌதம் நிற்காமல் சென்று விட்டான். மீண்டும் குழப்பத்துடனே வலம் வந்தாள் வாசு.

தொடரும்..
 
Top