• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 14

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 14

வாசு குழப்பத்தின் உச்சியில் நின்றாள். அவளுடைய எண்ணம் ஒன்று தான். என்னை தெரியாமல் என் அம்மா அக்காவை இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை. அதுவும் என்னை காதலிப்பதாக சொன்ன பிறகு தான் அக்காவை ஹாஸ்பிடல் வரை அழைத்து சென்றிருக்கிறான். அப்படினா இதுவும் என்னை ஏமாற்ற செய்யும் ஒரு செயல் தானே? இதை நான் சொன்னால் நிவியுடன் அம்மாவும் சேர்ந்து அவனுக்கே சப்போர்ட். இதில் நல்லவன் போல இவனின் சொற்பொழிவு வேறு.

கௌதம் அவ்வளவு உறுதியாக சொன்னபின் இனி அதில் தலையிட முடியாது என்று நன்றாகவே புரிந்து விட்டது வாசுவிற்கு. அதுவும் பிறரின் எந்த உதவியையும் ஏற்காத அம்மாவே கௌதமின் உதவியை ஏற்கிறார் என்றால் அவனை நம்புகிறார் என்று தான் தெரிகிறது.

"என்னடா, என்ன சொல்றாங்க மிஸ்ஸஸ் கௌதம்?" ராம் கேட்க,

"அட வாய வச்சிட்டு சும்மா இரு டா. நானே ஏதேதோ சொல்லி அவள சமாளிச்சு வீட்ல விட்டுட்டு வந்துருக்கேன். நிவி சேஃபா போய்ட்டாளா?"

"ஹ்ம்ம் போய்ட்டா! ஆனால் எதுக்கோ அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்றா டா. அவங்க அம்மா ஸ்ட்ரிக்ட்டாம். சரி விடு கல்யாணத்துக்கு அப்புறம் பாத்துக்குறேன்"

"ராம்! கல்யாணம்னதும் தான் ஞாபகம் வருது. இன்விடேஷன் வந்துடுச்சினு போன் பண்ணினான். நான் போய் நாளைக்கு வாங்கிட்டு வந்துடுறேன். நீ வாசுவையும் மார்னிங் பிக்கப் பண்ணிக்கோ. அந்த வருண் வேற எங்கேயோ ஒளிஞ்சிட்டு இருக்கான். நாளைக்கு நியூஸ் வந்ததும் என்ன பிரச்சனை எல்லாம் வரப் போகுதோ?"

ராம் "டேய், புலம்பாத டா. அவனுக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்ல. பக்கவா பிளான் ரெடி"

"வாட்? என்னடா சொல்ற?"

"கழுத கெட்டா குட்டி சுவருன்னு அந்த வருண் அவனோட பிரண்ட் நிரஞ்சன் வீட்ல தான் இருப்பான். நிரஞ்சன் மேலே ஆல்ரெடி நிறைய கேஸ் இருந்தும் ப்ரூப் இல்லாம இருந்துச்சி. நாளைக்கு இந்த நியூஸ் வெளில வந்ததும், லைட்டா வருண் அங்க இருப்பானோனு ஒரு திரியை கொளுத்தி போட்டா போதும்! வருண்கூடவே அந்த நிரஞ்சனும் மாட்டுவான்"

"ஓஹ் மை காட்! ராம் எப்படிடா இப்படி மாறின? என்னால நம்பவே முடில. ராம் தானா இதுனு தோணுது. எப்படி டா இவ்வளவு அழகா ஸ்கெட்ச் போட்ட?"

"ஈசி டா. இந்த விஷயத்துல நான் உள்ள வந்ததுக்கு முழு காரணம் நிவி தான். நான் ஃப்ரங்கா சொல்றேன். நிவிக்காக மட்டும் தான் இதை செஞ்சேன். நிவி இந்த கேசைவிட்டு நல்லபடியா வெளில வரணும்னு தான் செஞ்சேன். மத்தபடி நீ புகழ்ற அளவுக்கு நல்ல மனசு எனக்கு இல்ல டா"

"கமான் மச்சி! இதுவே ஆரம்பமா இருந்துட்டு போகட்டும். ரொம்ப சந்தோசமா இருக்கு" கௌதம் பெருமையாய் சொல்ல, சிரித்தபடி நின்றான் ராம்.

"ஆஹ்!.. இப்ப என்ன டா பண்றது? இவ்வளவு நேரம் இன்னைக்கு ஃபுல்லா தேடியும் அந்த பொண்ணுங்க கிடைக்கலைனா எப்படி? ஏன் இன்னும் அவங்க போலீஸ்க்கு போகல? என்னடா நடக்குது?" வருண் போனில் கத்த, நிரஞ்சன் அமைதியாய் அவனை பார்த்துக் கொண்டிருந்தான்.

"ஷிட்!" போனை தூக்கி எறிய அது சிதறி போனது.

நிரஞ்சன் "ஏன் டா இவ்வளவு டென்ஷனா இருக்க?"

"எல்லாம் பக்கவா பிளான் பண்ணி அடிக்குறாங்க டா. இல்லைனா ஏன் என்னை பத்தி எல்லாம் தெரிஞ்சும் இன்னும் எந்த நியூஸ்ஸும் வர்ல? நான் மாட்டிகிட்டேன்னு தோணுது டா. போயும் போயும் பொம்பளைங்கலால மாட்டி.. ச்சை"

"அந்த பொண்ணுங்க ஒர்க் பண்ற ஆபிஸ்ல ஆள் வைக்கலாமே?" அறிவாளியாய் ஒரு ஐடியா நிரஞ்சன் கொடுக்க, "இல்ல டா, அவளுங்களுக்கு பின்னால எவனோ இருக்கான். அவன் தான் எல்லாத்துக்கும் காரணம்... ஆனால்.. ஆனால் ஏன் என்னால எதுவும் செய்ய முடியல?" என்று கத்தியவன் கண்ணாடி டேபிளை கையால் குத்தினான்.

அடுத்த நாள் காலை நிவி ஆபீஸ்ஸில் அனைத்தும் தயாராய் இருக்க, எடிட்டர் அனைத்தும் சரியாய் இருக்கிறதா என பார்த்து கொண்டிருந்த நேரம் ரெஜினா சுரேஷ் மூர்த்தியுடன் வந்து நின்றாள்.

ராம் தான் நிவி, வாசு இருவரையும் அழைத்து வந்து விட்டான். ஒரு மணி நேரத்தில் வந்து விடுவேன் என்ற கௌதம் மட்டும் இன்னும் வந்த பாடில்லை.

"கௌதம் அண்ணா ஏன் இன்னும் வர்ல?" நிவி ராமிடம் கேட்க, வாசுவும் ராமை பார்த்தாள்.

"இன்விடேஷன் வந்துடுச்சி நிவி. அதை வாங்கிட்டு அம்மாகிட்ட கொடுத்துட்டு வர்றதா சொன்னான்"

"வாவ்! சூப்பர் சூப்பர் ராம். ஆமாம் ரெண்டு பேருக்கும் ஒரே இன்விடேஷனா வேற வேற இன்விடேஷனா?" அண்ணனின் திருமணம் குறித்தும் அவள் கேட்க, நந்தினிக்காக கேட்பதாக நினைத்த ராமும், "தெரியல நிவி! கௌதம் தான் அதெல்லாம் பாத்துக்குறான்" என்றதும் வீட்டிற்கு சென்று பார்த்துக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள் நிவி.

பிரஸ்ஸுக்கு நியூஸ் கொடுத்த எடிட்டர் தொலைக்காட்சி நேரலைக்கும் செய்தி கொடுத்துவிட, சிறிது நேரத்தில் வந்த அனைத்து மீடியாக்களுக்கும் எடிட்டர் தன் கையில் இருந்த ஆதாரங்களுடன் ரெஜினாவையும் முன் நிறுத்தினார் கூடவே சுரேஷ் மூர்த்தியையும்.

ராமை இதில் நிவி உள்ளிழுக்கவில்லை. அவனும் அதே இடத்தில் ஒரு ஓரமாய் நின்றிருக்க, கௌதம் சில மணி நேரங்களுக்கு பிறகே அவனுடன் இணைந்தான்.

"அவ்வளவு பெரிய கம்பெனி ஓனரா இவ்வளவு சீப்பான வேலையை பார்த்தது?"

"சட்டத்துக்கு மட்டும் இல்ல இது நாட்டுக்கே துரோகம்"

"பல பொண்ணுங்க வாழ்க்கைய கெடுத்த அவனை சும்மா விட கூடாது" ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் சத்தமிட, போலீஸ் தான் அவர்களை அடக்க வேண்டியதாகிற்று.

அனைத்தும் நேரலையில் தொலைக்காட்சியில் ஓட, வருண் நிரஞ்சனுடன் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். கண்களில் பயம் அப்பட்டமாய் தெரிய டிவியில் தெரிந்த ரெஜினா, வாசு, நிவி மூவரையும் கொலை செய்யும் வெறி வந்தது.

நிரஞ்சனுக்கு இப்போது தான் பிரச்சனையின் அளவு புரிய தொடங்க, ஏற்கனவே தன் பெயர் அங்கு பிளாக் மார்க்கில் இருப்பதால் அவனும் பயந்து தான் இருந்தான்.

ஆனால் இது இறுதி நொடி. இதற்கு மேல் தப்பிக்க வழி இல்லை. தலைமறைவாய் நிரஞ்சன் வீட்டில் இருப்பது யாருக்கும் தெரியாது. இது தெரிவதற்குள் எதாவது செய்ய வேண்டும். வருண்ணின் மூளை யோசித்து கொண்டிருக்க கண்கள் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தது.

"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க.. ஆல்ரெடி போதை மருந்து வழக்குல மிஸ்டர் வருணை நாங்க தேடிட்டு தான் இருக்கோம். ஆனால் அவரு தலைமறைவா இருக்காரு" இன்ஸ்பெக்டர் சொல்ல,

"இவனுக்கு எல்லாம் மரியாதை ஒரு குறையா சார்" என பலரும் ஒரே நேரத்தில் கூறினர்.

"கூடிய சீக்கிரமே குற்றவாளியை அரெஸ்ட் செய்வோம். குற்றவாளி இருக்கும் இடம் தெரிந்தால் சன்மானம் வழங்கப்படும்" என்று அறிவிப்பு தர,

"நான் சொல்றேன் அவன் எங்க இருக்கான்னு" அந்த இடத்தில் யாருமே எதிர்பாராத விதமாய் உள்ளே நுழைந்தான் ராம்.

கௌதம் மட்டும் நேற்று ராம் சொல்லும் போதே இதை எதிர்பார்த்தவன் போல ராமின் கூடவே வந்தான். நிவி வாசு இருவரும் செய்வது தெரியாமல் நிற்க, அவர்களின் உறுதியில் சுரேஷ் மூர்த்தி அவர்களை கர்வமாய் பார்த்து நின்றார்.

டிவியில் ராம் கௌதமை பார்த்த வருண் முகத்தில் அவ்வளவு கோபம். சுத்தமாய் எதிர்பார்க்காத இருவர். தனக்கு தொழிலில் எதிரியாய் நினைக்கும் இருவரே இதிலும் எதிரி. பழி வாங்கும் வெறியில் அவன் அடுத்த அடியை மறந்தானோ?.

"எங்க இருக்கான் சொல்லுங்க.. சொல்லுங்க" பலரும் ராம் முன் மைக்கை நீட்ட, "குற்றவாளியை பிடிக்குற எண்ணம் அவங்களுக்கு இருக்குன்னா நான் இதை மைக்ல சொல்ல முடியாது. ஆல்ரெடி சப் இன்ஸ்பெக்டர் ஆளுங்களோட போயிருக்காங்க. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நேர்லயே பார்த்துடலாம்" ராம் சொல்லுவதை வருண், நிரஞ்சன் கேட்டுக் கொண்டிருந்த நேரம் அதிரடியாய் நிரஞ்சன் வீட்டிற்க்குள் நுழைந்தது 3 பேர் கொண்ட அந்த போலீஸ்படை.

இன்ஸ்பெக்டருக்கு போன் செய்து வருண் மாட்டியதாக சொல்லவும், வருண் முகத்தை பார்க்க மீடியா முதல் மொத்த கூட்டமும் போலீஸ் ஸ்டேஷன் செல்ல, இன்ஸ்பெக்டர் அனைத்து ஆதாரங்களையும் வாங்கி கொண்டு ராம் கௌதம் உடன் எடிட்டரின் டீமையும் பாராட்டிவிட்டே விடைபெற்றார்.

"நிவி! நீ சொன்ன அந்த டீம் ஒர்க் இவங்க தானா?"

"எஸ் எடிட் மேன்! நால்வர் படை" நிவி சொல்ல,

"அக்கா அப்ப நானு?" ரெஜினா சிறுபிள்ளையாய் கேட்க, "சாரி சாரி ஐவர் படை" என அவளையும் இணைத்துக் கொண்டனர்.

"காங்கிராட்ஸ் ஜி! வெரி ப்ரௌட் ஒப் யூ கைஸ்" அனைவரின் பாராட்டையும் ஏற்று, ராம் கௌதம் சிரித்தவாறு நிற்க,

"நம்ம நியூஸ்பேப்பர்க்கு ரொம்ப பெரிய பேர் வாங்கிட்டு கொடுத்து இருக்கீங்க. சோ லெட்ஸ் செலிப்ரேட். ஈவ்னிங் 6 மணிக்கு எல்லாரும் ஹோட்டல் பாராடைஸ் வந்துருங்க. ஓகே"

நிவி, ரெஜினா, வாசு மூவரும் ஆர்பரிப்பாய் கைதட்ட, கௌதம் ராம் அப்போதும் அதே அமர்த்தலான சிரிப்பு.

"என்னை தேடுனியா வாசு?" கௌதம் வாசு காதருகில் வந்து கேட்க, அனைவரும் எடிட்டர் மற்றும் சுரேஷ் மூர்த்தியுடன் பேசிக் கொண்டிருந்ததால் இவர்களை கவனிக்கவில்லை.

"எனக்கு வேற வேலை இல்ல பாரு"

"ஹ்ம்ம்! தேடிட்டாலும்.." என சொன்னவனை அவள் முறைத்துக் கொண்டிருக்க, நிவி ராம் இவர்களை நோக்கி வந்தனர்.

"சரி டா கிளம்பலாம். சுரேஷ் சார் போர்டு மீட்டிங்கில பேசணும் சொன்னாங்க" ராம் சொல்ல,

"சரி அப்ப கிளம்புங்க. ஈவ்னிங் மறக்காம வந்துடுங்க" நிவி சொல்லவும் "ஓகே நிவி, நாங்களே உங்களை பிக்கப் பண்ணிக்குறோம். வெயிட் பண்ணுங்க" என்றான் கௌதம்.

"இனி தான் எந்த ப்ரோப்லமும் இல்லையே , நாங்களே வந்துடுவோம்" வாசு வீராப்பாய் பேச, "நிவி உன் ஸ்கூட்டி பஞ்சர் தானே?" கௌதம் கண்ணடித்து கேட்கவும், நிவியும் புரிந்து கொண்டு "ஆமா அண்ணா! பஸ்ல வர லேட்டாகிடும். நீங்களே வந்துடுங்க" என்றாள்.

"நல்ல அண்ணன், நல்ல தங்கை" என்ற ரீதியில் ராம் அவர்களை பார்த்துக் கொண்டிருக்க, கண் எரியும் வரை முறைத்தாள் வாசு.

இங்கு நடந்து முடிந்த களேபரத்தில் இன்விடேஷன் என்ற ஒன்றை அனைவரும் மறந்திருந்தனர்.

கல்யாணத்திற்கு முன் ராம் தெரிந்து கொள்வானா ராஜ்குமார் யார் என்று? இல்லை ராஜ்குமார் காதலையாவது நிவி தெரிந்து கொள்வாளா? எல்லாம் விதியின் கையில்.

எதையும் அறியாமல் நட்பும் காதலுமாய் இதோ நான்கு பறவைகள் அவர்கள் வாழ்வை ரசித்து வாழ்கிறது. இது இப்படியே தொடருமா?...

தொடரும்..
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
கௌதம் ராஜ்குமாரை பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தானே அவனும் மறந்து விட்டானா.🤔🤔🤔
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
கௌதம் ராஜ்குமாரை பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்தானே அவனும் மறந்து விட்டானா.🤔🤔🤔
இல்லை சிஸ் நிவி அண்ணனை நம்புவான் கௌதம்
 
Top