• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 15

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 15

"கௌதம் நீ வீட்டுக்கு வந்துடு. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து போகலாம்" ராம் சொல்ல கௌதம் தலையாட்டி ஆபீசுக்கு சென்றான்.

சொன்னது போலவே கௌதம் வீட்டிற்கு வந்துவிட ராமும் அவன் வந்த சில நிமிடங்களில் வந்து விட்டான். இருவரும் கிளம்ப, சகுந்தலா இருவரையும் கேள்வியாக நோக்கினார்.

"என்னம்மா லுக்கே சரியில்ல! நாங்க ஏதோ தப்பு பண்ண மாதிரி பாக்குறீங்க?" கௌதம் விளையாட்டாய் கேட்க,

"நீங்க தப்பு பண்றீங்க டா. அதுக்குதானே என்கிட்ட சொல்லாம மறைக்கிறீங்க? கொஞ்ச நாளா ரெண்டு பேரும் சரி இல்ல.. உங்க இஷ்டத்துக்கு போறீங்க! உங்க இஷ்டத்துக்கு வரீங்க! எவனாவது என்ன பிரச்சனைன்னு சொல்றீங்களா?" கோபத்தில் அவர் பொரிய,

"அப்படின்னா நீங்க என் மேல கோவப்படக் கூடாது மா. இதுக்கு முழு காரணமும் இதோ நிற்கிறானே நல்லவன், இவன்தான்" என ராமை கை காட்டியவன், "இவன் தான் உங்க மருமகளுக்கு ஏதோ பிரச்சனைனு இருந்து தீர்த்து வச்சிட்டு இதோ அதுக்கான பார்ட்டிக்கு கூட கிளம்பிட்டான். பாருங்க!" என கோட் சூட்டில் பக்காவாய் தயார் ஆகி நின்றவனை கை காட்டினான்.

"டேய்! நீ எல்லாம் மித்ர துரோகி டா. ம்மா, இதுக்கெல்லாம் முழு காரணமும் நான் இல்ல. இவன்தான்! இவன்தான் நிவிகிட்ட நான் ஹெல்ப் பண்றேன்னு சொல்லி என்னையும் உள்ள இழுத்து விட்டான். இவன் மட்டும் என்ன லுங்கி பனியன்லயா நிற்கிறான்? இவனும் கோட்ல தான் நிக்குறான். நீ எங்க போறேன்னு கேளுங்கம்மா!" என ராம் அவன் பங்கிற்கு ஏற்றிவிட

"ரெண்டு பேரும் நிறுத்துங்கடா! அப்போ இவ்வளவு நாளா நீங்க நிவிக்கு ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கீங்க? அதை ஏண்டா என்கிட்ட மறைச்ச? என் மருமகளுக்கு நல்லது பண்ண நான் வேணாம்னா சொல்லப் போறேன்? புத்தி கெட்ட பசங்களா!" சகுந்தலா வாய்க்கு வந்தபடி திட்ட, இருவரும் தலையை சொறிந்தபடி சிரிப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"சரி சரி பாத்து பத்திரமா போயிட்டு வாங்க" பச்சைக் கொடியை அவர் காட்டிவிட இருவரும் சிட்டாய் பறந்தனர்.

ராம் விசிலடித்துக் கொண்டே காரை ஓட்ட, கௌதம் அவனைப் பங்கமாய் கலாய்த்துக் கொண்டு வந்தான்.

"இது லவ் மேரேஜா? இல்ல அரேஞ்ச் மேரேஜா டா? இந்த அலம்பல் பண்ற" கௌதம் கேட்க, "அரேஞ்ச்டு லவ் மேரேஜ்" என்று கூறி கண்ணடிப்பவனை பார்க்கப் பார்க்க கௌதமிக்கு சந்தோஷமாக இருந்தது.

"கண்ணு வைக்காதடா! ஏன் இந்த பார்வ பாக்குற?" வெட்கமாய் ராம் கேள்வி கேட்க, "என்னோட ராம் தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு"

"போதும் போதும் ரொம்ப ஓட்டாதடா! அந்தப் பக்கம் எந்த லெவல்ல இருக்கு?" என வாசுவை பற்றி ராம் கேட்க, பெருமூச்சு ஒன்றை விட்டான் கௌதம்.

"ரொம்ப கஷ்டம் டா. இந்த நிவி இருக்காளே சரியான வாலு. வாசு அம்மாகிட்ட நான் வாசுவ லவ் பண்றதா சொல்லிட்டா போல. அவங்க என்கிட்ட கேக்கல ஆனா அவங்களுக்கும் சம்மதம்ன்றது அவங்க நடந்துக்கிற முறையிலேயே தெரியுது. ஈவன் அனுக்கு கூட ஓகே தான்னு நினைக்கிறேன். வாசுவை சமாளிச்சு கல்யாணத்துக்கு ஒத்துக்க வைக்கிறது தான் எனக்கு இருக்கிற பெரிய டாஸ்க்டா" கண்ணை மூடிக் கொண்டே கௌதம் சொல்ல, காரை ஓட்டிக் கொண்டே அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்த ராம்

"கௌதம்! இதுக்கெல்லாம் அசருற ஆளா நீ. கீப் மூவ் மேன்" மொத்த புத்துணர்ச்சியும் இரண்டு வார்த்தைகளில் அவன் சொல்லிவிட, கௌதமும் சம்மதமாய் தலையசைத்தான்.

அதன்பின் வாசுவை பிக்கப் செய்து விட்டு, நிவி வீட்டு வாசலில் நின்று ராம் ஹாரன் அடிக்க "ஏன்டா! உள்ள தான் போயேன்" என்ற கௌதமை வாசு முறைத்தாள்.

"நீ ஏன்மா முறைக்கிற? அவன தானே உள்ள போக சொன்னேன்?" என கௌதம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே வாசு நிவிக்கு அழைக்க, நிவியும் வேகவேகமாக உள்ளிருந்து ஓடி வந்தாள்.

"சாரி சாரிபா. கொஞ்சம் லேட் பண்ணிட்டேன்" என அவளும் இணைந்து கொள்ள, கார் ஆட்டம் பாட்டமாய் அந்த ஹோட்டலிற்குள் நுழைந்தது.

"நீங்க உள்ள போங்க. நான் கார் பார்க் பண்ணிட்டு வரேன்" ராம் சொல்லவும் நிவி இறங்க மறுத்துவிட, அது கௌதமிற்க்கும் வசதியாய்ப் போனது. வாசுவுடன் இறங்கி உள்ளே சென்றான்.

"நிவி சும்மாவே கௌதம் கலாய்ச்சுட்டு இருப்பான். நீ இப்படி எல்லாம் பண்ணினா என்னை உண்டு இல்லன்னு பண்ணிடுவான்" ராம் சிரிப்புடன் சொல்ல,

"நான் ஒன்னும் நமக்காக எல்லாம் இதை பண்ணல. கௌதம் அண்ணா வாசு கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவாங்க இல்ல! அதுக்காக தான் பண்ணேன்" அவள் வாய் இதை சொன்னாலும் உனக்காகத்தான் செய்தேன் என அவள் கண் சொல்லியதை ராம் புரிந்து கொண்டான்.

"ம்ம்ம்ம் புரியுது! புரியுது!" கிண்டல் சிரிப்புடன் ராம் சொல்ல அழகு காட்டினாள் நிவி.

சூப் முதல் ட்ரிங்க்ஸ் வரை அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, கௌதம் கால்கள் பரபரக்க, புரிந்து கொண்ட ராமும்,

"டேய்! லேடீஸ்கூட வந்திருக்கோம் கண்ட்ரோல். நோ ட்ரிங்க்ஸ், நோ வே டூ ட்ரிங்க்ஸ். ப்ளீஸ் மச்சி! வாசு சும்மாவே உன்கிட்ட பேச மாட்டா.. நீ ட்ரிங்க்ஸ் பக்கம் போன.... அத்தோட வாசுவ மறந்துட வேண்டியது தான்.." கெஞ்சி மிரட்டி கௌதமை டின்னர்க்கு அழைத்து செல்ல, அவனும் நல்ல பிள்ளையாய் செல்ப் சர்வ் எடுத்து கொண்டு ஒரு டேபிளில் அமர, அப்போது தான் ராமிற்க்கு நிம்மதியானது.

நிவியும் கௌதமுடன் சென்று அமர, தனியாக நின்றிருந்த வாசுவிடம் சென்றான் ராம்.

"சாப்பிடலையா வாசு!"

"சாப்பிடணும் அண்ணா. அம்மா கால் பண்ணினாங்க அதான் பேசிட்டு இருந்தேன்"

"ஹ்ம்ம்! நிவி உனக்கு எவ்வளவு நாளா தெரியும் வாசு?"

"ஏன்ண்ணா? நிவி பத்தி இப்ப தான் தெரிஞ்சுக்கணுமா?" வாசு கிண்டலில் கேட்க, ராம் கேட்க வந்த விஷயமே வேறு!

கௌதமை பற்றி வாசுவிடம் பேச நினைத்து ஏதேதோ உளற, வாசுவின் கேள்வியில் நிதானித்தான். "ச்சச்ச! அப்படிலாம் இல்ல வாசு! அச்சுவல்லி கௌதம் பத்தி பேச தான் நான் வந்தேன்" ராமின் பதிலில் வாசு அமைதியாகி விட,

"சொல்லு வாசு! உனக்கு கௌதமை ஏன் பிடிக்கல?" என்றான்.

"அண்ணா ப்ளீஸ்! நாம வேற எதாவது பேசலாம்"

"இல்ல வாசு, உனக்கு பிடிக்கலனா நான் கம்பல் பண்ணவே மாட்டேன். ஐம் ஷுர் தட். பட் ரீசன் தெரிஞ்சிக்கலாமேன்னு தான் கேக்குறேன். அவனுக்குனு இருக்கிறது நானும் என்னோட பேமிலியும் தான். எனக்கு தெரிஞ்சி அவன் முதல் முதலா ஆசபட்ட ஒன்னுனா அது நீ தான். எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு. ஒரு அண்ணனா உன்கிட்ட கேக்குறேன்" ராம் தெளிவாக கேட்க, கண்ணீரில் நின்றாள் வாசு.

"சாரி ராம் அண்ணா! எனக்கு யாரும் வேண்டாம். எனக்கு என் அம்மாவும் அக்காவும் போதும். என்னோட முகத்த நீங்க பாத்தது இல்லல்ல? பாக்கவும் வேண்டாம். கௌதம் எதுக்காக என்னை ஏத்துக்க தயாரா இருக்காருன்னு எனக்கு தெரில. எனக்குன்னு எதுவுமே இல்ல. என் குடும்பம் ரொம்பவே கஷ்ட்ப்பட்டுட்டாங்க. இனி எந்த கஷ்டத்தையும் அவங்களால தாங்க முடியாது. வீணா என் அக்காக்கு உதவி பண்ணி என் மனச மாத்த முயற்சிக்க வேண்டாம்னு சொல்லுங்க ப்ளீஸ்" நான் உன்னை விட தெளிவானவள் என தன் அனைத்து கவலைகளையும் அவள் கூற,

"சோ! உன் முகம் அப்புறம் உன் பேமிலி இந்த ரெண்டும் தான் நீ கௌதம் வேண்டாம்னு சொல்ல ரீசன் இல்லையா?" அழுத்தமாய் அவன் கேட்க, ஆமாம் எனும் விதமாய் அவள் நின்றாள்.

"உன் முகம்.. அது எனக்கு சொல்ல தெரில.. அப்கோர்ஸ் கௌதம் கூட நிவி உன்னை பத்தி சொன்னதும் பாவப்பட்டிருப்பான் தான். முதல்ல இந்த மாதிரி யாரையும் பார்க்காததனால ஃபேஸ் பண்ண தயங்கி இருப்பான் தான். அது எல்லாருக்குமே உள்ள இயல்பு. ஆனால் பாவப்பட்டு யாருக்கும் காதல் வராது வாசு. உன் முகம் அழகா இருக்குனு உன்னை பார்த்து அவன் காதலிச்சு இருந்தா நீ விலகி போறது நியாயம். அழகை தாண்டி அன்புன்னு ஒன்னு இருக்கு. அவனுக்கு உன் மேலே வந்த காதல் அப்படி தான். அதை நீ தான் உணரணுமே தவிர, நான் சொல்லி புரியவைக்க முடியாது. அண்ட் நிஜமா இதெல்லாம் கௌதம் சொல்லி நான் பேசல. அவனுக்கு ஒரு நல்ல பொண்ணு கிடைக்கணும்னு தான் என் விருப்பம் என் அம்மாவோட விருப்பமும்" ராம் பேச, வாசு அமைதியாய் நின்றாள். மீண்டும் அவனே தொடர்ந்தான்.

"அப்புறம் என்ன சொன்ன? உன் அக்காக்கு உதவி பண்ணி உன் மனச மாத்த ட்ரை பண்றானா? ஹ்ம்ம் ஓகே! இப்ப மணி 8. ஒரு ஹாஃப் அன் ஹௌர் கொஞ்சம் வெளில போய்ட்டு வரலாம் வா" என்றவன் அவள் மறுத்து பேசும் முன்னே கௌதம், நிவியிடம் சொல்லிவிட்டு காரை எடுக்க வேறு வழி இல்லாமல் வாசுவும் உடன் சென்றாள்.

"இந்த லூசுக்கு அறிவே இல்ல நிவி. நான் தான என் காதலை அவளுக்கு புரிய வைக்கணும். இவன் எங்க கூட்டிட்டு போறான் அவள?" என ராமை திட்டிய கௌதம்,

"நிவி ப்ளீஸ் ப்ளீஸ்! கொஞ்சமா பியர்! ப்ளீஸ்! ராம்கிட்ட சொல்லாத. இந்த ஜூஸ் குடிச்சிட்டு இரு. நான் இப்ப வந்துடுறேன்" என்றவனை நிவி எவ்வளவோ தடுத்தும், ட்ரிங்க்ஸ் பக்கம் சென்றுவிட அதிர்ச்சியில் செய்வது அறியாமல் நின்றாள் நிவி.

முழுதாய் ஒரு மணி நேரத்திற்கு பின் ராம் கார் உள்ளே வர, அவசரமாய் நிவி சென்று ராமிடம் கூறவும், அவனும் ஓடி உள்ளே சென்று கௌதமை இழுத்து வந்தான்.

இப்போது வாசு ராமை முறைக்க, 'இப்ப தான்டா உன் அருமை பெருமை எல்லாம் சொல்லி கூட்டிட்டு வந்தேன். அதுக்குள்ள மட்டை ஆகிட்டியே' என கௌதம் தலையில் தட்ட, நிவி "ராம் கௌதம் அண்ணா குடிப்பாங்களா?" என்றாள்.

"இல்ல நிவி! எப்பவும் மாட்டான். ஒன்னு ரொம்ப சந்தோசமா இருக்கும் இல்ல ரொம்ப கஷ்டமா இருக்கும். மத்தபடி அவன் குடிக்க மாட்டான்" நெளிந்து கொண்டே ராம் சொல்ல,

"பியர் சாப்பிட்டா இப்படி ஆவாங்களா என்ன?" உளறளுடன் தலை தொங்கி நிற்பவனை பார்த்து நிவி கேட்க,

"பியர்னு தான் சொல்லுவான். கண்டுக்காம விட்டால்.... " என்று இழுக்கும் போதே இரு பெண்களும் அவனை முறைக்க நால்வரும் காரில் ஏறி கிளம்பினர்.

கௌதமை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து முன்பக்கம் சீட்டில் தள்ளிய ராம் கடுப்புடன் காரை ஸ்டார்ட் செய்ய, நிவி வாசு இருவரும் பின்னால் அமர்ந்தனர்.

தொடரும்..
 
Top