• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 23

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 23

மாலை ஆறு மணி. பிரம்மாண்ட ஹோட்டலில் நடுநாயகமாக ராம்-நிவி, சக்தி-நந்தினி ஒரே வண்ணத்தில் ஒரே மாதிரியான உடையுடன் ஜொலித்து நின்றாலும் நால்வரின் மனதிலும் துளியிலும் நிம்மதி இல்லை.

அது முகத்திலும் பிரதிபலித்ததோ? ராம் அருகே கௌதமும் நிவி அருகே வாசுவும் நின்று அவர்களை முடிந்தவரை சிறுபுன்னகையுடன் நிற்க வைத்திருக்க, சக்தி நந்தினிக்கு அந்த அளவில் யாரும் இல்லாத போதும் தாமாகவே முயன்று குடும்பத்திற்காக புன்னகையை இழுத்து பிடித்து ஒட்ட வைத்து நின்றனர்.

நந்தினிக்கு நிமிர்ந்து சக்தி முகத்தை பார்க்கவே முடியவில்லை. 'கடவுள் ஏன் தன் வாழ்க்கையில் இவ்வளவு விளையாட வேண்டும்?' நேற்றில் இருந்து அவள் நினைப்பு இதுதான்.

நேற்று தான் நந்தினிக்கு சக்தி மேல் ஒரு சின்ன நல்ல பிடிப்பு வந்தது. அதையும் சக்தி தவறாக புரிந்து கொண்டால்??

"நந்தினி வேலைக்கு போய்ட்டு வரட்டும் மா. வீட்ல இருந்தா நேரம் போகாது இல்ல?" சக்தி செல்லம்மாவிடம் சொல்ல,

"என்ன சக்தி இது? நந்துகுட்டி வேலைக்கு போயி தான் ஆகணும்னு என்ன இருக்கு இப்போ?"

"அவ டவுன்ல வளந்த புள்ள. பெரிய படிப்புலாம் படிச்சி இருக்குனு தெரிஞ்சி தானம்மா அன்னைக்கு பொண்ணு கேட்டிய? அப்போ அந்த புள்ள வேலைக்கு போகணும்னு நினைக்குறத தப்பு சொல்லக் கூடாது. அவ இஷ்டப்படி இருக்கட்டும். நீங்க எதுவும் சொல்லாதிய. நாளைக்கு வரவேற்புக்கு ராம் அத்தான் வர சொல்லுச்சு இல்ல. கிளம்புங்க சாய்ந்திரமா போகலாம்" என்றவன் நிற்காமல் செல்ல, முதல் முறையாய் செல்லம்மாவிற்கு ஒரு பயம் வந்தது.

மகன் ஆசையை அப்படியே நிறைவேற்றி அழகு பார்ப்பவர் தான் செல்லம்மா. ஆனாலும் அந்த கிராமத்திலேயே வளந்து ஊறியவரால் நந்தினியை வேலைக்கு அனுப்ப மனமில்லை.

அதை வெட்டாக சொன்னால் சக்திக்கு கோபம் வரும் என தெரிந்து தான் நாசுக்காய் சொல்லி பார்த்தார்.

அவன் சொல்வது சரிதானே? மெத்த படித்தவள் வேலைக்கு செல்ல ஆசைப்படுவதில் தப்பில்லை தான். அவரின் பயம் மகன் மருமகள் குடும்ப உறவை நினைத்து தான்.

சக்தி நந்தினி இருவருக்கு இடையேவும் ஒரு திரை இருப்பதை இந்த ஒரு வாரத்தில் தெளிவாக தெரிந்து கொள்ள முடிந்தது செல்லம்மாவிற்கு.

இப்போது உடனே அவள் வேலைக்கும் சென்றுவிட்டால் அவர்களுக்கு இடையே எல்லாம் சரி ஆவது தான் எப்போது? என்ற எண்ணமே அவர் தயங்க காரணம்.

நந்தினி இவர்கள் உரையாடலை கேட்டுக் கொண்டுதான் இருந்தாள். செல்லம்மாவை பற்றி பெரிதாக எதுவும் தெரியாவிட்டாலும் அவள் எதிர்பார்த்தது போலவே செல்லம்மா இவள் வேலைக்கு செல்வதை மறுக்க, தானாக ஒரு ஏளனப் புன்னகை வந்தது அவளுக்கு.

அடுத்து சக்தி பேசிய வார்த்தைகள் நிச்சயமாக அவள் எதிர்பார்க்காதது. பட்டிக்காட்டானுக்கு இவ்வளவு தெளிவா என்ற எண்ணம்.

அதே யோசனையில் அன்று அவள் சென்னைக்கு சக்தியுடன் கிளம்ப, அவளின் மௌனம் எப்போதும் போல சக்தியை தள்ளி நிற்க வைத்தது.

"டேய் கொஞ்சம் சிரி டா. இத்தோட பத்து முறை சொல்லிட்டேன். ஏன்டா இப்படி படுத்துற? நீயே ரிசெப்ஷன் ஏற்பாடு பண்ண வச்சுட்டு நீயே இப்படி நின்னன்னா நாளைக்கு எதாவது பேசி வைப்பாங்க டா" அழாத குறையாக கௌதம் ராம் காதில் சொல்ல, அவனை உறுத்து விழித்தவன் மனதை போலவே முகமும் சோர்ந்து போனது.

"இப்ப என்னடி நடந்து போச்சு? ஏன் எவனுக்கு வந்த விருந்தோன்னு நிக்குற? ராம் அண்ணா மெதுவா எடுத்து சொன்னா புரிஞ்சிப்பாங்க. கொஞ்சம் சிரி" நிவிக்கு வாசு சொல்ல, பேச்சிற்கு கூட அவளிடம் சிரிப்பு இல்லை.

நடந்ததை நினைத்து எதுவும் ஆக போவது இல்லை தான், ஆனாலும் மனம் அதை கேட்கவும் வேண்டுமே!.

நேற்று கௌதம் அந்த கெஸ்ட் ரூமை திறக்க, அங்கு சிலையாய் நின்ற ராமை பார்த்தே அவனுக்கு அனைத்தும் தெரிந்து விட்டது என புரிந்து கொண்டான்.

"ராம்" கௌதம் அவன் தோளை தொட, தனிச்சையாய் திரும்பினான் அவன்.

"ராஜ் உங்களை யாரு இப்ப இங்க வர சொன்னது? உங்களால பட்ட அவமானம் போதாதா? ஏன் இப்படி உங்க தங்கச்சி வாழ்க்கைய நீங்களே அழிக்குறிங்க?" இருக்கும் கோபத்தை எல்லாம் கௌதம் ராஜ் குமாரிடம் திருப்ப, ராம் கௌதமை மட்டுமே ஆள் துளைக்கும் பார்வை பார்த்திருந்தான்.

'எனக்கும் எல்லா உண்மையும் தெரியும்' என்பதை கௌதம் சொல்லாமல் சொல்லியிருந்தான்.

"இல்ல சார்.. நான் மன்னிப்பு கேட்க தான்..." அவனை பேசக் கூட விடாமல், கையெடுத்து கும்பிட்ட கௌதம்,

"தயவுசெஞ்சு இங்க இருந்து கிளம்புங்க. நீங்க அவசரமா எடுக்குற ஒவ்வொரு முடிவும் இவனை தான் ஹர்ட் பண்ணுது. எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. இப்ப நீங்க போலாம். ப்ளீஸ்" கௌதம் கோபத்தை அடக்கி சொல்லிவிட்டு அவனையும் அவன் மனைவியையும் பார்க்க, அரை மனதாய் ஒன்றும் புரியாமல் அங்கிருந்து கிளம்பினான் ராஜ் குமார்.

"டேய் டேய் ராம்! ஏன்டா இப்படி நிக்குற? அவன் எதாவது உளறுனானா? சொல்லு டா?" கௌதம் ராமை பிடித்து உலுக்க,

"நிவி பண்ணினது உனக்கு தெரியுமா?" என்றான் ராம் அமைதியாய்.

"ராம் பொறுமையா பேசிக்கலாம். நாளைக்கு ரிசப்சன் இருக்கு. முதல்ல வா வீட்டுக்கு போகலாம்" கௌதம் இதயம் ரயில் வேகத்தில் துடித்தாலும் சமாளித்து பார்த்தான்.

"ஏன்டா இப்படி பண்ணின? நீ ஏன்டா இப்படி பண்ணின? உன்னை தான் அவளை விட நம்பினேன். ஏமாத்திட்ட இல்ல? எல்லாரும் சேர்ந்து ஏமாத்திட்டிங்க இல்ல?" கௌதம் சட்டையை பிடித்து ராம் கேட்க,

ஏற்கனவே ராம் இப்படி தான் செய்வான் என தெரிந்தது தான் என்றாலும் ஏனோ அதிகமாய் வலித்தது.

"ராம் ப்ளீஸ்! இதை பெருசாக்காதடா. நிவிய நம்பு. அவ வேணும்னு.."

"பேசாத கௌதம். நான் அவகிட்டயே கேட்டுக்குறேன்" என்றவன் நிற்காமல் செல்ல, தலையில் கை வைத்து கொண்டான் கௌதம்.

'நிவி என்னிடம் பொய் சொல்லிவிட்டாளா?' என்றதற்கு மேல் எதுவுமே யோசிக்கவில்லை ராம். ராம் என்ற அடையாளத்தை தாண்டி கோபக்கார கோகுல் பல நாட்களுக்கு பின் புயலென வீட்டிற்குள் நுழைந்தான்.

"வாங்க பாஸ். இதோ பாருங்க இந்த டிரஸ் நாளைக்கு ஃபன்சன்க்கு செம்மயா இருக்கும்ல? நானும் அத்தையும் தான் செலக்ட் பண்ணினோம். எப்படி இருக்கு?" தனது அறைக்கு வந்தவனின் மனநிலை அறியாமல், அவன் முகத்தில் இருந்த மாற்றத்தையும் அறியாமல் நிவி கேட்க, அவள் முகத்தையே பார்த்து நின்றான் கோகுல் ராம்.

"அப்புறம் நந்தினியும் அண்ணாவும் காலையில தான் வர்ராங்கலாம் பாஸ். கேட்டரிங் எல்லாம் சொல்லியாச்சா? கௌதம் அண்ணா எங்க?" கேள்வியாய் கேட்டுக் கொண்டிருந்தவள் அப்போது தான் அவன் முகத்தை பார்த்தாள்.

"என்னாச்சு ராம்? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? ஏதாச்சும் ஒர்க் டென்ஷன்னா?" அவன் அருகே வந்து கேட்க, அவள் கண்களை பார்த்தான் ராம்.

கொஞ்சமும் அதில் களங்கம் தெரியவில்லை. தெளிவான பார்வையை எப்போதுமே நம்புவான் பிசினஸ் மேன் கோகுல்.

ஆனாலும் அவள் அண்ணன் வாய் திறந்து சொல்லிவிட்டானே? கௌதமும் உண்மை என்றதால் மட்டும் தானே அமைதியாய் நின்றிருந்தான்?.

"நிவி உனக்கு பொய் சொல்ல தெரியுமா?" மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்த கேள்வியை வாய்விட்டு அவளிடமும் கேட்டுவிட்டான்.

"ராம்?" திடிர் கேள்வியில் எதுவும் புரியாமல் அவனை பார்த்து நின்றாள்.

"சொல்லு நிவி"

"என்ன.. சொல்றிங்க?" தவறு செய்தால் பயம் வரும். ராம் முகத்தை பார்த்தே இப்போது பயம் வந்தது நிவிக்கு. அவ்வளவு இறுக்கம்.

"ராஜ் குமார் ஏன் மண்டபம் வர வந்து ஓடி போகணும்?"

இப்படி ஒரு கேள்வியை இந்த நேரத்தில் அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள் தானே? அவன் கேட்ட கேள்வியில் திகைத்து விழிகளை விரித்து அவனை பார்த்து நின்றாள்.

"ஏன் என்கிட்ட பொய் சொன்ன நிவி? உன்னை எவ்வளவு நம்பினேன் தெரியுமா?"

"இல்ல ராம்.. ப்ளீஸ் அப்படி சொல்லாதீங்க. நான் உங்ககிட்ட சொல்ல தான் வந்தேன். ஆனால்.. ஆனால்.."

"ஆனால்.. நந்தினி அந்த இடத்துலயே செத்து போயிருந்தா இல்ல என் அம்மாக்கு ஏதாவது ஆகியிருந்தா தான் சொல்லியிருப்பியா?"

"அய்யோ ராம்! அப்படி எல்லாம் இல்லை. நிஜமாவே நான் சொல்ல வந்தேன். கௌதம் அண்ணா தான் நீங்க கோபப்படுவிங்கனு.. மெதுவா சொல்ல சொல்லி.."

திடிரென்ற அவன் கேள்வியிலும் கோபத்திலும் வார்த்தைகள் முழுதாய் வராமல் திணறினாள் நிவி.

"உன்னை எவ்வளவு தைரியமான பொண்ணோ அதே அளவுக்கு உண்மையானவன்னு நினச்சேன். நீ என்கிட்டயே மறச்சு என்னையே கல்யாணம் பண்ணி.. ஏண்டி இப்படி பண்ணின? ஏன் என்னை ஏமாத்தின?"

கண்களை மூடி அவன் கத்த, கண்களில் கண்ணீருடன் வாய் பொத்தி அழுது நின்றாள் அவள்.

"ராம் கதவை திற!" கௌதம் வெளியில் நின்று அறை கதவை தட்டினான்.

ஓடிசென்று கதவை திறந்த நிவி அழுது கொண்டே "அண்ணா நீங்களே சொல்லுங்க. நான் தப்பு பண்ணலைன்னு சொல்லுங்க" என்று அவனிடம் கெஞ்ச,

"ராம் என்ன பைத்தியக்காரத்தனம் பண்ணிட்டு இருக்க? நிவி மேலே தப்பு இல்லைடா"

"என்ன டா இல்ல? என்ன இல்ல? அன்னைக்கு எல்லாரும் பிளான் பண்ணி தான் அவனோட தங்கச்சி இவன்னு என்கிட்ட மறச்சிங்களா? லவ் பண்ற கருமத்த மண்டபம் வர வந்து மறச்சவன் நல்லவன், அவனை மண்டபத்துல இருந்து அனுப்பின நீங்க நல்லவங்க, இதை கேட்குற நான் கெட்டவனா?" வார்த்தைகளை சிதறவிட்டுக் கொண்டிருந்தான் ராம்.

"இல்ல ராம்! அண்ணா லவ் பண்ணினதே எனக்கு அன்னைக்கு தான் தெரியும். அது மட்டும் இல்ல ஒரு நிமிஷம் அண்ணா லேட்டா போயிருந்தான்னா கூட அந்த பொண்ண உயிரோடவே பாத்திருக்க முடியாது. எல்லாத்துக்கும் எங்க அம்மா.."

"நிறுத்து டி. அதையே தான் நானும் கேக்குறேன். நந்தினிக்கோ என் அம்மாக்கோ எதாவது ஆகியிருந்தா? உன் அண்ணா வாழ்க்கை உனக்கு முக்கியம், அந்த பொண்ணோட வாழ்க்கை முக்கியம், உன் அம்மா சொன்னா உன் அண்ணா மணமேடை வர வருவான். நீ அவனை அனுப்பி விடுவ. எங்களை பத்தி யாரு டி கவலைப்பட்டிங்க?" ராமின் கோபம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகமாக, கௌதம் நிலைமை கைமீறி செல்வதை உணர்ந்தான்.

"டேய் லூசு மாதிரி பேசாத! இன்னொரு பொண்ண விரும்புறவன் நம்ம நந்தினி கழுத்துல தாலி கட்டியிருந்தா என்ன நடந்திருக்கும்? அதை கொஞ்சம் யோசி" கௌதம் அவனுக்கு புரிய வைக்க முயல,

"அதான் மேடம் தடுத்துட்டாங்களே!. நீயும் தானே தெரிஞ்சே என்கிட்ட மறச்சுருக்க?. என் கஷ்டம், என்னோட வலி உங்களுக்கு புரியல இல்ல? என் மூஞ்சிலயே முழிக்காதீங்க ரெண்டு பேரும்" என்றவன் வீட்டைவிட்டு வெளியேறி சென்றான்.

கௌதம் தலையில் கைவைத்து நின்றுவிட, செல்லும் அவனையே கண்ணீருடன் பார்த்து நின்றான் நிவி. அதன்பின் இதோ வரவேற்ப்பிற்கு ஒரு மணி நேரம் முன்பு தான் வந்து சேர்ந்தான்.

ரிசெப்ஷன் வந்ததும் தெரியவில்லை போனதும் தெரியவில்லை. அடுத்தநாள் காலை கிளம்பிக் கொண்டிருந்தபோது,

"அத்தை நான் ஒரு ஒரு வாரம் அம்மா வீட்ல இருந்துட்டு வரவா?" நந்தினி செல்லம்மாவிடம் கேட்டாள்.

"எத்தனை நாள் வேணாலும் தங்கிக்கோங்க கண்ணு. வயல் வேலையெல்லாம் நான் பாத்துக்கிடுதேன்" செல்லம்மா சொல்ல, சக்தியையும் சேர்த்து அவர் சொன்னதில் மலங்க மலங்க விழித்து நின்றாள்.

"இல்ல.. அ..த்தை... அவருக்கு வேலை இருக்காம்.. நான் மட்டும்..." தயங்கி தயங்கி அவள் சொல்ல, இப்போதுதான் அவர்கள் பிரச்சனை பெரிது என்று முழுதாய் விளங்கியது செல்லம்மாவிற்கு.

"என்ன நந்துகுட்டி. கல்யாணம் ஆகி ஒரு வாரத்துல இப்படி வந்து கேட்குற. நீ எவ்வளவு நாள் இங்க தங்கினாலும் நான் எதுவும் சொல்லமாட்டேன். ஆனால் புதுபொண்ணு இப்படி வந்து தனியா தங்கினால் ஊர்ல எல்லாரும் தப்பா பேசுவாங்க கண்ணு" அவள் மனம் நோகாதவாறு எடுத்து கூறினார்.

"என்ன சொல்றா அண்ணி?" என்றவாறு நிவியுடன் சகுந்தலா வர, அதேநேரம் கௌதமும் சக்தியும் வீட்டிற்குள் வந்தனர்.

"நந்தினிக்கு உங்களை ரொம்ப தேடுது போல. கொஞ்சநாள் இங்க இருந்துட்டு வரவானு கேட்குறா" என அவரிடம் சொன்னவர், "சக்தி! நீயும் ஒரு ஒரு வாரம் இங்கே தங்கிட்டு வா. அவளுக்கும் கொஞ்சம் பழகணும் இல்ல!" என்றார் மகனிடம்.

அதற்கு சக்தி பதில் சொல்லும் முன் "நந்தினி என்ன பழக்கம் இது? நீ தான் அங்கே பழகிக்கனும். அதைவிட்டுட்டு ஏன் இப்படி பண்ற?" சகுந்தலா அதட்டலாக சொல்ல, அவள் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

கௌதம் அவளையும் சக்தியையும் தான் மாறிமாறி பார்த்திருந்தான்.

"இல்ல அத்தை. நந்தினி பிரண்ட்ஸ் எல்லாரையும் இப்ப தான் பார்க்க முடியுமாம். அதுனால அவங்.. அவ இங்கே இருந்துட்டு வரட்டும். எனக்கு தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு ஒரு வாரத்துல நானே வந்து கூட்டிட்டு போறேன்" என்றவன் அடுத்த கேள்வி அம்மாவிடம் இருந்து வரும்முன் வேகவேகமாய் அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் அந்த பக்கம் செல்லவும் நந்தினியும் அவள் அறைக்கு நகர, கௌதம் அவள் பின்னோடு சென்றான்.

மாடிப்படியின் கடைசியில் அவள் திரும்ப, "நந்து ஒரு நிமிஷம்" என கௌதம் அழைக்க,

"சொல்லுங்க அண்ணா" என்று அவன் அருகில் வந்தாள் நந்தினி.

"பிஸியா டா? கொஞ்சம் பேசலாமா?" கௌதம் கேட்க, சக்தியை பற்றி கேட்டு விடுவானோ என பயம் இருந்தாலும் "பேசலாம் அண்ணா" என்று சொல்ல, "சரி வா" என அவளை ராம் அறைக்கு அழைத்து சென்றான்.

"ராம்!" மெலிதாய் வாசலில் நின்று அழைக்க, கௌதம் மேல் இருந்த கோபத்தை என்றுமே இழுத்து வைக்காத ராமும் இம்முறையும் அதை செயல்படுத்தி "உள்ளே வா டா" என்றான்.

"அம்மா நீ ஊருக்கு கிளம்புறதா சொன்னாங்க! கிளம்பலையா டா?" நந்தினியிடம் ராம் கேட்க,

"உன் சிஸ்டர்க்கு முக்கியமான வேலை இங்கே இருக்காம். அதுனால கொஞ்சநாள் இங்கே தான் இருக்க போறாங்களாம்" கௌதம் ஒருமாதிரி குரலில் சொல்ல, மீண்டும் தலை குனிந்தாள்.

"ஓஹ்" என்ற ராம் அமைதியாகிவிட, கௌதம் அவனை முறைத்தான்.

"ஏன்டா என்ன வேலைனு கேட்க மாட்டியா?" கௌதம் சொல்ல, புரியாமல் பார்த்தான் ராம்.

"சொல்லு நந்து மா. கல்யாணம் ஆன ஒரு வாரத்துல புருஷன ஊருக்கு அனுப்பிட்டு அப்படி என்ன முக்கியமான வேலை?" கௌதம் அவன் முழு உயரத்திற்கும் நின்று சீரியஸ்ஸாய் கேட்க,

"கௌதம் என்ன பேசுற நீ? இப்ப ஏன் அவளை மிரட்டுற மாதிரி பேசுற?" குழம்பி போன ராம் கேட்க,

"சாரி டா. உன் தங்கைகிட்ட நீயே கேளு" கௌதம் சொல்லவும், அவனை முறைத்துவிட்டு வாயை மூடிக் கொண்டான் நண்பன் மேல் இருக்கும் நம்பிக்கையில்.

அதற்குமேல் கண்ணீரை அடக்க முடியவில்லை நந்தினிக்கு. "அண்ணா" என்றவள் தேம்பி தேம்பி அழ, "ஹேய் என்னாச்சு டா" என பதறி அவளை தோள் சாய்த்தான் ராம். கௌதம் தள்ளி நின்றே அவளை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தான்.

சாப்பிட அழைக்க வந்த நிவி அங்கு இருந்த மூவரையும் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள்.

'ஏன் நந்தினி அழுகிறாள்?' என நினைத்தவள் அதை ராமிடம் கேட்க முடியாமல் திரும்பி செல்ல முனைகையில் கௌதம் தான் அவளை உள்ளே அழைத்தான்.

"நந்தினி முதல்ல அழுறத நிறுத்தி என்ன நடந்துச்சுன்னு சொல்லு. சக்தி எதாவது சொன்னானா? இரு இப்பவே அவனை இங்கே கூட்டிட்டு வர்றேன்" கௌதம் அவள் அழுவதை நிறுத்த அப்படி சொல்ல,

அதே போல அவளும் அழுகையை நிறுத்தி கௌதம் கைப்பிடித்து தடுத்தாள். ராமிற்கு இப்போது தான் ஏதோ புரிவது போல தோன்ற, நந்தினியை கேள்வியாய் பார்த்து நின்றான்.

"அண்ணா எனக்கு அங்கே போகவே பிடிக்கலண்ணா. நான் பேசாம இங்கேயே இருந்துடுறேனே!" நந்தினியின் வார்த்தைகளில் நிவியும் ராமும் அதிர்ந்து நிற்க, எதிர்பார்த்தது தான் என்பதை போல நின்றான் கௌதம்.

"நந்தினி என்ன சொல்ற நீ? அப்படியெல்லாம் பேச கூடாது நந்தினி" நிவி அவளை அணைத்து கொண்டு சொல்ல,

இல்லை என தலையாட்டியவள் "முடியாது அண்ணி. எனக்கு பிடிக்கல அங்கே யாரையும் பிடிக்கல. சக்..சக்தியையும் பிடிக்கல அண்ணி" என சொல்ல நிவி கௌதம் ராம் மூவருமே அவள் அழுகையுடன் பேச்சிலும் அதிர்ந்து நின்றனர்.

தொடரும்..
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
சக்தியை அவள் புரிந்து கொள்ள கூட முயலவில்வையே.
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670

MEGALAVEERA

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 10, 2021
Messages
542
Nice epi
inth varthaya thali katturathu munnadi ilaa sollanum intha ponnu yennappa ipo solluthu ithuku yethum selected amnesiyava
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
Nice epi
inth varthaya thali katturathu munnadi ilaa sollanum intha ponnu yennappa ipo solluthu ithuku yethum selected amnesiyava
Athane🤣🤣
 
Top