• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 3

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 3

“குட் மார்னிங் எடிட் மேன்” நிவி

“குட் மார்னிங் வாலு. என்ன இன்னைக்கு லேட்டாச்சு?” எடிட்டர்

“அதுவா!... “ என்று ஆரம்பித்தவள் வழியில் நடந்ததை முழுதாய் சொல்லி முடித்து “சும்மா லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டோம்ல! இந்த நிவிகிட்டயேவா?” என்று பெருமையாய் சொல்ல,

“பட் நிவிமா எல்லா இடமும் ஒரே மாதிரி இருக்காது. பீ கேர்புஃல்” என்றார் அவர்.

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன் எடிட்”

“சரி சரி! இதை பாரு நிவி. ஒரு பெரிய கார்ப்பரேட் கம்பெனி ஓனர். நிறைய பொண்ணுங்க வாழ்க்கைல விளையாடி இருக்குறதா தகவல் வந்திருக்கு. பொண்ணுங்க யாரும் கம்பளைண்ட் குடுக்க தயாரா இல்ல. அவங்க பேமிலிக்கு தெரிஞ்சா என்னாகும்னு பயப்படுறாங்க”

“அவ்வளவு பெரிய அப்பாடக்கரா! சரி விடுங்க. நிவி இருக்க பயமேன்!”

“நோ நிவி! இது ரொம்ப சீரியஸ். நீ எப்பவும் போல தனியா போய் எதுவும் பண்ண வேண்டாம். அவன் ரொம்ப டேன்ஜர். சோ அங்கே நீயும் உன்கூட இன்னொருத்தர் வருவாங்க. ரெண்டு பேரும் அவன் கம்பெனில ஜாயின் பண்ற மாதிரி பண்ணி அங்கே இருந்து டீடெயில்ஸ் அண்ட் நியூஸ் கலெக்ட் பண்றீங்க. இதுக்கு தைரியமும் வேணும் மூளையும் வேணும். ஏதோ கொஞ்சம் உனக்கு மூளை இருக்குன்றதால உன்னை செலக்ட் பண்ணிருக்காங்க. சோ உனக்கு இது ஓகேவானு நீ தான் சொல்லனும்”

“ம்ம் எல்லாம் சரி தான். எனக்கு கொஞ்சம் மூளை இருக்கா இல்லை நிறைய இருக்கானு நானே ப்ரூப் பண்றேன்” நிவி சொல்ல,

“அப்ப உன்கூட தினேஷ் வரட்டும். உனக்கு ஹெல்ப்க்கு” என்றதும், “அவன்லாம் வேண்டாம் எடிட். நானும் வாசுவும் பார்த்துக்குறோம் ப்ளீஸ்” என்றவளிடம்

“ஹ்ம்ம் நீ முடிவு பண்ணிட்டா மாத்த முடியுமா! ஓகே நீங்க நாளைக்கே உங்க ஒர்க் ஸ்டார்ட் பண்ணலாம்” என்றதும்

“ஓகே எடிட். நீங்கள் டீடெயில்ஸ் மெயில் பண்ணுங்க” என்றவள் எழுந்து சென்றாள்.

--------------------------------------

"ஏன் மா என்னை படிக்க வைக்கல?" என்ற 28 வயது நிரம்பிய வளர்ந்த குழந்தையை என்ன சொல்லி தேற்ற என தெரியாமல் அவன் தலைகோதிக் கொண்டிருந்தார் செல்லம்மா.

"நானும் படிச்சி, ராம் அத்தான் மாதிரி கோர்ட்டு சூட்டு போட்டு ஆபீஸ் எல்லாம் போயிருந்தா நந்தினி கல்யாணத்துக்கு என்னையும் முறைப்பையனா நினைச்சாவது பார்த்திருப்பாங்கள்ள மா?" என தன் அன்னையிடம் தன் மன வேதனையை உளறிக் கொண்டிருந்தான் சக்தி வேல். சகுந்தலாவின் தூரத்து சொந்தம் மற்றும் அதிகம் ஒட்டுதல் உள்ள ஒரே குடும்பமும் கூட..

"சக்தி இங்கன பாரு, உனக்கென்ன டா ராசா குற? அவுக பட்டணத்து ஆளுங்க. நம்ம நந்து குட்டி பெரிய படிப்புனங்க ஆசப்பட்டு படிச்சிருக்கு. அவுங்களுக்கும் தம்ம பொண்ண ராணியாட்டம் வாழ வைக்கணும்னு மனசு அடிச்சுக்கும்ல! ராசா நம்ம வீடு அப்ப இருந்த நிலைக்கு என்னால உம்ம படிக்க வைக்க முடியாம போச்சி டா. உம்மால தான இன்னைக்கு தோட்டம் தொரவுனு நான் கனவு கண்டா கூட நிலைக்காத வாழ்க்கைய வாழ்ந்து வாரேன்! எஞ்சாமி உன்ற மனசு எனக்கு தெரியாம போச்சே ராசா!" செல்லம்மா மகனின் மனம் தெரிந்ததும் கலங்கிப் போனார்.

மதுரை சோழவந்தான் அருகே சிறிய கிராமத்தில் தான் சக்திவேல் தன் அன்னையுடன் வசித்து வருகிறான். சிறிய வயதில் குடும்ப சூழ்நிலைக்காக கேரளாவில் லாரி கிளீனராக சென்றவன் படிப்படியாக லாரி ஓட்ட கற்று டிரைவராய் மாறி இன்று 28 வயதில் விவசாயத்தை முதன்மை தொழிலாய் தன் ஊரிலேயே செய்து தனக்கென ஒரு அடையாளத்துடன் வலம் வருகிறான்.

ராம் குடும்பம் பூர்விகம் மதுரை தான். இப்போதும் கோவில் திருவிழா முதல் திருமண அழைப்பு போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் எல்லாரும் வர முடியாவிட்டாலும் சகுந்தலா மட்டுமாவது வந்து விடுவார். திருவிழாவிற்கு 3 நாட்களும் சகுந்தலா, ராம், கௌதம், நந்தினி அங்கே தான் தங்குவர். அங்கு அவர்களுக்கு என்று ஒரு வீடும் உள்ளது.

அப்படிதான் கோவில் திருவிழாவில் 3 வருடங்களுக்கு முன் நந்தினியை சக்திவேல் முதல்முறை பார்த்தது. அதன்பின் சிலமுறை அவள் வந்தபோதும் சகுந்தலா செல்லம்மா இருவரும் பேசிக் கொண்டிருக்க இவனும் அவளை பற்றி தெரிந்து கொண்டான். அந்த 3 வருடத்தில் தான் இவர்கள் இரு குடும்ப உறவும் நெருங்கியது கூட.

அன்னை பேசிய பிறகே சுதாரித்தான் சக்திவேல். "அட வுடுங்கம்மா! நடக்குறது தானே நடக்கும்! நான் தான் விஷயத்தை கேட்டதும் தாங்காம என்னவோ உளறிட்டேன். அந்த புள்ள நல்லாருக்கனும் அம்புட்டு தான்" என்று எழுந்து வேகமாய் சென்றுவிட்டான்.

செல்லம்மா செல்லும் தன் மகனையே பார்த்தவாறு அமர்ந்துவிட்டார்.

"ராம்.. கௌதம்.. " சகுந்தலா ராம் அறையை பார்த்து குரல் கொடுக்க, "இதோ வரோம் மா" என்றான் கௌதம்.

"எரும வயசாகுது. குடுத்த வேலையை பாக்குறானுங்களா?" சகுந்தலா புலம்பல் தொடர, "ஏன்மா காலையிலே அவங்களை திட்டிட்டு இருக்கீங்க?" என ஆஜர் ஆனாள் நந்தினி.

"பின்ன என்ன டி! ரெண்டு ஜோடி ஜாதகத்தையும் நம்ம ஜோசியர்கிட்ட காட்டி பார்த்துட்டு வர சொன்னேன். ஒருத்தனாவது பதில் சொன்னானா?" என சொல்லிக்கொண்டு இருக்கும் போதே இருவரும் கீழே வந்தனர்.

"ம்மா! இந்தாங்க நீங்க கொடுத்த ஜாதகம். எந்த பிரச்சனையும் இல்ல. பொருத்தம் எல்லாம் பக்காவா இருக்காம். நந்தினிக்கு ஏதோ ஒரு தடங்கல் வரும் கவலைப்பட ஒன்னும் இல்லைனு சொன்னாரு. ரெண்டு கல்யாணம் ஒண்ணா வைக்குறதுலயும் எந்த பிரச்சனையும் இல்லையாம்" என கௌதம் சொல்ல,

"அடப்பாவி! நேத்து என்கூட தானடா இருந்த? இந்த வேலை எப்போ பார்த்த?" என்றான் ராம்.

"அம்மா சொல்லி பண்ணாம விட்டுடுவேனா? அதெல்லாம் நாங்க கன்(gun) மாதிரி"

"அப்போ எல்லாம் ஓகே தானடா? அவங்க வீட்டுல பேசிடலாம் இல்ல? பொண்ணு பாக்குற ஃபார்மாலிட்டி எல்லாம் வேணாம்னு மாப்பிள்ளை சொல்லிட்டாறாம். அவங்க முறைப்படி கல்யாணத்துக்கு அப்புறம் ரிசெப்ஸன்… அதனால நம்ம முறைப்படி கல்யாணத்துக்கு முந்தின நாள் வைக்குற நிச்சயம் வேணாம். நீங்க ரிசெப்ஸன்க்கே செஞ்சிடுங்கனு சொல்லிட்டாங்க" என சகுந்தலா சொல்லிக்கொண்டே செல்ல,

'என்ன இது! பொண்ணு பாக்குற பன்க்ஷன் ஏன் மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லணும்? நிச்சயமும் வேணாம்னு சொல்லிருகாங்க?' என கௌதம் யோசிக்க,

"ம்மா! ரெண்டு கல்யாணமும் ஒண்ணா வைக்குறது பிரச்சனை இல்ல. பட் ரெண்டு வீட்டுலயும் சம்மதம் கேட்டுக்கோங்க. எந்த ப்ரோப்லேமும் நந்தினிக்கு இல்லாமல் பாத்துக்கணும். டேய் எனக்கு மீட்டிங் இருக்கு. நான் கிளம்புறேன்" என சொல்லிக் கொண்டே ராம் செல்ல, கௌதம் யோசனையாய் அமர்ந்தான்.

"என்ன டா ரெண்டு வீடுனு சொல்லிட்டு போறான்?" என சகுந்தலா கேட்க "ப்ச் சாரி மா! நான் தான் பொண்ணு குடுத்து பொண்ணு எடுக்குறதை சொல்ல மறந்துட்டேன்" என்றவன்,

"ம்மா! நானும் பேமிலி பத்தி விசாரிச்சேன். மாப்பிள்ளை பத்தி எல்லாரும் நல்லதா தான் சொன்னாங்க. நிவியை நான் நேர்லயே பார்த்துட்டேன். ஷி இஸ் சோ ஸ்வீட். ஆனால் நீங்க சொல்றது பார்த்தால் அவங்க அம்மா அப்பா தான் கறாரா இருகாங்க போலயே? நிச்சயம் கூட வேண்டாம் சொன்னா எப்படி மா?" என்றான்.

"ஆமா கௌதம்! என்ன இருந்தாலும் மாப்பிள்ளை வீடு இல்ல. கொஞ்சம் அனுசரிச்சு தான் போகணும். பொண்ணு மாப்பிள்ளை கல்யாணம் வரை பேசவே மாட்டாங்களாம் அவங்க சைடுல. அதான் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணத்தை வச்சிடனும்னு சொல்லி வச்சிருக்கேன். ஜாதகம் பார்த்தாச்சுல்ல! இனி கல்யாண வேலையை ஆரம்பிக்கலாம்" என சொல்ல ஏதோ தவறாகப்பட்டது கௌதமிற்கு.

"இது என்ன மா அநியாயம்! அப்படி பார்த்தால் நாமளும் தானே மாப்பிள்ளை வீடு?" நந்தினி கேட்க,

"நந்தினி! அப்படி எல்லாம் பேச கூடாது! கல்யாணம்னா முன்ன பின்ன இருக்கும். நீ போற வீட்டுல நிம்மதியா வாழனும். இந்த மாதிரி அதிகப்ரசங்கித் தனமா அங்கேயும் போய் பேசி என் மானத்தை வாங்கிடாதே!" என சொல்ல, கோபத்துடன் எழுந்து சென்றாள் நந்தினி.

கௌதமும் அம்மா சொல்வது சரிதான் என்று நினைத்து கொண்டான்.

"சோ! யூ ஆர் நிவி அண்ட் யூ வாசமிகா ரைட்!"

"எஸ் சார்"

"ஹ்ம்.. அண்ட் ஐம் வருண். ஐ டோன்ட் லைக் ரெகமன்டேஷன். பட் யூ ஆர் சோ பீயூடிபுஃல். உனக்காக... இட்ஸ் ஓகே" என கைநீட்ட, தயங்கி தயங்கி கை கொடுத்தாள் நிவி.

"இவன் பெரிய ஆணி! ரெகமன்டேஷன் புடிக்காதாம். இரு டா உன்னை கழுதை மேலே ஊர்வலம் போக வைக்கிறேன்" வாசு நிவி காதுக்குள் சொல்ல,

நிவி சொன்னது போல அடுத்த நாளே எடிட்டருக்கு தெரிந்தவர் மூலம் வேலையில் சேர வந்து விட்டிருந்தனர் இருவரும்.

"ஆபிஸ்லையும் இவங்க ஏன் ஃபேஸ் கவர் பண்ணியிருக்காங்க?" என்றான் வாசுவை பார்த்து.

"ஹ்ம்.. எனக்கு மூஞ்சில பூரான் பிராண்டிருச்சு பாக்கறியா?" குத்தலாக வாசு கேட்க, அழகான பெண்களை மட்டுமே பார்க்கும் வருண் "ச்சே ச்சே கோ கோ. ஸ்டார்ட் யுவர் ஒர்க்" என்றான்.

வெளியே வந்ததும் வாய் விட்டு சிரித்த நிவி, "என்னடி இப்படி பேசிட்ட! ஒரு நிமிஷம் அவன் மூஞ்ச பாக்கணுமே.. ஹா ஹா ஹா" என சிரித்தாள்.

"பின்ன என்ன டி உன்கிட்ட அப்படி வழியுறான். அவன் பார்த்த பார்வை இருக்கே.. ச்சை! என்ன ஜென்மமோ!" வாசு கோபத்தில் பொரிய, இருவரும் அவரவர் கேபின் சென்று அமர்ந்தனர்.

தொடரும்..
 
Top