• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 30

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 30

நான்கு நாட்களுக்கு முன்தான் ராம் நிவியை அவள் அன்னை வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தான்.

மீண்டும் ராமிடம் மன்னிப்பு கேட்க வரப் போவதாக ராஜ்குமார் சொல்லவும், தான் சொல்லும் போது வந்தால் போதும் என நிவி தடுத்து விட்டிருந்தாள்.

வீட்டுக்கு அழைத்து வந்த உடன் ராம் கேட்ட முதல் கேள்வியே "ஏன் வேலையை ரிசைன் செய்தாய்?" என்பது தான்.

"பிடிக்கல, போகல" என்றவளை அவன் ஆழ்ந்து பார்க்க,

"ப்ச்! எனக்கு உங்களோட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு தோணுது ராம். அப்படியே போனும்னு தோணிச்சுனா, நான் உங்க கூட ஆபீஸ் வர்றேனே" என்றவளை இழுத்து அணைத்தான் ராம். அவளும் வாகாய் அவனுடன் ஒன்றிக் கொண்டாள்.

"விது! இனிமேல் நமக்குள்ள எந்த பிரச்சனையும் வரக் கூடாது. அது யார் மூலமா இருந்தாலும் சரி. ஏன் உன் ப்ரோபஸ்ஸனல் மூலமா இருந்தாலும் சரி" என்றவனை அவள் விலகிப் பார்க்க,

"அதுனால தானே ரிசைன் பண்ணின?" என குறுகுறுவென பார்த்தபடி அவன் கேட்க, மேலும் கீழும் தலையாட்டினாள் பெண்னவள்.

ரிப்போர்ட்டர் வேலையில் நேரம் காலம் கிடையாது. எந்த நேரம் எங்கு செல்லவும் தயாராய் இருக்க வேண்டும். இதெல்லாம் தெரிந்தும், அதுவும் விரும்பியே அதை படித்தவள் தான் நிவி. அவனுக்காகவே மொத்தத்தையும் விட்டிருக்கிறாள்.

ஏன்? அன்று கல்யாணம் முடிந்த உடனே கூட அவள் அன்னையையும் உதறிவிட்டு இவனுடன் தானே வந்தாள்?. அப்பொழுதே அவள் அறியாமல் அவளுள் நுழைந்திருக்கிறான் இந்த கள்வன்.

"சாரி பேபி! நீ எனக்காக, என் பேமிலிக்காக பண்ணின எதையும் புரிஞ்சிக்காம நான் உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்ல" அவன் குரலே அவன் எவ்வளவு தூரம் வருந்துகிறான் என்பதை சொல்ல,

அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், "ராம்! உங்களை எப்ப இருந்து லவ் பன்னினேன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் கல்யாணத்துக்கு அப்புறம் உங்க கூடவே இருக்கனும்னு தான் ஆசைபட்டேன்.

நமக்குள்ள இந்த பிரச்சனை வரலைனா கூட நான் ரிசைன் தான் பண்ணியிருப்பேன். எனக்கு ராம்னா இப்ப அவ்வளவு பிடிக்கும். இப்பவும் என்ன? இப்படி ஹக் பண்ணி நீங்கள் சாரி கேட்கும் போது, இதுக்காகவே இன்னொரு முறை நான் தப்பு பண்ணி உங்ககிட்ட மாட்டிக்கலாம்னு தோணுது"

அவள் பேச ஆரம்பித்ததும் குற்ற உணர்வில் அவளை பிடித்திருந்தவன், அவள் பேசப் பேச ஒரு புன்சிரிப்புடன் இறுக்கி அணைத்துக் கொண்டான்.

இதோ தொடர்ந்து வந்த இந்த ஒரு வாரமும், இனி வரும் காலமும் அவர்களுக்கு சொர்க்கம் தான்.

........................

"சொல்லு டி".

"எது டி'யா?"

"ஆமாம் டி என் அத்தை மகளே! என்ன பண்ற டி?"

"ஹலோ அப்புறம் நானும்... "

"என்ன! நீயும் என்னை டி'னு கூப்பிடுவியா?"

"இல்ல டா'னு கூப்பிடுவேன்"

"அட மக்கு! இப்பல்லாம் ஓல்ட் ஜோடி கூட புருஷன டா'னு தான் பப்ளிக் ப்ளேஸ்ல கூப்பிடுறாங்க. இதுலாம் ஒரு மேட்டர்னு என்னை மிரட்டுறியா. நேரம் டி"

"அய்யோ! என்ன கௌதம் டீன்ஏஜ் பசங்க மாதிரி பேசிட்டு இருக்கீங்க?"

"நிஜமா எனக்கே ஆச்சர்யமா இருக்கு வாசு! ஆனால் ரொம்ப ஹாப்பியா இருக்கு"

"ஆமா! என்னவோ இப்ப தான் ஹாப்பியா இருக்குற மாதிரி! நான் உங்க லைப்ல வர்றதுக்கு முன்னாடியே இப்படி தானே யாரையாச்சும் வம்பிழுத்துட்டு ஜாலியா சுத்திட்டு இருந்திங்க?" வாசுவும் விளையாட்டாய் அவன் விளையாட்டை தொடர்ந்தாள்.

"ம்ம் நிஜம் தான். ஆனாலும் இப்ப அதைவிட சந்தோசமா இருக்கேன்"

"ஏன்? அப்படி என்ன சந்தோசம் அய்யாக்கு?"

"நீ தான் வாசு. உன்னை லவ் பன்றேன்னு எனக்கு புரிஞ்சப்போ இருந்த சந்தோசத்தை விட, இப்ப இருக்குற சந்தோசம் வேற! அதை எப்படினு சொல்ல தெரியல"

"கௌதம்!.. "

"ப்ச்! பேசவிடு டி"

"சரி சொல்லுங்க"

"நீ, நான்.. நமக்கு கல்யாணம் ஆன அப்புறம் நாமலும் ஒரு பேமிலி! இல்ல? அதை நினைச்சாலே எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா?"

அவனின் உள்ளார்ந்த பேச்சில் மௌனமானாள் வாசு.

"ஹெல்லோ! ஹெல்லோ வாசு! வாசு லைன்ல இருக்கியா?" - கௌதம்

"ஹான்.. சொல்லுங்க கௌதம்"

"வாசு நான் எவ்வளவு ட்ரீம்ஸ்ல இருக்கேன் தெரியுமா? இந்த கௌதம்க்குன்னு ஒரு பேமிலி. அதுவும் அடுத்த வருஷமே என்னையும் அப்பான்னு கூப்பிட ஒரு க்யூட் பொண்ணு. நினச்சு பாரேன். அப்படியே மிதக்குற மாதிரி இருக்கு டி நினைச்சாலே"

"ஹெலோ ஹலோ! என்ன சார் கற்பனை குதிரை வேகமா ஓடுது? பொண்ணு தான்னு நீங்களே முடிவு பண்ணினா எப்படி?"

"ஹா ஹா ஹாஹா ஹாஹா" வாசு கேள்வி கேட்ட அடுத்த நொடி சத்தமாய் சிரித்தான் கௌதம்.

"இப்ப நான் என்ன ஜோக் சொல்லிட்டேன்னு இப்படி ஒரு சிரிப்பு?"

"இல்ல, நான் சொன்னதை முழுசா கேட்டியா?"

"ம்ம் கேட்டேனே!"

"என்ன கேட்ட?"

"ப்ச்! கௌதம் நீங்க உளறுறிங்க. போங்க நான் போனை வைக்குறேன்"

"ஹேய்ய்! ஒரு நிமிஷம் இரு நானே சொல்றேன். நான் என்ன சொன்னேன்?. அடுத்த வருஷமே என்னை அப்பான்னு கூப்பிட பொண்ணு வருவானு சொன்னேன். ஆனால் நீ பொண்ணு தானான்னு கேட்குற? அப்ப உனக்கும் ஓகே தானே?"

சிரிப்பை குறுஞ்சிரிப்பாக மாற்றி அவளை கிண்டல் செய்து அவன் சொல்ல, அந்த பக்கம் வாசுவின் முகமோ அநியாயத்திற்கு சிவந்திருந்தது.

"வாசு! வாசு!" என இரு முறை அழைத்தும் அவள் வெட்கத்தில் பேசாமல் இருக்க,

"சரி விடு! உனக்காக வேணா பையன்னு சொல்றேன். ஆனால் நெக்ஸ்டு பொண்ணு தான். டீல் ஓகே!"

மேலும் அவளை அவன் சீண்டிவிட, "அய்யோ! போங்க பா! தப்பு தப்பா பேசுறீங்க. நான் வைக்குறேன்" என்றவள் வைத்தும் விட்டாள்.

கெளதம் காதில் இருந்து போனை எடுத்தவன் அதையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருக்க,

"என்னண்ணா ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல" என்று வந்தாள் நிவி.

"ம்ம்! எல்லாம் உங்க நட்பின் புண்ணியம்" என்றவன், "ராம் எங்கே?" என்றபோது, பக்கா ஃபார்மல் டிரஸ்ஸில் படிகளில் இறங்கி வந்தான் ராம்.

"எங்கேடா கிளம்பிட்ட?" என்ற கௌதமின் ஆராய்ச்சி கேள்விக்கு,

"என்னடா கேள்வி ஆபீஸ் தான்" என்றவனை புரியாத பார்வை பார்த்தான் கௌதம்.

"கேளு கௌதம்! நான் கேட்டால் அவனுக்கு முன்ன அவன் பொண்டாட்டி சப்போர்ட்க்கு வர்றா" என்று முறைத்துக் கொண்டு வந்தார் சகுந்தலா.

"ம்மா! கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆச்சு. கம்பெனி பக்கமே போகாமல் இருந்தால் அப்புறம் ஸ்வாகா தான்!" என்றவன் சாப்பிட அமர, நிவி அவனுக்கு பறிமாறினாள்.

"அதுக்கு தான்டா நான் என்னோட கல்யாணத்துக்கு மூணு மாசம் கேப் கேட்டேன். இப்ப என்ன? நான் பாத்துக்க மாட்டேனா? நிவியை எங்கேயாச்சும் கூட்டிட்டு போடா. ஆனால் உனக்கு டூ மந்த்ஸ் தான் டைம்.அப்புறம் ஐயா வெரி பிஸி. என்னோடதை கூட நீ பாத்துக்குற நிலைமை வரலாம்"

சட்டை காலரை தூக்கிவிட்டு கௌதம் சொல்ல, "ஆமாம் டா கூட்டிட்டு தான் போக போறேன்" என்றான் ராம்.

"அது! அந்த பயம் இருக்கட்டும்! எங்கே போறீங்க சொல்லு! டிக்கெட் நான் புக் பண்றேன். ஃபாரின் ஓகே வா? ஏன்னா இப்ப விட்டால் ஃப்யூச்சர்ல லீவ் அதிகம் வராது. டூ டேஸ் ஆர் த்ரீ டேஸ் தான் போய்ட்டு வர மாதிரி இருக்கும். சோ பக்கத்துல போறதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்"

கௌதம் பேசிக்கொண்டே சென்றவன் ராம் நிவி இருவரின் மௌனமான சிரிப்பில் ஏதோ தோன்ற, அமைதியாய் இருவரையும் பார்த்தான்.

"என்னை எதுவும் சொல்லாதே டா. உன் சிஸ்டர் தான் என்கூட ஆபீஸ்க்கு கிளம்பி நிக்குறா" என ராம் சொல்ல, கொலைவெறியோடு இருவரையும் பார்த்தான் கௌதம்.

"நிவி இதுக்கு அவனை சாமியாராவே போக விட்டிருக்கலாம். ஏன் இப்படி?" கௌதம் நொந்து போய் கேட்க, தலையில் அடித்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டார் சகுந்தலா.

"அண்ணா! நீங்கள் சொன்ன மாதிரி கண்டிப்பா ஃபாரின் போகலாம். ஆனால் இப்ப இல்ல! இன்னும் ரெண்டு மாசத்துக்கு அப்புறம்"

"ஏன் ரெண்டு மாசத்துக்கு ஆடி மாசம் வருதா?" கடுப்புடன் கௌதம் கேட்டபின்பு தான் ஒன்றும் ஒன்றும் மூன்று என ஏதோ ஞாபகம் வர,

"அடப்பாவிங்களா! ஹனிமூன் கூட என்னை தனியா விட மாட்டிங்களா?" என பதறி அவன் கேட்க, வாய்விட்டு சிரித்தனர் இருவரும்.

"நோ சான்ஸ் மேன்! நீ இல்லாமல் நானா? நான் இல்லாமல் நீயா?" முகத்தில் உணர்ச்சிவசத்தை கொட்டி ராம் கேட்க சிரிப்பை பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டிருந்தாள் நிவி.

"தோ பாரு! அதெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி. இப்ப நீ வேற தான். நான் வேற தான். டேய் மனுஷன் பீலிங்ஸ்ஸ புரிஞ்சிக்கோங்க டா" அழும் குரலில் கௌதம் சொல்ல,

"நீ என்ன வேணா சொல்லிக்கோ! உன் கல்யாணத்துக்கு அப்புறம் தான் நாங்களும் ஹனிமூன் போறோம். அதுவும் நாலு பேரும் ஒன்னா தான் போறோம்" ராம் கண்டிப்பாய் சொல்லிவிட்டு

எங்க வேணா போயிக்க நீ
என்னைவிட்டு போயிடாம இருந்தாலே
அது போதுமே!

என்று பாடவும் செய்ய தன் தலையிலேயே அடித்துக் கொண்டான் கௌதம்.

"கருமம்! கருமம்! ஆமாம் ஏன் டா நந்தினி சக்தியை விட்டுட்ட? அவங்களையும் சேர்த்துக்க வேண்டியது தானே?" கடுப்புடன் மட்டுமே கௌதம் கேட்க,

"வாவ்! செம்ம ஐடியா கௌதம். நிவி நாம நந்தினியையும் கூட்டிட்டு போய்டலாம் ஓகே. பிளான் எல்லாம் ஆபீஸ் போய்ட்டு வந்து நைட் பண்ணலாம்"

அதையும் தனக்கு சாதகமாய் வைத்துக் கொண்டு பிளான் செய்பவனை கொலைவெறியோடு பார்த்து நின்ற கௌதம் "எது.. நைட்டும் பிளான் தான் போடுவீங்களா? ஏன்டா அப்ப உங்களுக்குள்ள... "

நிவியை வைத்துக் கொண்டு எப்படி கேட்பது என தெரியாமல் கௌதம் தடுமாற, புரிந்துகொண்ட நிவியோ நகர்ந்து சமையலறை சென்றுவிட்டாள்.

"டேய்! உண்மையை சொல்லு! நீங்கள் சந்தோசமா தான் இருக்கீங்களா?" சந்தேகப்பார்வையுடன் கௌதம் கேட்க,

"இப்ப தான் டா ஒரு வாரமா நிம்மதியா, ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்றான் ராம்.

"அது மொகரகட்டைய பார்த்தாலே தெரியுது. ஆனால் நான் கேட்டது உங்களுக்குள்ள சந்தோசமா இருக்கீங்களான்றது!"

அவன் எதை கேட்கிறான் என தெரிந்தே தான் ராம் சொல்லாமல் விளையாடினான். இப்போது எதுவும் சொல்லாமல் அமைதியாய் நிற்க, அதிலேயே கௌதமிற்கு அனைத்தும் புரிந்ததோ!.

"டேய்! ஏன்டா?" குழப்பமும் கோபமுமாய் அவன் கேட்க,

"அதான் சொன்னேனே! போலாம்! உனக்கு கல்யாணம் ஆகட்டும். வாசு இந்த வீட்டுக்கு வரட்டும். அப்புறம் ஹனிமூன் போலாம்! அப்புறம் எல்லாம் தானாவே நடக்கும்" என ராம் சொல்ல,

அவன் சொல்ல வருவது புரியாமல் போகுமா என்ன கௌதமிற்கு.

"லூசா டா நீ? என் கல்யாணத்துக்கும்...." என்ற கௌதமை பாதியில் நிறுத்திய ராம்,

"ரொம்ப டென்ஷன் ஆகாதே! ஆல்ரெடி பிளான் பண்ணி எல்லாம் டெக்லர் பண்ணியாச்சு. இன்னும் டூ மந்த்ஸ்ல எதுவும் மாறிட போறது இல்ல. உன்னோட டயலாக் தான். நல்லா கேட்டுக்கோ! டூ மந்த்ஸ்க்கு நாங்களும் லவ்வராவே என்ஜோய் பண்ணிக்குறோம்"

சொல்லியவன் நிற்காமல் கார் சாவியுடன் கிளம்ப, கௌதம் 'என்ன தவம் செய்தனே!' என உறவின் பெருமையில் மனம் அறியா நெகிழ்ச்சியுடன் நின்றான்.

தொடரும்...
 
Top