• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 6

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 6

"நிவி! உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியது இல்ல. ஆனால் நீ மாப்பிள்ளை யாரு என்னனு தெரியாம இப்படி இருக்குறது சரினு தோணல. அப்புறம் உன் இஷ்டம்" என்றவன் எழுந்து கொள்ள

"ஒரு நிமிஷம்!" என்றாள் அவள். என்ன என அவன் பார்க்க,

"உங்களுக்கு மாப்பிள்ளை தெரிஞ்சவங்களா?" என்ற கேள்விக்கு அவன் புன்னகையுடன் நிற்க,

"நான்தான்னு சொல்லித் தொலையேன் டா" என்று வாசு அருகில் அமர்ந்து படபடத்தான் கௌதம்.

"நீ போட்டோ பார்த்து தெரிஞ்சிக்கோ" என்றுவிட்டு கூலர்ஸை கண்களில் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட, "டேய் விட்டுட்டு போகாதடா எரும" என்று அவன் பின்னே ஓடினான் கௌதம்.

"ஏய் ஏண்டி உன் கல்யாணத்தை என்கிட்ட மறச்ச?" அவர்கள் இருவரும் சென்றதும் வாசு கேட்க, "வாசு! நான் அதை பெருசா எடுத்துக்கல டி. ஆனால் ராம் சொல்ற மாதிரி இருந்தா அதான் பயமா இருக்கு" என்றாள்.

"ப்ச்! லூசு லூசு! எல்லா விஷயத்துலயும் இப்படி இருகாத. ராம் அண்ணா சொன்ன மாதிரி ஃபர்ஸ்ட் போட்டோ பாரு. அப்புறமா நாம யாருனு கண்டுபுடிச்சி கேரக்டர் விசாரிக்கலாம்" என சொல்ல, சரி என தலையசைத்தாள் நிவி.

கௌதம் "ஏன்டா இப்படி அவகூட கண்ணாம்பூச்சி விளையாடுற? நீ தான் அதுனு சொல்லிட்டு போக வேண்டியது தானே?"

"சொல்லலாம்னு தான் வந்தேன். ஆனால் எப்படி சொல்லனு தெரில டா. விடு போட்டோ பாத்துட்டு அவளே கூப்பிடட்டும். அதுலயும் இவ்வளவு நாளா அவ உன்கிட்ட பேசுற அளவுக்கு என்கிட்ட பேசினது இல்ல.." அவன் சொல்லிக் கொண்டு இருக்க,

"சின்ன திருத்தம் டா. நீ பேசவிட்டது இல்ல. நீ பேசினால் தானே அவ பேச?"

"டேய் குறுக்க பேசாத! அவளை பார்த்தாலே பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது. அப்புறம் எங்க பேச. அவளும் என்னை பத்தி தெரிஞ்சிக்கனும் சோ வெயிட் பண்லாம். அவளே முடிவு எடுக்கட்டும்" என்றுவிட நண்பன் சரியான வழியில் தான் செல்கிறான் என நினைத்து பெருமை கொண்டான் கௌதம்.

"சரி ஓகே! இப்ப இந்த பொண்ணை எப்படி டா கண்டுபுடிக்குறது? நிவி ரொம்ப ரிஸ்க் எடுக்குறா அங்க இருந்துட்டு" கௌதம் சொல்ல,

"கௌதம் உனக்கு ஒன்னு தெரியுமா? நிவி அந்த ஆபிஸ் உள்ளே போனதுல இருந்து எனக்கு வேலையே ஓடல. ஒரு சைடுல அவளை பாத்துகிட்டாலும் இன்னொரு பக்கம் வருணை கவனிக்க ஆள் வச்சேன்" என சொல்ல,

"டேய் இதெல்லாம் எப்போ டா பண்ணின? என்கிட்ட சொல்லவே இல்ல? ஆமா உனக்கு தான் இது எல்லாம் புடிக்காதே அப்புறமா எப்படி டா?" ஆச்சர்யத்தில் கேள்விகளை அடுக்கினான் கௌதம்.

"என்ன பண்றது எனக்கு நிவிய புடிச்சிருக்கே" என்று சிரிப்புடன் கூற, ராமின் செயலில் கௌதமும் சிரித்துக் கொண்டான்.

"இந்த பொண்ணு யாரு தெரியுமா? போனா வருஷம் போர்ட் மீட்டிங் வந்தாரே தி கிரேட் சுரேஷ் மூர்த்தி அவரோட ஒரே பொண்ணு. அவரு மூலமா இவன் கம்பெனில நடக்குற எந்த தில்லுமுள்ளும் வெளில தெரியாம இருக்க பிளாக்மெயில் பண்றதா நினைச்சி அந்த பொண்ணை..." என கோபமாய் நிறுத்த அவன் சொல்ல வந்ததை புரிந்து கொண்டான் கௌதம்.

"என்னடா சொல்ற? வருண் இவ்வளவு கேவலமா இருக்கானா?"

"ஹ்ம்ம் நாம நினைக்குற மாதிரி கொஞ்சம் இல்ல நிறைய பொண்ணுங்க வாழ்க்கையோட விளையாடி இருக்கான். சில பேர் சொல்லாம தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.. சில பேர் சொசைட்டிக்கு பயந்து வெளில சொல்லாம இப்ப அவங்களோட வாழ்க்கையை பார்த்துட்டு போய்ட்டாங்க. அந்த சுரேஷ் மூர்த்திக்கு இதுல ஏதோ ஒரு விஷயம் தெரிஞ்சி வருண் கம்பெனிக்கு பிளாக் மார்க் தற போறதா சொல்லிருக்காரு. சோ அதுல இருந்து வெளிவர தான் அவரோட பொண்ணு மிஸ் ரெஜினாவை அவன் யூஸ் பண்ணியிருக்கான்"

"ஓஹ் மை காட். எனக்கு இப்ப தான் வாசு நிவி அங்க இருக்குறது பயமா இருக்கு டா" என்று சொல்லும் கௌதமை கூர்ந்து பார்த்தான் ராம்.

"என்னடா அப்படி பாக்குற?"

"வாசுவை உனக்கு புடிச்சிருக்கா கௌதம்?"

"டேய்! யப்பா சாமி! நீ சரியான அழுத்தம்.. வெளில எதையும் காமிச்சுக்க மாட்டன்னு எனக்கு தெரியும். அதுக்காக என் மனசுல இருக்குறத எல்லாம் இப்படி புட்டு புட்டு வைக்காத டா. வீக் பாடி தாங்காது"

"ப்ச்! உன் ஜோக் இருக்கட்டும். அன்ஸ்ஸர் மை க்வஸ்டின்"

"ஹ்ம்ம் ஜோக்ஸ் அபார்ட்.. எனக்கும் நிஜமா இதுக்கு பதில் தெரில.. பட் அவளை டீஸ் பண்றது அவளை கோபப்படுத்தி பாக்குறது ரொம்ப புடிச்சிருக்கு"

"ஹ்ம்ம்! நீ சொல்றது புரியுது. பட் உனக்கு வாசு பத்தி நிவி சொன்னது ஞாபகம் இருக்குல்ல? ஒருவேளை பாவப்பட்டு..."

"டேய் பாவப்பட அவ என்ன டா பண்ணினா? எனக்கு அவளோட அட்டிட்யூட் புடிக்கும். அதை இன்னும் அடுத்த ஸ்டெப்க்கு நான் கொண்டு போகல.. அதுக்கு டைம் வரட்டும்" என்று முடித்து விட, இப்போது கௌதமை நினைத்து பெருமைப்படுவது ராம் முறை.

"ம்மா! ம்மா!" டேபிளில் இருந்த பொருட்களை எல்லாம் கலைத்து போட்டு அன்னையை அழைத்தாள் நிவி.

"ஏண்டி வந்ததும் இந்த பாடு பண்ற? என்னை வேணும் உனக்கு?"

"ப்ச்! அம்மா இதுல ஒரு போட்டோ வச்சதா சொன்னியே அதை எங்க?"

"ஏன் கேட்குற? அதான் பார்க்க மாட்டேன்னு சொல்லிட்டியே?"

"அய்யோ கடுப்பேத்தாதம்மா! சொல்லு போட்டோ எங்க?"

"உன் அண்ணா தான் மாப்பிள்ளை பத்தி விசாரிக்க எடுத்துட்டு போனான்" என சொல்லவும் அவன் வரட்டும் என காத்திருந்தாள் நிவி.

"அம்மா! ஒரு காபி" என்று கௌதம் குரல் கொடுக்க, இரண்டு காபியோடு வந்தார் சகுந்தலா.

"வாவ் வாட் அ டைமிங். தேங்க் யூ மா" என கௌதம் எடுத்து கொள்ள, ராம் பிரெஷ் ஆகி வந்து எடுத்துக் கொண்டான்.

"நந்தினி எங்க மா?"

"நாளைக்கு குலதெய்வ கோவிலுக்கு போய்ட்டு வரலாம்னு சொன்னேன். அதான் ஊருக்கு போணுமான்னு ஷாப்பிங் பண்ண போய்ட்டா"

"என்ன மா திடிர்னு கோவிலுக்கு?" ராம்.

"கல்யாணம் முடிவானா வர்றதா வேண்டி இருந்தேன் டா"

"சரி நானும் வரவா? தனியா எப்படி போவீங்க?"

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். கார்ல தானே? நாங்க போய்ட்டு வந்திடுவோம்" என சொல்ல, நிவி கொடுத்த வேலை இருந்ததால் கௌதம் ராம் இருவருமே அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

"சக்தி! நாளைக்கு சகுந்தலா நந்துவ கூட்டிட்டு குல தெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட வர்றாலாம். நீ ஒரு எட்டு அவங்க வீட்ட போய் பாத்துட்டு சுத்தம் பண்ணனும்னா அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வா டா" செல்லம்மா சொல்ல,

"நந்தினி வருவதற்கு சந்தோசப்படவும் முடியாமல் சோகத்தை மறைக்கவும் தெரியாமல் சரி என தலையாட்டி வீட்டு சாவியை வாங்கிக் கொண்டு சகுந்தலா வீட்டிற்கு சென்று ஏற்பாடுகள் செய்துவிட்டு வந்தான்.

எப்போதாவது வந்து சென்றாலும் வீட்டை எப்போதும் நேர்த்தியாக தான் சகுந்தலா வைத்திருப்பார். கூட்டி பெருக்க மட்டும் ஆளை வைத்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன் அம்மாவின் பார்வையை தாங்காமல் சாப்பிட்டு அறைக்கு சென்றுவிட்டான்.

நாளை என்ன நடந்தாலும் நந்தினியை பார்க்க கூடாது என்ற முடிவோடு கண்களை மூடிக் கொண்டான்.

"அண்ணா நிஜமா இதுவா மாப்பிள்ளை?" போட்டோவில் சிரித்துக் கொண்டிருக்கும் ராமை விட்டு கண்களை எடுக்க முடியாமல் ராஜ்குமாரிடம் கேட்டாள் நிவி.

"ஆமாம் டா. விசாரிச்சது வரை நல்லா தான் சொல்றங்க. ரொம்ப ரிசெர்வ்டு டைப்பாம். தான் உண்டு தன் வேலை உண்டுனு இருப்பாங்க போல. பட் ஒரு கம்பெனி நடத்துற அளவுக்கு திறமை உள்ள மனுஷன் தான். ஆனால் இந்த ரிசெர்வ்டு டைப் தான் உனக்கு செட் ஆகுமானு யோசிக்கிறேன்" தான் விசாரித்த அனைத்தையும் சொல்ல,

"ஏன்டா உனக்கு அந்த பையனோட தங்கச்சி போட்டோ தந்தேனே அதை பார்த்தியா?" என அன்னை கேட்க, தங்கை முன் எதுவும் சொல்லாமல் அன்னையிடம் தனியாக முடியாது என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.

அப்போதே நிவியிடம் சொல்லியிருந்தால் நிவி கல்யாணத்தில் எந்த பிரச்சனையும் இருந்திருக்காதோ என்னவோ!

"ஏண்டி அந்த போட்டோவை எவ்வளவு நேரமா பார்ப்ப? நீயாவது உங்க அண்ணன் மாதிரி இல்லாமல் நான் சொல்றத கேளு" நிவியின் மனநிலையில் அன்னை சொன்ன எதுவும் காதில் விழவில்லை.

போட்டோவை தனது ஹண்ட்பேக்கில் பத்திரப்படுத்திக் கொண்டவள் மனம் ராமை சுத்தி வந்தது. அவள் எப்படி உணர்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

கௌதமும் சுய ஆராய்ச்சியில் இறங்கினான். எனக்கு வாசுவை பிடிக்கும் அதற்கு காதல் என்று பெயரா? என பலவாறு யோசிக்க, காதலிக்கிறேன் என்று அவளிடம் போய் சொன்னால் அவளும் ராம் போல பாவப்பட்டதாக தானே நினைப்பாள் என்ற தனது எண்ணத்திலேயே தெரிந்து கொண்டான் தான் அவளை காதலிப்பதை.

"அண்ணா! ஒரு பொறுக்கி நாய் வாசு பின்னால சுத்தினான். அவனுக்கு அவ பதில் சொல்லலைனதும் ஒருநாள் ரோட்ல ஆசிட்ட முகத்துல வீசிட்டான்..ரெண்டு வருஷமா வீட்டவிட்டு வெளில வரவே இல்லை. நான் ரொம்ப கஷ்டப்பட்டு தான் அவளை அதுல இருந்து வெளிவந்து இந்த வேலைலயும் சேர்த்து விட்ருக்கேன். நீங்க எதாவது விளையாட்டா பேசி கஷ்டப்படுத்திறாதீங்க அண்ணா" அன்று ஒருநாள் ராமுடன் கௌதம் இருக்கும் சமயம் வாசு இல்லாத நேரம் வாசுவை விளையாட்டாய் கலாய்த்த போது தான் நிவி இந்த உண்மையை கூறினாள்.

இதை கேட்ட இரண்டு நாட்கள் அவன் வாசுவை பாவமாக பார்த்தது உண்மை தான். ஆனால் நிவி அது வாசுவிற்கு பிடிக்காது என சொல்லிவிட இந்த விஷயம் தெரிந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் எப்பொழுதும் போல அவளை வம்பிழுத்துக் கொண்டிருக்கிறான்.

அவளாக சொல்லும்வரை அதை கேட்கும் எண்ணம் இல்லை. ஆனால் ராம் கேட்டபின் தன் காதலை உணர்ந்த கௌதம் அதை எவ்வாறு வெளிப்படுத்த என யோசித்துக் கொண்டிருக்கிறான். ஆனாலும் அந்த நிமிடமே முடிவு செய்துவிட்டான் வாசு தான் அவனது பாதி என.

வாசுவை நினைத்து கௌதமும், ராமை நினைத்து நிவியும் தூக்கத்தோடு போராட, அதே போல நந்தினியை நினைத்துப் போராடிக் கொண்டிருந்தான் சக்தி.

தொடரும்..
 

Lakshmi murugan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Mar 14, 2022
Messages
606
சக்தியின் காதல் நிறைவேற சாத்தியம் உள்ளது போல.
 
Top