• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 8

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 8

வருண் கார் அந்த பங்களா முன் வரும்போதே அங்கே போலீஸ் வண்டி நிற்பதை பார்த்து விட்டான். எதுவுமே புரியாத நிலை வருணுக்கு.

அவன் ஆட்களுக்கு போன் செய்ய அவர்களும் ரெஜினாவை அந்த பங்களாவில் விட்டுவிட்டு வெளியேறி விட்டதாக கூறினர். உள்ள போன் கனெக்சன் கூட கிடையாதே யாருக்கு தகவல் கொடுத்து இருப்பாள் இந்த ரெஜினா? எப்படி போலீஸ் வந்தது எதுவுமே புரியவில்லை அவனுக்கு. உள்ளே ஆட்களும் இல்லை. இப்போது போகவா வேண்டாமா என்ற எண்ணம். தன்னைப் பற்றி யாருமே தெரியக்கூடாத பொருட்கள் டாக்குமெண்ட்ஸ் உட்பட அனைத்துமே அங்குதான் இருக்கிறது.

"ஆஹ்... ரெஜினா வாட் யூ டூயிங்" காருக்குள் இருந்து அவன் கத்த, போலீஸ் மூட்டை மூட்டையாய் அவன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்றனர். மாட்டிவிட்டது அவனுக்கு தெரிந்து விட்டது. ரெஜினா இன்னும் வெளிவரவில்லை. இப்போது உள்ளே செல்லக்கூடிய நேரமும் இல்லை. வீட்டிற்கு சென்றால் கண்டிப்பாக போலீஸ் அங்கே தான் வரும் என்பதால் வண்டியை எடுத்துக்கொண்டு நண்பன் வீட்டிற்கு சென்றான்.

வழியில் சுரேஷ் மூர்த்திக்கு கால் செய்தான். "சுரேஷ் என்னை பத்தி தெரியாம விளையாடுறீங்க? எப்படி உன் பொண்ணு இதெல்லாம் பண்ணினா. அவளை நான் சும்மா விடமாட்டேன். கோடி ரூபா சரக்கு மொத்தமா போச்சு. உன்னையும் உன் பொண்ணையும் சும்மா விடமாட்டேன்" அவன் கத்திக் கொண்டே இருக்க,

"என்னடா சொல்ற? என் பொண்ண என்ன பண்ணின? அவளை எங்கே?" என்று பதிலுக்கு கத்தினார் சுரேஷ் மூர்த்தி.

"நடிக்காத சுரேஷ் மூர்த்தி. உனக்கும் உன் பொண்ணுக்கும் இது தான் கடைசி நாள். நான் ஜெயிலுக்குப் போனால் கூட உங்க ரெண்டு பேரையும் சும்மா விடமாட்டேன்" வருண் போனை கட் செய்துவிட்டு காரில் பறந்தான்.

"டேய்! டேய்! அவ சின்ன பெண்ணுடா. அவளுக்கு எதுவுமே தெரியாது. தயவு செஞ்சு அவள விட்டுடு" என சுரேஷ் மூர்த்தி கத்தியது காற்றில் தான் போனது.

"வாசு! ராம் ஏன் இன்னும் வரல" என்ற நிவியின் கேள்விக்கு வாசு முறைத்து பார்த்தாள் அவளை.

"அறபோத நாயே! நம்மளை இங்க வரச் சொன்னது உன் அண்ணா கௌதம். ராம் இங்கு வருவார்னு உனக்கு யாரு சொன்னா? முதல்ல உன் மனச இங்கே வை. எப்ப பாரு ராம் ராம்னு சொல்லிக்கிட்டே இருக்குற. ஒழுங்கா ராமை காதலிக்கிறேன்னு அவருகிட்ட சொல்லிடு. இல்ல ராம் அண்ணா வரட்டும் நானே சொல்றேன்" வாசு பொரிந்து தள்ள,

"இல்ல டி கேச பத்தின டீடெயில்ஸ் கேட்கிறதுக்காகத்தான் நானும் கேட்டேன்" என்று வழிந்தால் நிவி. நம்பிவிட்டேன் என்ற பார்வை பார்த்தாள் வாசு.

ரெஸ்டாரன்டிற்கு வெளியே நின்று கௌதம் நிவிக்கு அழைக்க, அதை வாசு எடுக்கவும், "நிவி, வெளில கார்ல நானும் ராமும் இருக்கோம். நீ வாசுவை கூட்டிட்டு சீக்கிரம் வா" என்றதும் வாசு பதில் பேசுவதற்கு முன் கட் செய்தான்.

வாசுவும் ஏதோ அவசரம் என புரிந்து கொண்டு நிவியை இழுத்துக்கொண்டு காருக்கு ஓடினாள்.

இருவரையும் அவசரமாக ஏற்றிக்கொண்டு கௌதம் காரை எடுக்க, உள்ளே ஒரு பெண்ணை பார்த்ததும் அதிர்ந்தாள் நிவி. மற்ற அனைத்தும் மறந்து போக யார் இந்த பெண் என்ற கேள்வியிலேயே நிவி, கௌதம் ராம் இருவரையும் மாற்றி மாற்றிப் பார்த்தாள்.

ஹைவே ரோட்டில் பிரிட்ஜ் நடுவே காரை நிறுத்திய கௌதம், கீழே இறங்காமலேயே திரும்பி அமர, ராமும் முன் சீட்டில் இருந்து திரும்பி பார்த்தான்.

வாசுவும் நிவியும் அந்தப் பெண்ணையும் இரு ஆண்களையும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

"அடப்பாவிங்களா! ஏன் இந்த முழி முழிக்குறீங்க? எங்கள பார்த்தா அவ்வளவு கேவலமானவனவா தெரியுது?" என கௌதம் கேட்க 'ஆமாம்' எனும் பார்வையுடன் அவனையே முறைத்துக் கொண்டிருந்தாள் வாசு.

"இதெல்லாம் ஓவர் வாசு. ஐம் அ ஜென்டில்மேன்" கௌதம் கோபமாக சொல்ல,

"உங்க மேல நம்பிக்கை இருக்கு அண்ணா! ஆனால்... " என்று நிவி கிண்டலாய் இழுக்க, இப்போது ராம் நிவியை முறைத்தான்.

இரு பெண்களை நினைத்தும் ஆண்கள் மானசீகமாய் தலையில் அடித்துக் கொள்ள, "சரி யார் இந்த பெண்?" என முதலில் கேட்டது வாசு.

கௌதம் ராமை பார்க்க, நீயே சொல் என்பது போல சீட்டில் சாய்ந்து கொண்டான் ராம். கௌதமும் அங்கு நடந்ததை சொல்ல, அனைத்தையும் செய்தது கௌதம் என்றே நினைத்து கொண்டனர் இரு பெண்களும்.

"வாவ்! அண்ணா எவ்வளவு பெரிய வேலை செய்துட்டு இவ்வளவு சாதாரணமா இருக்கீங்க?" நிவி பெருமையுடன் கேட்க, மீண்டும் அவளை முறைத்தான் ராம்.

"நிவி, நிஜமா இதெல்லாம் பண்ணினது ராம் தான். நான் வெளில தான் கார்ல இருந்தேன். இவ்வளவு நாள் உனக்கு வருண் ஆஃபீஸ் பத்தின டீடெயில்ஸ் எல்லாம் நான் கலெக்ட் பண்ணினேன் தான். ஆனால் வருணோட ஒவ்வொரு மூவிங்கையும் ராம் இவ்வளவு நாள் வாட்ச் பண்ணி இன்னைக்கு ஸ்கெட்ச் போட்டு போலீஸ் வர சொல்லியாச்சு. ஆனால் இந்த பொண்ணு தான் எழுந்து என்ன ஆர்ப்பாட்டம் பண்ண போகுதோ" கௌதம் சொல்ல,

"எனக்கு தெரியும் ராம் அண்ணா. நீங்க தான் இதெல்லாம் செஞ்சிருப்பீங்கனு நினச்சேன். ஐம் வெரி ஹாப்பி ஃபார் யூ அண்ணா. சிலரெல்லாம் வாய் மட்டும் தான்" வாசு சொல்ல, நிவி தன் முட்டை கண்ணை திறந்து வைத்தகண் வாங்காமல் ராமை பார்த்தாள்.

'தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பானாம்' ராஜ்குமார் சொன்னது ஞாபகம் வந்தது நிவிக்கு. அப்போது ஏன் இதெல்லாம் செய்ய வேண்டும்? எனக்காகவா! என்ற கேள்வியுடன் அவனை பார்க்க,

ராம், வாசுவின் பாராட்டை ஏற்றுக் கொண்டு சிரித்தவன் நிவியை இப்போதுதான் 'நான் நேற்று கேட்ட கேள்விக்கு பதில்?' என்ற பார்வை பார்த்தான்.

வாசு அதை கவனிக்காமல் "ராம் அண்ணா, அப்ப அந்த வருணை போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணியிருப்பாங்களா?" என கேட்க,

"உனக்கு யாரு இப்படி வ்ராங் டைமிங்ல பேச சொல்லி கொடுத்தது?" கௌதம் கேட்க, நிவி ராம் இருவரும் சிரித்தனர். ஆனால் அய்யோ பாவம் வாசுவிற்கு தான் கௌதம் ஏன் அப்படி கூறினான் என புரியவில்லை.

"ராம்! ஃபர்ஸ்ட் இந்த ப்ராஜெக்ட்டை முடிச்சிவிடு. அப்பதான் நிவிகிட்ட நீ பேச அந்த ரங்கம்மா விடுவா" என காதுக்குள் கௌதம் சொல்ல, ராமும் சிரித்தவன் ஒரு ஃபைலை எடுத்து நிவி வாசு பக்கம் நீட்டினான்.

"வருண் ட்ரக்ஸ்காக அரெஸ்ட் ஆனா கூட ஈஸியா வெளில வந்துடுவான். இதுல அவனோட கணக்குல வராத ஐ மீன் இல்லீகல் ப்ரொபேர்ட்டிஸ் பத்தின டீடெயில்ஸ் அண்ட் டாக்குமெண்ட்ஸ் இருக்கு. அப்புறம் அவன் தான் அந்த போதை மருந்த இந்த தமிழ்நாட்டுல எல்லாருக்கும் கொண்டு போகுற மெயின் டீலர் மாதிரி தெரியுது. அதுக்கான டீடெயில்ஸ் கூட இதுல இருக்கு. நான் இப்ப கார்ல தான் அதை பார்த்தேன். கண்டிப்பா இது உங்க ரெண்டு பேருக்கும் யூஸ்ஃபுல்லா தான் இருக்கும். இனி நீங்க அந்த கம்பெனிக்கு போக வேண்டாம். அண்ட் 1 வீக்காச்சும் தனியா வெளில எங்கேயும் போக வேண்டாம். அவன் பார்க்கதான் சாதாரண ஆளா இருக்கான். பட் பக்கா கிரிமினல். சோ பீ கேர்ஃபுல் கர்ள்ஸ்" ராம் பேசி முடிக்க, கௌதம் அவன் என்னவோ மேடையில் பேசியது போல கைதட்டி கத்தினான்.

"டேய் அடங்கு! நான் சீரியஸ சொல்றேன். நாம ரெண்டு பேரும் இதுல இருக்கோம்னு வெளில தெரியாது. அதனால் தான் சொல்றேன்" ராம் தீவிரமாக சொல்ல,

யோசித்த கௌதம் "கரெக்ட் ராம்! அப்ப இவங்க கண்டிப்பா இன்னும் ஒரு 2, 3 டேஸ் அங்க ஒர்க் பண்ண போகனும். அப்ப தான் இவங்களுக்கும் எந்த பிரச்சனையும் வராது" என்கவும் ராமும் அதுதான் சரி என்றான்.

இவர்கள் பேச்சை கேட்டவாறே நிவி வாசு இருவரும் அந்த ஃபைலை புரட்டி அதில் இருந்த விஷயத்தில் வாயடைத்து போய்தான் இருந்தனர்.

"யூ ரியல்லி கிரேட் ராம்" முதல் முறை நிவி பாராட்ட, அதையும் சிறுதலையசைப்பில் வாங்கிக் கொண்டான் ராம்.

"சரி ஓகே கைஸ், கொஞ்ச நேரம் இந்த ப்ராஜெக்ட்டை ஒதுக்கி வச்சிடலாம். இந்த பொண்ணு எப்ப எழும்பும்னு தெரில. அதுக்குள்ள நம்ம பர்சனல பேசி முடிச்சிடலாம்" கௌதம் சொல்ல, "நமக்கு என்ன பர்சனல்?" என கேட்டாள் வாசு.

இந்த முறை அவள் தலையிலேயே தட்டினான் கௌதம். "படிச்சிருக்க அளவுக்கு கொஞ்சம் கூட மூளை கிடையாது போல" என்றவன் கண்களால் ராம் நிவியை காட்ட, அப்போதுதான் நிவி காலையில் இருந்து ராமுடன் பேச துடித்தது ஞாபகம் வந்தது.

"சாரி சாரி கைஸ்! யூ கேர்ரி ஆன்" என்றவள் காரில் இருந்து இறங்கி பின்னால் கார் டிக்கியில் போய் அமர, கௌதமும் இறங்க முயன்றதும் "அண்ணா! நீங்க எங்களுக்காக போற மாதிரி தெரிலயே" நிவி கிண்டல் செய்ய,

"நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பொசிவது போல" என்றான் ராம் சிரிப்புடன்.

"நீங்க தான்டா புல்லு, நான் போய் நெல்ல பார்த்துட்டு வர்றேன்" என கௌதம் செல்ல, நிவி ஆச்சர்யமாய் ராமை பார்த்தாள்.

அவள் பார்வை புரிந்து ராம், கௌதம் வாசு பற்றி சொல்ல, வாசு வாழ்க்கை பற்றி சந்தோசமும், கௌதமின் மேல் நல்ல அபிப்ராயமும் கூடியது நிவிக்கு.

ராம் "ஹ்ம்ம் அப்புறம்! இப்பவாச்சும் போட்டோ பார்த்தியா? உன்னை பார்த்தால் போட்டோ பார்த்த மாதிரி தெரிலேயே?" கிண்டலுடன் ரம் கேட்க,

"எதுக்கு இவ்வளவு பில்டப்? நேத்தே இதை சொல்லியிருக்கலாம்" நிவி சொல்ல, ‘இப்ப என்ன சொல்ல வர்றா இவ’ என குழம்பினான் ராம்.

"நிவி! நான் டைரக்ட்டாவே கேட்குறேன், உனக்கு என்னை பிடிக்குமா? இல்லையா? உன் பதிலை மட்டும் சொல்லு"

"நிஜமாவே போட்டோ பாக்குற வரை அது நீங்களா இருக்கும்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்ல. பட் பார்த்த அப்புறம்...." என இழுக்க, "ஹ்ம்ம் பார்த்த அப்புறம்?" அவள் முகத்தில் தெரிந்த ஜொலிப்பிலேயே அவள் முடிவு தெரிந்தாலும், அவள் சொல்லி கேட்டுவிட வேண்டும் என ஊக்குவித்தான் ராம்.

அதே நேரம் காருக்கு பின்னால் "ஐம் இன் லவ் வித் யூ வாசு" என்றான் கௌதம்.

தொடரும்..
 
Top