• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் தீண்டிடுமோ நேசம் 9

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 9

"நிவி எதுவா இருந்தாலும் ஒப்பனா நீ என்கிட்ட சொல்லலாம். இது நம்ம ரெண்டு பேரோட லைஃப் சம்பந்தப்பட்ட விஷயம்" ராம் சொல்ல அவனை கேள்வியாய் பார்த்த நிவி,

"நான் சொல்றது இருக்கட்டும். உங்களுக்கு எப்ப தெரியும் நான் தான் பொண்ணுன்னு?" எனக் கேட்டாள்.

"அதுவா ஒரு டூ வீக்ஸ் முன்ன நாம மீட் பண்ணுனோமே ஒரு ட்ராபிக்ல! அதான் நம்மளோட ஃபர்ஸ்ட் மீட். ஞாபகம் இருக்குல்ல?" என ராம் கேட்க,

"ஓஹ் அப்பவே என்னை தெரியுமா? அதனாலதான் கௌதம் அண்ணா எனக்கு ஹெல்ப் பண்ணாரா?"

"ப்ச்! நான் என்ன சொல்றேன், நீ என்ன சொல்ற? நம்ம ஃபர்ஸ்ட் மீட்லயே உன்ன தெரியும் தான். ஆனா அந்த ஸ்பாட்ல எனக்குத் தெரியாது. நீதான் துப்பட்டா வச்சு ஃபேஸ் கவர் பண்ணி இருந்தியே! கார்ல போகும் போது தான் உன்னோட கார்டு பார்த்துட்டு கௌதம் என்கிட்ட சொன்னான். அப்போதான் உன்ன பார்த்தேன். ம்ம்ம்ம் அல்ரெடி போட்டோ பார்த்தேன். அப்பவே உன்னை எனக்கு பிடிச்சிருச்சு. அண்ட் நேர்ல பார்த்ததும் ஐ அம் ஃப்ளட்" உண்மையை பச்சையாய் ஒத்துக்கொண்டான் ராம்.

"வாவ் நைஸ் பிளாஷ்பேக்!"

"ப்ச் கிண்டல் எல்லாம் போதும் நிவி! உனக்கு என்ன பிடிக்குமா பிடிக்காதா அதை மட்டும் சொல்லு"

"ம்ம்ம்ம்" என யோசித்தவள், "டு பி பிரான்க், இவ்வளவு நாளும் உங்களை பத்தி நான் எதுவும் நெனச்சது இல்ல. ஏன் நேத்து நீங்க என்கிட்ட போட்டோ பாத்தியானு கேட்கும் போது கூட உங்களுக்கு தெரிந்த யாரோ தான்னு நினைச்சேனே தவிர நீங்கனு எக்ஸ்பெக்ட் பண்ணல. ஆனா போட்டோ பார்த்த அப்புறம்..." என இழுத்தவள், "புடிச்சிருக்கு" என்றாள்.

"ஹப்பா இந்த வார்த்தையை சொல்றதுக்குள்ள பதற வச்சுட்டிய்யே"

"ஆமா! நிவின்னா சும்மாவா! கொஞ்சம் த்ரில் வேணுமே! ஆனால் என் அண்ணா உங்களை பத்தி சொன்னதும் இப்ப நீங்க செஞ்ச இந்த ஹெல்ப்பும் டிஃபர் ஆகுதே?"

"பார்றா! உளவுத்துறை வச்சு என்னை பத்தின டீடெயில்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணியாச்சா?" கௌதமை தான் அவள் சொல்கிறாள் என நினைத்துக் கொண்டான் ராம்.

"நான் கேட்குறதுக்கு முன்னாடியே சொல்லிட்டாங்க. ஆனால் ஏன் உங்களுக்கு புடிக்காத ஒரு வேலையை செஞ்சிங்க?" கையில் அவன் கொடுத்த டாக்குமெண்ட்ஸை ஆட்டிக்கொண்டே அவள் கேட்க,

"என்னோட ஃப்யூச்சர் வைஃப்க்கு ப்ரோப்லேம்னா நான் கூட இருந்து தானே ஆகணும்" அலட்டல் இல்லாத பதில் கொஞ்சம் அசைத்து தான் பார்த்தது நிவியை.

"பட் ராம்! நான் இந்த வேலை பார்க்குறது உங்களுக்கு?... " தயக்கமாய் கேட்டாள்.

"முதல்ல நானும் யோசிச்சேன். ஆனால் ஒரு சின்ன ரீசன்காக புடிச்சவங்களை விட முடியாது. ஆனால் புடிக்காத விஷயத்தை புரிஞ்சிக்க ட்ரை பண்ணலாம்னு தோணிச்சு. அதுக்கு சாம்பிள் தான்" என அந்த டாக்குமெண்ட்டையும் மயக்கத்தில் இருந்த பெண்ணையும் காண்பித்தான்.

"இவ்வளவு பேசுற நீங்க ஏன் இவ்வளவு நாளா என்கிட்ட பேசவே இல்ல?"

"நிவி உனக்கு ஒன்னு தெரியுமா? நான் இவ்வளவு யார்கிட்டயும் பேசினது இல்லை. ஈவன் கௌதம்கிட்ட கூட. அண்ட் நீ கூடதான் என்கூட பேசவே இல்ல" பதிலுக்கு அவளை குற்றம் சொல்ல,

"ஐ டோன்ட் க்நொவ்! அப்ப தோணாதது இப்ப தோணுது" என்றாள் சிரித்துக் கொண்டே.

இருவரும் காதலிக்கிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளவில்லை. புடிக்கும் என்ற நிலையில் தெளிவாக இருந்தனர்.

"நிஜமாவே கௌதம் அண்ணா வாசுவை லவ் பண்றாங்களா?" தெளிவாக தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொண்டு கௌதம் வாசுவை பற்றி பேச ஆரம்பித்தாள் நிவி.

"கண்டிப்பா உனக்கு கௌதம் பத்தி சொல்லியே ஆகணும் நிவி. கௌதம் என்னை விட ரொம்ப நல்லவன். எல்லாருக்குமே ஹெல்ப் பண்ணனும்னு நினைக்கிற நல்ல மனசு எனக்கு இதுநாள் வரை கிடையாது. ஆனா கௌதமுக்கு அது எப்பவுமே உண்டு. அன்னைக்கு சிக்னல்ல நீங்க பிரச்சினையில நின்ன அப்போ நான் கூட போலாம்னு தான் சொன்னேன். ஆனா கௌதம் தான் உனக்கு ஹெல்ப் பண்ணினான்" அவன் சொல்ல சொல்ல தெளிவாய் கேட்டுக்கொண்டாள் நிவி.

"அதேமாதிரி வாசுகிட்ட வம்பு பண்றது அவனுக்கு முதலிலிருந்து பிடிக்கும். அதை அவன் ஒரு வட்டத்துக்குள் கொண்டு வராம விட்டுட்டான். அன்னைக்கு நீ வாசுவை பத்தி எங்ககிட்ட சொன்ன இல்ல? அப்புறம்தான் அவன் இந்த முடிவை எடுத்தான். அதுக்காக வாசுவை பாவப்பட்டு பரிதாபப்பட்டு எல்லாம் அவன் லவ் பண்ணல. அவனுக்கு பிடிக்காத எதையும் அவன் செய்ய மாட்டான். அந்த லவ்வ கூட அவன் அன்னைக்கே உணரல. நேத்து நான்தான் அவன்கிட்ட கேட்டேன் அதுக்கு அப்புறம் தான் யோசிச்சு சொல்றதா சொல்லிட்டு மார்னிங் வந்து என்கிட்ட தெளிவா சொன்னான், வாசுவை நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்னு. இதில் பாவபடவோ பரிதாபப்படவோ இல்ல அவனை தியாகியா நினைக்கவோ வேண்டாம். அவனுக்கு பிடிச்சது தான் செய்வான். அவன் வாசுவை ரொம்பவே விரும்புறான்" எனத் தெளிவாய் ராம் கூற நிவி நிம்மதியடைந்தாள்.

பளார் என்ற சப்தத்தில் கௌதமிற்கு என்ன நடந்தது எனப் புரியவே சில நொடிகள் தேவைப்பட்டது.

வெளியில் வந்து இருக்கையில் அமர்ந்திருந்த வாசுவை நோக்கி சென்ற கௌதம், "ஏன் இப்படி சின்ன பிள்ளை மாதிரி பிஹேவ் பண்ற?" எனக் கேட்டான்

"நான் என்ன பண்ணேன்? எனக்கு நிஜமாகவே நிவி சொன்னது ஞாபகம் இல்ல, இருந்திருந்தா அப்பவே வெளியில் வந்து இருப்பேன்" பாவமாய் வாசு சொல்ல, கௌதம் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அதாவது முகத்திலிருந்த துப்பட்டாவை.

"என்ன லுக்கு?" வாசு முறைப்புடன் கேட்க, சிரிப்புடன் நத்திங் என்றான்.

"அப்புறம் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு நினைச்சேன் வாசு" சாதாரணமாக கௌதம் சொல்ல, ஏதோ தனது ப்ராஜெக்ட் பற்றிய விஷயம் என கூர்மையுடன் அவனை பார்த்து "என்ன?" என ஆர்வமாய் கேட்டாள்.

"ஐ தின்க் ஐ அம் இன் லவ் வித் யூ வாசு"

"ப்ச்! என்ன உங்களுக்கு கலாய்க்கிறதுக்கு ஆள் இல்லன்றதுக்காக என்னை கலாய்க்க பார்க்கறீங்களா? இந்த வேலையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதீங்க" கடுப்புடன் வாசு சொல்ல,

"நான் நிஜமா தான் சொல்றேன்" என்றவனை சில நொடிகள் கூர்ந்து கவனித்தாள் வாசு.

அவன் பார்வையில் எதையோ தேடியவள் "எப்போ என்னை பத்தி உங்ககிட்ட நிவி சொன்னா?" என தெளிவாக கேட்டாள்.

"உன்னபத்தி.. உன்னபத்தி... என்ன இருக்கு? சொல்றதுக்கு?.. " திக்கி தயங்கி விழுங்கி கௌதம் விழித்த விதமே அவனுக்கு தன்னை பற்றி அனைத்து உண்மையும் தெரியும் என வாசுவுக்கு சொல்லிவிட,

"சோ! எனக்கு வாழ்க்கை கொடுக்க வந்துட்டீங்களா? உங்ககிட்ட நான் பிச்சை கேட்டேனா?" என வார்த்தைகளால் அவன் காதலை அவள் கொச்சைப்படுத்த,

"ஸ்டாப் இட் வாசு! திஸ் இஸ் தி லிமிட்!" கத்தினான் கௌதம்.

"என்ன சார் என்ன? நீங்க பேசுனது மட்டும் லிமிட்டா? ஒரு வாரம் மட்டுமே தெரிஞ்ச பொண்ணுகிட்ட வந்து காதல சொல்லுவீங்களா? நீங்க என்ன ஹீரோவா?" இருவர் வார்த்தைகளும் தடித்துக் கொண்டிருக்க, சமாதானமாய் இறங்கினான் கௌதம்.

"ஓகே! ஐம் சாரி வாசு! நான் பேசின விதம் ஆர் சிட்டுவேஷன் தப்பா இருக்கலாம். நிவி என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு உன்னை பிடிக்கும். நிவி சொன்னதுக்காக நான் உன்னை விரும்பல ஐம் ஷுர் தட். எப்ப இருந்தாலும் எனக்கு லைஃப் பார்ட்னர்னா அது நீதான்" அவன் பேச ஆரம்பித்த போதே கோபத்தில் இருந்தவள் முடிவில் பளார் என கன்னத்தில் அறைந்திருந்தாள்.

"இது தான் உன்னோட லிமிட். இனிமேல் என்கிட்ட பேசின!" அவள் அடித்ததை அவன் உணரும் முன்னே அவள் கத்திவிட்டு முன்நோக்கி சென்றாள்.

"கௌதம்" "வாசு" ராம் நிவி இருவரும் இருவரையும் அந்த நேரம் அழைக்க, வேகமாக வாசுவும், கன்னத்தில் கைவைத்து கொண்டே கௌதமும் காருக்குள் வந்தனர்.

"என்னடா பலமா ஏதோ கிடைச்சிருக்கும் போல?" ராம் கிண்டல் செய்ய, "வாயில அசிங்கமா வருது. எதனா சொல்லிட போறேன். மூடிட்டு எதுக்கு கூப்பிட்டனு சொல்லு" என்றான் கௌதம்.

நிவியும் கோபத்தில் இருந்த வாசுவின் முகத்தை பார்த்தவள் பேச்சை மாற்றி கைகாட்ட, அங்கே கண்களில் விழிகளை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் ரெஜினா.

"அடுத்த பாம்! ஆண்டவரே நீ தான் இந்த பொண்ணு கத்தாமல் பாத்துக்கணும்" கௌதம் அந்த நிலையிலும் கடவுளுக்கு இன்ஸ்டன்ட் மனுவை வைக்க,

வாசு கவனிக்காதது போல இருக்கவும், நிவி தான் "ராம்.. கௌதம் அண்ணா ரெண்டு பேரும் வெளில நில்லுங்க..இந்த பொண்ணுகிட்ட பேசிட்டு உங்களை கூப்பிடுறேன்" என்றதும் தப்பித்தோம் பிழைத்தோம் என வெளியேறினான் கௌதம்.

மெதுவாக ரெஜினா கண்களை திறக்க, சுற்றி பார்த்தவள், நிவியையும் வாசுவையும் பயத்துடனும் கேள்வியாய் பார்த்தாள்.

"பயப்படாதீங்க! நீங்க சேஃபா தான் இருக்கீங்க" நிவி சொல்ல, எதுவும் சொல்லாமல் அவள் முழிக்க, "வருண்..." என வாசு ஆரம்பித்ததும் காரின் மூலையில் போய் இருந்துகொண்டு கைகளை கூப்பி வேண்டாம் வேண்டாம் என கத்த,

"ஐம் சாரி! ஐம் சாரி! வருண் இங்க இல்ல. நீங்க எப்பவோ சேஃபா அங்க இருந்து வந்திட்டீங்க" மாறி மாறி வாசுவும் நிவியும் சமாதானம் செய்ய ஓரளவு அவள் தெளிந்த பின்னே ஆண்கள் இருவரையயும் காருக்குள் அழைத்தாள் நிவி.

மீண்டும் பயத்துடன் காரின் மூலையில் அவள் சாய போக "கூல், இது ராம் இது கௌதம் அண்ணா! இவங்க தான் உங்களை காப்பாத்தினது" என நிவி சொல்ல,

"இல்ல! இல்ல! இதோ இருகாங்க இல்ல ராம் அண்ணா, இவங்க மட்டும்தான் உங்களை காப்பாத்தினது" என அந்த 'மட்டுமில்' அழுத்தத்தை கொடுக்கவும், கௌதம் தலையில் அடித்துக் கொண்டான்.

"என்ன டா ஊடலா?" மீண்டும் ராம் கிண்டலாய் காதுக்குள் கேட்க, "வேணாம் டா. என் வாயை கிளறாத" என்ற கௌதம், "நிவி நீ பேசு" என சைகை காட்டினான்.

"நான் என் அப்பாகிட்ட பேசணும்" பயத்துடனே ரெஜினா கேட்க, "பேசலாம் ரெஜினா. ஃப்ர்ஸ்ட் எதனா சாப்பிடலாம் வாங்க" என கூற, அதை உணர்ந்து ராம் காரை ஸ்டார்ட் செய்ய, கார் ஒரு ஹோட்டல் முன்பு நின்றது.

இருந்த பசியில் எவ்வளவு சாப்பிட்டோம் என்று கூட தெரியாமல் ரெஜினா சாப்பிட பார்த்த நால்வருக்கும் பாவமாய் போனது.

"என்னை என் அப்பாகிட்ட கூட்டிட்டு போறீங்களா?" ரெஜினா கேட்க, எல்லோரும் என்ன சொல்வது என யோசிக்கவும், நிவி தன் மொபைலை அவளிடம் கொடுத்து "உன் அப்பாக்கு கால் பண்ணு" என சொல்ல, மூவரும் அவளை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

கண்களில் ஒளியுடன் ரெஜினா மொபைல் வாங்கி டயல் செய்ய, "நிவி வாட் யூ டூயிங்?" என்றான் ராம்.

"நோ ராம்! இதுக்கு மேல என்னால அவளை கஷ்டபடுத்த முடியாது. அவ முகத்தை பாரு சின்ன பொண்ணு. எவ்வளவு பயந்து போய் இருக்கா! அவங்க அப்பாகிட்ட அவளை சேர்த்திடலாம். வேணும்னா அவங்க அப்பாகிட்ட ஹெல்ப் கேட்கலாம்" என சொல்ல, அதுதான் சரி எனப்பட்டது அனைவருக்கும்.

தொடரும்..
 
Top