• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம்-21



ரதி இறங்கிய பின்னர் தேவாவும் ரோஜாவும் மட்டுமே காரில் இருந்தனர்.....சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ தேவா ரோஜாவிடம் திரும்பி “இப்போது எப்படி இருக்கிறது........ஏதாவது பிரச்சனை என்றால் சொல்லு......உடனே ஆஸ்பத்திரி போய்விடலாம்” என்று சொன்னான்.

அவன் சொன்னதும் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு அவள் திரும்பி கொள்ள .....ம்ம்ம்ம் என்று உதட்டை பிதுக்கியவன்....காரில் இருக்கும் சிடியை ஆன் பண்ண அதில்

மலரே மௌனமா மௌனமே பேசுமா

என்ற பாடல் ஒலிக்க உடனே தேவா சிரித்து கொண்டே அதனுடன் சேர்ந்து பாட வேகமாக அதை நிறுத்தியவள் ரேடியோவை போட அதிலோ

பொறந்தாலும் ஆம்பிளையா பொறக்க கூடாது

அப்படி பொறந்திட்டா பொம்பளைய நினைக்க கூடாது

என்ற பாடல் பாட தேவாவோ அடக்க முடியாமல் சிரித்து விட்டான்..... அவள் உடனே வேகமாக அடுத்தற்கு மாற்ற அவனோ “ரோஜா இப்போ என்ன வேணும் உனக்கு......பாவம் அந்த பிளேயர் ...அதை விட்டுடு என சொன்னவன்....இப்போ எதுக்கு முகத்தை உர்ருன்னு வச்சுக்கிட்டு வர ......அதான் நீ சொன்னமாதிரி ஊருக்கு கிளம்பிடோம்ல ...அப்புறம் என்ன” என சாதாரணமாக பேசி அவளது கவனத்தை திசை திருப்பினான்.

“ஆமாம் ........ஊருக்கு வரதுக்குள்ள எப்படி எல்லாம் என்னை திட்னிங்க” என அவள் கோபமாக சொல்ல

“இல்லடா ரதிக்கு இது கடைசி வருடம்......அவ படிப்பு பாதிக்க பட கூடாதுல அதான் சொன்னேன் என்றவன் சரி நம்ம வேற பேசலாம் என்றவன் இன்னைக்கு பட்டாபி உன்னை பற்றி கேட்டான் ரோஜா” என்றான் ....

பட்டாபி பெயரை கேட்டதும் முகம் சந்தோசமடைய ....... “அவனை பத்தி பேசாதிங்க ,என்னை அவனுக்கு நியாபகம் இருக்கா......இங்கு வந்து ஒரு வாரம் ஆகுது......அவன் ஒரு முறை கூட வந்து என்னை பார்க்களை....பேசவும் இல்லை.......நான் அவன் கூட பேசமாட்டேன்” என அவள் கோபமாக சொல்ல

“இல்லை ரோஜா ...அவன் பலமுறை கேட்டுவிட்டான்.....நான் தான் மறந்திட்டேன்.....நமது வரவேற்பு முடிந்ததும் உன்னை ஆபிஸ்க்கு அழைத்து வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன்” என்றான்.

“வரவேற்பா” என அவள் அதிர்ந்து கேட்க

“ஆமாம் ரோஜா ....நமது திருமணம் திடிரென்று ஏற்பாடாகிவிட்டது......என்னால் யாருக்கும் சொல்லமுடியவில்லை......எனது சித்தியும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு அடுத்த வாரம் தான் வருகிறார்கள்......அதனால் அவர்கள் வந்த பிறகு வரவேற்பு வைத்து விடலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்றான் தேவா.

“யாரை கேட்டு முடிவு பண்ணிங்க நீங்க......ஆமா உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க......நீங்க என்ன செஞ்சாலும் நான் அமைதியா இருப்பேனு நினைக்காதிங்க எப்போ பார்த்தாலும் நீங்களா முடிவு எடுத்து அதை மத்தவங்க யோசிக்க கூட நேரம் கொடுக்காம உங்க காரியத்தை சாதிச்சுக்கிறது.......இந்த கல்யாணத்தையே நான் ஜீரணிக்க முடியாம தடுமாறிட்டு இருக்கேன்.......அதற்குள்ள வரவேற்ப்பா” என அவள் படபடவென பொரிய

உடனே அவன் “லூசுதனமா பேசாத ரோஜா........நம்ம இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது.....இது மாற்ற முடியாது.......ஊருக்கு சொல்வதற்காக தான் இந்த வரவேற்பு ...அவ்ளோதான் இனி இப்படி பேசாதே என கோபமாக சொன்னவன் ....ஆமாம் இப்போ உனக்கு என்ன பிரச்சனை ...இந்த கல்யாணம் ஏன் உனக்கு பிடிக்களை......எப்படியும் உனக்கு உங்க வீட்ல கல்யாணம் பண்ணிவைப்பாங்க தானே .......எப்படியும் ஒருவனுக்கு நீ மனைவியாக வேணும்...அது நானாக இருந்தால் உனக்கு என்ன பிரச்சனை.......என்னிடம் என்னை குறை சொல்லு பார்கலாம் என அவள் திருமணத்தை பற்றி பேசியதும் தேவாவிற்கும் கோபம் வர வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு அவளை பார்த்து இந்த கேள்வியை கேட்டான் தேவா.

அவனது கோபம் அவளுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்த முதலில் சற்று மிரண்டவள் பின்னர்.....”அது வந்து......என்ன ...இது தான்....இதுதான் பிரச்சனை.......நீங்க இப்படியே மிரட்டியே உங்க காரியத்தை சாதிச்சுகிரிங்க”...என அவள் பழியை அவன் மேல் திருப்பிவிட

அவள் தடுமாற்றத்தை பார்த்தவன் சற்று நிதானத்துடன் அவள் முகத்தை பார்த்து ......”ரோஜா என்னை பார் என்றான்.....அவள் நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே அமர்ந்திருக்க .....அவள் முகத்தை மெதுவாக கையில் ஏந்தியவன் ...அவள் அவன் முகத்தை பார்த்ததும் அவள் கண்களை பார்த்து கொண்டே “இப்போ சொல்லு அம்லு....என்னை உனக்கு பிடிக்கலயா என அவன் ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தம் கொடுத்து கேட்க ...அதன் அழுத்தம் அவள் உயிர் வரை ஊடுருவ ......அவளது விழிகள் இரண்டும் அவனையே பார்க்க இல்லை என தலையை அவள் அறியாமலே ஆட்டியவள் ...கண்களில் இருந்து கண்ணீர் வழிய ........ அவனிடம் இருந்து திரும்பி அமர்ந்தவள் “என்னால முடியல சார்........எனக்கு எதோ குற்ற உணர்வாவே இருக்கு......நான் செய்த தப்புக்கு எனக்கு தண்டனை வேணும்......அதற்கு நான் இப்படி குடும்பம் சந்தோசம் என்று இருக்க கூடாது......இது எனக்கு நானே கொடுத்துக்கிற தண்டனை........இனி ஒவ்வொரு பொண்ணும் பெத்தவங்க பேச்சை மீறி செய்யற செயல் அந்த குடும்பத்தை எப்படி எல்லாம் பாதிக்கும்னு தெரிஞ்சுக்கிறமாதிரி நான் இருக்கணும் அதான் என்னால இந்த திருமணத்தை ஏத்துக்க முடியலை “ என தனது மன குழப்பத்தை அவள் அழுகையின் ஊடே சொல்ல ....இந்த மாதிரி கோணத்தில் சற்றும் யோசித்திடாத தேவா அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.

ஒரு நிமிடம் அவனுக்கு அவள் சொல்வது புரியவில்லை......பின்னர் மீண்டும் அவள் சொன்னதை நினைத்து பார்த்தவன் .......அவள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறாள்....அதற்க்கு தானும் ஒரு காரணம் என அவனுக்கு புரிய அப்படியே நிலை குலைந்து போனான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவன் பின்னர் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் நடந்து வந்தவன் அப்போதும் உள்ளே ரோஜா அழுது கொண்டு இருக்க ...அவளை கைபிடித்து கீழே இறக்கியவன் தன் தோலில் அவளை சாய்த்து கொள்ள அவளோ அழுத களைப்பில் அப்படியே சாய்ந்து கொள்ள எதுவும் பேசாமல் அந்த NH ரோட்டில் இருவரும் காரில் சாய்ந்து அமைதியாக நின்றனர்......

அதற்குள் அந்த வழியாக ஒரு ஐஸ் வண்டி வர அந்த சத்தத்தை கேட்டதும் ரோஜா கண்கள் அங்கு செல்ல அதை பார்த்ததும் தேவா லேசான புன்னகையுடன் “ஐஸ் வேணுமா” என அவளிடம் கேட்டான் . ...அவள் ஏதும் சொல்லாமல் அவன் முகத்தை பார்க்க ...அவன் சிரித்துக் கொண்டே “வாங்கிக்கோ” என்றவன் அவனை அழைத்து வாங்கி கொடுக்க வாங்கி கொண்டவள் அப்போது தான் கவனித்தாள் அவன் மேல் சாய்ந்து இருப்பதை சட்டென்று அவனிடம் இருந்து விலக .....”கவலைபடாதே ரோஜா நான் ஐஸ்கு பங்குக்கு வரமாட்டேன்” என அவன் சொல்ல அவள் ஏதும் பேசாமல் மறுபடியும் காரினுள் சென்று அமர்ந்தாள்.

தேவாவும் அவளை வேறு ஏதும் கேட்காமல் காரை எடுத்தவன் அதற்க்கு பிறகு இருவரும் பொதுபடையாக ஊரை பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள்......ஊருக்குள் நுழைந்ததும் ரோஜாவின் மனம் சந்தோசத்தில் ததும்ப ...”ஹே எங்க ஊரு வந்திடுச்சே “என அவள் சத்தமாக சொல்ல அவளது மகிழ்ச்சியில் தேவாவின் மனமும் நிறைந்து இருந்தது.

அவர்கள் வருவதை முன்கூட்டியே சொல்லி இருந்ததால் அனைவரும் வெளியில் அவர்களை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்க உள்ளே நுழைந்ததும் ரோஜா சந்தோசத்தில் கார் நிற்பதற்கு முன்பே கதவை திறக்க முற்பட்டாள் ....”ரோஜா பொறு காரை நிறுத்திடறேன்” என அவன் சட்டென்று பிரேக் போடவும் இவள் கீழே காலை வைக்கவும் சரியாக இருந்தது......

இந்த ஆறு மாதத்தில் அவள் சென்னை சென்று வந்து கொண்டு இருந்தாலும் இன்று வருவது அவளுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.....ஏதோ பல வருடங்கள் பார்க்காமல் இருந்தவர்களை பார்க்கின்ற உணர்வு அவளுக்கு வர வேகமாக ஓடி சென்று பாட்டியை கட்டி பிடித்து கொண்டவள் ...”ஹே எம்ரால்டு நான் வந்திட்டேன் என அழுகையும் சந்தோசமுமாக அவள் சொல்ல....என் தங்கமே என அவரும் அவளை உச்சு முகர......உனக்காகக தான் காத்துகிட்டு இருக்கேன் என அவர் சொல்ல ........ அதற்குள் பார்வதியும் சேகரும் ரோஜா என அழைத்தவாறே அவள் அருகில் செல்ல அம்மா அப்பா என அவர்களிடம் தாவியவள் எப்படி இருக்கீங்க அம்மா” என அவள் கேட்க ...

“எனகென்னடா நான் நல்ல இருக்கேன்....நீ எப்படி இருக்க ரோஜா....சந்தோசமா இருக்கியா என வாஞ்சையுடன் அவளை அணைத்து கொண்டவர் என்ன ரோஜா இளைச்சு போய்ட்ட” என தாய்மைக்குரிய அக்கறையோடு பார்வதி கேட்க....அவளோ “நீங்க தான் எனக்கு ரவா உருண்டை கொடுத்து விடவே இல்லை அதான்” என முகத்தை சுருக்கி அவள் சொல்ல அவளது செய்கை அந்த உணர்ச்சிகரமான சூழ்நிலையை மகிழ்ச்சியாக மாற்றியது....

அதற்குள் பக்கத்தில் இருக்கும் ஒரு பெரியம்மா “ஏலே ரோசா கண்ணாலம் முடிஞ்சு போனவ இப்பதான் கண்ணு தெரியுதா எங்களை எல்லாம்” என இழுத்து கேட்க

“இசக்கி பெரியம்மா எப்படி இருக்கீங்க என அவரின் அருகில் சென்று தோளோடு அணைத்து கொண்டே கேட்டவள்....மெதுவாக அவரின் காதில் ஏன் பெரியம்மா அந்த தவிட்டு பானைகுள்ள உம் மருமக ஓழிச்சு வச்ச அதுரசத்தை எடுத்து கொடுக்க ஆள் இல்லைனு கவலைபட்டியா “என அவள் சிரித்தபடி கேட்க

“போடி கிறுக்கி...வந்திருக்கிரவங்க முன்னாடி மானத்தை வாங்கிற” என அவர் முகத்தை நொடிக்க அங்கு பெரும் சிரிப்பொலி பரவியது.

அனைவரும் சிரித்து கொண்டு இருக்க அதற்குள் சோலையம்மா ....”அய்யா சின்ன ஐயா தனியா நின்னுகிட்டு இருக்கார் ...அவரை உள்ள கூப்பிடுங்க” என தேவா இருப்பதை நியாபக படுத்த

ஹப்பா சாமிங்களா .....இப்பவாவது என்னை பார்த்திங்களே என மனதில் நினைத்தவன் ஹிஹிஹி என வழிய

“அச்சோ மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை......ரோஜாவ பார்த்த சந்தோசத்துல உங்களை மறந்திட்டோம்....வாங்க வாங்க” என தேவாவை மரியாதையுடன் உள்ளே பார்வதியம் சேகரும் அழைத்து சென்றார்.

ரோஜாவோ தனது பாட்டியின் தோளில் சாய்ந்து கொண்டு ...”ஹே எம்ரால்ட் உடம்பு சரியில்லைன்னு பொய் தான சொன்ன” என கண்களை உருட்டி முகத்தை சாய்த்து கேட்க

“அது வந்து ரோஜா” என அவர் தடுமாற.......

“இரு...இரு வர வர நீ வில்லியா மாறிட்டு வர .....உன்னை கவனிச்சுகிறேன்” என அவரை மிரட்டுவது போல் விரலை ஆட்டி பேச

அதற்குள் “என்ன மரகதம் ஒருவாரமா விசனத்தோட இருந்தியே...இப்ப பாரு உன் பேத்தியை முகத்துள எம்புட்டு சந்தோசம்.......இப்பதான் பழைய ரோசாவ நாங்க பார்க்கிறோம்” என ஊர்கார பெண்மணி சொல்ல மரகதத்தின் மனம் நிறைந்து இருந்தது.

வீட்டிற்க்குள் நுழைந்ததும் அனைவர்க்கும் காபி கொடுத்த பார்வதி ரோஜாவை அழைத்து தேவாவிர்க்கும் கொடுக்க சொன்னார்.

“அதை நீயே கொண்டு பொய் கொடும்மா” என அவள் சலித்து கொள்ள

“அச்சோ ரோஜா நீதான் கொடுக்கணும்....அங்க பாரு ஊர்ல எல்லாம் நம்ம வீட்டுக்கு முன்னாடி நிக்கிறாங்க ...நான் எப்படி “என பார்வதி சொல்ல முனகிகொன்டே அதை வாங்கி வந்தாள் ரோஜா .

அது கிராமமாக இருப்பதால் அனைவரும் வந்து நலம் விசாரிக்க பதில் சொல்வதற்குள் தினரிபோனான் தேவா.

அவனது தடுமாற்றத்தை கண்டு கொண்ட மரகதம் “சரி ரொம்ப தூரத்தில் இருந்து கார்ல வந்ததால களைப்பா இருப்பிங்க ...போய் ஓய்வு எடுக்கட்டும் அவங்க நம்ம அப்புறம் பேசலாம்” என்றவர் ரோஜாவை அழைத்து “ரோஜா மாப்பிளையை அறைக்கு அழைத்து செல்” என சொல்லிவிட்டு ஊர்காரர்கள் அனைவரயும் அனுப்ப சென்றார்.

தேவாவை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரோஜா தனது அறையின் முன் நின்று கொண்டு தேவாவை உள்ளே அழைத்து செல்லலாமா வேண்டாமா என யோசித்து கொண்டு இருக்க .தேவாவிற்கு ரோஜாவின் அறை தெரியும் என்றாலும் அவன் ஏதும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றவன் பின்னர்

“என்ன யோசனை ரோஜா “ என்றான் தேவா.

“இல்லை அங்க நிறைய ரூம்ஸ் இருக்கும்....எங்க வீட்ல அப்படி கிடையாது......எனக்கு பாட்டிக்கு அப்பா அம்மாவுக்குதான் .....அதான் உங்களுக்கு எதுன்னு” என அவள் சொல்ல

அதற்குள் அங்கு வந்த மரகதம் “என்ன ரோஜா உன் அறைக்குள்ள கூட்டிட்டு போகாம இங்க நிற்க வச்சு பேசிட்டு இருக்க ......சீக்கிரம் போய் ஓய்வு எடுங்க” என சொல்ல

“ சரி பாட்டி” என சொல்லிவிட்டு தேவாவுடன் தனது அறைக்குள் நுழைந்தாள் ரோஜா.

அவன் உள்ளே வந்ததும் “தப்பா எடுத்துகாதிங்க.......சின்ன அறைதான்......உங்களுக்கு பிடிக்குமா... உங்களுக்கு கஷ்டமா இருந்தா நான் வேணா அம்மா அறையில தங்கி கொள்ளட்டுமா” என அவள் கேட்க

மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து கொண்டு ....”இதற்குதான் இவ்ளோ யோசனையா ....ரோஜா இங்க பார் நம்ம வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.....ஆனால் இது உங்க வீடு....இங்க இடம் வேணா சின்னதா இருக்கலாம் ...ஆனா இங்க இருக்கிறவங்க மனசு எல்லாம் ரொம்ப பெருசு......அதான் எனக்கு வேணும்....... இப்ப இங்க நம்ம இரண்டு பேரும் கணவன் மனைவி அப்படினுதான் நினச்சுட்டு இருக்காங்க.....இங்க நீ தனியா நான் தனியா படுத்து நீயே ஏதாவது உளறி காட்டி கொடுத்திடாத.....முதல்ல புரிஞ்சுகோ .....நம்ம இருவரும் கணவன் மனைவி” என அவன் அழுத்தி சொல்ல அவளோ திரு திருவென முழித்தவாரே அவன் சொல்வதற்கு எல்லாம் தலை ஆட்டினாள்.

அதற்குள் தேவாவின் உள்மனம் போதுண்ட தேவா......ரொம்ப பயபடுத்திவிடாத என அவனை எச்சரிக்கை செய்ய அவனும் “சரி நான் ஓய்வு எடுக்கணும்” என சொல்லிவிட்டு அருகில் இருக்கும் அவளது மெத்தையில் படுத்தான்.

ரோஜாவோ என்ன செய்வது என புரியாமல் சிறிது நேரம் நின்றவள் பின்னர் அங்கும் இங்கும் எதையோ தேட ....

சத்தம் ஏதும் இல்லை என விழித்து பார்த்த தேவா அவள் எதோ தேடிக்கொண்டு இருக்க

“என்ன தேடுகிறாய் ரோஜா “என்றான்.

“இல்லை என் பெட்டிய காணோம்” என்றாள்..

“எந்த பெட்டி” என அவன் சாவகாசமாய் கேட்க

“அதான் வீட்டில் இருந்து கொண்டு வந்தனே அதான்” என சொல்ல

“அது கொண்டுவந்திருந்தால் தானே இங்க இருக்கும்” என அவன் பதில் சொல்லிவிட்டு திரும்பி படுக்க

“ரோஜாவோ எனதூஊஉ கொண்டு வரலையா....நான் கேட்டதுக்கு ரதி எடுத்து வருவான்னு சொன்னீங்க” என கோபமாக கேட்க

“இப்போ எதுக்கு உனக்கு அந்த பெட்டி” என அவன் திரும்ப கேட்டான்.

“என்னோட ட்ரெஸ் எல்லாம் அதுல இருக்கு ... அப்புறம்....அப்புறம் என இழுத்தவள் எனக்கு என் பெட்டி வேணும்” என மீண்டும் அதையே சொன்னவள் “இப்போ எனக்கு ட்ரெஸ் மாத்தனும்...அதுல தான் எல்லாம் இருக்கு “ என சொல்லிவிட்டு அவனை பார்க்க

அங்கே பார் என அவன் சொல்ல அங்கு ஒரு ட்ராவல் பையில் அவளுக்கான உடைகள் இருக்க அனைத்தும் புதியதாக இருந்தன .

“ஹே புது ட்ரெஸ்” என ஒருநிமிடம் சந்தோசபட்டவள் ...ஆமா இது எல்லாம் எப்போ வாங்கினது....யாருக்கு வாங்கினது ” என எப்போதும் போல் தனது கேள்வியை ஆரம்பிக்க

“ம்ம்ம்ம்ம்ம்......எப்போ வாங்கினா என்ன.....உனக்கு பிடிச்சு இருக்கா” என கண்ணை மூடிகொண்டே அவன் கேட்க

“ரொம்ப பிடிச்சு இருக்கு சார்” என சொன்னவள் திரும்பி அவனை பார்க்க அவன் உறங்கி கொண்டு இருந்தான்.

அனைத்து உடைகளும் எடுத்து பார்த்தவள் அவளுக்கு பிடித்த நிறத்தில் பிடித்த உடைகளாக இருக்க எப்படி என யோசித்தவள் அப்போது தான் அவன் தன்னிடம் என்ன பிடிக்கும் பிடிக்காது என அன்று கேட்டு கொண்டிருந்தது நினைவு வர அவள் மனதில் ஒரு மெல்லிய தென்றல் வீசி சென்றது.

அந்த சந்தோசம் முகத்தில் தெரிய சிறு புன்னகையுடன் அவள் வெளியே செல்ல ...அவள் என்ன செய்கிறாள் என தூங்குவது போல் பாவனை செய்து கொண்டு ரசித்து கொண்டு இருந்தவன் அவளது புன்னகை அவனையும் தொற்றிக்கொள்ள தனது முயற்சிகள் அனைத்தும் சரியாக நடக்கின்றன என்ற திருப்தியில் உறங்கி போனான்.

பின்னர் ரோஜா அம்மாவிடம் பாட்டியிடம் எல்லாம் சென்று கொஞ்சி கொண்டு இருக்க சேகரும் வந்த உடன் அங்கு சந்தோசம் நிறைந்த இருந்தது.

பின்னர் மதியம் உணவிற்கு எல்லாம் தயார் ஆகிவிட அனைவரயும் சாப்பிட அழைத்தார் பார்வதி.

மரகதம் ரோஜாவிடம் மாப்பிள்ளையை அழைத்து வா என சொல்ல

“சார் தூங்கிறார் பாட்டி.....நாம் சாப்பிடலாம் .அவர் எழுந்த உடன் சாப்பிட்டு கொள்வார்” என சொல்லிவிட்டு அவள் சாப்பிட அமர

பார்வதியோ “ரோஜா என்ன இது...மாப்பிளைய கூப்பிட சொன்னா நீ யாரோ சாருனு சொல்ற” என கேட்க

சட்டென்று நாக்கை கடித்தவள் ...”இல்லம்மா அது வந்து” என இழுத்தவள்

மரகதமோ அவளை ஒரு மாதிரி பார்க்க

தேவா சொன்னது ரோஜாவிற்கு சட்டென்று நினைவு வர ...எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் ...”அது வந்து நான் அப்படியே கூப்பிட்டு பழகிட்டனா அதான் என்றவள் வேற எப்படிம்மா கூப்பிட்றது” என அவளிடமே திரும்ப கேட்டாள்.

“அய்யோ உன்னை எல்லாம் பெத்ததுக்கு என தலையில் அடித்து கொண்ட பார்வதி ...அது கூட தெரியாதா ரோஜா ...மாமானு கூப்பிடு” என சொன்னார்.

“அதான் நான் ராம் மாமாவ கூப்பிட்றனே “என அவள் பட்டென்று சொல்ல

“சரி அத்தான்னு கூப்பிடு என்றவர் இங்க பாரு ரோஜா நீ இன்னும் சிறு பிள்ளை கிடையாது.......உனக்கு கல்யாணம் ஆகிடுச்சு” என அவர் ஆரம்பிக்க

உடனே ரோஜா “அம்மா போதும்...போதும்......விட்டுடுங்க ....நீங்க எப்படி கூப்பிட சொன்னாலும் கூப்பிட்றேன் ...ஆனா உங்க சுப்ரபாதத்த ஆரம்பிச்சுடாதிங்க” என கொஞ்சுவது போல் சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து நகர்ந்தவள் “ஹப்பா இந்த கல்யாணம் பண்ணா இவ்ளோ விஷயம் இருக்கா.....ஷ் ஒன்னும் புரியலை அத்தான் கூப்பிடறதாம்...ஹஹஹா அப்படி எப்படி கூப்பிட்றது....அத்தான் ..பொத்தான்” என சொல்லி சிரித்துக்கொண்டே உள்ளே சென்றவள்.... அவன் நன்றாக உறங்கி கொண்டு இருக்க எப்படி எழுப்புவது என தெரியாமல் சிறிது நேரம் யோசித்தவள் சட்டென்று அருகில் இருந்த சிறு குச்சியை எடுத்து அவன் காதில் விட

எதோ குறுகுறுக்க அதை தட்டிவிட்டு அவன் மறுபடியும் உறங்க

ம்ம்ம்ம் என்ன பண்ணலாம் என்று யோசித்தவள் அங்கு அலமாரியில் இருக்கும் சீகக்காய் தூள் கண்ணில் பட அவள் மூளை ஏடாகூடமாக வேலை செய்ய இரண்டு நிமிடத்தில் அலறிக்கொண்டு எழுந்த தேவா என்ன என்று கேட்கமுடியாமல் தும்பிக் கொண்டே இருந்தான்.

அவளோ சவகாசமாக “அம்மா சாப்பிட கூபிட்றாங்க வாங்க” என சொல்லி விட்டு முன்னே நடக்க

அவள் எதோ சொல்கிறாள் ஆனால் அவனுக்கு அது புரியாமல் கண்கள் சிவந்து அதில் இருந்து கண்ணீர் வர தும்பிக்கொண்டே வெளியே வந்தவன் குடும்பத்தினர் அனைவரும் அங்கு நிற்க அவன் நின்ற கோலத்தை பார்த்து ரோஜாவோ சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்தி கொண்டு நின்று கொண்டு இருந்தாள்.

அவனது தோற்றத்தை கண்டு சேகர் பதறி “மாப்பிள்ளை என்ன ஆச்சு” என அவன் கையை பிடித்து அமரவைக்க.... ஆனால் மரகதமும் பார்வதியும் ரோஜாவை முறைக்க அவளோ சிரிப்பை அடக்க முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டு இருந்தாள்.

“ஏண்டி நீ இன்னும் திருந்தலையா” என அவள் அருகில் சென்று பார்வதி பல்லை கடித்து கொண்டு கேட்க

“அம்மா நான் ஒன்னும் பண்ணலை......இவர் நல்லா தூங்கிட்டு இருந்தார்...பக்கத்துல சீகக்காய் இருந்தது...நல்ல இருக்காணு திறந்து பார்த்தேன்...அது அப்படியே காற்று வழிய அவர் மூக்குல போய்டுச்சு....இதுல என்னோட தப்பு ஏதும் இல்லை......போய் காற்றை கேளுங்க” என அவள் அப்பாவி போல் சொல்ல அவளை திட்ட முடியாமல் முறைத்தவர் அதற்குள் சேகர் அழைக்க தேவாவை பார்க்க சென்று விட்டார்.

மரகதம் அவளேயே பார்த்து கொண்டு நிற்க

ரோஜாவோ இரு புருவங்களை தூக்கி எப்படி என கண்காலே கேட்க

அவர் ஏதும் சொல்லாமல் அமைதியாக திரும்பி செல்ல ரோஜாவின் கண்களில் அவளை அறியாமல் கண்ணீர் வந்து கொண்டு இருந்தது....உன்னோட வேதனையை மறைக்க நீ திரும்பிகிட்ட பாட்டி...ஆனா நான் என மனதிற்குள் புலம்பியவள் அதற்குள் பார்வதி அவளை சாப்பிட அழைக்க கண்களை துடைத்து கொண்டு சாப்பிடும் இடத்திற்கு சென்றாள்.

அங்கு ஒரு பெரிய விருந்தே நடக்க “ஹாய் அம்மா எனக்கு பிடிச்ச மீன் “ என சிறுபிள்ளை போல் துள்ளி குதித்தவள் அருகில் தேவா இருக்கிறான்...அவன் என்ன செய்கிறான் என்பதை எல்லாம் கவனிக்காமல் அவள் தனது சாப்பாட்டில் அமர்ந்து விட பார்வதியும் மரகதமும் அவளிடம் எப்படி சொல்வது என தெரியாமல் முழித்து கொண்டு நிற்க

அவர்களை பார்த்ததும் புரிந்து கொண்ட தேவா “அத்தை நீங்க எனக்கு பரிமாறுங்க......உங்க பொண்ணு பரிமாரிதானே தினமும் சாப்பிட்றேன்” என சமாளிக்க உடனே பார்வதி சந்தோசத்துடன் “இதோ சாப்பிடுங்க மாப்பிள்ளை” என அவனுக்கு தேவையானதை கேட்டு வைத்தாள்.

ரோஜாவோ அவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை......அம்மா இந்த மாதிரி சாப்பிட்டு எவ்ளோ நாள் ஆச்சு என சொல்லிகொண்டே சாப்பிட ...அதற்குள் பார்வதி ஆமா ரோஜா நீயும் இப்போ சூப்பறா சமையல் செய்யறியாம் , நீ சோலா பூரி செய்ததது ரொம்ப நல்ல இருந்ததுன்னு மாப்பிள்ளை போன் பண்ணி புகழ்ந்து தள்ளிட்டார்......எனக்கே செய்ய தெரியாது ...நீ எப்படி அத கத்துகிட்ட.......காவேரி அத்தைகிட்ட கத்துகிட்டியா” என அவர் சொல்லி கொண்டு இருக்க ..சாப்பிட்டு கொண்டு இருந்தவள் சட்டென்று புரை ஏற இருமிகொண்டே நிமிர்ந்து பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிற்க தேவா ரோஜாவை பார்க்க அவளின் கோலம் சிரிப்பை எற்படுத்தினாலும் அவள் தலையை தட்டி விட்டு “மெதுவா ரோஜா ...எதுக்கு இவ்ளோ எமோஷன் ஆகிற....உண்மையதான சொல்றாங்க “ என சிரித்து கொண்டே சொல்ல அவனை அந்த நேரத்திலும் ஒரு முறை முறைத்தவள் ....”ஹிஹிஹி அது வந்தும்மா என இழுத்தவள் முதல்ல அந்த சிக்கன் பீஸ் வையுங்க ரொம்ப நல்லா இருக்கு” என பேச்சை மாற்ற பார்வதியும் மகளுக்கு பிடித்ததை எடுத்து வைத்தவர் அதற்குள் பேச்சு வேறு பக்கம் திரும்ப பூரி மறந்து போனது.

பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு சிறிது நேரம் அனைவரும் பேசிக்கொண்டு இருக்க பார்வதி ரோஜா “இந்தா அத்தானுக்கு வெற்றிலை எடுத்து கொடு” என்றார்.

வேகமாக எழுந்து வந்த ரோஜாவெற்றிலை எடுத்து தேவாவின் முன்னால் வைத்தாள்.

தேவாவோ “எனக்கு இல்லை ரோஜா...அத்தானுக்கு கொடுக்க சொன்னாங்க ...அங்க கொண்டு போய் கொடு” என சொல்ல

மரகதமும் சேகரும் தேவாவை ஒரு மாதிரி பார்க்க

ரோஜாவோ ..”ஆஆஆஆஆஆ இவன் வேற என புரியாம சொதப்பறான் என மனதில் புலம்பிகொண்டே ...உங்களுக்குதான் அத்தான் எடுத்துகுங்க” என அவன் அருகில் சென்று மெதுவாக சொல்ல....அவன் புரியாமல் விழிக்க......

“இப்போ எதுக்கு இந்த லுக்கு என முனகியவள் உங்களை அப்படிதான் நான் இனி கூப்பிடனுமாம்” என சொல்லும்போதே அவளுக்கு சிரிப்பு வர கேட்ட தேவா ஒரு நிமிடம் புரியாம விழித்தவன் பின்னர் அவனுக்கு உரைக்க அவனுக்கும் சிரிப்பு வர அவர்கள் சிரிப்பதை பார்த்து ஏதோ அவர்களுக்குள் பேசி சிரித்து கொள்கிறார்கள் ...நாம் ஏன் இடைஞ்சலாக இருக்க வேண்டும் என எண்ணி சேகரும் மரகதமும் கொஞ்சம் வேலை இருக்கு என எழுந்து விட அங்கு தேவாவும் ரோஜாவும் தனித்து விடபட்டனர்.

அவள் சொல்லியவிதத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து கொண்டு இருந்த தேவா அவர்கள் சென்றதும் “என்ன ரோஜா இது” என கேட்க

“அதான் சார்...இந்த இந்த இரண்டு பின்லேடிகளும் இப்படி என்னை பாடா படுத்தறாங்க.....நான் உங்களை சார்னு சொல்ல கூடாதாம்.....அத்தானு சொல்லணுமாம்” என அவள் சொல்ல சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு அமைதியானான் தேவா .

தான் நினைத்தது இங்கு இருந்தால் சீக்கிரம் நடந்து விடும் என அவனக்கு தோன்ற யோசித்த படியே எழுந்து அறைக்குள் சென்றான் தேவா .

இவன் ஏன் இப்படி போறான் என ரோஜா அவனேயே பார்த்து கொண்டு இருக்க

அதற்கு ஏற்றார் போல் “ரோஜா நீயும் மாப்பிளையும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுங்க “என மரகதம் சொன்னார். ..

ரோஜாவோ “இல்ல பாட்டி நான் அம்மா கூட பேசிட்டு இருக்கேன்” என அவள் சொல்ல

“அது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம் ...நீ முதல்ல மாப்பிளையை கவனி” என சொல்ல எதுவும் பேசமுடியாமல் தனது அறைக்கு வந்தாள் ரோஜா.

அங்கு கட்டிலில் தேவா கணினியில் வேலை பார்த்து கொண்டு அமர்ந்திருக்க உள்ளே நுழைந்த ரோஜா என்ன செய்வது என புரியாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தாள்.அது கிராமத்து வீடு...அறைகள் எல்லாம் சிறியது.....மேலும் பால்கனி அது போன்று எதுவும் இல்லை.....அறைக்குள் நுழைந்து விட்டால் அதற்குள்ளே இருக்க வேண்டும்.

 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அவன் சாதாரணமாக ஒரு காலை மடித்து வைத்து ஒரு காலை தொங்கவிட்டு அமர்ந்திருந்தவன் ...வெயிலின் உக்கிரம் தாங்காமல் மின்விசிரியை மீறி அவனுக்கு வேர்க்க அதை தோளில் கிடந்த துண்டால் துடைத்து கொண்டு அவன் அமர்ந்திருப்பதை பார்த்தவள் ...இவன் என்ன மாதிரியான ஆள்......நீதி மன்றத்தில் இவனை கண்டால் எல்லாரும் நடுங்கு கின்றனர்.......வெளியிலே இவனுகென்று ஒரு மரியாதை இருக்கிறது......பணம் மட்டுமே இவனுக்கு குறிக்கோள் என்றால் இவன் ஏன் இப்படி வந்து அமர்ந்திருக்கவேண்டும் என அவள் யோசித்து கொண்டு இருக்க

அவள் உள்ளே நுழைந்ததும் கவனித்துவிட்ட தேவா கணினியில் ஒரு பார்வையும் அவளிடம் ஒரு பார்வையும் வைத்து இருந்தான்.அவள் ஏதோ நெற்றியை சுருக்கி சிந்திப்பது போல் அவனுக்கு தோன்ற

“என்ன ரோஜா .....உன் அத்தானை அப்படி பார்த்திட்டு நிற்கிற” என மேலே நிமிர்ந்து பார்க்காமல் குனிந்த படியே அவன் கேட்க

“அத்தானா என கேட்டவள் .....ஓ நீங்கதான என சொல்லிவிட்டு இல்லை........நீங்க எப்பவும் இப்படிதான் இருப்பிங்களா “என மொட்டையாக கேட்க

“இப்படிதானனா எப்படி” என கேட்டு கொண்டே அவன் கணினியை மூடி வைத்து விட்டு நிமிர்ந்து பார்க்க

அவள் இல்லை......இவ்ளோ சிம்ப்ளா இருக்கீங்க .......உண்மையா சொல்லனும்னா ரொம்ப நாளைக்கு அப்புறம் எங்க வீட்ல எல்லாரும் சந்தோசமா மனசு விட்டு பேசி சிரிச்சாங்க ......அதுக்கு காரணம் நீங்க தான் .......நான் மட்டும் தனியா வந்திருந்தா கூட இவ்ளோ சந்தோஷ பட்ருப்பாங்கலானு எனக்கு தெரியாது ....ஆனா இன்னைக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் அப்பா அம்மா பாட்டி எல்லாருமே மகிழ்ச்சியா இருக்காங்க ....ரொம்ப நன்றி சார்” என அவள் சந்தேகத்தில் ஆரம்பித்து உணர்ச்சி பெருக்கில் முடிக்க

என்ன ரோஜா இது என எழுந்து அவள் கையை பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன் .......”இப்போ எதுக்கு நீ இவ்ளோ உணர்சிவசபட்ற...இது எல்லார் வீட்டிலும் நடக்கிறது தான ....புது மாப்பிள்ளை வந்தா எப்போதும் இந்த மரியாதை இருக்கும்..எத்தன சினிமால பார்த்து இருக்கோம்” என அவன் அவளை தேற்ற

“இல்லை சார்.......நம்ம கல்யாணத்திற்கு முன்னாடி நீங்க வந்து பார்த்து இருக்கனும்.......சந்தோசம் எல்லாம் எங்க தாத்தாவோட போய்டுச்சு.......இப்போது தான் அது மறுபடியும் வந்திருக்கு......அதுவும் உங்களால் அதான் ........இந்த உதவிய நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் சார்” என அவள் கண்களில் கண்ணீர் தளும்ப அவன் கைகளை பிடித்து கொண்டு சொன்னாள்..

ஒரு நிமிடம் தேவாவின் முகம் மாற ..”ஹே லூசு நான் உன் புருசண்டி ......என்ன பேசற நீ....இனி இப்படி பேசாத” என அவன் உரிமையோடு அவளிடம் பேச

இப்போது ரோஜா அதிர்ந்தவள் வேகமாக “சார்” என சொல்ல

அப்போது தான் தான் சொன்னதை உணர்ந்தவன் ..ஓ ரொம்ப உரிமை எடுத்துகிட்டமோ என நினைத்தவன் “இல்லை ரோஜா...நான் தான் சொன்னேன் இல்லயா ...நமக்கு திருமணம் முடிந்து விட்டது...நாம் இருவரும் கணவன் மனைவி ..இது மாற்ற முடியாது.... உன் குடும்பம் என் குடும்பம் அப்டின்னு தனியா ஏதும் இல்லை...புரிஞ்சுதா...சரி நீ தூங்கவே இல்லை...கொஞ்ச நேரம் படுத்து தூங்கு.....நான் கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சுட்டு வரேன்” என்றவன் ...இனியும் உளறி அவளை குழப்பிவிடகூடது என்ற முடிவோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்து வேலை பார்க்க ரோஜாவா படுத்த உடன் உறங்கிவிட்டாள்.

சிறிது நேரத்தில் வேலை முடிந்து விட திரும்பி பார்க்க நிர்மலமான முகத்துடன் உறங்கி கொண்டிருக்கும் மனையாளை சிறிது நேரம் ரசித்தவன் பின்னர் எழுந்து வெளியே வந்தான்.

அவன் வரவும் மரகதம் வெளியே வரவும் சரியாக இருக்க...”என்ன பாட்டி நீங்க தூங்கலயா” என கேட்டுகொண்டே அவர் அருகில் வந்தான் தேவா......

“இல்லை தம்பி ....தூக்கம் வரலை என்றவர் உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும் என்றார்.அவருடன் அறைக்குள் சென்றவன் ....என்ன தம்பி ரோஜா எப்படி நடந்துகிறா...ஒன்னும் பிரச்சனை இல்லயா....ஆனா சில நேரத்துல பார்த்தா அவள் பழைய மாதிரி இருக்கிறமாதிரி எனக்கு தோணுது” என தனது சந்தேகத்தை வெளிபடுத்த

தேவாவும் இல்லை பாட்டி முதல்ல இருந்ததுக்கு இப்போ பரவாயில்லை......ஆனா நீங்க சின்ன பொண்ணுன்னு நினைச்சு பேசின சில விஷயங்கள் அவ மனச ரொம்ப பாதிசுடுச்சு........ ரொம்ப குழம்பிபோய் இருக்கா......சாதாரண விஷயத்தை பெருசா யோசிக்கிறா.......பெரிய விஷயத்தை ஈஸியா எடுத்துகிறா....அதான் அவ பிரச்சனை ....சீக்கிரம் சரி ஆகிடுவா” என்றான்.

“உங்களை ரொம்ப கஷ்டபடுத்றோம் தம்பி என அவர் சங்கடத்துடன் சொன்னவர்...ரோஜாவும் ரொம்ப நல்ல பொண்ணுதான்...என்ன கொஞ்சம் குறும்பு ஜாஸ்தி....நீங்க பார்த்து இருபிங்க இல்ல...சீகக்காய் எடுத்து மூக்குல போட்ட மாதிரி தான் அவங்க தாத்தாவையும் பண்ணுவா ...அவரும் உங்களை மாதிரியே வந்து நிப்பார் ...எனக்கு பார்த்த உடனே அந்த நியாபகம் வந்திடுச்சு ........நீங்க தப்ப எடுத்துகாதிங்க....அவ குழந்தை மாதிரி தம்பி “என தனது பேத்தியின் குறும்பு தனத்தை எங்கு தேவா தவறாக எடுத்து கொள்வானோ என்ற பயத்தில் அவர் அதை விளக்க

“இல்லை பாட்டி....எனக்கு ஒரு அழகான தேவதைய கொடுத்து இருக்கீங்க நீங்க......கண்டிப்பா அந்த பொக்கிகிசத்தை நான் என் கண்ணுக்குள்ள வச்சு பார்ப்பேன்......நல்ல வேலை நீங்க போன் பண்ணிங்க......இல்லைனா மேடம் பெரிய பெட்டியோட கிளம்பி இருந்தாங்க.....நான் மட்டும் ம்ம்னு சொல்லி இருந்தா உடனே கிளம்பி இருப்பா” என அவன் சொல்லி சிரிக்க

“இல்லைதம்பி....நாங்கதான் அங்க வரலாம்னு இருந்தோம்....அப்புறம் ஊர்ல எல்லாம் ஒரு மாதிரி பேசுனாங்க ....பொண்ணு மாப்பிளை வரலைன்னு ..... என் மேல கொஞ்சம் ரோஜாவுக்கு கோபம் ....அதுனால நான் வானு சொன்னா வந்திருக்க மாட்டா....... அதான் எனக்கு உடம்பு சரியில்லை அப்டின்னு சொன்னேன்....அதான் உங்களும் போன் பண்ணேன் என சொன்னவர் உங்களை நம்பி தான் தம்பி என் உயிரையே கொடுத்துஇருக்கேன்” என சொல்லும்போதே அவர் நா தழுதழுக்க

பாட்டி என எழுந்து அவர் அருகில் சென்றவன் ...”உங்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன் பாட்டி” என அழுத்தமாக சொல்ல மரகதத்தின் முகத்தில் சற்று தெளிவு வந்தது.

அதற்கு பின்பு அறைக்கு வந்தவன் இனி அடுத்தது என்ன செய்யவேண்டும் என யோசித்தவன் ஒரு சில சந்தேகம் வர ராமிற்கு போன் செய்து அதை நிவர்த்தி செய்து கொண்டான்.

இனி இங்கிருந்து செல்லும்போது ரோஜாவின் கணவனாக தான் செல்ல வேண்டும் என்ற முடிவோடு அடுத்த திட்டத்தை தொடங்கினான் தேவா.



கார்காலம் வந்த உடன்

வண்ண மயில் தோகை விரித்தாட!

நெற்பயிரோ நெஞ்சை நிமிர்த்தி

வான்மழையை வரவேற்க காத்திருக்க!

அது போல் மனதில் நினைத்தது

நினைவில் நடந்து கொண்டிருக்க

நெஞ்சம் எல்லாம் நிறைந்து இருக்க

இவ்வுலகை வென்ற இறுமாப்போடு

அவன் சுற்றி கொண்டு இருக்க

சுற்றும் பூமி சிறிது நின்றால்

நடக்க போகும் நிகழ்வு என்ன ???????



உங்களை போல் நானும் அதை அறிய காத்திருக்கிறேன்
 
Top