• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் 22



நடக்க போகும் நிகழ்வுகள் எதுவாக இருந்தாலும் அதை தனக்கு ஏற்றவாறு மாற்றி கொள்பவன் புத்திசாலி.....இங்கு இருந்து செல்வதற்குள் ரோஜாவின் மனதில் தான் முழுவதுமாக நிறைந்திடவேண்டும் என நினைத்தான் தேவா .சூழ்நிலைகளும் அதற்கு ஏற்றார் போல் அமைய அவனின் மனம் சந்தோஷ கடலில் சதிராட்டம் போட்டது.

பாட்டியிடம் பேசிவிட்டு வந்த தேவா சிறிது நேரம் அமர்ந்தபடியே உறங்கியவன் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க வேகமாக எழுந்து திறக்க அங்கு பார்வதி நின்று கொண்டு இருந்தார்.

தேவாவை பார்த்ததும் சங்கடத்துடன் ...”.மாப்பிள்ளை நான் ரோஜா..நேரமாகிடுச்சு ...அதான் என தடுமாறியவர் மன்னிச்சுடுங்க மாப்பிள்ளை......அவ இன்னும் எழுந்திரிகலையா ...எத்தன முறை சொன்னாலும் புரிய மாட்டேங்குது அவளுக்கு...பாருங்க உங்களை எழுப்பி விட்டுட்டேன்” என ரோஜா எழுந்து வராமல் தேவா வந்ததால் அவர் தடுமாறி சங்கடத்துடன் சொல்ல

தேவாவோ ...”இப்போ எதுக்கு அத்தை தடுமாறிங்க....நானும் இந்த வீட்டு பையன் தான்.....நீங்க உங்க பொண்ணுகிட்ட எப்படி பேசுவிங்களோ...அதே மாதிரி என்கிட்டையும் சரளமா பேசுங்க ....எனக்கு அம்மா கிடையாது...உங்களை நான் அந்த இடத்துலதான் வச்சிருக்கேன்....உங்க மகனா என்னை நினைசுக்குங்க “என அவன் அவரது சங்கடத்தை போக்குவதற்காக உரிமையுடன் பேச பார்வதியோ “கண்டிப்பா மாப்பிள்ளை....நீங்க எங்க வீட்டு பையன்தான்....ஆனா நான் ஒன்னு பெத்து வச்சிருக்கனே” என அவர் ரோஜாவை பார்க்க

“ஹஹஹஹா ....இல்லை அத்தை .......ரொம்ப நேரம் கார்ல வந்ததால ரொம்ப களைப்பா இருக்கும்...அவ தூங்கட்டும்.....உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க நான் செய்யறேன்” என்றான்.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்...உங்களுக்குதான் காபி போட்ரதானு கேட்க வந்தேன்” என்றார் பார்வதி.

“சரி அத்தை போடுங்க...நான் கொஞ்சம் குளிக்க வேண்டும் ” என்றான்.

“குளியல் அறை பின்னாடி இருக்கு ....துண்டும் அங்க இருக்கு எடுத்துக்குங்க” என சொல்லிவிட்டு அவர் செல்ல அவனும் குளியல் அறை நோக்கி நடந்தான். .

அதுவரை அமைதியாக அவர்கள் பேசுவதை கேட்ட கொண்டிருந்த ரோஜா அவன் தன் தாயிடம் தன்மையாக பேசியது பிடித்து போக இவன் நிஜமாகதான் என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணி இருப்பானோ என ஒரு சந்தேகம் மனதில் தோன்ற உடனே அவளது மூளை அப்படி அவசரப்பட்டு முடிவு பண்ணிவிடாதே ரோஜா ....இவன் காரணம் இல்லாமல் ஏதும் செய்யமாட்டான் .... என அவளை குழப்பிவிட அய்யோ என மீண்டும் குப்புறபடுத்து தலயனையில் முகம் புதைத்து தனது உறக்கத்தை தொடர்ந்தாள்.

தேவா குளித்து கிளம்பி உள்ளே வர ரோஜா அப்பவும் உறங்கி கொண்டு இருக்க ....அவளை பார்த்தவன் “சாப்பிட்றது தூங்கறது இத மட்டுமே வாழ்க்கையிலே ஒரே குறிக்கோளா வச்சுட்டு இருக்கா...அடேய் தேவா ஜான்சி ராணி மாதிரி தைரியமான பொண்ண கல்யாணம் பண்ணும்னு நினைச்சுட்டு இருந்தியே ......இப்படி கும்பகர்ணியா உனக்கு மனைவியா வரணும்” என அவன் மேல் அக்கறை கொண்ட மனம் அவனை பார்த்து கேலி செய்ய

அவனுக்கு சிரிப்பு வர உறங்கி கொண்டிருந்த தனது மனம் கவர்ந்தவளின் முகத்தை பார்த்தவன் அதன் மென்மையும் குழந்தைதனமும் அவனது மனதை வசபடுத்த அவளின் அருகில் வந்தவன் அவளது தலையை மெதுவாக தடவிகொண்டே “கும்பகர்ணியா இருந்தாலும் என் மனதை குளிர்விக்கு குல்பி ஐஸ் இவள்தான் என சொன்னவன் அட சே என்ன இப்படி மொக்க கவிதை எல்லாம் வருது என தனக்குள் சொல்லி சிரித்து கொண்டவன் எப்படி இருந்த என்னை இப்படி மாத்திட்டியே அம்லு” என அவளை மனதிற்குள் செல்லம் கொஞ்சியபடி அங்கிருந்து நகர்ந்தான்.

மாலை நேரத்தில் சேகருடன் அவரின் கடைக்கு தேவா சென்றவிட அதற்கு பிறகு பார்வதியின் மிரட்டலில் அலறி அடித்து கொண்டு எழுந்தவள் பின்னர் அங்க இருப்பவர்களோடு சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்தாள் ரோஜா.

இரவு தேவா, சேகர் இருவரும் வீட்டிற்கு வந்ததும் அனைவரும் சேர்ந்து உணவு உண்ண ...தேவா செல்லும் வழியில் தான் பார்த்தவற்றை அவர்களிடம் சொல்லி அதற்கு விளக்கம் கேட்க கிராமத்து நடைமுறை தெரியாததால் சேகரும் மரகதமும் அவற்றை விளக்க இடையில் ரோஜா அதை கிண்டல் பண்ண அங்கு உணவோடு சந்தோசமும் நிறைந்து இருந்தது.

பின்னர் அனைவரும் அவர்கள் அறைக்கு செல்ல பார்வதி ரோஜாவை அழைத்து “ரோஜா இந்தா மாப்பிள்ளைக்கு பால் கொண்டு போ” என அவள் கையில் கொடுத்தார்....அவளோ “ஏம்மா அதை சாப்பிட்டு முடிச்ச உடனே இங்கே கொடுத்து இருந்திருக்கலாம் ...இதைவேற நான் கொண்டு போகனுமா” என சலித்தவாரே அவள் அதை வாங்க பார்வதியோ ஒரு நிமிடம் அதிர்ந்தவர் சட்டென்று தனது மகளின் தோளில் கைவைத்து அவளை முகம் பார்த்து “ரோஜா நீ சந்தோசமா இருக்க தான” என கேட்டார்.

ரோஜாவோ அவர் என்ன கேட்க வருகிறார் என புரிந்து கொள்ளாமல் .....”எப்படிம்மா சந்தோசமா இருக்க முடியும்... கவலையாதான் இருக்கேன்” என சொல்ல ....”என்னடி சொல்ற நீ “ என பதறி அவர் கேட்க “நீ தான் நான் வந்ததில இருந்து அந்த ரவாஉருண்டைய கண்ணுல காட்ட மாட்டேன்கிற” என அதுதான் அவளது பெரிய கவலையாக சொல்ல...பார்வதியோ நறநறவென பற்களை கடித்தவர் “உன்னை எல்லாம்” என முறைக்க

“பாருங்க இதுக்குதான் சொன்னேன்....நீ எப்பவும் சொர்ணக்கா மாதிரி திட்டிகிட்டே இரு...இப்படி திடிர்னு அன்னை தெரசாவ மாறி அன்பா பேசினா எனக்கு பயமா இருக்குல்ல” என அந்த நேரத்திலும் அவள் கவுண்டர் கொடுக்க

“மெதுவா பேசுடி.......மாப்பிளைக்கு கேக்க போகுது என பதறியவர் அய்யோ இவளை வச்சு மாப்பிள்ளை எப்படித்தான் சமாளிக்க போறாரோ” என தலையில் கை வைத்து அமர்ந்தார் பார்வதி .

ரோஜாவோ பாலை எடுத்து கொண்டு அறைக்குள் செல்வதற்குள் அவள் தேவாவை திட்டிய திட்டில் பால் தயிராக மாறாமல் இருந்தால்தான் அதிசியம்.வேகமாக உள்ளே சென்று மேஜையில் பாலை வைத்தவள் அவனிடம் திரும்பி “ஏன் சார் பால் வேணும்னா அங்கே குடிச்சுட்டு வந்து இருக்லாமல......இப்போ பாருங்க அங்க எங்க அம்மா அட்வைசே அள்ளி கொட்றாங்க ” என படபடவென பொரிய

தேவாவோ நடந்ததை எல்லாம் கேட்டு கொண்டு இருந்ததால் ஏதும் சொல்லாமல் அவளை பார்த்து சிரித்தான்.

“இப்போ எதுக்கு சிரிக்கிரிங்க என கேட்டுகொண்டே கட்டிலை சுற்றி வந்தவள் ..ஆமா நான் எங்க படுக்கிறது இப்போ” என அவனை பார்த்து கண்களை விரித்து கேட்க

அவனோ இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தவன் போல் “என்னை கேட்டால் என்றவன் இது உன் வீடு நீ தான் சொல்லணும்” என சொல்லிவிட்டு மெத்தையில் சாய்ந்து கொண்டான்.

“இல்ல இரண்டு பேர் எப்படி ஒரே மெத்தையில்” என சொல்லிகொண்டே அவன் முகத்தை பார்க்க

அவனது ரசனையான பார்வை அவளை ஏதோ செய்ய

“இவன் என்ன இப்படி பார்கிறான்...ஆஹா ரோஜா இப்படி வந்து சிக்கிட்டியே” என மனதிற்குள் சற்று தடுமாறியவள் ...

“இங்க பாருங்க ...நான் படுக்கணும் “என சொல்லிகொண்டே நிற்க

“படு” என சொல்லிவிட்டு அவன் அவளை மேலும் கீழுமாக பார்க்க

“இங்க பாருங்க சார்......எனக்கு...எனக்கு தனியா படுத்தா தான் தூக்கம் வரும்....அதுனால” என அவள் நிறுத்த

“சரி அப்போ நீ படு ...நான் வெளியே போய் படுத்துகிறேன்...யாராவது கேட்டா என் பொண்டாட்டி என்னை வெளியே படுக்க சொல்லிட்டா அப்டின்னு சொல்றேன் என அவன் சொல்லி விட்டு வேகமாக எழுந்தான்.

உடனே அவள் “என்ன நீங்க எதுக்கு இப்போ இப்படி எல்லாம் பேசறிங்க” என அவள் அழுவது போல் கேட்க

“எப்படி பேசறேன்...நீ தான சொன்ன” என அவன் திரும்ப சொல்ல

“இல்லை நீங்க அங்க உங்க வீட்ல இப்படி எல்லாம் பேசமாட்டீங்க ...இப்போ பொண்டாட்டி ...ஒரே கட்டில தான் படுக்கணும் அப்டின்னு எல்லாம் சொல்றிங்க” என அவள் அவனை குற்றம் சொன்னாள்..

“நான் ஒரே கட்டில படுக்கணும்னு சொல்லல ...நீ தான் சொல்ற ......நான் இதுலதான் படுப்பேன்.....உனக்கு படுக்கணும்னா கூட படுன்னு சொல்றேன்” என அவன் சொல்லிவிட்டு மீண்டும் மெத்தையில் சாய்ந்தான்.

“இங்க பாருங்க....இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம்” என அவள் அவனை பார்த்து கையை நீட்டி பேச

அதுவரை சிரித்துகொன்டே அவளை பார்த்து கொண்டு இருந்தவன் சட்டென்று முகம் மாற ...கண்கள் சிவக்க அவளை முறைத்து பார்த்தான்.

அவனது முகமாற்றம் அவளுக்கு பிதாமகனை நினைவு படுத்த அப்படியே அமைதியானவள்

“இல்லை எனக்கு கீழே படுத்தா தூக்கம் வராது அதான்” என சொல்லும்போதே வார்த்தை தடுமாற கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு நின்றது.

“அதுக்கு நான் ஒன்றும் செய்ய முடியாது ......என்னிடம் கை நீட்டி பேசுவது இதுவே முதலும் கடைசியாக இருக்கட்டும்......இனி இப்படி பேசாதே “என அவன் அழுத்தமான குரலில் சொல்ல அப்போது தான் ரோஜாவிற்கு அவனது கோபத்தின் காரணம் புரிந்தது.

சரி என அவள் தலையாட்டியவள் மறுபடியும் அப்படியே நிற்க ...”என்ன அப்படியே நின்று கொண்டு இருக்க...இது உன் வீடு......இங்க இருக்கிறத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்ன புரிஞ்சுதா வா வந்து படு” என அதட்டலாக சொல்லிவிட்டு அவன் திரும்பி படுக்க அவளோ வேகமாக வந்து கட்டிலின் மறுபுறத்தில் அமர்ந்தாள்.

சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் “என் வீட்டில் வந்து என்னையே அதிகாரம் பண்றான்.....எல்லாம் இந்த பாட்டியினால வந்தது.பொய் பேசி என்ன வரவழைச்சு இப்படி பண்ணுது என மனதிற்குள் எல்லாரையும் திட்டியவள் ...பாரு இங்க நான் புலம்பிட்டு இருக்கேன் இவன் தூங்கிட்டு இருக்கான்” என கோபமாக அவனை திரும்பி பார்த்தவள்

இரவு உடை இல்லாமல் பனியனும் லுங்கியுடன் அவன் படுத்திருக்க ...அவனது தோள்பட்டை முகத்தின் ஒரு பகுதி எல்லாம் வேர்வை வலிந்து ஓட ...அப்போது அவனது கையில் ஒரு கொசு அமர அதை தட்டிவிட்டு அவன் மறுபடியும் புரண்டு படுக்க பார்த்த ரோஜா ஒரு நிமிடம் அவர்கள் வீட்டில் ஏசி அறையில் அவள் படுத்து உறங்கியதை நினைத்து பார்த்தவள் எப்படி இருக்க வேண்டியவன் இன்று இங்கு வந்து இப்படி படுத்து உறங்குகிறான். அதும் அவனது அறை மிகவும் பெரியது...அந்த அறையின் கால் பகுதி கூட இது இல்லை...இருந்தும் அவன் முகம் சுளிக்காமல் இருப்பதை பார்த்த அவள் மனம் மெல்ல அவனின் பால் சாய அவனை பார்த்து கொண்டே அப்படியே அமர்ந்திருந்தாள்.

வியர்வையினால் ஒரே இடத்தில் படுக்க முடியாமல் புரண்டு படுத்தவன் அவள் அவனையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்தவன் ....”என்ன வேணும் ரோஜா ...இன்னும் நீ தூங்கலையா” என கேட்டான்.

அவன் சாதரணமாக கேட்டது அவளுக்கு மிரட்டுவது போல் தோன்ற ..”இதோ படுத்தறேன்” என்றவள் சுற்றிலும் பார்த்தவள் வேகமாக தனது தலையனைய எடுத்து நடுவில் வைக்க அவன் அவளை முறைக்க

அவளோ கெஞ்சுவது போல் அவனை பார்க்க

“சரி...சரி......நான் ஏதும் சொல்லல ....நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ” என சொல்லிவிட்டு கண்களை மூடி கொண்டான்.

“ஹப்பா” என பெருமூச்சு விட்டவள் பெட்ஷீட் தலையணை எல்லாம் நடுவில் தடுப்பானயாக வைத்து அதற்க்கு பிறகே படுத்தாள்.

அவன் திரும்பி அவளை பார்க்க

“இல்லை அது வந்து” என அவள் இழுக்க அவன் சிரித்து கொண்டே குட் நைட் என சொல்லிவிட்டு மறுபடியும் திரும்பி படுத்து கொண்டான்.

அதற்கு பிறகும் அவனுக்கும் அவளுக்கும் இடையில் தலையணை பெட்சீட் எல்லாம் தடுப்பானையாக வைத்து அவள் உறங்க...விடியும் நேரத்தில் திரும்பி படுக்க நினைத்தவன் முடியாமல் எதோ அழுத்த கண்விழித்தவன் கழுத்தின் ஓரம் ஏதோ குறுகுறுக்க குனிந்து பார்த்தவன் தடுப்பானை தரையில் கிடக்க ரோஜாவின் முகம் அவன் கழுத்தின் கீழ் இருக்க அவள் கால்கள் அவன் கால் மேல் கிடக்க கைகள் அவன் நெஞ்சின் மேல் இருக்க அவனை அணைத்தபடி அவள் உறங்கி கொண்டு இருந்தாள்.


பார்த்த உடன் அவனது இதயம் சற்று நின்று பின் துடித்தது......சிறுகுழந்தை போல் அவள் தன்னை அணைத்தவாறு படுத்திருக்க அவளது மூச்சுகாற்று அவனது மார்பில் பட மெல்ல அவளின் கை அருகில் இருந்து தனது கையை எடுக்க முற்பட அவளோ ம்ம்ம் என அனத்திகொண்டே எதோ தலையணையை இறுக்குவது போல் அவனிடம் ஒண்ட அந்த நொடி தேவா தன்னை மறந்து அவளின் நெற்றியில் மென்மையான தனது முதல் அச்சாரத்தை பதித்தான். அந்த உணர்வு அவனது உயிர் அடிவரை செல்லஆசையோடு அவளை இறுக்கி அணைக்க தனது கைகளை தூக்கியவன் அப்போது என்று அவனது அலைபேசி அழைக்க அதை வெறியோடு முறைத்தவன் ச்சே என சலித்தபடி அவள் மேல் இருந்த கையை எடுத்தான்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அவளது நெருக்கம் அவனுக்கு கிறக்கத்தை ஏற்படுத்த ......அவளை மீண்டும் மெல்ல அணைத்தவன் அவள் சட்டென்று புரள அப்போது அவளது இதழ் அவனது மார்பை உரச தேவாவோ தன் நிலை மறந்து அவளை வேகமாக மறுபடியும் அணைக்க முற்பட விடாமல் அடித்து கொண்டு இருந்த அலைபேசி அவனது எண்ணத்தில் மண்ணை போட்டது.

மீண்டும் மீண்டும் அலைபேசி அடிக்க எதாவது முக்கியமான தகவலாக இருக்குமோ என அவனது மூளை எச்சரிக்க பண்ண ரோஜாவிடம் இருந்து கவனம் அலைபேசிக்கு சென்றது.அதை எடுக்க வேண்டுமானால் ரோஜாவை அவன் நகர்த்தவேண்டும்...அதற்கு அவனது காதல் மனம் இடம் தர மறுத்தது......அச்சோ இப்படி கொல்றியேடி என் அழகான ராட்சஸியே என மனதிற்குள் அவளை செல்லமாய் திட்டியவன் மெதுவாக நகர அவனது அசைவில் கண் விழித்தவள் ...”அம்மா காபி “என முனகி கொண்டே மீண்டும் அவனிடம் ஒன்டியவள் சட்டென்று எதோ தோன்ற வேகமாக தலையை தூக்க அது அவனது முகத்தில் இடிக்க அரண்டு அவனை பார்த்தவள் பின்னர் தன் படுத்து இருந்த கோலத்தை பார்த்து “ என்ன பண்றிங்க நீங்க ...இப்போ எதுக்கு என்கிட்ட வந்திங்க “என வேகமாக கேட்டாள்.

அவனோ ஏதும் பேசாமல் தன் கால மேல் அவள் கால்களை நகர்த்தாமல் இருப்பதை பார்த்து கொண்டே அவளை பார்க்க

வேகமாக காலை எடுத்தவள் எழுந்து நின்று “சரி சரி நான் தான் வந்தேன்...நீங்களாவது தள்ளி படுத்து இருக்கலாம்ல “என் ஆரம்பித்த வேகம் குறைந்து பேச பேச குரல் தேய

அவனோ சிரித்து கொண்டே அவள் அருகில் வந்தவன் “எதுக்கு தள்ளி படுக்கணும் அம்லு......ம்ம்ம்ம் நான் உன் அத்தான் தான....உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்....அதும் நீயே இப்படி கிட்ட வரும்போது நான் ஏன் தள்ளி படுக்கணும்” என வாய் பேச புருவங்கள் அதற்க்கு ஏற்றார் போல் ஏறி இறங்க அவளோ என்ன பதில் சொல்வது என தெரியாமல் முழித்தாள்.

அவனது அருகாமையும் உரிமையான பேச்சும் அவளை மௌனமாக்கியது. என்னடா இரவு திட்டினான்...இப்போ இப்படி பேசறான் என குழம்பியவள் “நான் போறேன்” என சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து அவள் நகர சிரித்துகொண்டே நல்ல நேரத்தில் நாராசமாய் ஒலித்த அலைபேசியை எடுத்தான் தேவா.

அலைபேசியை பார்க்க அதில் நாதன் நம்பர் இருக்க “எனக்கு எதிரி வேற யாரும் வேண்டாம்...நீ ஒருத்தன் போதும்டா” என திட்டிகொண்டே ஆன் செய்தது காதில் வைத்தவன் ஹலோ என சொல்ல

“டேய் மச்சான் ...எப்படி இருக்கடா .....மாமியார் வீட்டு விருந்து எல்லாம் எப்படி.....அப்புறம் மச்சான் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டேன்........ பொண்ணுங்க எப்பவும் அவங்க பிறந்த வீட்ல ரொம்ப இயல்பா இருப்பாங்க ...அப்புறம் அந்த ஆல் ரவுண்டர் பாட்டியும் உனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க அதுனால நீ என்ன பண்ற .... ரோஜா கிட்ட நெருங்கி பழகிறதுக்கு இதான் உனக்கு நல்ல சான்ஸ்..... அதை மிஸ் பண்ணிடாத ...அதுக்குதாண்டா இந்த நேரத்துல கூப்பிட்டேன்” என அவன் முக்கியமான விஷயம் போல் சொல்ல

தேவா பல்லை கடிப்பது அங்கு நாதனுக்கு கேட்க

“என்ன மச்சான் காலிலே முறுக்கு சாப்பிட்டுகிட்டு இருக்கியா...எதோ கடிக்கிற மாதிரி சத்தம் கேட்குது...காலையிலே காபிக்கு சைடு டிஷ் முறுக்கா.. என்ன கொடுமைடா இது ” என அவனை கேலி பண்ண .

“மவனே நீ மட்டும் இப்போ என் கையில கிடச்ச தொலைஞ்ச “ என தேவா கர்ஜிக்க

“ஹலோ ..ஹலோ ...மச்சான் நீ பேசறது ஏதும் எனக்கு கேட்கலை ...சிக்னல் வீக்கா இருக்குனு நினைக்கிறேன் ......சரிடா நான் வச்சிடறேன் என சொல்லிவிட்டு வேகமாக அலைபேசியை அனைத்த நாதன் ...நல்லவேளை தப்பிச்சோம்.......காபிக்கு முறுக்கா அதும் காலையிலே...இந்த மாதிரி ஒரு காமிநேஷன நான் எந்த நாட்டுலையும் பார்த்து இல்லேயே” என யோசனை செய்து கொண்டே தனது வாக்கிங் பணிய தொடர்ந்தான்.

தேவாவோ கோபத்தில் இருந்தவன் அவனது சமாளிப்பில் சிரிப்பு வர சிரித்து கொண்டே மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தான்.....ரோஜாவின் நெருக்கம் அவனது மனதில் ஆசை தீயை மூட்டிவிட விரைவில் அவளை தன்னுடையவளாக ஆக்கி கொள்ளவேண்டும் என்ற வேட்கை அவன் மனதில் கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் மேலும் அது இம்சிக்க அந்த அறையை விட்டு வெளியே வந்தான் தேவா .

அங்கு சேகரும் பாட்டியும் அமர்ந்திருந்தனர். தேவாவை பார்த்த உடன் “வாங்க மாப்பிள்ளை.......காப்பி சாப்பட்ரிங்களா என்றவர் ரோஜா மாப்பிளைக்கு காபி எடுத்திட்டு வாம்மா” என சொல்லிவிட்டு அவனிடம் அன்றைய பேப்பரை கொடுத்தார்.

காபி எடுத்து வந்த வந்த ரோஜா அவன் முகத்தை பார்க்காமல் அவனிடம் கொடுக்க அவனோ அதை கண்டு கொள்ளாமல் செய்திதாளில் கவனமாக இருக்க சில நொடிகள் நின்றவள் பின்னர் ம்ம்ம் என அனத்த அப்பவும் அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை..

அதற்குள் உள்ளே இருந்து வெளியே வந்த பார்வதி ...”ஏண்டி காபிய எதுக்கு வச்சிகிட்டே நிக்கிற...எடுத்துக்குங்க அத்தானு சொன்னாதான அவருக்கு தெரியும்” என சொல்லி அவனது நெஞ்சில் பால் வார்க்க

அப்போது தான் பார்ப்பது அவன் நிமிர்ந்து பார்க்க

ரோஜா அவனை பார்வையாள் எரித்தபடி நின்று கொண்டு இருந்தாள்.

அருகில் இருந்த சேகர் “மாப்பிள்ளை இன்னைக்கு நீங்க ப்ரியா இருந்தா நம்ம குலதெய்வம் கோயிலுக்கு போகணும்...போயிட்டு வந்திடலாங்களா” என கேட்டார்.

“எனக்கு எந்த வேலையும் இல்லை மாமா ...நீங்க எப்ப கூப்பிட்டாலும் நான் ரெடி......ரோஜா தான் இங்க வந்ததுல இருந்து தனியா எங்கும் போக முடியலைன்னு சொல்லிட்டு இருந்தாள் ....அவளையும் கேட்டுக்குங்க” என அவளை கோர்த்து விட

அடபாவி நான் எப்படா சொன்னேன் என அதிர்ந்தவள் ..”ஹிஹிஹி இல்லப்பா அவருதான் அவரோட இனம் எல்லாம் அச்சோ இங்க மாடு மேய்க்கிறது எல்லாம் பார்க்கணும்னு சொன்னாரு ...அதான் கூட்டிட்டு போறேன்னு சொன்னேன்” என அவள் பதிலடி கொடுக்க

தேவாவோ சிரிர்ப்பை அடக்கி கொண்டு “ரோஜா கூட போறதுனா எங்க இருந்தாலும் எனக்கு சரிதான் மாமா” என அவன் பதிலுக்கு சொல்ல

அவர்களின் நக்கலை புரிந்து கொள்ளாமல் “பாருங்க மாப்பிள்ளை நம்ம பொண்ணுமேல எவளோ பாசமா இருக்கார்னு” என பார்வதி சேகரிடம் சொல்லி சந்தோசப்பட இதை கேட்ட ரோஜா பார்வதியை முறைத்தவாரே அங்கிருந்து நகர்ந்தாள்.

வெளியே சென்றவள் “இந்த ராகுகாலம் தன்னோட வேலையை ஆரம்பிச்சுட்டான்...இவர் மனசில என்ன நினச்சுட்டு இருக்கார்...ரோஜா உன்னை பத்தி இன்னும் அவருக்கு தெரியலை......இருக்கட்டும் என்கிட்டே தனியா சிக்கட்டும் ...அப்போ இருக்கு கச்சேரி” என மனதிற்குள் சூளுரைத்தவள் அதற்குள் பார்வதி அழைக்கும் சத்தம் கேட்க “முதல்ல இந்த சொர்ணாக்காவ அடக்கனும்” என சொல்லிகொண்டே உள்ளே சென்றாள்.

கிராமத்தின் மண் வாசனையோடு அந்த கோவில் ஊரின் ஒத்துகுபுறத்தில் அமைந்திருந்தது. அழகிய நீரோடை அருகில் இருக்க அதை தொடர்ந்து ஒரு தோட்டம் இருந்தது அந்த இடமே ரம்மியமாக காட்சி தந்து. ரசித்து கொண்டே அவன் அமர்ந்திருக்க பொங்கல் வைப்பதற்காக அருகில் இருக்கும் ஓடையில் ரோஜா தண்ணீர் எடுக்க சென்றாள்.

நீல வண்ணத்தில் அழகிய காட்டன் புடவையில் ஆம் கோயிலுக்கு கண்டிப்பாக புடவை கட்ட வேண்டும் என பார்வதி சொல்லி கட்டி இருந்தாள் ...தேவாவும் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து இருந்தான்.அன்னம் போல் அவனது மனையாள் நடந்து வர அதை அவனது விழிகள் ரசித்து கொண்டு இருக்க...அப்போது அங்கு வந்த சிறு பெண் “அக்கா அந்த ஓடைகிட்ட ஒரு பாம்பு பார்த்தேன் ...நீங்கா பார்த்து போங்க” என போகிறபோக்கில் சொல்லிவிட்டு போக அவளோ அரண்டு திரும்பினாள்.

நடந்து சென்றவள் திடிரென்று மிரண்டு ஓடி வர வேகமாக எழுந்து அவள் அருகில் சென்றவன் “என்ன ரோஜா ...எதுக்கு இப்படி ஓடி வர” என அவளை நிறுத்து கேட்டான்.

“இல்லை.. அங்க எதோ பாம்பு” என அவள் சொல்ல

“ அதுபாட்டுக்கு அது இருக்குது ...நீ போய் தண்ணீர் எடுக்க வேண்டியது தான என சொன்னவன் சரி வா” என அவளை அழைத்து கொண்டு ஓடைக்கு சென்றான்.

அப்போது அங்கு இரண்டு பெண்கள் தண்ணீர் எடுத்து கொண்டு இருக்க இவளை பார்த்ததும் “மரகதம்மா பேத்தி ரோசா தான நீ...உனக்கு கண்ணாலம் ஆயிடுச்சுன்னு சொன்னாக ...பட்டணத்து மாப்பிள்ளையாம் என்றவர் அருகில் நிற்கும் தேவாவை பார்த்து ....இதான் உன்ற வீட்டுகாரரா “என கேட்டவாறே அவனை ஏற இறங்க பார்க்க ரோஜாவா “ஆமா மதினி” என சொன்னவள் அவர்களின் பார்வை அவளுக்கு எரிச்சலை ஏற்படுத்த எப்படி பார்க்கிறாங்க பாரு என மனதில் அவர்களை திட்டியவள் திரும்பி அவனை பார்க்க

அவனோ அந்த பெண்களை பார்த்து சிரித்து கொண்டு நின்று கொண்டு இருந்தான்.

“என்ன சிரிப்பு வேண்டி இருக்குது...இங்க என்ன ஜோக்கா சொன்னாங்க..இப்படி பல்லை காட்டிட்டு நிக்கிரிங்க” என அவன் அருகில் சென்று கடுப்புடன் கேட்டாள்.

அவனோ புரியாமல்”இல்ல ரோஜா ...உங்க சொந்தகாரங்க அதான்” என அவன் தகுமானம் சொல்ல

“அப்படின்னு நான் சொன்னனா என மீண்டும் கோபமாக சொன்னவள் ..இங்க பொம்பளைங்க இருக்கிற இடத்துல உங்களுக்கு என்ன வேலை...முதல்ல கிளம்புங்க...என்னமோ ஆம்பளைங்களே பார்க்காதவங்க மாதிரி பார்த்திட்டு நிக்கிறாங்க” என அவர்களை பார்த்து முனகியவள் மீண்டும் அவனிடம் திரும்ப “இன்னும் என்ன பண்றிங்க “ என ஒரு அதட்டல் போட தேவாவே ஒரு நிமிடம் அசந்து விட்டான். “என்ன மிரட்டு மிரட்றா” என புலம்பியவாறே திரும்பி நடந்தான்.

முதலில் அவள் என்ன சொல்கிறாள் என புரியாமல் முழித்த தேவா பின்னர் அவள் அந்த பெண்களை பார்த்து முனகியதும் விஷயம் புரிந்து ஓ அம்மணிக்கு இதான் கோபாமா என மனதில் நினைத்தவன் என் செல்ல அம்லு நான் நினச்சது சீக்கிரம் நடந்திடும் என சொல்லிகொண்டே மேலே வந்தவன்

“ ரோஜா அங்க பாம்பு இருக்குனு சொன்னாக பத்திரம்” என சத்தமாக சொல்ல

“என்னது பாம்பாஆஆஆஆஆ” என வார்த்தை முடியும் முன்பே மூன்று பெண்களும் அவன் அருகில் நின்றனர்.

அவனுக்கே சிரிப்பு வர ....”இப்போ இல்லை.....அந்த பொண்ணு சொல்லிட்டு போச்சு அதை சொன்னேன் என்றவன் நீங்க போங்க” என்றான்.

மறுபடியும் கீழே வந்தவர்கள் ...ஒருவரை ஒருவர் பார்த்தவாறே” ஏண்டி ரோஜா உன் அத்தானை கூப்பிட்டு தண்ணீர் எடுத்து தர சொல்லேன்...நம்ம குடத்தை உள்ள விட்டு அதுக்குள்ள் பாம்பு வந்திடுசுனா” என ஒரு பெண் அவளை பயமுறுத்த

அவளோ மிரண்டு போய் “ம்ம்ம்ம் சரி சரி என்றவள் சட்டென்று அப்போ என் அத்தானை மட்டும் பாம்புகடிச்சுதுனா...நான் மாட்டேன்” என பின் வாங்க

“அச்சோ ரோஜா அவரு சட்டுன்னு தூக்கி போட்ருவாரு...நம்மதான் பயந்து அதிலே விழுந்திடுவோம்” என ஏதோ சொல்லி அவளை சம்மதிக்க வைத்தனர்.

“கூப்பிடு ரோஜா” என அவர்கள் நச்சரிக்க

தேவாவோ அலைபேசியில் ஏதோ பார்த்துகொண்டே மேலே ஓரமாக நின்று கொண்டு இருந்தான்...

ம்ம்ம் என்றவள் “சார்..சார்” என அழைக்க

“என்னது “என அப் பெண்கள் கேட்க

ஹிஹிஹி என வழிந்தவள் “அத்தான்..அத்தான்” என அழைக்க தேவாவோ திரும்பாமல் நிற்க

அச்சோ “அத்தான் உங்களைதான்” என அவள் சத்தமாக அழைத்ததும் திரும்பி பார்த்தவன் ....

“என்னய்யா கூப்பிட்ட என கேட்டவன் அத்தானு என்னையா கூப்பிட்ட” என மறுபடியும் கேட்டவன்

அவள் ஆமாம் என்றதும் உற்சாகத்தில் ஓடி வந்தவன் சொல்லு “அம்லு....என்ன வேணும் உனக்கு” என அவளை நெருங்கி நின்றான்.

அப்பெண்களோ “ஹப்பா பொண்டாட்டி கூப்பிட்ட உடனே எப்படி ஓடிவறார் பாரு உன் வீட்டுகாறாரு....எவ்ளோ பாசம்...என் புருசனும் தான் இருக்காரே...கூப்பிட கூப்பிட பின்னாடியே போவாரு” என சொல்லி தனது வயித்தரிச்சலை தீர்த்துக்கொள்ள ரோஜாவோ சந்தோசத்தில் “கொஞ்சம் தண்ணீர் எடுத்து கொடுங்க அத்தான்” என கொஞ்சுவது போல் சொல்ல தேவவோ சிறகில்லாமல் வானில் பறந்தான்.

அவர்களை வெருபேத்த அப்படி பேசிய ரோஜா அவர்கள் சென்றதும் வேகமாக அவனிடம் குடத்தை வாங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

பின்னர் பொங்கல் வைக்கும்போதும் ரோஜா தான் வைக்க வேண்டும் என மரகதம் சொல்ல பார்வதி தீபம் போட கோவிலுக்குள் சென்றுவிட தேவாவும் ரோஜாவும் இனைந்ததே பொங்கல் வைத்தனர். புடவையை இழுத்து சொருகிக்கொண்டு அவள் அடுப்பில் வேலை செய்வதை அருகில் இருந்து ரசித்து கொண்டு அவ்வெப்போது அவளுக்கு வேர்வை துடைக்க துண்டு கொடுத்து அவன் அன்பாக கவனித்து கொள்ள அதை பார்த்து அருகில் இருந்தவர்கள் “இது போல புருசன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும் ரோசா’ என அவளை புகழ ரோஜாவின் மனதில் மெல்லிய சாரல் வந்து போனது.

அதற்க்கு ஏற்றாற்போல் மற்றவர்களுக்கு அவர்கள் கேட்கும் பொழுது எல்லாம் கற்களை கொண்டுவர விறகு எடுத்து வர என அவன் அவர்களோடு ஒன்றாக சிரித்து பேசிகொண்டே இணைந்து வேலை செய்தததை பார்த்தவள்...நீதிமன்றத்தில் அவனை பார்த்ததும் அனைவரும் அவனுக்கு கொடுத்த மரியாதை நினவு வர .....அவனா இவன் என ஆச்சரியத்தோடு பார்த்தவள் ......... அவளை அறியாமலே அவன் தன்னவன் என்ற எண்ணம் மனதில் வேரூன்ற ஆரம்பித்தது.

பொங்கல் வைத்து சாமி கும்பிடும்போது கணவன் மனைவி இணைந்து நிற்க சொல்ல ரோஜாவும் தேவாவும் சேர்ந்து நிற்க அனைவரின் கண்களும் அவர்களையே மொய்க்க அர்ச்சனை செய்த ஐயர் “முதலில் இவர்களுக்கு சுற்றி போடுங்க ...அழகான ஜோடி பொருத்தம்...என் கண்ணே பட்டிடுச்சு என சொல்லி ...இவங்க இரண்டு பேரும் பல வருடங்கள் சந்தோசமாய் சௌபாக்கியதோட வாழனும்” என வாழ்த்து சொல்ல கேட்ட அனைவரின் மனமும் நிறைந்து போனது.



அவர்கள் கோவிலை விட்டு புறப்படும்போது ஒரு வயதான மூதாட்டி தேவாவிடம் வந்தவர் “தம்பி இந்த ரோசா பொண்ணு பயங்கர வாலு...ஆனா ரொம்ப நல்ல பொண்ணு...இவ மனசுக்கு ஏத்தமாதிரி மாப்பிள்ளை அமையனுமேனு நான் கவலை பட்டுகிட்டு இருந்தேன்......இப்போ உங்களை பார்த்த உடனே எனக்கு அந்த கவலை போய்டுச்சு......எங்க பொண்ணை எங்களைவிட நீங்க நல்ல பார்த்துகுவிங்க அப்படிங்கிற நம்பிக்கை எங்களுக்கு வந்திடுச்சு....அவங்க தாத்தா எத்தன பேருக்கு எவ்ளோ நல்லது செஞ்சு இருக்கார்...அவங்க அப்பாவும் அப்படிதான் அந்த புண்ணியம் தான் ரோசா .....உனக்கு இப்படி ஒரு தங்கமான புருஷன் கிடச்சிருக்கார் “என மனதார வாழ்த்த அனைவரின் கண்களிலும் கண்ணீர் நிரைந்து இருந்தது.

திரும்ப வரும் வழயில் யாரும் பேசவில்லை...அமைதியாக இருக்க தேவா தான் முதலில் அதை கலைத்தான்.

“மாமா இன்னும் வீட்டிற்கு எவளோ தூரம் போகணும்” என கேட்க

சேகரோ “பக்கம் தான் மாப்பிள்ளை...நம்ம தோட்டத்துக்கு போயிட்டு வீட்டிற்கு போலாமே ...நீங்களும் இன்னும் பார்த்தது இல்லை ...வாங்க போயிட்டு போகலாம்” என்றார்.சரி என்றவன் அவர்களது தோட்டத்தில் இறங்க ரோஜாவின் முகமோ சிந்தனையிலே இருந்தது...அதை கவனித்த தேவா மரகதத்திடம் ஏதோ சொல்ல அவரோ சேகரிடம் நம்ம வீட்டிற்கு போலாம் சேகர்.....மாப்பிளையும் ரோஜாவும் பார்த்திட்டு வரட்டும்...எனக்கு ரொம்ப களைப்பா இருக்கு என்றவர் ரோஜா நாங்கள் போயிட்டு காரை அனுப்பி வைக்கிறோம்” என சொல்லிவிட்டு ரோஜாவின் பதிலை எதிர்பார்க்காமல் கிளம்பினர்.

அவர்கள் சென்றதும் இருவரும் சிறிது நேரம் அமைதியாக நடந்தவர்கள் ...”என்ன ரோஜா யோசனை” என்றான் தேவா.

“ஒன்றுமில்லை” என்றவள் ....”.உங்களுக்கு இளநீர் வேணுமா?” என்றாள்.

“ஹப்பா இப்பவாவது கேட்டியே நானும் ஒவ்வொறு மரமா பார்த்திட்டே வரேன்...நீ கேட்பேன்னு நினச்சேன்.....கேட்கவே இல்லை” என கிண்டலாக சொல்ல

உடனே ஆளை கூப்பிட்டு அவனுக்கு இளநீர் வெட்டி கொடுத்தவள் பின்னர் அவன் எதோ சந்தேகமா கேட்க அதற்கு அவள் பதில் சொல்ல அப்படியே அவளது மனநிலையை இயல்புநிலைக்கு மாற்றினான் தேவா.

பேசிகொண்டே வந்தவர்கள் அங்கு பம்புசெட் இருக்க அப்போது மோட்டாரில் இருந்து தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அதை பார்த்ததும் ரோஜா நீங்க இதுல எல்லாம் குளிச்சு இருக்கீங்களா ....சூப்பரா இருக்கும் என்றவள் வாங்க” என அவனை அழைத்து சென்றவள்

அவன் கொஞ்சம் தயங்க

“அச்சோ இதுக்கு எதுக்கு பயப்பட்ரிங்க.....தொட்டி பெருசா இருக்கு அவ்ளோதான்.....ஏதும் ஆகிடாது” என சொல்லிகொண்டே அவள் உற்சாகமாக உள்ளே இறங்கினாள்.

“அவனோ வெளி இடத்தில் எப்படி குளிப்பது என தயங்கினான்...அதை அவள் தவறாக புரிந்து கொண்டு பெரிய மனுசி போல் அவனுக்கு சொல்லி தருவது போல் அவளே உள்ள இறங்க தேவாவும் சிரித்துகொன்டே அவள் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.. உள்ளே இறங்கியவள் உடல் முழுவது நனைய அவள் கட்டி இருந்த மெலிதான காட்டன் புடவை அவள் அழகை எடுத்து காட்ட பார்த்தவன் மனமோ பஞ்சில்லாமல் பற்றிக்கொண்டது......ஆசைத்தீயில் அவன் வெந்து கொண்டிருக்க சிறிது நேரம் தண்ணீருக்குள் குதித்து கொண்டு இருந்தவள் அவன் அவளையே பார்த்து கொண்டிருப்பதை பார்த்து



“உங்களுக்கும் ஆசையா இருந்தா உள்ள வாங்க...சும்மா பயபடாம வாங்க...அதான் நான் இருக்கேன்ல” என தைரியம் சொல்வதை போல் அவனை இழுத்து உள்ளே இறக்கிவிட தள்ளி நின்றபோதே தவித்து கொண்டு இருந்தவன் அருகில் அவளை பார்த்தது நீரில் நனைந்திருந்த அவள் முகத்தில் நீர் துவலைகள் சொட்டு சொட்டாக விழ இடுப்பளவு தண்ணீரில் அவள் அமர்ந்து இருந்ததால் கழுத்தளவு நீர் இருக்க அவனது ககைளை பிடித்து அவள் இழுக்கவும் அந்த கைகள் அவள் உடம்பில் படகூடாத இடத்தில் பட அந்த நொடியில் தேவா தன வசமிழந்து வேகமாக அவளை இறுக்கி அணைக்க ஒரு நிமிடம் அவளின் உடலில் அனைத்து இயக்கங்களும் நின்றுவிட” என் அம்லு” என காதலுடன் சொல்லியபடியே அவன் அவள் கழுத்தில் முகம் புதைக்க “அய்யோ என்ன இது” என வேகமாக அவனை பிடித்து தள்ளிவிட்டு வெளியே எட்டி குதித்தவள் “என்ன பண்றிங்க நீங்க”....என நடுங்கியபடி கோபமாக கேட்டாள்.

ஆசையோடு அணைக்கும்போது அவள் தட்டி விட்டு சென்றதில் ஆத்திரம் வர ...”என்னடி இப்போ எதுக்கு இப்படி நடுங்கிற......நான் என்ன செய்ய கூடாத தப்பா செஞ்சேன்” என கேட்டு கொண்டே நீரில் இருந்து வெளியே வந்தான்.

அவளோ “என்ன சொல்றிங்க நீங்க நீங்க செஞ்சது தப்புன்னு உங்களுக்கு தெரியாது “ என வேகமாக கேட்டாள்.

“என்னடி தப்பு...என்ன தப்பு...என் பொண்டாட்டிதான அணைச்சேன் ...இதுல என்ன தப்பு “என கோபமாக பேசியவன் ...வேண்டாம் ரோஜா என்னை பற்றி உனக்கு தெரியும் ...... பேசி எனது கோபத்தை அதிகபடுத்தாதே என எச்சரித்தான்.

அதை கண்டதும் கண்களில் இருந்து கண்ணீர் அருவி போல் கொட்ட ...ஈரத்தில் நனைந்த உடல் சிலுசிலுவென அடிக்கும் காற்றில் வெடவெடக்க கைகளை இறுக்கமாக கட்டி கொண்டு உதடுகள் தந்தி அடிக்க நின்றவள் ......”இதுக்குதான் சொன்னேன்” என வார்த்தை முடிக்கும்போதே அழுகை வர

அவளது நிலை அவனுக்கு சற்று நிதானத்தை கொடுக்க அவள் அருகில் வந்தவன் “அம்லு இங்க பாரு என அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன் என்னை உனக்கு பிடிச்சு இருக்குதுதான” என அவள் கண்களை பார்த்து கேட்க

அன்று நடந்த நிகழ்ச்சின் மூலம் ஓரளவு அவள் அவன் மீது நம்பிக்கை வர அவள் ஆம் என்று தலை ஆட்டினாள்.

“அப்புறம் எதுக்கு இப்படி பயபட்ற” என்று கேட்டான்.

இல்லை அது வந்து சார் என அவள் முடிக்கும் முன்னரே அவள் இதழை அவன் சிறை செய்ய

அவள் அதிர்ச்சியில் சிலையாக நிற்க

சில நிமிடம் அப்படியே நின்றவர்கள் பின்னர் அவனே விடுவித்து இனி சார்னு சொன்ன இதான் உனக்கு தண்டனை....எந்த இடம் எல்லாம் நான் பார்க்க மாட்டேன்...புரியுதா...அத்தானு மட்டும் தான் கூப்பிடனும் என அவளை பார்த்த மிரட்டலாக சொல்ல

அவளோ ஏதும் சொல்லாமல் தலைஆட்ட

அவளை அருகில் இழுத்து தன்னோடு மீண்டும் அவன் அணைக்க அவள் இருந்த மனநிலை...அவனது மிரட்டல் அவளது மூளை செயல திறனை நிறுத்தி வைத்திருக்க அவன் சுற்றிவிட்டால் ஆடும் பொம்மை போல் நின்று கொண்டு இருந்தாள் ரோஜா.

அவனது அணைப்பில் அவளது இதயம் வேகமாக துடிக்க ..அவன் அதை உணர

அவளிடம் மெதுவாக “அம்லு நான் சொல்றது உனக்கு புரியும்னு நினைக்கிறன்....நீ இன்னும் சின்ன குழந்தை கிடையாது.......நீ என்னோட உயிர்டா......உன்னை எனக்கும் மேல நான் நேசிக்கிறேன்.......இந்த ஜென்மத்தில இல்லை எல்லா ஜென்மத்திலையும் நீ தான் எனக்கு மனைவியா வரணும்.........உன்னை நான் அந்த அளவுக்கு நான் நேசிக்கிறேன்...இது உனக்கு புரியலையா .......நான் இது வரை இப்படி பேசினதை இல்லை அம்லு....உன்னை பார்த்தாவே நான் பைத்தியம் ஆயிடறேன்.....என்னை புரிஞ்சுகோ அம்லு...நீ என்னை விட்டு விலக விலக ஆசை இன்னும் அதிகமாகுது “ என தன் மனதின் காதலை அவன் வார்த்தையில் வெளிபடுத்த ஏற்கனவே அவன் பால் சாய்ந்து இருந்த மனம் அவனது அன்பும் அணைப்பும் அவள் உயிர் வரை பாய ......

தன்னை அறியாமல் அவள் சரி என்று தலை ஆட்ட அவனோ அவளது உச்சந்தலையில் ஒரு முத்தொடு அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் ..”ஹப்பா அம்லு நீ இப்படி இருந்து இன்னிக்குதான் பார்கிறேன்...எப்படி பத்து நிமிடம் பேசாம இருக்க” என அவன் ஆச்சிரியமாக கேட்பது போல் கிண்டலாக கேட்க அவளோ வெட்கத்தில் முகம் சிவக்க ஆஹா என் அம்லு வெட்கபட்டுடா என சந்தோசத்தில் துள்ளி குதித்தான் தேவா .

அவனது உற்சாகம் அவளை தோற்றி கொள்ள ......”ஆமா அது என்ன அம்லுனு கூப்பிட்ரிங்க என நெடு நாள் சந்தேகத்தை அவள் கேட்க ...அதுவா அது வந்து என ஆரம்பித்தவன் வேண்டாம் இன்னொரு நாளைக்கு சொல்றேன்...இப்போ நீ முதல்ல தலையை துவட்டு” என காரில் இருக்கும் துண்டை எடுத்து அவளுக்கு துவட்டி விட்டான்.

பின்னர் இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு இரவு வீட்டிற்கு வந்தனர்.உள்ளே நுழையும் போதே கை கோர்த்து கொண்டே இருவரும் நுழைய அதை பார்த்த அனைவரின் மனமும் சந்தோசத்தால் ததும்பி வழிந்தது . அறைக்குள் வந்தவன் இன்று ஒரு நாளில் அவனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களை நினைத்து இனி நடப்பது எல்லாம் நல்லதே என்ற எண்ணத்தோடு உற்சாகமாக மெத்தையில் சரிந்தான் தேவா .



பார்த்த போதும் அறியவில்லை

பழகியபோதும் புரியவில்லை!

என்னவனே!

நீ எப்போது என்னில் நுழைந்தாய்.

அனுமதி இன்றி உள்ள வர

உனக்கு என்ன துணிச்சல்

கேட்க நினைத்தேனடா ஆனால்

உனது ஆசைபேச்சினால் என்னை மயக்கவில்லை

உனது அன்பால் என்னை வீழ்த்திவிட்டாய்....

உடலால் என்னை வளைக்காமல்

காதலால் என்ன சிறைபிடித்தாய்.....

அலங்கார வார்த்தை இல்லாமல்

அமைதியாக என்னை

உன்னவளாக மாற்றிவிட்டாய்.......

இந்த மாற்றமும் எனக்கு பிடித்திருகிறது...

கேள்வி கணைகளை நிறுத்திவிட்டு

காதல் கணைகளை மட்டுமே

தொடுக்க என் மனம் சொல்கிறது.......

மனம் சொன்னதை செய்யவா ?

இல்லை மறுபடியும் சண்டிராணியாக மாறவா?



நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தோழமைகளே
 
Top