• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம்-27





வேகமாக தன் அறைக்கு வந்தவன் அவன் நுழையும் முன்னே மாணிக்கம் அவனை தேடி வந்தவர் “சார்” என அவன் காலில் விழுந்தார்.”ரொம்ப சந்தோசம் சார்......அவர்களிடம் பணம் செல்வாக்கு எல்லாம் இருக்கு......என்னிடம் அது இல்லை...எப்படி ஜெயிப்பேன்னு நினச்சுட்டு இருந்தேன்.....என் உயிர் உள்ளவரை உங்களை மறக்கமாட்டேன் சார்” என உணர்ச்சி பெருக்குடன் சொல்ல

தேவாவோ அவனிடம் “இங்க பாருங்க மாணிக்கம்...இது என்னோட கடமை...என்னை நம்பி நீங்க வந்திங்க......அந்த நம்பிக்கை வீணாக கூடாது இல்லயா......இப்போ சந்தோசம்தானே....மற்றது எல்லாம் நாளைக்கு அலுவலகம் வாங்க பேசிக்கலாம்.எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு “என சொல்லியபடியே அவனிடம் இருந்து வெளியே வந்தவன் பட்டாபியை அழைத்து “அவரிடம் பீஸ் வாங்கிவிட்டு நீதிமன்ற நகலை கொடு என சொல்லிவிட்டு ரோஜா எந்த கோவிலுக்கு சென்றாள்” என கேட்டான்.

“எப்பவும் அருகில் இருக்கும் சாய்பாபா கோவிலுக்குதான் சார் போவாங்க “என அவன் கூற அவளை தேடி சென்றான்.அவன் உள்ளே செல்லவும் ரோஜா வெளியே வர அவனை பார்த்ததும் வேகமாக அவன் அருகில் வந்தவள் “என்னாச்சு அத்தான்.......கேஸ் தீர்ப்பு சொல்லிடாங்களா....யாருக்கு சாதகமா” என கேட்கும்போதே அவள் குரல் நடுங்க

அவளையே சிறிது நேரம் பார்த்தவன் வேகமாக அவளை கோவிளுக்குல்லே மீண்டும் அழைத்து சென்றவன் அங்கு அவளோடு சில மணித்துளிகள் கண்களை மூடி அமர்ந்திருக்க அவளோ புரியாமல் அவன் முகத்தை பார்க்க முதன் முதலாக அவன் கண்களில் கண்ணீர் வந்து அன்றுதான் அவள் பார்த்தாள்.அவளது மனம் படபடவென வேகமாக அடிக்க உடலில் நடுக்கம் ஏற்பட அவன் பிடித்திருந்த கைகளை அவள் அழுத்தி பிடிக்க அவனோ சட்டென்று கைகளை எடுத்து தன நெஞ்சில் வைத்துகொண்டவன் சிலவினாடிகள் அப்படியே அமர்ந்திருந்து பின்புதான் கண்ணை திறந்தான்.அதற்குள் ரோஜாவின் இதயம் படபடவென்று வேகமாக துடிக்க

பாபாவை வணங்கிவிட்டு கண்களை துடைத்துக்கொண்டு அவள் கைகளை விடாமல் பிடித்தபடியே வெளியே வந்தவன் கார் அருகில் செல்லும் வரை அவன் ஏதும் பேசவில்லை....ரோஜாவோ தீர்ப்பு என்னவென்று தெரியாமல் அதே நேரத்தில் அவனது இந்த கண்ணீரும் மௌனமும் அவளை பயமுறுத்த என்ன பேசுவது என தெரியாமல் அவனை பார்த்தபடியே அவனுடன் வந்தாள்..

காரில் அமர்ந்த பின்பும் அவன் ஏதும் பேசவில்லை....அமைதியாக இருக்க கார் வேகமாக சென்னையை விட்டு விலகி நெடுஞ்சாலையில் சென்றது.எங்கே போகிறோம் என தெரியாமல் அவள் அமர்ந்திருக்க அப்போது அன்னை குடில் செல்லும் வழி என தகவல் பலகை இருக்க அந்த வழியே கார் சென்றது......சிறிது தூரம் சென்றதும் வழிநெடுகிலும் பூவரசன் மரங்கள் வரிசையாக இருக்க அதில் இருந்து பூத்து கொட்டிய பூக்கள் எல்லாம் அந்த பாதை முழுவதும் நிறைந்து இருந்தது. பட்டு கம்பளம் விரித்து போல் பூக்களில் கம்பளம் விரித்து இருக்க இரண்டு கிலோ மீட்டர் உள்ளே சென்றதும் சின்ன சின்ன மூங்கில் குடில்கள் ஆங்காங்கே இருந்தது.

அதை பார்த்ததும் மனதில் இருந்த பயம் மறைந்து வியப்பில் கண்களை விரித்து பார்த்து கொண்டே வந்தவள் அங்கு வயாதனவர்கள் சிலர் நடமாடிக்கொண்டு இருந்தனர்.

நேராக ஒரு மூங்கில் குடில் முன் கார் நிற்க அதில் இருந்து இறங்கிய தேவா ரோஜாவின் கதவை திறந்து இறங்கு ரோஜா என்றான்.

வியப்பில் சுற்றிலும் பார்த்தபடியே அவள் இறங்க அதற்குள் வாலிபன் ஒருவன் ஓடி வந்து “வணக்கம் சார்..... மன்னிக்கணும் நீங்க வருவதாக சொல்லவே இல்லை......இல்லயென்றால் எல்லாம் ரெடி பண்ணி வச்சிருப்போம் என்றான். கொஞ்ச நேரம் காத்திருங்க ...சுத்தம் பண்ணிடறோம்” என பணிவுடன் சொன்னான்.

“பரவாயில்லை கோவிந்தன்......நீங்கள் சுத்தம் பண்ணுங்க...நான் என் மனைவிக்கு இங்கு இருப்பவர்களை அறிமுகம் செய்துவிட்டு வருகிறேன்” என்றான்.

“சார் உங்களுக்கு திருமணம் ஆகிடுச்சா” என அவன் ஆச்சரியத்துடன் கேட்க

தேவாவோ “அதனால் தான் மனைவி என்று சொல்கிறேன் என சிரித்துகொன்டே சொன்னவன் விபரமாக பிறகு சொல்கிறேன்...நீ வேலையை கவனி “என சொல்லிவிட்டு ரோஜாவின் கையை பிடித்து கொண்டு நடந்தான்.

ஒவ்வொரு குடில் அதை சுற்றிலும் பூக்கள் நிறைந்த சிறு தோட்டம்,குடிலுக்கு பின்னால் ஒரு தென்னை மரம் ,பழங்கள் மரம் மற்றும் பம்பு செட் போல் அமைப்புடன் கூடிய சிறுதொட்டி என அவை எல்லாம் பார்க்க பார்க்க ரோஜாவிர்க்கோ ஏதோ கனவு உலகத்தில் இருப்பது போல் இருந்தது.

அமைதியான சூழ்நிலை,சுத்தமான காற்று,சிறு தூசி இல்லை,மண் பாதை...நடக்கும் அளவு கான்க்ரீட் போடபட்டு இருந்தது......ஒவ்வொரு குடிளுக்கு முன்பும் ஒரு சைக்கிள் என மிக நேரத்தியாக இருக்க அவனுடன் வேடிக்கை பார்த்துகொண்டே நடந்தவள் அங்கு ஒரு பெரிய மண்டபம் தெரிய அதன் அருகே வந்த தேவா “என்ன ரோஜா இந்த இடம் உனக்கு பிடிச்சு இருக்கா” என்றான்.

“ஹையோ அத்தான் என்ன சொல்றதுனே தெரியலை......நான் பூமியில் தான் இருக்கனான்னு எனக்கே சந்தேகம்.....எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு இருக்கு...இதை கட்டினவன் கண்டிப்பா பெரிய கலாரசனை உள்ளவனா இருக்கணும்......எப்படி வடிவமைச்சு இருக்கான் பாருங்க என முகத்தில் உற்சாகம் பொங்க பேசிகொண்டே வந்தவள் ஆமா இது யாரோட இடம் ,இங்க எதுக்கு என்னை கூட்டிட்டு வந்திங்க என கேட்டு அவன் முகம் பார்த்தவள் தீர்ப்பு” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே அவளை இழுத்து இறுக்கமாக அணைத்தவன் “நீ என்கூட இருக்கும் வரை தோல்வி என்பதே எனக்கு கிடையாது அம்லு “என பெருமிதத்தோடு சொல்ல

அவனை விலக்கி அவன் முகத்தை பார்த்து “அப்டினா நீங்க ..நீங்க ஜெயிச்சுட்டிங்க” என அவள் சந்தோசமாக சொல்லும்போதே நிம்மதியும் உற்சாகமும் அவள் முகத்தில் நிறைந்து இருந்தது.

அவனோ “இல்லை அம்லு...நம்ம ஜெயிச்சுட்டோம் ...உனக்குத்தான் இந்த வெற்றி சமர்ப்பணம் என அவன் சொல்லி முடிக்கும் முன் அவனை இருக்க அணைத்தவள் “அத்தான் நம்ம ஜெயிச்சுட்டோம்..ஜெயிச்சுட்டோம்” என உற்சாகத்தில் துள்ளி குதித்தாள் ரோஜா .

அவனோ ஆமாண்டா அம்லு என தனது சந்தோசத்தை அவளுடன் சேர்ந்து அவனும் அனுபவிக்க ,,,”என்னப்பா வக்கீல் எங்களுக்கு என்ன இலவச சினிமாவா” என ஒரு சத்தம் கேட்க வேகமாக விலகிய இருவரும் திரும்பி பார்க்க அங்கு சில பெரியவர்கள் இவர்களை பார்த்து சிரித்து கொண்டு நின்றிருந்தனர்.

அவனோ “ஹிஹிஹி என வழிந்து கொண்டே இல்லை அது வந்து” என உளற

ரோஜாவோ அவர்களை பார்த்ததும் வெட்கமும் பயமும் ஒரு சேர வர தேவாவின் அருகில் நெருங்கி நின்றாள்.

“இப்பதான் கோவிந்தன் சொன்னான்..... இவங்க தான் உன் மனைவியா ........ரொம்ப சந்தோசமா இருக்கு ........ மண்டபதிற்குல்ல போனிங்கலா” என ஒருவர் கேட்க

“இன்னும் இல்லை......இப்பதான் வந்தோம் என்றவன் ஒரு நிமிடம் தாத்தா வந்துவிடுகிறேன்” என சொல்லிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு அந்த மண்டபத்திற்க்குள் நுழைந்தான்.

அங்கு இரண்டு பெரிய புகைபடங்கள் ஒரு ஆண் ஒரு பெண் இருக்க சொல்லாமலே புரிந்தது ரோஜாவிற்கு ஒன்று தேவாவின் தாய்.....மாற்றொன்று தந்தை என்று.......அவனையும் அந்த புகை படத்தையும் மாறி மாறி பார்த்தவள் ரோஜா என அவன் ஆரம்பிக்க

“எனக்கு புரியுது அத்தான்.......இவங்க உங்க அம்மா அப்பா...உங்க அம்மா முகம் அப்படியே உங்களுக்கு” என்றவள் அவன் எது சொல்லாமல் நிற்க ,அவளோ வேகமாக வெளியே சென்று சிறு மலர்களை பறித்து வந்து அந்த புகைப்படம் முன்னால் வைத்தவள் பின்னர் அவனுடன் இணைந்து விழுந்து வணங்கினாள்.

பின்னர் இருவரும் அங்கு இருக்கும் பெரியவர்களிடம் சிறிது நேரம் பேசிகொண்டு இருந்தனர். அதற்குள் கோவிந்தான் “சார் எல்லாம் ரெடி பண்ணிட்டேன் என்றவன் சார் மதியம் சமையல் என கேட்க இங்கே செஞ்சிடு கோவிந்தன்” என்றான் தேவா.

பின்னர் இருவரும் அந்த குடிலுக்கு வர உள்ளே ஒரு சிறய வரவேற்பு அறை,சமையலறை ,படுக்கை அறை என அனைத்திலும் மூங்கில் சாமான்களே இடம் பெற்று இருக்க அமரும் இடம் எல்லாம் மெத்தை மட்டுமே இருக்க அந்த இடமே அவளுக்கு ரம்மியமாக தெரிந்தது.உள்ளே நுழைந்ததும் மூன்று அறையையும் ஓடி ஓடி பார்த்து ரசித்தவள் தனது முட்டை கண்ணை விரித்து” இது யாரோடது அத்தான்.......உங்களோடதா”என கேட்டாள்.

அவன் ஆமாம் என்று தலையாட்ட “ஹப்பா....பிதாமகனுக்குள்ள இப்படி ஒரு பிக்காசோ ஓவியம் மாதிரி ரசனை இருக்கா ...நம்பவே முடியலையே” என அவள் தனது வாய் துடுக்கை ஆரம்பித்தாள்.

“அப்படியா.....அதுவும் உண்மைதான் ரோஜா...உன்னை நான் திருமணம் செஞ்சாதால அந்த சந்தேகம் அனைவருக்கும் வரும் தான்...என்ன பண்றது” என அவன் அப்பாவி போல் கிண்டலாக சொன்னான்.

அவள் உடனே ம்ம்ம்ம்ம்ம்ம் என முறைத்தவள் “இந்த மூஞ்சிக்கு நான் கிடைச்சதே உங்கள் அதிர்ஷ்ட்டம்” என வாய்க்கு வாய் அவள் பேச

“அப்படியா அதையும் பரிசோதனை செஞ்சு பார்த்திடலாமா” என சொல்லியபடியே அவன் அருகில் வர அவளோ “அதுக்கு வேற ஆள பாருங்க “என அவனை தள்ளிவிட்டு ஓட அவன் பின்னால் ஓட சிறிது நேரம் அங்கு இருவரும் ஓடிபிடித்து விளையாடி கொண்டு இருந்தனர்.

தேவாவின் வெற்றி மற்றும் மாறுதலான இந்த சூழ்நிலை அவளின் மனகாயங்களை மறக்க வைக்க அவனுடன் சரிக்கு சமமாக பேசி விளையாடி சிரித்து கொண்டு இருந்தாள் ரோஜா......தேவாவும் அவளுக்கு ஈடு கொடுத்து வம்பு பேசி கொண்டு இருந்தான். இருவருமே தங்களது பழைய நினைவுகளை மறந்து அந்த நொடியின் சந்தோசத்தை அனுபவித்து கொண்டு இருந்தனர்.

பின்னர் இருவரும் களைத்து போய் அமர இப்போது தேவா அவள் மடியில் சட்டென்று படுக்க ரோஜாவோ என்ன சொல்வது என தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்..

நேற்று இரவு அவன் அருகாமையே அவளின் உணர்வுகளை தூண்டி விட்டு இருந்தது...அதற்க்கு ஏற்றார் போல் இன்றும் அவன் அவள் மடியில் படுத்ததும் அவளது நிலையை கட்டு படுத்த முடியாமல் அவனிடம் வெளிபடுத்தவும் முடியாமல் தடுமாறிக்கொண்டு போனாள்.

மேலும் அவன் படுத்துகொண்டே பேசும்போது அவனது முகம் அவளது உடலில் அங்கும் இங்கும் உரசி குருகுருப்பை எற்படுத்த வயதின் இளமை அவளையும் மீறி தனது வேலையை தொடங்க கலங்கி போய் அமர்ந்திருந்தாள்.

வெகுநேரம் அவளிடம் பதில் இல்லாமல் போக ரோஜா என அழைத்தவாறே அவள் முகம் பார்த்தவன் அவள் கண்களை மூடி அமர்ந்திருக்க ..”ரோஜா ..ரோஜா” என அவன் அவளை உலுக்கிய பின்பே வேகமாக அவள் எழ முயற்சிக்க “என்னாச்சு ரோஜா” என்றவாறே அவன் பதறி எழுந்தான்.

“இல்லை அத்தான்......ஒன்றும் இல்லை என சமாளித்தவள் சட்டென்று உங்க அம்மா அப்பா எப்படி இறந்தாங்க” என பேச்சை மாற்றினாள்.

சட்டென்று தேவாவின் முகம் மாற அமைதியாக இருந்தவன் “என்னை மன்னிச்சுடு ரோஜா......என்னை பற்றி எதுவும் சொல்லாமலே உன்னை திருமணம் செய்துகிட்டேன்.....அதற்கு பிறகும் நான் இதை பற்றி உன்னிடம் சொல்லவில்லை ........அப்போது உன்னை திருமணம் செய்யணும் அது மட்டும் தான் எனக்கு நினைவில் இருந்தது ...உனது பக்கம் நான் யோசிக்கவே இல்ல என சொன்னவன் சாரி ரோஜா.......ஆனா உன் வீட்ல நான் சொல்லிட்டேன் என்றவன் இப்போ சொல்றேன் ரோஜா” என ஆரம்பித்தான்.

“எனது சொந்த ஊர் தேனி.எனது அப்பாவும் அம்மாவும் காதல் திருமணம் செய்தவங்க......அப்பா பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் பெரிய ஜாமீன் குடும்பம்......அம்மா கர்னாடக இசை பாடகி ....அப்பாவின் பள்ளியில் தான் ஆசிரியராக இருந்தார்.எங்க அம்மாவின் அழகும் குணமும் எங்க அப்பாவிற்கு பிடித்து போக வீட்டை எதிர்த்து இரண்டுபேரும் திருமணம் செஞ்சுகிட்டாங்க......

அதுனால எங்க அப்பாவ அவங்க குடும்பத்துல யாரும் சேர்த்து கொள்ளவில்லை ......பரம்பரை தொழிலை அவருக்கு கொடுத்திட்டாங்க .......நகை கடைதான் எங்கப்பாவோட தொழில் .வசதியா வாழ்ந்த எங்க அப்பானால தனியா வந்ததும் கொஞ்சம் சிரமபட்டார்.ஆனாலும் அம்மா மேல உள்ள பாசத்தால் அதை வெளிபடுத்தலை.நான் பிறந்த பிறகு எங்க அப்பாவுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவங்க குடும்பம் மேல உள்ள பாசம் குறைஞ்சு நாங்க மட்டுமே வாழக்கைனு இருந்திட்டார்.நாங்களும் ஓரளவுக்கு நல்ல நிலமையில் தான் இருந்தோம்.அம்மா அவங்களுக்கு தெரிஞ்ச சங்கீதத்தை எனக்கும் கத்து கொடுத்தாங்க...எனக்கும் பாட்டு ரொம்ப பிடிக்கும்” என அவன் சொல்ல

“ஓ அதான் வீட்ல அத்தனை மியூசிக் இன்ஸ்ட்ருமென்ட் வச்சு இருந்தீங்களா என்றவள் ...நான் கூட பீஸ் கொடுக்காம யார்கிட்டையாவது இருந்து தூக்கிட்டு வந்திட்டிங்கனு நினச்சேன்” என மனதில் நினைத்தை அவள் பட்டென்று சொல்லிவிட்டு நாக்கை கடித்தவள்

“அதான என்னை பத்தி எந்த விதத்திலையும் நல்லதாவே நினைக்க கூடாது அப்டிங்கிறத நீ கொள்கையாவே வச்சுட்டு இருக்க” என அவள் தலையில் செல்லமாக கொட்டியவன்

“சரி...சரி பேச்சை மாத்தாதிங்க.....அப்புறம்” என ஆர்வமுடன் அவள் கேட்க

“எனக்கு எங்க அம்மானா உயிர் ரோஜா.....இப்போது உன் மடியில் படுத்து இருந்தேன் இல்லயா.....அது போலதான் என்னோட சந்தோசம் துக்கம் இரண்டையும் எங்க அம்மா மடியில் இப்படி படுத்திட்டுதான் சொல்லுவேன்” என சொல்லும்போதே அவன் குரல் கரகரத்தது.

“அத்தான்” என அவள் அவன் கைகளை பிடித்து அழுத்த

எங்க அப்பா எனக்கு பிடிக்கும் ரோஜா....ஆனா அவர்கிட்ட எப்பவும் அந்த ஜாமீன் தோரணை இருக்கும்....எதிலும் ஒரு அதிகாரம் இருக்கும்.....சில சமயம் அது பிடித்தாலும் பல நேரத்தில் எனக்கு அவரிடம் பயம்தான் அதிகம்.

எல்லாமே சந்தோசமாத்தான் போயிட்டு இருந்தது. அந்த திருமணம் மட்டும் வராமல் இருந்திருந்தால் எங்க அப்பா அம்மா இப்போது என்னுடன் இருப்பாங்க” என சொல்லி நிறுத்தியவன்

அவன் உடல் சிறிது நடுங்க அவள் எது பேசாமல் அவன் முகத்தையே பார்க்க ...”எங்க அப்பா சொந்தகாரங்க திருமணம் ரோஜா...இங்குதான் சென்னையில் நடந்தது...அதற்கு அவசியம் போகணும்னு சொல்லி அப்பா சொல்லிட்டார்.எனக்கு பரீட்சை வரமுடியாதுனு சொல்லிட்டேன்.....அதுனால அப்பாவும் அம்மாவும் மட்டும் போனாங்க.....எங்க அம்மா சொந்தகார பாட்டி ஒன்னு அம்மாவுக்கு உதவி செஞ்சுகிட்டு எங்க வீட்ல இருக்கும்.நானும் பாட்டியும் வீட்ல இருக்கிறதால அவங்க கிளம்பி போனாங்க என்றவன் அவன் முகம் இருள விரல்களை இறுக்க மூடியவன் அப்போ ...அப்போ என வார்த்தைகள் அவனுக்கு தடுமாற ஒரு ஆக்சிடெண்ட்ல இரண்டு பேரும் இறந்திட்டாங்க என சொல்லி முடித்தும் அப்படியே அவள் மடியில் சாய்ந்தவன் குலுங்கி குலுங்கி அழ ...அவளுக்குமே அது அதிர்ச்சியாக இருக்க என்ன செய்வது புரியாமல் அவனது மன அழுத்தம் குறையும் வர அழுகட்டும் என அமைதி காத்தாள்.

சற்று நேரம் கழித்து எழுந்து அமர்ந்தவன் எனக்கு என்ன பன்றதுனே தெரியலை ......அப்போது எனக்கு வயது பதினைந்து......சொந்தகாரார்க்கள் யாரும் அதிகம் அறிமுகம் கிடையாது... தகவல் அறிந்ததும் அந்த நேரத்தில் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறி நின்றபோது எனக்கு தெரிஞ் ஒரே தகவல் அப்பாவின் ஜாமீன் குடும்பம் தான்.அதை பற்றி நான் சொன்னதும் அங்கு தகவல் சென்றது.அங்கிருந்து அனைவரும் வந்து அனைத்து சடங்குகளையும் செய்து முடித்தனர்.



அந்த நேரத்தில் எனக்கு ஆறுதல் சொல்லவோ ,தோல் சாயவோ யாரும் இல்லை......அவர்கள் அனைவரும் புது மனிதர்கள்...அப்பாவின் நண்பர்கள் சில பேர் வந்தனர்...இவர்களின் படோபதனத்தை பார்த்து அவர்களும் விலகிவிட்டனர்.

ஒரு மாதம் அவர்கள் வந்து போய் கொண்டு இருக்க நானும் தேர்வு எழுதி முடித்தேன்.அதற்க்கு பின்பு தான் என்னை என்ன செய்வது என அனைவர்க்கும் கேள்விவந்தது......அப்பாவுடன் பிறந்தவர் மூன்று பேர்......அப்பாதான் கடைசி........ஒருவர் வெளிநாட்டில் இருந்தார்...மற்றொருவர் அவர்களின் மனைவி என்னை உடன் வைத்துகொள்ள ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அப்பாவிற்கு அவர்கள் கொடுத்த சொத்துக்கள் யாவும் முறையாக பதியாமல் வாய் வார்த்தையாக மட்டுமே இருந்ததால் அதை மீண்டும் அவர்கள் எடுத்து கொண்டனர். தொழில் தொடர்பாக அப்பா வாங்கி வைத்திருந்த கடன் கொஞ்சம் இருக்க அதை சில சொத்துகளை விற்று அவர்கள் அடைத்து விட்டனர். எல்லாம் முடிந்ததும் நாங்கள் இருக்கும் வீடும் கொஞ்சம் பணமும் இருக்க அது அவர்களுக்கு பத்தாது என நினைத்தவர்கள் எனது தம்பியே போய்விட்டான்.....இனி எங்களுக்கு இங்கு என்ன வேலை என சொல்லிவிட்டு சென்றுவிட்டனர். வேறு எந்த சொந்தமும் இல்லாமல் அனாதையாக நின்று கொண்டு இருந்தேன்.

பதினொன்றாம் வகுப்பு சேரவேண்டும்....யாரும் இல்லாமல் எப்படி சேர்வது.....சாப்பாட்டிற்கு பிரச்சனை இல்லை......பேங்கில் கொஞ்சம் பணம் இருந்தது......ஆனால் என நிறுத்தியவன் என் நிலமை யாருக்கும் வரகூடாது ரோஜா.......அப்பா அம்மா என சந்தோசமா வாழ்ந்திட்டு இருந்த நான் தனி மரமா யாரும் இல்லாம தவிச்சுகிட்டு இருந்தேன்.

அப்போதுதான் ஜெயந்தி சித்தி வந்தாங்க......இவங்க அம்மாவின் உறவினர்......அப்போது வக்கிலா சென்னை நீதிமன்றத்துல இருந்தாங்க....ஆக்சிடென்ட் கேஸ் அப்டிங்கிறதால நீதி மன்றத்துக்கு அப்பா அம்மா கேஸ் செல்ல அதை பார்த்து அவங்க வந்தாங்க.

என் நிலைமைய நான் சொல்லாமலே புரிஞ்சுகிட்டவங்க ......நான் உனக்கு உதவி பண்றேன்......ஆனா எனக்கும் குடும்பம் இருக்கு....என்னால் உன்னை என் கூட வச்சு பார்க்க முடியாது...உனக்கு கார்டியனா நான் இருக்கேன் அப்டின்னு சொன்னங்க.....முதலில் நீ பன்னிரண்டாம் வகுப்பு வரை இங்கு படி பிறகு பார்க்கலாம் என்று சொன்னார்கள்.

விடுதியில் சேர்த்து விடுவதாக சொன்னவர்கள் பின்னர் இல்லை கேஸ் நடக்கிறது....அதனால் நீ இங்கு இருப்பது தான் நல்லது என சொல்லி அந்த பாட்டியின் பொறுப்பில் என்னை விட்டு விட்டு போனாங்க .அந்த நேரத்தில் பாட்டியின் மகளும் கணவரை இழந்து குழந்தையோடு அங்கு வந்ததால் எனக்கும் தனிமை அதிகம் தெரியவில்லை.

நான் மட்டும் தனியாக படுத்து இருக்கும்போது பல நேரங்களில் அம்மாவின் நியாபகத்தில் தூங்காமல் விடிய விடிய அழுதிருக்கேன். ஒரு முறை அதை பாட்டி பார்த்து விட அவர் சித்தியிடம் சொல்ல பின்னர் சித்தி என்னை அழைத்து “இங்கு பார் தேவா நீ சிறுவன் தான் என்றாலும் உனக்கு ஏற்பட்ட கொடுமை மிக பெரியது...யாருக்கும் இது வரகூடாது ...ஆனால் வந்துவிட்டது.இனி அதை நினைத்து வருந்துவதை விட அதை எதிர்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.

இனி உனகென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்தி கொள்.அதில் மட்டுமே கவனம் செலுத்து “என அவர் சொல்ல அப்போது என் அம்மாவின் ஆசையான மருத்துவர் ஆவதே எனது லட்சியமாக கொண்டு கடுமையாக படித்தேன் ரோஜா என அவன் சொல்லி முடித்தான் .

அதுவரை தலையை அசைத்து அசைத்து கதை கேட்டு கொண்டு இருந்தவள் அவன் இதை சொன்னதும் சட்டென்று நிமிர்ந்து அவன் முகம் பார்க்க ...அவனோ அமைதியாக அவளை ஆழ்ந்து நோக்க

“ராகன் “என முதன்முறையாக அவன் முன்னால அவன் பெயரை உச்சரித்தவள்... நீங்க.....நீங்க ....நீங்களும் என்னை மாதிரி என வார்த்தை வரமால் அவள் தடுமாற

அவன் ம்ம்ம் என சொன்னவன் “ஆனால் விதி என்று ஒன்று இருக்கிறதே ரோஜா அது ரொம்ப கொடுமையானது...அதுவும் அது விளையாடுவதற்கு நம்மை போன்ற ஏமாளிகள் கிடைத்து விட்டால் அவர்களின் உயிர் போகும் வரை விளையாண்டு பார்த்து விடும்.நான் படிக்கும்போதே வாலிபால் பளேயர்.ஒரு முறை பயிற்சியின் போது எனக்கு அடிபட்டுவிட அதில் கொஞ்சம் மருத்துவ செலவு அதிகமாகிவிட்டது.

பின்னர் பள்ளிக்கும் சரியாக செல்ல முடியாததால் மதிப்பெண் குறைந்துவிட்டது.பணம் கொடுத்து கல்லூரியில் சீட் வாங்கும் அளவிற்கு என்னிடம் வசதி இல்லை.என்ன செய்வது என தெரியாமல் முழித்து கொண்டு நின்றபோது எனக்கு அப்போதும் உதவியது ஜெயந்தி சித்தி தான்.

“நான் உனக்கு பணம் தருகிறேன் .நீ படி என்றார்.பின்னர் எதற்காக இந்த படிப்பை நீ தேர்ந்தெடுத்தாய்” என்று கேட்டார்.




 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
“அம்மாவின் ஆசை மற்றும் இதில் அனைவர்க்கும் உதவி செய்யலாம்...கொஞ்சம் மரியாதையாக இருக்கும் சித்தி என நான் சொல்ல அவரோ சிரித்து கொண்டே இந்த சின்ன வயதில் உனது இந்த நல்ல எண்ணம் பாராட்ட படவேண்டியதுதான்.ஆனால் தேவா நான் ஒன்று சொல்கிறேன் கேள்......எந்த தொழிலும் சிறந்த தொழிலே...அதில் நமது ஈடுபாடு எந்த அளவு எனபது தான் முக்கியம்.மரியாதை என்பது நாம் நடத்தையை பார்த்து மற்றவர்கள் கொடுக்க வேண்டும் தவிர நாம் செய்யும் தொழிலோ பணமோ கிடையாது. மறுபடியும் யோசி.....உனது முடிவை நாளை சொல்” என சொல்லிவிட்டு சென்றார்.

வாழ்க்கையில் முதன் முறையாக எதிர்காலத்தை பற்றிய சிறு பயம் மனதில் வர இரவு முழுவதும் யோசித்தேன்.மறுநாள் சித்தி வந்ததும் நான் BL படிக்க விரும்புவதாக சொன்னேன்.அவர் என்னை அர்த்தம் பொதிந்த ஒரு பார்வை பார்க்க நானோ “இது சுயமாக நான் எடுத்த முடிவு சித்தி. எனது மதிபெண்ணுக்கு கண்டிப்பாக நல்ல சட்ட கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்கும்...மேலும் உதவிதொகையும் கிடைக்கும்.இன்னும் அதன் என்ட்ரன்ஸ் முடியவில்லை.இன்றே அதற்க்கு விண்ணப்பம் போட்டு விடுகிறேன் மேலும் நான் யாரிடமும் உதவி பெற தேவை இல்லை” என்றேன்.

சித்தியும் எனது தோளில் கைவைத்தவர் “உன்னை நினைக்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது தேவா.உனது இந்த முடிவு எனக்கு சந்தோசமே.....இப்போது நீ யாரோட உதவியும் இல்லாமல் உனது திறமையால் படிக்க போகிறாய்.இதுவே உனது முதல் வெற்றி.....இனி நீ எடுக்கும் காரியங்கள் எல்லாம் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்” என வாழ்த்தி என்னை கல்லூரியில் சேர்த்துவிட்டார்.

சென்னை சட்ட கல்லூரியில் எனக்கு இடம் கிடைக்க அங்கு இருக்கும் வீட்டை விற்று இங்கு ஒரு சிறு வீடு வாங்கி குடியேறினோம்.

பாட்டியும் அவங்க பேத்தியும் நான் தனியா விட விரும்பலை.மேலும் நான் பார்ட் டைம் ஜாப் பார்க்க வேண்டும் என்ற முடிவோடுதான் சென்னை வந்தேன். நன்றாக படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன்.......இப்போது நாம் நெடுஞ்சாலையில் வந்து திரும்பினோம் இல்லயா...அங்கு தான் அம்மா அப்பா இறந்த இடம்.....அவர்களின் நினைவாகதான் இங்கு இந்த அன்னை குடில்....என்னை பொறுத்தவரை அவர்கள் இங்குதான் இருப்பார்கள்.....இந்த பெரியவர்கள் மூலம் நான் என் அம்மா அப்பாவை பார்கிறேன் ரோஜா....இந்த பெரியவர்கள் எல்லாம் பிள்ளைகளால் கைவிடபட்டவர்கள்...... இருபது குடும்பம் இங்கே இருக்கிறது.இவர்களின் தேவைகளே இவர்ளே வேலை செய்து இங்கு பார்த்து கொள்கின்றனர்..



என்னதான் நான் மருத்துவ படிப்பு வேண்டாம் என்று சொன்னாலும் என மனதில் ஒரு ஏக்கம்.....பணம் இருந்திருந்தால் நான் படித்து இருந்திருகலாம் என்ற எண்ணம் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.அதனால் தான் பணத்தை தேடி ஓட ஆரம்பித்தேன்” என சொல்லி நிறுத்தியவன்

அவள் முகத்தை பார்த்தவன் “அதுனாலதான் கஞ்ச பிசினாரி,சுயநலக்காரன்,பணத்திற்காக எதுவும் செய்பவன் அப்டினு பல பட்டத்தோட நான் உலா வந்திட்டு இருக்கேன்” என கண்களில் வலியோடு உதட்டில் வெறுமை கலந்த சிரிப்போடு அவன் சொல்ல

“அப்படி எல்லாம் இல்லை ராகன் என வேகமாக அவன் வாயை பொத்தியவள் ...உங்களை பத்தி தெரியாம சொன்னது அது “ என சொல்லும்போதே ரோஜாவின் கண்களில் கண்ணீர் நின்றது.

“அச்சோ என்ன ரோஜா இது.......கண்ணுக்குள்ள என்ன மேட்டூர் டேம் வச்சிருக்கியா ...அடிக்கடி வாட்டர் பால்ஸ் ஓபன் பண்ணிடற” என அவன் அவளை கிண்டல் பண்ண

“இல்ல ராகன் நிஜமாவே சொல்றேன்.....உங்க மனசுக்குள்ள இவ்ளோ வேதனைகளை அடக்கிகிட்டு நீங்க வெளியே எவ்ளோ கம்பீரமா இருக்கீங்க......உங்களை நினைக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு .....ஆனால் என் வாழ்க்கைல நடந்த சில விஷயங்கள் உங்களுக்கும் நடந்து இருக்கு ...ஆச்சரியமா இருக்குல்ல என அவள் சொல்ல

“சில விஷயங்கள் இல்லை அம்லு...நிறைய நீ இப்போ பண்ற இந்த வால்தனம் எல்லாம் நானும் பண்ணது தான்......அம்மாகிட்ட செம செல்லம் .......உன்னை கட்டிக்க போறவ ரொம்ப பாவம் அப்டின்னு அம்மா அடிக்கடி சொல்வாங்க....இப்போ மட்டும் அவங்க இருந்தாங்க தெரிஞ்சிருக்கும் யாரும் பாவம்னு” என அவன் சிரித்து கொண்டே சொன்னான்.

“ம்ம்ம் நான் ஒன்னும் அப்படி எல்லாம் இல்லை ...ரொம்ப நல்ல பொண்ணு .....என்ன கொஞ்சம் ஜாஸ்தியா வாய் பேசுவேன்....அவ்ளோதான்” என அவள் முகத்தை சுருக்கி செல்லமாக சொல்ல

அதன் அழகில் மயங்கியவன் “என் அம்லுவுக்கு இது கொஞ்சமா “என அவள் கன்னத்தை பிடித்து கொஞ்ச

“பின்ன இல்லயா” என அவளும் அவன் முகத்தின் அருகில் சென்று பலிப்பு காட்ட

சட்டென்று அவளை இழுத்து முத்தமிட்டவன்” என் அம்லு எப்பவும் நல்ல பொண்ணுதான்” என சொல்லிகொண்டேமுத்தத்தால் அவள் முகம் முழுவதும் வளம் வர

தேவாவின் கதையை கேட்டு இளகி இருந்த அவள் மனம்,மேலும் அவனும் தன்னை போலவே பல விஷயங்களில் பாதிக்க பட்டு இருக்கிறான் என தெரிந்ததும் மனதின் தடைகள் சில விலக,அவனது அருகாமையும் அவளை சூடேற்ற அவனது அணைப்பு அவளுக்கு அப்போது தேவைபட தடை சொல்லாமல் அவள் ஒத்துழைக்க மெதுவாக அவளை அணைத்தவன் “அம்லு ப்ளீஸ்டா” என அவள் கண்களை பார்த்து சொன்னவன் அவள் எதுவும் சொல்லாமல் கண்களை மூட அப்படியே அவளை அழகாக தூக்கி மெத்தையில் போட்டான். “என் அம்லு” என சொல்லிபடியே அவள் மேல படர்ந்தவன் அவளை அங்கம் முழுவதும் முத்தத்தால் நிரப்பியவன் மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற சில இடங்களில் அவள் முகம் சுளித்ததும் அதை புரிந்து கொண்டு அவன் மென்மையாக நடக்க வெகுநாட்களாக அவன் எதிர்பார்த்திருந்த அந்த நாள் இன்று அவன் எதிர்பாராமல் அமைந்து விட அதை இருவருமே ரசித்து அனுபவித்தனர்.

வெகுநேரத்திற்கு பின் முதலில் கண் விழித்தது தேவா தான். தனது மார்பில் முகத்தை புதைத்து கொண்டு குழந்தை போல் தூங்கும் ரோஜாவை பார்த்தவன் சில மணி நேரத்திற்கு முன்னால் அவளது ஒத்துழைப்பை நினைத்தவன் இதழில் புன்னகை வர “கள்ளி...... இவ்ளோ ஆசைகளை மனசில வச்சுக்கிட்டு எவ்ளோ நாள் என்னை காக்க வச்சுட்டா என்றவன் உன்னை இனி விடமாட்டேன்டி” என சொல்லிகொண்டே அவளை இறுக்க அணைத்தபடி மீண்டும் படுத்து கொண்டான்.



தாயின் கருவறையின்

பணிகுடத்தின் கதகதப்பை

உன் அணைப்பில் நான்

உணர்ந்தேனடா!!!!

உனது இதழ் ஒற்றளுக்கு என் உடலின்

ஒவொவொரு அணுவும் ஏங்கி நிற்க..

உன் மீசையின் நெருடல் நீ

என் மீது வைத்திருக்கும் பாசத்தை சொல்ல..

உன் ஆளுமையின் வேகம் நீ

என் மீது வைத்திருக்கும் காதலை நிருபிக்க..

உனது மோகத்தில் எனது பெண்மை கரைய

என்னுள் நீ நுழைந்து உன்னுள் நான் கலந்து

உள்ளமும் உடலும் இணைந்து நடத்தும்

இந்த உரிமை போரில் வெற்றி என்பதை விட

தோற்பதில் சுகம் அதிகம் என்பதை

கண்டுகொண்டேனடா உன்னிடம்...

என்னுள் இருக்கும் பெண்மையை

எனக்கு உணரவைத்தவனே

என்றும் உனக்கே நான் உயிராவேன் .!!!!!
 
Top