• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -33



சிறிது நேரம் இருவரும் பார்த்து கொண்டு இருக்க முதலில் விக்டர் தான் நிதானத்திற்கு வந்தான்.

எப்படி இருக்க ரோஜா என பேச்சை ஆரம்பித்தான்.

அவன் சிரித்து கொண்டே பேசியதும் ரோஜாவும் சற்று நிதானமாகி “ நான் நல்ல இருக்கேன் சீனியர் ...நீங்க எப்படி இருக்கீங்க” என கேட்டாள் .

“இதோ பார்க்கிறாய் அல்லாவா ....ரொம்ப நல்ல இருக்கேன் எனசிரித்துகொண்டே சொன்னவன் நீ சென்னை எப்போது வந்தாய்” என பேச்சை ஆரம்பிக்க

அதற்குள் ரதி “சார் உங்களுக்கு ரோஜாவை தெரியுமா ? “என கேட்டதும் அவன் “ரொம்ப நல்லாவே தெரியும்” என்றான்.

தரணிக்கும் ரதிக்கும் ரோஜாவின் பழைய கதைகள் தெரியும்...ஆனால் அந்த ஹோட்டல் நிகழ்வுகள் தெரியாது.அதனால் எங்கு விக்டர் அதை பற்றி பேசிவிடுவாரோ என பயந்த ரோஜா முகம் வேர்க்க கொஞ்சம் பதட்டத்துடன் நின்று கொண்டு இருந்தாள்.

அதை கவனித்த தரணி மெதுவாக அவள் அருகில் வந்து “ஏதாவது பிரச்சனயா ரோஜா” என்று அவள் காதருகில் கேட்டாள்.

அதை கவனித்த விக்டர் முகம் சுருங்க “சரி நான் கிளம்புகிறேன்.......தொந்தரவுக்கு மன்னிச்சுடுங்க ...நான் ஒரு மருத்துவ நிகழ்சிக்காக இங்கு வந்தேன்......என் நண்பர்கள் அங்கு இருக்கிறாங்க நான் வருகிறேன்” என நகர

ரோஜாவே “இல்லை சீனியர் ..அப்படி எல்லாம் இல்லை” என அவள் வேகமாக சொன்னதும்

உடனே தரணி “சரி ரோஜா...நீங்கள் பேசிக்கொண்டு இருங்க.....நாங்க அந்த பிஷ் டேங்க் பார்த்திட்டு வர்றோம்” என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.

அவர்கள் சென்றதும் அவள் சற்று இழுத்து மூச்சுவிட அவளையே பார்த்து கொண்டு இருந்த விக்டர் “நீ ரொம்ப மாறிட்ட ரோஜா” என்றான்.

அவளோ “அப்படி எல்லாம் இல்லை.காலம் கற்று கொடுத்த பாடம் ....இன்னும் நான் அதை புரிந்து கொள்ளவில்லை என்றால் நான் மனுஷியே கிடையாது என்றவள் உட்காருங்கவிக்டர்... ....அவசர வேலைனா பிறகு பேசிக்கலாம்...நீங்கள் கிளம்புங்க” என சொல்லவும்

“இல்ல ரோஜா.........இன்னும் சில நண்பர்கள் வரவேண்டும்...அதுவரை பேசிக்கொண்டு இருக்கலாம்” என்றான்.

“தேங்க்ஸ் விக்டர் என்றவள் என்ன சாப்பிட்ரிங்க” என கேட்டாள்.

அதற்குள் அவன் ஆர்டர் கொடுத்த ஜூஸ் வந்துவிட அதை அவளிடம் கொடுத்தவன் அவனுக்கு மறுபடியும் ஆர்டர் செய்தான்.

சிறிது நேரம் அங்கு அமைதி நிலவ” சாரி ரோஜா ...அன்று” என அவன் ஆரம்பிக்க

அவளோ” வேண்டாம் அதை நினைவு படுத்தாதீங்க” என சொல்லும்போதே அவள் குரல் தடுமாற புரிந்து கொண்ட விக்டர் “சரி உன்னை பற்றி சொல்லு......நீ இப்போ வக்கீலா வேலை பார்த்திட்டு இருக்கியா” ......என கேட்டான்.

அவள் சிரித்து கொண்டே “நீங்க முதல சொல்லுங்க.....எவ்ளோ நாலா சென்னைல இருக்கீங்க” என கேட்டாள்.

“நான் அங்கு படிப்பு முடிச்சதும் மேல் படிப்பிற்கு வெளிநாடு சென்று விட்டேன் ரோஜா....அதனால் தான் உன்னை பற்றி எனக்கு தகவல் தெரியாமல் போனது. படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வந்து நான் விசாரித்த போது நீ வக்கீலுக்கு படித்து கொண்டு இருப்பதாக சொன்னாங்க .......அப்போது ஒரு முறை உன்னை நான் பார்க்க வந்தேன்.பாட்டி தான் அவள் இப்போது எல்லாம் மறந்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கிறாள் .....அதை கெடுத்து விடாதீர்கள் என்றார்.தூரத்தில் இருந்து உன்னை பார்த்துவிட்டு சென்று விட்டேன்.கொஞ்ச நாளில் நீ சென்னை சென்றுவிட்டதாக சொன்னார்கள்.நானும் எனது தொழில் கொஞ்சம் பிசியாக இருந்ததால் விட்டு விட்டேன்” என்றான்.

“அப்புறம் நம்ம friends எல்லாம் எப்படி இருக்காங்க...நம்ம ரவி என்ன பண்றார்....ஷோபி எப்படி இருக்கா ?”என அவள் விசாரிக்க

அவள் அந்த நினைவை தவிர்க்க நினைக்கிறாள் என புரிந்து கொண்ட விக்டரும் “எல்லாரும் நல்லா இருக்காங்க...... ரவி மும்பையில் இருக்கான்.ஷோபி இப்போ பார்த்தினா உனக்கு அடையாளமே தெரியாது” என சொல்லி சிரித்தான்.

“அப்படியா என்றவள் இங்க பார்” என அலைபேசியில் அவர்களின் புகைபடத்தை காட்டினான்.அதை ஆர்வமாக பார்த்து கொண்டு இருந்த ரோஜா அப்போது ராம் வந்ததை கவனிக்கவில்லை.

ராமும் தூரத்தில் வரும்போதே பிஸ் டேங்கின் அருகில் தன்னவளை பார்த்த உடன் மற்றது எதுவும் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை.தேவா காரை பார்க் செய்துவிட்டு வருவதாக சொன்னதால் ராம் முன்னாடி வந்து விட்டான்.

ராமை பார்த்ததும் அவர்கள் இருவரும் பேசட்டும் என எண்ணி தரணி அலைபேசியில் யாரோ அழைப்பதாக சொல்லி அங்கிருந்து நகர்ந்தாள்.

ராமை பார்த்ததும் அதிர்ச்சியில் ரதி அப்படியே அமர்ந்திருக்க திருமணம் விஷயம் அவனுக்கு தெரிந்து இருந்தததால் முகத்தில் உற்சாகம் பொங்க “என் முல்லை மலர் தனியாக அமர்ந்திருக்க...துணையாக நான் வந்துவிட்டேன்” என சொல்லிகொண்டே அவன் அருகில் வந்து அமர்ந்தான்.

அவளுக்கு விபரம் தெரியாததால் “இங்க பாருங்க mr ராம்சரண் இனி இப்படி பேசாதீங்க......எனக்கு பிடிக்களை......ஆமா நீங்க எதுக்கு இப்போ இங்க வந்தீங்க...எங்க இந்த ரோஜா, தரணி எல்லாம்” என எரிச்சலுடன் சொல்லிகொண்டே சுற்றிலும் பார்க்க

ரோஜாவோ விக்டருடன் சிரித்து பேசிக்கொண்டு இருக்க தரணியோ போனில் யாருடனோ கடலை போட்டு கொண்டு இருந்தாள்.

“இவர்களை நம்பி வந்ததற்கு” என சொல்லிகொண்டே அவள் எழ அவள் கையை பிடித்து அமரவைத்தவன் ...”எங்க முல்லை மலர் ஓடற.....இந்த மாமன் உன்னை தேடி ஓடி வந்து இருக்கேன்...நீ என்னடானா ரொம்பதான் பந்தா பண்ற” என அவன் கிராமத்து பாசையில் பேச அவன் இருந்த மனநிலை அவனை அப்படி பேசவைத்தது.

அவனை ஒரு மாதிரியாக பார்த்த ரதி...”என்னாச்சு ராம்...நல்லத்தான இருந்தீங்க...இப்போ என்ன இப்படி பேசறிங்க என்றவள் இருங்க நான் ரோஜாவை கூப்பிட்றேன்” என்றவள் அலைபேசி எடுக்க

“அதெல்லாம் வேண்டாம் ...சரி சொல்லு நம்ம ஹனிமூன் எங்க போலாம்” என கேட்டான் ராம்.

“என்ன உளறிங்க நீங்க.......இங்க கல்யாணமே பிரச்சனையில இருக்காம்...இதுல ஹனிமூன் பத்தி பேச்சு “என அவள் முகத்தை நொடிக்க

இந்த போஸ்ல நீ அழகா இருக்க முல்லை மலர் என கிண்டல் செய்தவன் மூனாறு போலாம் முல்லை மலர்.சூப்பரா இருக்கும் அங்க கிளைமேட் செமையா இருக்கும்......அந்த பனிமலையில் என் முல்லை மலர் அப்படியே ஓடி வந்து இந்த மாமனை இருக்கி என அவன் ரசித்து சொல்ல

“அய்யோ....கொஞ்சம் நிறுத்தரிங்களா....இப்படி பேசி பேசித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கோம்.....இனியும் நான் தாங்கமாட்டேன்” என அவள் ஆத்திரமும் கோபமுமாக சொல்ல

உடனே ராம் ஒரு காகிதத்தை எடுத்து “ வரும் வைகாசி மாதம் முதல் திங்களில் ராம் சாரனுக்கும் ரதி தேவிக்கும் திருமணம்...இது திருமதி காவேரி அம்மாள் எழுதி கொடுத்த சாசனம்” என சொல்லிகொண்டே அவர் நல்ல நாள் குறித்து கொடுத்த காகிதத்தை அவன் நீட்ட

அவளோ வேகமாக அதை வாங்கி பார்த்தவள் கண்களில் கண்ணீர் நிற்க அதை படித்தவள் பின்னர் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து “இது உண்மையா ராம் ‘என அழுகையின் ஊடே திக்கி திணறி கேட்க

அவனோ “ஆமாம்” என்று தலை ஆட்ட

அதை நெஞ்சோடு அணைத்து அவள் நாற்காளியில் சாய்ந்தாள். 1

“இந்த மாமாவின் மார்பும் பிரீயாகதான் இருக்கு முல்லை மலர் என அவன் காதலாக சொன்னவன் ...இங்கும் சாயலாம்” என்றான்.

“சீ போங்க” என வெட்கத்தால் முகம் சிவந்தவள் அவனை செல்லமாக அடிக்க முயல

அவனோ பயந்தவன் போல் நடிக்க

வெகு நாட்களுக்கு பிறகு இருவரின் முகத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

ராமை அழைத்து வர சென்ற தேவா அவன் என்ன என்று விபரம் சொல்லாமல் வர மறுக்க அவர்களின் திருமணம் பற்றி சொன்னான் தேவா.

முதலில் ராம் அதை மறுத்தவன் “இல்லை தேவா.....அம்மா இதற்கு சம்மதிக்க மாட்டங்க என் சொல்ல.....இதை சொன்னதே அம்மா தான்” என அவன் ஆதாரத்துடன் சொல்ல ராமோ திகைத்து விட்டான்.

“நிஜமாகத்தான் சொல்றியா தேவா” என பலமுறை கேட்டு தெளிவு படுத்தி கொண்டவன்

“எப்படி தேவா அம்மா ஒத்துகிட்டாங்க” என கேட்டான்.

“உண்மைய சொன்னேன் ஒத்துகிட்டாங்க” என அவன் சிரித்து கொண்டே சொல்ல

என்ன உண்மை என முழித்தவன் சட்டென்று அவன் கண்களை பார்த்து “நீ அம்மாவை நேர்ல பார்த்து பேசினாயா” என்றான்.

ஆமா என்று தலை அசைத்த தேவா “நீ எங்களிடம் சொல்லாவிட்டாலும் அம்மா என்ன சொல்லி இருப்பார்கள் என்று புரிந்தது ராம்.அதுவரை என்னிடம் மகன் போல் உரிமையாக பேசியவர்கள் திருமணத்திற்கு பிறகு வேறு நபர் போல்தான் பேசினார்கள்.அப்போதே எனக்கு சந்தேகம்.ஏதோ நடந்து இருக்கிறது என்று.....நீ வந்து சொன்னவுடன் அது உறுதியாகிவிட்டது.அதனால்தான் நானே அம்மாவை சந்தித்து எந்த சூழ்நிலையில் இந்த திருமணம் நடந்தது என்ற அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டேன்” என்றான்..

“எல்லாம் என்றால் “என ராம் அவன் முகத்தை பார்க்க

“எல்லாமே தான் “என அந்த வார்த்தையில் தேவா அழுத்தம் கொடுக்க

ராமோ “என்ன தேவா நீ ....எதற்காக இப்படி அவசறபட்டாய்.நானே அம்மாவிடம் பேசி” என அவன் தொடங்கவும்

“அதைவிடு ராம்.இப்போ அதற்கு எல்லாம் நேரம் இல்லை.....திருமணத்திற்கு அம்மா ஒத்து கொண்டதை பற்றி உங்கள் இருவரிடமும் சொல்லகூடாது என ரோஜா சொல்லி இருந்தாள். உன்னையும் ரதியும் சந்திக்க வைத்து மனம் விட்டு பேச வைத்து பின்தான் சொல்லவேண்டும் என்றாள்.ஆனால் நான் உளறிவிட்டேன்......இப்போது ரதியை அழைத்து கொண்டு ரோஜா ஹோட்டல் வந்து விடுவாள் .நாமும் அங்கு செல்லவேண்டும்” என்றான்.

“என்னது ஹோட்டலா” என ராம் அதிர

அப்போது தான் தேவாவே உணர்ந்தான்.”அய்யோ ராம் நான் இதை பற்றி யோசிக்கவில்லை .....உங்கள் திருமண சந்தோசத்தில் அவள் சொன்னதற்கு தலைஆட்டிவிட்டேன்” என பதறி சொல்ல

பின்னர் ராம் “சரி விடு தேவா.....அவள் தானே சொன்னாள்.....கண்டிப்பாக யோசிக்காமல் சொல்லி இருக்கமாட்டாள்.மேலும் ரதி உடன் இருக்கிறாள் அல்லவா ...ஒன்னும் நடக்காது வா போகலாம்” என கிளம்பி வந்தனர்.

காரை நிறுத்திவிட்டு வேகமாக நடந்தவன் அதற்குள் முக்கியமான நபர் எதிர்பட அவரிடம் பேசிக்கொண்டு இருந்ததில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது.

அவரிடம் பேசிமுடித்துவிட்டு அவன் வேகமாக உள்ளே வர நேர் எதிரில் ரதியும் ராமும் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தான்.அவனுக்கு கொஞ்சம் திருப்தி ஏற்பட எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என நிம்மதியுடன் அவர்கள் அருகில் வந்தான்.

அதற்குள் பேரர் இன்னொரு ஜூஸ் கொண்டுவர அதை எடுக்க நிமிர்ந்த விக்டர் எதிரில் வருபவனை பார்த்ததும் எங்கோ பார்த்தது போன்று தோன்ற சட்டென்று நியாபக வர” பாஸ்டர்ட் ...இவன் இங்க தான் இருக்கானா ...எப்படி விட்டேன் நான் ...இனி உன் சாவு என் கையில் தாண்டா” என கோபத்தில் உதடுகள் துடிக்க வார்த்தைகளை மென்னு துப்பியவன் கைகளை வேகமாக மேஜையில் குத்தினான்.

நன்றாக பேசிக்கொண்டு இருந்தவன் திடீரென்று ஒரு மாதிரி பேச “என்ன ஆச்சு...ஏன் இப்படி பேசறிங்க விக்டர்” என அவள் குழப்பத்துடன் கேட்க.

கண்களை மூடி கோபத்தை அடக்க முயற்சித்த விக்டர் ...”ஒன்றுமில்லை ரோஜா.......வெகுநாட்களாக தேடி கொண்டிருந்த ஒருவனை இப்போது தான் பார்கிறேன் அதான்” என்றான் .

“யாரு அது......உங்க நண்பரா” என அவள் கேட்டதும்

“இல்லை எனது துரோகி ரோஜா....இன்று நானும் நீயும் இப்படி இருக்கிறோம்னா அதற்கு அவன்தான் காரணம்”......என அவன் கோபத்தில் கொந்தளிக்க

“என்ன சொல்றிங்க விக்டர் ...எனக்கு புரியலை” என அவள் கேட்டதும்

“அன்று ஹோட்டலில் ஒரு தகராறு நடந்து அல்லவா ...அதற்கு காரணமானவனே இவன்தான் என்றவன் அன்று நடந்த விபரம் உனக்கு தெரியாது அல்லவா ரவி மாமா ஹோட்டல் என்பதால் அங்கு இருக்கும் நொறுக்கு தீனிகளை அவன் எடுக்க சென்றான்.

அப்போது சிலர் அங்கு மது அருந்தி கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர்.இவன் எடுத்துவரும் சாட் ஐய்ட்டத்தில் அவர்கள் கை வைத்துவிட ராவி வார்த்தை ஏதோ சொல்லிவிட்டான்.

அவன் சொன்னது தப்புதான்......பின்னர் குடிகாரர்கள் மத்தியில் மரியாதையாக பேசினாலும் எடுபடாது.....அதனால் அப்படி பேசிவிட்டான்.உடனே அவர்களும் அவனை திட்ட வாய் வார்த்தை கைகலப்பாக மாற அப்போது உள்ளே நுழைந்த நான் நாங்கள் மருத்துவகல்லூரி மாணவர்கள்...எங்கள் மீது கைவைத்தால் நடப்பதே வேறு அப்டின்னு” மிரட்டினேன்.

உடனே அவன் “நாங்க சட்ட படித்த வழக்கரிஞர்கள் ....எங்களுக்கும் ரூல்ஸ் தெரியும் மோதி பார்க்கலாம் யார் பெரியவர்கள் என்று” என வம்பிர்க்கு வந்தான்.

இப்படியே வாய் வார்த்தை தடிக்க எனக்கு கோபம் வர “பொய் பேசி பிழைப்பு நடத்தும் உங்களுடன் நாங்க மோதுவதா ...எங்களுக்கு அது கேவலம்”.....அப்டின்னு சொல்லிட்டு நான் ரவியை இழுத்து கொண்டு வந்துவிட்டேன்.அதற்கு பின்னர் அவர்கள் தான் எங்களை கண்டபடி பேசிக்கொண்டு இருந்தனர்.

அவர்கள் சென்ற பின்பே போலிஸ் வந்தது......அதன் பின் விசாரித்தால் இவர்கள் தான் பொய் கேஸ் கொடுத்து இருகின்றனர் .நாம் எல்லாம் மது அருந்தி டான்ஸ் ஆடுகிறோம் என்று.....அதனால்தான் போலிஸ் அங்கே வந்தது.அதற்கு பின்புதான் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது .எனக்கு இவன் முகம் நன்றாக நினைவில் இருக்கிறது” என நடந்த விபரங்களை சொல்ல

ரோஜாவோ “அப்டியா யார் விக்டர் அது” என ஆத்திரமாக கேட்க

“அதோ அங்கு ஒருவரிடம் பேசிக்கொண்டு இருக்கிறானே அவன்தான்” என அவன் கை நீட்டியதும் திரும்பி பார்த்த ரோஜா அதிர்ச்சியில் வேகமாக எழுந்தவள் அப்படியே சிலையாக நின்றாள். 2

“இவன்தான் ரோஜா அந்த பொருக்கி...எவ்ளோ திமிரா பேசினான் தெரியுமா? நான் இங்கு ஒரு கான்பரன்சுகாக வந்து இருக்கிறேன். அவர்கள் எல்லாம் அங்கு இருப்பதால் அமைதியாக இருக்கிறேன் .இல்லை என்றால் நடப்பதே வேறு” என அவன் பொரிந்து கொண்டிருக்க

ரோஜாவோ எதுவும் பேசாமல் அவனை பார்த்த படியே நின்று கொண்டு இருந்தாள்.



ஹோட்டலில் நுழைந்த தேவா சந்தோசமாக பேசிக்கொண்டு இருக்கும் ராம் ரதியை பார்த்த உடன் அந்த உற்சாகம் அவனுக்கும் தொற்ற துள்ளலுடன் உள்ளே வந்தவன் அதற்குள் ஒரு நண்பர் அவனை இடைமறிக்க அவரிடம் பேசிகொண்டு இருந்த போது தான் அவனை கை காட்டினான் விக்டர்.

தேவாவை பார்த்ததும் அவள் அதிர்ந்து நிற்க

அவரிடம்பேசி முடித்து விட்டு ராமிடம் சென்றவன் ...”என்ன ரதிம்மா உனக்கு சந்தோசமா தானே” என்றான்.

அவளோ முகத்தில் செம்மைபூக்க வெட்கத்தில் சிரித்து கொண்டே தலையை ஆட்டினாள்.

“சரி எங்க ரோஜாவை காணோம்” என அவன் கேட்க

“ரோஜா அவங்க கல்லூரி நண்பரோட இதோ அங்க பேசிட்டு இருக்காங்க அண்ணா” என ரதி கைகாட்ட

ஜூஸ் குடித்து கொண்டிருந்த ராம் அதை கவனிக்கவில்லை.



அதற்குள் அதிர்ச்சியில் சிலையாக நின்றா ரோஜாவை புரியாமல் பார்த்த விக்டர் ..”.என்னாச்சு ரோஜா” என கேட்க

அவளோ ஏதும் பேசாமல் அப்படியே நிற்க

“நீ டென்ஷன் ஆகாத...நான் பார்த்துகிறேன்...நீ முதலில் உட்கார் என அவளை அமரவைத்தான் விக்டர்...பிறகு அவளிடம் அன்று நடந்த விபரங்களை சொல்லி கொண்டு இருந்தான்.

ரோஜாவை பார்த்த தேவாவிற்கு ஏதோ மனதில் உறுத்த “சரி நானும் போய் பேசிவிட்டு வருகிறேன்” என அங்கு சென்றான்.

தேவா அருகில வரவும் அப்போது தான் பார்த்த விக்டர் “மறுபடியும் வந்திட்டான் பார்...இந்த முறை அவனை விடபோவதில்லை” என சொல்லியபடி கோபமாக அவன் எழவும் தேவா அருகில் வந்து “ரோஜா” என சொல்லவும் சரியாக இருந்தது.

சத்தம் கேட்டு ரோஜா திரும்பி பார்க்கும் முன் விக்டரின் கையில் தேவாவின் சட்டை காலர் இருந்தது.

“ஏண்டா அன்னைக்கு ஓடி போய் ஒளிஞ்சுகிட்டு எங்க மேல கேஸ் கொடுத்திலே....இப்போ நேர்ல இருக்கோன் ...நானா நீயா என்று பார்க்கலாமா “என கர்ஜிக்க

தேவாவோ சில நிமிடம் என்ன நடக்கிறது என உணருமுன்னே அவன் எல்லாம் பேசிமுடித்துவிட ...”டேய் யாருடா நீ ......என் சட்டை பிடிக்கிற” என அவனும் கோபத்தில் அவன் சட்டையை பிடிக்க...தேவாவிற்கு விக்டரை அடையாளம் தெரியவில்லை .

சத்தம் கேட்டு திரும்பி பார்த்த ராம் இருவரும் நிற்கும் நிலையை பார்த்து வேகமாக அருகில வந்தான்.

ரோஜாவோ அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்.உண்மைய சொல்லபோனால் அவளுக்கு அங்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.அடுத்தடுத்த அதிர்ச்சி அவளது மூளை செயல் திறனை நிறுத்தி வைத்து இருந்தது.

பதறி எழுந்து வந்த ராம் ரதி தரணி மூவரும் “ஹே யார் மேல கைவைக்கிற” என எகிற

அருகில வந்த பிறகே அவனை தெரிந்து கொண்ட ராம் “விக்டர் “என சொல்ல

திரும்பி பார்த்த விக்டர் ராமை பார்த்தும் “சார்...வாங்க...வாங்க ...அன்னைக்கு ஹோட்டலா நடந்த பிரச்சனைக்கு இவன்தான் சார் காரணம்.இவனோட கொஞ்சம் பேர் வந்து இருந்தாங்க...அவங்க தான் இத்தனைக்கும் காரணம்.நம்ம ரோஜாவை அந்த நிலைமைக்கு கொண்டு வந்ததே இவன்தான் சார்.இவன் சொன்ன பொய் புகார் தான் அன்னைக்கு போலிஸ் வந்திடுச்சு.... எல்லார்த்துக்கும் காரணம் இவன்தான் “ என படபடவென சொன்னவன்

“ஆமா ரோஜா ...நான் சொல்றது உண்மை” என ரோஜாவிடமும் அவன் திரும்பி பேச

அப்போது தான் ராமும் ரோஜாவை பார்த்தவன் அவள் சிலையாக நிற்ப்பதை உணர்ந்தான்.தேவாவும் அப்போது தான் ரோஜாவை பார்த்தான்.விஷயம் மெல்ல மெல்ல தேவாவிற்கு புரிய அதற்குள் விக்டர் “ரோஜாவின் தாத்தா நம்மை விட்டு போனதுக்கும் இவன்தான் சார் காரணம் என அவன் ஆக்ரோஷமாக சொன்னவன் இவனை சும்மா விடக்கூடாது சார் ......ரோஜா பட்ட வேதனையில் கொஞ்சாமாவது இவனும் படனும்” என கோபத்தில் வார்த்தைகளை அவன் அமிலமாக கொட்ட

இதை சற்றும் எதிர்பார்க்காத தேவா என்ன பேசுவது என தெரியாமல் அப்படியே நின்று கொண்டு இருந்தான்.

அதற்குள் கும்பல் கூடிவிட ராம் விக்டரை கொஞ்சம் தள்ளி அழைத்து சென்றவன் “விக்டர்...கொஞ்சம் பொறுமையா இருங்க......அவசரபடாதிங்க” என அவனை சமாதனபடுத்த

அவனோ “இல்லை சார்...அவனை விடாதீங்க...... அன்னைக்கு அவன் தப்பிச்சுட்டான்.இன்னைக்கும் அப்படி விட்றாதீங்க” என ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்தவனை

“அவர் எங்கும் போகமாட்டார் விக்டர்......நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க ......இது பொது இடம்......பார்க்கிறவங்க என்ன நினைப்பாங்க” என அவன் தன்மையாக சொல்ல

“என்ன சார் பொது இடம் ...அன்னைக்கு ரோஜாவும் அப்டிதானே துடிச்சிருப்பா...அந்த வேதனை அவன் படவேண்டாம் “என அவன் வேகமாக பேச

“இப்பவும் அப்படிதான் துடிக்கிறா அவ” என ராம் சொன்னதும்

“என்ன சார் சொல்றிங்க” என பேச்சை நிறுத்திவிட்டு அவன் முகம் பார்த்தான் விக்டர்.

“தனது கணவனை நான்கு பேருக்கு முன்னால் அவமானபடுத்தினால் எந்த பொண்ணும் துடித்து போவால்தானே” என்றான் ராம்.

“சார்ர்ர்ரர்ர்ர்” என விக்டர் முழிக்க

“ஆமாம் விக்டர் MR ராகதேவன் தான் ரோஜாவின் கணவர் என்றதும்” இப்போது விக்டர் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றான்.

ரதிக்கும் தரணிக்கும் நடந்து என்ன என்று புரியவில்லை என்றாலும் ரோஜாவை பாதிக்க கூடிய ஏதோ நடந்து இருக்கிறது என புரிய அவர்கள் ரோஜாவின் அருகில் ஆதரவாக நின்றனர்.

தேவாவோ இந்த சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் சில நிமிடம் தடுமாறியவன் பின்னர் அவனுக்கு ரோஜாவை பற்றி நன்கு தெரியும்.எனவே இப்போது எதுவும் பேசக்கூடாது என அமைதியாக நின்றான்.

விக்டரை சமாதானபடுத்தி அனுப்பிவிட்டு ரதியிடம் சென்றவன் நீங்கள் ரோஜாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு கிளம்புங்க...எதுவாக இருந்தாலும் அங்கு பேசிகொல்லாலம் என சொல்லிவிட்டு தேவாவை நோக்கி வந்தான் ராம். 3

தேவாவின் அருகில் வந்தவன் ...”சாரி தேவா .........அந்த பையன் ரோஜாவின் நண்பன்......அதனால் தான் ரொம்பவும் ஆத்திரபட்டுவிட்டான்” என சொல்ல

தேவாவோ “எப்படியும் ரோஜாவிடம் உண்மை சொல்லிவிடவேண்டும் என நினைத்தேன்...ஆனால் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் என நிறுத்தியவன் ...சரி வா போகலாம்....உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தானே ஆகவேண்டும்.தப்பு செய்தவன் நான்....தண்டனையை அனுபவிக்கிறேன்” என விரக்தியாக சொல்லிவிட்டு நடந்தான்.

தங்கையின் வாழ்வில் சந்தோசம் மலர அதை உற்சாகத்துடன் கொண்டாட வந்தவன் தனது வாழ்வு இப்படி இருட்டாகும் என அறியவில்லை.

வீட்டிற்கு சென்றதும் ரோஜாவை தேடி தேவா செல்ல அவளோ அவனிடம் பேச மறுத்துவிட்டாள்.

அவன் உள்ளே நுழைந்ததும் “எனக்கு தனிமை வேண்டும்...தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதீங்க என்று சொல்ல”...... இல்லை ரோஜா நான் சொல்வதை கொஞ்சம் கேளு என தேவா ஆரம்பிக்க

உடனே ராம் தேவாவிடம் “விடு தேவா....அவள் கொஞ்சம் தனிமையில் இருக்கட்டும்...இப்போது இருக்கும் மனநிலையில் நாம் எது சொன்னாலும் அவளுக்கு புரியாது......முதலில் அந்த அதிர்ச்சியை அவள் உணர்த்தும்...அதற்கு பின்பு நாம் பேசலாம்” என சொன்னான். அதன்பின் ராம் உட்பட அவளை யாரும் தொந்தரவு செய்யவில்லை.

அதற்குள் ராமிற்கு அவசர அழைப்பு வர ரதியிடம் சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.

இரவு நேரம் ஆனதால் தரணியும் கிளம்பிவிட்டாள்.

இரவின் தனிமையில் தேவா அமர்ந்திருக்க அவன் மனதிலோ பல எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருந்தான்.ஏனெனில் ரோஜா எந்த விஷயத்திற்கு எப்படி ரியாக்ட் பன்னவாள் என்று யாருக்கு தெரியாது.சின்ன விஷயத்தை பெரிது படுத்துவாள்.பெரியவிஷ்யதை இவ்ளோதான என்பாள்.அதனால் அவளிடம் எப்படி சொல்லி புரியவைப்பது என தெரியாமல் குழம்பி இருந்தான் தேவா.

மறுநாள் காலை உணவிற்கு ரதி ரோஜாவை அழைக்க அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

தேவாவை அழைக்க சென்றவள் அவனும் அதையே சொல்லவும் “என்ன அண்ணா இது...இரண்டு பேரும் இப்படி சாப்பிடாமல் இருந்தால் பிரச்சனை தீருமா”? என கேட்க

அவனோ நிமிர்ந்து ரதியை பார்த்ததும் அவள் “எனக்கு நடந்தது என்னவென்று தெரியாது.......அது உங்கள் இருவர் சமபந்தபட்டது என்று மட்டும் புரிகிறது.ஆனால் அதை பேசி தீர்த்துகொள்வதை விட்டு இப்படி தனி தனியே இருந்தால் பிரச்சனை எப்படி சரியாகும்” என்றாள்.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145

அவள் சொல்வதும் தேவாவிற்கு சரி என்று பட “சரி நீ கீழே போ ரதிம்மா ...நான் ரோஜாவை சாப்பிட அழைத்து வருகிறேன்” என்றான்.

அப்போது ராம் அலைபேசியில் அழைத்தவன் ரோஜாவை பற்றி கேட்டுவிட்டு நான் வேண்டுமானால் ரோஜாவிடம் பேசட்டுமா என்றான்.

தேவாவோ “வேண்டாம் ராம்.இது எங்கள் இருவரின் பிரச்சனை...நாங்களே பேசி தீர்த்துகொள்கிறோம்” என சொல்லிவிட அதற்கு பின் ராம் எதுவும் சொல்லவில்லை.

ரோஜாவின் அறைக்கு சென்ற தேவ கதவை திறந்தும் கோழிகுஞ்சு போல் அவள் குறுகி படுத்திருக்க அதை பார்த்ததும் தேவாவின் மனம் வேதனையில் துடித்து போனது.சில மணிநேரங்கள் கூட பசி பொறுக்க மாட்டாள்.நேற்றில் இருந்து சாப்பிடவில்லை என வருந்தியவன் “அம்லு அம்லு “என அழைத்தான்.

எதிர்புறத்தில் எந்த அசைவும் இல்லாததால் மெதுவாக கிட்ட வந்து “அம்லு...அம்லு” என அவன் அழைக்க

கண்விழித்து பார்த்தவள் அவனை பார்த்ததும் பார்வையில் ஒரு கோபம் தெரிய வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

அவளது பார்வையே அவளிடம் இருந்து அவனை விலக்க கட்டிலை விட்டு எழுந்தவன் ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தான்.

“ரோஜா என்ன இது.,.....உன் அத்தானை பற்றி உனக்கு தெரியாதா?” என அவன் கேட்டதும்

“அப்படிதான் நினைத்து இருந்தேன் நானும்....ஆனால் இப்போது தானே நிறிய விஷயங்கள் எனக்கு தெரியவருது” என அவள் சொன்னதும்

“ரோஜா நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை......நடந்ததை உன்னிடம் சொல்லிவிடுகிறேன் என்றவன் அன்று விக்டர் சொன்னது எல்லாம் உண்மைதான்....ஆனால் அவர்களும் எங்களை ரொம்ப கேவலமாக பேசினார்கள்.அதனால் தான் நான் அவ்வாறு செய்தேன்.என் முன்கோபமே எனக்கு சத்ருவாக மாறி போய்விட்டது” வருத்ததுடன் சொன்னான் .

அவளோ ஏதும் பேசாமல் அமைதியாக இருக்க

“நான் சொல்வதை நம்பு ரோஜா....இந்த மாதிரி நடக்கும் என்று நான் நினைக்கவில்லை.அவர்கள் தான் வந்து இருப்பார்கள் என நினைத்தேன்....நீங்கள் உடன் இருப்பது எனக்கு தெரியாது .மேலும் ஹோட்டலில் இது போல் நடப்பது சகஜம் தானே” என அவன் சொன்னதும்

நிமர்ந்து அவனை முறைத்தவள் “ நீங்கள் சகஜம்னு சொல்லிட்டிங்க......ஆனா எங்க தாத்தா இறந்தது....அதும் அப்டிதானா ” என சொல்லி நிறுத்த

“என்னை மன்னித்து விடு ரோஜா......இப்படி எல்லாம் நடக்கும் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.அன்று உன் பாட்டியிடம் பேசிக்கொண்டு இருந்த போதுதான் ஹோட்டலில் நடந்த பிரச்சனையால் உன் தாத்தா இறந்தார் என்று எனக்கு தெரிந்தது.மேலும் அதனால்தான் உனக்கு உடல்நிலை இப்படி ஆகிவிட்டது என தெரிந்தது.இதை நான் எதிர்பார்க்கவே இல்லை...நான் கோபத்தில் செய்தது ஒரு குடும்பத்தை எப்படி சுழற்றி போட்டுவிட்டது என நினைத்து துடித்து போனேன் தெரியுமா ?

அதற்கு பின்புதான் நான் உன்னை திருமணம் செய்ய முடிவு செய்தேன்......நாதன் கூட சொன்னான்.நன்றாக யோசித்து முடிவு எடு என்று....ஆனால் நான்தான் என்னால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நான் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து உடனடியாக இந்த திருமணத்தை முடித்தேன்” என அவன் தன தரப்பு நியத்தை அவளிடம் விளக்க முற்பட்டதில் அவனை அறியாமல் சில வார்த்தைகளை சொல்லிவிட்டான். 4

அவன் பேச பேச ரோஜாவின் முகம் மாற தேவாவோ அதை கவனிக்கவில்லை.

“நான் நல்லது தான் நினைத்து செய்தேன் ரோஜா...என்னை நம்பு “என சொல்லி அவன் முகம் பார்த்தவன்

அவள் முகம் கோபத்தில் தீ ஜுவாலையாக கொழுந்துவிட்டு எரிய ...கண்களில் இருந்த அக்னி அவனை எரித்து விடுவது போல் இருக்க வேகமாக அவன் அருகில் வந்து ..” அப்போ நீ எனக்கு வாழ்க்கை பிச்சை போட்டு இருக்கிற ...அப்டிதானே...என்ன சொன்னாய்...நீ செய்த தப்புக்கு பிராயச்சித்தம் என்னை திருமணம் செய்வது...... நான் கேட்டனா உங்கிட்ட என்னை திருமணம் செஞ்சுகோனு.... ......... தவறையும் செஞ்சுட்டு நீ நல்லவனா மாறிட்ட ............அப்டித்தான சொல்ல வரீங்க என வேகமாக கேட்டவள் ...ஆனால் நான் இழந்தது என்னை உயிருக்கும் மேலாக நேசித்த என் தாத்தாவை” என சொல்லி அழுக

தேவாவோ “ஐயோ அம்லு என்னது இது...நான் சொல்வதை தப்பாக புரிந்து கொண்டாய்...... நான் அப்படி சொல்லவில்லை ரோஜா என பதறியவன் ........அதற்க்கு முன்பே உன்னை எனக்கு பிடிக்கும்” என அவன் ஆரம்பிக்க

“இன்னும் புரியறதுக்கு என்ன இருக்கு .......இன்று என் தாத்தாவிற்காக என்னை திருமணம் செஞ்சீங்க.......நாளைக்கு இது போல் வேறு யார்காக நடந்தால் உடனே அங்கு இதே போல் செய்வீங்க அப்டிதானே” என அவன் சொல்வதை கேட்காமல் கோபத்தில் பேசிகொண்டே சென்றவள் ......

“புரியாம பேசாத ரோஜா......நான் சொல்வதை முதலில் கேள்” என அவன் கெஞ்ச

“நான் கேட்டது எல்லாம் போதும்......திருமணத்திற்கு முன்பே இதை சொல்லி இருந்தா நீங்கள் நல்லவன்...ஆனால் திருமணம் முடிந்து என நிறுத்தியவள் எத்தனை முறை கேட்டு இருப்பேன்...உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராது......எப்படி சம்மதிச்சங்கனு ...அப்போது எல்லாம் எப்படி சொல்லி நடிச்சீங்க.........உன்னை விரும்பிதான் திருமணம் செய்துகிட்டேனு......நான் ஒரு முட்டாள் ...இதை கூடபுரிஞ்சுக்காம இருந்து இருக்கேன் என பொரிந்து தள்ளிவள்...இனியும் ஒரு நிமிடம் நான் இங்க இருக்கமாட்டேன்......நான் என் வீட்டிற்கு செல்கிறேன்...முதலில் பாட்டியிடம் இதை சொல்லவேண்டும்” என அவள் கிளம்ப

“உனது பாட்டிக்கு இது தெரியும்” என அவன் சொன்னதும்

“என்னது “என அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தவள்

“என்ன சொல்றிங்க” என்றதும்

“அந்த ஹோட்டலில் போலீஸ்க்கு போன் செய்தது நான் தான் என்று உன் பாட்டிக்கும் தெரியும்” என்றான்.

“இருக்காது என கத்திய ரோஜா ...அப்படி இருந்தால் பாட்டி இந்த திருமணதிற்கு சம்மதம் சொல்லி இருக்க மாட்டார்” என சொல்ல

“அவருக்கு தெரியும் ரோஜா.....முதலில் உன்னை பற்றி முழுவிபரமும் அவர் சொன்னவுடன் நான் அதிர்ந்து விட்டேன்.இரவு முழுவதும் யோசித்து மறுநாள் உன்னை திருமணம் செய்து கொள்வதாக கேட்டேன்.உனது பாட்டி மறுத்துவிட்டார்.நீ சொன்னது போல் தான் சொன்னார்.என் பேத்தி கதையை கேட்டு நீங்கள் பரிதாபபட்டு வாழ்க்கை நீங்கள் இந்த முடிவு எடுத்து இருந்தால் என்னை மன்னித்து விடுங்க தம்பி...நான் இதற்கு ஒரு போதும் ஒத்துக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்.அதற்கு பின்பு தான் நான் முழுவிபரத்தையும் சொன்னேன் என்றான். அதற்கு பின்புதான் அவர் சம்மதித்தார்” என்றான்.

“அப்போ பாட்டியும் எனக்கு துரோகம் செய்து இருக்காங்க......என்னை பாரமாக நினைச்சு இருக்காங்க...அதான் நீங்க கேட்ட உடனே என் உணர்வுகளை கூட புரிஞ்சுக்காம திருமணத்திற்கு ஒத்துகிட்டு இருக்காங்க என சொல்லி அழுதவள் எனக்கு யாரும் தேவையில்லை.......யாரோட அனுதாபமும் எனக்கு வேண்டாம்” என ரோசமாக சொல்லிவிட்டு வேகமாக அவர்களின் அறைக்குள் சென்றவள் அங்கு துணிகளை பைகளில் எடுத்து அடுக்கினாள்.

தேவாவோ அவளுக்கு எப்படி சொல்லி புரியவைப்பது என தெரியாமல் அவளிடம் கெஞ்சி கொண்டு இருந்தவன் சட்டென்று கோபம் வர...”ஹே என்னடி நான் சொல்லிட்டே இருக்கேன்...நீ கேட்கவே மாட்டேன்கிற.....முதலில் நான் சொல்வதை கேள்” என ஒரு அதட்டல் போட... எப்போது இது போல் பேசினால் அவள் அமைதியாகிவிடுவாள் என எண்ணி அவன் பேச அதுவரை கோபமாக மட்டும் பேசிக்கொண்டு இருந்தவள் காளியாக அவதாரம் எடுத்தாள்.



அவனது கோபம் அவளை மேலும் உசுபேத்திவிட வேகமாக பெட்டியை எடுத்து கொண்டு கீழே செல்ல,அங்கு நின்ற ரதி எவ்ளோ தடுத்தும் அவள் நிற்காமல் கிளம்பினாள்.
 
Top