• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உயிர் - 34 ஃபைனல்

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
அத்தியாயம் -34



தேவாவோ எதுவும் சொல்லாமல் அவள் செல்வதையே பார்த்து கொண்டு இருந்தான்.

ரோஜாவை தடுக்க முடியாமல் தேவாவை தேடிய ரதி அவன் அங்கு நின்று அவளை பார்த்து கொண்டிருப்பதை பார்த்து “என்ன அண்ணா நீங்களும் அமைதியா நிற்கிறீங்க...ரோஜா வீட்டை விட்டு கிளம்பி போறா...வேண்டாம்னு சொல்லுங்க.......நான் சொன்னா கேட்கமாட்டேன்கிரா” என அவள் பதட்டத்துடன் சொல்ல

“நான் பேசுவதை அவள் எங்கே கேட்கிறாள் ரதிம்மா...அவளாக ஒரு அர்த்தத்தை கற்பனை செய்து கொண்டு பேசுகிறாள். நானும் சொல்லி பார்த்து விட்டேன்.......இப்போது நாம் என்ன சொன்னாலும் அவளுக்கு புரியாது......நேராக ராமின் வீட்டிற்கு தான் செல்வாள்.நான் ராமிடம் சொல்லிவிடுகிறேன்” என்றவன் அலைபேசி எடுத்து ராமை அழைத்து விபரம் சொன்னான்.அவன் சொல்லி முடிக்கவும் ரோஜா அங்கு செல்லவும் சரியாக இருந்தது.

வேகமாக உள்ளே வந்த ரோஜா நேராக காவேரி அம்மாவிடம் சென்று “நான் இனிமேல இங்கு தான் இருப்பேன்” என்று சொல்ல

அவரோ எதுவும் புரியாமல் “என்ன ரோஜா...என்னாச்சும்மா என பதறி போனார்.

அவளோ அழுகையுடன் “அது வந்து” என ஆரம்பிக்க

அங்கு வந்த ராம் கண்களாலே அமைதியாக இருக்க சொல்லி ஜாடை காட்டினான்.

அதை புரிந்து கொண்ட காவேரி ...”ரோஜா நீ முதல்ல அழுகைய நிறுத்து.....நீ இங்கே இருக்கலாம்...முதல்ல உன் அறையில் கொண்டு போய் இந்த பெட்டியை வச்சுட்டு முகம் கழுவிட்டு வா.....உனக்கு பிடிச்ச ராவ தோச பண்ணிருக்கேன் சாப்பிடலாம்” என்றார்.

“அவளோ எனக்கு வேண்டாம் அத்தை பசிக்கலை” என்று சொல்ல

“அதெல்லாம் பசிக்கும் நீ முதலில் அறைக்கு சென்று முகம் கழுவிக்கொண்டு வா” என அனுப்பி வைத்தார்.

பின்னர் “ராமிடம் என்னடா ஆச்சு...அய்யோ அவ சந்தோசமா இருக்கானு சொன்ன...இப்போ அழுதிட்டு வந்து நிற்கிறா.....என்னடா நடந்திச்சு” என பதட்டமாக கேட்க

அவனோ ஹோட்டலில் நடந்ததை சொன்னவன் “யாரும் எதிர்பார்க்கவில்லை அம்மா.....இப்படி நடக்கும் என்று ...அந்த இடத்தில் எதுவும் பேசமுடியலை......இரவு இவள் கோபத்தில் இருந்ததால் நான் தான் தேவாவிடம் பேசவேண்டாம் என்று சொன்னேன்...காலையில் தேவா ஏதோ சொல்லி இருப்பான் போல் தெரிகிறது......உங்கள் மருமகளை பற்றி தெரியாதா.....எதையும் முழுதாக கேட்கமாட்டாள்.அரைகுறை பேச்சிலே இவளாக ஒரு அர்த்தம் கற்பித்து கொண்டு பிரச்சனை பண்ணி கொண்டு இருப்பாள்.அது தான் இப்போதும் நடந்திருக்கும் என்று நினைக்கிறேன்.தேவா போன் செய்து ரோஜா கோபித்து கொண்டு அங்கு வருகிறாள்.எதுவும் பேசவேண்டாம் ...அவளை முதலில் சாப்பிடசொல்லுங்கள் என்று சொன்னான்” என சொல்லி கொண்டு இருக்க

“ஓ அதற்குள் இங்கு போன் பண்ணி விட்டாரா என கேட்டு கொண்டே வந்தவள் இவர் என்ன என்னை சாப்பிட சொல்வது...ரொம்பதான் அக்கறை...இதை நம்பித்தான் நான் ஏமாந்து போனேன்” என்றவள் சிறிது நேரம் அவனை திட்ட ராமோ, காவேரியோ எதுவும் பேசாமல் அமைதியாக கேட்டு கொண்டு நின்றனர்.

வேகமாக சாப்பிட அமர்ந்தவள் காவேரி இருவருக்கும் பரிமாற இரண்டு வாய் எடுத்து வைத்தவள் கண்களில் இருந்து கண்ணீர் கடகடவென வர “என்னால் முடியலை ராம்......தேவா என்னை ஏமாத்திட்டார்......என்கிட்டே இருந்து நிறைய விஷயங்களை மறைச்சிட்டார் என்றவள் கடைசில அவர் செய்த தப்புக்கு பரிகாரமாகதான் என்னை திருமணம் செஞ்சுகிட்டாறாம்” என சொல்லும்போதே மனம் தாளாமல் பெரும் குரல் எடுத்து அழுக

காவேரியும் ராமும் பதறி...”ரோஜா ..ரோஜா குட்டி என அவளை தாங்கியவர்கள் இல்லடா...நீ அழுகாத ...உனக்கு நான் இருக்கேன்”.....என காவேரி ஆறுதல் சொல்ல

“ரோஜா குட்டி உன் மாம்ஸ் இருக்கேண்டா ....நீ கவலைபடாத...அவனை நான் என்னனு கேட்கிறேன்”.......என அப்போது அவளுக்கு சார்பாக ராமும் அறுதல் சொல்ல தேம்பியபடியே அவன் தோளில் சாய்ந்தாள் ரோஜா.

அவன் அவளின் தலையை தடவிகொடுக்க இரவு முழுவதும் தூங்காத மயக்கம் ராமின் தோளில் சாய்ந்ததும் ஒரு நிம்மதி வர அப்படியே கண்மூடினாள் ரோஜா.

அவளை மெதுவாக அறைக்கு தூக்கி சென்று படுக்க வைத்து விட்டு ராம் வெளியே வர தேவா உள்ளே வந்தான்.

அவனை பார்த்ததும் காவேரி முறைக்க” ராமோ வா தேவா” என்றான்.

ஒரு இரவில் ஒரு மனிதன் இப்படி மாறிவிட முடியுமா என்பதை போல் தேவாவின் முகம் களையிழந்து சோர்ந்து காணப்பட்டது.

“என்னடா காலையில நடந்தது” என ராம் நேராக விஷயத்திற்கு வர நடந்ததை சொன்னான் தேவா.

“என்ன தேவா நீ ..இவ்ளோ பெரிய வக்கிலா இருந்திட்டு பேச தெரியாம பேசி பாரு பாவம் ரோஜா ரொம்ப மனசு ஒடஞ்சு போயிருக்காடா” என சொல்ல

“ராம் உண்மையா சொல்லட்டுமா.....ரோஜாவுக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு தெரிஞ்ச உடனே எனக்கு எதுவுமே ஓடல....நானா இப்படினு எனக்கே ஆச்சிரியமா இருக்கு..எப்டியாவது என்னை புரியவைக்கனும்னு நினைச்சு பேசினேண்டா ...ஆனா அதை அவ இப்படி தப்பா அர்த்தம் பண்ணிக்குவானு நான் நினைக்கலை...எது நடக்க கூடாது...அவ என்னை விட்டு போயிடகூடாதுன்னு நினச்சேன் பேசினனோ ...ஆனால் அது நடந்திடுச்சு” என புலம்பினான்.

“சரி விடு தேவா......எல்லாம் முடிஞ்சுடுச்சு......இப்போ அடுத்தது என்ன பண்ணலாம்” என கேட்டான் ராம்.

“தெரியலை ராம்...எனக்கே தெரியலை.......ரோஜா எனக்கு வேணும்...அதுக்கு நான் என்ன பண்ணனும்...அவ காலில் வேண்டுமானாலும் விழறேன்” என சொல்ல

“டேய் என்ன உளற” என அதட்டிய ராம்

“இல்லை ராம் ...உனக்கு தெரியாது....அவ மேல நான் உசிரே வச்சிருகேண்டா.....பலமுறை உண்மைய சொல்றதுக்கு வாய்ப்பு கிடச்சும் என்னை விட்டு எங்க பிரிஞ்சுடுவாலோனு நினைச்சே நான் சொல்லாம விட்ருக்கேன்....நான் நினைச்சது இப்போ நடந்திடுச்சு”........என புலம்பியவன்

“ஆனா அவ ஆரம்பத்தில் இருந்தே அப்டிதான்...என்னை தப்பாவே புரிஞ்சுகிறாடா” என சொல்லி ஆதங்கப்பட

“இல்லை தேவா.....உனக்கு தெரியாதா...நம்ம யார்மேல அதிக பாசம் வச்சிருக்கமோ அவங்க மேலதான் அதிக கோபமும் வரும்.கொஞ்ச நாள் பொறு அவ மாறிடுவா” என்றவன் அதற்குள் ராமிற்கு அலைபேசி அழைப்பு வர அங்கிருந்த நகர்ந்தான்.

காவேரி அம்மாள் எதுவும் பேசாமல் நிற்க அவரின் அருகில் சென்றவன் “அம்மா நீங்களும் என்னை நம்பலையா” என மனதின் வலி வார்த்தையாக வெளிவர

அவரோ அவனை நிமிர்ந்து பார்க்க

“எனக்கு புரியுது தேவா.....ஆனால் இப்போ ரோஜா இருக்கிற மனநிலையில் அவளுக்கு இங்குதான் பாதுகாப்பு என்றவர்....அவள் இங்கே கொஞ்ச நாள் இருக்கட்டும்..... நீ கவலைபடாதே...சீக்கிரம் அவள் உன்னை புரிந்து கொள்ளுவாள்” என்றார்.



அதற்குள் ராம் வந்தவன் ...”தேவா ரோஜா நல்ல தூங்கிட்டு இருக்கா...நீ பார்த்திட்டு கிளம்பு...நான் வேலையாக வெளியே செல்கிறேன்.....மற்றதை பிறகு பேசிக்கலாம்” என சொன்னான்.

தேவாவும் ரோஜாவின் அறைக்கு சென்றவன் அவள் தன்னை மறந்து தூங்கி கொண்டு இருக்க அருகில் சென்றவன் மெல்ல அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்தவன் இன்னும் நீ என்னை புரிஞ்சுக்கவே இல்லைஅம்லு......உன்னை நான் ஏமாற்றுவனா.....அது என்னைய நான் ஏமாற்றி கொள்வதற்கு சமம்.......போதும் அம்லு.......இந்த ஒரு இரவே என்னால தாங்க முடியலை.......என்னை இப்படி தவிக்க விடாம சீக்கிரம் வந்திருடி......நீ இல்லாத வாழ்வை என்னால் நினச்சே பார்க்க முடியலை என புலம்பியவன் அவளிடம் அசைவு தெரிந்ததும் வேகமாக எழுந்து வெளியே வந்தான்.செல்ல மனமின்றி சில மணித்துளிகள வெளியில் இருந்தே அவளை பார்த்து கொண்டு இருந்தவன் பின்னர் காவேரி அம்மாவிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

இரண்டு நாட்கள் சென்றன...ரோஜாவின் கோபம் குறையவில்லை.ரோஜாவின் வீட்டிற்கு இது தெரியவேண்டாம் என சொல்லிவிட்டான் தேவா.அதனால் ராம்மும் சொல்லவில்லை.ரோஜாவும் சொல்லவில்லை.

வாணியின் கேஸ் சம்பந்தமாக ரோஜா பிசியாக இருந்தாள்.இதற்கு இடையில் ரதி மற்று தரணி, எவ்ளோவோ எடுத்து சொல்லியும் தேவாவின் பக்கம் இருக்கும் நியாயத்தை அவள் கேட்க மறுத்து விட்டாள்.அவள் பிடிவாதகாரி என்று தேவாவிற்கு தெரியும்.ஆனால் இந்த அளவிற்கு இருப்பாள் என்று அவனும் நினைக்கவில்லை.

அன்று ஞாயிற்று கிழமை......இரவு முழுவதும் தேவாவின் நினைப்பில் அழுது கொண்டு இருந்தவள் விடிந்து வெகுநேரமாகி கீழே வந்தாள்.

அப்போது அங்கு காவேரிக்கும் ராமிற்கும் பெரிய வாக்குவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது.அவளை பார்த்ததும் இருவரும் அமைதியாகிவிட்டனர்.

என்ன அத்தை...என்ன பேசிட்டு இருந்தீங்க......என்னை பார்த்ததும் நிறுத்திட்டீங்க என கேட்டாள் ரோஜா.

“அதெல்லாம் ஒன்றும் இல்லை ரோஜா.....சும்மா தான் கல்யாண விஷியத்தை பற்றி பேசிட்டு இருந்தோம்...சரி நீ காபி குடிச்சுட்டு போய் ப்ரெஷ் பண்ணிட்டு வா சாப்பிடலாம்” என்றார்.

“நான் ப்ரஷ் பண்ணிட்டேன் அத்தை” என அவள் சொன்னதும்

ராம் திரும்பி “அம்மா வெளியே மழை வருதானு பாருங்க......பத்து மணி ஆனாலும் பெட் காபி குடிக்காம ப்ரஷ் பண்ணமாட்ட ...இப்போ எப்படி” என அவன் கிண்டலாக கேட்க

“இல்லைய்னா அத்தான் திட்டுவார் மாம்ஸ்.....அவருக்கு காலையில எழுந்த உடனே ப்ரஷ் பண்ணிடனும் என்றவள் கொடுங்க அத்தை காபியை “என வாங்கி கொண்டு சோபாவில் அமர்ந்தாள்.

ராமோ ஏதும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் .ரோஜாவிற்கு ஏற்ற ஆள் தான் தேவா என நினைத்தான்.

“பின்னர் அத்தை சாப்பாடு” என்ன என கேட்க

“ஆப்பம் வடகறி என சொன்னதும் அத்தானுக்கு ரொம்ப பிடிக்கும் அத்தை” என அவள் வாயில் இருந்து சட்டென்று வார்த்தைகள் வர

“ஏன் ரோஜா காலையில இருந்து அத்தான் அத்தானு சொல்லிட்டு இருக்க.....இவ்ளோ பாசம் வச்சிருக்கிரவ எதுக்கு ரோசபடனும்....அவன்தான் தான் சொன்னது தவறுன்னு மன்னிப்பு கேட்டான்ல...அப்புறம் எதுக்கு நீ இப்படி வீம்பு பண்ணிட்டு இருக்க” என காவேரி அம்மா சந்தடி சாக்கில் அவளுக்கு அறிவுரை அள்ளி வழங்க

அவள் முகம் சட்டென்று மாற “இல்லை அத்தை....அவர் தப்பு பண்ணினார் பண்ணலை...அது வேற விஷயம்...ஆனா என் தாத்தா இறந்தது அதுனாலத்தான ...மேலும் இதை என்கிட்டே சொல்லாம மறைச்சு என்னை கல்யாணம் பண்ணினார் பாருங்க அதான் என்னால் தாங்கிக்க முடியலை” என வேதனையுடன் சொன்னவள் சாப்பிடாமலே எழுந்து செல்ல பின்னர் ராம் கெஞ்சி அவளை சாப்பிட வைத்தான்.

தேவாவோ ரோஜா இல்லமால் தவித்து போனான்.எங்கு சென்றாலும் அவள் முகமே நினைவிற்கு வர தினமும் மறைவில் இருந்து அவன் அவளை பார்த்தாலும் அவளிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு மரணத்தை விட கொடியதாக தெரிந்தது.

அன்று வாணியின் கேஸில் முக்கியமான சாட்சி விசாரணை என்று நேரமாக புறப்பட ரோஜா எப்போதும் தரணி அவளை அழைத்து செல்வாள்.இன்று அவளுக்கு வேலை இருக்கிறது என்று கூறிவிட மேலும் அந்த கேஸ் தொடர்பான சில பைல்கள் தேவாவின் அலுவலகத்தில் இருக்க அதை எடுக்க வந்தாள் ரோஜா.

தேவா வருவதற்கு முன்பே அங்கு சென்று அதை எடுத்து வந்து விட வேண்டும் என முடிவு செய்து நேரமாக சென்றாள்.

வெளியில் வண்டி இல்லாமல் இருக்க ஆனால் கதவு திறந்து இருந்தது.

“இந்த மணிக்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை...இப்படிதான் பொறுப்பில்லாமல் கதவை திறந்து போட்டுவிட்டு வெளியே போயிருக்கான்” என திட்டிகொண்டே உள்ளே நுழைந்தவள் அந்த பைலை தேட அங்கு அது இல்லை.

தேவாவின் அறைக்குள் வைத்ததாக நியாபகம் வர மெதுவாக அறையை திறந்து பார்த்தவள் யாரும் இல்லாததை கண்டு “ஹப்பா நல்லவேளை...இன்னும் வரவில்லை” என சொல்லிபடியே அவள் அங்கு அதை தேட

“மேல் கபோர்டில் இருப்பது எட்டாமல் இருக்க ஒரு காலை கபோர்டின் ஒரு பகுதியில் வைத்து கையை தூக்கி அதை எடுக்க முயற்சித்தாள்.

அப்போது உள்ளே ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த தேவா இங்கு ரோஜா ஒற்றை காலில் நடனமாடி கொண்டிருப்பதை பார்த்ததும் ஒரு நிமிடம் அதிர்ந்தவன் “அம்லுஊஊஊ” என அந்த வார்த்தை வாயில் இருந்து வராமல் அவன் இதயத்தில் இருந்து வர அது அவள் உயிர் வரை ஊடருவ சற்று தடுமாறியவள் பூபந்து போல் சரிய கையில் ஏந்திகொண்டான் தேவா.

ரோஜாவோ அதிர்ச்சியில் அவனை பார்த்து கொண்டு இருக்க ...தேவாவும் அதே மனநிலையில் தான் இருந்தான்.சில மணித்துளிகள் அப்படியே நின்று இருந்தவர்கள் முதலில் சுதாரித்த ரோஜா சட்டென்று அவன் பிடியில் இருந்து கீழே குதிக்க முயல

“ஹே பார்த்து பார்த்து” என அவளை மெதுவாக இறக்கிவிட்டவன் “எப்படி இருக்க அம்லு” என கேட்டான்.

அவனை பார்த்ததும் மனதில் ஒரு சிலிர்ப்பு வந்தாலும் அவன் செய்தததை நினைத்த உடன் கோபம் வர .......அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் பைலை எடுத்து கொண்டு வெளியே வந்தாள்.

“அம்லு ப்ளீஸ் நான் சொல்றத புரிஞ்சுகோ” என கெஞ்சிகொண்டே பின்னால் வந்தவன்

அவள் திரும்பி “இதுவரை நான் கேட்டு பட்டது எல்லாம் போதும்...இனியும் நான் ஏமாற மாட்டேன்......நம்பிக்கை துரோகம் செஞ்சவங்களை நான் என்னைக்கும் மன்னிக்கவும் மாட்டேன்...மறக்கவும் மாட்டேன்” என சொல்லிவிட்டு திரும்பி கதவை திறக்க

“யாருக்கு பஞ்சுமிட்டாய் சொல்லிட்டு இருக்க” என்றபடியே ஒரு உருவம் வெளியே இருந்து உள்ளே வந்தது.

அவரை பார்த்ததும் ரோஜா வியப்பில் “ஹே JV “என சொல்லிகொண்டே அவரை கட்டி பிடித்து கொண்டாள். 2

“ ஜெயந்தி சித்தி என்றவன் வாங்க சித்தி” என தேவாவும் சந்தோசமாக அழைக்க

“நீ பேசாதடா ...உன் மேல எனக்கு கோபம்.......என்றவர் உன்மீதும் தான் பஞ்சுமிட்டாய்” என்றார்.

“உடனே அவரிடம் இருந்து விலகி என்னாச்சு jv என் மீது கோபம்......நான் என்ன செய்தேன் “என சிறு பிள்ளை போல் சிணுங்கி கொண்டே கேட்க

“நீ இன்னும் இந்த சினுங்கிற பழக்கத்தை விடலையா”....என சிரித்து கொண்டே கேட்டவர்

அதற்குள் “என் மேல் என்ன கோபம் சித்தி” என்றான் தேவா.

“ஏண்டா படவா நான் இல்லாத நேரமா பார்த்து என் பஞ்சுமிட்டாயை நீ ஏம்மாற்றி கல்யாணம் பண்ணிகிட்ட....ம்ம்ம்” என செல்லமாக மிரட்டலாக கேட்டவர்

“ஏன் ரோஜா உனக்கு வேற மாப்பிளையே கிடைக்கலையா... இவனை போய் கல்யாணம் பண்ணிருக்க .... கிரிமினளோட பழகி பழகி அப்படியே இருப்பானே” என கிண்டலாக சொல்லி கொண்டே செல்ல


“அய்யோ இங்கு என்ன நடக்குதுன்னு தெரியாம சித்தி வேற அவளை ஏத்தி விடறாங்களே...ஏற்கனவே எண்ணெய்ல விழுந்த கடுகு மாதிரி பொரிவா...பத்தாதுக்கு இவங்களும் ஏத்தி விடறாங்க.....டேய் தேவா இன்னிக்கு சனி உனக்கு தாண்டா” என மனதில் புலம்பி கொண்டே வெளியில் சிரித்து கொண்டு இருந்தான் தேவா.
 

Lashmi Ravi

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
145
ரோஜாவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தவள் கடைசியாக “நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை தான் jv......நான் தான் ஏமாந்திட்டேன் என சொன்னவள் அப்புறம் நீங்க எப்போ ஊர்ல இருந்து வந்தீங்க” என கேட்டாள்.

“ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க தான் வரேன்......உங்க திருமணத்திற்கு என்னால் வரமுடியலை...அப்புறம் இரண்டு முறை ட்ரை பண்ணேன்........தேவா கூட உங்களுக்காக ரிசப்சன் வைக்கிறேனு சொன்னான்.ஆனா எனக்கு டிக்கெட் கிடைக்கலை...அதான் வந்த உடனே இங்க உங்களை பார்க்க வந்திட்டேன்..

“ஏண்டா கல்யாணத்திற்கு முன்னாடிதான் ஆபீசே கதின்னு இருப்ப......இப்பவும் அப்டிதானா.....நல்லவேளை வீட்டிற்கு போயிருப்பேன்...இங்க பார்த்திட்டு போலாம்னு வந்தேன்...ஏன் ரோஜா நீ இப்படி இவன் கூட சேர்ந்து இப்படி மாறுன” என அவர் அவர்களை வம்பிழுத்து பேசிகொண்டே இருக்க

“jv எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு நான் கிளம்பறேன்” என சொல்லிவிட்டு ரோஜா வேகமாக வெளியே வந்துவிட்டாள்.

மனது சற்று பாரமாக இருக்க ஆட்டோவை நேராக பாபா கோவிலுக்கு விடசொன்னாள்.அங்கு சென்று சிறிது அமர்ந்திருந்தவள் அவள் நினைவு முழுவதும் தேவாவையே சுற்றி வர அவன் அவளை பூ போல் தாங்கியது ,அம்லு என்று அழைத்தது ,அவனது கண்ணில் இருந்த ஏக்கம் இவை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து கொண்டே இருக்க தலையை பிடித்தபடி அப்படியே சுவற்றில் சாய்ந்தவள் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வந்து கொண்டு இருந்தது.

இப்போதும் நான் தான் வேதனைபடுகிறேன் ராகன். அன்று என்னால் என் குடும்பம் வேதனை பட்டது....என் உயிர் தாத்தா என்னை விட்டு சென்றார்.......அடி மேல் அடி விழுந்து நொறுங்கி கிடந்த நான் உன்னால் தான் உயிர் பெற்றேன்........இனியாவது என் வாழ்வில் வசந்தம் வரும் என நினைத்தேன்......ஆனால் அந்த கடவுளுக்கே அது பொறுக்கவில்லை.......

நான் யாரை உயிராக நினைக்கிறனோ அவர்கள் என்னை விட்டு பிரிந்து விடுகிறார்கள்.......என்னால் முடியவில்லை ராகன் ...... நீங்கள் செய்த தவறை என்னால் மன்னிக்க முடியவில்லை.....நான் என்ன செய்வேன்......எனக்கு மட்டும் ஏன் இந்த சோதனை” என மனதிற்குள் புலம்பியபடியே அமர்ந்திருந்தாள்.

அப்போது “அம்மா ஆட்டோ ரொம்ப நேரமா வெயிடிங்ல இருக்கு” என ஆட்டோகாரன் வந்து அவளை அழைக்க அப்போதுதான் தான் இருக்கும் இடத்தை அறிந்தவள் சட்டென்று எழுந்து “இதோ வந்துவிட்டேன்” என்றபடி கிளம்பினாள்.

மறுநாள் மனது ஏதோ போல் இருக்க கிளம்பி அன்னை இல்லம் சென்றாள்.அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தவள் அவள் உள்ளே நுழைந்ததும் “இதோ ரோஜாவே வந்திட்டா “என காவேரி சொன்னதும் திரும்பி பார்த்த ரோஜா அங்கு ஜெயந்தி அமர்ந்திருந்தார்.

அவரை பார்த்ததும் அப்போதுதான் அவரை நேற்று பார்த்த நினைப்பு அவளுக்கு வர” jv என்றபடி அருகில் வந்தவள் சாரி jv “என்றாள்.

அதற்குள் காவேரி” நான் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வருகிறேன் நீங்கள் பேசிக்கொண்டு இருங்கள்” என சொல்லிவிட்டு அவர் கிளம்பினார்.

சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருக்க .......”என்ன பஞ்சுமிட்டாய் ...என்னிடம் என்ன கோபம்” என பேச்சை ஆரம்பித்தார் ஜெயந்தி .

வேகமாக நிமிர்ந்தவள் “அப்படி எல்லாம் ஏதும் இல்லை ஆன்ட்டி.......நேற்று பார்த்தது உங்களிடம் நான் சரியாக பேசவில்லை....அப்புறம் அப்புறம்” என சொல்லி நிறுத்த

“நேற்றே நான் பேசவில்லையே மறுபடியும் ஏன் இங்கு வந்தாய்னு கேட்கிற...அப்டித்தான” என அவர் சிரித்து கொண்டே கேட்க

“இல்லை இல்லை jv......நிஜமாவே பல குழப்பத்துல உங்களை நான் மறந்திட்டேன் ...இப்போ பார்த்த உடனே ரொம்ப கஷ்டமா போச்சு” என அவள் சமாதானம் சொன்னாள்.

“சரி குழம்பின குட்டையில இப்போ நான் மீன் பிடிக்க வந்திருக்கேன்...மீன் சிக்குமா என அவர் புதிராக கேட்க

அவளோ விருடென்று நிமிர்ந்தவள் என்ன சொல்றிங்க என புரியாமல் சில நிமிடம் யோசித்தவள் அவர் கேட்க வந்தது புரிந்ததும் “கண்டிப்பா சிக்காது jv.....இது மீன் இல்லை...திமிங்கலம்......தானாக சிக்கினால்தான் உண்டு”...என அவளும் அவர் பாணியில் பதில் கொடுத்தாள்.

அவளது பதிலில் அசந்து போன ஜெயந்தி” பரவயில்லை ரோஜா.....ராகதேவனின் மனைவி என்பதை நீ நிருபிக்கிறாய் என சொல்லி சிரித்தவர் சரி நான் கிளம்புகிறேன்.உன்னை பார்த்து பேசிவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன்” என்றார்.

“என்ன ஆன்ட்டி நீங்க இப்பதான் வந்தீங்க...அதுக்குள்ள கிளம்பறேன்னு சொல்றிங்க என்றவள் இருங்க என்ன சாப்பிட்ரிங்க” என கேட்டாள்.

“என் மகன் வீடாக இருந்தால் உரிமையாக கேட்டு சாப்பிடலாம்” ஆனால் என அவர் நிறுத்த

“வீடு எதுவாக இருந்தாலும் உங்களை அழைப்பது உங்கள் ரோஜாதானே ஆன்ட்டி” என அவள் சொன்னதும்

இருவருக்கும் இடையே இருந்த மறைமுக பேச்சு முடிவுக்கு வர சரி “ரோஜா நான் நேரடியாக கேட்கிறேன்.....தேவா செய்தது தவறுதான்......அவன் உன்னிடம் மன்னிப்பும் கேட்க தயாராக இருக்கிறான்......நீ எப்போது வீட்டிற்கு வருகிறாய் “ என கேட்டார் ஜெயந்தி.

“கடல் நீரை கையினால் கட்டுபடுத்தமுடியாது...இப்போது என் மனதின் உணர்வுகளும் அது போல்தான் ஆன்ட்டி......என்னால் அவரை எந்த காலத்திலும் மன்னிக்க முடியாது” என அவள் முடிவாக சொல்ல

“யோசித்து பதில் சொல் ரோஜா” என அவர் சொல்ல

“முடிந்து போன அத்தியாத்திற்கு இனி முகவுரை தேடாதீங்க என்றவள் நம்பிக்கை துரோகத்தை நான் எப்போதும் மன்னிக்கமாட்டேன்.....அவர் உங்களிடம் எல்லாம் சொல்லி இருப்பார்......நீங்கள் சொல்லுங்கள் ஆன்ட்டி...என் தாத்தாவை பற்றி எத்தனை முறை இவரிடம் பேசி இருப்பேன்.....அப்போதாவது இவர் உண்மையை என்னிடம் சொல்லி இருக்கலாம் இல்லயா.......என் மேல் அவர் உண்மையாக அன்பு வைத்து இருந்தால் அவர் உண்மையை சொல்லி எனக்கு புரிய வைத்துவிட்டு அதன் பின்னர் என்னுடன் குடும்பம் நடத்தி இருப்பார்.ஆனால் இவரோ அப்படி செய்யாம்மல் மறைத்து என்னுடன் போலியாக வாழ்ந்து இருக்கிறார். .........நினைக்கும்போதே என் உடல் கூசுகிறது ஆன்ட்டி...அப்போ இவர் என்ன நினைத்து இருக்கிறார்...இவளுடன் வாழ்ந்தபிறகு சொன்னால் இவள் நம்ம விட்டு எங்கும் செல்லமாட்டாள் என்ற எண்ணம் தானே.......அது என்னிடம் பலிக்காது” என அவள் சொல்லும்போதே முகம் கோபத்தில் சிவக்க

“உனது கோபம் புரிகிறது ரோஜா ......உனது தாத்தாவின் இழப்பு கண்டிப்பாக ஈடு செய்ய முடியாத ஒன்றுதான்.....ஆனால் ஒன்றை புரிந்து கொள்...முடிந்து போன செயலை நினைத்து இருக்கும் வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாதே......தவறு செய்பவன் திருந்தி வரும்போது மன்னிப்பது மனித தன்மை ரோஜா” என்றார் அவர்.

“இல்லை ஆன்ட்டி அவர் திட்டி இருந்தாலோ,இல்லை வேறு எதாவது தவறு செய்து இருந்தாள் கண்டிப்பாக மன்னித்துவிடுவேன்...ஆனால் நான் அவரின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை கொன்று விட்டார்.......என் அன்பை அவர் அவருடைய சுயநலத்துக்காக பயன்படுத்தி கொண்டார்.என்னால் அதை எப்போதும் மன்னிக்கமுடியாது...இனி இது சம்பந்தமா நீங்கள் எதுவும் பேசவேண்டாம்” என அவள் உறுதியாக கூற

ஜெயந்தியோ “இதுவரை உன்னிடம் ரோஜா பூவின் மணமும்,குணமும் நிறைந்து இருந்தது.. இப்போதோ அதன் முட்களும் காம்புகளும் கொண்ட முழு ரோஜாவை பார்க்கிறேன்.இந்த ஆளுமையும் மலருக்கு ஒரு பாதுகாப்புதான்.உனது உணர்வுகளையும் ஒரு பெண்ணாக நான் மதிக்கிறேன் ரோஜா...... என்றவர் சரி நீயும் நன்றாக நான் சொன்னதை யோசித்து பார்” என சொல்லிவிட்டு கிளம்பினார்.

அதன் பின்னர் காவேரி ராம் என எல்லாரும் எடுத்து சொல்லியும் அவள் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.ஜெயந்தி ரோஜாவிடம் பேசியதை தேவாவிடம் சொல்ல அப்போதுதான் தேவாவிற்கு பயமே வந்தது.இனி ரோஜா தனக்கு கிடையாதா என்ற எண்ணமே அவனை அணுஅணுவாக கொள்ள அவனால் எந்த வேளையிலும் கவனம் செலுத்த முடியவில்லை.

இதற்கிடையில் ராம் ரதி திருமணம் அல்லாடிகொண்டு இருந்தது.காவேரியோ சொன்ன தேதியில் திருமணம் செய்யவேண்டும் என சொல்ல இந்த சூழ்நிலையில் செய்யமுடியாது என ராம் ரதி இருவருமே மறுத்துவிட்டனர்.

இதன் பஞ்சாயத்து ரோஜாவிடம் செல்ல அவளோ சொன்ன தேதியில் திருமணம் வைத்தால் மட்டுமே தான் இந்த வீட்டில் இருப்பேன்...இல்லை என்றால் ஊரை விட்டே சென்று விடுவேன் என மிரட்டி இருவரையும் ஒத்து கொள்ளவைத்தாள்.

இங்கு காவேரி அம்மாவும் அங்கு ஜெயந்தியும் திருமண வேலைகளை கவனிக்க தேவாவோ பித்து பிடித்தவன் போல் இருக்க,ரோஜாவும் இயந்திரத்தனமாக வாழ்ந்து கொண்டு இருந்தாள்.ராம் ரதி இருவரும் திருமணத்தை வைத்து இவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது என திட்டம் தீட்டி கொண்டு இருந்தனர்.

இந்த பிரச்சனைக்கு இடையில் இங்கு நடப்பது எதுவும் ரோஜா வீட்டில் தெரியாமல் பார்த்து கொண்டனர் .

தேவா பலமுறை ரோஜாவை சந்தித்து பேச முயற்சி பண்ண அவள் பிடிகொடுக்கவே இல்லை.ரோஜா இந்த அளவு உறுதியாக இருப்பாள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவனது என்னை அலைபேசியில் பார்த்தாலே அதை எடுக்க மாட்டாள் .

. திருமண வேலைகள் நடந்து கொண்டிருக்க தேவா ரோஜா உறவு நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டு இருந்தது.பாட்டியிடம் இருந்து அழைப்பு வரும்போது மட்டும் ஏதாவது காரணம் சொல்லி தப்பித்து கொண்டு இருந்தாள் ரோஜா.திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் வாணியின் வழக்கும் இறுதி கட்டத்திற்கு வந்தது.

வாணியின் கணவர் டைவேர்சே கொடுக்க மறுக்க சில வலுவான சாட்சிகளை கொண்டு அவனின் சுயரூபத்தை வெளிபடுத்தி கொண்டு இருந்தால் ரோஜா.

ஒரு முறை தரணியின் அலைபேசியில் இருந்து அழைப்பு வர எடுத்த ரோஜா ஆனால் பேசியது தேவா.

“ரோஜா நான் தேவா பேசுகிறேன்...... நான் சொல்வதை கேள் ....நீ வாணியின் கேஸில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு...அவன் கொஞ்சம் மோசமானவன்.... எந்த லெவெலுக்கு வேண்டுமானாலும் இறங்குவான்.......அவனுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதால் எதை வேண்டுமானாலும் செய்வான் ......எப்போதும் இது போன்ற வழக்கில் தீர்ப்பு வரும்போது” என அவன் சொல்லி கொண்டு இருக்கும்போதே

“இங்க பாருங்க சார்... முன்னொரு காலத்துல நீங்க எனக்கு சீனியரா இருந்து இருக்கலாம் ...... அதுக்காக நீங்க சொல்றத நான் கேட்கனும்னு அவசியமும் இல்லை......இது என்னோட கேஸ்...என்ன செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும்....ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி நடிக்க வேண்டாம்..... இதை நம்பி ஏமாந்தது அந்த ரோஜா......இப்போ அதற்கு எல்லாம் ஏமாறமாட்டேன்......நீங்க உங்க வேலை என்னமோ அதை பாருங்க” என முகத்தில் அடித்தாற்போல் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.

இதற்கு முன்னர் தான் வாணியின் கணவர் வந்து அவளை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டி சென்று இருந்தான்.அதற்கு ஏற்றார் போல் தேவாவும் அழைக்க அவன் மேல் இருந்த கோபத்தில் தேவாவின் மீது கொட்டிவிட்டாள் ரோஜா.

மறுநாள் காலை அவள் எழுந்து வெளியே வர தேவா அமர்ந்திருந்தான்.

அவனை பார்த்ததும் கண்களில் ஒரு மின்னல் தோன்ற முகத்தில் சந்தோசம் பொங்க அவனை பார்த்தவள் அது ஒரு நிமிடம் தான் நீடித்தது......அதற்குள் மறுபடியும் அவன் சொன்ன வார்த்தைகள் நினைவு வர முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிட்டாள்.

அவள் வெளியே வந்ததில் இருந்து அவனையே பார்த்து கொண்டு இருந்த தேவா அவளது முகபாவனையை வைத்து அவள் மனநிலையை கண்டவன் இன்னும் அவளுக்கு கோபம் குறையவில்லை என்பதை தெரிந்து கொண்டான்.

ஒரு ஆசுவாச பெருமூச்சுடன் ராமிடம் திரும்பி “உன்னை நம்பி தான் இருக்கேன் ராம்......ஏதாவது பிரச்சனை என்றால் என்னால் தாங்கி கொள்ள முடியாது ......உன்னால் முடியலைனா என்கிட்டே சொல்லிடு நான் பார்த்துகிறேன்” என்றான்.

“நீ கவலை படாதே தேவா...எல்லாம் நான் பார்த்துகொள்கிறேன்” என நம்பிக்கையுடன் சொல்லி அவனை அனுப்பிவைத்தான் ராம்.

திருமணத்திற்கு புடவை எடுக்க ராம், ரதி, காவேரி, ஜெயந்தி என அனைவரும் செல்ல தேவா வரவில்லை.ரோஜாவும் மறுக்க ராமும் ,ரதியும் தான் கட்டாயபடுத்தி அழைத்து வந்தனர். விருப்பம் இல்லாமல் வந்தாலும் பட்டு புடவையை பார்த்த உடன் பெண்களின் மனது மாறிவிடுவது இயல்புதானே ......அங்கு வந்து புடவை பார்த்து கொண்டு இருந்தவள் இளம் மஞ்சளில் பச்சை வண்ண பார்டரில் மயில்களுடன் கூடிய சிறு பூந்தோட்டம் போல் அதன் முந்தானை அமைந்திருக்க பார்த்த உடன் பிடித்து விட்டது ரோஜாவிற்கு. எடுத்து தன் மீது வைத்து அழகு பார்க்க மேலும் அழகாக இருந்தது அந்த புடவை......அப்போது அங்கு வந்த ரதி “ஹே ரோஜா சூப்பரா இருக்கு என சொல்ல அனைவரும் அவளை பார்த்தவர்கள் அவள் நிறத்திற்கு அந்த புடவை அழகாக இருக்க காவேரியோ அருகில் ரோஜா குட்டி இந்த புடவை கட்டி நீ தேவாவோட நிற்கும்போது எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா ? என்றவர் இதை எடுத்துக்கோ” என சொல்ல

ராமும் ரதியும் “ஆமா ரோஜா இதுல அண்ணன் உன்னை பார்த்தார் அப்படியே உருகிடுவார்”......என அவர்களும் கிண்டல் பண்ண தேவாவின் பெயரை கேட்டதும் வேகமாக அதை தூக்கி போட்டவள் எனக்கு இந்த புடவை வேண்டாம் என சொல்லிவிட்டு அரக்கு கலரில் ஒரு புடவையை எடுத்தவள் பிரித்தே பார்க்காமல் பில்லிற்கு அனுப்பினாள்.

“ரோஜா நீ செய்வது ரொம்ப தப்பு என அவள் அருகில் வந்து சொன்ன ராம் ...முதலில் எடுத்த புடவைக்கே நான் பில் போடறேன்” என்றான்.

ரோஜாவோ “நீ எதற்கு வேண்டுமானாலும் பில்லை போடு...ஆனால் நான் கட்ட மாட்டேன் என கோபமாக சொன்னவள் அதற்குதான் வரலைன்னு சொன்னேன் கேட்டிங்களா” என சொல்ல அதற்கு பிறகு யாரும் அங்கு பேசவில்லை.ரோஜா எடுத்த அரக்கு கலர் புடவைக்கே பணம் கொடுத்தான் ராம்.

மறுநாள் காலை வாணியின் கேசில் தீர்ப்பு......மிகவும் திறமையாக வாதாடி இருந்தாலும் ஏனோ அவளுக்கு உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது. அதே நேரத்தில் ராமும் ரோஜாவிடம் நாளை தீர்ப்பை பற்றி கேட்டவன் அவள் தனியாக செல்ல வேண்டாம்.....தானும் உடன் வருவதாக சொல்லி இருந்தான்.மேலும் நீதிமன்றத்தில் எந்த அலைபேசி அழைப்பு வந்தாலும் என்னை கேட்காமல் நீ பேசாதே என்று சொல்லி இருந்தான்.


ரோஜாவோ சிரித்து கொண்டே “என்ன மாம்ஸ் இது......ஒரு குற்றவாளிக்கு சொல்றது எல்லாம் எனக்கு சொல்றிங்க......இது ஒரு சாதாரன விவாகரத்து கேஸ்......இதுக்கு போய் எல்லாரும் இப்படி பயபட்ரிங்க”....என கிண்டல் செய்தபடி உறங்க சென்றாள்.
 
Top