• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உள்ளத்தின் காதல் சாகாதடா (அத்தியாயம் 3)

Veera

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
57
உள்ளத்தின் காதல் சாகாதடா


அத்தியாயம் 3


மித்ரனின் பார்வை யார் மீது விழாமல் தலைகுனிந்தபடியே இறங்கி வர,... அவனை கவனித்த சுபத்ராவும் வருத்தப்பட்டாள்… .


சுபத்ரா, "ஏன்டா, மித்ரா உனக்கு என்னாச்சு டா,..கல்லூரி முடிச்சு ,எப்போது வீட்டுக்கு வந்தீயோ,.. அதுல இருந்து நீயும் சரியில்லை, உம் முகமும் சரியில்லையே,வீட்டுல எல்லாரும் மாறி மாறி கேட்டபிறகு நீ வாயைத் திறந்து சொல்லவே மாட்டேங்கிற… உன்னை நினைச்சு மாமாவும் அத்தையும் தினமும் வருத்தப்பட்டு இருக்கிறாங்க என்றாள் கோபமாக..

.

மித்ரன், "அம்மா சித்தியிடம் பேசினாயா,. .அவங்க ஊருல தானே இருக்காங்க,விபரத்தைக் கேட்டாயா,


புஷ்பலதா,.. உங்க சித்தி போனை. எடுக்கவே இல்ல,டா …


சுபத்ரா, டேய் மித்ரா உன்னிடம் தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்.. என்னோட கேள்விக்கு பதில் சொல்லு என வலுக்கட்டாயமாக கேட்டாள்…


அண்ணி,.. தயவுசெய்து என்னிடம். எதையும் கேட்காதீங்க… .சொல்ற நிலைமையில் இல்லை ,..கொஞ்ச நாள் தனிமையில் இருந்துட்டு வாரேன் என்னை போக விடுங்கள் என்றவன் சூட்கேஸை நகர்த்தி செல்ல,. மகேந்திரன் மயங்கி கீழே விழுந்தார்…


மாமா.. மாமா என அலறிய சுபத்ராவின் குரலைக் கேட்டு வாசலை நோக்கி வெளியே சென்றவனின் பார்வை வீட்டைக்குள்ளேயே பதிந்தது… ..


மித்ரன் ,"அப்பா.. அப்பா கன்னத்தை தட்டி, தண்ணீரைத் தெளிக்க எழுந்திருக்கவே இல்லை… உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள்… ..


மகிழுந்திலேயே மனதை இறுக்கமாக பிணைத்துக் கொண்டு வெளிநாட்டை நோக்கி அவளின் பயணத்தைத் தொடர நினைத்தவளின் கைப்பேசி ஒலித்துக் கொண்டிருக்கையில்,.. கவனிக்காதவளாக வோறொரு சிந்தனையில் மிதந்தவளை டிரைவரின் குரல் தடுத்தது… .


சொல்லுங்க அண்ணா,


டிரைவர், :ஏம்மா உங்கள் கைப்பேசி வெகுநேரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது…


அபித்யா… "ஓ.. சரிங்க அண்ணா நன்றி என்றவளே கைப்பேசியின் திரையில் ஹரிஷ் நம்பர் வந்ததும் சட்டென்று அழுத்தினாள்… .


ஹலோ,.. சார்.. ஸாரி… அது வந்து… பேச விடாமல் தடுத்தது அவருடைய குரல்… .


ஹரிஷ், "ஏம்மா,.. "உனக்கு போனை எடுக்க இவ்வளவு நேரமா,வீட்டுல இருந்து கிளம்பியாச்சா…


அபித்யா, "ஆமா,.. மகிழுந்தில் தான் வந்துட்டு இருக்கேன்.. இப்போது நம்முடைய நிறுவனத்தை நெருங்கிடுவேன் என தயக்கத்தோடு…


ஹரிஷ், "வாட்,.. எதுக்காக அங்க போற… நீ இனிமேல் அங்கே போக அவசியமில்லை… நேராக ஏர்போர்ட்க்கு வந்துடு… நம்ம இரண்டு பேரும் விமானத்தில் தான் போறோம்… .


அபித்யா, "சார் மேனேஜர் என்னை மகிழுந்திலேயே போகச் சொன்னதாக நீங்க தான் …என குரல் தடுமாற…


ஹரிஷ்.. நான்சன்.. யாராவது பாரின் மகிழுந்திலேயே போவாங்களா,... கேட்கிறா பாரு கேள்வி…அந்த இடியட் மேனேஜர் சொன்னா, நீயும் அப்படியே கேட்டுறதுதானா… உனக்க சுயமாக சிந்திக்க தெரியாதா எனப் பொரிந்து தள்ளினான்… ..


அபித்யா, "".. போதும் சார்.. உங்களுக்கு எல்லாமே தெரியும்..எனக்கு எதுவுமே தெரியாது அப்படினு நீங்களா கற்பனை செய்து பேசாதீங்க.. என்றவள் அழைப்பைத் துண்டித்தாள்..


இடியட்.. லூசு..லூசு.. இரண்டு மூன்று நிறுவனத்தை ரன்னிங் பண்றதால பெரிய இவனா,. சிடுமூஞ்சு… சிடுமூஞ்சு இவனோட நிறுவனத்தில் தான் வேலை செய்யனும்னு என்னோட தலையில் எழுதியிருக்குது போல,.

இன்னிக்கு இந்த ஹரிஷ் பாஸ் கூட தான் விமானத்தில் பயணம் செய்யப்போறாதா நினைச்சாலே பயமாக தான் இருக்குது, தனக்குத்தானை பேசிக்கொண்டாள்..


அண்ணா,. ஏர்போர்ட்டுக்கு நேராக போங்க...அங்கே இறங்கி கொள்கிறேன் என்றாள்…


டாக்டர்.. .அப்பாவுக்கு என்னாச்சு.. அவரு எதுக்காக மயங்கி விழுந்தாரு… .


டாக்டர், "மித்ரன்,. நீங்க கொஞ்சம் தனியாக வாங்க… உங்க அப்பாவுக்கு பிரைன் அட்டக்… நல்ல வேளை உங்க அப்பாவிற்கு மயங்கி வந்துடுச்சு.. … நீங்களும் அவசர சிகிச்சைக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க… .கொஞ்சம் தாமதமாக இருந்திருந்தால் என்னால் அத சொல்ல கூட முடியல…



டாக்டர், "உங்க அப்பாவுக்கு வந்திருக்கிறது பிரைன் அட்டக்.. இது ஒரு தடவை

வந்தாலே பக்கவாதத்தில் கொண்டு முடிந்து விடும்.. உங்க அப்பாவுக்கு அப்படி இல்லை…


மித்ரன்,. "டாக்டர் நீங்க சொல்றது புரியல… இந்த அட்டக் பக்கவாதத்தில் முடியுமா?.


ஆமாம் ..பிரைன் அட்டக் மூளை தாக்குதல் என பலர் சொல்வாங்க… இதுல என்ன. முக்கியமான. விஷயம்னா,.. நம்முடைய உடம்புல இரத்த ஓட்டம் சீரான முறையில் செயல்படனும்.. அப்படி இல்லாமல் மூளைக்குச் செல்லக்கூடிய. இரத்த ஓட்டம் உனது தந்தைக்கு சீராக செயல்படாதது காரணம்…சிலருக்கு அதிகமாக மன அழுத்தம் இருந்தாலும் ஒரே விஷயத்தைப் பத்தி நினைச்சு நினைச்சு சிந்தித்து கொண்டு இருப்பார்கள்… அப்படிப்பட்ட நிலைமையில் தான் உங்க அப்பா..


உங்க அப்பாவின் மனசுல பாரமான சுமைகளை சுமந்து கொண்டு இருக்கிறார்… அவர் மனசில் உள்ள பாரத்தை இறக்கி வைச்சுட்டாருனா… அவருக்கு பிரச்சினையே இல்ல,. உங்க அப்பாவோட சந்தோஷம் என்னவென்று என தெரிஞ்சுக்கிட்டு அடுத்த கட்ட முயற்சியை எடுங்கள்…இந்த மாதிரி நிலைமை உங்க அப்பாவுக்கு வராமல் கவனமாக பார்த்துக்கோ என அறிவுரை கூறினார்..


பதற்றத்தோடு மருத்துவமனைக்குள் நுழைந்த பிரசாத்,.. அப்பாவின் அறையை நோக்கி வந்தான்.


பிரசாத், "சுபத்ரா அப்பாவுக்கு என்ன்ச்சு,. கண்ணை முழிச்சுட்டாங்களா,.. பதற்றமாக கேட்க… அறைக்குள் நுழைந்தான் மித்ரன்.


சுபத்ரா, "ஏங்க இப்ப தான் டாக்டர் வந்து பார்த்துட்டு போனாங்க, மித்ரனை தான் தனியாக அழைச்சுட்டு போய் பேசுனாங்க… அதே சமயத்தில் மித்ரனும் அறைக்குள். நுழைந்தான்..


பிரசாத், "சொல்லுடா ,. டாக்டர் என்ன சொன்னாங்க… .அப்பாவுக்கு எதனால் மயக்கம் வந்துச்சா… ..சொல்லுடா எதுக்கு மெளனமாக இருக்குற…


மித்ரன் அழுதபடியே, அப்பாவுக்கு இது பிரைன் அட்டக்… அவருடைய மனசுல ஏற்பட்ட சில பிரச்சினைகள் குழப்பங்கள் தான் காரணம்…


பிரசாத், "இதுக்கெல்லாம் நீ தான்டா காரணம்.. ஆரம்பத்தில் இருந்தே உம் முகத்தை உம்முன்னு வச்சுட்டு ஏதோ பித்து பிடிச்சது போல சுத்திக்கிட்டு இருந்தாய்… நாங்க சொல்றத. காதுகொடுத்து கேட்கவே இல்லை முகத்தைத் திருப்பியபடி எரிச்சலாக… .


மித்ரன், "அம்மா.. அம்மா.. நீங்க சொல்லுங்க.. நான் தான் காரணமா ,. என கதறி அழுதான்…


புஷ்பலதா, "டேய்,. எதுக்கு டா இப்படி அழுகிற… உங்க அப்பாவுக்கு இப்படி வருவதற்கு நீ தான் காரணம் என்று வீட்டுல உள்ளவர்கள் சொன்னாலும், உங்க அம்மா சொல்றேன்.. நீ இல்லை டா..போதுமா,...


உங்க அப்பாவுக்கு உன்னைப் பத்தி நிறைய கவலைகள் இருக்குது ..முக்கியமாக நீ பொறுப்பு இல்லாமல் வேலைக்குப் போகாமல் இருக்கியே,. என்ற கவலை தான் இவரை இங்க கொண்டு வந்து விட்டுருச்சு ,"


மகேந்திரன்,மயக்கம் தெளிந்ததுமே,.. மித்ரனை ஏறிட்டு கையை அசைத்து அழைத்தார்… .


அப்பா.. அப்பா… இப்போது எப்படி இருக்குது… உங்க உடம்புக்கு பரவாயில்லையா மித்ரனின் பரிதவிப்பை பார்த்து கண்கலங்கினார்…


மித்ரன், "அவங்க அப்பாவின் கரங்களுக்குள் தன்னுடைய கரத்தைப் பற்றியபடி என்னை மன்னித்து விடுங்கள்.. இனிமேல் உங்களுக்கு பிடிச்ச புள்ளையாக உங்களுக்காக மட்டும் தான் வாழப்போகிறேன். இதுவரைக்கும் பார்க்காத மித்ரனை பாக்க போறீங்க என்றான். புன்னகையுடன்… .


மகிழுந்திலேயே சென்று கொண்டிருந்த போது பூங்காவை பார்த்த அபித்யாவின் நினைவில் மித்ரனின் நினைவுகள் வந்து வந்து சென்றது…


அபித்யா, "மித்ரனின் நினைவுகளை கலைப்பதற்காக கேன்பேக்கில் பாஸ்புக் இருக்கிறதா என செக் செய்தாள்…


அடடடடா,. பாஸ்புக் எங்க போயிடுச்சு.. இதுக்குள்ள தான் வைத்த நினைவு இருக்குது… .சற்று நேரத்திற்குள் அவளின் கையில் அகப்பட்டது..


பாஸ்புக்கை கையில் எடுத்தவளோ மகிழ்ச்சியோடு நோக்கினான்.. ஆனாலும் அந்த விசாவை காணும் போது மித்ரனின் முகம் எழும்பியது… ஏனென்றால் இந்த விசாவை எனக்காக ஏற்பாடு செய்து வாங்கி வந்தான்… அவனின் நினைவாக இதுவும் ,டைரியும் இருக்குது… .


கண்களை மூடியவளோ,... மித்ரன் சொன்னதை நினைக்க...

.


கல்லூரியில் அபித்யாவும் மித்ரனும்…


மித்ரன்.. … "ஹேய் அபித்யா உம் அழகான விழிகளை சற்று நேரம் மூடி வைப்பாயே!. '


அபித்யா ,"ஏன்டா .எப்போதுமே என் விழிகளை ரசித்து கொண்டே. இருப்பாயே . இன்னிக்கு நீயே கண்ணை மூடி வைச்சுருனு சொல்ற மியா… ..


ஆமா.. செல்லம். உன்னுடைய விழி இரண்டையும் அப்படியே மூடி வைச்சுரு உனக்காக ஒன்னு கொண்டு வந்துருக்கேன்..


மித்ரன், "கண்ணைத் திற அபியா..


அபித்யா…திறந்தததும் இது தானா,.. வேற என்னம்மோ நினைச்சேன்… .இந்த விசா தானா இவ்வுளவு சீன் போட்டீயா… போடா.பேபி. நீ என்னை இப்பவே பாரின் அனுப்புறதுக்கு முடிவு பண்ணிட்ட….செல்லமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..


மித்ரன்… செல்லம்.. அபியா… இங்க பாருடி.. கன்னத்தை இதமாக தொட்டு திருப்பினான்..உன்னோட ஆசையே பாரின் போய் வேலை செஞ்சு நல்லா சம்பாதிக்கனும்… அப்படி தானே… .


அபித்யா.. ஆமாம்... பேபி . அதுக்காக இப்பவே விசா எடுத்துட்டு வந்துட்ட…


மித்ரன்.. அடியேய்,விசா எடுக்கிறது எம்புட்டு கஷ்டமுனு தெரியுமா,. இதை இப்பவே எடுத்து வைச்சா தான், நீ பாரின் போகிறதுக்கு சுலபமாக இருக்கும்.. இந்தா பத்திரமாக வைச்சுக்கோ என மித்ரன் சொன்னது நினைத்துக் கொண்டிருந்தவளின் நினைவை கலைத்தது டிரைவரின் குரல்… .


அபித்யா.. சொல்லுங்க அண்ணா, ஏர்போர்ட் வந்துருச்சா…இதோ நானே. இறங்குறேன்… .


விரைவாக உள்ளே செல்ல,.. ஹரிஷ் அவளைப் பார்த்ததும் உனக்கு இவ்வளவு நேரமா…


சார்..டிராபிக் ரொம்ப.. அதான் கொஞ்சம் தாமதம் ஆயிடுச்சு என்றாள் தயக்கமாக… .


இட்ஸ்.. ஓ. கே.. வா ..


விசாவை பார்த்து செக் கப் செய்தவுடன் நீங்க போகலாம் என்றதும் வேகமாக விமானம் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றதும்,.. அபித்யாவிற்கே ஒரே குதூகலமாக இருந்தது…


இத்தனை வருஷமாக ஆசைப்பட்ட ஒன்னு இன்னிக்கு தான் நிறைவேறுதே!.. ஹரிஷ்க்கு முன்னால் விறுவிறுவென்று விரைந்தவளை ஹரிஷ் வார்த்தைகள் தடுத்தது… .


எனக்கு முன்னால போற,.. நான் முதலாளியா!..இல்ல நீயா,...


நீங்க தான், ச்சையோ!... இவரோட பெரும் தலைவலியாக உள்ளதே,... என்று பொருமியபடி ஹரிஷ் பின்னாலேயே சென்றாள்…. .


இரு இருக்கையில் ஜன்னலோரமாக அமர்ந்தார் ஹரிஷ்… அபித்யாவும் அவரின் அருகில் தயக்கமாக அமர்ந்தாள்..விமானமும் மெல்லமாக பூமியை விட்டு மேலே உயர உயர அபித்யாவிற்கு ஏதோ ஒரு மாதிரியான உணர்வு தோன்ற,..கண்கள் கலங்கியது… .


கவனித்த ஹரிஷ், உனக்கு இது தான் முதல் முறை பயணமா….


ஆமா, பாஸ்.. பொறந்ததே தமிழ் நாட்டுல,.. வளர்ந்ததே ஆசிரமத்துல… .படித்ததோ கல்லூரியிலே,.. பணியாற்ற சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டியதாயிருக்கு,..


அப்படினா உனக்கும் அம்மா, அப்பா கிடையாதா!...


அபித்யா,. இல்லை சார்,.. கடந்த இருபத்திரண்டு வருடமாக அனாதை ஆசிரமத்தில் தான் வளர்ந்தேன்… ஹாஸ்டலில் தங்கி தான் படிச்சேன்… திடீரென்று என்னை பார்ப்பதற்காக பெரியவர் வந்தார்… .


என்னுடைய பிறந்ததேதி, அனைத்தையும் தெரிந்து கொண்டவர், என்னுடைய தம்பி பொண்ணு,. உன்னை இத்தனை வருஷமாக தேடி தேடி அலைந்தோம்… என்னுடைய தம்பி கடைசியாக உள்ள கடுதாசியில் ஆசிரமத்தைப் பத்தி விலாவரியாக குறிப்பிட்டு இருந்தார்.


அதுக்கப்புறமாக அவருடைய வீட்டிற்கே அழைத்துச் சென்று என்னை அவங்களோட பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டாங்க,. எனக்கும் ஒரு தம்பியும். இருக்குறான் ரொம்ப நல்லபையன்,..எல்லாரிடமும் அன்பாக பழகுவான் என வரிசையாக சொல்லிக் கொண்டிருந்தாள்..


ஹரிஷ், வாழ்க்கையில் அம்மா அப்பா இல்லாதவர்களுக்கு பிறந்த பிறகு எல்லா சொந்தங்களும் இருப்பாங்க… கஷ்டப்படும் கூடவே இருந்து உதவ மாட்டாங்க, ஆறுதலும் சொல்லமாட்டாங்க, இதனாலேயே எனக்கு சொந்த பந்தங்கள், பாசம் இது எல்லாத்திலேயும் ஒரு வெறுப்பு.. அதனால் தான் சில நேரங்களில் இப்படி நடந்து கொள்கிறேன்… .

.

அபித்யா,. பாஸ்,. நீங்க தான் இப்படியெல்லாம் பேசுறீங்களா,... என்னால நம்பவே முடியல,உங்களுக்குள்ளேயும் இன்னொரு முகம் இருக்குதே,. இந்த முகத்தையும் சில சமயங்களில் வெளிப்படுத்துங்கள்… அப்போது தான் நம்முடைய மனம் மற்ற விஷயங்களை சிந்திக்க வைக்கும்… .


ஹரிஷ், "உங்களோட முழுப்பெயர் என்ன?.


அதுவா பாஸ்,.. அபித்யா என்ற அபியா ….

ஓ.. நைஸ் நேம்…


நீங்க ஓய்வெடுத்துக்கோங்க மார்னிங் பேசலாம்… .என்றான் ஹரிஷ்…


ஓ. கே பாஸ் குட் நைட்… .


ஹரிஷ்,. புன்னகையோடு குட் நைட்…


அப்பா,.. மெதுவாக எழுந்திருங்க.. டாக்டர், வீட்டுக்குப் போகலாம்னு சொல்லிட்டாங்க… .


மகேந்திரன், டேய், பிரசாத் மித்ரனை எங்கே,. அப்போது சொல்லிட்டு போனவன் ,. இன்னும் வரலயே..


பிரசாத், அவனுடைய பேச்சை எல்லாம் தண்ணீரில் தான் எழுதனும்…என்னம்மோ உங்களுக்குப் பிடிச்ச மாதிரி தான் இருப்பேனு வசனமாக பேசுனா..இப்ப ஆளவே காணோம் என புலம்பினான்..


மகேந்திரன், "அவனை திட்டாதே டா,. நீ வேணா பாரு.. அவ கண்டிப்பாக மாறுவான்… பொறுப்பாக வேலைக்கெல்லாம் போய் உன்னை விட அதிகமாக சம்பாதிப்பான்.


அப்பா ,தம்பி வேலைக்குப் போனால் எனக்கு தான் சந்தோஷம்.. நீங்க எந்த அளவுக்கு பாசமா இருக்கீங்களோ,. நானும் அதை விட அவன் பாசமாக இருக்கிறேன் என கண்கலங்கினான் பிரசாத்…



இனியும் வருவாள்.





.












..






































.






.


..





.


..






. .
 
Top