• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ஊடல் முதல் காதல் வரை (Breakup To Patchup Darlings) -2023

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
671
அன்பான வாசகர்களுக்கு வைகை சார்பாக வணக்கங்கள். அகம் முகம் மகிழ வைகையின் போட்டியை அறிவிக்க வந்துவிட்டோம். என்ன போட்டி? எதற்கு போட்டி? என்று ஒரு அளவிற்கு அனுமானித்து இருக்கும் எழுத்தாள மற்றும் வாசக நெஞ்சங்களே... ஆம், இது காதலர் தினத்தை முன்னிட்டு, காதலை சிறப்பிக்கும் வகையில், காதலின் சிறப்பை மீண்டும் மீண்டும் உணர, உணர்த்த, ஒரு சிறுகதை போட்டி. "காற்று இல்லாத தேசமும் காதல் தேசமாய் இருந்தால்... சுகமாய் சுவாசிப்பேன் சேமித்த உன் வாசத்தில்..." என்ற காதலர்களின் பிதற்றலுக்கு ஏதுவான போட்டி. ஆனால், சற்று வித்தியாசமான கதை களத்தில்... “ஊடல் முதல் காதல் வரை” – Breakup To PatchUp Darlings (வைகை சிறுகதை போட்டி - 2023) உணர்வு குவியலால் கட்டப்பட்டது காதல். காதலுள் குவிந்து பரவி படர்ந்து திளைத்து இருப்பது மனித உணர்வுகள். அதில் ஊடலும் அதனால் கொண்ட வலியும் கூட ஒரு அங்கம் தான். அந்த வலியும் கூட ஒரு ஆழமான காதலின் வெளிப்பாடு தான். சுகங்கள் மட்டும் தான் காதலை உணர்த்துமா? அதைவிட அது தரும் வலி, உயிர் வரை ஊடுருவி அதற்கும் மேல் ஆன்மாவோடு இணைந்து உருகி கரைந்து மொத்தமாக உயிரை பிழிந்து காதல் பிழம்பாக நம்மை மாற்றும் வல்லமை படைத்ததல்லவா? “பிரிவில் தொடங்கி அதன் வலியில் மூழ்கி காதல் என்னும் முத்தை கைப்பற்றி மீண்டும் இணையும் காதல் கதைகளே” – இந்த போட்டியின் கதைக்களமாக அமைத்து எழுத வேண்டும். பரிசு: அதிக வலியை சுமந்திருக்கும் கதைக்கு, கதை எழுதிய ஆசிரியருக்கு ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது. மேலும், காதலின் வலியை அதிகமாக உணர்த்தி முதலில் தேர்வாகும் முதல் இருபது கதைகளை தொகுத்து, வைகை பதிப்பகத்தின் கீழ், புத்தகமாக வெளியிடப்படும். விதிமுறைகள்: • யார் வேண்டுமென்றாலும் எத்தனை கதைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம். • 1500 வார்த்தைகளுக்கு குறையாமல் 2500 வார்த்தைகளுக்கு மிகாமல் கதையை எழுதி பதிவிடலாம். • எழுத்துப்பிழை, இலக்கண பிழை, வாக்கிய பிழை இல்லாது கதையை பதிவிடுவது அவசியம். • தளத்தில் நேரடியாக எழுத்தாளர்களே பதிவிடலாம். பதிவிற்கான திரியை கீழே குறிப்பிட்டு இருக்கிறோம். • தலைப்பில் கொடுக்க வேண்டிய முறை : “ஆசிரியரின் பெயர் : கதையின் தலைப்பு. (இதே முறையிலேயே சரியாக பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். உங்களின் பெயரும் கதையின் பெயரும் சரியாக பதிவிடுவதை வைத்தே புத்தகத்திலும் அதேப்போல் அச்சிட முடியும்) • கண்டிப்பாக, ஒருமுறை கதையை பதிவேற்றியபின், அதில் மாற்றங்கள் செய்ய ஆசிரியருக்கோ/பதிவேற்றியவருக்கோ அனுமதியில்லை. ஒருமுறை பதிவேற்றி, அதில் ஏதேனும் மாற்றம் செய்ய விரும்பினால், பதிவேற்றப்பட்ட இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள், தள உரிமையாளர், வதனி பிரபு அவர்களை தொடர்புக்கொள்ள வேண்டும். தேவையாக இருப்பின், தளத்தின் பொறுப்பில், மாற்றங்கள் செய்து தரப்படும். • உங்கள் சிறுகதை தளத்தில் இருந்து எப்போதும் நீக்கப்படமாட்டாது. போட்டியின் முடிவிற்கு பின், தேர்வாகியிருக்கும் கதைகள் வேறு தளங்களில் பதிவேற்ற அனுமதியில்லை. தேர்வாகாது போன கதைகள், போட்டி முடிவுகள் வெளியிட்டபின், வேறு தளங்களில் பதிவேற்றிக்கொள்ளலாம். (அப்போதும், வைகை தளத்தில் இருந்து கதைகள் நீக்க அனுமதியில்லை.)

திரி: https://vaigaitamilnovels.com/forum/forums/ஊடல்-முதல்-காதல்-வரை-–-breakup-to-patchup-darlings.716/

1673961146468.png
 
Top