• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
ஹாய் கண்ணம்மாஸ்

நான் உங்களின் கொட்டக்குடி ஆறு.

எனக்கு வாய்ப்புக் கொடுத்த வதனி அக்கா மற்றும் ஏனைய வைகை தளம் சகோதரிகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
 
Last edited:

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
அத்தியாயம் 1

ஆடி அசையும் மரங்களும் மாசற்ற சுற்றுச் சூழலும் குளிர் காற்றுமுமாய் வைகை நதியின் கிளை நதிகளைக் கொண்டு அழகாய் தோற்றமளிக்கும் ஊர் தான் தேனி.

கொடைக்கானல் மற்றும் கேரளாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு இருப்பதால் அந்த மலை அடிவாரத்தில் தோன்றும் குளிர்த்தென்றல் தேனியிலும் வீசும். சூற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமான தேனியில் கொட்டக்குடி ஆற்றில் இருந்து தான் போடிநாயக்கனூரிற்கு தண்ணீர் வருகிறது.

கொட்டகுடி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் அத்தியூத்து, அனகரை அடிவாரத்தில் உள்ள மீசப்புலிமலையிலிருந்து பாய்கிறது.வைகையின் கிளை நதியான கொட்டக்குடி ஆறு தேனி மாவட்டத்தில் ஒரு முக்கியமான ஆறு. போடிநாயக்கனூரில் இருந்து தேனி செல்லும் இந்த நதி முல்லைப் பெரியாரின் வழியாக கலந்து வைகையுடன் கலக்கிறது.

"முருகா வாழ்வு செழிக்க இன்பம் பெருக எல்லா மக்களையும் காப்பாத்துப்பா" என்று சிங்காரவேல் முருகனை வழிப்பட்டு விட்டு கல்லாவைத் திறந்து ஒரு முறை கும்பிட்டார்.

"ஏய் மணி இங்குட்டு வாப்பா"

"ஐயா.. சொல்லுங்க"

"சென்னையில் இருந்து இன்னிக்கு பாப்பா வராப்பிடி.. அதனால நா வெள்ளனே கிளம்புறே.. நீ கடைய பாத்துக்கோ பா ஓம்பாட்டுக்கு பொயிடாத"

"சேரிங்கையா நான் பாத்துக்குறேன் பெரிய படிப்பு படிச்சிட்டு பாப்பா நாளு வருஷம் கழிச்சு வருது "

" ஆமா மணி அங்கிட்டு பாப்பாவை விட்டதிலிருந்து மனசே சரியில்லை.. இந்த நாலு வருஷமும் வீட்ல மீனாட்சியும் ரொம்ப ஏங்கிட்டாப்புல.. "

" அதான் பாப்பா வந்திடுச்சுல அப்பறம் என்னங்கய்யா"

" பாப்பா சும்மா வரலை கூட ஒரு பையனைக் கூட்டிக்கிட்டு வருதுய்யா அதான் யோசனையாக இருக்கு"என்று புரியாமல் சொல்ல

" என்ன ஆச்சு ஐயா"

" இந்தா மீனாட்சி கால் பண்ணிட்டியா நான் வந்து பேசுறேன் நீ கடையை பாத்துக்கோ"என்று கிளம்பினார் சிங்காரவேல்.

சிங்காரவேல் தேனியில் 'மீனாட்சி ஹோட்டல்ஸ்' என்னும் சைவக் கடையை இருபது வருடங்களாக வைத்திருக்கிறார். அப்போதிருந்தே அவரின் ஹோட்டலில் பணிபுரியும் மணி அவருக்கு மிகவும் நெருக்கம். மணியிடம் தன் கஷ்டம் சந்தோஷம் எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அவரிடம் இருந்தது.

போடிநாயக்கனூரில் ஒரு அழகிய வில்லா கட்டி அதில் வாழ்ந்த சிங்காரத்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறது. மகன் கார்த்திக் என்ஜீனியரிங் படித்து விட்டு இப்போது கல்யாணம் முடிந்து லண்டனில் இருக்கின்றான்.

வீட்டின் செல்ல மகளான வைஷ்ணவி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து பெற்றோர்களிடம் அடம் பிடித்து சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் படிக்க்ச் சென்றாள்.

மீனாட்சியின் கை தான் வீட்டில் ஓங்கும். சிங்காரவேல் மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் மீனாட்சியோ பணக்காரி.சிங்காரவேல் மீனாட்சியின் தந்தை சோமசுந்தரத்தின் மில்லில் தான் பணிபுரிந்தார். சிங்காரவேலின் நேர்மை பிடித்ததால் மீனாட்சியின் தந்தை சோமசுந்தரம் மகளைக் கட்டிக் கொடுத்து ஹோட்டலும் வைத்துக் கொடுத்தார். அதனால் வீட்டில் மீனாட்சி ஆட்சி தான்.

மகளைச் சென்னைக்கு அனுப்பிய பின்னர் தான் மீனாட்சிக்கும் ஏக்கமாக இருந்தது. ஆனால் தன் மகள் சென்னையில் படித்து மென்மேலும் வளர வேண்டும் என்று அவளின் ஆசையை சிங்காரவேலினால் தவிர்க்க முடியவில்லை.

இன்று தன் மகள் வைஷ்ணவி என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் ஓரு நல்ல வேளை கை நிறைய சம்பளமும் தரப் போகிறார்கள் என்று கூறிய போதே "நீ படிக்க ஆசைப்பட்ட அப்பா அனுப்பின அங்கிட்டு போய் எல்லாம் வேலைப் பார்க்க வேண்டாம்" என்று அவர் கூறும் போது தான் "அப்பா நான் என் கூட படித்து முடித்த சீனியர் பரத்தைக் காதலிக்கிறேன்" என்று கூறியவளின் மனதில் ஒரு துளி அளவும் பயம் இல்லை.

"வைஷ்ணவி விளையாடாத" என்று தந்தை கண்டிக்கும் போதும்

" இதில் விளையாட என்ன இருக்குப்பா நான் அவரைக் காதலிக்கிறேன் அவரைத் தான் திருமணமும் செய்யப் போகிறேன் இது அம்மா அண்ணாவிற்கும் தெரியும்"என்று கட் செய்துவிட்ட மகளைக் கண்டுக்கொள்ளாமல் நேராக மனைவியிடம் சென்று சண்டை போட்டார் சிங்காரம்.

"ஏன் காதலிச்சா என்ன தப்பு.. அந்தப் பயன் ஒன்னும் உங்களை மாதிரி பைசாக்கு பிரோஜனம் இல்லாதவன் இல்லை அந்தப் பையனின் அம்மா அப்பா சென்னையில் ஜவுளிக்கடை வெச்சிருக்காங்க.. இதே நீங்கள் மாப்பிள்ளைப் பார்த்தால் உங்களை மாதிரி ஒரு ஹோட்டல் காரனைத் தான் பார்ப்பீங்க" என்று அவரின் குரலுக்கும் மேல் சத்தமாகப் பேசினாள்.

" நான் பாப்பா வரட்டும் அவளிடம் பேசிக்கிறேன்"என்று அவர் கூறிய பின்னர் வைஷ்ணவி தன் தந்தையிடம் பேசவே இல்லை.

தன் மனைவியின் மூலம் தான் அவள் காதலிக்கும் அந்த பரத் கூட வருவதைத் தெரிந்து கொண்டார் சிங்காரம். மனது ரொம்ப பாரமாக இருந்தது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்த வைஷ்ணவி மற்றும் பரத் வைஷ்ணவியின் வீட்டில் அனுப்பியிருந்த காரில் ஏறி தேனிக்கு பயணத்தைத் தொடங்கினர்.

"ஹேய் பரத்! இதான் கொட்டக்குடி ஆறு சின்ன வயசுல தினமும் இங்கே தான் குளித்து ஆட்டம் போடுவோம் நானும் அண்ணாவும் இப்படியே போனா எங்க ஊரு போடிநாயக்கனூர்"

"ஹேய் வைஷ்! நான் கேட்கணும்னு நினைச்ச உனக்கு ஊர் பாஷேயே வரலையே எப்படி!"

"அதெல்லாம் இருந்துச்சு பரத் சென்னை வந்த நாளு வருஷத்தில் அப்படியே மாறிடுச்சு "

" உங்க ஊர் செம கூலா இருக்கு"

" ஆமா.. எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணத்திற்குப் பிறகு சென்னையில் தான வாழப் போகிறோம் அதனால் வெகேஷனிற்கு இங்கே வந்திடலாம்"

" உங்க அப்பா அம்மாவிற்கு என்னைப் பிடிக்குமா? "

" அம்மா ஓகே தான் பரத்.. ஆனால் அப்பா தான் மறுக்கிறார்"

" ஹேய் என்ன இப்படி சொல்ற! "

"அப்பா மறுப்பார் பரத் பட் நான் என் முடிவில் இருந்து மாற மாட்டேன் அப்படி தான் அடம்பிடிச்சு சென்னை வந்தேன்.. எங்க வீட்டில் அம்மா சொல்றது தான் இதுவரை நடந்திருக்கு இனியும் அப்படித் தான் நீ கவலைப்படாமல் வா"

பின் இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்திருந்தனர்.

" ஹேய் வைஷ்! இன்னிக்கு பிரொப்போசல் டேவாம்... அதனால ஒரு சின்ன வீடியோ எடுக்கப் போகிறேன்.. நான் இப்போது ஃபர்ன்ட் கேமரா ஆன் பண்றேன் நீ நான் எப்படி உன்னை பிரப்போஸ் பண்ணினேனு சொல்லு ஃபேஸ்புக்கில் போடப் போகிறேன்"

"சேரி சேரி ஆன் பண்ணு"

"பரத் எனக்கு ஒன் ஹியர் சீனியர். நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள அந்த பிரபல என்ஜீனியரிங் கல்லுரியில் தான் படித்தோம். அன்னிக்கு ஃபிப்ரவரி 14 பரத் போக்கேயுடன் வந்து எனக்கு அழகான கிரீட்டிங் காடு எல்லாம் கொடுத்து என்னை இம்ப்பிரெஸ் பண்ண டிரை பண்ணான். நான் அவனை ஒரு வருஷம் காயவிட்டு தான் ஓகே சொன்னேன். நௌ இட்ஸ் பீன் டூ ஹீயர்ஸ் ஃபார் அஸ்.. வி போத் ஆர் வெரி ஹாப்பி இன் திஸ் ரிலேஷன்ஷிப்"என்று அவள் தம்ப்ஸ் அப் சிம்பல் காட்டுவதைப் பார்த்த பரத்தும் அவளின் கை பக்கத்தில் தம்ப்ஸ் அப் வைத்தான்.

கார் வீட்டை நெருங்கிய போது"ஹேய் வைஷ்! உன் அப்பாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு? "

" ஏன் டா இப்படி பயந்து சாகுற.. நீ இவ்வளவு பெரிய பயந்தாங்கோளின்னு தெரிஞ்சிருந்தால் உன்னை லவ்வே பண்ணிருக்க மாட்டேன் இப்போ கூட நிறைய டைம் இருக்கு உன்னை கழட்டிவிட்டு வேற பையனை கல்யாணம் பண்ணிருக்குறேன்" என்று விளையாட்டாக கூறினாள்.

" வாட்!"

"ஏய் பரத் சும்மா விளையாட்டிற்கு சொன்ன கூல்.. அங்கத் தெரிது பாரு அது தான் எங்கள் வீடு சுற்றி இருக்குற தோட்டம் எல்லாம் எங்களுடையது தான்" என்று சுற்றிக் காட்டும் போதே வீடு வந்தது.

அங்கே நின்றிருந்த அன்னை மீனாட்சி மற்றும் வேலைக்காரி அமுதாவைக் கண்டவள்" அம்மா" என்று கட்டிப்பிடித்து" அமுதா அக்கா எப்படி இருக்கீங்க"என்று கேட்டாள்.

" எப்பா எம்புட்டு மாறிட்ட வைஷ்ணவிம்மா"என்று அமுதா கூற

" ம்ம்.. நாளு வருஷம் கழிச்சு பார்க்குறீங்க இல்லையா அப்படி தான் இருக்கும்"

"ஏன் டீ செமஸ்டர் லீவில் கூட எங்களைப் பார்க்க வரவில்லை நாங்க பார்க்க வரவேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்று சொல்லிட்ட அங்கிட்டு நீ எப்படி ஒத்தையில இருந்தேன்னு எவ்வளவு பரிதவிச்சுப் பொய்ட்டேனு தெரியுமா உனக்கு"

" அம்மா நான் எங்கே தனியா இருந்தேன் இதோ பரத்துடன் தான் தங்கி இருந்தேன்"என்று தன் தாயிடம் கண்ணடித்தாள்.

" யேய் அமுதா என்ன இன்னும் இங்கேயே மசமசன்னு நிக்குற போய் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா"என்று அனுப்பினாள் மீனாட்சி.

" என்ன சொல்ற வைஷ்ணவி நீ"என்று மகளை உலுக்கினாள்.

" அம்மா நான் சும்மா விளையாட்டிற்குச் சொன்னேன் மா உங்களுடைய மகள் ஜாலியா பேசினாலும் அவள் நெருப்பு மாதிரி"

" அமுதா முன்னாடி பேசுறீயே டீ.. அவள் என்ன நினைப்பாள் உன்னைப் பற்றி"

" அம்மா அவங்க நம்ம அமுதா அக்காம்மா.. அதுவும் இல்லாமல் என்னைக் கல்யாணம் பண்ணப் போறவனே இங்கு இருக்கான் அப்போ எனக்கு என்ன பிரச்சினை"

" ஐய்யோ ஆமா ஆன்ட்டி வைஷ் என்னுடன் வெளியே கூட இதுவரை தனியா வந்ததில்லை.. ரொம்ப நல்லப் பொண்ணு.. இந்த விளையாட்டுப் பேச்சு தான் ஜாஸ்தி"

"ஐய்யோ தம்பி! வாங்க நல்லா இருக்கீங்களா இவளைப் பார்த்ததில் உங்களை கவனிக்க மறந்துட்டேன்.. "

" நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி! அன்கிள்"

" அது வந்து.. வாங்க உள்ளே தான் இருக்காரு"

'சுத்தம் நமக்கு இவ்வளவு தான் மரியாதையா' என நினைக்க வெளியில் புன்னகையோடு மழுப்பி உள்ளே வந்தான்.

உள்ளே பூஜை அறையில் கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்த சிங்காரவேலின் மனதில் 'எப்படியாவது வைஷ்ணவி மனதை மாற்ற வேண்டும்' என்றே இருந்தது.

வைஷ்ணவியின் சத்தம் கேட்டதும் பொறுமையாக எழுந்து வெளியே வந்தவர் "வாம்மா வைஷ்ணவி வாங்க தம்பி இப்படி உட்காருங்க.. அமுதா இரண்டு பேருக்கும் குடிக்க காபி தண்ணி கொண்டு வா" என்று பணித்தார்.
 
Last edited:

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
427
#கொட்டக்குடிஆறு
#ஊனாகிஉயிராகி
#அத்தியாயம்1

மீனாட்சி ஆட்சி இல்லன்னாதான் ஆச்சரியப்படோணும்😤😤😤😂

பரத்து போதும் போதும் இந்த மரியாதையே உனக்கு😜😜🤣மீனாட்சி அவளோட ஹஸ்பெண்ட்கிட்டவே பைசாக்கு பிரயோஜனமில்லைனு பேசிட்டு மரியாதை குடுக்காது.

வைஷ்ணவிக்கு வாய் ஓவரா இருக்கு.கழட்டி விடுவேங்கறா.பரத்கூடதான் தங்கி இருந்தாங்கறா🙄🙄🙄🥴🥴🤫🥱

பார்க்கலாம் சிங்காரவேலன் பிரார்த்தனை நடக்குமான்னு😤😤
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
#கொட்டக்குடிஆறு
#ஊனாகிஉயிராகி
#அத்தியாயம்1

மீனாட்சி ஆட்சி இல்லன்னாதான் ஆச்சரியப்படோணும்😤😤😤😂

பரத்து போதும் போதும் இந்த மரியாதையே உனக்கு😜😜🤣மீனாட்சி அவளோட ஹஸ்பெண்ட்கிட்டவே பைசாக்கு பிரயோஜனமில்லைனு பேசிட்டு மரியாதை குடுக்காது.

வைஷ்ணவிக்கு வாய் ஓவரா இருக்கு.கழட்டி விடுவேங்கறா.பரத்கூடதான் தங்கி இருந்தாங்கறா🙄🙄🙄🥴🥴🤫🥱

பார்க்கலாம் சிங்காரவேலன் பிரார்த்தனை நடக்குமான்னு😤😤
பார்ப்போம் சிஸ்.. என்ன நடக்கப் போகிறது என்று
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
அத்தியாயம் 2

"தம்பி என்ன பண்ணுறீஹ"

"அன்கிள் நான் ஒரு பெரிய ஐடி கம்பெனியில் வேலைப் பார்க்கிறேன்"

"உங்களுக்கு எந்த ஊரு தம்பி?"

"சென்னை தான் அன்கிள்"

"இல்லப்பா இந்த பூர்வீகம் அப்படின்னு சொல்லுவாங்களே அது எங்கே"

"அம்மா இந்த கேள்வியெல்லாம் இப்போது தேவையா" என்று வைஷ்ணவி தந்தையை முறைத்துக் கொண்டே தாயிடம் கேட்க

" ஆமாங்க எதற்கு இதெல்லாம் விடுங்க"

" நீ சும்மா இரு மீனாட்சி.. "என்று மேலும் தொடர்ந்தவர்

" இங்கப்பாருப்பா நான் நேரா விஷயத்துக்கு வரேன்.. எம் பொண்ணு எங்கள் வீட்டில் ரொம்பச் செல்லம் தைரியமான பொண்ணு கூட..அதனால் நான் நிறைய முறை சந்தோஷப்பட்டிருக்கேன் ஆனால் இப்போ அப்படி செல்லம் கொடுத்து வளர்த்தது தான் நான் பண்ணின பெரிய தப்போன்னு தோன்றுது"

" அப்பா.."

" இரு பாப்பா அப்பா பேசும் போது ஊடால வந்து பேசாத"

"அப்பா நீங்கள் என்னை பாப்பான்னு கூப்பிடுங்க அதற்காக நான் பாப்பான்னே நினைச்சிடாதீங்க எனக்கு வயசு இருபத்தி ஒன்று ஆயிடுச்சு"

" பாப்பா.. நம்ம குடும்ப வழக்கத்தில இதுவரை காதலிச்சு திருமணம் பண்ணிக்கிட்டவங்கலை நம்ம வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டது இல்லை முன்னாடி எல்லாம் அப்படித் தான் "

" அப்பா அது அந்த காலம் இப்பொதெல்லாம் காதல் திருமணம் எல்லாம் ரொம்ப சாதாரண விஷயம் நீங்கள் தான் தேவை இல்லாமல் விஷயத்தைப் பெரிது பண்றீங்கனு எனக்குத் தோன்றுகிறது"என்று அவள் தந்தையிடம் வாதம் செய்யும் போதே அமுதா காபியைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

'இந்த அப்பா பொண்ணு உரையாடலில் நமக்கு ஏற்கனவே வயிறு கலக்குது இதுல இந்த அம்மா வேற இப்போ காபி வந்து கொடுக்குது கன்பார்ம் இங்கேயே பொய்டுவேன் போல..'

" அந்த காலம் இந்த காலம் வேற என்றாலும் காதல் அப்போதும் இப்போதும் ஒன்று தான் அது மாறவில்லை மாறவும் மாறாது...இப்போ கூட ஒன்னும் குறைஞ்சு போகவில்லை இந்தாரு இந்தப் பையனை ஊருக்கு அனுப்பிவிட்டு நம்ம ஜாதியில் உன் படிப்பிற்கும் அழகிற்கும் ஏற்றாற் போல் நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து உனக்கு கண்ணாலம் முடிச்சு வைக்கிறேன் இந்த அப்பாவை நம்பு"

'என்ன குடும்பமே என்னை வெச்சு காமெடி பண்ணுதா.. இவள் என்னன்னா உன்னை கழட்டிவிட்டு வேறு ஒருவனைக் கல்யாணம் பண்ணுவேனு சொன்னா இவரு என்னையை ஊருக்கு பார்சல் பண்ண சொல்றாரு'

" நீ எழுந்திரு பரத்.. இங்கே இவ்வளவு நடக்குது நீ பாட்டு காஃபி குடிச்சிட்டு இருக்க"

" காஃபி குடிக்கவில்லை வைஷ்.. சும்மா தான் கப் வெச்சிருக்கேன்"

" ஒரு வார்த்தை தான் நச்சுன்னு கேளேன் பரத் இவரிடம்"

"அது வந்து அன்கிள் நான் உங்களின் பெண்ணை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் அவள் இல்லையேல் என்னால் எதுவும் செய்ய முடியாது"

" என்னப்பா.. படம் நல்லா பார்ப்ப போல ஒரே வசனமா இருக்கு"என்று எழுந்தவர் தங்களுடைய காரில் ஏறி" முத்து வண்டியை எடு"என்று சென்றுவிட்டார்.

" அம்மா என்ன இது! "

"இப்போ தான தம்பி வந்திருக்காரு.. அப்பாக்கு போகப் போக மனசு மாறிவிடும் நீ அவரை கெஸ்ட் ஹவுஸில் தங்கச் சொல்லு"

"வைஷ் எனக்கு மொத்தமே மூன்று நாட்கள் தான் விடுமுறை அதற்குப் பிறகு என்ன பண்றது"

"அதான் வொர்க் ஃபர்ம் ஹோம் இருக்குல்ல பரத் அத அவைள் பண்ணு"

"............. "

" தம்பி வாங்க பக்கத்தில் தான் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு அங்கே போலாம்"என்று மீனாட்சி அழைத்துச் சென்றாள்.

******************************************

"பரத் எனக்கு ஒன் ஹியர் சீனியர். நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள அந்த பிரபல என்ஜீனியரிங் கல்லுரியில் தான் படித்தோம். அன்னிக்கு ஃபிப்ரவரி 14 பரத் போக்கேயுடன் வந்து எனக்கு அழகான கிரீட்டிங் காடு எல்லாம் கொடுத்து என்னை இம்ப்பிரெஸ் பண்ண டிரை பண்ணான். நான் அவனை ஒரு வருஷம் காயவிட்டு தான் ஓகே சொன்னேன். நௌ இட்ஸ் பீன் டூ ஹீயர்ஸ் ஃபார் அஸ்.. வி போத் ஆர் வெரி ஹாப்பி இன் திஸ் ரிலேஷன்ஷிப்" இதைப் பார்த்த அந்த இரண்டு கண்கள் வன்மத்தில் சூழ்ந்தது.

" இந்த காதல் எப்படி நிலைக்குதுன்னு நானும் பார்க்கிறேன்"என்று வன்மமாகக் கூறிய அந்த நபர் அவரின் ஃபோனை எடுத்து யாருக்கோ அழைத்தார்.

****************************************

" ஐய்யா! நம்ம இப்போது ஓட்டலுக்கு தான போக வேண்டும்"

"இல்லை முத்து! வண்டியை கொட்டக்குடி ஆற்றில் நிறுத்து"

" சேரிங்க ஐயா"

ஆற்றின் ஓரத்தில் அமர்ந்து வெறித்தவறின் மனதில் "உன்னை கஷ்டப்படுத்தி விட்டு இப்போது என் மகள் என்று வந்ததும் நான் காதலுக்கு எப்படி ஒத்துக் கொள்ள முடியும் லக்கி.. அது உனக்குச் செய்யும் திரோகம் தானே தராசு என்பது ஒரே மாதிரி தானே இருக்கவேண்டும்"என்று நினைத்து குமுறியவர் தன் மகன் கார்த்திக்கிற்கு கால் செய்தார்.

"அப்பா சொல்லுங்க என்ன இந்நேரம் கால் பண்ணிருக்கீங்க"

" மனசே சரியில்லைப்பா..நம்ம பாப்பா ஒரு பையனை.. "

" எனக்கு எல்லாம் தெரியும்ப்பா.. காதல் தான பண்ணுகிறாள் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது தான.."

"என்னய்யா நீ இப்படிச் சொல்ற.. உனக்குத் தெரியாததா.. ஏன் உங்கம்மாளுக்கும் எல்லாம் தெரியும் உங்கள் யாருக்குமே இது தப்பாகத் தெரியவில்லை என்றால் அடுத்து நான் பாப்பாவிடம் தான் இதைப் பற்றிப் பேச வேண்டும் தம்பி"என்று கால்லை கட் செய்தார்.

************************************

தன்னுடைய இருக்கையில் சாய்வாக அமர்ந்த முத்துலட்சுமியின் மனதில் அத்துனை கோபம் மற்றும் கவலை இருந்தது.

" ஏன் மாமா... இருபத்தி எட்டு வருஷம் முன்னாடி அந்த சுந்தரவேலின் குடும்பம் என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினாங்க என்னை மட்டுமா உங்கள் மகனை எவ்வளவு படுத்தினாங்க.. இப்போது அவங்க வீட்டுப் பொண்ணு மட்டும் காதலிச்சு கல்யாணம் பண்ணலாமா.. இது எந்த விதத்தில் நியாயம்.. ஏன் இந்த ஊரில் நியாயஷ்தர் என்று வேஷம் போட்டு நல்ல பெயர் வாங்கிக் கொண்டு சுத்தும் அந்த சிங்காரவேலிற்கு இப்போது தன்னுடைய மகள் ஒருவனை இழுத்துக் கொண்டு வந்தபோது மட்டும் காதல் கசக்கவில்லையோ அவன் ஒத்துக்காமலா முகநூலில் எல்லாரும் பார்க்கும் விதமாய் போட்டிருப்பாள்.. "

" விடு லட்சுமி.. ஆனால் என் மகன் ரத்தினவேலை இவனுங்க நிம்மதியாக வேலைக் கூடப் பார்க்க விடாமல் எவ்வளவு பாடு படுத்தினாங்க அந்த துயரத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்துவிட்டான் என் மகன்".

"ஆமா மாமா.. இத்தனைக்கும் உங்கள் மகன் அவங்க கிட்ட கெஞ்சிட்டு இருந்தாரு.. அவ்வளவு நல்ல மனிஷன் யாரையும் அதிர்ந்து கூட பேச மாட்டார்"என்று அழுத வர்" அதனால் தான் என் மகனை சின்ன வயதில் இருந்தே தைரியமாலியாகவும் பலசாலியாகவும் புத்திசாலியாகவும் வளர்த்தேன்.."

"சூர்யா எப்போ வருகிறான் மா.. "

" நாளைக்கு லண்டனில் இருந்து ஃபிளைட் மாமா..நாம் எல்லாரும் தேனி கிளம்ப வேண்டிய நேரம் வந்திருச்சு"என்று கோபமாகச் சிரித்தார்.

" நேற்று மகேஷ்வரி கால் பண்ணினாள் லட்சுமி.. அனாமிகா வந்து சூர்யா எப்போது வருவான்னு கேட்டுட்டே இருக்கிறாளாம் மகேஷ்வரி கூட எப்போது கல்யாணம் வெச்சிக்கலாம்னு கேட்டுட்டே இருக்கிறாள் லட்சுமி "

" மாமா..அதற்கு முன் சூரியா நின்று முடிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது"என்று தான் அமர்ந்திருந்த நாற்காலியின் பிடியில் கைகளில் தாளம் போட்டாள்.

*********************************************

" வைஷ்ணவி பாப்பா சாப்பிட்டியா? " என்று தந்தை கேட்க

" அம்மா இவர் என் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும் வரை நான் இவரிடம் பேச மாட்டேன்"

" என்ன அடம் இது வைஷ்ணவி" என்று அம்மா கேட்க

"இது அடம் இல்லை அம்மா முடிவு"

"ஏங்க உங்களுக்கு அவளின் காதலை ஏற்பதில் அப்படி என்ன தான் பிரச்சனை! "

" ஏன் உனக்கு தெரியாதா!! தெரியாதா! "என்று கத்தியவர்" உம்பாட்டுக்கு பேசிட்டே போறவ.. "பாப்பாவிடம் என்ன விஷயம் என்று சொல்லி புரியவை" என்று சாப்பிடாமலே இரவு தூங்கச் சென்று விட்டார்.

"என்னவாம் மா அப்பாவிற்கு ஏன் இப்படி கத்திட்டுப் போறாரு"

"எல்லாம் அந்த லக்கி பண்ண வேலை தான்..."

"ஓ அந்த மாட்டரா"

" உனக்கு அதைப் பற்றித் தெரியுமா?" என்று அம்மா கேட்க

" ஆமாம் அம்மா அந்த மொக்கைக் கதையைக் கார்த்தி சொன்னான்"

" ம்ம்ம்.."

"அப்பாவை எப்படிச் சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் அம்மா"என்று சிரித்தவள் படுக்கச் சென்றாள்.

அடுத்த நாள் காலையில் குளித்து விட்டு பூஜை முடித்து சாப்பிட அமர்ந்த சிங்காரவேலின் முன் அழுதாள் மீனாட்சி.

" வெள்ளிக்கிழமை அதுவுமா ஏன் அழுறவ?"

"என்ன பண்றது? எல்லாம் ஏன் தலையெழுத்து"

" என்ன ஆச்சுன்னு சொல்லு மீனாட்சி"

"வைஷ்ணவி சாப்பிட மாட்டாளாம் இனி.."

"என்னது?"

"ஆமாம் நீங்கள் கல்யாணத்திற்கு ஒத்துக் கொள்ளும் வரை உண்ணாவிரதமாம்" என்று அழுதாள்.

"நீ பேசிப்பார்த்தியா? "

" கதவைத் மூடிக்கொண்டவள் வரவே மாட்டீங்குறாள்"

இதைக் கேட்ட பின் சாப்பிடாமல் பாதியிலேயே கை கழுவிவிட்டுச் சென்றார் சிங்காரம்.

அவர் சென்ற பின் வைஷ்ணவியின் அறைக் கதவைத் தட்டிய மீனாட்சி" கதவைத் திற வைஷ்ணவி அப்பா கிளம்பிட்டாங்க" என்று கூறும் போது கதவைத் திறந்து ஓடி வந்தவள் தன் அம்மைவைக் கட்டிப்பிடித்து" அம்மா நீ என்னம்மா என்னை விட பயங்கரமாக ஃபெர்மாம் பண்ற கிளிசரின் இல்லாமல் எப்படி அழுத..?"

"எல்லாம் நம்ம வெங்காயம் தான்.."

"சேரி சாப்பாடு போடு பசிக்குது.. அமுதாக்கா அப்படியே பரத்திற்கும் சாப்பாடு கொடுத்து விடுங்க நான் கொடுத்துட்டு வரேன்"

"சேரிம்மா" என்று அமுதா வெளியில் பின்

" நீ ஆக்டிங் பண்றது எல்லாம் ஓகே ஆனால் அப்பா பாவம் டீ வயதானவர் நீ சாப்பிடவில்லை என்றதும் சாப்பிடாமல் கிளம்பி விட்டார்.. நான் என்ன பேசுறேன் நீ என்ன யோசிக்குற"

" அம்மா நான் ஒரு செயின் வெச்சிருந்தேன்.. அந்த செயினைக் காணும் அதான் மனசே கஷ்டமா இருக்கு ஒரு மாதிரி"

" அதான் கழுத்தில் இருக்கே வைஷ்ணவி"

" இல்லை அம்மா.. இது வந்து பரத் எனக்கு கிஃப்ட்டாகக் கொடுத்தது.. அதில் இதய வடிவில் ஃபோட்டோ டாலர் இருக்கும் அம்மா அதில் என் ஃபோட்டோவும் பரத்தின் ஃபோட்டோவும் இருக்கும் அதனால் என்னவோ தப்பான சகுனம் மாதிரியே இருக்கு.. "

" இதெல்லாம் பத்திரமாக வைக்க மாட்டியா வைஷ்ணவி"

" என் தப்பு தான் மா.. "

" கடைசியாக எங்கே வெச்ச"

" என் அறையில் இன்று காலை.. "

" வீட்டில் இரண்டு மூன்று வேலைக்காரங்க இருக்காங்க இதில் யாரைன்னு நம்ம சந்தேகப் படுறது அபாண்டமாக பழி போட்டு அப்புறம் இது ஊர் மக்களுக்குத் தெரிந்தால் நம் மேல் குறை சொல்வார்கள்.. ஏன் ஊர் மக்கள் உன் அப்பாவே நம்மை குற்றவாளி ஆக்கிடுவார்"

" சரி விடுங்க மா பாத்துக்கலாம்"என்று எழுந்தவள் உள்ளே சென்று பரத்திற்குக் கால் செய்தாள்.
 
Last edited:

Shayini Hamsha

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
83
கதை சூப்பராக போகுது. அடுத்த யூடிக்கு வெயிட்டிங். எழுத்து பிழைகளை மட்டும் சரி பண்ணினால் இன்னும் நன்றாக இருக்கும் கொட்டக்குடி ஆறு ஆசிரிய தோழியே
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
கதை சூப்பராக போகுது. அடுத்த யூடிக்கு வெயிட்டிங். எழுத்து பிழைகளை மட்டும் சரி பண்ணினால் இன்னும் நன்றாக இருக்கும் கொட்டக்குடி ஆறு ஆசிரிய தோழியே
மிக்க நன்றி சிஸ்😍😍😍 கண்டிப்பாக எழுத்துப் பிழைகளைப் பார்த்துக் கொள்கிறேன் சிஸ்
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
அத்தியாயம் 3

"பரத் அமுதா அக்கா உனக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வராங்க?"

"அதெல்லாம் கரெக்ட்டா நடக்குது.. வந்த வேலை தான் எதுவும் நடக்க மாட்டீங்குது"

"கவலைப்படாதே அதுவும் நடக்கும் அதுவும் இன்றைக்கே"

"எப்படி" என்று பரத் ஆர்வத்தில் கேட்க

"சக்ஸஸ் ஆன அப்பறம் சொல்கிறேன் டா பை"

*******************************************

"அம்மா" என்ற சத்தத்துடன் வீட்டிற்குள் நுழைந்தான் சூர்யவர்மன் என்கிற சூர்யா.

" வா சூர்யா.. கலந்தாய்வு எல்லாம் எப்படி இருந்தது"

" அதெல்லாம் எப்போதும் போல் நல்லா தான் இருந்தது.. நீங்கள் ஏன் அம்மா என்னை உடனே வரச் சொன்னீங்க.. நான் இன்னும் ஒரு வாரம் அங்கு தங்கியிருக்க வேண்டியது உங்களுக்குத் தெரியும் தானே அந்தக் கார்த்திக்கை வசமாக மாட்ட வைக்க ஒரு பிளான் போட்டிருந்தேன் அது நமக்கு எவ்வளவு முக்கியம் இவ்வளவு வருஷமாக அந்த சிங்காரத்தை பழி தீர்க்க எவ்வளவு வழி யோசித்திருப்போம்.. அதற்குள் அப்படி என்ன அவசரம் அம்மா"

"நீ முதலில் குளிச்சிட்டு சாப்பிடவா அம்மா உனக்கு எல்லாத்தையும் தெளிவாக சொல்கிறேன்"

" வெல்கம் மை ஹேன்ட்சம் கிரான்ட்சன்"என்றார் தர்மலிங்கம்.

" குட் மார்னிங் தாத்தா.. அம்மா எதற்கோ என்னை அவசரமாக வரச் சொன்னாங்க ஏன்னு சொல்லாமல் டிவிஸ்ட் வெக்குறாங்க"

" சரி சரி.. நீ குளிச்சிட்டு வா பேசலாம்"

" ஓ அப்போது நீங்களும் இதில் கூட்டு"

" ஹா ஹா.. நீ நல்ல சார்ப் டா"

சூர்யா குளித்து விட்டு வந்ததும் முத்துலட்சுமி மகனுக்கு சாப்பாடு பரிமாறினார்.

" அம்மா நீங்கள் ஏன் தினமும் சமையல் செஞ்சு பரிமாற்றீங்க வீட்டில் அவ்வளவு வேலைக்காரங்க இருக்காங்க ஒரு சமையல் காரரை வைக்க என்னம்மா?"

" சூர்யா சமையல் செய்வது மற்றும் பரிமாறுவது இதை எல்லாம் அம்மா பண்ணினால் தான் அதில் ஒரு பாசம் மற்றும் பிணைப்பு இருக்கும்"

"உங்களிடம் பேசி ஜெயிக்க முடியாதும்மா.. சேரி என்ன விஷயம்ன்னு சொல்லுங்க"

" முதலில் சாப்பிடு அப்புறம் சொல்கிறேன்"

சாப்பிட்டு முடித்ததும் சூர்யாவிற்கு காஃபி கொடுத்தவர்" நாம் தேனிக்கு கிளம்ப வேண்டும் சூர்யா".

தேனி என்ற ஊரின் பெயர் கேட்டதுமே சூர்யாவின் முகம் இறுகியது" அந்த ஊருக்கு ஏன் மா போக வேண்டும்".

" சூர்யா.. "

" பின்ன என்னம்மா என் அப்பாவை என்னிடம் இருந்து பிரித்த கொலைகாரன் இருக்கும் ஊரிற்கு இப்போது ஏன் செல்ல வேண்டும்"

" செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதுப்பா"

"அம்மா.. என்ன சொல்றீங்க"

"நீ என்னிடம் அடிக்கடி சொல்லும் விஷயம்.. நம் அப்பாவின் சாவுக்குக் காரணமான அந்த சிங்காரவேலைப் பழிவாங்கும் அந்தத் தருணம் இப்போது வந்துவிட்டது சூர்யா"


********************************************

அன்று கடையில் கூட்டம் அதிகம் என்பதால் கல்லாவும் நிரம்பி வழிந்தது. அப்போது மீனாட்சியிடம் இருந்து ஒரு ஃபோன் கால் வர" என்ன மீனாட்சி இந்நேரம் கால் பண்ணிருக்குறவ?"

" ஏங்க நம்ம வைஷ்ணவி தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கிக் கிடக்கிறாள்.. இதற்கு தான் நான் தலைப்பாட அடிச்சிக்கிட்டுச் சொன்னேன் அவளுக்கு பிடித்த மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணி வைங்கள் என்று" என்று அழுதார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தந்தைக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது போல் உணர்ந்தது. பயத்தில் படபடக்க முத்துவை அழைத்துக் கொண்டு காரில் அவர் செல்லும் போதே கண்ணீர் வடித்தவர்" உன் அடத்தால் அவசரப்பட்டு உன் உயிரை விடும் அளவுக்கு துணிஞ்சிட்டியே வைஷ்ணவி பாப்பா" என்று கதறியவருக்கு கால் செய்த மீனாட்சி அவளை மருத்துவமனையில் சேர்த்திருப்பதாய் அழுதுக் கொண்டே கூறினாள்.

விரைந்து மருத்துவமனைக்குச் செல்லும் போதே கார்த்திக் மற்றும் அவனின் மனைவி வாணியும் மாத்தி மாத்தி சிங்காரத்திற்கு கால் செய்து கொண்டிருந்தனர். ஆனால் யாரிடமும் இப்போதைக்கு பேசும் மனநிலையில் அவர் இல்லை.

மருத்துவனைக்குள் கார் நின்றதும் ஓடிச் சென்று வைஷ்ணவி அட்மிட் ஆகி இருந்த அறை எண்ணைத் தெரிந்து விரைந்தவர் அங்கு நின்ற மனைவியை உலுக்கி "வைஷ்ணவி எப்படி இருக்கிறாள்" என்று கேட்டார்.

"உயிரோடு தான் இருக்கிறாள்.. மாத்திரையின் அளவு கம்மி என்பதால் பிழைத்துவிட்டாள்.. இல்லை என்றால் என் மகளை இழந்திருப்பேன்.. அப்படி என்ன உங்களுக்கு அவ்வளவு பிடிவாதமான வீராப்பு.. அந்த ஓடுகாளிக்காக என் மகளை இப்படிப் படிப்படியா கொலை செய்வதற்கு இரண்டு பேரையும் ஒரேடியாக கொன்னுவிடுங்கள்"என்று கத்தினார்.

" மேடம் இது மருத்துவமனை உங்களுடைய குடும்பம் பிரச்சினை எல்லாம் இங்கே வைத்துக் கொள்ளாதீர்கள் "என்று அங்கிருந்த நர்ஸ் மெதுவாக கத்தினார்.

அதைக் கேட்டு கடுப்பில் அமர்ந்த மீனாட்சி" வைகை ஆயிற்றில் போய் பேசாமல் எங்களை தலை முழுகிடுங்கள்.. நானும் என் பெண்ணும் எப்படிப் போனால் உங்களுக்கென்ன"என்று முனுமுனுத்தார்.

அங்கே நின்றிருந்த பரத்தும் அழுது கொண்டு தான் இருந்தான். அவனால் சிங்காரவேலின் சட்டையைப் பிடித்து "உங்கள் பொண்ணைக் கட்டிக் கொடுங்கள்"என்று கேட்க பயமாகவும் இருந்தது. தங்களின் காதலைக் கல்யாணத்தில் முடிய தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்த வைஷ்ணவியின் மேல் கோபமும் இருந்தது தனக்காக ஒரு பெண் இந்த எல்லைக்கு முற்பட்டது சந்தோஷமாகவும் இருந்தது.

சுவற்றில் நின்றபடியே சாய்ந்திருத்த சிங்காரவேலின் மனதில் "சாரி லக்கி..மன்னிச்சிடு நீ அன்னிக்கு என்னைப் பார்த்துக் கேட்ட கேள்வி இப்போ வரை குத்துது என்னை மன்னிச்சிடு கடைசியாக நீ சொன்னது தான் நடக்கப்போகுது".

" எக்ஸ்க்யூஸ் மீ பேஷண்ட் வைஷ்ணவி கண் முழிச்சிட்டாங்க போய் பார்க்கலாம் அவங்களை ஒரு நாள் கழிச்சு டிஸ்சார்ஜ் செஞ்சிடலாம்"

அனைவரும் உள்ளே விரைந்து பார்க்க்ச் சென்ற போது வைஷ்ணவி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

" என்ன காரியம் டீ பண்ணிருக்க.. எனக்கு உயிரே போயிடுச்சு இனி இப்புடி பண்ற மாதிரி நினைத்தால் எனக்கும் சேர்த்து கலந்து கொடு இரண்டு பேரும் ஒன்றாக செத்து போயிடலாம் அப்போது தான் இவருக்கு நிம்மதியாக இருக்கும்.." என்று அழுதார் மீனாட்சி.

சிங்காரவேல் அங்கே நிற்பதால் ஒரு ஓரமாக நின்று கொண்ட பரத் அழுதுக்கொண்டே தலை குனிந்திருந்தான்.

" என்ன காரியம் பண்ண போயிட்ட பாப்பா நீ.. இந்த அப்பாவின் மேல் அவ்வளவு வெறுப்பா உன் வாழ்க்கையையே அழிக்க போயிட்டியே மா.. "என்று அழ வைஷ்ணவி அமைதியாகத் தான் உட்கார்ந்திருந்தாள் எதுவும் பேசவில்லை அதில் ஒரு அழுத்தம் தெரிந்தது.

"உனக்கென்ன பாப்பா நீ ஆசைப்பட்ட மாதிரி இந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் அவ்வளவு தான.. சேரி நான் இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கிறேன்.. அவரின் அம்மா மற்றும் அப்பாவை வந்து பொண்ணு கேட்கச் சொல்லு" என்று நகர்ந்து விட்டார்.

இதை வைஷ்ணவி எதிர்ப்பார்த்தது தான் என்பதால் அமைதியாக இருந்தாள். தன் கணவன் வெளியே சென்ற பின்" இது தான் நீ சொன்ன பிளானா வைஷ்ணவி.. அதற்காக உன் உயிரை விட துணிந்து விட்டாயே பாவி"என்று கதறினார் அன்னை.

" அம்மா அழாதீங்க உங்கள் மகள் ஒன்றும் அவ்வளவு முட்டாள் இல்லை.. வேண்டும் என்றே கதவைத் திறந்துவிட்டு மாத்திரை பாட்டிலை கையில் வைத்துக் கொண்டு இரண்டே தூக்க மாத்திரையைத் தான் விழுங்கினேன்.. நான் சாக மாட்டேன் என்று எனக்குத் தெரியும் இப்படி பிளாக்மெயில் பண்ணினதிற்கு அப்புறம் அப்பா கண்டிப்பாக ஒப்புக்கொள்வார் என்று எனக்குத் தெரியும்.. அதனால் தான் இந்த பிளானை எக்ஸ்ஸிகியூட் பண்ணினேன்"

" நல்ல வேளை வைஷ்ணவி இந்த மாதிரி பண்ணி உன் அப்பாவை ஒத்துக்க வெச்சிட்ட..எனக்கு அவரின் மீசையைப் பார்த்தலே பயமா இருக்கு தாங்க் காட்"

இதைக் கேட்ட மீனாட்சி முகத்தைச் சுளித்தார். பரத் வெளியே சென்ற பின்" இவர் என்ன டீ இப்படி பிராணி மாதிரி இருக்காரு.. நீ என்னன்னா இந்தப் பயனுக்காக இவ்வளவு போராடிட்டு இருக்க"

" அம்மா பரத் பாவம் மா.. அவனுக்கு இதெல்லாம் புதுசு அஃக்சுவலி அவன் அம்மா அப்பா ரொம்ப சாஃப்ட் நேச்சர்.. இங்கே அப்பா பேசுறது எல்லாம் பார்த்து பயந்திருப்பான்"

"என்னவோ சொல்ற போ"

பரத் தன் தந்தை மற்றும் தாயிடம் வைஷ்ணவி தந்தை ஒத்துக்கொண்டதைக் கூறி மகிழ்ந்தான். அவர்களுக்குமே மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த இரண்டு நாட்களில் வைஷ்ணவி டிஸ்சார்ஜ் ஆன பின் பரத்தின் பெற்றொர்கள் வந்து சம்மந்தம் பேச வந்தனர்.

பிடிக்காது தான் என்றாலும் தன் பெண்ணிற்காக ஒத்துக் கொண்டவர் வந்தவர்களை நன்கு உபசரித்தார்.

"அப்புறம் சம்மந்தி எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்" என்று பரத்தின் தந்தை கேசவன் கேட்க

"இப்போ தானங்க உங்கள் மகனிற்கே வயது இருபத்தி மூன்று ஆகுது இன்னும் எப்படி இருந்தாலும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டும்"

"அது வந்து சம்மந்தி புரியிது ஆனால் அடுத்த மாதம் மகன் ஆஸ்திரேலியா செல்கிறான் அதனால் கல்யாணத்தையும் முடித்து விட்டு வைஷ்ணவியையும் கூட அனுப்பினால் தான் நல்லா இருக்கும்"

" அம்மா அப்பைவைச் சேரி சொல்ல சொல்லுங்க நானும் ஆஸ்திரேலியாவில் ஒரு வேலையைத் தேடப் போகிறேன்" என்று தன் அம்மாவின் காதில் கிசுகிசுத்தாள்.

மீனாட்சிக்கே மகள் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது என்றாலும் அவளை விட்டுக் கொடுக்க முடியாமல்" ஆமாங்க உடனே கல்யாணம் பண்றது தான் நல்லது"என்று சபையிலேயே கூறி விட்டாள்.

எல்லாம் தன் கை மீறிப் போனப் பின் சிங்காரவேலிற்கு மதிப்பு இல்லை என்று தெரிந்த பின்னர் அவரும் வேறு வழியின்றி சம்மதித்து விட்டார்.

பின் அமுதாவின் கையால் காஃபி அருந்திவிட்டு பரத்துடன் கெஸ்ட் ஹவுஸில் தங்கினர் பரத்தின் தந்தை கேசவன் மற்றும் அபிராமி. வரும் வெள்ளிக்கிழமை நிச்சயத்தை முடிவு செய்தவர்கள் அடுத்த இரண்டாம் வெள்ளிக்கிழமை கல்யாணம் என நாள் பார்த்தனர்.

சிங்காரவேலிற்கு சொந்தம் என்று இப்போது யாரும் இல்லை. அதனால் மீனாட்சி அவளின் சொந்தங்களை அழைத்தார். கார்த்திக் என்னால் வர முடியாது ஆனால் செலவைப் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டான்.

தன் மனக் குமுறலை மணியிடம் மட்டுமே அவ்வப்போது பகிருபவருக்கு வீட்டில் நிம்மதி கிடைக்காமல் போனது. ஆனால் நிச்சயதார்த்தம் வேலை நன்றாக நடந்துக் கொண்டு தான் இருந்தது மீனாட்சி மற்றும் வைஷ்ணவி பரத்தின் குடும்பத்துடன் ஷாப்பிங் சென்று நிச்சயப் பட்டுச் சேலையை எடுப்பது என்று பிஸியாகவே இருந்தனர்.

நிச்சயமும் சிறப்பாக நடந்த நிலையில் அதற்கு அடுத்த இரண்டு வாரத்தில் திருமணம் என்று முடிவு செய்தனர் என்பதை விட வைஷ்ணவியும் மீனாட்சியும் முடிவு செய்தார்கள் என்றே கூறலாம்.ஒரு பிடிப்பே இல்லாமல் இருந்த சிங்காரவேல் விரக்தியாகவே காணப்பட்டார்.

"ஏங்க இன்னிக்கு நம் பெண்ணின் நிச்சயதார்த்தம் நீங்க பாட்டுக்கு இப்படி சோகமாக முகத்தை வைத்திருந்தால் இங்கிட்டு வந்திருக்கும் எல்லாரும் என்ன நினைப்பாங்க" என்று காதில் கிசுகிசுத்தாள். பின் தான் தன் நிலையை உணர்ந்தவர் வெளி உலகத்திற்காக சிரிப்பு என்னும் முகமூடியைப் போட்டுக் கொண்டார்.
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
அத்தியாயம் 4

"சூர்யா என்ன முடிவு பண்ணிருக்க?"

தன் லேப்டாப்பில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அதை மூடி வைத்து "அம்மா அந்த ஆளைப் பழிவாங்க வேண்டும் என்று உங்களை விட என் கைகள் துடித்துக் கொண்டிருக்கிறது என்னை விட்டால் அவனைக் கொலைச் செய்யும் அளவு கோபம் இருக்கிறது. ஆனால் ஒரு கொலையாளி ஆக நான் விரும்பவில்லை பிகாஸ் ஐ ஹேவ் மை ஓன் பிரோட்டோகால்ஸ்.. அவனுடைய மகன் அந்த கார்த்திக்கை மாட்டி வரலாம் என்று யோசித்தேன் அவனும் லண்டனில் தான் இருக்கின்றான் அவனை மாட்டிவிடவும் ஒரு பிளான் போட்டேன் அது கிளிக் ஆச்சுன்னா கார்த்திக் நடுத்தெரு நாராயணண் ஆயிருப்பான் ஆனால் அதற்குள் நீங்கள் எனக்கு கால் செய்து வரச் சொல்லி விட்டீர்கள்".

" அந்த கார்த்திக்கை விடு.. இந்தப் பெண்ணின் திருமணத்தை நிறுத்துவது தான் அதைவிட சரியான பிளான்".

"நீங்கள் சொல்வதைப் போல் செய்ய எனக்குச் சுத்தமாக விருப்பம் இல்லை அம்மா...."

"சூர்யா நான் ஒன்றும் உன்னை அவளுடன் காதல் வார்த்தை பேசச் சொல்லவில்லை அவளிடம் எதாவது சந்தர்ப்பம் கொண்டு வந்து பேசி படம் பிடித்து அந்தக் கல்யாணத்தைத் தான் நிறுத்தச் சொல்கிறேன்.."

"அந்த பொண்ணு வாழ்வில் விளையாடி சிங்காரவேலை அசிங்கப்படுத்துவது கோழைத்தனம் அம்மா"

" கிடையாது சூர்யா.. அந்தப் பெண் ஒன்றும் நீ நினைக்கும் அளவிற்கு அப்பாவி இல்லை.. அவளின் காதலனிடமே அவனைக் கழற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்துடலாம் என்று சொன்னவள் பின் சென்னையில் அவனுடன் தான் தங்கினாளாம் அப்போது அவளின் லட்சணம் உனக்கு இப்போது புரிந்திருக்கும் தானே இவளின் வாழ்க்கையில் விளையாடுவது தப்பே இல்லை சூர்யா இது நமக்குக் கிடைத்த ஒரு பெரிய வாய்ப்பு இதைப் பயன்படுத்தி அந்த சிங்காரவேல் ஊரார் முன்னே கூனிக்குறுகி நிற்பதை நான் பார்த்துச் சந்தோஷப் பட வேண்டும் அப்போது தான் உன் அப்பாவின் ஆத்மா சாந்தி அடையும்.. "என்று கோபமாகச் சிரித்தார் முத்துலட்சுமி.

" அனாமிகாவிற்கு இந்த விஷயம் தெரியுமா? "

" என்னடா அனாமிகாவைக் கல்யாணம் பண்ண சொல்லி உன்னிடம் அவ்வளவு கெஞ்சிய பின் தான் சம்மதித்தாய்.. இப்போது அனாமிகா இதைப் பற்றி என்ன நினைப்பாள் என்கிற அளவிற்கு யோசிக்கிறாய்! "

" அம்மா அப்படி கிடையாது.. அனாமிகாவிற்கும் எனக்கும் கல்யாணம் ஆகப் போகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் அவளுடைய இடத்தில் இருந்து நான் இந்த மாதிரி செய்வது அவளுக்கு வருத்தத்தைக் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் அதுவும் இல்லாமல் அனாமிகா மீது காதல் இல்லை என்றாலும் இன்னும் கொஞ்ச நாட்களில் அவளைக் கரம் பிடிக்கப் போகும் கணவன் என்கிற அக்கறை இருக்கிறது"

" அனாமிகாவிடம் நான் பேசுகிறேன் சூர்யா.. "

சூர்யா வந்த செய்தி அறிந்து அனாமிகா அவனின் வீட்டிற்கு விரைந்தாள்.

" தாத்தா சூர்யா அத்தான் எங்கே? "

" அவன் வெளியே போயிருக்கிறான் மா.. நாளை நாங்கள் எல்லாரும் தேனி கிளம்புகிறோம்"

" தேனியா எதற்கு! "

" ஏனென்று நான் சொல்கிறேன் அனாமிகா.. "என்று அனாமிகாவை தனியாக அழைத்துக்கொண்டு முதலில் காஃபி கொடுத்து விட்டு அனைத்தையும் கூறினார் லட்சுமி.

" அத்தை இதில் எதுவும் பிரச்சனை வராது இல்லையா! "என்று குழப்பமாக நேரிட்டாள்.

" சூர்யா உனக்குத் தான் அனாமிகா.. ஒன்று புரிந்துக்கொள் உன்னை விட அழகாக பெண்கள் சூர்யாவை மணக்க தயாராக இருந்தனர் ஆனால் உனக்கு சூர்யாவின் மேல் ஆசை என்று தெரிந்த பின்னர் நான் பெண் பார்ப்பதையே நிறுத்தி விட்டேன். என் மேல் இருக்கும் மரியாதை பாசத்தினால் தான் சூர்யா உன்னைத் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டான் இல்லை என்றால் உன்னை மணக்கச் சம்மதித்திருக்கமாட்டான்".

அரை மனதுடன் தலை ஆற்றிய அனாமிகா கணத்த மனதுடன் வீட்டிற்குச் செல்லும் போதே சூர்யாவிடம் இருந்து கால் வந்தது.

அதைக் கண்டவளின் இதயம் சந்தோஷத்தில் படபடவென அடித்தது சொந்த மாமன் மகனாய் இருந்தாலும் சூர்யா தன்னுடன் இதுவரைப் பெரிதாக பேசியதில்லை. இப்போது நிச்சயம் முடிந்த பின்னர் தான் லண்டன் செல்வதாய் அவளுக்கு மெசேஜ் செய்து கூறினான். இப்போது கால் செய்யும் போது மனதை ஒரு நிலைப்படுத்திக்கொண்டு ஃபோனை எடுத்தாள்.

"அனாமிகா நான் இப்போது உன்னை நேரில் சந்திக்க வேண்டும்"

"அத்தான்.. நான் ரெடியாகத் தான் இருக்கின்றேன்.. எங்கே வர வேண்டும்"

"மெரினா பீச்"

"இதோ வந்திடுறேன்" என்று ஒரு ஆட்டோவைப் பிடித்து மெரினாவிற்குச் சென்றுவிட்டாள்.

மகேஷ்வரியின் கணவன் அசோகன் அரசு உத்தியோகத்தில் இருக்கிறார் என்றாலும் சூர்யவர்மன் குடும்பத்தின் அளவு வசதி கிடையாது.

தர்மலிங்கம் மற்றும் காஞ்சனா தம்பதியினர் இருவரும் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தனர். அவரின் மகனான ரத்தினவேல் தேனியில் ஒரு பெரிய பணச்சிட்டு கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்தான். அவர் இறந்த பின்னர் முத்துலட்சுமி தன் மாமனாரின் உதவியால் ஒரு நிர்வாகத்தை ஆரம்பித்தார்.பிற்காலத்தில் அது தன்னுடைய மகன் கைக்கு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்திலேயே அலுவலகத்தை சிறப்பாக செயலாற்றினார். காஞ்சனா அவருடைய அறுபது வயதில் இயற்கை எய்தினார்.

இப்போது சென்னையிலேயே பெயர் சொல்லும் ஐடி நிறுவனங்களில் ஒன்று RV (Rathina Vel) Solutions மறைந்த தன் கணவனின் பெயரில் ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டு மகனிடம் ஒப்படைத்து விட்டார் முத்துலட்சுமி.

ஆறு வருடங்களாக RV Solutions ஐ அடுத்த இடத்திற்குத் தன்னுடைய ஸ்மார்ட் திங்கிங்கால் கொண்டு சென்ற சூர்யவர்மன் அவ்வப்போது ஏதாவது

கலந்தாய்விற்கு வெளிநாடுகள் செல்வதுண்டு.

*****************************************

அடுத்த இரண்டு வாரத்தில் திருமணம் என்றிருக்கும் நிலையில் வைஷ்ணவி மற்றும் பரத் அவர்களுடைய கல்லூரி தோழர்களை தொலைப்பேசியில் அழைத்தனர். சொந்த வீட்டிலேயே அந்நியர் போல் உலாவிக் கொண்டிருந்த சிங்காரம் அமைதியாகவே இருந்தார்.

தேனியில் உள்ள அந்த பிரபல ரிசார்ட்டில் அறைகளை ஒரு வாரமாக வாடகைக்கு எடுத்த சிங்காரம் மகளிடம் சாவியை ஒப்படைத்து விட்டு தனக்கும் இதற்கும் இனி சம்மந்தம் இல்லை என்பது போல் நகர்ந்து விட்டார்.

இப்போதெல்லாம் சிங்காரம் மனைவியுடமும் மகளிடமும் பேச்சை கிட்டத்தட்ட நிறுத்தியே விட்டார். வைஷ்ணவியின் பிடிவாதத்தால் மட்டுமே சம்மதித்தவர் வேறு வழியின்றி வெளி தோற்றத்திற்கு சந்தோஷமாக இருப்பது போல் நடித்தார்.

*******************************************

"ஹாய் அனாமிகா"

"ஹான்.. அத்தான் ரொம்ப நேரம் காத்திருந்தீங்களா!" என்று பதற்றத்தில் கேட்டாள்.

தன் இருகைகளைக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தவன் "காத்திருந்தால் தான் என்ன.. அதற்கு ஏன் உன் முகத்தில் இவ்வளவு பதற்றம்"

"ஒன்றும் இல்லை அத்தான்"

" அனாமிகா நான் உன்னைப் பேச அழைத்தற்குக் காரணம் அடுத்த மாதம் நம்முடைய கல்யாணம் நடக்கவிருக்கிறது"

"ஆமாம் அத்தான்"

"ஆனால் இந்த வாரம் ஒரு பெண்ணின் திருமணத்தை நிறுத்தப் போகிறேன் அதுவும் அவளும் நானும் காதலிப்பதாய் ஒரு டிராமா செய்து நிறுத்தப்போகிறேன்"

" த்... தெரியும் அத்தான் அத்தை சொன்னாங்க"

" இதைப் பற்றி உன் கருத்து என்ன அனாமிகா"

" கருத்தா.. இதில் நான் என்ன சொல்வது அத்தான்"

" வை நாட்.. நீ என்னை மணக்கப் போகிறவள் உனக்கு என்று ஒரு கருத்து இருக்கும் தானே.. அன்ட் இது ரொம்ப சென்ஸ்ஸிடிவ்வான விஷயம் வேறு"

"அத்தான் அத்தை சொன்னால் அது சரியாகத் தான் இருக்கும் எனக்கு ஒரு ஆட்சேபனையும் இல்லை"

இதைக் கேட்ட சூர்யவர்மனின் முகம் இறுக்கம் அடைந்ததை அனாமிகா கவனிக்கவில்லை.

**********************************

" தாத்தா உங்களுக்கு வண்டியை நிறுத்த வேண்டும் என்றால் என்னிடம் கூறுங்கள்"என்று தன் அன்னை மற்றும் தாத்தாவுடன் தேனிக்கு பயணிக்கத் தொடங்கினான் சூர்யவர்மன்.

"சூர்யா எக்காரணம் கொண்டும் நீ என்னுடைய மகன் என்பதை நான் கூறும் வரை யாருக்கும் தெரியக் கூடாது"

ஒரு யோசனையோடு"சேரி அம்மா"என்றவன்" அந்தப் பெண் நடத்தை சரியில்லை என்று உங்களுக்கு எப்படித் தெரியும்" என்று கேள்வியாய்க் கேட்டான்.

"அந்த வைஷ்ணவியின் மேல் உனக்கு என்னடா அப்படி ஒரு அக்கறை! "

" அம்மா அந்தப் பெண்ணின் பெயர் வைஷ்ணவி என்றே நீங்கள் இப்போது கூறிய பின்பு தான் எனக்குத் தெரிகின்றது இதில் அக்கறை எதற்கு வந்தது.. "என்று கடுமையாகக் கூறினான்.

" சேரி டா கோபப்படாதே..அவன் வீட்டில் வேலைப் பார்க்கும் வேலைக்காரி அமுதா கார் டிரைவர் முத்து எல்லாமே நம்ம ஆள் தான் அவங்க சொல்லித் தான் எல்லாம் தெரியும்"

" ம்ம்... ஓகே"

சூர்யா தன்னுடைய பள்ளிப் பருவத்தில் இருந்தே பெண்களிடம் அளவாகத் தான் பேசுவான். அவனைப் பொறுத்த வரை ஒரு ஆம்பளை ஆம்பளையிடம் தான் தன் பலத்தைக் காட்ட வேண்டும் ஒரு பெண்ணை வைத்து அந்த ஆம்பளையை மனதால் வறுத்துவது கோழைத்தனம் என்றே நினைத்தான் அதனால் தான் அவன் கார்த்திக்கைக் குறி வைத்தான். இப்போது அந்தப் பெண் வைஷ்ணவிக்கு செய்யப் போவது தப்பு என்று அவனுடைய ஆழ் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதையும் மீறி அவள் ஒழுக்கம் அற்றவள் என்று தெரிந்த பின்னர் அவன் மனதில் தோன்றிய உறுத்தல் தற்போது மறைந்து விட்டது.

"சூர்யா சிங்காரம் தேனியில் இருக்கும் அந்தப் பெரிய ரிசார்ட்டில் தான் அறைகளை பிளாக் பண்ணிருக்கான் நீ மட்டும் அங்கு தங்கு நானும் தாத்தாவும் வேறு ஒரு ரிசார்ட்டில் தங்குகிறோம்".

"ஓகே மா.. நானும் அவளும் சேர்ந்து இருக்கும் போது படம் பிடிக்க ஆள் எல்லாம் ரெடி தானே! "

" அதெல்லாம் ரெடி தான் சூர்யா.. என்னுடைய கணிப்பு சரி என்றால் அந்த வைஷ்ணவி ரிசார்ட்டிற்கு வருவாள் அவளின் தோழிகளுக்காகத் தான் அறை பிளாக் பண்ணிருக்காங்க"

" ஓகே அம்மா.. ஃபர்ம் நோ ஆன் ஐ வில் டீல் திஸ்.. நோ வொர்ரீஸ்"என்று கூறியவன் காரை ஒட்டுவதில் கவனமாய் இருந்தான்.
 

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
427
முத்துலட்சுமி பண்றது தப்பு.இந்த அனாமிகா தப்புன்னு சொல்லாம அத்தைக்கு சப்போர்ட் செய்யுது🤧🤧🤧🤧😏
சூர்யா நினைச்ச மாதிரி கார்த்திக்கை வீழ்த்திருக்கலாம்.வைஷ்ணவி விளையாட்டா பேசுனதை வைச்சு அவ கேரக்டர் தப்புன்னு புரிஞ்சிட்டாங்க.அமுதா இவங்க ஆளா😤😤😤🥱
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,346
அத்தியாயம் 1

ஆடி அசையும் மரங்களும் மாசற்ற சுற்றுச் சூழலும் குளிர் காற்றுமுமாய் வைகை நதியின் கிளை நதிகளைக் கொண்டு அழகாய் தோற்றமளிக்கும் ஊர் தான் தேனி.

கொடைக்கானல் மற்றும் கேரளாவை பக்கத்தில் வைத்துக் கொண்டு இருப்பதால் அந்த மலை அடிவாரத்தில் தோன்றும் குளிர்த்தென்றல் தேனியிலும் வீசும். சூற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடமான தேனியில் கொட்டக்குடி ஆற்றில் இருந்து தான் போடிநாயக்கனூரிற்கு தண்ணீர் வருகிறது.

கொட்டகுடி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் அத்தியூத்து, அனகரை அடிவாரத்தில் உள்ள மீசப்புலிமலையிலிருந்து பாய்கிறது.வைகையின் கிளை நதியான கொட்டக்குடி ஆறு தேனி மாவட்டத்தில் ஒரு முக்கியமான ஆறு. போடிநாயக்கனூரில் இருந்து தேனி செல்லும் இந்த நதி முல்லைப் பெரியாரின் வழியாக கலந்து வைகையுடன் கலக்கிறது.

"முருகா வாழ்வு செழிக்க இன்பம் பெருக எல்லா மக்களையும் காப்பாத்துப்பா" என்று சிங்காரவேல் முருகனை வழிப்பட்டு விட்டு கல்லாவைத் திறந்து ஒரு முறை கும்பிட்டார்.

"ஏய் மணி இங்குட்டு வாப்பா"

"ஐயா.. சொல்லுங்க"

"சென்னையில் இருந்து இன்னிக்கு பாப்பா வராப்பிடி.. அதனால நா வெள்ளனே கிளம்புறே.. நீ கடைய பாத்துக்கோ பா ஓம்பாட்டுக்கு பொயிடாத"

"சேரிங்கையா நான் பாத்துக்குறேன் பெரிய படிப்பு படிச்சிட்டு பாப்பா நாளு வருஷம் கழிச்சு வருது "

" ஆமா மணி அங்கிட்டு பாப்பாவை விட்டதிலிருந்து மனசே சரியில்லை.. இந்த நாலு வருஷமும் வீட்ல மீனாட்சியும் ரொம்ப ஏங்கிட்டாப்புல.. "

" அதான் பாப்பா வந்திடுச்சுல அப்பறம் என்னங்கய்யா"

" பாப்பா சும்மா வரலை கூட ஒரு பையனைக் கூட்டிக்கிட்டு வருதுய்யா அதான் யோசனையாக இருக்கு"என்று புரியாமல் சொல்ல

" என்ன ஆச்சு ஐயா"

" இந்தா மீனாட்சி கால் பண்ணிட்டியா நான் வந்து பேசுறேன் நீ கடையை பாத்துக்கோ"என்று கிளம்பினார் சிங்காரவேல்.

சிங்காரவேல் தேனியில் 'மீனாட்சி ஹோட்டல்ஸ்' என்னும் சைவக் கடையை இருபது வருடங்களாக வைத்திருக்கிறார். அப்போதிருந்தே அவரின் ஹோட்டலில் பணிபுரியும் மணி அவருக்கு மிகவும் நெருக்கம். மணியிடம் தன் கஷ்டம் சந்தோஷம் எல்லாத்தையும் பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அவரிடம் இருந்தது.

போடிநாயக்கனூரில் ஒரு அழகிய வில்லா கட்டி அதில் வாழ்ந்த சிங்காரத்திற்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறது. மகன் கார்த்திக் என்ஜீனியரிங் படித்து விட்டு இப்போது கல்யாணம் முடிந்து லண்டனில் இருக்கின்றான்.

வீட்டின் செல்ல மகளான வைஷ்ணவி பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து பெற்றோர்களிடம் அடம் பிடித்து சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் என்ஜினியரிங் படிக்க்ச் சென்றாள்.

மீனாட்சியின் கை தான் வீட்டில் ஓங்கும். சிங்காரவேல் மிகவும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆனால் மீனாட்சியோ பணக்காரி.சிங்காரவேல் மீனாட்சியின் தந்தை சோமசுந்தரத்தின் மில்லில் தான் பணிபுரிந்தார். சிங்காரவேலின் நேர்மை பிடித்ததால் மீனாட்சியின் தந்தை சோமசுந்தரம் மகளைக் கட்டிக் கொடுத்து ஹோட்டலும் வைத்துக் கொடுத்தார். அதனால் வீட்டில் மீனாட்சி ஆட்சி தான்.

மகளைச் சென்னைக்கு அனுப்பிய பின்னர் தான் மீனாட்சிக்கும் ஏக்கமாக இருந்தது. ஆனால் தன் மகள் சென்னையில் படித்து மென்மேலும் வளர வேண்டும் என்று அவளின் ஆசையை சிங்காரவேலினால் தவிர்க்க முடியவில்லை.

இன்று தன் மகள் வைஷ்ணவி என்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் ஓரு நல்ல வேளை கை நிறைய சம்பளமும் தரப் போகிறார்கள் என்று கூறிய போதே "நீ படிக்க ஆசைப்பட்ட அப்பா அனுப்பின அங்கிட்டு போய் எல்லாம் வேலைப் பார்க்க வேண்டாம்" என்று அவர் கூறும் போது தான் "அப்பா நான் என் கூட படித்து முடித்த சீனியர் பரத்தைக் காதலிக்கிறேன்" என்று கூறியவளின் மனதில் ஒரு துளி அளவும் பயம் இல்லை.

"வைஷ்ணவி விளையாடாத" என்று தந்தை கண்டிக்கும் போதும்

" இதில் விளையாட என்ன இருக்குப்பா நான் அவரைக் காதலிக்கிறேன் அவரைத் தான் திருமணமும் செய்யப் போகிறேன் இது அம்மா அண்ணாவிற்கும் தெரியும்"என்று கட் செய்துவிட்ட மகளைக் கண்டுக்கொள்ளாமல் நேராக மனைவியிடம் சென்று சண்டை போட்டார் சிங்காரம்.

"ஏன் காதலிச்சா என்ன தப்பு.. அந்தப் பயன் ஒன்னும் உங்களை மாதிரி பைசாக்கு பிரோஜனம் இல்லாதவன் இல்லை அந்தப் பையனின் அம்மா அப்பா சென்னையில் ஜவுளிக்கடை வெச்சிருக்காங்க.. இதே நீங்கள் மாப்பிள்ளைப் பார்த்தால் உங்களை மாதிரி ஒரு ஹோட்டல் காரனைத் தான் பார்ப்பீங்க" என்று அவரின் குரலுக்கும் மேல் சத்தமாகப் பேசினாள்.

" நான் பாப்பா வரட்டும் அவளிடம் பேசிக்கிறேன்"என்று அவர் கூறிய பின்னர் வைஷ்ணவி தன் தந்தையிடம் பேசவே இல்லை.

தன் மனைவியின் மூலம் தான் அவள் காதலிக்கும் அந்த பரத் கூட வருவதைத் தெரிந்து கொண்டார் சிங்காரம். மனது ரொம்ப பாரமாக இருந்தது.

சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்த வைஷ்ணவி மற்றும் பரத் வைஷ்ணவியின் வீட்டில் அனுப்பியிருந்த காரில் ஏறி தேனிக்கு பயணத்தைத் தொடங்கினர்.

"ஹேய் பரத்! இதான் கொட்டக்குடி ஆறு சின்ன வயசுல தினமும் இங்கே தான் குளித்து ஆட்டம் போடுவோம் நானும் அண்ணாவும் இப்படியே போனா எங்க ஊரு போடிநாயக்கனூர்"

"ஹேய் வைஷ்! நான் கேட்கணும்னு நினைச்ச உனக்கு ஊர் பாஷேயே வரலையே எப்படி!"

"அதெல்லாம் இருந்துச்சு பரத் சென்னை வந்த நாளு வருஷத்தில் அப்படியே மாறிடுச்சு "

" உங்க ஊர் செம கூலா இருக்கு"

" ஆமா.. எப்படி இருந்தாலும் நம்ம கல்யாணத்திற்குப் பிறகு சென்னையில் தான வாழப் போகிறோம் அதனால் வெகேஷனிற்கு இங்கே வந்திடலாம்"

" உங்க அப்பா அம்மாவிற்கு என்னைப் பிடிக்குமா? "

" அம்மா ஓகே தான் பரத்.. ஆனால் அப்பா தான் மறுக்கிறார்"

" ஹேய் என்ன இப்படி சொல்ற! "

"அப்பா மறுப்பார் பரத் பட் நான் என் முடிவில் இருந்து மாற மாட்டேன் அப்படி தான் அடம்பிடிச்சு சென்னை வந்தேன்.. எங்க வீட்டில் அம்மா சொல்றது தான் இதுவரை நடந்திருக்கு இனியும் அப்படித் தான் நீ கவலைப்படாமல் வா"

பின் இருவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வந்திருந்தனர்.

" ஹேய் வைஷ்! இன்னிக்கு பிரொப்போசல் டேவாம்... அதனால ஒரு சின்ன வீடியோ எடுக்கப் போகிறேன்.. நான் இப்போது ஃபர்ன்ட் கேமரா ஆன் பண்றேன் நீ நான் எப்படி உன்னை பிரப்போஸ் பண்ணினேனு சொல்லு ஃபேஸ்புக்கில் போடப் போகிறேன்"

"சேரி சேரி ஆன் பண்ணு"

"பரத் எனக்கு ஒன் ஹியர் சீனியர். நாங்கள் இருவரும் சென்னையில் உள்ள அந்த பிரபல என்ஜீனியரிங் கல்லுரியில் தான் படித்தோம். அன்னிக்கு ஃபிப்ரவரி 14 பரத் போக்கேயுடன் வந்து எனக்கு அழகான கிரீட்டிங் காடு எல்லாம் கொடுத்து என்னை இம்ப்பிரெஸ் பண்ண டிரை பண்ணான். நான் அவனை ஒரு வருஷம் காயவிட்டு தான் ஓகே சொன்னேன். நௌ இட்ஸ் பீன் டூ ஹீயர்ஸ் ஃபார் அஸ்.. வி போத் ஆர் வெரி ஹாப்பி இன் திஸ் ரிலேஷன்ஷிப்"என்று அவள் தம்ப்ஸ் அப் சிம்பல் காட்டுவதைப் பார்த்த பரத்தும் அவளின் கை பக்கத்தில் தம்ப்ஸ் அப் வைத்தான்.

கார் வீட்டை நெருங்கிய போது"ஹேய் வைஷ்! உன் அப்பாவை நினைச்சாத்தான் பயமா இருக்கு? "

" ஏன் டா இப்படி பயந்து சாகுற.. நீ இவ்வளவு பெரிய பயந்தாங்கோளின்னு தெரிஞ்சிருந்தால் உன்னை லவ்வே பண்ணிருக்க மாட்டேன் இப்போ கூட நிறைய டைம் இருக்கு உன்னை கழட்டிவிட்டு வேற பையனை கல்யாணம் பண்ணிருக்குறேன்" என்று விளையாட்டாக கூறினாள்.

" வாட்!"

"ஏய் பரத் சும்மா விளையாட்டிற்கு சொன்ன கூல்.. அங்கத் தெரிது பாரு அது தான் எங்கள் வீடு சுற்றி இருக்குற தோட்டம் எல்லாம் எங்களுடையது தான்" என்று சுற்றிக் காட்டும் போதே வீடு வந்தது.

அங்கே நின்றிருந்த அன்னை மீனாட்சி மற்றும் வேலைக்காரி அமுதாவைக் கண்டவள்" அம்மா" என்று கட்டிப்பிடித்து" அமுதா அக்கா எப்படி இருக்கீங்க"என்று கேட்டாள்.

" எப்பா எம்புட்டு மாறிட்ட வைஷ்ணவிம்மா"என்று அமுதா கூற

" ம்ம்.. நாளு வருஷம் கழிச்சு பார்க்குறீங்க இல்லையா அப்படி தான் இருக்கும்"

"ஏன் டீ செமஸ்டர் லீவில் கூட எங்களைப் பார்க்க வரவில்லை நாங்க பார்க்க வரவேண்டும் என்பதற்கும் வேண்டாம் என்று சொல்லிட்ட அங்கிட்டு நீ எப்படி ஒத்தையில இருந்தேன்னு எவ்வளவு பரிதவிச்சுப் பொய்ட்டேனு தெரியுமா உனக்கு"

" அம்மா நான் எங்கே தனியா இருந்தேன் இதோ பரத்துடன் தான் தங்கி இருந்தேன்"என்று தன் தாயிடம் கண்ணடித்தாள்.

" யேய் அமுதா என்ன இன்னும் இங்கேயே மசமசன்னு நிக்குற போய் ஆரத்தி தட்டை எடுத்துட்டு வா"என்று அனுப்பினாள் மீனாட்சி.

" என்ன சொல்ற வைஷ்ணவி நீ"என்று மகளை உலுக்கினாள்.

" அம்மா நான் சும்மா விளையாட்டிற்குச் சொன்னேன் மா உங்களுடைய மகள் ஜாலியா பேசினாலும் அவள் நெருப்பு மாதிரி"

" அமுதா முன்னாடி பேசுறீயே டீ.. அவள் என்ன நினைப்பாள் உன்னைப் பற்றி"

" அம்மா அவங்க நம்ம அமுதா அக்காம்மா.. அதுவும் இல்லாமல் என்னைக் கல்யாணம் பண்ணப் போறவனே இங்கு இருக்கான் அப்போ எனக்கு என்ன பிரச்சினை"

" ஐய்யோ ஆமா ஆன்ட்டி வைஷ் என்னுடன் வெளியே கூட இதுவரை தனியா வந்ததில்லை.. ரொம்ப நல்லப் பொண்ணு.. இந்த விளையாட்டுப் பேச்சு தான் ஜாஸ்தி"

"ஐய்யோ தம்பி! வாங்க நல்லா இருக்கீங்களா இவளைப் பார்த்ததில் உங்களை கவனிக்க மறந்துட்டேன்.. "

" நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி! அன்கிள்"

" அது வந்து.. வாங்க உள்ளே தான் இருக்காரு"

'சுத்தம் நமக்கு இவ்வளவு தான் மரியாதையா' என நினைக்க வெளியில் புன்னகையோடு மழுப்பி உள்ளே வந்தான்.

உள்ளே பூஜை அறையில் கடவுளை வழிபட்டுக் கொண்டிருந்த சிங்காரவேலின் மனதில் 'எப்படியாவது வைஷ்ணவி மனதை மாற்ற வேண்டும்' என்றே இருந்தது.

வைஷ்ணவியின் சத்தம் கேட்டதும் பொறுமையாக எழுந்து வெளியே வந்தவர் "வாம்மா வைஷ்ணவி வாங்க தம்பி இப்படி உட்காருங்க.. அமுதா இரண்டு பேருக்கும் குடிக்க காபி தண்ணி கொண்டு வா" என்று பணித்தார்.
சூப்பர் சூப்பர் moving சகி ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
அத்தியாயம் 5

சூர்யவர்மனின் பென்ஸ் கார் மதுரை வைகை நதியை நெருங்கும் போது விடியற்காலை நான்கு மணி இருக்கும். அப்போது "சூர்யா வண்டியை நிறுத்து"
என்று முத்துலட்சுமி கூறினார்.

"என்ன ஆச்சும்மா நீங்க இந்நேரம் தூங்காமல் என்ன பண்ணிட்டு இருக்கீங்க"

"வைகையைப் பார்க்க விழித்திருந்தேன் சூர்யா"

"........"

"இங்கே தான் உன் தந்தை என்னிடம் அவர் காதலைக் கூறினார்" என்று வண்டியை விட்டு கீழே இறங்கினார்.

முத்துலட்சுமி பொதுவாக எதற்குமே அழமாட்டார். ஆனால் தன் கணவனைப் பற்றிப் பேசும் போதோ அல்லது நினைக்கும் போதோ அவரின் கண்களில் இருந்து வரும் கண்ணீர் அது சூர்யாவையும் மிகவும் பாதிக்கும்.

சூர்யாவை சுமந்திருக்கும் தருணத்தில் தான் ரத்னவேல் திடீர் மாரடைப்பு வந்து இறந்து விட்டார். திடீர் மாரடைப்பு என்பதை விட அவருக்கு வந்த அவப்பெயரை நினைத்து அந்த அவப்பெயரினால் கிடைத்த திருட்டுப் பட்டம் அதனால் தனக்கு ஏற்பட்ட கடன் என்று ஏகப்பட்ட மன உளைச்சல் அவருக்கு இருந்தது.

சிறிது நேரம் வைகையை வெறித்துப் பார்த்தவர் திடீரென "என் கணவன் சாக காரணமான அந்த சுந்தரவேலின் குடும்பத்தை நான் சும்மா விட மாட்டேன். சிங்காரவேல் அன்று என்னிடம் ஆணித்தனமாக பேசினாய் உன்னுடைய புதல்வர்கள் கண்டிப்பாக நீ போட்ட கோட்டை தாண்ட மாட்டாங்க காதல் கல்யாணம் பண்ண மாட்டாங்கன்னு வசனம் பேசின.. இந்த முத்துலட்சுமி இல்லன்ற தைரியத்தில் தான இப்போது காதல் கல்யாணத்தைச் சம்மதித்து இப்படி ஆடுற.. வரேன் டா என் மகனை இல்லை ஒரு ஆண் சிங்கத்தின் துணையோடு உன் குடும்ப மானத்தைச் சாய்க்க வருகிறேன்..? இனி உங்கள் அனைவரின் பாடு திண்டாட்டம் தான்"என்று கத்தினார்.

" அம்மா கவலைப்படாதீங்கள் அதான் நான் இருக்கிறேன் இல்லையா அப்போது ஏன் இவ்வளவு உணர்ச்சி வசப்படுறீங்க.. சேரி வாங்க கிளம்பலாம்"என்று தன் அம்மாவைப் பிடித்து காரில் மெதுவாக உட்கார வைத்தவன் பயணத்தைத் தொடர்ந்தான்.

தேனியில் நுழையும் போதே சில்லென்ற தென்றல் காற்று முகத்தில் வீசியது. சூர்யவர்மன் தேனி வருவது இதுவே முதல் முறை இயற்கை எழில் கொஞ்சினாலும் சூர்யவர்மனிற்கு என்னவோ மனது அனலாகக் கொதித்தனினால் அதை ரசிக்கத் தோன்றவில்லை.

"பரத் இன்னிக்கு நம்ம நண்பர்கள் எல்லாரும் வருகிறார்கள் நாம் இருவரும் போய் அவர்களை வரவேற்றால் தான் நன்றாக இருக்கும் அதனால் நீ குளிச்சிட்டு ரெடியாக இரு அவங்க வருவதற்குள் நாம் ரிசார்ட்டிற்குள் செல்ல வேண்டும்"

"சேரி வைஷ்"

வைஷ்ணவி குளித்து விட்டு கறுப்பு நிற சல்வாரை அணிந்து இயற்கையிலேயே அழகிய கண்களைக் கொண்டவள் அதற்கு மை இட்டு இரு புருவங்களுக்கு இடையில் கறுப்பு பொட்டு வைத்தவள் காதில் ஒரு கறுப்பு வளையத்தை அணிவித்து பரத் திற்காக காத்துக் கொண்டு இருந்தாள்.

பரத் வந்ததும் காரில் அவனுடன் ஏறியவள் நேராக அவளின் தந்தை பிளாக் பண்ணிருந்த ரிசாட்டிற்குச் சென்றார்கள்.

அங்கே ரிசெப்ஷனில் இருந்தவரிடம் அறையின் எண்களைக் கேட்டுக்கொண்டு தவறுதலாக சூர்யாவின் அறைச் சாவியை யும் சேர்த்து எடுத்துக்கொண்டாள் என்பதை விட சூர்யாவின் பிளான் படி அவளின் கைகளில் அந்த சாவி வைக்கப்பட்டது என்றே கூறலாம்.

வைஷ்ணவி வீட்டில் இருந்து கிளம்பும் போதே டிரைவர் முத்துவிடம் இருந்து சூர்யவர்மனிற்குத் தகவல் சென்றது.

பணம் தான் பத்தும் செய்யுமே. சூர்யவர்மனிடம் பணம் வாங்கிய ரிஷெப்ஷனிஸ்ட் "வைஷ்ணவின்றவங்க வந்தால் உங்களுடைய அறையின் கீயை யும் கொடுக்கிறேன் சார்" என்று இளித்தான்.

ஒவ்வொரு அறையும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்வையிட்டவள் பரத்தையும் அழைத்தாள். "நீ உள்ளே போ நான் பின்னாடியே வருகிறேன்" என்று மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு அறையாகப் பார்த்து விட்டு திருப்தி அடைந்தவள் கடைசி அறை சூர்யாவின் அறைக்குள் நுழையும் போது சரியாக கரண்ட் கட் ஆனது. இதை உள்ளிருந்த சூர்யா மற்றும் கேமராமேனுமே எதிர்ப்பார்க்கவில்லை தான்.

வைஷ்ணவியோ சேரி இதுவும் அதே மாதிரி தான் இருக்கப்போகிறது வெளியே செல்லலாம் என்று நினைக்கும் போது சூர்யாவும் அவளும் இருட்டில் இடித்துக் கொண்டு தரையில் விழுந்தனர்.

வைஷ்ணவியின் அலறல் சத்தத்தைக் கேட்டு தன் மொபைல் டார்ச் லைட்டை ஆன் செய்த கேமராமேன் சூர்யா மற்றும் வைஷ்ணவி இருவரும் அணைத்துக் கொண்டது போல் விழுந்திருந்ததை படம் பிடித்தான். இந்த விஷயம் சூர்யாவே அறியாத ஒன்று.

டார்ச் லைட் வெளிச்சம் வந்ததுமே இருவரும் செய்த முதல் விஷயம் சூர்யாவும் வைஷ்ணவியின் கண்களை நோக்கியது வைஷ்ணவியும் சூர்யாவின் கண்களை நோக்கியது. படம் பிடித்தவுடன் டார்ச் லைட்டை ஆஃப் செய்தவன் உள்ளே பதுங்கிக் கொண்டான்.

சூர்யாவின் கால்கள் வைஷ்ணவியுடன் பிணைக்கப்பட்டு இருந்ததால் "எக்ஸ்க்யூஸ் மீ கொஞ்சம் லைட் அடிங்க கால் மாட்டிக்குச்சு" என்று சூர்யா சொல்ல "நீங்கள் தானே இவ்வளவு நேரம் டார்ச் லைட் அடிச்சீங்க" என்று வைஷ்ணவி கேட்க இருவரும் குழப்பத்தில் இருக்கும் போதே ஜெனரேட்டர் ஆன் செய்யப்பட்டிருந்தது.

வெளிச்சம் வந்த உடனே முதலில் சுதாரித்த சூர்யா எழுந்துக்கொண்டு"யார் நீங்கள் என் அறையில் என்ன பண்றீங்க?"

வைஷ்ணவியும் எழுந்து" இது நாங்கள் புக் பண்ணின அறை சார்"என்றாள்.

சூர்யாவும் வைஷ்ணவியும் பக்கத்தில் நின்று பேசுவதைப் போல் படம்பிடிக்க நினைத்தவன் கேமராமேனிடம் படம் பிடிக்குமாறு செய்கை செய்தான்.

'நம்ம இதை விட பெரிய ஐட்டத்தையே ஃபோட்டோ எடுத்து விட்டோம் இவர் என்ன ஜுஜுலிப்பா மாதிரி இதை எடுக்கச் சொல்கிறார்'என்று சிரிப்பாக நினைத்தவன் அதையும் படம் பிடிக்கத் தொடங்கினான்.

"இல்லை மேடம்.. பாருங்க என்னிடம் கீ இருக்கிறது" என்று அவன் காட்ட

"என்னிடமும் ஒரு கீயைக் கொடுத்து விட்டிருக்கிறார் சார்.. சேரி நான் அவரிடம் கேட்டுக் கொள்கிறேன்" என்று வெளியில் வந்தவளின் மனது படபடவென அடித்தது.

வைஷ்ணவி யாருக்குமே இதுவரை பயந்தது கிடையாது பேச்சிலும் விட்டுக்கொடுக்க மாட்டாள் ஆனால் இவன் யாரோ ஒருவன் அவனிடம் ஏன் மல்லுக்கட்ட வேண்டும் என்றே விலகினாள். இவன் வேற ஆறடி உயரத்தில் ஏதோ ஹிந்தி சீரியல் நடிகர் போல் இருக்கிறான் ஏதோ வைட்டு பார்ட்டி போல நமக்கு ஏன் வம்பு என்று நினைத்தே விலகினாள்.

" ஐய்யோ சாரி மேடம் உங்களிடம் தப்பான கீ கொடுத்து விட்டேன்" என்று வரவேற்பில் இருந்தவன் இவள் கேட்கும் முன்பே ஆஜர் ஆகிவிட்டான்.

"ஏய் வைஷ் ஒரு மெயில் அனுப்ப லேட் ஆயிடுச்சு..வா இப்போது அறையைப் போய் பார்க்கலாம்"

"நான் பார்த்துவிட்டேன் பரத் நீ வேண்டும் என்றால் பார்த்துட்டு வா"

" சேரி நீ இங்க உட்காரு நான் பொய்ட்டு வரேன் என்று அவளிடம் இருந்து கீயை வாங்கிவிட்டுச் சென்றான்"

கரென்ட் சென்றிருந்ததால் இருவரும் கண் முன் தெரியாமல் கட்டிப்பிடித்தனர் என்றாலும் வைஷ்ணவிக்கு அது அருவருப்பாக இருந்தது.

வைஷ்ணவி வாய் ஓவராகப் பேசுவாள் விளையாட்டாக பேசுவாள் தான் ஆனால் அவள் ஒரு நெருப்பு மாதிரி.பரத்திடமே அளவாகப் பழகியவள் அவன் தன்னைத் தொட இதுவரை அனுமதித்ததில்லை. தான் காதலித்தவனை கரம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததாலே இவ்வளவு போராடினாள்.

'இன்று வீட்டிற்கு போய் நன்றாக சோப்பு போட்டுக் குளிக்க வேண்டும்' என்று அவள் மனதில் நினைக்கும் போதே "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்" என்று அழைத்துக் கொண்டே அவளின் பக்கத்தில் வந்து நின்றான் அந்த அறையில் இருந்தவன் அதான் சூர்யவர்மன்.

"........."

"உங்களின் கம்மல் அறையில் இருந்தது" என்று அங்கிருந்த மேஜையின் மேல் வைத்துவிட்டு நகர்ந்தான்.

அதற்கு வைஷ்ணவியிடம் இருந்து அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை தாங்க்ஸ் சொல்லவில்லை என்றாலும் குறைந்தபட்சம் ஒரு சேரியோ இல்லை தலையாட்டலோ கூட வரவில்லை. அதைக் கண்ட சூர்யாவிற்கு கோபம் தான் தலைக்கு மேல் ஏறியது.

'இவளுக்கு என்ன மனதில் பெரிய உலக அழகின்னு நினைப்பா.. அங்கு இருந்தது வைரக் கம்மல் என்பதால் பாவமே என்று எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தேன் அன்ட் இது பார்ட் ஆஃப் த பிளானும் கிடையாது. ஆனால் இவள் ரொம்ப திமிருப்பிடிச்சவளாக இருக்கிறாளே' என்று கடுப்பாக நினைத்தவன் தன் அறைக்குள் சென்றான்.

" ஹே வைஷ் அறைகள் எல்லாம் சூப்பர்"

" ஓகே பரத் இன்னும் கொஞ்ச நேரத்தில் பிரியா ரீச் ஆயிடுவேன்னு சொன்னா.. நாம் அதுவரை இங்கே இருக்கலாம்"என்று சோஃபாவைக் காட்டி அமரச் சொன்னாள்.

தன் அறைக்கு வந்த சூர்யா கேமராமேனிடம்" எடுத்த ஃபோட்டோஸ் போதும் அதை வைத்து பிரோசீட் பண்ணு"என்று மொட்டையாக சொல்லிவிட்டான்.

சூர்யாவிற்கு ஏனோ இந்த பெண்ணை வைத்து விளையாடுவது விருப்பமின்மையைக் கொடுத்தது அதனால் கடமைக்கே என்று தான் நடித்தான். ஆனாலும் மனதில் 'இந்த ஒழுக்கம் கெட்டவளுக்கு இவ்வளவுத் திமிரா நான் என்னவோ இவளை ஆசையாய் பார்க்க வந்தது போல் சீன் போடுகிறாள் இரு டீ உனக்கு இருக்கு' என்று நினைத்தான்.
 

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,346
அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️சூர்யவர்மன் ஒரு ஒட்டுதலும் இல்லாம போட்டோக்ராபர் கிட்ட சொல்லிட்டான் ஆனால் அவன் என்ன மாதிரி photos மேக்கப் பண்ணபோறானோ 😳😳😳😳😳😳😳😳
 

கொட்டக்குடி ஆறு

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 16, 2022
Messages
42
அத்தியாயம் 6

கேமராமேனின் மனதிலோ 'இது போதும் என்று சலித்துக்கொள்கிறார் விட்டால் ஒரு லிப் லாக் ஃபோட்டோ எதிர்ப்பார்ப்பார் போல' என்று நினைத்தவன் எடுத்த ஃபோட்டோஸை பிரின்ட் எடுக்கத் தயாரானான்.

தன் அறையில் அமர்ந்து லாப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சூர்யவர்மனிற்கு தன் அம்மாவிடம் இருந்து கால் வந்தது.

"சூர்யா ஃபோட்டோஸ் எல்லாம் நல்லா வந்திருக்குன்னு கேமரா மேன் சொன்னான்"

"ஓ அப்படியா மா சேரி" என்றவனின் பேச்சில் அலட்சியம் மட்டுமே இருந்தது.

"இன்னும் மூன்று நாளில் கல்யாண வேலைகள் ஆரம்பித்து விடும். அடுத்து உன் பிளான் என்ன? "

"அந்த பொண்ணிற்கு பின்னாடி ஒரு ஸ்பை வெச்சிருக்கேன் மா.. அவள் எங்கே போறாளோ அங்கே நானும் இருப்பது போல் காட்டிக்கொள்ளப்போகிறேன் அவளின் காதலன் குடும்பத்தில் என் முகம் பதிய வேண்டும்"

" வெல் டன் சூர்யா"

" ஆனால் என்னவோ எனக்கு மனதில் உறுத்தலாகவே இருக்கு அம்மா"

" தெ டிசெர்வ் திஸ் சூர்யா.. நீ ரொம்ப யோசிக்காத அந்த விஷயம் நியாபகம் இருக்கு இல்லையா"

" இருக்கு அம்மா அது ஏற்கனவே ரெடி பண்ணிட்டேன்"

" சேரி நீ ஓய்வு எடு"

" தாத்தா என்ன பண்றாங்க"

" சாப்பிட்டு தூங்குறாங்கப்பா"

" ஓகே அம்மா.. நீங்களும் உடம்பைப் பார்த்துக்கோங்க பை"

வைஷ்ணவி சென்ற இடத்திற்கு எல்லாம் சூர்யவர்மனும் சென்றான் ஆனால் அவள் கண்ணில் படாமல் வேண்டும் என்றே பரத் மற்றும் அவனின் பெற்றோர்கள் முன்னேயே வந்துக்கொண்டிருந்தான்.

ஆனால் ஒருமுறை வைஷ்ணவி கண்ணிலுமே பட்டுவிட்டான். வைஷ்ணவி யின் மனதிலோ 'ஒரு வேளை நாம் அழகாக இருக்கிறோம் என்று நம்மை ஃபாலோ பண்ணுகிறோனோ' என்று நினைத்தவள் அவன் பக்கமே திரும்பவில்லை.

*******************************************

"சார் இந்தாங்க ஃபோட்டோஸ் எல்லாம் சூப்பராக வந்திருக்கு பார்க்குறீங்களா"

சூர்யாவிக்கு இருந்த கடுப்பில் அதைப் பார்க்கும் மனநிலை அவனுக்கு இல்லை.

"பிரிக்காதே நான் கல்யாணத்திலேயே பிரிச்சிக்கிறேன்" என்று வாங்கினான்.

தேனியில் உள்ள அந்தப் பிரபல மண்டபத்தில் ஐயர் மந்திரங்களைக் கூற பரத் மாப்பிள்ளை தோரணத்தில் அமர்ந்திருந்தான். மணப்பெண்ணை அழைத்து வரும் சமயத்தில் "இந்த கல்யாணம் நடக்கக்கூடாது" என்று கம்பீரமாக வந்து நின்றான் சூர்யவர்மன்.

அனைவருமே அதிர்ச்சியில் அவனைப் பார்த்தனர். வைஷ்ணவின் மனதிலோ 'தன்னை அடைய இப்படி திட்டம் தீட்டி கல்யாணத்தை நிறுத்த வந்திருக்கானோ' என்று பயந்தவள் பேசுவதற்குள் "யார் நீ?" என்று கேள்வி எழுப்பினார் சிங்காரவேல்.

" உங்கள் பெண் வைஷ்ணவியின் காதலன்" என்று கூறியவன் அங்கு தன் விழிகளை விரித்து அதிர்ச்சியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த வைஷ்ணவியை நக்கலாகப் பார்த்தான்.

அவ்வளவு நேரம் அதிர்ச்சியில் நின்ற பரத் சூர்யவர்மனின் வார்த்தைகளில் அவனிடம் நெருங்கி சட்டையைப் பிடித்தான்.

" டேய் யார் நீ எதற்கு இப்படி அபாண்டமாக பேசுற?"

"கையை எடு டா.. இப்போது நீ கையை எடுக்கவில்லை என்றால் உனக்கு அடி பலமாக இருக்கும் அப்புறம் ஒழுங்கா ஊர் போய் சேர மாட்ட" என்று பரத்தை தள்ளி விட்டு சிங்காரவேலிடம் திரும்பியவன் "உங்கள் பெண் வைஷ்ணவியும் நானும் அவள் சென்னைக்கு படிக்க வந்ததில் இருந்து பழக்கம் இன்ஃபக்ட் வீ போத் ஆர் லவ்வர்ஸ்.. நீங்கள் நம்பவில்லை என்றால் இந்த ஃபோட்டோஸைப் பாருங்கள் என்று கவரைப் பிரிந்தவர் முதல் ஃபோட்டோவை மட்டும் பார்த்து சிங்காரவேலிடம் நீட்டினான்.

முதல் ஃபோட்டோவில் சூர்யா மற்றும் வைஷ்ணவி பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது. அடுத்து எடுப்பதற்குள் ஒரு வேகத்தில் அதை வாங்கிய பரத் மற்ற ஃபோட்டோக்களைப் பார்த்து அதிர்ந்தான்.

மீனாட்சியோ தன் மகளின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு இருந்தாள்.

பரத்தின் கண்கள் கோபத்தில் சிவந்தது. அதை எடுத்துக்கொண்டு வைஷ்ணவியிடம் சென்றவன் "வைஷ்ணவி என்ன இது" என்று அவள் முகத்தில் விட்டு எறிந்தான்.

அதை பதறி அடித்துக் கொண்டு எடுத்தவள் கண்டது அவளும் அந்த புதியவனும் கட்டிக்கொண்டு இருக்கும் புகைப்படம் தான். அதைக் கண்ட மீனாட்சி மற்றும் சிங்காரவேலும் கூட திகைத்தனர்.

"யேய் என்ன இது! இது அன்னைக்கு அக்ஸிடென்டாக நடந்தது என்று நினைச்சேன் ஆனால் இப்போது தானே தெரியுது நீ பிளான் பண்ணி பண்ணிருக்க என்று பொறுக்கி!! பரத் இவனை நம்பாதே இவன் யார் என்று கூட எனக்குத் தெரியாது.. அம்மா அப்பா இவன் யாரென்றே எனக்குத் தெரியாது" என்று கத்தி அந்த ஃபோட்டோஸை சூர்யாவின் முன்னர் வீசினாள். அப்போது தான் அதை எதேர்ச்சையாகப் பார்த்தவன் திகைத்தான் 'ஓ மை காட் அந்த இடியட் கேமராமேன் இருட்டில் தெரியாமல் கட்டிக்கொண்டு இருந்ததை எல்லாம் படம் பிடித்து வைத்திருக்கானே' என்று தலையைக் கோதினான்.

மண்டபத்தில் இருந்த அனைவரும் குழப்பமாய் இருந்தனர். அனைவருக்கும் சிங்காரவேலின் நேர்மை பற்றித் தெரியும்.

" பொய் சொல்லாதே வைஷ்ணவி! எல்லாரும் இங்கப் பாருங்க இது வைஷ்ணவி எனக்கு பரிசாகக் கொடுத்த தங்கச் செயின் இதில் என் ஃபோட்டொவும் அவள் ஃபோட்டோவும் இருதய வடிவ டாலரில் இருக்கிறது"என்று ஃபோட்டோவில் இருந்து திசையைத் திருப்பினான்.

" அடிப்பாவி நான் உனக்கு கொடுத்த பரிசை நீ ச்சி.. நான் நினைச்சேன் அன்னிக்கே நீ என்னை கழற்றிவிட்டு வேறு ஒருவனைத் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொன்னியே உன்னை நம்பினேன் வைஷ்ணவி இப்படி ஏமாற்றிவிட்டாய்.. இந்த ஆளை நான் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பார்த்த நியாயகம் இப்போது தான் புரியுது நீ தான் உன் இரண்டாவது காதலனை வரச் சொல்லிருக்க"

"டேய் பரத் இதற்கு மேலும் நீ இங்கே இருந்தால் வெக்கக் கேவலம் வா போகலாம்"என்று தந்தை கேசவன் சொல்ல

" பரத் நம்பு இவன் யாரென்றே எனக்குத் தெரியாது ஏதோ பிளான் பண்ணி தான் இப்படி எல்லாம் பண்ணுகிறான்"

வைஷ்ணவி மற்றும் பரத்தின் நண்பர்கள் இருவரையும் சமாதானம் படுத்த நினைத்தனர் ஆனால் பரத் கேட்பதாகவெ இல்லை.

" ஏங்க! என்னங்க நீங்க நம் மகளை அனைவரும் முன் எவனோ ஒருத்தன் அவமானம் படுத்துகிறான் அவனை போட்டு அடிக்காமல் நீங்கள் அமைதியாக நிக்குறீங்க"என்று மீனாட்சி கதறினார்.

சிங்காரவேலிற்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. ஏனெனில் உற்றார் சுற்றார் கூடியிருக்கும் சபையில் ஒருவன் ஆதாரங்களுடன் பேசும் போது தான் என்ன அங்கு செய்ய முடியும்.

" தம்பி இங்கப் பாருங்க உங்களைக் கேயெடுத்து கும்பிடுறேன் பிரச்சனை பண்ணாமல் என் மகளைக் கல்யாணம் பண்ணிங்கோங்க" என்று பரத்திடம் கெஞ்சினார்.

அதற்கு பரத்திடம் எந்த அசைவும் இல்லை. அவனின் தந்தை கேசவன் மற்றும் தாய் ராணி "டேய் பரத் இன்னும் ஏன் இங்கேயே நின்னுட்டு இருக்க கிளம்பு இந்த மாதிரி ஒழுக்கம் கெட்ட பெண் உனக்கு தேவையா! "
" மனசு ரொம்ப கஷ்டமாக இருக்கும்மா இவளைப் போய் உயிருக்கு உயிராக காதலித்து இப்படி ஏமாந்து நிற்கிறேனே.."

"என்னை நம்பாத நீ எனக்கு வேண்டாம் பரத் கெட் லாஸ்ட்"என்று அலறினாள்.

" என்னப்பா சிங்காரவேல் இப்போது உன் மகளின் நிலை என்ன..காதலிச்சவன் கைய விரிச்சிட்டான் இன்னொருத்தனும் காதலிக்கிறோம்னு சொல்லி ஃபோட்டோஸ் எல்லாம் காட்டுறான் இது தான் நீ ஒம் பொண்ணை வளர்த்த லட்சணமா"என்று ஊர்மக்கள் கத்தத் தொடங்கினர். அனைவரின் முன் கூனிக் குறுகி நின்றார் சிங்காரவேல்.

" அப்பா அம்மா என்னை நம்புங்க இவன் யாரென்றே எனக்குத் தெரியாது"என்று அலறியவள் சூர்யாவை நெருங்கி" யார் டா நீ பாவி என் வாழ்க்கையை இப்படி கெடுத்துட்டியே டா"என்று அவன் சட்டையைப் பிடித்து கத்தினாள்.

இது எல்லாவற்றையும் ப்ளூடூட்டில் கேட்டுக்கொண்டிருந்த முத்துலட்சுமியின் முகத்தில் அப்படி ஒரு வன்மப் புன்னகை.

பரத் வைஷ்ணவியை முறைத்துக் கொண்டே மாலையைத் தூக்கி எறிந்தவன் தன் பெற்றோர்களுடன் வெளியே சென்றுவிட்டான்.

இன்னும் வைஷ்ணவி தன் சட்டையைப் பிடித்த மாதிரியே இருக்கிறாள் என எரிச்சல் அடைந்தவன் அவள் கையை இறுக்கிப் பிடித்து தள்ளிவிட்டு "நீ யாருக்குமே உண்மையாய் இல்லை வைஷ்ணவி..ச்ச இவ்வளவு மோசமான நீ எனக்குத் தேவையே இல்லை"என்று அந்த இடத்தை விட்டு நைசாக நகரத் தொடங்கினான் சூர்யவர்மன்.

"ஏம்பா இந்தாரு நில்லு.. நீ பாட்டுக்கு வந்து கல்யாணத்தை நிறுத்திட்டு நகர்ந்து போனால் என்ன அர்த்தம் இந்தப் பெண்ணின் வாழ்க்கைக்கு ஒரு பதில் சொல்லிட்டுத் தான் இந்த இடத்தை விட்டு நீ செல்ல முடியும்"என்று ஊர்மக்கள் அவனை முற்றுகையிட்டனர்.

"அம்மா.. என்ன இது" என்று யாருக்கும் கேட்காதவாறு தாயிடம் ப்ளூடூட்டில் கடுப்பாகக் கூறினான்.

" சூர்யா அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாத பொறுமையாக இரு அப்போது தான் நம்ம நினைச்ச படி அந்த சிங்காரவேலை பழிவாங்க முடியும்".

" என்ன தம்பி இப்படி பேசாமல் நின்றால் எப்படி.. இந்தப் பொண்ணின் நிலை இனி என்ன"

"நான் தான் இவன் யாருன்னே தெரியாது என்று சொல்கிறேனே" என்று அனைவரிடமும் பொதுப்படையாக வைஷ்ணவி கத்திய போது" அட நீ சும்மா இரும்மா யாருன்னு தெரியாமல் தான் அந்தப் பையனுடன் ஃபோட்டோ செயின் எல்லாம் கொடுத்திருக்கியா.. இந்தாருப்பா தம்பி இந்தப் பொண்ணு இப்போது ஊர்க்காரர்கள் எல்லார் முன்னாடியும் அவமானப்பட்டு நிக்குது.. மாப்பிள்ளை பொய்ட்டான் இனி இந்தப் புள்ளைய நீ தான் கட்டிக்கணும்"என்று ஒரு பெரியவர் கூற அனைவரும் இதனை ஆமோதித்தனர்.

இதைக் கேட்ட சூர்யா தன் அம்மாவிடம்" வாட் நான்சென்ஸ் மா"என்று அவருக்கு மட்டும் கேட்பது போல் எரிச்சல்பட்டான்.

அதைக் கேட்ட முத்துலட்சுமிக்கே அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அந்த அதிர்ச்சியில் குழம்பியவர் அமைதியாக இருந்தார்.

"அம்மா ப்ளிஸ்.. எனக்கு இவனுடன் கல்யாணம் வேண்டாம்மா இவன் ஒரு பொறுக்கி"என்று வைஷ்ணவி கத்த அது மேலும் சூர்யவர்மனை கடுப்பேற்றியது.

"அம்மா என்ன பேசாமல் இருக்கீங்க... நான் இங்கே எல்லா உண்மையையும் கூறப் போகிறேன்.. இவங்க என்னைத் தாலி கட்டாமல் நகர விட மாட்டிங்குறாங்க நான் உங்களிடம் முதலில் இருந்தே சொன்னேன் இந்தப் பொண்ணை வைத்து விளையாடுவது சரியில்லை என்று இப்போது இது நமக்கே பிரச்சனையை கிளப்புகிறது"

" சூர்யா அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாத.. உனக்கு இந்த அம்மாவைப் பிடிக்கும் தானே"

" அம்மா இப்போ என்ன பிரச்சனை ஒடிட்டு இருக்கு நீங்கள் என்ன சம்மந்தமே இல்லாமல் பேசூறீங்க"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லு சூர்யா"

" ஏம்பா தம்பி நீ யார் கிட்ட பேசிட்டு இருக்க.. உன்கிட்ட நாங்க ரொம்ப நேரமாக பேசிட்டு இருக்கிறோம்"என்று ஊர் பெரியவர் கூற

" அம்மா.. அம் டன் வித் திஸ்.. இந்த டிராமாவை ஸ்டாப் பண்ணியே ஆகவேண்டும்"என்று அவன் ஏதோ பேச வாயெப்பதற்குள்" சூர்யா நீ இப்போது அவளைத் திருமணம் செய்யவில்லை என்றால் உன் அம்மாவை உயிரோடு பார்க்க முடியாது இது உன் அப்பா மீது சத்தியம்"என்று கூறினார்.

"அம்மா.. வாட் நான்சென்ஸ் யூ ஆர் டாக்கிங்"

" வாட் எவர் ஆனால் நீ இப்போது அவளின் கழுத்தில் தாலியை மட்டும் கட்டு அப்புறம் நான் சொல்றதைக் கேள்"

" கண்டிப்பா முடியாது அம்மா விளையாடாதீங்க"

" நான் விளையாடவில்லை.. நீ இப்போது சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் இப்போதே செத்து விடுவேன்"

" ஏம்பா நீ யார் கிட்ட பேசிட்டே இருக்கே.. "என்று மக்கள் கேட்க

" என் அம்மா"என்றான் அழுத்தமாக.

" நான் தூக்க மாத்திரையை எடுத்துவிட்டடேன் சூர்யா நீ இப்போது சம்மதம் சொல்லவில்லை என்றால் நான் ஒவ்வொன்றாக சாப்பிடத் தொடங்குவேன்"

" அம்மா ப்ளிஸ் இப்படி எல்லாம் பண்ணாதீங்க.. ஐ வில் டூ வாட் யு செட்"

" எனக்கு இந்த கல்யாணத்திற்கு சம்மதம்"என்று கடுப்பாக ஊர் மக்களிடம் கூறினான்.

" அம்மா அப்பா ப்ளிஸ் இவன் கெட்டவன் ஏதோ பிளானுடன் தான் இப்படிப் பண்ணுகிறான்"என்று அலறினாள்.

மீனாட்சி மற்றும் சிங்காரவேல் ஒன்றும் செய்ய முடியாத பொம்மை போல் நின்றுக் கொண்டிருந்தனர்.
 
Top