• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 19

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
19​

சந்தோஷின் கரம் காரை ஓட்டியபடி இருந்தது. சிந்தனை எல்லாம் சந்தியாவிடமும் வீட்டிலும் இருந்தது. நிறுத்தாமல் ஓட்டினான். எதிரே ஒரு ஒயின் ஷாப் இருக்க காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான். பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தான். அவனது கைகளில் பலவகையான மதுபான பாட்டில்கள். முகம் திவீரமாக இருந்தது. காரை வீடு நோக்கி செலுத்தினான்.

“இன்னும் இந்த புள்ளையை காணலை...! ஃபோன் போட்டு சொன்னா என்ன? நம்ம தவிப்பு புரிஞ்சுக்காத புள்ளையா?” சாரதா கவலை- யோடு புலம்பினாள்

“வந்துடுவான் மணி என்ன?” விஜயராகவன் மனைவியிடம் கேட்க,

“ஒண்ணு முப்பது....” சராங்கனின் குரல் வர திடுக்கிட்டு திரும்பினார்கள்.

“நீங்க இன்னும் தூங்கலை?”- சாரதா
பதட்டத்துடன் அண்ணாவை பார்த்தாள்

“எப்படிமா தூங்குவேன்...? அவனை பார்க்காமல்..முன்பு தன்னந்தனியா காத்திட்டிருப்பேன் இப்ப என் பொண்ணு வேற கட்டிக் கொடுத்திருக்கேன்.... அவளுக்காகவேணும் இந்த புள்ளை சீக்கிரமா வரவேணாம்....? வரட்டும் இன்னிக்கு ஒண்ணு பார்த்துடுறேன்....” சராங்கன் கோபமாக சொல்ல, மற்றவர்கள் பயத்துடன் என்ன நடக்கப்போகிறதோ என்று அறியாமல் கலங்கியவண்ணம் இருந்தனர்.

“என்னப்பா நீ? அவன் என்ன இன்னும் சிறுபுள்ளையா? நீ கண்டிக்க அவன் பொண்டாட்டி பார்த்துப்பா..நீ வா..” தாய் சொல்ல,

“ஆமாண்ணா...அவனுக்கு என்று ஒரு குடும்பம் ஆச்சு! இனியும் நீங்க கண்டிக்குறது நல்லாயில்லை..” சக்திவேல் சேர்ந்து கொள்ள,

“என்ன ஆளாளுக்கு எனக்கு புத்தி மதி சொல்றீங்க..அஞ்சு மணிக்கு ஆபிசு விட்டு கிளம்பிட்டான். இப்ப மணி ரெண்டாப்போகுது.... என்னாச்சோ ஏதாச்சோன்னு ஒவ்வொரு நிமிசமும் பதறுது.....கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாம....சரி அப்படி ஏதாவது வேலை என்றால் ஒரு ஃபோன் கால் பண்றதுதானே....!” சராங்கன கோபம் உச்சிக்கு போக எகிறினார். சந்தியா தன்னறையில் இருந்தாலும் கீழே நடப்பது கேட்டுக்கொண்டிருந்தாள்.

“பாரு.....நாளைக்கு காலேஜ் போகிற பொண்ணு.. எக்ஸாம் வேற வருது.... படிக்குறதைவிட்டு புருஷனை இன்னும் காணலையேன்னு அவ வேறு தூங்காமல் கண் முழிச்சு காத்திட்டிருக்கா....இவளை நினைச்சாவது அவன் சீக்கிரமா வரவேணாம்....? வரட்டும் துரையை என்ன பண்றேன்னு பாரு....” இவர் கொதித்துக் கொண்டிருக்க கார் காரன் சத்தம் கேட்டது.

எல்லோர் முகத்திலும் பீதி படர்ந்தது. சாரங்கனுக்கு கோபம் வந்தால் அது அவராகவே தணித்துக்கொண்டால் தான் உண்டு. மற்றவர்களால் எதுவும் செய்ய முடியாது.

கோட்டை ஒரு கையிலும் சூட்கேசை மறுகையிலும் பிடித்தபடி சந்தோஷ் தள்ளாடியபடி வந்தான். அவனது கோலத்தையும் அவனிடமிருந்து வீசிய பிராண்டியின் நெடியையும் பார்த்ததும் அனைவரது விழிகளும் அதிர்வுக்கு போனது.

“டேய் சந்தோஷ் என்னடா இது?” விஜயராகவன் உலுக்கினார்.

“எ...எ....ன்....ன....” நாக்கு குழறியது
சந்தோஷுக்கு.

“என்ன காரியம் பண்ணிட்டு வந்திருக்கே? குடிச்சிருக்கியா?” - தந்தை
அதிர்ச்சியுடன் கேட்டார்.

“இல்லே குளிச்சிருக்கேன்....” அவன் தந்தையிடமிருந்து விலகி மாடிக்கு போனான்.

“நில்லுங்க! துரைக்கு எத்தனை நாளா இந்த பழக்கம்? எங்கே போய் சுத்திட்டு வர்றீங்க?” சாரங்கன் அதுவரை மூடியிருந்த வாயை திறந்தார்.

“அப்பா சாரங்கா.....அவன் நிலமை சரியில்லை...காலையில பேசிக்கலாம்....விட்டுடு.” ரங்கநாயகி கலவரத்துடன் சொல்ல,

“நீங்க சும்மா இருங்கம்மா! வாடா இப்படி!” அவனை இழுத்து தன் முன்னால் நிறுத்தினார். அவன் தலைகுனிந்தபடி இருக்க,

“டேய்....என்னை நிமிர்ந்து பாரடா...! எத்தனை நாளா இந்த பழக்கம்....?”
 கோபத்துடன் கேட்டார்.

“என்ன விசாரணையா? என் இஷ்டம் என்னவேணா பண்ணுவேன்....எப்ப வேணா வருவேன்....நீங்க யாரு இதெல்லாம் கேட்க..” அவன் முடிக்கவில்லை,

“டேய் யார்கிட்டே என்ன பேச்சு பேசுறே? சாரதா எட்டி அவன் கன்னத்தில் அறைந்தாள்.

அண்ணா வேண்டாண்ணா....அவன் நிதானத்துல இல்லை...காலையில பேசிக்கலாம்....” சக்திவேல் கும்பிட,

“காலையில பேசிக்கலாம், காலையில பேசிக்கலாம் என்று சொல்றீங்களே.... விடிஞ்சாலும் நிதானமாக இருப்பானான்னு கேளுங்க...! தன் நிலை மறந்து ச்சே.. எப்படிடா இந்த பழக்கம் வந்தது...? உனக்கு யாரு ஊத்திகொடுத்தா?”
 என கலங்கி போய் கேட்டார்.

“ச்சு...! உங்க பொண்ணை கட்டிகிட்டா நான் உங்களுக்கு அடிமையா என்ன? என் பர்சனல் விசயத்துல தலையிடாதீங்க! நான் குடிப்பேன் கூத்தடிப்பேன்..! என்ன வேணா பண்ணுவேன். என்னை கேள்வி கேட்க நீங்க யாரு.. ? பொண்ணைக்கட்டிக்கொடுத்து வீட்டோடு மாப்பிளையாக்கிட்டா நான் என்ன உங்களுக்கு சலாம் போடணுமா..?” அவன் பேச விஜயராகவன் பாய்ந்து வந்து பெல்ட்டை கழட்டி அவனை அடித்தார். மற்றவர்கள் தடுக்க வர,

“யாரும் கிட்டே வராதீங்க.....என்ன பேச்சு பேசுறேடா...? பேசுவியா இனி இப்படி பேசுவியா...?” கேட்டு கேட்டு அவர் விளாசித்தள்ள. சாரதா அழுதாள்.

“மாமா அடிக்காதீஙக! அடிக்காதீங்க மாமா!” தூங்கிப்போயிருந்த சிறியவர்கள் கதறலுடன் ஒடிவந்து தடுக்க, அடித்து, அடித்து பெல்ட் அறுந்ததுதான் மிச்சம் அவன் அசையவே இல்லை. எந்தவித உணர்ச்சியும் இல்லாமல்

“முடிஞ்சுதா..?” என கேட்க விஜயராகவன் தன் தலையில் அடித்தார். சந்தோஷ் மாடிப்படிகளில் நிதானமாக ஏறினான்.

“குடிக்கு கூத்துக்கும் பேர் போன நாட்டில படிச்சப்போ கூட கெடாதாவன். இப்ப எப்படி வந்தது? - ரங்க நாயகி குழப்பத்துடன் புலம்ப,

“எனக்கு பிடிக்காத விசயத்தை செய்யுறதுன்னு முடிவு பண்ணிட்டானா?” - சராங்கன். கோபமாக கத்தினார்.

தன்னறை வாசலில் சந்தியா நின்றிருந்தாள். சந்தோஷை பார்த்து விறைத்தப் போனாள். முதன் முதலாக அவனது பேச்சு நடத்தை அவளுக்குள் எதையோ உலுக்கியது.

“ஏய் தள்ளுடி....! வாசலை மறைச்சுகிட்டு நின்னா..” அவளை பார்வயால் எரிக்க, அவள் தள்ளி நின்று கொண்டு வழிவிட்டாள். அவன் அவளை பொருட்படுத்தாமல் தன்னறைக்கு வந்து தாழிட்டான்.

நிதானமாக பாத்ரூம் சென்று முகத்தில் தண்ணீர் அடித்தான். உடைகளை கழைந்து வாஷிங்மெசினில் போட்டான். நாத்தம் குமட்டிக்கொண்டு வந்தது. ஷவரை திறந்து அதன் கிழே நின்றான். குளித்து முடிந்ததும். துடைத்தபடி கண்ணாடி முன் வந்து நின்றான்.

“ஏலே..சந்தோசு...பலே கில்லாடிடா நீ?....குடிக்காமலேயே குடிகாரன் போல ஆக்ட் கொடுத்துட்டே....” அவனது மனச்சாட்சி கண்ணாடியில் வந்து நின்று பாராட்டியது.

“ஆமா....இவளுக்காக என் நடத்தையை பாழாக்க நான் என்ன முட்டாளா? இல்லை...பைத்தியமா..தேவதாசு மாதிரி ஆட..”

“உன்கிட்டே என்னடா குறை இருக்கு...?” - மனச்சாட்சி
முணுமுணுத்தது

“தெரியலையே! கொசு கடிச்சாலே பதறும் டாடி கையாலே அடிவாங்க வச்சுட்டாளே....அது கூட தாங்கிகிட்டேன்.....மாமா...மா..மா...என் தெய்வமே! உங்களை இந்த வாயாலே... ஐயோ....பாவத்துக்கு மேலே பாவம் செய்யுறேன் மாமா! மன்னிப்பீங்களா?” கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்க பார்க்க அவனுக்கு கோபம் கோபமாக வர கையால் உடைத்தான். சத்தம் கேட்டு சந்தியா கதவைதட்டினாள்.

“சந்தோஷ்...சந்தோஷ்....கதவைத்திறங்க...” அவள் கத்தியபடி தட்ட, படாரென்று திறந்தான்.

“என்ன? என்ன வேணும் உனக்கு?” அவனது சிவந்த விழிகளையும் உடைந்த கண்ணாடியையும் பார்த்தாள். கைகளில் ரத்தம் வடிவதை அவன் பொருட்படுத்தாமல் மறுகையில் இருந்த விஸ்கி பாட்டிலை திறப்பதில் தீவிரமாக இருந்தான்.

“என்ன பண்றீங்க? வெளியில குடிச்சுட்டு வந்தது போதாது...இது வேறயா? கையில காயம் வேற...டாடி... டாடி...” அவள் கத்த சாரங்கன் எட்டு வைத்து மாடிக்கு பதட்டமாக ஓடிவந்தார்.

“என்னடா இது? என்னடா பண்றே....?” கண்ணீரும் கோபமுமாக தன் வேஷ்டியை கிழித்து கட்டிப்போட்டபடி “சக்தி... சக்தி...” என குரல் கொடுத்தார்.

“என்னண்ணா...” சக்திவேல் ஓடிவந்தவர் சந்தோஷின் கையை பார்த்து அவசரமாக கீழே இறங்கி தனது மெடிக்கல் பாக்ஸை எடுத்து வந்தார். அவனுக்கு கட்டுப்போட்டபடி இருக்க சராங்கன் விஸ்கி பாட்டிலை பறித்து வெளியே எறிந்தார். சந்தோஷ் பேசாமல் தலைகாணிக்கு கிழே இருந்த அடுத்த பாட்டிலை எடுக்க அதையும் பறித்து கீழே போட்டார். அவனோ கட்டிலுக்கு கிழே இருந்த மற்றொரு பாட்டிலைத்தொட,

“என்னடா இதெல்லாம்..? எத்தனையடா வச்சிருக்கே...?” அவர் ஆவேசமாக அவனை மாறி, மாறி அறைய சந்தியா விக்கித்துப் போனாள்.

“டாடி...விடுங்க...! விடுங்க டாடி....!” அவரை தடுக்க முயன்று தோற்றாள். வாங்கிய அடி தாளாமல் அவனது கன்னம் கன்றிப்போனது. அப்ப கூட அவன் வாயைத்திறக்கவில்லை! தலைகுனிந்தபடி இருந்தான். சக்திவேல் கண் ஜாடை செய்தபடி அவனுக்கு மயக்க ஊசிபோட்டு விட அவன் மயக்கத்துக்கு போனான்.

“கடவுளே...!” ரங்கநாயகி நெஞ்சில் கையை வைத்தார்.

“என்னதான் நடக்குது இங்கே....? எத்தனை பாட்டில்... ஒவ்வொன்றாக.. எங்கேருந்து வந்தது...?.” சாரங்கன் கர்ஜித்தார்.

“சந்தியா! நீயாவது சொல்லும்மா...என்ன நடக்குது? ஏன் இப்படி ஆயிட்டான்...” தந்தை மகளிடம் கேட்க, அவள் மௌனமாக இருந்தாள்.

“ஏய் உன்னைத்தாண்டி கேட்குறார்..! பதில் சொல்லேன்” தாய் உலுக்கினாள். சந்தியாவுக்கு ஹரி சொல்லிக்கொடுத்தது எல்லாம் மனசுக்குள் நினவு வந்தது. ஆனால் அவளது உதடுகளிற்கு வார்த்தை வரவில்லை தொண்டைக்குள்ளேயே தங்கிக்கொண்டது. ஏனோ என்று தெரியாமல் திகைத்தாள்.

“என்ன நீ? அவ குழந்தை அவளைப்போய் மிரட்டிகிட்டு..விடியட்டும் அவனை ஒரு வழிபண்றேன்....போய்த்தூங்குங்க..” அவர் உறுமியபடி கட்டளையிட, அனைவரும் பேசாமல் போனார்கள். மகள் அருகில் வந்து மெல்ல தலையை கோதினார்.

“ஏம்மா...உன்னால அவனுக்கு ஏதும் டார்ச்சர் இல்லையே...நீ காலேஜ்; போறதால அவன்..அவன் சந்தோசத்துக்கு....தடையா இருக்குன்னு.. உன்....உன்கிட்டே சொன்னானா?” அந்த நிலமையில கூட தன்னைப்பற்றி கேட்காமல் அவனைப்பற்றியே கேட்கும் தந்தையை கண்கலங்க பார்த்தாள்.

“என் மேல் உள்ள அக்கறையைவிட அவன் மேல்தான் இவருக்கு எவ்வளவு அக்கறை...?” கோபம் வந்தது. பேசாமல் தலையாட்டினாள்.

“சரி...சரி...மனசைப்போட்டு குழப்பிக்காதே...தூங்கு..இவனை நான் பார்த்துக்குறேன்....” அவர் சொல்லிவிட்டு போனார். கதவை சாத்திவிட்டு திரும்பினாள்.

சந்தோஷ் மயக்கத்திலும் “மாமா என்னை மன்னச்சிடுங்க” என்று முனகிக்கொண்டிருப்பது கேட்டது. அதிர்வுடன் அவனது முகத்தை பார்த்தாள் வலியின் சாயலும், அடியாலும் அவனது முகம் கன்றிப்போயிருந்தது. மெல்ல அவனருகில் அமர்ந்தாள். அவனையே பார்த்தாள்.

“உன் சுயநலத்தக்காக ஒரு நல்லவனின் வாழ்க்கையை பாழாக்குறியே..” மனச்சாட்சி சாடியது.

“சந்தோஷ்...! எனக்கு வேறு வழி தெரியலை....! உங்களை பகடைக் காயாக்கிட்டேன்....! ஸாரி மட்டும் தான் சொல்லமுடியும்....! நீங்க என் மேலே தூசுகூட விழாமல் நான் கேட்டது தருவேன்னு சொன்னீங்க...! ஆனா உங்களை அழிச்சு தானா? அ...அது...எனக்குள் என்னமோ பண்ணுது....சந்தோஷ்....! காலையில என்ன நடக்குமோ...? எனக்கு பயம்மா இருக்கு..!” அவனது முகத்தை பார்த்து பேசியபடி எழுந்து போர்வையை மூடிவிட்டாள்.

தன்னறைக்கு வந்து அமர்ந்தாள். முதன் முறையாக அவர்களது கல்யாண போட்டோவை கையில் எடுத்து பார்த்துகொண்டேயிருந்தாள். மனதில் ஏதோ பிசைவது போல் இருந்தது. போட்டோவை தலைகாணிக்கு அடியில் மறைத்து வைத்து விட்டு படுத்தாள் விழிகள் மூட மறுத்தது.
(மூடாத விழிகள் தொடரும் )
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
😥😥😥 ரைட்டர் அழ விட்டுட்டீங்க


இவள் எல்லாம் chaik ஓடி போய் கூட தொலையேன்😡😡😡😡
 
Top