• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 20

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
20​

காலையில் தலைவலிப்பது போலிருந்தது. ‘கோபத்தில கண்ணாடியை உடைச்சுட்டியே மடையா.... கையில கட்டு. அப்படி என்னடா கோபம் உனக்கு?” தன்னைத்தானே கேட்டான்.

“கோபம் இல்லை. எனக்கு என்னையே பிடிக்கலை! அதை கண்ணாடியில்.. காட்டினேன்..” முணுமுணுத்தபடி வெளியே வந்தான். வீடு அமைதியாக இருந்தது.

“ஸாரிப்பா....இந்தக்கையாலதானே அடிச்சேன்...என்னை மன்னிச்சுடு...” தந்தை இவனை பார்த்து சொல்ல தலைகுனிந்தான்.

“ஏம்பா...வேண்டாம்..அந்த பழக்கம்.! விட்டுடுப்பா...நீயா இப்படி நடந்துக்குறே...?” சாராதா கவலையுடன் கேட்டாள்.

“டேய்...சந்தோஷ்.... எழுந்திரிச்சுட்டியா...? முதல்லே...மாமாகிட்டே மன்னிப்பு கேளுடா....” காபி டம்ளரை நீட்டியபடி ரங்கநாயகி சொல்ல அதைவாங்காமல்,

“எதுக்கு கேட்கணும்..?”
 என அலட்சியமாக கேட்டான்.

“சரிதான்....! குடிகாரன் பேச்சு..விடிஞ்சாப்போச்சு..! சரியா இருக்கு....ஐயா நைட்டு என்ன பண்ணாருன்னு நினைப்பு இல்லையாக்கும்.....பேசாம மாமாகிட்டே என்னை மன்னிச்சுடுங்கன்னு...சொல்லுடா..”
 தந்தை கோபமாக சொல்ல,

“இதபாருங்க...என்ன நடந்ததுன்னு எனக்கும் தெரியும்....நான் யார்கிட்டேயும்... மன்னிப்புக்கேட்குறதா இல்லை! நீங்க போய் உங்க வேலையை பாருங்க..” அவன் சொல்ல சாரதாவும் விஜயராகவனும் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பாட்டி அவனை கொஞ்சம் தனியா விடுமாறு சைகை செய்ய அவர்கள் போனார்கள்.

“ச.....சந்தோஷ்...” குரல் கேட்க பேப்பரை மடித்துவிட்டு நிமிர்ந்தான். எதிரே சந்தியா நின்றிருந்தாள். என்ன என்பது ஒரு கோப பார்வையை அவள் மீது வீசினான்.

“உ..உங்ககிட்டே பேசணும்...” தடுமாற்றத்துடன் கூறினாள்.

“எதைப்பத்தி பேசுறது என்றாலும் பத்தடி தள்ளி நின்னுக்கோ...! என் நிழல் உன் மீது விழாதவாறு” அவன் குத்திக்காட்ட, உதட்டைக் கடித்தாள்.

“ப்ளீஸ்....கொஞ்சம் பேசணும்....”
 கெஞ்சுவது போல சொன்னாள்.

“எங்கிட்டே என்ன பேச்சு வேண்டிக்கிடக்கு உனக்கு? உனக்குத்தான் நான் பேசினாலே புடிக்காதே! அப்புறம் என்ன பேச்சு?” அவன் எழுந்து போக, முன்னால வந்து வழிமறித்தாள். அவன் சினத்துடன் என்ன என்பது போல பார்க்க,

“நான் கேட்டது கிடைக்கணும் என்கிறதுக்காக நீங்க உங்களை அழிச்சுக்குறீங்க....கு....குடி..குடிப்பது தவறுன்னு சொல்ற நீங்களா...?” தயங்கி வந்தது வார்த்தை,

“ஏய்....! நான் குடிச்சா என்ன? அழிஞ்சா உனக்கென்ன வந்தது? உனக்கு நீ நினைச்சது நடக்கணும்...அது மட்டும் போதும் அவ்வளவுதானே..! போ! போ அது நடக்கும்...!” அவன் அடிக்குரலில் சொல்ல அவனை வெறித்தாள்.

“அடடா....! இப்பத்தானே புரியுது.....! என்னடா இவன் இப்படி குடிச்சு கிடிச்சு சட்டென்று போயிட்டான் என்றால்... எப்படி நான் கேட்டது கிடைக்கும்? என்று யோசிக்குறீயா” கிண்டலாக சிரித்தான்.

அவள் அதிர்ந்து போய் அவன் முகத்தை விழி அகற்றாமல் பார்த்தாள்.

“நான் பொட்டென்று போனால் நீ விதவை ஆயிடுவே இல்லே....” அவன் சிந்திப்பது போல பாவ்லா செய்ய, அங்கு வந்த சாரங்கன் காதில் கடைசி வார்த்தை மட்டும் விழ அவன் முன்னால் வந்து நின்றார். ஆவேசமாக அவனது கன்னத்தில் அறைந்தார்.

“என்ன மாமா! சொல்லாமல் கொள்ளாமல் அடிக்கிறீங்க....இனி இந்த அடிக்குற வேலை எல்லாம் வேண்டாம்...”

“மூடுடா வாயை...! யாரைப்பாத்து என்ன வார்த்தை சொன்னே....என் பொண்ணு விதவை ஆயிடுவாளா.... ? இதுக்குத்தான் உனக்கு அவளை கட்டிவச்சேனா...?” கோபமாக கேட்டார்.

“ச்சேச்சே.....! உங்களுக்கு அடிக்க ஒருத்தன் வேணும்! அடிமையா நடத்த ஒருத்தன் வேணும்! உங்க சொல்லுக்கு ஆமாம் போட ஒருத்தன் வேணும்! உங்க பொண்ணுக்கு வீட்டோடு மாப்பிளை வேணும்! அதுக்கு நான் கிடைச்சேன்...அதுதான் கட்டி வச்சீங்க..” அவன் சொல்லி முடிக்கவில்லை, சராங்கன் இடுப்பு பெல்ட்டை உருவினார்.

“ஏண்டா...இதுதான் நான் வளர்த்த லட்சணமா..? இப்படித்தான் வளர்த்தேனா....? இந்த பேச்சு கேட்கத்தானா?” சராமாறியாக விளாசித் தள்ளினார். சந்தியா விக்கித்து பின் வாங்கினாள்.

“என்ன ஆ.. ஊன்னா பெல்ட்டை உருவுறீங்க...? உங்க இஷ்டத்துக்கு அடிக்கவும், உதைக்கவும் என் உடம்புதான் கிடைச்சுதா...? இனி என் மேலே கைவச்சீங்க....! அப்புறம் உங்க பொண்ணு விதவை ஆகமாட்டா வாழாவெட்டியாகிடுவா...” அவன் சொல்ல சராங்கன் அதிர்ந்து பெல்ட்டை நழுவவிட்டார். கௌதம் பாய்ந்து வந்து அவனது சட்டையை கொத்தாக பிடித்தான்.

“ராஸ்கல்....! என்ன வார்த்தை பேசுறே நீ? என் தங்கச்சியை வாழா வெட்டியாக்கிடுவே நீ? நான் என்ன சும்மா பார்த்துக்கொண்டு கை கட்டிக்கொண்டு நிற்பேன்னு நினைச்சியாடா...?” கௌதம் அவனைப்போட்டு உலுக்கினான்.

“டேய் கௌதம் விடுடா...!” மகாலட்சுமி இழுத்து தள்ளினாள்.

“ஏம்பா என்ன பிரச்சனைன்னு பேசிடு! மனம் விட்டு பேசிடு....! இப்படி நடந்துக்காதே!” - சக்திவேல்
நல்ல விதமாக சண்டையை தடுக்க பார்த்தார்.

“ம்....ம்...சொல்றேன்...எனக்கு உங்க பொண்ணை புடிக்கலை...! அவ கூட வாழ இஷ்டம் இல்லை...எனக்கு புடிச்சவ கூட நான் வாழ விரும்புறேன்... நிதமும் லேட்டா வரக்காரணம் என் மனசுக்கு பிடிச்சவள் கூட இருந்துட்டு வர்றதுனால....” அவன் சொல்ல சாரங்கன் முகம் உத்திரதாண்டவத்தக்கு போக,

“டேய்....இதுக்காடா உனக்கு என் பொண்ணை கட்டிவச்சேன்...? வளர்த்த என் மார்பிலேயே முட்டுறீயே....நீ காட்டுற நன்றிக்கடன் இதுதானா....?”

“......”

“உன் புத்தியை காட்டிட்டீயே..தெருவில கிடந்த நாயை வீட்டுக்குள்ளே கூட்டிவந்து குளிப்பாட்டினேனே...” அவர் கோபத்தின் உச்சியில் இருந்தார் வார்த்தைகள் அவரையும் அறியாமல் வந்து விழத்தொடங்கியது.

அண்ணா.....” சாரதா பயத்துடன் அவரை உலுக்கினாள்.

“கோபத்தில உளர்றீங்கண்ணா.....வேண்டாம்.......!”
 அழுகையுடன் கூறினாள்.

“விடு என்னை! குப்பைத்தொட்டியில கிடந்தவனை அப்படியே விட்டுருக்கணும்....கூட்டிவந்து ராஜா மாதிரி வளர்த்தேன்...பலன் கிடைச்சுடுத்து...” அவர் சொல்ல, சந்தோஷ் அதிர்வுடன் அவரிடம் வந்தான்.

“எ.......எ.....என்ன மாமா சொல்றீங்க...?”
 கண்கள் கலங்க வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின,

“..............”

“குப்பைத்தொட்டியில கிடந்தவனா?”
 குரல் கரகரத்தது.

“..............”

“யாரு....? நானா....? சொல்லுங்க.....மாமா..! நானா....நானா குப்பைத்தொட்டியில கிடந்தவன்...?” அவரை உலுக்கினான்.

“ஆமாண்டா! நீதாண்டா! பச்ச பாலகனா உன்னை தூக்கிட்டு வந்தாரு.. இதோ சாரதாதான் தன் புள்ளை போல உன்னை வளர்த்தா.. இதுவரைக்கும் உனக்கு இந்த உண்மை தெரிஞ்சிருக்குமா...? இல்லை நாங்கதான் பிரிச்சு பாத்திருக்கோமா..?” மகாலட்சுமி அழுதபடி சொல்ல, சந்தோஷ் உடல் ஒருமுறை ஆட்டம் கண்டது.

“அ......அ.....அப்ப நான்.. நான் இந்த வீட்லே பிறக்கலையா...? உங்க ரத்தம் இல்லையா...?”
 அதிர்ச்சியுடன் அவர்களை பார்த்தான்.

“இருந்திருந்தா இப்படி பேசுவியா? நடந்துப்பீயா...?” - ஆதங்கத்துடன் ரங்க நாயகி சொன்னார். அவன் நம்பமாட்டாதவனாக தந்தையிடம் திரும்பினான்.

“நான் நம்ப மாட்டேன் …அ...அப்பா.....நீங்க சொல்லுங்கப்பா....! நீங்க சொல்லுங்க....! நான்....நான் உங்களுக்கு பொறக்கலையா...?” அவரது முகத்தை கையில் ஏந்தி கேட்டான் தந்தை தலைகுனிய. தாயிடம் வந்தான்.

“அம்மா....! நான் உங்க வயிற்றில இருக்கவில்லையா...?” அவன் கேட்க சாரதா சேலைத்தலைப்பை வாயினுள் வைத்து அழுதபடி ஓடினாள். சந்தோஷுக்கு நிஜம் புரிந்தது.
(தொடரும்)
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
ஒரு குடும்பத்தை உடைச்சுட்டா... ஒருத்தன் மனசை சுக்கல் நூறா நொறுக்கிட்டா 😡😡😡😡
 
Top