• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 21

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
21​

“ஓ....! நான் பொறந்தது குப்பைத்தொட்டியில..அட்ரா சக்கை...! அப்படின்னா என் பேரு அனாதை..! ஓ...!” அவன் வயிற்றைப்பிடித்துக்கொண்டு கண்களில் நீர்முட்டும் வரைக்கும் சிரி சிரி என்று சிரித்தான். மற்றவர்கள் பயந்து போய் பார்க்க,

“சந்தோஷ்....! என்னப்பா....நான்....நான் ஏதோ....உளறிட்டேன்....” சாரங்கன் அவனைத்தொட முயல அவரது கையை தட்டிவிட்டான்.

“நோ...! என்பேரு அனாதை..! அட்ரசு இல்லாதவன்..! இதைத்தான் நீ அன்று சொன்னாயா?” சிலையாகி நின்ற சந்தியாவை பார்த்துக் கேட்டது அவனது பார்வை.

“சோ..உங்க குடும்பத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை...?”
 சாரங்கனை பார்த்து கேட்டான்.

“அப்படிச்சொல்லாதேடா...! நான் ஏதோ கோபத்தில....” அவர் பதட்டத்துடன் அவனை கட்டிக்கொள்ள முயல,

“தொடாதீங்க....! எனக்கு தெரியாமல் போச்சே! நான் என்னமோ இந்தக்குடும்பத்துல பொறந்தவானாட்டம் இறுமாப்பு கொண்டிருந்தேன்..! ரொம்ப வசதியாப்போச்சு! என் வேலையை சுலபமாக்கிட்டீங்க..!” அவன் சொல்ல புரியாமல் பார்த்தனர்.

“என்னப்பா சொல்றே?” - சாரங்கன்
அதிர்ந்து போய் கேட்டார்.

“உங்களுக்கும் எனக்கும் என்ன உறவு இருக்கு? சோ...என்னை என் இஷ்டத்துக்கு விட்டுடுங்க... என்னை எதுவும் கேட்குற லைசன்சு யாருக்கும் இல்லை...”

“சந்தோஷ் போதும்! விளையாடாதே! அவன் ஏதோ சொல்லிட்டான்னா நீ இந்தக்குடும்பத்து புள்ளை இல்லைன்னு ஆயிடுமா....?” ரங்கநாயகி நிலைமையை சகஜமாக்க முயன்றார்.

“நான் விளையாடலை....! நீங்கதான் என் வாழ்க்கையில விளையாடுறீங்க...” அவனது பார்வை சந்தியாவை பார்த்து மீண்டது.

“நீங்க யாரோ! நான் யாரோ....!” அவன் சொல்லிவிட்டு வெளியேற
“எங்கேப்பா போறே...?” சராங்கன் ஓடிவந்து கேட்டார்.

“எங்கேயோ போறேன்...எந்த குப்பைத்தொட்டியிலே எடுத்தீங்களோ அது எப்படி இருக்குன்னு பார்க்க போறேன்.....என்னை பெத்தவங்க யாருன்னு கேட்கப்போறேன்...”

“சந்தோஷ்...! வேண்டாம்..என் தப்பு! இந்த வாயால...கோபத்தில ஏதோ பேசிட்டேன்...வாப்பா” அவனை கட்டிபிடித்து உள்ளுக்குள் இழுத்து வந்து அமர்த்தினார்.

“இ....இதப்பாரு...என்னை மன்னிச்சுடு....நீ எங்கேயும் போகவேண்டாம்...உனக்கு என்ன வேணும்னு என்கிட்டே கேளு...! மாமா நான் செஞ்சு தர்றேன்....” எதுக்கும் கலங்காத மாமா தன்னை கை எடுத்து கும்பிட சந்தோஷ் உள்ளுக்குள் நொறுங்கிப்போனான். சடாரென்று எழுந்து நின்றான்.

மனதுக்குள் பல்வேறு உணர்ச்சிப் போராட்டங்கள் நடந்தன “அடிமேல் அடிவிழுந்தாலும் அசராமாட்டேன். முதல் அடி சந்தியாவினது. இப்ப என் பிறப்பு ரகசியம்... ம்ஹூம்....அப்பவே செத்துட்டேன்..! இந்த குடும்பத்தை கஷ்டப்படத்துற உரிமை எனக்கு இல்லை! இதை மனசில வச்சுட்டுத்தான் சந்தியா என்னை புடிக்கலைன்னு சொன்னாளா? எப்படி புடிக்கும்? முகம் தெரியாத இருவரின் அஞ்சு நிமிட சுகத்துல பொறந்தவனை...! பெத்தவள் தன் பாரம் நீங்கியதும் குப்பைத்தொட்டியில் போட்டதுக்கு பதிலாக கழுத்தை நெரிச்சு கொன்று இருக்கலாமே...! இவ்வளவு தூரம் வளர்ந்து உண்மை தெரிய...” என்று மனதிற்குள்ளே கலங்கியவன் எதையும் வாய் விட்டு சொல்ல முடியாமல் தடுமாறினான்.

“சந்தியா இதை நீ அப்பவே என்கிட்டே சொல்லியிருக்கலாம்...உன்னை வார்த்தையால குதறி இருக்கமாட்டேன்...ராணி மாதிரி வாழவேண்டிய உன் வாழ்க்கையை இந்த சாக்கடையோடு சேர்க்க பார்த்தேனே...நீ கேட்டது நியாயந் தான்...என்னாலும் உன் கூட வாழ முடியாது! டைவோர்ஸுக்கு முழு சம்மதம்...! தர்றேன்மா....! தர்றேன்...!” தனக்குள்ளே முடிவுக்கு வந்தவனாக மாமனாரை பார்த்தான். அவர் வழியும் நீரைத் துடைக்கத்தோன்றாது இவனது முகத்தை பார்த்துக்கொண்டு நின்றார். சந்தியாவை பார்த்தான். அவளும் இவனையே பார்த்துக் கொண்டு நிற்க, அவளது பார்வை இவனுக்கு ‘இதனாலதான் உன்னை புடிக்கலைன்னு சொன்னேன்’ என்பது போலிருந்தது.

“ம்...ம்....ஓகே.இப்ப எதுக்கு போனவனை இழுத்துவந்துருக்கீங்க....” மாமனாரை பார்த்து கேட்டான்.

“எங்கேப்பா போவே? எங்களை விட்டுட்டு உன்னால இருக்க முடியுமா...? இல்லை நாங்கள் தான்..” பாட்டி விம்ம,

“நான் எங்கேயோ போறேன்....” என்றான் விரக்தியாக.

“போதும்பா....! நடந்ததை மறந்துடு...என்னமோ பேசிட்டேன்...வா சாப்பிடலாம்...” சாரங்கன்
அவனை சாந்தப்படுத்த முனைந்தார்.

“நான் வரலை! என்னால இனி இங்கு இருக்க முடியாது” அவன் எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல அதிர்வுடன் நோக்கினார்கள்.

“என்னப்பா.....உனக்கு இங்கு என்ன குறை? நாங்க இருக்கோம்....உன் சொந்தங்கள்...இதோடு உன் பந்தம் இருக்கே....” மகாலட்சுமி அவனையும் தன் மகளையும் பார்த்தாள்.

“ ம்ஹூம்....பந்தமாவது பாசமாவது....சுத்த நான்சென்ஸ்....”

“சந்தோஷ் ஏம்பா இப்படி பேசுறே...? நீ எப்பவும் என் புள்ளை தான்...எங்க குடும்பத்துக்கு ஒளி தந்த சூரியன்பா....” விஜயராகவன் அவனது தலையைக் கோதினார்.

“ம்ஹூம்.....ஸாரி..என்னால முடியாது...என்னைப்பொறுத்தவரை எல்லாம் அறுந்துவிட்டது....” உணர்ச்சியற்ற குரலில் சொல்லியவாறு அனைவரையும் பார்த்தான்.

“டேய் சாரங்கா அவனுக்கு மன அமைதி தேவை.....தனியே விட்டுட்டு நீங்க போய் உங்க வேலையை பாருங்க...அப்புறம் பேசிக்கலாம்...” பாட்டி சொல்ல அனைவரும் விலகி சென்றனர்

“ஒரு நிமிஷம்...இதையும் கேட்டுட்டு போங்க...” சந்தோஷின் குரல் தடுத்தது.

“எனக்கு உங்க பொண்ணு கூட வாழப்புடிக்கலை....எனக்கு டைவோர்ஸ் வேணும்....” அவன் சொல்ல ஒரு நிமிடம் மூச்சு விட மறந்தார்கள்.

“என்ன காதில் விழுந்திச்சா....?” அவன் கைதட்டி அழைக்க, சாரங்கன் சிலையானார்.

“நீ என்னடா.. டைவோர்ஸ் கேட்குறது? என் தங்கச்சி ஒவ்வொரு தடவையும் அழுதழுது சிவந்து போன விழிகளோடு தான் காலேஜ் போனா. அப்ப எனக்கு புரியலை....! இப்ப புரியுதடா.....நீ யாரையோ மனசுல வச்சுட்டுத்தான....சொத்துக்காக என் தங்கச்சியை கட்டிகிட்டேன்னு....! நீ என்ன டைவோர்ஸ் பண்றது? அவ உன்னை டைவோர்ஸ் பண்றாடா.. இப்படிபட்டவன் கூட வாழுறதை விட அவ என் தங்கச்சியாகவே இருந்துட்டு போகட்டும்..” கௌதம் வெறிவந்தவன் போலே சந்தோஷை பார்த்து உறுமினான்.

“டேய் கௌதம்...பேசாமல் இருடா...” தாய் அதட்ட,

“நீங்க சும்மா இருங்கம்மா..எவ்வளவு தூரம் அப்பா கெஞ்சிகிட்டு நிற்குறாரு...மரியாதை கொடுத்தானா? பொறுக்கி....தன் பொறப்பை நினைச்சானா? த்தூ..” காறித்துப்பினான். சந்தோஷுக்கு முஸ்டிகள் இறுகியது. கண்களை மூடியபடி இருந்தான்.

“இவன் ஆடுறதுக்கு பணம் வேணும்...அதுதான் பக்காவா பிளான் போட்டு என் தங்கச்சி வாழ்க்கையை பாழாக்கிட்டான்...இவனை நம்பி அப்பா மோசம் போயிட்டாரு....ச்சே நீயெல்லாம் ஒரு மனிசனா? ரோட்லேயே உன்னை விட்டிருக்கணும்...எடுத்து ஆளாக்கியதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்..”
 கௌதம் கோபத்தில் வார்த்தைகளை உதிர்க்க,

“இவ்வளவு குதிக்குறே...என்னைப்பத்தி தெரிஞ்சு வச்சிருக்கே...அப்புறம் என்ன? டைவோர்ஸ்க்கு ஏற்பாடு பண்ண வேண்டியதுதானே லாயர் சார் ”
 சந்தோஷின் சொற்கள் அவனை மேலும் தூண்டிவிட,

“ஏய் நீ ஆர்டர் போடாதே....ஏற்பாடு பண்றேன்.... நானே இந்த டைவோர்ஸுக்கு ஏற்பாடு பண்றேன்டா... இந்த வழக்கை நானே எடுத்து நடத்துறேன் ‘’ 
என ஒரு முடிவுடன் கூறினான்.

“ஆமா ஒரு சின்ன சந்தேகம்...டைவோர்ஸ் ஆனதுக்கப்புறம் உன் தங்கச்சி வாழ்க்கை என்னாகும்னு யோசிச்சியா?”
 நக்கலாக கேட்டான் சந்தோஷ்.

“அதைப்பத்தி நீ கவலைப்படாதே..நீ செய்த இந்த துரோகத்துக்கு உன் மானம், மரியாதையை நான் கோட்டுல ஏத்தி வாங்கு வாங்குன்னு வாங்கலை என் பேரு கௌதம் இல்லை...” அவன் உறுமிவிட்டு போக சந்தோஷ் சிரித்துக்கொண்டான்.

“நீ நினைச்சது நடந்துடுத்து போதுமா?’’ என்கிறமாதிரி பார்வையை சந்தியாவை நோக்கி வீசினான். அவள் தலைகுனிந்து கொண்டாள். அவளையறியாமல் கண்களிலிருந்து நீv விழுந்து சிதறியது.

“அப்பா சந்தோஷ்....உனக்கு என்ன வேணும் எதுவேணும் என்று பார்த்து பார்த்து செய்தேன்;..ஆனா உன் மனசுல என்ன உள்ளது என்று தெரியாமல் விட்டுட்டேன்பா...தப்பு பண்ணிட்டேன். தப்பு பண்ணிட்டேன்பா....அவன் பேசியதை நீ பெரிசா எடுத்துக்காதே! உன் கையில தான் இருக்கு என் பொண்ணோட வாழ்வு.... அவ வாழ்க்கையை இன்னும் தொடங்கலை...அவளைப்போய் தண்டிச்சிடாதே!....” மாமனார் கும்பிட்டபடி அவனது காலில் சடாரென்று விழ,

சந்தோஷ்
“அய்யோ....மாமா...! என்ன காரியம் பண்றீங்க.... ?.என்னை பாவத்துக்கு மேலே பாவம் பண்ண வைக்காதீங்க...” என மனதிற்குள் கதறியவாறு முகத்தில் அறைந்து கொண்டு குமுறினான்.

“ஏன் மாமா? ஏன் குப்பைத்தொட்டியிலேயே விட்டிருக்ககூடாதா? எதுக்கு என்னை எடுத்து வளர்த்தீங்க? நான் செத்துகிட்டிருக்கேன்...! விட்டுடுங்க...! என்னை விட்டுங்க...! என்னால இதுக்கு மேல முடியாது! என் நெஞ்சு வெடிச்சுடும்’’ என் வாய் விட்டு கதறிவிட்டு அவன் அவரை திரும்பி பாராமல் விடுவிடுவென வெளியேறிப்போனான்.

சாராதா ஒரு பக்கம் மயங்கி விழ, சாரங்கன் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்தார். மற்றவர்கள் அவர்களை நோக்கி ஓடினார்கள்.
(நாமும் ஓடுவோம்)
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
இப்போ அழு மூஞ்சியும் முகரை பாரு... போ ஒருத்தன் சந்தோஷத்தை குழி தோண்டி பரிச்சுட்டு அது மேல் உன் வாழ்வை அமைச்சுக்கோ.... தைரியம் இல்லா உனக்கு , நேர்மை இல்லா உனக்கு எல்லாம் என்ன காதல் வேண்டி கிடக்கு... உன் காதலன் சொன்னா என்ன வேணாலும் பண்ணுவியா என்ன😡😡😡😡 இதுக்கு நீ🤐🤐🤐🤐🤐
 
Top