• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 27

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
27​

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு ஷீல்சை கழட்டியபடி ஹாலில் நோட்டம் விட்டாள். அது வெறிச் என இருந்தது.

‘எங்கே போயிட்டார்? டீவியை கூட ஆவ் பண்ணாம...?’’ சுற்று முற்றும் தேடினாள். கிச்சனில் சந்தோஷ் பாடியபடி காபி கலந்து கொண்டிருக்க மெல்ல எட்டி பார்த்தாள்.

‘டேய் சந்தோஷ்! கடைசியில ஒரு சிங்கிள் டீ கூட போட்டுத்தர ஆள் இல்லாதவன் ஆயிட்டீயே...!’’
தனக்குத்தானே பேசியவாறு ஸ்பூனால் ஷுகரை கலந்தான்.

‘எப்படியெல்லாம் வாழ்ந்திருப்பே? வெளிநாட்டு காரு! கழுத்தில டை...சும்மா கோட்டும் சூட்டுமாக.. என்ன பந்தா காட்டிட்டு கடைசியில இப்படி...! ம்....என்ன படிச்ச படிப்புக்கு யாராவது அங்க கம்பெனி எம். டி பதவியை விட்டு கொடுத்தாத்தான் உண்டு..’’

‘அட போடா! எம்.டி பதவி. இது கூட மாமா போட்ட பிச்சை..’’ பேசியபடி மேலே ஷெல்ப்பில் இருந்த கப்பை மேடை மேல் எடுத்து வைத்தான்.

‘ஆமா இல்லே...! ம்.. இருக்கவே இருக்கு டீ கிளாசு கழுவுற வேலை...! ஓட்டல்லே சர்வரா போனா எப்படி டீ ஆத்துறதுன்னு இப்பவே பழகிக்கோ..’’ என்று சொல்லியபடி காப்பியை கவனமாக கப்பில் ஊற்றினான்.

‘ம்..லண்டன்லே படிச்சதாலே குண்டா கழுவத்தெரியதா....?” தலையை ஆட்டியபடி சொல்லிக்கொண்டு மீதி காபியை பிளாஸ்கில் ஊற்றினான். சந்தியா சத்தமில்லாமல் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

‘ம்....சந்தியா காப்பி குடிக்க வந்தா கப்சிப் ஆயிடு.....! குடிச்சுட்டு நல்லா இருக்கே! சரசு நீயா போட்டேன்னு? கேட்டான்னு வை! அப்ப முந்திரிகொட்டை மாதிரி நாந்தான் போட்டேன்னு சொல்லு’’
காபியை மோந்து பார்த்து கண்ணை மூடிக்கொண்டு ‘ம்..’ என்று ரசித்துக்கொண்டான்.

‘அப்ப நல்லா இல்லைன்னா...’’
தன்னைத்தானே கேட்டான்.

‘சும்மா இருடா வெண்ணெய்...! உன்மேலே இருக்குற வெறுப்பு போதாது? இது வேறயா....? யார்டா இவன் ?’’ தலையில் தட்டிக்கொண்டு அவன் தன்னை திட்டியபடி காபியை பருகினான்.

‘அடடா..பேஷ் பேஷ்...ரொம்ப நன்னாயிருக்கு..’’
கண்களை உருட்டியபடி தலையாட்டிக்கொண்டான்.

‘ம்க்கும்.. நாந்தான் மெச்சிக்கணும்;...’’ சொல்லியபடி திரும்பினான் வாசலில் சந்தியா சிரிப்புடன் நின்றிருந்தாள்.

‘பாத்துட்டாளா....நாம டீ போட்ட லட்சணத்தை....!’’ அசடு வழிவதை மறைத்தபடி முகத்தை உர்ரென்று வைத்து முணுமுணுக்க,

‘‘ரொம்பவும் கஷ்டப்படாதீங்க! வழியுது துடைச்சுக்கோங்க....!
‘‘ஏன் சரஸ்வதி எங்கே போயிட்டா?’’
கேட்டபடி கிச்சனுக்குள் நுழைந்தாள்.

‘‘அவ பிரம்மனுக்கு பீடி வாங்க போயிட்டா’’

‘பிரம்மன் ? ஓ!. புருசனுக்கு பீடி வாங்க போட்டாளா...? காபி வேணும்னா நான் வரும் வரைக்கும் பொறுத்திருக்க வேணடியதுதானே! நானே வந்து கலந்து தந்திருப்பேன்..’’ அவள் சொல்ல அவன் மேலும் கீழும் பார்த்தான்.

‘‘என்ன அப்படி பார்க்குறீங்க?’’

‘‘இல்லை வர வர எனக்கு டவுட்டா இருக்கு. நீ சந்தியாதானே?’’
சந்தேகத்தோடு வினாவ,

‘‘தொடங்கிடடீங்களா..?’’ அவனை முறைத்துவிட்டு அவன் போட்ட காபியை பிளாஸ்கிலிருந்து ஊற்றினாள்.

‘‘ஏய் நீ குடிக்காதே....! நான் எனக்கு மட்டும் தான் போட்டேன்...நீ வேணும்னா போட்டுக் குடி...!’’ என்றவாறு பிளாஸ்கை பறித்தான்.

‘‘குடுங்க..’’

‘‘ம்ஹூம்...நீ கலந்து குடி!’’

‘‘இல்லை இதுதான் வேணும்..! நான் ஒண்ணும் கிண்டல் பண்ண மாட்டேன்...’’ அவள் சிரித்தபடி வாங்கி பருகினாள். சந்தோஷ் அவளது முகத்தை பாத்துக்கொண்டிருந்தான். என்ன பதில் வரப்போகுதோ என்ற எதிர்பார்ப்பு அவன் கண்களில் தெரிந்தது.

‘‘ம்...’’ என்றபடி அவனை பார்த்தாள்.

‘‘என்ன நல்லா இல்லையா? நினைச்சேன்....! இதுக்குத்தான் நீயே போட்டுக்குடி..!’’ அவன கப்பை பறிக்க முயல,

‘‘நல்லா இல்லைன்னு யார் சொன்னா?’’ விழிகளில் கேள்வியுடன் அவனை கூர்ந்து பார்த்தபடி,

‘‘என்னதூ? அப்ப நல்லா இருக்கா..?’’ அவன் ஆசையாக கேட்க அவனது முகத்தை பார்த்தாள்.

‘‘ம்...ம்..சூப்ரா இருக்கு...! வாழ்நாள்லே இப்படி ஒரு காபி குடிச்சது இல்லே..’’ புன்முறுவலுடன் கூறினாள்.

‘‘ஏய் இந்த கிண்டல்தானே வேணாங்கிறது. நிஜத்தை சொல்லும்மா...’’

‘‘நிஜமாகவே நல்லாயிருக்குப்பா....! இனி சரசு வரலைன்னாலும் காபிக்கு கவலைப் படத்தேவையில்லை..’’

‘‘ஏது..? ஏது? மேடத்துக்கு நான் போட்டுத்தரணுமாக்கும்..? ஆஹா நல்லா கனாக்காண்றீங்க.....’’

‘‘ஏன் போட்டுத்தர என்னவாம் ஐயாவுக்கு..?’’

‘‘தர்றேன்... தர்றேன்..நிறைய உப்பு போட்டு..’’

‘‘உப்பு போட்டா...எதுக்கு?’’

‘‘ம்..அப்பதானே கொழுப்பு குறையும்.’’

‘‘கொழுப்பா...? எனக்கா..? உதைப்பேன்...’’

‘‘அய்யோ அதுகூட செய்வீயா நீ...?’’ அவன் பயந்தது போல ஓடிப்போய் சோபாவில் ஒருக்களித்து அமர்ந்தான்.

‘‘ச்சீ...’’ அவள் சிரிப்புடன் எதிரே அமர்ந்தாள்.

‘‘ஆமா நிஜத்தை சொல்லு! எப்படி எக்சாம் எழுதினே..? பாசாயிடுவே தானே..?’’ அவனுடைய பார்வை அவளுடைய முகத்தில் நிலைத்திருந்தது.

‘‘ஏன் பாசாகலைன்னா என்னவாம்?’’

‘‘அப்ப ஸ்சுவர்தான்...’’

‘‘என்ன? என்ன ஸ்சுவர்?’

‘‘நீ பாசாகிறது...! பாவம் மாமா ! ஐ.ஏ.எஸ் மகளை கனவு கண்டுட்டு இருக்கார் நீ வந்து என்னால ஐ கூட ஆகமுடியாதுன்னு சொல்றே...’’ கிண்டலாக இழுத்தான்.

‘‘ஏய் கிண்டல் பண்ணாதீங்க! நான் பாசாயிடுவேன்!’’
சிரித்தபடி சொன்னாள்.

‘‘பரவாயில்லையே...! ம்.. எப்படி ஜுரத்தில் எக்ஸாம் எழுதினே. கேட்ட கேள்விக்கு மூணு வேளையும் சாப்பாட்டுக்கு முன் சாப்பாட்டுக்கு பின் என்று பதில் எழுதினாயா....?’’
என்று சந்தோஷ் புன்முறுவலுடன் கேட்க,

‘‘யூ...!’’ சோபாவில் இருந்த தலகாணியை எடுத்து எறிந்தாள்.

‘ஓகே! ஓகே! நீ பாசாயிடுவே...! ஒத்துக்குறேன்..! என்ன ஐ.ஏ.எஸ் ஆனா கொண்டை போடணும்....அப்புறம் புடவை கட்டணும்.....’’
அவன் ராகத்தோடு இழுக்க,

‘ஆமா கட்டிட்டாப்போச்சு’’
என்றாள் மிடுக்குடன்.

‘‘உனக்கு புடவை கட்டத்தெரியுமா....? இப்படி ஹேர் ஸ்டைல் போட்டுகிட்டு..ச்சே பாட்டி மாதிரி இருப்பே...அப்புறம் ஒரு சோடாபுட்டி கண்ணாடி மூக்கு மேலே வந்து உட்கார்ந்துக்கும்....’’அவன் யோசித்து, யோசித்து சொல்ல, அவள் சிரிப்புடன் அவனை பாத்துக்கொண்டிருந்தாள்.

‘‘ம்....அப்புறம்’’ நாடியில் கை ஊன்றியபடி அவள் கேட்க,

‘‘ம்...அப்புறம் சும்மா இரண்டடி உயரத்துல ஹீல்சும் போட்டுகிட்டு அப்படி டக்கு டக்குன்னு நடந்து வருவே....’’
குறும்புடன் கூறினான்.

‘‘இரண்டடி உயரமா ஹீல்ஸா? நான் என்ன குள்ளமா?’’

‘‘ச்சே.....அது போட்டாத்தான் நீ உனக்கு கீழே உள்ளவங்களை மேய்க்க முடியும்’’
கண்களில் சிரிப்புடன் கிண்டலடிக்க,

‘‘அடி...! நான் என்ன மாட்டுமந்தையிலா வேலை செய்யப்போறேன்...?’’
இடுப்பில் கை வைத்தபடி போலி கோபத்துடன் பார்த்தாள்.

‘‘கரக்ட்....! அப்புறம் பாடிக்கொண்டுருக்கத்தான் சரி’’
சந்தோஷ் முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு சொல்ல,

‘‘என்னெண்ணு?’’ பொங்கிய சிரிப்பை அடக்கியபடி கேட்டாள்.

‘‘நான் மேய்த்த மாட்டை நீ மேய்க்கவில்லை! நீ படிச்ச படிப்பை நான் படிக்கவில்லை...!’’
மேலும் ராகத்தோடு இழுக்க,

‘‘யூ! கிண்டலுக்கு அளவு இல்லை...!’’ எழுந்து பக்கதில் இருந்த அடுத்த தலகாணியை எடுத்து அவனை அடித்தாள்.

‘ஏய் விட்டுடு..! அய்யோ விட்டுடுடீ..! எந்த நாட்டுல நடக்குது?. யாரும் இல்லாத சமயத்துல புருஷனை போட்டு இந்த அடி அடிக்குறே.. ?’’ அவன் காஷூவலாக சொல்ல அவள் சட்டென்று நின்றாள்.

‘‘ஏய் என்னாச்சு?’’ அவளது இறுகிய முகத்தை பார்த்து அதன் பின்தான் தான் சொன்னது உறைத்தது.

‘‘ச....சந்தியா நா..நான்....ஏதோ...பழைய நினைவில சா…ரி....சாரி...நீ...நீ கேட்டது கிடைக்கும்...!’’ அவன் கடைசி வாக்கியத்தை அழுத்தமாக சொல்ல அவன் மேல் தலகாணியை எறிந்துவிட்டு வேகமாக படிகளில் ஏறி தன்னறைக்கு வந்து தாளிட்டாள்.

‘சந்தியா...சந்தியா....கதவைத்திற நான் தெரியாமல் சொல்லிட்டேன்.... ப்ளீஸ் கதவைத்திற....’’ அவன் ஏதோ விபரீதமோ எனப்பயந்து போனான். அவள் பதில் சொல்லாமல் போக கதவை எட்டி உதைத்தான். அவள் கட்டிலில் படுத்திருந்தபடி அழுது கொண்டிருந்தாள்.

‘‘ஸாரி கேட்டுட்டேன் இல்லே! தெரியாம சொல்லிட்டேன்....! என்னை சொல்லணும் நான் பேசினாலே உனக்கு புடிக்காதுன்னு தெரிஞ்சும் பேசிகிட்டு நின்னேன் பாரு....’’அவன் தன் கன்னத்தை அறைந்தபடி தன்னறைக்கு வந்து கதவை சாத்தினான்.

சந்தியாவோ
‘‘சந்தோஷ் பார்த்தாலே பேசினாலே எரியுற நான்..எப்படி இவ்வளவு தூரம் சகஜமாக பேசிகிட்டுருந்தேன்...? நான் கேட்டதை அவர் தந்துவிட்டதாலா? இல்லை என் ரூட் கிளியர் என்பதாலா? எனக்கு என்ன வந்தது? ஒவ்வொரு வார்த்தையும் அவர் பேச எனக்குள் என்ன நிகழுது..? ஹரியை பார்க்க போன நான் எதுக்கு வீட்டுக்கு சீக்கிரமாக வரத்துடிச்சேன்....? எப்படி மாறிப்போனேன்....? எதனால எனக்கு சந்தோஷை புடிக்கலைன்னு சொன்னேன்..? ஏன் அவர் முகத்தையே பார்க்கணும்னு தோணுது?’’ அவனது போட்டோவை கையில் வைத்துக்கொண்டு அவள் தன்னை தானே ஆயிரம் கேள்வி கேட்டாள். அத்தனைக்கும் பதில் தெரியவில்லை. ஏதோ மூடுபனி ஒன்று மறைப்பதாக தோன்றியது. தலைவலியோடு தூங்கிப்போனாள்.
(மூடுபனி தொடரும்)
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
Rightu
 
Top