• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 30

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
30​

கோவில்களுக்கு போனவர்கள் திரும்பியிருந்தனர். புண்ணியதலங்களை தரிசித்துவிட்டு வந்ததாலென்னவோ எல்லோரது முகத்திலும் ஒரு தெளிவும் நம்பிக்கையும் தெரிந்தது. சந்தோஷ் அவர்கள் வருகிறார்கள் என்றதும் முன்னமே வெளியில் கிளம்பிவிட்டிருந்தான். நைட் நேரம் கழித்து வந்தான்.

“வர்றான்பா..என்னபேசப்போறானோ....? யப்பா சாரங்கா...அவன்கிட்டே பக்குவாமா பேசப்பா..இல்லைன்னா பேசாம இரு! உன் கோபத்தையெல்லாம் காட்டாதே!” ரங்கநாயகி சொல்லிக் கொண்டிருக்க சந்தோஷ் உள்ளே நுழைந்தான். பாட்டி பிரசாதத்தை நீட்டினாள்.

“என்ன இது?”

“பிரசாதம்பா...உன் பேருக்கு அர்ச்சதைனை செய்து எடுத்துகிட்டு வந்தேன்..”
 என்றார் அன்போடு.

“என் பேரில அர்ச்சனையா? ஆமா நாள் நட்சத்திரம் எல்லாம் கேட்டிருப்பாங்களே..”

“ஆமா... கேட்டாங்கப்பா..”

“என்ன சொன்னீங்க....குப்பைத்தொட்டியில கிடந்தவனுக்கு...நாள் நட்சத்திரம் ஏது ஐயரே பேசாம் பேருக்கு அர்ச்சனை பண்ணுங்கன்னா?”

“என்னப்பா? இப்படி பேசுறே?” நா தழுதழுத்தது
ரங்கநாயகிக்கு.

“எங்களுக்கு நீ கிடைச்ச நாள் தான்பா வரப்பிரசாதம்...அதைவிட நல்ல நாள் இருக்கா?”
 சக்தி பாசத்தோடு கூறினார்.

சந்தோஷ் விரக்தியாக சிரித்தான்.

“நாங்க உன்னை பிரிச்சு பார்க்கலை....நீயே இப்படி பேசி பிரிச்சு வைக்குறே....” 
என்றாள் மகாலட்சுமி கலங்கிய குரலில்.

“பிரிச்சுவைக்க தேதியும் குறிச்சுட்டு...அப்புறம் என்ன உறவு கொண்டாட..?” அவன் எங்கோ பார்த்தபடி சொல்ல,

“என்னப்பா சொல்றே?” சராங்கன் எழுந்து அவனருகில் வந்தார்.

“வர்ற பதினைந்தாம் தேதி..கோர்ட்லே பார்க்கலாம்....வர்றேன்...” அவன் வெளியே கிளம்பிப்போனான். மற்றவர்கள் சிலையாகிப்போனார்கள்.

“என்னங்க இது? இப்பதானே வேண்டிகிட்டு வந்தோம் இந்த புள்ளை மனசை மாத்துன்னு... நாங்க அங்கே பிரார்த்திக்க....இங்கே..” மகாலட்சுமி அழுகை வர வெடித்தாள்.

“என்னம்மா? சும்மா சும்மா அழுதுகிட்டு...இவன் கூட வாழுறதைவிட சந்தியா நம்மகூட இருப்பது எவ்ளோ பெட்டர்..” கௌதம்
கோபமாக சொல்ல,

“டேய் நீ உன் வக்கீல் புத்தியை இங்கே காட்டாதே!...உன்னாலதாண்டா. எல்லாம்.. அவனுக்கு டைவோர்ஸ் வாங்கி கொடுக்க நீ ஒத்தைக்கால்லே நிக்குறே...போடா போ...” ரங்கநாயகி எகிறினார்.

“இல்லை..பாட்டி.....இந்த மூணு நாளா எப்படி இருந்தது தெரியுமா இந்த வீடு....? சந்தியா ஜுரம் வந்து.. அவளை ஏன்னு கேட்க யாரும் இல்லை...அத்தோடு எக்ஸாம் எழுதப்போனாள். பிரின்சிபால் சொன்னாரு. இவ்வளவு அக்கறையுள்ளவனோடு எப்படி வாழமுடியும்?” கௌதம் சொல்ல சாரங்கன் மகளிடம் திரும்பினார்.

“என்னம்மா சொல்றான்...? உனக்கு ஜுரம் வந்தா? அதோடு எக்ஸாம் எழுதப்போனாயா? எப்படி ஜுரம் வந்தது?”
 பதறியவாறு கேட்க,

“ம்...முந்தநாள் பெய்த மழையில நம்ம மேலே உள்ள கோபத்திலே யாரும் இல்லாத நேரம் சந்தியாவை மழையில விட்டு கதவை சாத்தியிருக்கான்..” அவன் சொல்ல சந்தியா அவன் முன்னால் வந்து நின்றாள்.

“பரவாயில்லையே....நேரில பார்த்தது போல சொல்றே? தமையனை கிண்டலடிக்க
,

“என்னம்மா சொல்றே..?” –சக்திவேல் உண்மையை அறிந்து கொள்ளும் நோக்கோடு கேட்டார்.

“எனக்கு ஜுரம் வந்தது நிஜம் . அதோடு நான் எக்ஸாம் எழுதினது நிஜம் ..ஆனா இவன் சொல்றது போல எல்லாம் இல்லை...” சந்தியா படபடக்க,

“ஓ...நீ உன் புருஷனை காட்டிக்குடுக்க கூடாதுங்கிறதுக்காக இப்படி பேசுறே....” கௌதம் கிண்டலடிக்க, அவனை கோபமாக முறைத்தாள்.

“என்னதான்மா நடந்தது..?” சாரதா சந்தியாவிடம் வினாவ, அவள் தலைகுனிந்தபடி மௌனமாக போனாள். மற்றவர்கள் ஆளாளுக்கு தத்தம் அறைகளுக்கு புகுந்து கொண்டனர்.



கௌதம் தன்னறையில் கேஸ்கட்டை பிரித்துவைத்தான். சங்கீதா பால் டம்ளரை கொண்டு வந்து தொப்பென்று வைத்தாள். அது துள்ளிக்குதித்து மேசைமேல் சிதறியது.

“ஏய்...இப்படித்தான் பால் டம்ளரை வைப்பாங்களா?” மனைவியை முறைத்தான்.

“ஆமா...! இப்படித்தான் இனி நடக்கும்....எந்த நாட்டுல நடக்குது இந்தக்கூத்து...? அண்ணனே தங்கச்சிக்கு டைவோர்ஸ் வாங்கிக்கொடுக்க குதியா குதிக்குறது..?“ அவள் கோபமாக சொல்ல

கௌதம் சிரித்தான்.

“என்ன? என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? மாமாவோட மௌனம் சம்மதம்னு உங்க இஷ்டத்துக்கு என்னவோ பண்ணிகிட்டு..சந்தியா வாழ்க்கை பத்தி கொஞசமாவது அக்கறை இருக்கா?” அவள் பொரிந்து கொட்டினாள்.

“சங்கீதா...என் தங்கையின் வாழ்க்கை பாழாகக்கூடாதுன்னு இந்த டைவோர்ஸ் எற்பாடே....நீ பொறுமையா இரு..”

“பொறுமையா இருக்குறதா? நீங்களும் சந்தோஷும் பண்ற கூத்தை பாத்துகிட்டு.. மத்தவங்க வேணா பொறுமையா இருக்காலாம்...என்னால இருக்க முடியாது....சந்தோஷுக்கு என்ன வந்ததோ தெரியலை....உங்களுக்கு என்ன வந்ததுன்னு எனக்கு புரியலை..”

“ஹேய்....டார்லிங் போதும்டி....! .எனக்குத்தெரியும் என்வேலையை பார்க்க..” என்றவாறு அணைத்தான்.

“ச்சே...தள்ளிப்போங்க..தங்கைக்கு டைவோர்ஸ் ஏற்பாடு பண்ண கையோடு பொண்டாட்டியை தொடுறீங்களா? அவளுக்கு ஒரு நல்லது அமையாமல் இந்தபக்கம் திரும்பி பார்க்கவே கூடாது...” திட்டிவிட்டு அவள் திரும்பி படுத்துக்கொள்ள கௌதம் சிரித்துக்கொண்டான்.



சாரங்கன் தூங்காமல் இருந்தார். அவரது முகத்தில் குழப்பமான ரேகைகள் தெரிந்தது.

“என்னங்க தூங்கலையா?” பால் டம்ளரை வைத்துவிட்டு கணவரை கவலையாக கேட்டாள் மகாலட்சுமி.

“எப்படிம்மா தூக்கம் வரும்? வீட்லே நடக்குற பூகம்பத்தால ஆடிக்கொண்டிருக்கேன்..”

“சந்தோஷின் வாழ்க்கையை பத்தி யோசிச்சு அவனுக்கு கல்யாணம் பண்ணிவைச்சு நம்ம பொண்ணோட வாழ்க்கையை கேள்விக் குறியாக்கிட்டீங்களோன்னு தோணுது”

“ம்...ம்.....”

“அவ வெளியில காட்டிக்காம நடமாடுறாங்க....ஆனா உள்ளுக்குள்ளே வெந்துகிட்டிருக்கா....” மகாலட்சுமி கண்ணீரைத் துடைத்தபடி சொல்ல,

“என்னம்மா சொல்றே?”

“நைட்லே தூங்காமல் ரொம்ப நேரமா லைட் எரிஞ்சுகிட்டிருக்குன்னு அன்னிக்கு பார்த்தா அவ பால்கனியிலே முழங்காலிட்டு அழுது கொண்டிருந்தா...என்னால பார்க்க முடியலைங்க....” அவள் கூற சராங்கனுக்கு நெஞ்சு பதறியது.

“எனக்கு ரெண்டு பேரும் என் கண்கள்தானே! ஏன்பா இப்படி சோதிக்குறே...? எப்படி இருந்த வீடு..” அவர் வாய்விட்டு புலம்ப கம்பீரமாக எதுக்கும் கலங்காத கணவன் கண்கலங்கியதும் மகாலட்சுமி பார்த்து பதறினாள்.

“என்னங்க நீங்க கண்கலங்கிட்டு...விடுங்க நடக்குறது நடக்கட்டும்...எல்லாம் எழுதின எழுத்துப்படிதான் நடக்கும்....நாம என்ன செய்ய முடியும்?” அவள் கலங்காமல் தேற்றினாள். சாரங்கன் தான் கலங்கினா அவள் இடிந்து போயிடுவாள் என்று தெரிந்து அவளது கண்ணைத் துடைத்தபடி தலையாட்டிவைத்தார்.
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
தங்கைக்கு மேல அண்ணங்காரன் நடிக்கிறான
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
சங்கீதா சுபெர் girl 😍😍😍
 
Top