• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 32

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
32​

நகத்தை கடித்தபடி டென்சாக இருந்தாள் சந்தியா. ஒரு கை நகம் அத்தனையும் தீர்ந்து போனது கடித்து துப்பிய பூச்சாடிக்கு சந்தோஷ் வந்து நீர் ஊற்ற அவனை விழித்தாள்.

“என்ன?”

“ம்....நகச்செடி வளரட்டுமேன்னு தான்...! நீ கண்டினியூ பண்ணு...” அவன் சொல்ல,

“என் டென்சன் எனக்கு! உங்களுக்கு அது கிண்டலாப்போச்சா? தண்ணீர் ஊத்துறீங்க....!” முறைத்தாள்.

“எதுக்கு டென்சன்?”
 அமைதியான குரலில் வினவினான்.

“இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு?”
 அவள் முகத்தில் பதட்டம் தெரிந்தது.

“எதுக்கு மறுபடியும் நகம் வளரவா..?” கேள்வியுடன் அவள் விழிகளை நோக்கினான்.

“குறுக்கே பேசாதீங்க...”

“ஓகே! ஓகே! எதுக்கு ரெண்டு நாள்?”
 புன்முறுவலுடன் அவளை பார்த்தான்.

“எ..என் ரிசல்ட் வர..”
 அவள் மெல்லிய குரலில் கூறினாள்.

“ஓஹோ... அப்படி ஒரு சங்கதி இருக்கா? ஆமா ரிசல்ட்டுக்கும் நீ டென்சானாக இருப்பதுக்கும் என்ன சம்பந்தம்?” அவன் தெரியாத மாதிரி அப்பாவி போல கேட்டான்.

“இந்த லொள்ளு தானே வேண்டாங்கிறது? நான் எக்ஸாம் எழுதியது மறந்து போச்சா? அந்த ரிசல்ட்தான் வருது”

“ம்....ம்...அதுக்கு நீ ஏன் டென்சனாகிகிட்டு...நிச்சயமா நீ பாசாகப் போறதில்லை....ஐ.ஏ.எஸ் சேர்ல உட்காருவதை விட்டு அடுப்பங்கரையில போய் குந்திக்கோ..”
 கிண்டலாக சொன்னான்.

“தொடங்கிட்டீங்களா? உங்களை...!” பக்கத்தில் ஏதாவது கிடைக்குமா என்று தேடினாள்.

“தேடாதே! நான் ரொம்ப உசார் பாட்டி...உங்கூட பேசுறதா இருந்தா முதல்லே இடத்தை காலியாக்கிட்டுத்தான் பேசுவேன்....” அவன் மார் தட்டிக்கொள்ள, கையிலிருந்த பேனாவை எறிந்தாள். அவன் அதை காட்ச் பிடித்தபடி,

“இத்தூனுண்டு பேனாவால என்னை என்ன செய்ய முடியும்..?”
 குறும்புடன் நகைத்தான்.

“அய்யோ கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?”
 அவள் எரிந்து விழுந்தாள்.

“சரி..’’அவன் டக்கென்று இரண்டு கைகளாலும் வாயை மூடிக்கொண்டான். சில நொடிகள் கரைந்தது. நகம் தீர்ந்து போக,

“என்ன பேச்சைக்காணோம்...?”
 அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீதானே பேசாம இருங்கன்னு சொன்னே...அதான்..” அவன் பழையபடி வாயை மூட சந்தியாவுக்கு சிரிப்பு வந்தது.

“பேசாம இருக்கத்தான் சொன்னேன்...இப்படி மூணு குரங்குகளில ஒரு குரங்கு போல இருக்கச்சொல்லலை..”

“பரவாயில்லையே...உன் சாதி சனத்தை பத்தி நிறைய தெரிஞ்சு வச்சுருக்கே...”
 என்று புன்னகையோடு சொல்ல,

“வாட்....? அப்ப நான் என்ன குரங்கா....?” எழுந்து அவனருகில் முறைத்தபடி போனாள்.

“ச்சேச்சே..நான் அப்படி சொல்வேனா..வேணும்னா...அழகா மங்கின்னு சொல்லிக்குறேன்...” அவன் சீரியஸாக சொல்ல, பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவன் தலையில கொட்டினாள்.

“ஏய்..என்ன பண்றே...?”

“ம்..தண்ணீரால அபிசேஷகம் பண்றேன்....” அவள் சொல்ல, அவன் சிரித்தபடி முடியை சிலுப்பினான்.

“ஏய்..சீ...என் மேலே படுது....”
 சிணுங்கலாக வந்தது அவளது குரல்.

“நல்லவேளை தண்ணிபாட்டில் இருந்திச்சு..இதுவே நான் கிச்சன்லே இருந்திருந்தா.. கெராசின் எடுத்து கொட்டி இருப்பே...அப்புறம் என்ன ஒரு தீக்குச்சி...அவ்வளவுதான் புஸ்னு பத்தி எரிஞ்சிருப்பேன்....” அவன் ஜோக்கடிக்க அவளது முகம் இருண்டது.

“என்ன சத்தத்தை காணோம்....போயிட்டியா?’ கண்களை துடைத்தபடி நிமிர்ந்தான். அவள் இவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.

“இங்குதான் இருக்கியா? இதென்ன மூஞ்சி இப்படி போயிடுத்து? நல்லாவே இல்லை..கொஞ்சம் சிரிக்கலாம்..அழகா இருப்பீயாக்கும்...நான் சொல்லலை.. பக்கத்துவீட்டு தாத்தாதான் சொன்னாரு..” அவன் அபிநயத்துடன் சொல்ல இவளுக்கு சிரிப்பு பீறிட்டது.

“அட இது! இப்படி சிரிப்பீயா? இதைவிட்டு உர்ரென்று புலிமாதிரி..பார்க்குறவங்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கவேண்டாம்?”

“யார் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கணும்.?”

“பார்க்குறவங்க கண்ணுக்குத்தான்..”

“அது யாரு பார்க்குறவங்க..?”

“யார் பார்ப்பாங்க பசங்கதான்..”

“ஓ...!”

“என்ன ஓ....?”

“பார்த்துடுவாங்களா அவங்க..?”
 என்றாள் கோபமாக.

“அட நீ கேட்குறதை பார்த்தா உண்டு இல்லைன்னு ஆக்கிடுவே போலிருக்கு..”
 கிண்டலாக கேட்டான்.

“ம்...ம்..பிச்சுப்போடுவேன் பிச்சு....”
 சந்தியா கோபமாக சொல்ல,

“என்ன நீ? அழகா இருந்தா பார்த்து ரசிக்கணும்...அப்பதான் அந்த அழகுக்கே பெருமை..”

“அப்ப நான் அழகா இருக்கேனா...?” இடுப்பில் கைவைத்து அழகாக தலைசாய்த்து கேட்டாள்.

“என்னை பொய் சொல்லச்சொல்றீயா..?” சடாரென்று அவன் வாற,

“என்னதூ...? அவள் முறைத்தாள்.

“உண்மையைச்சொன்னா கோபம் கூடாது! ஏத்துக்கணும்...புரிஞ்சுதா....?” அவன் சிரிக்க,

“ஆமா..ஆமா...இவர் பெரிய ஜட்ஜ் உலகழகி போட்டி நடத்துறவரு...மார்க் போட்டு அழகா இல்லையான்னு சொல்லிடுவாரு... வெவ்வெவ்வே..” அவள் உதட்டை மடித்து பழிப்புக்காட்டினாள்.

“வெவ்வெவ்வே..”சந்தோஷ் அவள் போல நடித்தக்காட்ட,

“உங்களை....” துரத்தினாள். அவன் பிடிபடாமல் பால்கனிக்கு தாவி கிழே குதித்தான்.

“சந்தோஷ்..!“ அதிர்வுடன் எட்டிப்பார்த்தாள். அவன் கிழே தரையில் இருந்தான்.

“என்னையா துரத்துறே..? பிடிபடுவேனா?” அவன் எழுந்து நொண்டினான்.

“காலுக்கு என்னாச்சு..?”

“ம்..கால் உடைஞ்சுடுத்து...போதுமா...?”

“வாட்....?” அவள் அதிர்ச்சியுடன் அவசரமாக படிகளில் இறங்கி வர அவன் காணாமல் போனான்
(coming)
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
அடேய் ஒரு மனநிலையில் இருங்க டா டேய்
 
Top