• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எங்கே என் மனம் - அத்தியாயம் 34

S.JO

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
80
34​

நாட்களும் நகர்ந்தது. சந்தியா எதிர்பார்த்த, குடும்பமே ஆவலாக எதிர்கொண்ட ரிசல்ட் வந்தது. ஐ.ஏ.எஸ் ஆக தகுதி பெற்று தேர்வு செய்யப்பட்டு டிரெயினிங்குக்கு அழைப்பதாக வந்த செய்தியை கேட்டு வீடே அமளிதுமளிபட்டது. எல்லோரும் பூச் செண்டுகளுடனும் பரிசுகளுடனும் வாழ்த்தினர். சந்தியா எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தாள். ஹரி குட்டிக்கரணம் அடித்தான். பட்டாசு வெடித்து சிறிவர்களுடன் கொண்டாடினான். எல்லோரும் இருந்தனர் சந்தோஷை காணாமல் சந்தியா எங்கே என்று தேடிக்கொண்டிருந்தாள்.

“யாரைத்தேடுறே?” ஹரி கேட்க,

“ம்..சந்தோஷைத்தான்....”
 என்றாள் வாசலை பார்த்தபடி.

“எதுக்கு அவனை நீ தேடுறே?” அவன் முறைத்தபடி கேட்க,

“பாசாகமாட்டேன்னு என்னை என்ன பாடுபடுத்திகிட்டிருந்தார். அவர் வாயிலே ஸ்வீட்டாலே கொட்டணும்..” புன்னகையுடன் கூறினாள்.

“அவன் வாயிலேவா? பேஷ்...அவ்வளவு நெருக்கமாயிட்டீங்களோ?” அவன் குதர்க்கமாக கேட்க,

“ஹரி..என்ன பேச்சு மாறுது?”

“நீ மாறலையே...?”

“ஏன் அப்படி கேட்குறே?”

“இல்ல வழக்கமா அவனை ஒருமையில தான் அழைப்பே. அவன் அருகே வந்தாலே உனக்கு எரியும்பே...இப்ப என்னடான்னா அவன் வாயிலே கொட்டணுமா?”

“ஹரி நான் ஏதோ சாதாரணமாக சொன்னா..”

“ஏது அவன் கூட கோட் இழுத்து விளையாடியது கூடவா...?”

“இப்ப என்ன சொல்ல வர்றே?” எரிச்சலாக கேட்டாள்.

“நீ அவன்கிட்டே நம்ம விசயத்தை சொல்லிடு..இல்லை நான் சொல்லிக்குறேன்..”

“எதுக்கு...அவசரம்..?” அவள் எங்கோ பார்த்துக்கொண்டு கேட்டாள்.

“எனக்கு அவசரம்னு வச்சுக்கோயேன்...! சொல்லிடு...உன்கிட்டே பேசவே யோசிக்கணும்;. அப்புறம் நாம இருக்குற பக்கமே அவன் வரமாட்டான்..”

ஏன் ஹரி.. இப்படி பேசுறே? அவரும் உன்போல ஒரு ஆண்மகன்தானே...”

“ஆண்மகனா? யாரு..? அவனா?”
அவன் கேட்க,

சந்தியா முகம் மாறியது.

“நல்ல ஜோக்தான் போ....”
 ஹரி நக்கலடிக்க,

“ஹரி போதும்..! மத்தவங்களை கிண்டல் பண்றதுக்கும் அளவு உண்டு.” அவள் கோபமானாள்.

“ஓகே! ஓகே! எதுக்கு கண்டவனைபத்தி பேச நாம நம்மை மூடை கெடுத்துக்கணும்? நீ ஸ்வீட் கொடு...நான் மீதி பட்டாசை வெடிச்சுட்டு வர்றேன்...ஆ..வந்ததும் சொல்லணும்னு நினைச்சேன் கத்திரிப்பூ மைசூர் சில்க்... தளைய, தளைய பின்னிவிட்ட கூந்தல்..சும்மா சொல்லக்கூடாது! எனக்கு உன்னை கட்டிப்புடிச்சு கிஸ் அடிக்கணும் போலிருக்கு..” அவன் ஏக்கமாக சொல்ல,

“ஹரி...! முதல்லே போய் பட்டாசை வெடி...போ..!”;. கையிலிருந்த ஸ்வீட் பேக்கை மேசை மேல் எறிந்தாள்.

“ஓகே...நான் பட்டாசு வெடிச்சுட்டு வந்து பாத்துக்குறேன்..” அவன் விசிலடித்தபடி போனான்.

பேசாமல் புடவையை கலைத்தாள். கதவு தீடிரென்று திறபட அவசரமாக மேலாடையை போட்டபடி

“ஏய் கதவை தட்டிட்டு வர்றது இலலை..இண்டீசன்பெல்லோ..” அவள் சினம் மேலிட சொல்லியபடி திரும்பினாள். சந்தோஷ் முகம் சிவக்க நின்றிருந்தான்.

“ஸா...ரி....நா....நா....ஹ..ரி....நி..னைச்சு..” அவள் திணற, மேலும் திணற விடாமல் சந்தோஷ் கை அமர்த்தி தடுத்தவனாக,

“யாரா இருந்தா என்ன? கதவை தட்டிட்டு வர்றது தான் முறை...அதுதான் நற்பழக்கமும் கூட..தப்பு என் பேரிலதான். ஸாரி..” அவன் விளக்கம் கொடுக்க,

“இ....இ...ல்....லை...நா..” அவள் வார்த்தையை தேட, சந்தோஷ் பேச்சை மாத்தினான்.

“என்ன இன்னிக்கு அதிசயம் நிகழ்ந்து விட்டது என்று சொல்றாங்க...?”
 சந்தோஷ் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்க,

“அதிசயமா? என்ன?”
 குழப்பத்துடன் அவனை பார்த்தாள்.

“உனக்கு தெரியாதா? அதுதான் யாரோ பாசாகிட்டாங்களாமே.... ?.”

“உங்களை..! அது யாரும் இல்லை நாந்தானாக்கும்....” அவள் சிறு குழந்தைபோல வெட்கப்பட்டபடி சொல்ல,

“ச்சே...இப்படி யார் கவிழ்த்தாங்க? எங்கேயோ தப்பு நடந்துட்டுது.. ” அவன் யோசிப்பது போல பாவ்லா செய்ய முறைத்தாள். ஸ்வீட் பாக்கெட்டை எடுத்து நீட்டினாள்.

“என்ன?”

“ஸ்வீட்..எடுத்துக்கோங்க...”
 சிரித்தபடி அவனை பார்த்தாள்.

“ம்..ம்...எனிவே....வாழ்த்துக்கள்....அகிலமும் வென்று வலம் வர வருங்கால ஐ.ஏ.எஸ் மேடத்துக்கு என் வாழ்துக்கள்....” அவன் வாழ்த்த,

“நன்றி....நன்றி...ஆமா..வாழ்த்து மட்டும் தானா?”

“வேறென்ன வேணும்..?”

“ஒவ்வொருத்தரும் வாட்ச்..பூச்செண்டு....அது இதுன்னு பிரசெண்ட் பண்ணாங்க....”

“ஓ..அப்படியா? ம்...அதுதான் எவராலும் தரமுடியாததை தரப்போகிறேனே...”

“என்ன?” ஆவலாக கேட்டாள்.

“டை..வோ…ர்..ஸ்...” அவன் அழகாக உச்சரிக்க சந்தியா முகம் கறுத்தது.
 ஒன்றும் பேசாமல் விழி அகற்றாது அவனையே பார்த்தாள்.

“ஏய்..என்ன நிஜம் தானே ? நீ என்கிட்டே முதல் முதலாக கேட்டது! உனக்காக என் வாழ் நாளில் முதல் தடவையாக நான் தரும் பரிசு! இதைவிட வேறென்ன வேண்டும் உனக்கு?” சொல்லிவிட்டு குறுகுறுவென அவளை பார்த்தான். அவள் விழிகளை தாழ்த்திக்கொண்டாள்.

“சந்தியா..! என்ன அப்செட்டாகிட்டே....? ஸாரி.....சந்தோசமாக இருந்த உன் மூடைக்கெடுத்துட்டேனா? இதுக்குத்தான் நான் பல நேரம் பேசுறதே இல்லை....”
 வருத்தத்துடன் அவளையே பார்த்தபடி சொன்னான். அவள் எதுவும் பேசாது தலை குனிந்தபடி மௌனமாக இருப்பதை பார்த்து,

‘ஓகே …நீ டிரஸ்சை மாத்து...மறக்காமால் கதவை பூட்டிட்டு...! நான் கிளம்புறேன்....” அவன் வெளியேறினான்.

சந்தியா அசையாது அவன் போவதையே வெறித்து பார்த்தபடி நின்றாள்.
(வரும்)
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
ஹும்ஹும் உனக்கு பெருந்தன்மை ராசா! நீ குடுப்ப...

இவ காலேஜ் போறதா இருக்கவும் நான் பிஎஸ்சி போல நினைச்சேன் (ஐ mean bacholer degree appadinu)
 

Ruby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
96
ஹரி உன்னை எல்லாம் திட்ட கூட எனக்கு க்கடுப்பா வருதுண்ணு தான் திட்டலை... பேசாம போயிடு கடுப்பை கிளப்பாமல்... லூசு.... நேர்மையா செய்யாமல் குறுக்கு வழியில்🤦🤦🤦 உன் மச்சான் வைப்பான் உனக்கு ஆப்பு இரு டி
 
Top