• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி...! - 11

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
எந்தன் ஜீவன் நீயடி..! - 11

ஈஸ்வரியின் பேச்சில் அம்பரி திகைத்து நிற்கையில் அவளது தோள் மீது அழுத்தமாக யாரோ கையை வைக்க திடுக்கிட்டு திரும்பினாள்.

அங்கே நின்றது அவளது தந்தை நித்யமூர்த்தி தான். ஐயோ அவர் அண்ணி பேசியதை கேட்டிருப்பாரோ? தப்பே செய்யாமல் பழியை ஏற்பது என்பது எத்தனை கொடுமையான விஷயம் ? அம்பரி கலக்கத்துடன் பேச வாய் திறக்க, பேசாதே என்று சைகை செய்துவிட்டு, "எதுவானாலும் அப்புறமா பேசலாம். முதலில், வா டிபன் காபி சாப்பிடலாம்" என்று தணிந்த குரலில் சொல்லி, மகளை அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தார்.

சகோதரிகள் காபியை குடித்தபடி அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் அப்போதுதான் திட்டத்தின் பக்கமாக சென்றிருந்தனர். இவர்களை பார்த்ததும் இருவரது பார்வைகளும் ஒருகணம் திடுக்கிடலுடன் சந்தித்து மீண்டது..உடனடியாக முகத்தை சீராக்கிக் கொண்டனர்.

சுப்பம்மா, இருவருக்கும் பலகாரங்களை பரிமாறிவிட்டு சென்றதும்,

"கீர்த்தி எங்கே மாமா", என்றாள் சங்கரி.

"தேனிக்கு போறேன்னு சொன்னான்மா. ஏன்மா ஏதும் முக்கியமா பேசணும்? என்றார்

"ஆமா மாமா, அவனோட கல்யாண விஷயமா பேசணும். டாக்டர் அங்கிள் நேற்றே சொன்னார். நானும் அக்காவும் அது விஷயமா ஒரு முடிவு செய்திருக்கிறோம் மாமா. அதுபத்தி தான் பேசணும்"

அவர்களது உரையாடலை கவனித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்பரிக்கு சட்டென்று புரையேறிற்று..

தண்ணீரை மகள் புறமாக நகர்த்தி கொடுத்துவிட்டு ,"பார்த்து சாப்பிடுமா" என்று அவளது தலையில் லேசாக தட்டிவிட்டு நித்யமூர்த்தி பேசினார்.

"கீர்த்தி கல்யாண விஷயமா நீங்க என்ன பேசணும்? என்கிட்டே சொல்லுமா.. நான் தானே எல்லாம் ஏற்பாடு செய்யணும்.. "

"அதுவும் சரிதான் மாமா.. நாங்க தம்பிக்கு இரண்டு பொண்ணுங்களை பார்த்திருக்கிறோம். அவனுக்கு எந்த பெண்ணை பிடிக்குதோ அவளையே கட்டி வைக்கலாம்னு இருக்கோம் "

"ஓஹோ ! நல்ல யோசனைதான். பெண்ணை உங்க அம்மாவுக்கும் பிடிக்கணும் தானே? அது முக்கியமில்லையா?"

"தம்பி கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாலே அம்மாவுக்கு சந்தோஷம்தானே மாமா. அது தம்பி மனசுக்கு பிடிச்ச பெண்ணாக இருப்பதைத்தானே அம்மாவும் விரும்புவாங்க" என்றாள் ஈஸ்வரி.

"நீ சொல்றதும் சரிதான்மா. ராத்திரி வர நேரமாகும்னு சொன்னான். அதனால எதுவானாலும் காலையில கீர்த்திக்கிட்டே பேசிக்கோங்க," என்றவர் மகளிடம் திரும்பி,"நீ வந்ததுல இருந்து ரெஸ்ட் எடுக்கவே இல்லை.. போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு" என்றதும் அம்பரி, மற்ற இருவரிடமும் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.

வீட்டினுள் வந்த பின், அவளுக்கு தந்தை ரொம்பவே மாறியிருப்பதாக தோன்றியது.. முன்பெல்லாம் இப்படி சேர்ந்து சாப்பிட்டது இல்லை.. அவருக்கு எப்போதும் வேலையில் தான் கவனம் இருக்கும். பிள்ளைகளிடம் சாப்பிட்டார்களா என்று ஒருபோதும் கேட்டதில்லை. நிச்சயமாக அண்ணிகள் பேசியதை அப்பா கேட்டிருப்பார் என்று தோன்றியது.. எப்போதும் அவருக்கு யாரும் நியாயமற்று பேசினால் பிடிக்காது.. அப்படி இருக்க அவர் கோபப்படவில்லையே,ஏன்? அவள் யோசனையாக அவுட்ஹவுஸின் பின்புறமுள்ள படிகளின் இருபுறமும் அமைக்கப்பட்ட திண்டுகளில் ஒருபுறம் அமர்ந்தாள்..

அப்போது, வீட்டைச் சுற்றிக் கொண்டு , அங்கே வந்த நித்யமூர்த்தி, நீ இங்கே தான் இருப்பேன்னு நினைச்சுட்டு வந்தேன்,என்றவர் அவள் பக்கம் அமர்ந்தார்.. சிலகணங்கள் தூரத்தில் தெரிந்த மலைமுகடுகளை பார்த்திருந்தவர், அவள் புறமாக திரும்பி அமர்ந்து , நேரடியாக விஷயத்திற்கு வந்தார்..

"இங்கே பார் அம்பரி, என்னை பற்றி ஈஸ்வரி,சொன்னதை கேட்டு அப்பாவை இப்படி பேசுறாங்களே என்று உனக்கு கஷ்டமாக இருக்கும்.. அவள் சொன்னதுல எதுவும் உண்மை இல்லை.. கடந்த மூன்று வருடங்களா கணக்கு வழக்கு எல்லாம் கீர்த்திதான் பார்க்கிறான். அதுக்கு முன்னாடி உள்ளதும் பக்கவா இருக்கு.. அதனால் நீ அவங்க பேசுனதை நினைச்சு வருத்தமோ,கோபமோ படாதே"

"அது எப்படி அப்பா ? இப்படி வாய் கூசாம பேசறாங்க? இன்னிக்கு இப்படி பேசுறவங்க, நாளைக்கு கல்யாணம் ஆனப்புறம், இன்னும் என்ன ,என்ன பேசுவார்களோ? நம்மளை தப்பா நினைக்க மாட்டாங்களா? அதனால இந்த கல்யாணம் வேண்டாம் அப்பா, வேறு ஒரு பெண்ணை.. என்ற அம்பரியின் பேச்சில் குறுக்கிட்டார் நித்யமூர்த்தி.

"என்ன பேசுறே நீ? உன் அத்தைக்கு நீ தானே வாக்கு கொடுத்துட்டு வந்தே? இப்ப மாறிப் பேசினா அவங்க மனநிலை என்னாகும்? அப்படியே அவசரமாக வேற எவளையாவது கட்டி வச்சா, அவள் உன் அத்தையை நல்லவிதமாக பார்த்துப்பானு என்ன நிச்சயம்? இல்லை கீர்த்தி வாழ்க்கை தான் என்னவாகும்? என்று சற்று அழுத்தமாக கேட்டார்.

" .................."

அம்பரி, இப்ப நாம் கண்ணாடி பாத்திரத்தை கையாளற மாதிரி உன் அத்தையை கையாளணும். யார் என்ன பேசினாலும் நீ அதை காதுல வாங்கிக்காதே.. இந்த வீட்டுல எதுவும் அக்கா அறியாமல் இல்லை அம்பரி. அதை நீ எப்பவும் ஞாபகத்தில வை. அத்தோட ஒன்றுவிட்ட உறவா இருந்தாலும் நீயும் ரத்த சொந்தம்தான். இதையும் மனசுல பதிய வச்சுக்கோ. அப்புறம் இந்த விஷயத்தை பற்றி நீ கீர்த்திக்கிட்டே சொல்லாதே" என்றவர் "இப்பத்தான், ஐயர் போன் செய்து கல்யாணத்துக்கு நாளும், நேரமும் குறிச்சு கொடுத்தார். வியாழக்கிழமை நல்ல முகூர்த்த நாளாம். இரண்டு நாளுக்குள் எல்லா ஏற்பாடும் செய்தாகணும். சரி நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.. நாளைக்கு உனக்கு நிற்கக்கூட நேரம் இருக்காது.. நான் போய் மற்ற ஏற்பாடுகளை கவனிக்கிறேன்..என்று கிளம்பி சென்று விட, கதவை தாழிட்டுவிட்டு வந்து கட்டிலில் படுத்தாள்.

"அவளது மனம் தந்தை சொன்னவற்றை ஏற்கவோ, தள்ளவோ முடியாது தவித்தது.. ஏதோ சுழலுக்குள் சிக்குவது போன்ற பிரம்மை உண்டாயிற்று..

அதை விட "தந்தை ஏன், கல்யாண விஷயத்தை அண்ணிகளிடம் சொல்லவில்லை என்ற கேள்வி மனதுக்குள் குடைந்தபடி இருந்தது.

ஏதேதோ எண்ணங்கள் சூழ, தன்னை அறியாமல் தூங்கிப்போனாள் அம்பரி.

🖤💜🖤

நித்யமூர்த்தி, மகளுக்கு என்னவோ தைரியம் சொல்லிவிட்டு வந்துவிட்டார். தமக்கைகளின் பேச்சு கீர்த்தியிடம் எடுபடாது என்றாலும், திருமணத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து அதனால் ஆனந்தவள்ளியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுவிடுமோ என்ற கவலை அதிகமாக இருந்தது.. அதன் காரணமாக அவருக்கு அன்றிரவு தூக்கம் பறி போயிற்று..

இரவு தாமதமாக வீடு வந்த கீர்த்திவாசனின் மனநிலை அதற்கு நேர்மாறாக இருந்தது. வெகு நாட்களுக்கு பிறகு அன்றைக்கு மனதில் ஏதோ ஒருவித அமைதி பரவ, நிம்மதியாக தூங்கினான்..

திருமணத்தில் அக்காமார்கள் கலகமூட்டுவார்களா? அல்லது கலகலப்பாக நடத்த துணைபுரிவார்களா??
💜🖤💜
 

Attachments

  • eiJCY6C73868.jpg
    eiJCY6C73868.jpg
    45.1 KB · Views: 34
Top