• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 20

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
20. எந்தன் ஜீவன் நீயடி..!

" வா, வா கீர்த்தி! உட்கார், என்று வரவேற்றார் நித்யமூர்த்தி.

அவர் குரலில் தெரிந்த உற்சாகம் அவனுக்கு குழப்பத்தையே உண்டாக்கியது..! பொதுவாக அவர் உணர்வுகளை வெளிப்படையாக காட்டுகிறவர் இல்லை என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அவருக்கு பதிலும் சொன்னான்.

"என்ன விஷயம் மாமா? ரொம்ப சந்தோஷமாக இருக்கீங்க? சொன்னா நானும் சந்தோஷப்படுவேன்ல? என்றான் வரவழைத்த புன்னகையுடன்.

"சொல்லத்தானே கூப்பிட்டேன் தம்பி, என்றவர், ? நான், கொஞ்சம் நாட்கள் கோவில் குளம்னு போய்ட்டு வரலாம்னு, பக்தி சுற்றுலானு வச்சுக்கோயேன்..! "என்று நிறுத்தி, அவன் விஷயத்தை உள்வாங்க அவகாசம் அளித்தார்.

"என்ன மாமா திடீர்னு? எப்ப போட்ட பிளான் இது? என்றான் லேசான திகைப்புடன்.

"அம்பரிக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுட்டா, நான் திருப்பதி, காசின்னு ஒரு பக்தி பயணம் போய் வரணும்னு எல்லா கடவுளையும் வேண்டிக்கிட்டேன்.
நாளாக ஆக, எங்கே அம்பரியோட கல்யாணத்தை பார்க்காமலே என் காலம் முடிஞ்சிருமோனு நான் கலங்கிட்டு இருந்தேன் கீர்த்தி. கடவுள் என்னை கைவிடலை. என் வேண்டுதலை பூர்த்தி செய்துவிட்டார். அதற்கு
நன்றிகடன் செலுத்த வேண்டாமா? நான் திரும்பிவர்றவரைக்கு இந்த வீட்டையும், தொழிலையும் நீயும், அம்பரியும் தான் பார்த்துக்கணும்.

கீர்த்திவாசனுக்கு ஏனோ அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. இதுதான் விஷயம் என்றால் அங்கேயே சொல்லியிருக்கலாமே? என்று தோன்றியது..! தன்னிடம் அவர் எதையோ மறைக்க முயற்சி செய்கிறாரோ என்று சந்தேகப்பட்டவன், உடனே கேட்டும் விட்டான்.

"மாமா, உங்களுக்கு உடம்புக்கு ஏதும் இல்லையே? என்றான் அவரது முகத்தை கூர்ந்தபடி..!

நித்யமூர்த்திக்கு உள்ளூர பெருமையாக இருந்தது..! இருக்காதா பின்னே? மருமகன் இத்தனை புத்திசாலியாக இருக்கிறானே? ஆனால் முகம் மாறாமல் காத்தவராக, அதெல்லாம் நான் நல்லாத்தான் இருக்கிறேன், கீர்த்தி! நீ என்னைப் பற்றி கவலைப்படவே வேண்டாம்" என்றார் உறுதியான குரலில்!

கீர்த்திவாசனுக்கு ஏனோ மனம் ஒப்ப மறுத்தது. நித்யமூர்த்தி ஒருமாதிரி பிடிவாதக்காரர். இன்றைக்கு இத்தனை இலகுவாக அவர் பேசியதே பெரிய விஷயம். இதற்கு மேலும் அவரிடம் கேள்வி கேட்டால், அப்புறமாக அவர் போகிற இடங்களின் தகவல்களை சொல்லாது விட்டுவிடுவார் என்று அவன் அறிவான். அதனால் அவன் வேறுவிதமாக தான் இந்த விஷயத்தை கையாள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். ஆனாலும் மனதை உறுத்திய கேள்வியை கேட்டான்.

"எல்லாம் சரி மாமா. இந்த விஷயத்தை வீட்டில் வைத்தே நீங்க சொல்லியிருக்கலாமே? ? எதுக்காக என்னை இங்கே வர சொன்னீங்க? என்றான்.

நித்யமூர்த்தி, தலையை குனிந்தவாறு சில கணங்கள் பேசாமல், அமர்ந்திருந்து விட்டு, ஒரு பெருமூச்சுடன் மெல்ல எழுந்தவர்,"கீர்த்தி, கதவை தாழிட்டு வா. நாம் உள்ளே போய் விடலாம்" என்று உள்ளே செல்ல,

கீர்த்திவாசன் ஒன்றும் புரியாமல், அவர் சொன்னதை செய்துவிட்டு, பின்னே சென்றான். ஒருவேளை அவரது உடல்நலம் குறித்துதான் சொல்லப் போகிறாரோ? என்று நினைத்தான்.

"அறைக்குள் எதிரே இருந்த இருக்கையை காட்டி அவனை அமரச்சொல்லி தானும் அமர்ந்து கொண்டார் நித்யமூர்த்தி. இப்போதும் அவர் உடனடியாக பேச முற்படவில்லை.. சில கணங்கள் மௌனமாக கழிந்ததும்,

"சுதாகரியும் அம்பரியும் என் மகள்கள் இல்லை" என்றதும்

"மாமா" என்றவனுக்கு அதிர்ச்சியில் மேற்கொண்டு வார்த்தை வரவில்லை..

"இந்த விஷயம், எனக்கும் சுதாகரிக்கும் தெரியும், ஆனால் அவளும் காலப்போக்கில் மறந்து போனாள். என்னை தன் தந்தையாகவே ஏற்றுக்கொண்டாள். உன் அம்மாவுக்குக்கூட இந்த விஷயத்தை நான் சொல்ல வில்லை கீர்த்தி. மறைக்கணும்னு நோக்கம் இல்லை.. என்னை நினைச்சு வருத்தப்படுவாங்க. அதனால சொல்லலை. அதற்கு அவசியம் ஏற்படாது என்று நினைத்தேன். இப்பவும் நான் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் சொல்ல வேண்டிய நிர்பந்தம் எனக்கு" என்ற, நித்யமூர்த்தி,மேற்கொண்டு சொன்ன விஷயம் கீர்த்திவாசன் கொஞ்சமும் எதிர்பாராதது..!

கீர்த்திவாசன், பேச்சற்றவனாக சில கணங்கள் அப்படியே அமர்ந்திருந்தான்.

"கீர்த்தி" என்று அழுத்தமாக அழைத்தார் நித்யமூர்த்தி.

"நீங்க இதை சொல்லாமல் விட்டிருக்கலாம் மாமா. இது தெரிவதால் யாருக்கு என்ன பிரயோசனம்? " என்றான்.

"உனக்கு தெரிய வேண்டியது ரொம்ப அவசியம் என்று தோன்றியது கீர்த்தி. இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா கீர்த்தி? உங்க திருமண ஒப்பந்தப் பத்திரம் தான்".

"மாமா..! " கீர்த்திவாசன் திடுக்கிட்டு எழுந்துவிட்டான்.

"உட்காரப்பா..! என்று அவனை அமர செய்துவிட்டு,"எனக்கு எப்படி தெரியும்னு மாமா... அது வந்து.." கீர்த்திவாசன் பேச்சு வராமல் தடுமாற..!

அவனை கையமர்த்திவிட்டு, தொடர்ந்தார்,"எனக்கு அது அதிர்ச்சியா இல்லை கீர்த்தி. என் பெண்ணை எனக்கு தெரியும். அவள் இந்த கல்யாணத்திற்கு முழு மனசோட சம்மதிக்க வாய்ப்பில்லை. ஆனால் காலப்போக்கில் உன் அன்பில் அவள் மாறிடுவானு நான் நம்பினேன். ஆனால் இப்படி பத்திரம் வரைக்கும் தயார் செய்வாள் என்று நினைக்கவில்லை.."

"ஐயோ மாமா, அது என் யோசனைதான். அவளுக்கு இதில சம்மதமே இல்லை. நான்தான் அவளோட வாழ்வு என்னால சீரழியக்கூடாதுன்னு இந்த ஏற்பாட்டை செய்தேன்.."

"அம்பரியை பற்றி நீ சரியா புரிஞ்சுக்கலை கீர்த்தி"

"என்ன மாமா சொல்றீங்க? அவள் நல்லா வாழணும்னு தானே இந்த ஏற்பாடு செய்தேன்.."

"இது அவளோட அத்தைக்காக செய்கிற திருமணம்தான். ஆனால் ஒரு வேளை பிரியற நிலை வந்தால் பிரிஞ்சு தனியாக வாழ்வாளே தவிர, இன்னொரு திருமணம் அவள் செய்துக்க மாட்டாள் கீர்த்தி.."

கீர்த்திவாசன், அவரது பேச்சில் வெகுவாக திகைத்துப் போனான்,"எல்லாம் இந்த பாவியால் தான் மாமா. நான் மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால் அவளுக்கு பொருத்தமானவனாக இருந்திருப்பேன். இப்படி விலகும்படி ஆகாது! இப்போது அவள் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே மாமா" என்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டான்.

"இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகலை கீர்த்தி. உன்கிட்ட நான் கேட்கிறது ஒன்னே ஒன்னு தான்.
நீ அவளுக்கு நல்ல புருஷனாக நடந்துக்கோ, அவள் மனதை மாற்ற முயற்சி செய், என் மகள் அன்புக்கு கட்டுப்படுவாள். அதனால நீ அவளை விட்டு விலகுவது பற்றி மறந்துட்டு, அவகூட வாழற வழியை பார் ! சரி ரொம்ப நேரம் ஆயிடுச்சு நீ போய் தூங்கு! நான் காலையில சீக்கிரமாக கிளம்பிடுவேன்" என்று எழுந்தார்.

கீர்த்திக்கு மாமனிடம் ஏதேதோ கேள்விகள் கேட்க தோன்றிய போதும், அவன் மனம் முழுதும் அம்பரியே வியாபித்து இருந்ததால், எதுவும் பேசாமல் வெளியேறினான்..!

நித்யமூர்த்தி சொன்ன விஷயம் என்ன? அம்பரியை மாற்றி தன்னுடன் வாழ வைக்க முயலுவானா கீர்த்தி? பிரின்ஸியின் குழந்தைக்கு தந்தை கீர்த்திதானா?

@ஜீவ ராகம் தொடரும்..!
 

Attachments

  • ei8HSLK67258.jpg
    ei8HSLK67258.jpg
    78.9 KB · Views: 27

பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,989
அருமை அருமை அம்மா ♥️♥️♥️♥️♥️
அம்மா ஷாக் ஷாக் ஆ குடுக்குறீங்க, இன்னும் எவ்வளவு secrets இருக்கோ 😲😲😲😲😲😲😲
 
Top