• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எந்தன் ஜீவன் நீயடி..! - 22

Aieshak

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
53
22. எந்தன் ஜீவன் நீயடி..!

கீர்த்திவாசன் ஒரு வேகத்தில் ஆரம்பித்துவிட்டான், அவரது முகத்தை பார்த்து, தயங்கினான்.
அதில் உணர்ச்சிகள் ஏதும் இல்லை.
பின் ஒருவாறு தைரியத்தை வரவழைத்து தொடர்ந்தான், "மாமா, நான் தப்பா எதுவும் சொல்லவில்லை. உள்ளதைத்தான் சொல்றேன். அம்பரியோட அப்பா என்றைக்கும் நீங்க தான். அதனால உங்களைப் பற்றி தெரிஞ்சுக்க வேண்டியது என் பொறுப்பு.
எதுக்காக நீங்க இந்த பயணம் போறீங்கனு,எனக்கே ஒரு யூகம் இருந்தாலும், அதை உங்க வாயால் தெரஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். அதனால தயவு செய்து எனக்கு மட்டும் சொல்லுங்க" என்றான் பிடிவாதமான குரலில்..

நித்யமூர்த்தி யோசனையாக அவனை பார்த்திருந்தார்.

"மாமா, என்னை நம்புங்க, நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்! " என்றான் அவசரமாக.

"நான் உன்னை நம்பாமல் யாரை நம்புவேன் கீர்த்தி? என்றவர், ஒரு பெருமூச்சுடன் தொடர்ந்து பேசினார், "சொல்லப்போனால், உங்கிட்டே என் விஷயத்தை சொல்லணும்னு, என் பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க சொல்லி கேட்கணும்னு நினைச்சேன். ஆனால் கடவுள், அவள் வாழ்க்கையையே உன் கையில் கொடுத்துட்டான். அதனால, இனிமே, அதை சொல்லி உங்க யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு தோனுச்சு. அதான் அப்படி ஒரு பொய்யை சொன்னேன். ஆனால், எனக்கு தெரியும் கீர்த்தி, நான் சொல்றதை லேசுல நம்ப மாட்டேனு.., இதோ, அதே மாதிரி நீயே வந்துட்டே.. நான் இப்ப நிம்மதியாக கிளம்புவேன்.. என்றார் இலகுவான குரலில்..!

"அட மாமா, இப்பவாச்சும் விஷயத்தை சொல்வீங்கனு பார்த்தால், இன்னும் மழுப்ப பார்க்கிறீங்களே, முதல்ல விஷயம் என்னானு சொல்லுங்க"என்றான்.

"எனக்கு, மூளையில் கட்டி உருவாகியிருக்கு, அது நாளுக்கு நாள் வளர்ந்துட்டு இருக்கு. இப்பட அதனால, என் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அதனால் சீக்கிரமாக அறுவை சிகிச்சை செய்யச் சொன்னார் ஒரு டாக்டர். அதில் பிழைக்கிற வாய்ப்பு ஐந்து சதவீதம் தான். சென்னையில் தான் அறுவை சிகிச்சை நிபுணர் இருக்கிறார். அதுக்கு தான் நான் இன்றைக்கு கிளம்பறேன். ஒருவேளை நான் திரும்பி வராமல்கூட போகலாம் கீர்த்தி. அம்பரிக்கு என்னோட இழப்பை தாங்கக்கூடிய சக்தி கிடையாது. அப்புறமாக அவளை உயிர்ப்போடு பார்க்கவே முடியாது. அதனால தான் பக்தி பயணம் என்று சொன்னா அவள் அப்படியே நினைச்சுட்டு இருப்பாள். நீயும் அப்படியே அவளை நம்ப வச்சுடு தம்பி. எனக்கு அவள்கூட சேர்ந்து இருக்கிற பாக்கியமே இல்லை.. என்ற போது அவரது குரல் கரகரத்தது..!

கீர்த்திவாசனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது! முதலில் அம்மா. இப்போது மாமாவுக்கும் அதே நிலையா? கடவுளே, ஏன் இந்த சோதனை எங்களுக்கு? அதிலும் இத்தனை நல்ல மனிதருக்கு ஏன் இந்த வேதனை? என்று அவன் மனம் அகற்றியது. ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாது,"மாமா உங்களுக்கு ஒன்றும் ஆகாது. கடவுள் புண்ணியத்துல அம்மா எப்படி பிழைச்சு வந்தார்களோ, அப்படி நீங்களும் பிழைச்சு வந்துடுவீங்க, எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றவனை ஒரு கசந்த புன்னகையுடன் பார்த்தார் நித்யமூர்த்தி.

அவரது அந்த விரக்தியான முகம் அவனை பாதிக்க,"என்ன விஷயம் மாமா? எதுவானாலும் என்னிடம் இனி எதையும் மறைக்காதீங்க ப்ளீஸ்..! என்றான் கெஞ்சுதலாக..

"இதை உன்கிட்ட சொல்றதால, தயவு செய்து அக்காவை தவறாக நினைக்கக்கூடாது கீர்த்தி. அவங்க செய்தது தப்போ, சரியோ,என்னை பொறுத்தவரை அவங்க அப்படி தீர்மானமா இருந்திருக்கலைன்னா, எங்க இரண்டு பேருடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் இல்லாமல் போயிருக்கும் தம்பி. அதை மட்டும் மனசுல வச்சு நான் சொல்றதை புரிஞ்சுக்கோ, என்றுவிட்டு, தொடர்ந்து,"உன் அம்மாவுக்கு முதல் இரண்டு நாட்கள் தான் கொஞ்சம் சீரியஸாக இருந்தது. அதுவும் பயப்படும்படியாக இல்லை என்று அப்புறமாக தான் எனக்கு தெரிய வந்தது..! அவங்களும் டாக்டரும் சேர்ந்து தான் .. உனக்கு நான் சொல்ல வர்றது புரியுது தானே? என்று நிறுத்தினார்.

கீர்த்திக்கு உள்ளூர திகைப்பு தான். ஆனால் அதனால் விளைந்தது நன்மை தானே என்று தோன்றியது. அம்மாவும் சரி மாமாவும் சரி, கடந்த காலத்தை மறந்து வாழச் சொன்னார்கள். நான் இப்போது அப்படித்தான் வாழ்கிறேன். ஆனால் அதில் அம்பரியின் வாழ்வு பாதிக்குமோ என்றுதான் அவனுக்கு கவலையாக இருந்த விஷயம். மாமாவிடம் பேசிய பிறகு, இது கடவுள் நாட்டம் என்று எண்ண தோன்றியது..! ஆகவே,"புரிகிறது மாமா. அம்மா விஷயம் வேறு, உங்கள் விஷயம் வேறு என்கிறீர்கள். ஆனால் இன்றைக்கு மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. உங்களுக்கு ஏதும் ஆகாது. உங்க ஆசைப்படி அம்பரி கூட சேர்ந்து இருப்பீங்க, நீங்க சொன்ன மாதிரியே நான் அவளை சமாளிச்சுடுவேன். ஆனால் இப்ப நீங்க சொன்னப் பிறகு, அம்மாவைப் பத்தின கவலை போயிடுச்சு. நீங்க கிளம்புங்க, எப்படியும் நீங்க போனதுமே ஆபரேஷன் பண்ணிட மாட்டாங்க, அதனால நான் அக்காமார் குடும்பங்கள் கிளம்பியதும் நாளைக்கு சென்னை வந்துவிடுவேன்" என்றான் தீவிரமான குரலில்.

"வேண்டாம் கீர்த்தி. அம்பரியால இங்கே சமாளிக்க முடியாது," என்று மறுத்தார்.

"ம்ஹூம், மாமா நான் சொல்றது தான் முடிவு. உங்களை என்னால தனியா அனுப்ப முடியாது. அம்மாவை விட்டு எப்படினு தான் நான் தவிச்சுட்டு இருந்தேன். நீங்க எதுவும் சொல்லாதீங்க, உங்க மருத்துவ ரிப்போர்ட்ஸ் எடுத்துட்டு வாங்க, நான் பார்க்கணும்" என்றான்.

நித்யமூர்த்திக்கு இனி மறுப்பதில் அர்த்தமில்லை என்று தோன்ற, அவனிடம் கோப்பை(file) கொணர்ந்து கொடுக்க, தன் கைப்பேசியில் எல்லாமும் சேகரித்து கொண்டான்.

"மாமா, அவ்வளவு தூரம் நீங்க காரில் போக வேண்டாம், நான் விமானத்துல டிக்கெட் போட்டுடுறேன். அங்கே உங்களுக்கு, தங்கிறதுக்கு இடம், போக்குவரத்துக்கு கார், எல்லாமும் ஏற்பாடு பண்ணிடுறேன், என்றவன் அவர் பேசவே இடம் தராமல் பயணச்சீட்டை பதிவு செய்தான். அடுத்து யாரிடமோ பேசி காருக்கும், அவர் தங்குவதற்கும் ஏற்பாடு செய்துவிட்டான்.

நித்யமூர்த்திக்கு மனதில் ஓருவித நிம்மதி பரவியது. மிகவும் ஆசுவாசமாக உணர்ந்தார். எழுந்து அவனை தழுவிக் கொண்டார். அந்த பாசச் செயலில் அவனும் நெகிழ்ந்து அவரை அரவணைத்து கொண்டான்.

🤎💜🤎

நித்யமூர்த்தி பக்தி பயணம் செல்வதாகவே அனைவருக்கும், தெரிவிக்கப்பட்டது. யாரும் பெரிதாக சந்தேகத்தை கிளப்பவில்லை.

அன்றைக்கு மாலையில்.. அக்காமார் குடும்பங்கள், சில அறிவுரைகளோடும்,இருவரும் தேனிலவுக்கு அங்கே வரவேண்டும் என்ற வேண்டுகோளோடும், கிளம்பிச் சென்றனர்.

அன்று இரவு உணவு முடிந்ததும் சின்ன வேலை இருப்பதாக தெரிவித்து, அம்பரியை அறைக்கு போக சொல்லிவிட்டான் கீர்த்திவாசன். சாப்பிட்டதும் படுக்க வேண்டாம் என்று பால்கனியில் நடை பயின்று கொண்டிருந்தாள். தந்தையின் இந்த திடீர் பக்தி பயணம் அவளுக்கு வியப்பாக இருந்தது. மற்றபடி, அவள் அறிந்த வரையில் அவர் எதற்காகவும் அலட்டிக் கொள்கிறவர் இல்லை..
அத்தைக்கு முடியாமல் போனதில் அப்பா ரொம்பவே அதிர்ந்து போயிருக்கிறார் போல,என்று நினைத்தவாறே நிமிர்ந்தவள், பிரின்ஸியும்,கீர்த்திவாசனும் அவுட்ஹவுஸில் இருந்து வெளியே வருவதை பார்த்தாள்.

முதலில் திகைப்பு உண்டாயிற்று. பின்,உள்ளூர ஒருவித ஏமாற்றம் உருவாவதை அவளால் தடுக்க முடியவில்லை. அவர்கள் தன்னை பார்த்துவிடக்கூடாது என்று அவசரமாக அறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தாள். அவளையும் அறியாமல் விழிகளில் கண்ணீர் திரண்டது. ஆவேசமாக அதை தட்டிவிட்டாள். "நான் ஏன் அழ வேண்டும். அவன் ஒன்றும் என் நிஜ கணவன் இல்லையே. அவன் யாரோடு பேசினால் எனக்கென்ன, நான் ஏன் வருந்த வேண்டும்? கேள்விகளை மனது கேட்டாலும், கண்ணீர் மட்டும் ஏனோ நிற்கவே இல்லை. எவ்வளவு நேரம் அப்படியே கிடந்தாளோ, அவளது அறை கதவு தட்டப்படும் ஓசை கேட்க, திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தாள். சட்டென்று குளியலறைக்குள் சென்று முகத்தை நன்றாக கழுவிவிட்டு, துண்டில் முகத்தை துடைப்பது போல சென்று கதவை திறந்தாள்.

கீர்த்தி ஒருகணம் அவளை கூர்ந்து பார்த்தவாறு நின்றான். கண்களும் முகமும் சிவந்திருப்பதை கவனித்தான், அழுதாளா என்ன? ஏன் ? என்ற கேள்வி எழுந்தாலும் அதை விடுத்து, "அம்பரி, நான் நாளைக்கு வியாபார விஷயமாக ஊருக்கு போகிறேன், திரும்புவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. நீ இங்கே எல்லாம் பார்த்துக்கோ, ஒன்றும் பெரிசா வேலை இருக்காது. நம்ப மானேஜர் வள்ளிமுத்து உனக்கு உதவியாக இருப்பார்" என்றதும் அம்பரி உண்மையில் உள்ளூர அதிர்ந்துதான் போனாள். ஏன் என்று சொல்ல தெரியவில்லை. அப்பாவும் இல்லாது, இவனும் இல்லாமல் ஏதாவது அவசரம் என்றால் அவள் என்ன செய்வாள் என்று நினைத்தாலும் அதை, சொல்லவில்லை.

"DNA ரிசல்ட் எப்போ வரும்? அதுவரை அந்த பிரின்ஸி இங்கே இருப்பாளா? " என்றபோது அவளது குரலும் சரியாக இல்லை என்று உணர்ந்தான்.

"அழுதாயா அம்பரி என்றான்?

நான் என்ன கேட்கிறேன் இவன் என்ன கேட்கிறான்? ஒருவேளை பதில் சொல்ல விருப்பம் இல்லைனு சொல்லாம சொல்றானோ? என கோபமாக வந்தது.

"அது. அக்கா நியாபகம் வந்துச்சு, அதான், என்று சமாளித்தவள், நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லவில்லையே..? என்றாள்

"அன்றைக்கு சொன்னது போல அவளை கொடைக்கானல் ரிசார்ட்டிற்கு போக சொல்லிட்டேன். அவளை கொண்டு விட்டுட்டு நான் போக முடியாது. நான் கிளம்பும் போது அவளும் கிளம்பறாப்ல தனி கார் ஏற்பாடு செய்துட்டேன், அப்புறம் நான் காலையில் சீக்கிரம் கிளம்பணும், குட்நைட் என்றவாறே, அவளது பதிலுக்கு கூட காத்திராமல் அவனது குளியலறை நோக்கி செல்ல.

கீர்த்திவாசன் சொன்னதை கேட்டு நிம்மதி ஏற்படுவதற்கு பதிலாக ஒருவித தவிப்பு தான் உண்டாயிற்று. அது ஏன் என்று புரியவில்லை. சிலகணண்கள் அப்படியே, நின்றுவிட்டு,
அறைக்கதவை சாத்தக்கூட மறந்தவளாக சென்று
கட்டிலில் படுத்துக் கொண்டாள் அம்பரி.

குளியலறையில் இருந்து வந்த கீர்த்திவாசன், அம்பரியின் அறைக் கதவு திறந்து இருப்பதை யோசனையாக பார்த்தான். ஏதோ ஒரு விஷயம் அவளை தொந்தரவு செய்கிறது என்று நினைத்தவன், கதவை தானே மூடிவிட்டு, மறுநாள் ஊருக்கு செல்ல தேவையான உடமைகளை எடுத்து வைக்கலானான்.

கீர்த்திவாசன் திரும்பி வரும்போது, சூழ்நிலை சாதகமாக இருக்குமா அல்லது புதிதாக பிரச்சினை காத்திருக்குமா? பொறுத்து இருந்து பார்ப்போம்".

@ஜீவ ராகம் தொடரும்..!
 

Attachments

  • ei8HSLK67258.jpg
    ei8HSLK67258.jpg
    78.9 KB · Views: 26
Top