• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனைச் சுடும் பனியோ நீ என் உயிரே(6)..

Dhanakya karthik

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2024
Messages
6
இளமதி அயன்பாக்ஸ் வயர் கட் ஆகி இருப்பது தெரியாமல் அயன் பண்ணிக் கொண்டிருக்க அந்த நேரம் வீட்டிற்குள் வந்த அதிரூபனின் பார்வை எதார்த்தமாக இளமதியின் மீது விழுந்தது.
வேகமாக வந்தவன் அயன்பாக்ஸ் சுவிட்சை அணைத்தவன் அறிவு இருக்கா உனக்கு என்றதும் அவள் எதற்கு திட்டுகிறான் என்று தெரியாமல் விழித்தாள். உன்னைத் தான் கேட்கிறேன் கொஞ்சமாவது அறிவு இருக்கா முட்டாள் அயன்பாக்ஸ் வொயர் டேமேஜா இருக்கு இதை வச்சு அயன் பண்ணி ஷாக் அடிச்சு எதுனாலும் ஆகி விட்டாள் யாரு பொறுப்பு என்றான் கோபமாக.
ஸாரி சார் கவனிக்கவில்லை என்றவளிடம் வேற என்ன விசயத்தில் கவனமா இருக்கிங்க வேலையில் கவனத்தை வைக்காமல் என்று திட்டியவன் போயி வேற அயன்பாக்ஸ் எடுத்து அயன் பண்ணு அதற்கு முன்னே தலைவலிக்குது ஒரு டீ எடுத்துட்டு வா என்றவன் தன்னறைக்கு சென்றான்.
இளமதி அவன் சொன்னது போல அவனுக்கு டீ எடுத்துச் சென்றாள். அதை வாங்கியவன் வீட்டில் என்ன பிரச்சனை என்றிட தெரியலை சார் என்றாள். என்ன திமிரா உனக்கும், சைலஜாவுக்கும் என்ன பிரச்சனைன்னு கேட்டேன் என்றான் அதிரூபன்.
சூப் கேட்டாங்க செய்து கொடுத்தேன் அவங்களுக்கு பிடிக்கவில்லை போல அதான் தூக்கி எறிஞ்சுட்டாங்க. ஏன் மேடம் தூக்கி எறிஞ்சிங்கன்னு கேட்டதுக்கு என்னை அறைஞ்சுட்டாங்க. அதான் பாட்டிம்மா அவங்களை சத்தம் போட்டாங்க என்றாள் இளமதி.
ஆக மொத்தம் உன்னோட வேலை சிறப்பா நடக்குது வந்த இரண்டாவது நாளே என் தங்கச்சியை திட்டு வாங்க வச்சுட்ட சூப்பர். உன்னைப் பற்றி தெரிஞ்சும் உன்னை இந்த வீட்டிற்கு அழைத்து வந்தேன் பாரு என்னை சொல்லனும் ஆனால் ஒன்று இந்த மாதிரி நீ ஆயிரம் குட்டிக் கலாட்டா பண்ணி விட்டாலும் நீ சாகுற வரை இந்த வீட்டில் எனக்கு அடிமையா தான் இருக்கனும். நரகம்னா என்னன்னு ஒவ்வொரு நாளும் நீ அனுபவிக்கனும் என்றவன் கிளம்பு உன் முகத்தை பார்க்கவே எரிச்சலா இருக்கு என்றிட அவளும் சென்று விட்டாள்.
என்னங்க என்ற எழில்ரூபனிடம் சொல்லுங்க சார் என்றாள் இளமதி. தலைவலிக்குது கொஞ்சம் டீ கிடைக்குமா என்றிட அவனுக்கும் டீ கொடுத்தவள் சென்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
ஒரு வழியாக அனைவருக்கும் இரவு உணவு தயார் செய்து வைத்தவள் மதியம் மீந்து போன சாப்பாட்டினை உண்டு கொண்டிருந்தாள்.
அந்த நேரம் அங்கே வந்த சத்யப்ரியா ஏன்டி என்ன இது வீட்டு ஆளுங்க சாப்பிடுறதுக்குள்ள அவசரம், அவசரமா தின்னுட்டு இருக்க ஏன் நாங்க சாப்பிட்டால் உனக்கு இல்லாமல் போயிரும்ங்கிற பயமா வெட்கமா இல்லை இப்படி திருடி திங்கிற என்று அவளை வசை பாட ஆரம்பித்தார்.
என்ன ப்ரியா சத்தம் என்று வந்த மதுரவாணியிடம் பாருங்க அண்ணி இன்னும் நாமளே சாப்பிடவில்லை அதற்குள்ள இந்த வேலைக்காரி ஆளுக்கு முன்னே திருடி தின்னுட்டு இருக்கிறாள் என்றார்.
மேடம் தப்பா எடுத்துக்காதிங்க இது மதியம் மீந்து போன சாப்பாடு தான் இப்போ சமைச்ச எதையும் நான் சாப்பிடவில்லை. வேலை அதிகமா இருந்ததால மதியம் நான் சாப்பிடவில்லை. அதான் பசிச்சது என்றவளிடம் நீ ஏன் மதியம் மிச்சமான சாப்பாட்டை சாப்பிடுற இளமதி. இப்போ சமைச்சதையே எடுத்து சாப்பிடு அதில் ஒன்றும் தப்பு இல்லை என்றார் மதுரவாணி.
அண்ணி என்ன நீங்கள் இவளுக்கு போயி சப்போர்ட் பண்ணிட்டு இருக்கிங்க என்ற சத்யப்ரியாவிடம் தப்பு ப்ரியா அந்தப் பொண்ணு நமக்காக எத்தனை வேலை பார்க்கிறாள் அவளை நாம மதிக்கவில்லைனாலும் பரவாயில்லை மிதிக்க கூடாது. அவளும் மனுசி தான் அவளுக்கும் பசிக்கும். அவள் கொஞ்சம் சாப்பிடுறதால நமக்கு சாப்பாடு இல்லாமல் போயிராது என்றவர் நீ சாப்பிடு இளமதி ஒன்றும் பிரச்சனை இல்லை என்று விட்டு சென்றார்.
சாப்பிட்டுத் தொலை அதான் எஜமானி சொல்லிட்டு போயிட்டாங்களே என்று கடுகடுத்த சத்யப்ரியா சென்று விட இளமதிக்குத் தான் சாப்பாடு தொண்டையில் இறங்க மறுத்தது.
பசிக்கும் பொழுது பழைய சோறு சாப்பிட்டது கூட குத்தமா என்று நினைத்தவள் கண்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
காலை ஐந்து மணியில் தொடங்கிய வேலை இரவு பத்துமணி வரை நீடித்திருந்தது. அவுட்ஹவுஸ் வந்தவள் அசதியில் அப்படியே உறங்கிப் போனாள்.
மீண்டும் அதிகாலை நான்கு மணிக்கு எழும்ப வேண்டும். இதே நிலை தொடர்ந்தது.
சைலஜா தன் அண்ணனிடம் பாட்டி திட்டிய விசயத்தைச் சொன்ன போது அவன் பதில் சொல்வதற்கு முன்னே எழில்ரூபன் பதிலளித்தான். நீ இளமதியை கை நீட்டி அறைந்தது தவறு என்று. அவள் அவனிடம் கோவித்துக் கொள்ள அதிரூபன் தங்கையிடம் இனி அவளை கை நீட்டி அடிக்காதே என்று மட்டும் சொல்லி விட்டு சென்று விட்டான்.

இளமதி அந்த வீட்டிற்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. வேலை , வேலை என்று சக்கையாய் பிழிந்து எடுத்தார் சத்யப்ரியா. ஏனோ அவருக்கு இளமதியை அறவே பிடிக்கவில்லை. அவருக்கு மட்டும் இல்லை சைலஜாவிற்கும் தான்.
மதிவதனியை பொருத்தமட்டில் அவளிடம் அன்பாகவும் நடக்க மாட்டார். அதே நேரத்தில் தேவை இல்லாமல் கோபமும் பட மாட்டார். அவரைப் பொறுத்தவரை அவள் அவளுடைய வேலையை செய்கிறாள் அவ்வளவே.
தையல்நாயகி, மதுரவாணி இருவரும் தான் அவளிடம் சிறிது அன்பாக நடந்து கொள்வார்கள். வேலை பார்க்கிறது சரி மூன்று வேளையும் வயிராற சாப்பிட்டுட்டு வேலை பாரு என்று அவளிடம் கூறுவர்.
யமுனா பெரும்பாலும் வீட்டில் இருக்கவே மாட்டாள். அவள் வேலை முடிந்து வரும் பொழுது இளமதியிடம் புன்னகையுடன் பேசுவாள்.
இந்த ஒரு மாதத்தில் யாருக்கு என்ன பிடிக்கும் என்று அறிந்து வைத்திருந்தாள் இளமதி.
அன்று வெகு நேரம் ஆகியும் காபி வராததால் தன் அறையை விட்டு வெளியே வந்த அதிரூபன் இளமதியை தேடினான். வீடு முழுக்க அனைவரும் எழுந்து விட்டனர். இளமதி இன்னும் வரவில்லை என்று சத்யப்ரியா அவளை வசைபாடிக் கொண்டே அவுட்ஹவுஸ் சென்றார். அவுட்ஹவுஸ் கதவு பூட்டி இருந்தது.
வெகுநேரம் கதவு தட்டப்பட்டும் அவள் திறக்காமல் போகவும் பயந்து விட்டார் சத்யப்ரியா. வாட்ச்மேன் தனுஷிடம் சொல்லி கதவை உடைத்துப் பார்த்தால் இளமதி மயங்கிக் கிடந்தாள்.
அவள் அருகில் வந்த சத்யப்ரியா ஒரு ஜக் நிறைய தண்ணீரை அவளது முகத்தில் ஊற்றிட பதறியவளால் எழ முடியவில்லை.
ப்ரியா என்ன பண்ணுற என்ற மதுரவாணியிடம் இவளால அவுட்ஹவுஸ் கதவு போச்சு மகாராணி இப்போ தான் தூங்குகிறாள் என்று கோபமாக அவளை வசை பாடினார் சத்யப்ரியா.
அவர் ஊற்றிய குளிர்ந்த தண்ணீரினால் ஏற்கனவே பயங்கர காய்ச்சலில் இருந்தவள் நடுங்க ஆரம்பிக்க அத்தை என்ன பண்ணிட்டிங்க பாருங்க அவங்க நடுங்குறாங்க என்ற எழில்ரூபன் இளமதி இந்தாங்க டவலை வச்சு துடைச்சுக்கோங்க என்றிட டவலை வாங்கும் முன் மயங்கி சரிந்தாள்.
என்னாச்சு என்று வந்த அதிரூபன் அவள் மயங்கி விழவும் தாங்கிப் பிடித்தவன் மதி உனக்கு என்னாச்சு என்று அவளது கன்னம் தட்டினான். அண்ணா ஹாஸ்பிடல் அழைச்சுட்டு போகலாம் என்றவனிடம் சரியென்று அவளைத் தூக்கிக் கொண்டான் அதிரூபன்.
எழில்ரூபன் காரை இயக்கிட அவளை பின் சீட்டில் படுக்க வைத்தவன் குளிரில் நடுங்கும் அவளது கை, கால்களை தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தான்.
மருத்துவமனை வரவும் அவனே அவளைத் தூக்கிக் கொண்டு வந்து டாக்டர் என்று கத்திட மருத்துவமனை ஊழியர்கள் வந்து அவளை ஸ்டெரச்சரில் படுக்க வைத்து உள்ளே கொண்டு சென்றனர்.
அவனுக்கு ஏனோ இதயம் படபடவென அடித்தது. அவளை பரிசோதித்த மருத்துவர் வெளியே வரும் வரை பதற்றமாகவே இருந்தான் அதிரூபன்.
எழில்ரூபன் அதை விட பதற்றமாகினான். கடவுளே இந்தப் பொண்ணு பாவம் அவளுக்கு எந்த கெடுதலும் நடக்க கூடாது என்று இறைவனை வேண்டிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்த மருத்துவர் இளமதியோட அட்டன்டர் யாரு என்றதும் அதிரூபன் வந்தான். சொல்லுங்க டாக்டர் என்றவனிடம் நீங்கள் அந்தப் பொண்ணுக்கு என்ன உறவு என்றிட கார்டியன் என்றான் அதிரூபன்.
சரிங்க மிஸ்டர் என்ற மருத்துவர் அவள் எதாவது கடினமான வேலை பார்த்தாளா என்றிட ஏன் டாக்டர் என்னாச்சு என்றவனிடம் அந்தப் பொண்ணுக்கு ஹெவி பீவர். அதோட இரண்டு நாளா சரியா சாப்பிடாமல் இருந்திருக்கிறாள். பீரியட்ஸ் டைம்ல ஏதோ ஹெவியான வொர்க் பாத்திருக்கிறாள் அதான் அவள் இவ்வளவு வீக்கா இருந்திருக்கிறாள் என்று விட்டு மயக்கம் தெளிஞ்சதும் சாப்பிட வைங்க என்று விட்டு கிளம்பினார்.
அவள் கண் விழித்ததும் எழில்ரூபன் ஜூஸ் வாங்கி வரச் சென்றான். அவளை முறைத்தபடி அமர்ந்திருந்தவன் ஏய் என்ன திமிரா இரண்டு நாளா சாப்பிடாமல் என்ன கிழிச்ச நீ என்றான். இல்லை சார் பீரியட்ஸ் அப்போ எனக்கு சாப்பாடு எடுக்காது என்றவளை முறைத்தவன் அப்போ இரண்டு நாள் லீவு சொல்லிட்டு அவுட்ஹவுஸ்லையே கிடக்க வேண்டியது தானே. என் அம்மாகிட்ட சொல்லி இருந்தால் அவங்க வேற ஏற்பாடு பண்ணி இருப்பாங்க தானே என்றவனிடம் உங்க அத்தைகிட்ட கேட்டேன். அவங்க சத்தம் போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் என்று தயங்கியவளை கனலாக முறைத்தவன் அறிவு இருக்காடி உனக்கு நீ செத்துத் தொலைஞ்சுட்டினா யாருடி பொறுப்பு. அன்னைக்கே சொன்னேன் உன் உடம்பையும் பார்த்துக்கனும், தினமும் சாப்பிடனும்னு இபகோ பாரு எங்கே கொண்டு வந்து நிறுத்திருக்கனு என்றவன் மருத்துவர் அழைக்கிறார் என்று நர்ஸ் கூறவும் எழில் ஜூஸ் கொடுப்பான். வாங்கி குடி நான் இதோ வந்துடுறேன் என்று மருத்துவரைப் பார்க்க கிளம்பினான்.
என்னடி நீ மனுசப் பிறவி தானே என்ற ராமநாதனிடம் ஏதோ கோபமாக சொல்ல வந்தார் சத்யப்ரியா. அதற்குள் முந்திய யமுனா எனக்கும் அதே சந்தேகம் தான் அப்பா இவங்க மனுஷி தானா. அந்த இளமதியை ஏன் இத்தனை வேலை வாங்குறாங்க. அது மட்டுமா அவளே உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறாள் அவள் மேல ஐஸ் தண்ணீரை ஊற்றி ச்சே என்ன மனுசிம்மா நீங்கள்.
உங்க பணக்காரத் திமிரை அந்த அப்பாவி பொண்ணு மேல வன்மமா காட்டுற அளவுக்கு அவள் என்ன தீங்கு செய்தாள் உங்களுக்கு என்றாள் யமுனா.
என்னடி வன்மத்தைக் கண்ட யாரோ ஒரு வேலைக்காரிக்காக அப்பாவும், மகளும் வரிஞ்சு கட்டிட்டு சண்டைக்கு வரீங்க என்ன நடக்குது இங்கே என்றார் சத்யப்ரியா.
யமுனா மனுசங்க கிட்ட பேசினால் புரியும். இது கிட்ட சத்தியமா புரியாது எழிலுக்கு போன் பண்ணி அந்தப் பொண்ணுக்கு என்னாச்சுனு விசாரி என்று ராமநாதன. கூறிட அவளும் போன் செய்தாள்.
.....தொடரும்....
 
Top