• வைகையின் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 21

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
407
அத்தியாயம் 21

காலை ஒன்பது மணி அளவிலேயே ஆதியின் வீட்டில் அத்தனை கூட்டம் கூடி விட, அன்னை முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அவரை கடிந்து கொள்ளவும் முடியவில்லை ஆதிக்கு.

அடுத்த இரண்டு நாட்களிலேயே பூ வைக்கும் வைபத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார். ராட்டினமாய் சுற்றி தான் வந்தார் மீனாட்சி. கூடவே சுமதியின் மாமியார் வேறு வந்திருக்க அவருக்கு தனி உபசரிப்பு.

சுமதி கூட சொல்லிப் பார்த்து விட்டாள் தன் அத்தையை தான் பார்த்துக் கொள்வதாக கேட்பதாக இல்லை மீனாட்சி. சுமதியின் மாமியார் முகத்தில் இருந்த இலகுவற்ற தன்மை மீனாட்சியை கலங்கடிக்க, ஏதோ தவறு இருப்பதாக மனம் சொல்ல, சுமதியிடம் கேட்டதற்கும் அவளிடம் சரியாய் பதில் இல்லை.

மனதின் கலக்கத்தை மகனிடம் காட்டிவிடவில்லை அவர்.. இத்தனை சொந்தங்களை அழைத்ததற்கு அவன் கோபம் கொள்ளாமல் இருப்பதே பெரிது என்று எண்ணி இந்த நிகழ்ச்சி முடியவும் சுமதியை கேட்க வேண்டும் என்று அமைதி கொண்டார்.

"என்ன டா கோமாளி மாதிரி வந்திருக்க?" தியாகு சிரிப்புடன் மாரியைக் கேட்க,

"ஹெல்லொ! இப்ப நான் பொண்ணு வீடாக்கும்.. கிவ் ரெஸ்பெக்ட்...டேக் ரெஸ்பெக்ட்..." என்று அவனும் அலப்பறை செய்ய, ஆதியால் கூட அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

"டேய் நீ எங்க போற? போய் கடையை திற.. நானும் இப்ப வந்துடுவேன்" ஆதி கூறவும், எதே என்று விழித்த மாரி அப்போது தான் ஆதியின் உடையைப் பார்த்தான்.

"என்ன ட்ரெஸ் ண்ணா இது? சாருக்கா மப்பிள்ளை எங்கனு தேடப் போகுது" மாரி கூற,

"அவன் வந்தா தான டா தேடும்.. அவன் தான் வரலையே" என்றான் தியாகு.

"வரலையா? ஏன் ஏன் ஏன்" என்று வேகமாய் கேட்க,

"பூ வைக்க தான் பெரியவங்க போதுமே! நான் எதுக்கு? ஆமா நானே இல்லன்றேன்... நீ எதுக்கு?" என்று மாரியை ஆதி கேட்க,

"லூஸா ண்ணா நீ? பூ நீ தான வைக்கனும்?" என்று சொல்லவும் அருகில் நின்ற பெரியவர்கள் எல்லாம் சிரிக்க, ஆதி பாடு தான் திண்டாட்டமாய் போனது.

"டேய்!" என்று அவன் பல்லைக் கடிக்க, தியாகு கூட அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.

"மப்பிள்ளை தான் பூ வைக்கனும்னு உனக்கு யாரு டா சொன்னது?" தியாகு சிரித்தே கேட்க,

"அப்படி இல்லையா?" என்றவனுக்கு நிஜமாய் தெரியவில்லை.

"இதெல்லாம் பெரியவங்க பார்த்து பன்றது. அதனால தான் ஆதி வர்லனு சொல்லிட்டான்" தியாகுவே பதில் கூறிக் கொண்டிருந்தான்.

"சரி பூ யார் வேணா வச்சுட்டு போட்டும்.. நீ வர்லாம் தான ண்ணா?" மாரி விடாமல் கேட்க,

"நான் உனக்கே லீவ் இல்லன்னு சொல்றேன்.. நீ என்ன டா பேசுற?" - ஆதி.

"இங்க பாருங்க ண்ணா இனிமேட்டு லீவ் தரமாட்டேன்னு எல்லாம் நீங்க என்னை மிரட்ட முடியாது.. நான் நேரா ஓனர்கிட்ட பேசிப்பேன்"

"அது யாரு டா புதுசா ஓனரு?" தியாகு புரியாமல் கேட்க, ஆதிக்கு உடனே புரிந்துவிட்டது.

'சரி தான் சும்மாவே ரெண்டு பேரொட வாயும் அடங்காது..' நினைத்துக் கொண்டவன்,

"அதெல்லான் வந்த பின்னாடி சொல்லிகோ... இப்ப இந்த கோமாளி ட்ரெஸ்ஸ மாத்திட்டு போய் கடையில உட்காரு" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது அவர்களிடம் வந்தார் மீனாட்சி.

"கிளம்பட்டுமா டா?" என்று அவர் கேட்க,

"ஏன் ஆச்சி எதுத்த வீட்டுக்கு போறதுக்கு பெர்மிஸ்ஸனா?" மாரி கிண்டல் செய்ய,

"ம்ம் ஆமா! என்னை கேட்டுட்டு தான இவ்வளவு பேரைக் கூட்டி வச்சுருக்கிங்க?" என்றான் ஆதியுமே.

"அவங்க விருப்பப்படி செய்யட்டும் விடுடா" தியாகு சப்போர்ட் செய்ய,

"எடுத்து சொல்லு தியாகு.. இவன் இன்னும் எந்த காலத்துல இருக்கானோ தெரியல..பூ வச்சதும் சாருகிட்ட நின்னு நாலு போட்டோ எடுத்துக்கலாம் வா டான்னா ரொம்பத்தான் பன்றான்..இவங்கிட்ட அந்த புள்ள என்ன பாடு பட போகுதோ?" மீனட்சி கூற,

"ஆச்சி! அதான் நான் இருக்கேனே.. அக்காவை ஒத்த வார்த்தை சொல்லட்டும்.. அப்புறம் இருக்கு" மாரி கூறவும்,

"முதல்ல நீயும் உன் அக்காவும் சேர்ந்து ஒரு வார்த்தை இவனை பேச விடுங்க.. அப்புறம் அவனை சொல்லலாம்" என ஆதி மனதில் நினைத்ததை தியாகு கூறி வைத்தான்.

"அது இருக்கட்டும்.. அதென்ன சாரு அக்கா ஆதி அண்ணா? ஒன்னு சாருவை அண்ணினு கூப்பிடு இல்ல ஆதியை மாமானு கூப்பிடு" என்று சொல்லவும்,

'சாரு அண்ணி.... ஆதி மாமா!' என்று மனதில் சொல்லிப் பார்த்தவன்,

"ஊவ்வே! நல்லாவே இல்ல... எனக்கு இவங்க ஆதிண்ணா சாருக்கா தான்" என்றவன்,

"நீங்க கிளம்புற மாதிரி தெரியல, நான் போய் அக்காவைப் பார்த்துட்டு வந்துடுறேன்" என்று பறந்துவிட்டான்.

"டேய்! நீயும் தான் வாயேன்" மகனை மீனாட்சி அழைக்க,

"அதான் மூணு மாசம்னு ஜோசியர் சொன்னதை நல்ல நாள்னு ரெண்டு மாசத்துல கல்யணத்தை வச்சுட்டிங்க தான? வேற என்ன உங்களுக்கு?" என்று ஆதி கேட்டதே,

'இங்கே தானே வரப் போகிறாள்!' என்பதாய் இருந்தது.

போக வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இல்லை.. போனால் மட்டும் என்னவாகி விடும்? சுற்றி இருப்பவர் கண்கள் அனைத்தும் இருவரின் மேல் தான் இருக்கும்... அப்படி எல்லாம் இவர்களின் பார்வைக்கு நின்று சாருவிடம் ஒரு வார்த்தை பேசவும் தயங்கி என நினைத்தவன், சும்மா இல்லாமல் அவள் வேறு சீண்டி விடுவாள் என்றும் நினைக்காமல் இல்லை.

இப்படி ஆரம்பித்த நிகழ்வில் மாரி சாரு வீட்டிற்கு சென்று ஆதி வரவில்லை என்று கூற, சாருவும் ஆதிக்கு ஏற்ற விதமாயே பேசி இருந்தாள்.

"சில்ற! இன்னைக்கு வர்லனா என்ன? தாலி கட்ட எப்படியும் வந்து தான ஆகனும்? இன்னைக்கு கூட்டத்துக்குள்ள சிக்கி, நானும் வாய வச்சுட்டு சும்மா இல்லாம எதாவது பேசி ... வாத்தி என்னை முறைச்சு... தேவையா சொல்லு... இன்னைக்கு ஒரு நாள் தான? நாளைக்கே கடை பக்கம் நான் வந்துட மாட்டேன்?" என்று கேட்க,

"வர வர நீ ஆதிண்ணாக்கு ரொம்ப சப்போர்ட் பண்ற க்கா!" என்றான் மாரி.

"பின்ன! புருஷனுக்கு சப்போர்ட் பண்ணாம?" என்றது ப்ரீத்தி.

"அரட்டை அடிச்சது போதும்... அவங்க எல்லாம் வந்தாச்சு சாரு" என்ற தேவி மகள் அலங்காரத்தை ஒரு முறை சரிபார்த்துக் கொண்டார்.

"நினச்சதை சாதிச்சுட்ட இல்ல?" சுமதி கிண்டல் செய்தவள் கொண்டு வந்த பூவை தன் அண்ணன் மனைவியாக போகும் சாருவின் தலையில் சூட்டிவிட, மனம் நிறைந்த மகிழ்வுடன் புன்னகை முகமாய் அதனை வாங்கிக் கொண்டாள் சாரு.

இனிதாய் அரம்பித்து அந்த நாளில் அழகாய் நிறைவேறி இருந்தது ஆதி சாருவின் பரிசம். ஓடி ஆடி திரிந்த மீனாட்சி சாய்வாய் அமரையில் மணி நான்கை தொட்டிருந்தது. அப்போது தான் வந்த சொந்தங்கள் எல்லாம் கிளம்பி இருந்தனர். ஆதியின் அன்னை, ஆதி உடன் சுமதியும் சுமதியின் மாமியாரும் மட்டும்.

"உன் வீட்டுக்காரர் கோயம்புத்தூர் போயிருக்கார் தான சுமதி! எப்ப வர்ரார்?" ஆதி சுமதியிடம் கேட்க,

"வந்துடுவாங்கண்ணா..இன்னும் ஒன்னு ரெண்டு...." என்று சுமதி இழுக்க,

"வேலை விஷயமா போனவன் வர முன்ன பின்ன ஆவத்தான.." என்றார் மாமியார் ஆனவர்.

"அதுவும் சரி தான் .. வேலைனு போனா நாள் ஆகும் தானே!" என்றார் மீனாட்சியும்.

"அப்படின்னா அவர் வர்ர வரை நீ இங்க இரு சுமதி" என்றான் ஆதி.

அதில் கண்கள் மின்னல் பூக்க சுமதி பார்க்க, "அது எப்படி? இவ இங்க இருந்துட்டா அங்க வேலை எல்லாம் யாரு பாக்குறது? எனக்கே குறுக்கு வலி.. ஏதோ நீங்க கூபிட்டிங்களேனு தான் வந்தேன்" என்று மாமியார் சொல்லவும் சுமதி முகம் வாட,

"நான் அவர்கிட்ட பேசிட்டேன் சுமதி... அவரே வந்து கூட்டிட்டு போறேனு சொல்லிட்டார்.. நீங்களும் வேணா அவங்க வர்ற வரை இங்க தங்குங்களேன்" என்ற ஆதியின் செய்தியில் சுமதிக்கு பயம் தான்.

சுமதி நினைத்தது போலவே ஆட ஆரம்பித்து விட்டார் அவள் மாமியார். "நான் குத்துக் கல்லாட்டம் இங்க இருக்கையில என் மவனுக்கு எப்படி போனப் போடலம்" என்று அவர் குதிக்க, ஆதியின் அழைப்பேசி அழைத்தது.

"அவர் தான்... நீ பேசு" என்று ஆதி சுமதியிடம் கொடுக்க, ஐந்து நிமிடம் பேசிவிட்டு வந்தவளை அவள் மாமியார் என்ன என்பதை போல பார்க்க,

"நான் அவர் வரவும் வர்றேன்.. நீங்க கிளம்புங்க அத்தை.. ண்ணா இவங்களை பஸ்டாப்ல விட்டுடுங்க" என்ற சுமதி, தன் மாமியார் ஏதோ சொல்ல வாயெடுக்கவும்,

"உங்க மகன் தான் சொல்ல சொன்னாங்க.. இனி எதுவும் பேசனும்னா அவங்ககிட்ட பேசிக்கோங்க" என்று கூற, ஆதி வருகிறேன் என்றவனையும் தவிர்த்து தனியாய் கிளம்பி சென்று விட்டார் சுமதியின் மாமியார்.

"என்ன ஆதி என்ன நடக்குது இங்க?" ஒன்றும் புரியாமல் மீனாட்சி கேட்க,

"வாழற வீட்ல பிரச்சனைனா முடிஞ்ச வரயுமே நாம தான் சமாளிக்க பார்க்கனும்.. அப்பவும் முடியலைனா நமக்குன்னு அம்மா அண்ணா இருக்காங்க தான.. அங்கேயாவது சொல்லனும்... இப்படி வாய மூடிட்டு இருக்க கூடாது சுமதி" என்றான் ஆதி.

சுமதி கண்கள் கண்ணீரில் நிற்க, பயந்து போனார் மீனாட்சி. "ஏன்ன ஆதி என்ன சொல்ற நீ?" என்று கேட்க,

"உனக்கு எப்படிண்ணா தெரிஞ்சது?" என்றாள் சுமதி.

"ம்மா! நீங்க நினைக்குற மாதிரி இல்லம்மா என் அத்தை.. அவர் இருக்கும் போது ஒரு மாதிரி இல்லாத போது ஒரு மாதிரினு என்னை டார்ச்சர் பண்ணிட்டாங்க.. அவங்ககிட்ட அவங்க அம்மாவை சொன்னா என்னை நம்புவாங்களானு நான் சொல்லல.. ஏற்கனவே அண்ணா எனக்காக தான் கல்யாணம் பண்ண மாட்டேங்குதுனு நீங்களும் சொல்லவும் இதை சொன்னா என்ன ஆகுமோனு தான் நான் சொல்லல ம்மா.." என்று கூற, மீனாட்சி அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே சில நிமிடங்கள் பிடித்தது.

"என்ன சுமதி சொல்ற? நல்லாருக்கியானு எத்தனை முறை கேட்டிருப்பேன்? உன் அண்ணன் இதுக்காக தான் பலமுறை யோசிச்சு யோசிச்சு உனக்காக ஒவ்வொண்ணும் செஞ்சது" என்று சொல்லவும்,

"மாப்பிள்ளை மேல எந்த தப்பும் இல்லம்மா.. சுமதிகிட்ட காலையில பேசினேன்.. அப்பவே மப்பிள்ளைகிட்டயும் அவருக்கு புரியுற மாதிரி கொஞ்சம் பேசிட்டேன்.. இனி பிரச்சினை வராது... வந்தாலும் இங்க உனக்காக நாங்க இருக்கோம்.. அதை மறந்துடாத" என்றான் ஆதி தெளிவாய் தங்கையிடம்..


தொடரும்..
 

Apsareezbeena loganathan

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
168
அமைதியா இருந்தாலும் அண்ணனாய் தங்கையின் நிலையை அறிந்து
ஆதி செய்யும் முடிவுகள்
அனைத்தும் அருமை
அருமையே💐💐💐💐
 

Rithi

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
407
அமைதியா இருந்தாலும் அண்ணனாய் தங்கையின் நிலையை அறிந்து
ஆதி செய்யும் முடிவுகள்
அனைத்தும் அருமை
அருமையே💐💐💐💐
Thank u
 
Top