• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

எனை மீட்டிடும் இசை 22

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 22

மொபைலைக் கையில் வைத்து சுற்றிக் கொண்டே அந்த அறை முழுதும் நடந்து அளந்து கொண்டிருந்தான் ஆதி. இரவு பத்தை நெருங்கி இருந்தது நேரம்.

மொத்தம் மூன்று குருஞ்செய்திகள் சாருவிடம் இருந்து இரண்டு இரண்டு நிமிட இடைவெளியில் சில நிமிடங்களுக்கு முன்பு வந்திருக்க பதில் அனுப்பலாமா வேண்டாமா என்ற குழப்பம்.

பூ வைத்த அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளியே செல்லவே கூடாது என்ற தேவி தன் மகளை நன்கு அறிந்து வைத்திருந்தார்.

அவளும் நினைத்தது போலவே "சரிம்மா வெளில போகல.. ஆனா வாத்தி என்னை தேடும்... போய் நாலு வார்த்தை பேசிட்டு வந்துடுறேன்" என்று சாருவும் அடம்பிடிக்க,

"ஆதி என்ன உன்னை மாதிரினு நினச்சியா? அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு இருக்கான்.. நீ போய் வம்பு பேசிட்டு வர கதை சொல்றியா? மரியாதையா ரெண்டு நாள் பொண்ணாட்டம் இந்த ரூம்குள்ள இரு" என்றுவிட, அன்னையை மீறி அங்கே இங்கே நகர முடியவில்லை சாருவிற்கு.

ஆதியும் முதல் நாள் அவள் வருகைக்காக கடையை திறந்து அங்கு அரை கண்ணும், சாரு வீட்டில் ஒன்றரைக் கண்ணுமாய் வைத்துக் காத்திருக்க, நேரம் போனதே அன்றி அவள் வந்த பாடில்லை.

மாரி இருந்தாலாவது எதாவது பேசி அவனிடம் இருந்து விஷயத்தை வாங்கலாம் என்றால் அவனும் கல்லூரிக்கு சென்றிருந்தான். யாரிடம் கேட்பது என்றே தெரியாமல் அந்த நாளை ஓட்டியவனுக்கு 'உடம்பு எதுவும் சரி இல்லையோ?' என்ற எண்ணம் வேறு.

இதில் மீனாட்சி வேறு அந்த வீட்டிற்கும் இந்த வீட்டிற்குமாய் நடையாய் நடக்க கேட்காமல் இருக்க முடியவில்லை.. அதைப் போல கேட்கவும் முடியவில்லை.

அனைத்தையும் போல இதையும் ஊர் முழுக்க சொல்லிவிட்டால்? செய்ய மாட்டார் என்று தோன்றினாலும் ஒரு பயம் இருக்க அன்னையிடம் வாயே திறக்கவில்லை அவன்.

அன்றைய நாள் அப்படியே கழிய, இரவு நெருங்கும் நேரம் தான் வந்து சேர்ந்தான் மாரி. வந்தவன் நேராய் சாரு வீட்டிற்க்கு செல்ல அதையும் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் ஆதி..

சில நிமிடங்கள் கழித்து வந்த மாரி, "ண்ணோவ்! நாளைக்கும் காலேஜ் இருக்குதுண்ணா... வர முடியாது.. சனிக் கிழமை பாக்கலாம்" என்று கூற,

"அதை ஃபோன்ல சொல்லத் தான டா? அதுக்கு ஏன் இவ்வளவு தூரம் வரணும்?" என்றான் முறைப்போடு.

"ம்ம்க்கும்ம்! நினைப்புத் தான்.. அம்மா அக்காக்கு சூடா கோழி குழம்பு குடுத்து விட்டுச்சு.. அதான் குடுத்துட்டு போலாம்னு வந்தேன்.. இல்லைனா நான் ஏன் வரப் போறேன்?" என்றபடி சென்றுவிட,

"அப்ப நல்லா தான் இருக்குறா!" என நினைத்துக் கொண்டான்.

இரவு சாபிடும் போது கூட அன்னையும் தங்கையுமாய் சாருவைப் பற்றியே பேசிக் கொண்டு இருக்க கேட்டபடி இருந்தவன் எதுவும் அவர்களிடம் கேட்டுக் கொள்ளவில்லை.

இரண்டு வாய் சாப்பிடவும் மொபைலில் செய்தி வந்த சத்தம் கேட்க என்னவோ என எடுத்துப் பார்த்தவன்,

"உன்னைத் தானே....
தஞ்சம் என்று
நம்பி வந்தேன் நானே.... என்று முதலில் பாடலின் வரிகள் வரவுமே அவளின் எண் அது என தெரிந்து கொண்டவன் முகத்தில் ஒரு புன்னகை தோன்ற, அன்னை தங்கை இருப்பை உணர்ந்து வாய்க்குள் அடக்கிக் கொண்டான் அதை.

அடுத்து இரண்டே நிமிடத்தில்,
"உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல" என்று வர, வேக வேகமாய் சாப்பிட்டு முடித்தவன் கை அலம்பி அறைக்குள் வரவும் செய்தி வந்த ஒலி.

"சௌக்கியமா கண்ணா சௌக்கியமா?" என்று வர,

'ஆமா பார்த்து அஞ்சாறு வருஷம் ஆகுது இல்ல?' என்று ஆதி நினைத்தவன் பதில் அனுப்பவா வேண்டாமா என நினைக்க,

"ஓரு கடிதம் எழுதினேன்... என் உயிரை அனுப்பினேன்..." என்று அனுப்பியபடி இருக்க, இது முடியாது என்று தெரிந்து போனது ஆதிக்கு.

என்ன அனுப்பலாம் என சிந்தித்தவன் சில நிமிடங்களுக்கு பிறகு ஒரு குறும்பு புன்னகை தோன்ற, "யாரு?" என அனுப்பி வைத்தான்.

என்ன பதில் வரும் என அவனே நினைத்தபடி இருக்க, "யுவர் ஆயா!" என்ற பதிலை எதிர்பார்க்காத விதமாய் முகம் மாற, அடுத்த நொடி அழைத்து விட்டாள் சாரு.

ஓரு நொடியே திகைத்தவன், "பட்டு பட்டுன்னு பாம் வைக்குறா!" என நினைத்தபடி அட்டன் செய்து காதில் வைக்க, முதலில் புசுபுசுவென மூச்சு விடும் சத்தம்.

"என்னை காணும்னு தேடுவிங்களேனு ஃபீல் பண்ணி அனுப்பினா யருன்னா கேட்குற.. வாத்தி! உன் க்ரைம் ரேட் கூடிட்டே போகுது.. பாத்துக்குறேன்..." என்றாள் கோபமாய்.

பதில் பேசாமல் அவன் அமைதியாய் இருக்க, "என்னை தேடவே இல்லையா யா நீங்க?" என்று கேட்க,

"நம்பர் யார்கிட்ட வாங்கின?" என்றான் அது தான் முக்கியம் போல..

"சில்ற கூட சேர்ந்து அவனை மாதிரியே பேசுறிங்க வாத்தி ... கடைக்கு மேல அவ்வளோ பெருசா போர்டு வச்சது யாரு?" என்று கேட்க, தன் தலையில் கொட்டிக் கொண்டான் ஆதி.

"சொல்லுங்க வாத்தி.. நிஜமா என்னை தேடவே இல்லையா? நான்லாம் தினமும் உங்ககிட்ட பேச்சு வாங்கி.. நேத்தும் இன்னைக்கும் உங்களை பாக்காம .. ஷ்யப்பா ஒரே குஸ்டமா போச்சு" என்று கூறவும் அவன் சத்தமில்லாமல் புன்னகைக்க,

"நேத்துக் கூட ஓகே! ஒரு ஃபங்க்ஸன் மோட்ல போயிடுச்சு..இன்னைக்கு தான் ரொம்ப ஃபீலாயிட்டேன்.. சரியா சாப்பிட கூட இல்ல தெரியுமா? வேணா நாள மறுநாள் பாருங்க! ரெண்டு கிலோவாச்சும் குறைஞ்சுருப்பேன்" என்று கூறவும்,

"ஓஹ்! அப்ப அந்த கோழிக் குழம்ப நீ சாப்பிடல அப்படித் தான?" என்றான் நக்கலாய்.

இங்கும் அங்குமாய் மாட்டிக் கொண்டபடி அவள் விழிக்க, அது தெரிந்தது போலவே ஆதி முகத்தில் ரசனையாய் புன்னகை.

"ஆமா! அதென்ன நாள மறுநாள்? நாளைக்கு என்னாச்சு?" என்ற ஆதியின் கேள்வியில் அவன் மாட்டிக் கொண்டான்.

"வாத்தி! அப்ப என்னை தேடுறீங்க தான? சோ ஸ்வீட்" என்று சொல்லவும் முழிப்பது இவன் முறையானது.

"அம்மா ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.. பூ வச்சாச்சாம்.. ரெண்டு நாள் வெளில தல காட்டக் கூடாதாம்" என்றவள்,

"நான் கூட எஸ்ஸாகி உங்களைப் பார்க்க வரலாம்னு நினச்சேன்... அப்புறம் யோசிச்சப்ப நம்மோட நல்லதுக்கு தான சொல்றாங்கன்னு தோணுச்சு.. அதான் வர்ல.. இன்னும் ஒரே நாள் தான்" என்றதில் ஆதிக்கு கூச்சமாகிவிட,

"நான் ஒன்னும் தேடல..சும்மா கேட்டேன்" என்றதே உண்மைக்கு போதுமானதாய் இருந்தது.

"நம்பிட்டேன் வாத்தியாரே! ஃஃப்ரீயா விடுங்க" என்றவள் அவள்பானியில் பேசிக் கொண்டே இருக்க, ஆதிக்கு தான் என்ன பேச என்றே தெரியவில்லை. அவன் பேச அவள் வாய்ப்பும் கொடுப்பதாய் இல்லை.

திருமணம் பற்றிய எந்தப் பேச்சுக்களும் இல்லாமல் அவள் பொதுவாய் பேசிக் கொண்டிருக்க, அவள் பேச்சும் பேசும் விதமும் என அவனை மீண்டும் கவரத்தான் செய்தது.

இப்படியாக நாட்களை அழகாய் வாங்கிக் கொண்டிருந்தது காலம். தேவி எவ்வளவு சொல்லியும் ஆதி கடை முன் நின்று அவனை கிண்டல் செய்ய மறந்ததே இல்லை சாரு. திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு வரையுமே ஆதி சாருவின் நாட்கள் கவிதையாய் தான் சென்று கொண்டிருந்தது.

பார்ப்பவர்கள் கண்களை அறிந்து ஆதி முறைக்கவும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் சாரு விளையாடவுமாய் இருக்க, அந்த ஒரு வாரத்திற்கு முன் சாரு வீட்டின் முன் போடப்பட்ட பந்தல் ஆதியின் வீட்டை மறைத்து நின்றது.

அதில் கூட சாரு மனதில் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்க, அதன் பின் தான் திருமணம் பற்றிய எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாய் அவள் மனதை வேறு ஒரு திசையில் திருப்பி இருந்தது.

அந்த ஒருநாள் அழைப்புக்கு பின் சாரு ஆதிக்கு அழைத்ததே இல்லை. ஆதியும் அதை எதிர்பார்த்ததில்லை.. தினமும் நேரில் சென்று அவன் முன் நின்று வம்பு செய்பவளை அவனுமே அவளறியாமல் ரசிக்கக் கற்றிருந்தான் இந்த இடைப்பட்ட நாட்களில்.

இன்று காலை அதுவும் ஆதி கடையில் அமர்ந்து வேலையில் இருக்கும் நேரம் சாருவிடம் இருந்து அழைப்பு வர, அவள் வீட்டைத் தான் திரும்பிப் பார்த்தான் ஆதி.. அங்கிருந்த பந்தலைப் பார்த்துக் கொண்டே அவன் அழைப்பை ஏற்றூ காதில் வைக்க,

"வாத்தி! நமக்கு கல்யாணமா?" என்றாள் எடுத்ததும். ஒன்றும் புரியாமல் இவன் விழிக்க,

"ஹல்லொ!" என்ற அவளின் குரல் வித்யாசத்தில்,

"எங்க இருக்க? என்னாச்சு?" என்றான் என்னவோ என்ற எண்ணத்தில்.

"மிஸ்ஸஸ் ஆதி இல்ல நான்?" அவள் கேட்க, அங்கே மாரியும் இருந்ததால் சத்தமாய் பேச முடியவில்லை ஆதிக்கு.

"என்னாச்சு உனக்கு?" ஆதி கேட்க, ஏதோ கனவில் பேசுபவள் போல பேசிக் கொண்டிருந்தாள் சாரு.

"எனக்கு என்னவோ மாதிரி இருக்கு ஆதி... நான் மிஸ்ஸஸ் ஆதி.. நல்லாருக்குல்ல?" என்று கேட்கவும் தான் அவள் காதல் என்பதைத் தாண்டி திருமணம் என்ற ஒன்றை யோசிக்க ஆரம்பித்ததை உணர்ந்தான் ஆதி.

"நல்லாருக்குன்னு இப்பவே சொல்லக் கூடாது.. அதுக்கு இன்னும் டைம் இருக்கு" ஆதியுமே அந்த நேரம் சுற்றம் மறந்து இப்படி சொல்ல, மாரி திரும்பி ஆதியைப் பார்த்திருந்தான்.

"இல்ல இப்ப தான் சொல்லனும்.. ஏதோ விளையாட்டா இருந்துட்டேன் இல்ல? ஆனா நிஜமா ஆதின்னா எனக்கு எப்பவுமே ஒரு இஷ்டம்" என்று ஆரம்பிக்க, ஆதிக்கு அவள் உணர்வுகளைக் கூட புரிந்து கொள்ள முடிந்தது.

இப்பொழுது அதை பேசுவதற்கான நேரம் இல்லை என்று ஆதி நிமிர்ந்துப் பார்க்க, மாரி திரும்பிக் கொண்டான்.

"சும்மா எல்லாம் சொல்லல.. காலேஜ் முடிக்கவும் சொல்லனும் தோணுச்சு உங்ககிட்ட வந்து சொல்லிட்டேன்.. அப்ப இருந்து இப்ப வரை அடுத்த ஸ்டேஜ்னு ஒன்னு நான் நினைக்கவே இல்ல போல.. இப்ப நமக்கு மேரெஜ்னும் போது தான்... ஐ ஃபீல் இட்" என்றாள்.

"ஏன் அது இவ்வளவு நாளா தெரிலையா?" என்றவன் எழுந்து வீட்டிற்குள் வந்திருந்தான்.. அவள் குரலும் பேச்சும் வர வைத்திருந்தது.

"என்னவோ திடிர்னு எல்லாம் புதுசா தெரியுது ஆதி" என்றவள் வாத்தி என்ற அழைப்பை மறந்திருந்தாள்.

"பேசுறது சாரு மாதிரி தெரிலையே!" ஆதி கிண்டல் செய்ய, அவள் உணர்வுகளின் பிடியில் இருந்து வெளிவருவதாய் இல்லை.

"ஒன்னு கேட்கவா?" சாரு கேட்க,

"ஏன்ன?" என்றான் அவனும்.

"உங்களுக்கு என்னைப் பிடிக்குமா ஆதி?"

"சீக்கிரமே கேட்டுட்ட?"

"ப்ளீஸ் பதில் சொல்லுங்க"

"ரொம்ப எமொஷனலா இருக்க.. இந்த கேள்விக்கான பதில் இப்ப இல்ல.. கல்யாணத்தன்னைக்கு சொல்றேன்.." என்றவன் அவளை அவளாய் அவன் சாருவாய் மீட்டெடுக்க பேசிக் கொண்டிருந்தான்.


தொடரும்..
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
462
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும்
இதுதானா . .
சாரு💕 ஆதி கியூட் லவ்லி பேர்💐
 

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அந்நாளும்
இதுதானா . .
சாரு💕 ஆதி கியூட் லவ்லி பேர்💐
Thank u so much😍😍😍😍
 
Top