எப்பொழுதும் ஞாயிறு வெளியே செல்லும் சாகித்யா தோழிகள் அன்று சனிக்கிழமை வெளியே செல்ல பிளான் செய்தனர். அதேபோல் அனைவரும் காலை ஒன்றாக கிளம்பி வெளியே சென்றனர்.
முதலில் பக்கத்திலுள்ள ஒரு ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் முடித்து விட்டு, அங்குள்ள மாலில் தங்களுக்கு தேவையான தின்பண்டங்கள் மற்றும் பிற தேவையான விஷயங்களை வாங்க சென்றனர். அனைவரும் தனித்தனியாக பிரிந்து சென்றாலும் மதி அல்லது சுவாதி யாராவது ஒருவர் மாறி மாறி சாகித்யாவுடன் இருக்கத்தான் செய்தனர்.
அவளுக்கு அது வித்தியாசமாகவும் தெரியவில்லை, அதேபோல் அவளுக்கு வாங்கி வேண்டிய பொருள் ஒன்றும் இருக்கவுமில்லை தின்பண்டங்கள் மட்டும் வாங்க வேண்டியது இருந்ததால் அதை கிளம்புவதற்கு சற்று நேரத்துக்கு முன் வாங்கிக் கொள்ளலாம் என்று அமைதியாக அங்கு நடந்த அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணம் முடிந்த பிறகு எப்பொழுதும் அவளுக்கு தேவையான விஷயங்களை ருத்ரன் வாங்கி கொடுத்து விடுவதால், இந்த இரு மாதங்களில் அவளுக்குப் பெரிதாக எந்தவித ஷாப்பிங் வேலை இருந்ததில்லை அதனால் அலட்டிக்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால் அந்த மாலின் உள்ளே வந்ததிலிருந்து யாரோ ஒருவர் அவளை பின் தொடர்வது போலவே அவருடைய உள்ளுணர்வு கூறிக் கொண்டே இருந்தது. ஆனால் சுற்றி முற்றி பார்க்கும் போது யாரும் இல்லாததால் கூட்டமாக இருந்த அந்த இடத்தில் யாராவது நம் பின்னால் வந்திருப்பார்கள் என்று எண்ணிக்கொண்டே, யாரிடமும் கூறாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். யாராவது ஒருவர் அவளுடன் இருக்கவே அவளை பின்தொடர்ந்து வந்த உருவம் கடுப்பாகி அங்கங்கே நின்று கொண்டிருந்தது.
அந்த உருவத்தின் நல்ல நேரமோ என்னவோ அப்போது அவளுடன் இருந்த சுவாதி, அபிஷா ஏதோ விஷயமாக கூப்பிட அவள் பின்னே சென்றாள். சாகித்யா அனைவரின் கண் பார்வையில் இருந்ததால் அவளும் பெரிதாக எடுத்து கொள்ளாமல் சென்று விட்டாள். ஆனால் சிறிது நேரம் அவர்களுடைய வேலையில் பிஸியாக இருக்க சாகித்யாவை கவனிக்கத் தவறி விட்டனர்.
அந்த நேரத்தில் அங்கே தன்னுடைய அக்கா ராஜி போல் ஒருவர் தெரிய அவள் தானா என்று தெரிந்து கொள்ள அங்கே சென்றாள் சாகித்யா. அவளுடைய நினைப்பை பொய் ஆகாமல் ராஜி தான் அங்கே நின்று கொண்டிருந்தாள். ஆனால் வீட்டில் இருக்கும்போது இருந்ததற்கு மாறாக சற்று களைத்துப் போய் தெரிந்தாள். அதை பார்த்த சாகித்யா மனது வலிக்கத்தான் செய்தது. ஏனென்றால் எப்பொழுதும் தன் அழகு மீது கர்வம் கொண்டு தெரியும் தன்னுடைய அக்கா பொலிவிழந்து இருப்பதை பார்க்க கஷ்டமாக இருந்தாலும் அவசரமாக அவள் அருகில் சென்றாள்.
அவ்வளவு நேரம் இவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்த ராஜி தற்போது அவள் தன்னுடைய அருகில் வருவதைப் பார்த்தும் பார்க்காதது போல் தன்னுடைய வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ எடுப்பதற்காக திரும்பியது போல் திரும்பியவள் அங்கு சாகித்யாவை பார்த்து அதிர்ச்சிய ஆவது போல் முகத்தை வைத்து இருந்தாள். முதல்முறையாக தன் தமக்கை ஏதோ தவறு செய்கிறாள் என்பது போல் சாகித்தியாவிற்கு தோன்றியது, ஆனாலும் அதை ஒதுக்கிவிட்டு அவளிடம் பேச முயன்றாள்.
சாகித்யா "அக்கா எப்படி இருக்க? இப்ப எங்க தங்கியிருக்க? கூட யார் இருக்கா? எதுக்காக கல்யாண அன்னைக்கு வீட்டை விட்டு ஓடிப்போன? பிடிக்கலைன்னா வீட்ல சொல்லி இருக்கலாம்ல உனக்கு பிடிக்காத விஷயத்தை கண்டிப்பா நல்லா பண்ண மாட்டாங்க அப்புறம் எதுக்காக இப்படி பண்ண? ஏதாவது காரணம் இருக்கா?" என்று கேட்டாள்.
ராஜி அவள் கேட்ட கேள்வியில் தன்னையே நொந்துகொண்டு அமைதியாக நின்று கொண்டு இருந்தாள். அவள் மனதில் "இவ கேள்விக்கெல்லாம் நம்ம பதில் சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கும் தலை எழுத்து, ஆனாலும் இவளுக்கு இருக்கிற ராசி யாருக்கும் வராது நம்ம இல்ல அப்படின்னா அவனை கல்யாணம் பண்ணி இவ கஷ்டப்படுவா அப்படின்னு பார்த்தா மொத்தமாகவே நமக்கு எதிராக பிளான் பண்ணி பண்ணி இருக்காங்க. இப்போ இவளுக்கு நம்ம மேல பாசம் இருக்கு அதை வச்சு அந்த ருத்ரனே நம்மள வந்து கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி கொண்டு வரணும்" என்று திட்டிக்கொண்டே வெளியே பாவமான முகபாவனையில் அவளைப் பார்த்தாள்.
என்னதான் பாவமாக முகத்தை வைத்திருந்தாலும் ஒரு சில நொடிகள் அவளுடைய முகம் மாறிய போக்கில் பார்த்துக்கொண்ட சாகித்யா மனது ஒரு கணக்குப் போட்டுக் கொண்டது. ஆனாலும் அவளுடைய பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்.
அவள் தன்னுடைய பதிலுக்காக காத்து கொண்டு இருக்கிறாள் என்பதை புரிந்துகொண்ட ராஜி சாகித்யா முகத்தைப் பார்க்காமல் கீழே குனிந்து கொண்டாள். அவளுடைய தலைகுனிவை வைத்தே அவருடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட சாகித்தியா கீழே தனியாக அமைந்து இருந்த பார்க் போன்ற இடத்திற்கு அவளை அழைத்து சென்றாள். அவளும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் அவளுடன் வந்தாள்.
யாரும் இல்லாமல் தனியே வந்த பிறகு சாகித்யா முகத்தை பார்த்த ராஜி "சாகி உண்மையிலேயே நான் விருப்பப்பட்டு அந்த கல்யாணத்தை விட்டு ஓடிப் போகல. என்ன அங்க இருந்து ஓடி போக வச்சாங்க எனக்கு காதலன் அப்படின்னு யாருமே கிடையாது. உண்மையாவே எனக்கு பார்த்து இருந்த மாப்பிள்ளை தான் நான் காதலிச்சேன். உனக்கே தெரியும் அப்படி எனக்கு காதல் ஏதாவது இருந்தா நான் வீட்ல சொல்லி அவனையே கல்யாணம் பண்ணி இருப்பேன். தேவையில்லாம இந்த கல்யாணத்துக்கு ஓகே சொல்லி எதுக்கு கடைசி நிமிஷத்துல நான் வீட்டை விட்டு ஓடி போகணும், நல்லா யோசிச்சு பாரு எனக்கு எப்போ வீட்ல கல்யாணம் பேச ஆரம்பிச்சாங்களோ அப்ப இருந்து நான் வீட்டில பார்க்கிற மாப்பிள்ளை மட்டும் தான் புரிஞ்சி காதலிக்கணும் அப்படின்னு யோசிப்பேன்.
அதே மாதிரிதான் வீட்டிலேயும் மாப்பிள்ளை பார்த்து தந்தாங்க எனக்கு பிடிக்காமல் இருந்து இருந்தால் கண்டிப்பா இந்த மாப்பிள்ளைக்கு வீட்ல ஓகே சொல்லி இருக்க மாட்டாங்க எனக்கு பிடிச்சு இருந்துச்சு. அதனாலதான் நானும் ஒத்துக்கிட்டேன், கல்யாணத்துக்கு முன்னாடி பேசி பழக முயற்சி செய்யலாம்னு தோணும் ஆனா அவங்க பேசாம நம்ம பேசினா ஏதாவது தப்பா ஆயிடும்னு நான் அமைதியா இருந்திட்டேன். ஆனா கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி எனக்கு ஒரு போன் கால் வந்தது. அதுல நான் மட்டும் இந்த கல்யாணத்த நிறுத்தாம இருந்தேன் அப்படின்னு சொன்னா நம்ம வீட்டுல உள்ளவங்க உயிருக்கு ஆபத்து அப்படின்னு சொன்னாங்க. நான் வீட்டுல சொல்லி கல்யாணத்தை நிப்பாட்டுறேன் அப்படின்னு சொல்லும்போது அதை பண்ணினா பாலாவை ஏதாவது பண்ணி விடுவேன் அப்படின்னு சொன்னாங்க. அப்ப அதுக்கு நான் என்ன பண்ணனும்னு கேட்கும்போது கல்யாண அன்னைக்கு காலைல ஏன் அந்த மண்டபத்தை விட்டு போக சொன்னாங்க. அப்பதான் ருத்ரன் குடும்பம் அவமானப்பட்டு நிற்கும் அது தான் அவங்களுக்கு வேணும்னு சொன்னாங்க. நான் அதற்கு நான் இல்லனா என்னோட தங்கச்சியை பிடித்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க அப்படின்னா என்ன பண்ண அப்படின்னு கேட்டதுக்கு உனக்கு ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாகவும் கண்டிப்பா இந்த கல்யாணத்தை ஒத்துக்க மாட்டே அப்படின்னு சொன்னாங்க. அந்த நம்பிக்கையில்தான் நான் வீட்டைவிட்டு போனேன். எல்லாருடைய உயிருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கணும் அப்படின்னு நினைச்சு தான் இந்த முடிவை எடுத்தேன்.
ஆனா நான் எதிர்பார்க்காத விஷயமா உனக்கு கல்யாணம் ஆகி இருக்கு உன்ன அந்த வீட்ல ஏதாவது கொடுமை படுகிறார்களா? அப்படி ஏதாவது பண்ண அதுக்கு காரணம் நான் தானே தயவு செஞ்சு என்னை மன்னிச்சிரு, உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் நானே வந்து எல்லா உண்மையையும் சொல்லி உன்னை காப்பாத்தி கூட்டிட்டு போறேன். நீ கவலை படாதே நானா வரவரைக்கும் என்ன பார்த்த எந்த விஷயத்தையும் நீ யார்கிட்டயும் சொல்லாத" என்று கூறினாள்.
அவள் கூறியதை முழுமையாக கேட்டே சாகித்யா மனதில் நிறைய கேள்விகள் எழுந்தது. ஆனால் ஏதோ ஒன்று முன்னுக்குப்பின் முரணாக இருப்பது போல் தோன்றியது. அதனால் அந்த யோசனையுடனே ராஜி இருக்கும் இடம் பார்த்து "கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன் ஆனா இந்த செமஸ்டர் லீவ்ல நான் என்னோட பிரெண்ட்ஸ் கூட அவங்க ஊர் திருவிழாவுக்கு போறேன். நீ வேணும்னா அந்த நேரம் வீட்டுல போய் பேசி எல்லாரையும் சரி பண்ணு நான் வந்து மற்றதை பார்த்துகிறேன். இப்ப என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வெயிட் பண்றாங்க நான் கெளம்புறேன்" என்று கூறியவள், அவளைப் பார்த்து ஒரு தலையசைப்பு கொடுத்து தன் தோழிகள் இருக்கும் இடம் சென்று விட்டாள்.
அவள் குழம்பிய முகத்துடன் செல்வதை பார்த்த ராஜீ மனதிற்குள் "போடி போ அவ்வளவு சீக்கிரம் நீ நல்லா வாழ்ந்து என்னோட மூஞ்சில கரியை பூச நான் விட்டுவிட மாட்டேன். உன்னோட புருஷன் வீட்டுல உன் மேல எல்லாருக்கும் ரொம்ப பாசம் போல பொத்தி பொத்தி பாதுகாக்கிறார்கள். இனிதான் உன்னோட வாழ்க்கையில் சூனியம் வர ஆரம்பிக்க போகுது, திருவிழா கொண்டாட நீ ஊருக்கு போ அந்த நேரத்துல நான் பார்க்க வேண்டியது வேலையெல்லாம் பார்க்கிறேன்" என்று எண்ணியவள்.
தன் வீட்டை விட்டு வெளியே சென்ற உடன் நடந்த அனைத்தையும் நினைத்து பார்க்க ஆரம்பித்தாள். ஆனால் அவளுக்கு அப்போது தெரியவில்லை தான் நினைத்தது அனைத்திற்கும் நேர்மாறாக நடக்க இருப்பது.
ராஜி கூறிய அனைத்தையும் யோசித்துக் கொண்டே தன் நண்பர்கள் இருக்குமிடம் வந்தாள் சாகித்யா. இதற்கிடையில் சாகித்யாவை தேடிய மதி அவள் யாருடனும் இல்லாமல் போகவே பயந்து அந்த மால் முழுவதும் தேட ஆரம்பித்தாள். மதி தேட ஆரம்பித்த சிறிது நேரத்தில் அங்கு வந்த சாகித்யா அவள் தன்னைத் தேடிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவள் அருகில் சென்றாள்.
அவளைப் பார்த்த பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்ட மதி அவளிடம் "எங்க போன? எங்க போனாலும் சொல்லிட்டு போனா என்ன? இவ்வளவு நேரம் நீ எங்க போன அந்த தேடிட்டு இருந்தோம்" என்று கேட்டாள்.
அதற்கு சாகித்தியா "நான் என்ன சின்ன பிள்ளையா நீங்க எல்லாரும் உங்களோட வேலையில பிஸியா இருந்தீங்க. அதனால நான் கீழே இருந்த பார்க் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வரேன். வேற எங்கேயும் போகல, நீ கவலைப்படாதே வா போய் தேவையான ஸ்னாக்ஸ் வாங்கிட்டு மதியம் சாப்பிட்டுட்டு ஹாஸ்டல் போய் சேருவோம்" என்று சொல்லி அவளையும் உடன் அழைத்தாள்.
ஆனால் தூரத்தில் வரும்போதே அவளுடைய முகம் குழம்பி பின்பு சிறிது தெளிந்து நார்மலாக இருந்ததை பார்த்த மதி அதற்கு மேல் அவளை கேள்வி கேட்க விரும்பாமல், மற்ற தோழிகள் அனைவருக்கும் அலைபேசி வாயிலாக தாங்கள் செல்ல இருக்கும் இடத்தை கூறிவிட்டு அவனுடன் சென்றாள்.
இருவரும் ஒன்றாக சேர்ந்து தேவையான தின்பண்டங்கள் அனைத்தையும் வாங்கி விட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட சென்றனர். அனைவரும் சாப்பாடு ஆர்டர் கொடுத்துவிட்டு அமர்ந்திருந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் வந்து சேர்ந்தான் தர்ஷன்.
ஊருக்கு சென்றிருந்த அவன் எவ்வாறு இங்கே வந்தான் என்று புரியாமல் அனைவரும் யோசித்துக் கொண்டிருந்த நேரத்தில் இவர்கள் அருகே வந்து அமர்ந்துகொண்டான் தர்ஷன். சாகித்யா அந்த ஓரத்தில் இருந்ததால் அவனால் அவள் அருகில் அமர முடியவில்லை. அவளுக்கு அடுத்து மதி பிந்து இருவரும் அமர்ந்து இருந்தனர். அதேநேரம் எதிர் இருக்கையில் ஓரத்தில் சுவாதி அபிஷா அர்ச்சனா அடுத்து சந்தியா இன்று அமர்ந்து இருந்தனர். அதனால் தர்ஷனுக்கு இடம் பிந்து அருகிலேயே கிடைத்தது. கண்டிப்பாக அர்ச்சனா சந்தியா தவிர வேறு யாரும் இடத்தை மாற்றி தர மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட காரணத்தினால் அவன் அமைதியாக இருந்துவிட்டான்
அவன் வந்தது பிடிக்காமல் சாகித்யா யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் சாப்பாடு வந்தவுடன் அதிலேயே கண்ணாக இருந்தாள். அதைப் புரிந்து கொண்ட தர்ஷன் சத்தமாக "யார் என்னை வேண்டாம் என்று நினைத்தாலும் நான் அவர்களை விட மாட்டேன் கண்டிப்பாக தனக்கு உரிமையானது என்று எண்ணுவது தனக்கு துரோகம் செய்கிறது என்று தெரிந்தால் நிச்சயமாக அதை தூக்கி எறிந்துவிட்டு உண்மையான அன்பை தேடி வர தான் செய்வார்கள். அதற்கான நேரம் அருகில் வந்துவிட்டது என்பதை நானறிவேன் அதனால் அது நடக்கும் வரை பொறுமையாக காத்திருப்பேன்" என்று கூறி விட்டு சாப்பிட்டு முடித்தவுடன் கிளம்பி சென்றுவிட்டான்.
அவன் கூறி சென்றது சாகித்யா தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் சாகித்யா முகம் முற்றிலுமாக குழப்பத்திலிருந்து தெளிவு பெற்று இருந்தது முதலில் கலக்கமாக அவளது முகத்தைப் பார்த்த மதி அவளுடைய தெளிவு பெற்ற முகத்தில் இன்று என்னமோ நடந்திருக்கிறது என்பதை யூகித்து விட்டாள். இருந்தாலும் அமைதியாக இருந்துவிட்டாள் ஏனென்றால் நிச்சயம் இதற்கான விடை கூடிய விரைவில் தெரிய வரும் என்பதனை அவளும் அறிந்து இருந்ததால், அமைதியாக சாப்பிடும் வேலையை மட்டும் பார்த்தால் பெண்கள் அனைவரும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து அதை சாப்பிட்டுவிட்டு ஹாஸ்டல் வந்து சேர்ந்தனர். ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக தூங்கி எழுந்து மாலை சாதனா வந்தவுடன் அவரிடம் சிறிது நேரம் நேரத்தைச் செலவிட்டு விட்டு அன்றைய நாளை பிடித்தனர்.
மறுநாள் கல்லூரி செல்லும்போது மதி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சாதனாவின் காதுகளில் கூறிவிட்டாள். அதைக் கேட்ட சாதனா "அய்யோ இவ யார பார்த்து பேசினா அப்படின்னு தெரியலையே, ஆனா ஏதோ ஒரு முடிவு தெளிவா எடுத்துட்டா அது மட்டும் நல்லா தெரியுது இதுல மாட்ட போறது என்னோட அண்ணன் மட்டும் இல்ல நானும் தான். இவள் குழப்பமாக இருந்த நேரத்திலேயே அவ்வளவு விஷயத்தை யோசித்து இருந்தாள். இப்போது என்னவெல்லாம் யோசித்து இருக்கிறா என்றும் தெரியவில்லை, இடையில் அமைதியாக இருந்த தர்ஷன் மீண்டும் வர காரணம் என்ன எனக்குத் தெரிந்து இது அனைத்திற்கும் காரணம் அவளுடைய அக்கா ராஜி தான். ஆனால் அவளுடைய பேச்சு எவ்வாறு இருந்தது என்று தெரியவில்லையே" என்று வாய் விட்டே புலம்பிக்கொண்டு வகுப்பறை வந்து சேர்ந்தாள்.
அதன்பிறகு சாகித்யா பழைய குறும்புத்தனம் மற்றும் படிப்பில் சுட்டி என்று முதல் வருடம் எவ்வாறு இருந்தாலும் அதேபோல் மாறி வந்தாள். ஆனால் அர்ச்சனா சந்தியா ஏதாவது தவறு செய்தால் அவர்களை காப்பாற்றாமல் இருந்துவிட்டாள் அதற்கு முக்கிய காரணம் சாதனா ஒருநாள் பிரச்சனையில் காப்பாற்ற செல்ல நினைக்கும் போது சாதனா அவளைப்பார்த்து "இப்படியே நீ ஒவ்வொரு பிரச்சனையிலும் காப்பாத்திட்டு இருந்தா, அவங்க பிரச்சனை பண்ணிக்கிட்டே தான் இருப்பாங்க அதனால உனக்கு தான் பிரச்சனை வரும் ஒரு பிரச்சினையை நீ சமாளிக்க விட்டா அவங்களே அதுக்கப்புறம் பிரச்சனை பண்ண மாட்டாங்க. பனிஷ்மென்ட் என்ன பெருசா வாங்க போறாங்க நீ அமைதியா இரு" என்று கூறி அடக்கி வைத்துவிட்டாள்.
அதன் பிறகு அவர்களும் எந்த வித பிரச்சனையையும் செய்யாமல் அமைதியாக இருந்து கொண்டனர். ஒவ்வொரு நாளும் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தன் பிறந்த வீட்டினர் மற்றும் புகுந்த வீட்டினர் அனைவரிடமும் பகிர்வதில் சாகித்யா எந்தவித தடையும் வைத்ததில்லை. தர்ஷன் பொறுமையாக காத்திருக்க நினைத்த காரணத்தால் அவனும் அமைதியாக இருந்துவிட்டான். இப்படியே நாட்கள் ஓட அந்த பருவம் முடிந்து பருவத்தேர்வு வருவதற்கான நாளும் நெருங்கியது.
அதனால் அனைவரும் தங்களது படிப்புகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். எந்த ஒரு தடையும் இல்லாமல் பிரச்சனையும் இல்லாமல் அனைவரும் நன்றாக தேர்வு எழுதி முடித்திருந்தனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் சாதனா பாட்டி ஊருக்கு கோவில் திருவிழாவிற்கு செல்வதற்கு அனைத்து தோழிகளும் வீட்டில் அனுமதி பெற்றிருந்தனர். சாகித்யா வீட்டில் அனுமதி பெற யோசிக்கும்போது சாதனா போன் செய்து தனியாக சென்று பேசி வந்தவள், சம்மதம் சொல்லி விட்டதாக கூறினாள். அதைக் கேட்டு அவளை சந்தேகமாக பார்த்த சாகித்யா பின்பு சரி என்று மகிழ்ச்சியாக ஒத்துக் கொண்டாள்.
அப்படி இப்படியுமாக அனைவரும் திருவிழா செல்வதற்கான நாளும் விடிந்தது.
அடுத்த பாகத்தில் திருவிழா பற்றியும் சாகியின் குழப்பங்கள் அனைத்திற்கும் ஒவ்வொன்றாக விடை கிடைப்பதையும் பார்க்கலாம். அதனுடன் ராஜியின் கடந்தகால வாழ்க்கை அதாவது திருமணம் முடிந்து சென்றவுடன் என்ன நடந்தது என்பதை பற்றியும் பார்க்கலாம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்