• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 12

Aashmi S

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
156
100
43
Kanyakumari
ருத்ரன் அசோக் மற்றும் விக்னேஷ் காலையிலேயே கோயில் திருவிழாவிற்கு கிளம்பி வந்து விட்டனர். அவர்கள் பெற்றோரை வீட்டில் விட்டுவிட்டு அவர்கள் மட்டும் கோவிலுக்கு வந்திருந்தனர். அதற்கு முக்கிய காரணம் பெண்கள் அனைவரும் கோயிலுக்கு வந்திருந்ததால், ஏனென்றால் வருண் மற்றும் அவனுடைய நண்பர்களுக்கும் இவர்களுக்கும் எப்பொழுதும் நல்ல விதமாக சென்றது இல்லை. அதனாலேயே எப்பொழுது ஊருக்கு வந்தாலும் சாதனாவை தனியே விடாமல் யாராவது ஒருவர் அவளுடன் சென்று கொண்டே இருப்பர்.



அதனால் தான் காலையிலேயே வந்தவர்கள் அவசரமாக கோவிலுக்கு கிளம்பி வந்து விட்டனர். அவர்கள் நினைத்தது போல் வரும் தன் நண்பர்களோடு சாகித்யா மற்றும் சாதனா இருவரிடமும் வம்பு இழுத்துக் கொண்டிருந்தான். அதனாலேயே அவசரமாக அவர்கள் இருக்குமிடம் சென்றனர்.


இவர்களைப் பார்த்த வருண் ஏதோ கூற வாய் திறப்பதற்கு முன்பு சாகித்யா அவர்களைப் பார்த்து "ஒரு நிமிஷம் இன்னும் கொஞ்ச பேர் வர வேண்டியது இருக்கு, அவங்களையும் போன் பண்ணி கூப்பிடுறேன் அதுக்கப்புறம் நீ என்ன டயலாக் பேசணும் என்றாலும் பேசு எல்லாரும் பொறுமையா கேட்கிறோம் சரியா" என்று கூறிவிட்டு தன்னுடைய அண்ணன் சக்திக்கு அழைத்தாள்.



அவன் அந்தப் பக்கம் அழைப்பு அட்டன் செய்ய "அண்ணா நீயும் உன்னோட மச்சான் ரெண்டு பேரும் கோயில் திருவிழாவில் தான் இருக்க அப்படின்னு எனக்கு தெரியும் ஒழுங்கு மரியாதையா நாங்க எல்லாரும் இருக்கிற இடத்துக்கு வந்துரு இல்லன்னா எனக்கு என்ன தோணுதோ அதை நான் பண்ணுவேன். அதே மாதிரி சத்யா கிட்ட சொல்லிரு எவ்வளவு வருஷம் ஆனாலும் சாந்தினி அவனுக்கு கிடைக்கவே மாட்டா. அவனுக்கு சாந்தினி வேணும் அப்படின்னா ஒழுங்கு மரியாதையா அமைதியா இங்க வந்துரு" என்று கூறி விட்டு போனை வைத்து விட்டாள்.



அவள் கூறியதை கேட்ட அசோக் மற்றும் விக்னேஷ் சாதனாவை பார்க்க அவள் ஒரு புன்னகையை மட்டும் அவர்களுக்கு வழங்கினாள். அதை வைத்தே அனைத்தையும் சாகித்யா கண்டுபிடித்துவிட்டாள் என்று நினைத்து சிரித்துக் கொண்டே அமைதியாக நின்றனர். ருத்ரன் ஏற்கனவே அவள் கண்டுபிடித்து விடுவா என்று அறிந்து இருந்தான்.



ஏனென்றால் அவள் குழப்பத்தில் இருக்கும்போது மட்டுமே எதுவும் யோசிக்காமல் இருப்பாள். அதே மாதிரி குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வா எப்போது குழப்பத்திலிருந்து அவள் யோசிக்க ஆரம்பித்தாளோ அப்பொழுதே அவள் அனைத்தையும் கண்டுபிடித்து விடுவா என்பதை அறிந்திருந்தான். ஆனாலும் அவள் இன்னும் தெரியவேண்டிய விஷயம் இருக்கிறது என்பதையும் அவன் அறிவான். அதனால் அமைதியாக தன்னுடைய மனைவியை ரசித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான்.



அவள் கூறியதை வைத்தே தன்னுடைய தங்கை ஏதோ ஒன்றை தெரிந்து கொண்டு விட்டாள் என்பதை அறிந்தவன், சத்யா மற்றும் பாலாவை அழைத்து கொண்டு அவர்கள் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.
அனைவரும் வந்து சேர்ந்து விட்டனர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட சாகித்யா தற்போது வருனை பார்த்து "நீ இப்ப ஆரம்பிக்கலாம் எல்லாரும் வந்தாச்சு ஸ்டார்ட் பண்ணு வழக்கமா வில்லன் பேசுற டயலாக் எல்லாம் பேசு" என்று கூறினாள். அவள் கூறியதைக் கேட்ட சாதனா சத்தமில்லாமல் சிரிக்க ஆரம்பித்தாள்.
சாகித்யா கூறிய தோரணையில் கடுப்பான வருண் அவளை முறைத்து பார்க்க ஆரம்பித்தான்.



அவனுடைய பார்வைக்குப் பதிலாக அங்கிருந்த அனைவரும் அவனை முறைக்க ஆரம்பிக்க, அவன் கடுப்போடு எதுவும் பேசாமல் தன்னுடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
சரியாக அந்த நேரம் அவளின் தோழிகள் அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர். அனைவரும் ஒன்றாக நிற்பதைப் பார்த்து குழம்பிய மதி சாதனாவை கேள்வியாக பார்த்தாள். அதைப்பார்த்த சாகித்யா "வீட்டுக்கு போய் எல்லாத்தையும் பேசிக்கலாம் இங்க வச்சு எதுவும் பேச வேண்டாம் போவோமா?" என்று கேட்டாள்.
அவள் கூறிய தோரணை அர்ச்சனா மற்றும் சந்தியா இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.



மற்றவர்களுக்கு தான் மனதில் ஒரு பயம் வர ஆரம்பித்தது. ஆனால் சாதனா மற்றும் ருத்ரன், அசோக், விக்னேஷ் சக்தி, சத்யா, பாலா எதுவும் கண்டுகொள்ளாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தனர்.
அதன்பிறகு அனைவரும் ஒன்றாக வீடு வந்து சேர்ந்தனர். அங்கு அவளுடைய மாமா அத்தையை பார்த்தவள் "வாங்க மாமா அத்தை எப்ப வந்தீங்க சாப்பிட்டீங்களா ரெஸ்ட் எடுத்தீர்களா?" என்று வழக்கமாக விசாரிக்கும் விசாரிப்புகள் அனைத்தையும் விசாரித்துவிட்டு அவர்கள் அருகில் அமர்ந்தாள்.



அவர்களும் அவளுடைய தலையை தடவிக் கொடுத்து விட்டு "நாங்க சாப்பிட்டோம் நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க" என்று கூறி அனுப்பி வைத்தனர்.



அதன்பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை சாப்பிட ஆரம்பித்தனர். சாப்பிட்டு முடிக்கும் வரை சாகித்யா எந்த ஒரு கேள்வியையும் கேட்கவில்லை அவள் கேட்க மாட்டாள் என்பது அறிந்த அனைவரும் அமைதியாக சாப்பிட்டு முடித்தனர்.



அனைவரும் சாப்பிட்டு முடித்து எழுந்து கூட்டத்திற்கு வந்த நேரத்தில் தர்ஷன் அந்த வீட்டிற்கு வந்தான். அவனை பார்த்த சாகித்யா "நீயும் இங்க இருக்கணும் அதுக்காக தான் உன்னையும் உங்க இங்க வர சொல்லி நானே சொன்னேன்" என்று கூறினாள்.


அவன் ஏற்கனவே "இவள் எதற்காக தன்னை இங்கே வர வைத்தாள் என்ற யோசனையிலேயே வந்தவன், இங்கு அனைவரையும் பார்த்து ஏதோ ஒரு முடிவு எடுக்கப் போகிறா என்பதை உணர்ந்து கொண்டான். ஆனால் அது தனக்கு சாதகமாக அமையுமா" என்று தெரியாமல் அனைவரும் நின்ற இடத்திற்கு அருகில் சென்று அவர்களுக்கு சற்று தொலைவில் நின்று கொண்டான்.



பெரியவர்கள் அனைவரும் தங்களுடைய அறைகளில் சாப்பிட்டு முடிந்து தஞ்சமடைந்தது இருந்ததால், இவர்கள் மட்டுமே அந்த கூட்டத்தில் நின்று இருந்தனர்.



சாகித்யா யாரையும் பார்க்காமல் நேராக சாதனாவிடம் சென்று "உங்கிட்ட தான் என்னோட குழப்பம், கேள்வி எல்லாத்துக்கும் பதில் இருக்கு நான் ஏற்கனவே எனக்கு இருந்த குழப்பம் எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டேன், நீ அதுக்கான பதில் எல்லாம் எனக்கு இப்ப சொல்லு. ஆனா எனக்கு புரியாத ஒரு விஷயம் உனக்கும் எனக்கும் என்ன பிரச்சனை? எதுக்காக நீ இப்படி பண்ண உண்மையாவே பழிவாங்க தான் இந்த கல்யாணமா கொஞ்சம் பதில் சொல்ல முடியுமா?" என்று கேட்டாள்.



சாதனா மனதில் கண்டிப்பாக தான் பதில் கூறாமல் இவளுக்கு எப்படி உண்மை தெரிந்தது என்ற விஷயத்தை இவள் கூறப்போவதில்லை, என்று எண்ணிக்கொண்டு "சரி சொல்றேன் ஆனா உண்மையா இந்த கல்யாணம் பழிவாங்க நடந்த கல்யாணம் கிடையாது. முழுக்க முழுக்க உன்ன எங்க வீட்டு மருமகளாக கொண்டு வரணும்னு முடிவு பண்ணி பண்ண கல்யாணம். அதே மாதிரி நான் சொன்னேன் அப்படி என்கிற ஒரே காரணத்துக்காக இந்த கல்யாணம் நடக்கல நீதான் எங்க வீட்டு மருமக அப்படின்னு ஆறு மாசத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணி நடந்த கல்யாணம்" என்று கூறி சற்று நிறுத்தினாள்.



அந்த இடைவேளையில் சாகித்யா "அப்ப எதுக்காக உங்க அண்ணனுக்கு என் அக்கா ராஜியை பொண்ணு கேட்டு வந்தீங்க? உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் விளையாட்டா போய் இருக்குது, நீங்க சொன்னது எல்லாமே பொய். உங்களோட பணம் அந்தஸ்து எல்லாத்தையுமே மாத்தி சொல்லி இருக்கீங்க.


அதுமட்டுமில்லாம இப்போ என்னதான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு முடிவு பண்ணி வந்திருந்தா தான் சொல்றீங்க, ஆனா நடந்தது எல்லாம் பொண்ணு பார்க்க வந்தது நிச்சயம் பண்றது எல்லாம் இன்னொருத்தி கூட ஏன் அப்படி எதுக்கு இந்த நாடகம்?" என்று கோபமாக கேட்டாள்.



அவளுடைய கோபமான முகத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். ஏனென்றால் கோபத்தில் முகம் சிவந்து அவன் கண்களுக்கு அழகு தேவதை போல தெரிந்து கொண்டிருந்தாள். அதைப்பார்த்த சாதனா சிரித்துக்கொண்டே நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தாள்.



சாதனா "நான் உன்னை பஸ்ட் பார்த்தது நம்ம காலேஜ்ல வச்சு தான், ஆனா எனக்கு உன்னை பார்த்த உடனேயே ரொம்ப பிடிச்சு போச்சு அதுக்கு காரணம் எல்லாம் எனக்கு தெரியல, அதனால உன் கிட்ட வந்து பேச முயற்சி செஞ்சேன். ஆனா அதுக்குள்ள நீ கிளம்பி போயிட்டே எப்பவுமே உன்ன நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஓம் தூரத்திலிருந்து பார்த்துட்டு தான் இருப்போம். நீ உன்னோட ஃப்ரண்ட பார்த்ததும் சந்தோஷமான அதையும் நாங்க பார்த்தோம். அதே மாதிரி உனக்கு சேர்ந்த ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எப்படி அப்படிங்கறது எங்களுக்கு தெரியும். ஒவ்வொரு தடவையும் நாங்க உன்கிட்ட பேச வரும் போதெல்லாம் அவங்க ஏதாவது ஒரு பிரச்சினை பண்ணி அது வேற மாதிரி போயிடும். அதனால நாங்க யாருமே உன்கிட்ட டைரக்டா வந்து பேசினது கிடையாது. ஆனால் நீ எனக்கு அண்ணியா வந்தா நல்லா இருக்கும் அப்படிங்கிற எண்ணம் எனக்கு எப்பவுமே இருக்கும்.



ஆனா அந்த ஆசை எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி போட்டது நீதான்" என்று கூறினாள். அவள் தன்னை கூறுவதை பார்த்த சாகித்யா எப்படி என்ற ரீதியில் அவளுடைய முகத்தை பார்த்தாள்.


அவளுடைய பார்வையை புரிந்துகொண்ட சாதனா பதில் பேச ஆரம்பித்தாள் "தர்ஷன் உன்கிட்ட வந்து அவனோட காதலை சொல்லும்போது நீ அவனை காதலிக்க ஆரம்பிக்கவே இல்லை அது எங்க எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஆனா இதுவரைக்கும் இருந்த ஒரு உண்மையான பிரெண்ட்ஷிப் விட்டுப் போய்விடக்கூடாது அப்படிங்கற காரணத்துக்காக நீ சரின்னு சொன்ன. அதையே ஒரு வாய்ப்பை பயன்படுத்தி நீயும் அவனும் காதலிக்கிற அப்படின்னு அவனும் தான்னோட பிரெண்ட்ஸ் மூலமாக காலேஜ் ஃபுல்லா பரப்பினான். அதேபோல உன்னோட ஃப்ரண்ட்சா இருக்கிற ரெண்டு பேரும் யார் யார் கிட்ட சொல்ல முடியுமா எல்லார்கிட்டயும் சொன்னாங்க. எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வரும் போது நீ உண்மையா அவன காதலிச்சா பிரச்சனை இல்ல அதே மாதிரி உன்னோட ஃப்ரண்ட் உனக்கு கணவனாக இதுல எந்த பிரச்சனையும் எங்களுக்கு தெரியல அதனால நாங்களும் அமைதியா இருந்தோம்.



ஆனா எப்ப நீ உன்னை அறியாமல் என்னோட அண்ணனை ரசிக்க ஆரம்பித்தாயோ அப்பவே என்னோட ஆசை கொஞ்சமா வளர ஆரம்பிச்சது. அவனுக்கே தெரியாமல் அவனை நீ போட்டோ எடுத்து ரசித்த விஷயத்தை நான் பார்த்தேன். ஏன்னா நாங்களும் உன்னோட பின்னாடி தான் நின்னுட்டு இருந்தோம். ஆனா நீ தப்பா புரிஞ்சுகிட்டு அண்ணன அடிக்கும்போது உனக்கு அவன் மேல நல்லவிதமான அபிப்ராயம் வரல அப்படின்னு பயப்பட்டேன். ஆனா அது உண்மை இல்லை நீ தப்பா புரிஞ்சுகிட்ட அப்படிங்கற விஷயத்தை நீ உடனே புரிஞ்சுகிட்டே, அது கூட எனக்கு கிடைச்ச ஒரு நல்ல சந்தர்ப்பம் நீ ஏன் அண்ணன நினைச்சு பயந்தது.



ஏன்னா ஒரு மனுஷன் பயத்துல இருக்கும்போது வேற எதை பத்தியும் அவனுக்குத் தெளிவாக சிந்திக்க முடியாது. ஆனா நான் கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணது உன் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் தான். என்னோட வீட்டுல என்னோட அண்ணனுக்கு பொண்ணு பாத்துட்டு தான் இருந்தாங்க. அன்னைக்கும் அதே மாதிரி ஒரு அலையன்ஸ் வந்துச்சு நான் அப்போதான் உன்ன பத்தி வீட்டில் சொல்லனும்னு நினைச்சுட்டு போனேன். ஆனா எங்க நேரமோ இல்ல உன்னோட நேரமோ தெரியல அந்த போட்டோல இருந்தது நீ உன்னோட அக்கா இல்ல" என்று கூறி நிறுத்தினாள்.



அதைக்கேட்ட சாகித்யா "இது எப்படி சாத்தியம் என்னோட போட்டோவை எந்த புரோக்கர் கிட்டயும் என் வீட்ல குடுக்கல, அக்கா போட்டோ மட்டும் தான் குடுத்தாங்க. என்னோட போட்டோ எப்படி உங்க வீட்டுக்கு வந்துச்சு நம்புற மாதிரி சொல்லு" என்று மேலும் கொந்தளித்தாள்.



அதைக் கேட்ட சாதனா சிரித்தபடி தன்னுடைய அண்ணனை பார்த்தாள். அவன் தன்னுடைய பர்சில் பத்திரமாக வைத்திருந்த அவளுடைய போட்டோவை எடுத்து கொடுத்தான். சாதனா அதைக் கொண்டு வந்து சாகித்யா கைகளில் கொடுத்தாள். அதைப் பார்த்த சாகித்யா அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றாள். ஏனென்றால் அது முதன் முதலில் அவள் புடவை கட்டிய புகைப்படம் வலுக்கட்டாயமாக போட்டோ எடுத்தது ராஜி மட்டுமே மற்ற போட்டோ அனைத்திலுமே யாராவது ஒருவர் அவளுடன் இருப்பர்.



ஆனால் தனியாக நிற்க வைத்து ஒரு போட்டோ வேண்டும் என்று அடம்பிடித்து ராஜி கேட்டதால் அவளும் ஒத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க அனுமதித்தாள். ஆனால் அதை ஒரு முறை மட்டுமே அவருடைய போனில் பார்த்திருக்கிறாள். அதன் பிறகு அதை பிரேம் செய்வதற்கு கேட்டபோது கூட அவள் கொடுக்க மறுத்துவிட்டாள்.



அதை பார்த்தபோது தான் அவளுக்கு ஒரு விஷயம் விளங்க ஆரம்பித்தது, இது அனைத்திற்கும் மூல காரணம் தன்னுடைய அக்கா என்பது இன்னும் என்னவெல்லாம் இருக்கிறது என்ற ரீதியில் அவள் சாதனா மற்றும் ருத்ரனை பார்த்தாள்.



அவளுடைய பார்வையை புரிந்து கொண்ட ருத்ரன் அவள் அருகில் வந்து தோளோடு அணைத்து அங்கிருந்த சோபாவில் அமர வைத்தான். பின்பு குடிக்க தண்ணீர் கொடுத்து அவளை ஆசுவாசப்படுத்தி விட்டு சாதனா மேலே சொல்லுமாறு கண்ணை அசைத்தான்.



அதைப் புரிந்து கொண்ட சாதனா மேலே கூற ஆரம்பித்தாள் "உன்னோட அக்கா அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க கொடுத்திருந்த போட்டோ எல்லாத்தையும் மாத்தி உன்னோட போட்டோவ கொடுத்து விட்டாள். உன் வீட்டுக்கு வர்றே மாப்பிள்ளைல எந்த மாப்பிள பணக்காரனா இருக்கிறானோ அல்லது வசதி படைத்தவனாக இருக்கிறானோ அந்த மாப்பிள்ளை வரும்போது மட்டும் பொண்ணு மாறிவிட்டதாக கூறி அவள் கல்யாணம் செய்துக்க முடிவுசெய்தாள்.



அதன்படிதான் உன்னுடைய போட்டோ எங்கள் வீட்டிற்கு வந்தது. ஆனால் உனக்கு மாப்பிள்ளை பார்க்கவில்லை என்ற விஷயம் எனக்கு தெரியும் அதனால் உன்னை பற்றி முழுமையாக என்னுடைய வீட்டில் கூறினேன். ஏதோ ஒரு சதி உன் வீட்டில் நடக்கிறது என்பதை புரிந்து கொண்டதால் உன்னை எங்கள் வீட்டிற்கு என் அண்ணனின் மனைவியாக அழைத்துவர அன்றே முடிவு செய்து என் பெற்றோருடன் பேசினேன். ஏற்கனவே உன்னை பார்த்தது முதலில் என் அண்ணன் உன்னிடம் விழுந்துவிட்டான். அதனால் அவனிடம் எனக்கு பெரிதாக பேச ஒன்றுமில்லை. அதற்காக தான் உங்கள் வீட்டில் எங்களுடைய நிதி நிலைமையை குறைத்து சொன்னோம்.



அதுவே உன் அக்காவிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால் அவள் ஒத்துக் கொண்டதற்கு முழு காரணம் நீ என்னுடைய அண்ணனை நினைத்து பயந்தது, இன்னொன்று இவன் பார்ப்பதற்கு அழகாக இருப்பது எப்படியாவது இவனை கைக்குள் போட்டு வாழலாம் என்று நினைத்தவள் திருமணத்திற்கு சரி என்று ஒப்புக் கொண்டாள்.



இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாங்கள் பெண்ணைப் பார்க்க வரும்போது நீ தான் எங்கள் அனைவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாய், அங்கு வந்த எங்கள் நெருங்கிய சொந்தங்கள் அனைவருக்கும் நீதான் என் அண்ணனின் மனைவியாக அறிமுகமாகி இருந்தாய். அதன்பிறகு யாரும் உன் அக்காவை பெரிதாக கண்டுகொள்ளவில்லை பயத்தில் இருந்த உனக்கு அது பெரிதாக தெரியவில்லை ஆனால் உன்னுடைய வீட்டினருக்கு சிறு சந்தேகம் இருந்தது. நாங்கள் அதன் பிறகு பொதுவாக பேசியதால் அவர்களும் அதைப் பற்றி பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை தன் மகள் நல்ல இடத்தில் வாழ போகிறாள் என்று எண்ணி அவர்களும் மகிழ்ச்சியில் தான் இருந்தனர்.



உன்னுடைய அக்கா என் அண்ணனிடம் பேசுவதற்கு எவ்வளவோ முறை முயற்சி செய்து இருக்கிறாள். ஆனால் இவன் வேலை இருப்பதாக கூறி அவளை தவிர்த்து தான் வந்தான். ஆனால் அப்போதும் கூட ஓரிரு முறை உன்னிடம் பேசி இருக்கிறான் வீட்டிற்கு போன் செய்யும் போது ஆனால் நீ இவன் என்று தெரிந்தவுடன் போனை யாரிடமாவது குடுத்து விட்டு ஓடி விடுவாய். அதைப் பார்த்து நாங்கள் இங்கே சிரித்து இருக்கிறோம்.



இதற்கெல்லாம் உச்சமாக நடந்தது நிச்சயதார்த்தம் அன்று நடந்தது நடந்ததுதான்" என்று கூறி நிறுத்தினாள் சாதனா.



"அப்படி என்னதான் நடந்துச்சு ஒழுங்கா சொல்லு" என்று கத்தினாள் சாகித்யா. அவளால் இதுவரை கூறிய விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏனென்றால் தன்னை எவ்வளவு பெரிய முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள் என்று எண்ணி தன் மேலேயே கோபம் கொண்டு அமர்ந்து இருந்தாள், அதன் வெளிப்பாடுதான் இந்த கத்துவது.



அவளை சமாதானப்படுத்தி அருகில் அமர்த்திய ருத்ரன் "நான் சொல்றேன் அமைதியா இரு" என்று கூறினான்.



சாகித்யா கேள்வியாக அவனுடைய முகத்தை பார்த்தாள். அவன் அதற்கான பதிலை கூற ஆரம்பித்தான்.
நிச்சயதார்த்தத்தில் என்ன நடந்தது?
ராஜி இன்னும் என்னவெல்லாம் செய்து இருக்கிறாள்?
சாகித்யா முடிவு என்னவாக இருக்கும்?
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.