• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 14

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ஆண்கள் அனைவரும் அங்குள்ள சோபாவில் அமர்ந்து இருக்க, சாதனா தன் அண்ணன் அருகில் அமைதியாக அமர்ந்து இருந்தாள். தோழிகள் அனைவரும் அங்கங்கே நின்று இனி நடக்கப் போவது என்ன என்ற ரீதியில் காத்துக் கொண்டிருந்தனர். தர்ஷன் ராஜி வருவது தெரிந்தவுடன் அவள் கண்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டான். இதை அனைவரும் கவனித்தாலும் அவன் மறைந்து நிற்பதே நல்லது என்று நினைத்து அமைதி காத்தனர். வெளியே நின்ற வேலை காரரிடம் ராஜி "அண்ணா உள்ள ருத்ரன் இருக்காரா?" என்று கேட்டாள்.

அந்த வீட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் மிகவும் விசுவாசமான நபர்கள் ஏனோ அந்த நல்ல மனிதருக்கு ராஜியை பார்த்தவுடன் பிடிக்காமல் போனது. இருந்தாலும் வீட்டுக்கு வந்தவரை வெளியே அனுப்புவது நல்லது அல்ல என்று எண்ணிக்கொண்டு "ஆமா உள்ள தான் இருக்காங்க போய் பாக்கணும்னா போய் பாருங்க" என்று கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த ராஜி உள்ளே சென்றாள்.

அவர்கள் அனைவரும் இருக்குமிடம் வரும்போதே தன்னுடைய சகோதரன் மற்றும் மாமன் மகன்களை பார்த்தவள் என்னவெல்லாம் பேச வேண்டுமென்று முடிவு செய்துவிட்டு முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு வந்தாள். அவளுடைய பாவமான முகத்தை பார்த்து சாதனா, ருத்ரன், சக்தி, சத்யா, பாலா மற்றும் அசோக் விக்னேஷ் என அனைவர் முகத்திலும் ஒரு ஏளன சிரிப்பு வந்தது. ஆனால் அதை ராஜி பார்ப்பதற்கு முன்பு மறைத்துக் கொண்டனர்.

ராஜிக்கு தெரிந்தவரை ருத்ரன் குடும்பம் மிகவும் நல்லவர்கள், யாருக்கும் எந்தவித தீமையை செய்ய நினைக்காதவர்கள். அதனால் தன்னுடைய வாழ்வு பறிபோய் விட்டதாக கூறினால் நிச்சயமாக நாம் நினைத்ததை சாதித்து விடலாம் என்று நடக்காத ஒரு விஷயத்தை நினைத்து மனதில் சிரித்துக்கொண்டே அவர்கள் இருக்குமிடம் அடைந்துவிட்டாள்.


ருத்ரன் சக்திக்கு கண்காட்ட அதை புரிந்து கொண்ட சக்தி வேகமாக அருகே சென்று "நீ எதுக்காக இங்க வந்த? ஏற்கனவே இங்கு எல்லாருடைய நிம்மதியையும் மொத்தமாக சுருட்டிகிட்டு தான போன இப்போ இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் எடுத்துட்டு போக வந்தியா? நாங்க எல்லாரும் நடந்த விஷயத்தை எல்லாம் மறந்துட்டு நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கோம். மறுபடியும் அந்த நிம்மதியை எங்க கிட்ட இருந்து பறிக்காதே" என்று கோபமாக கூறினான்.


சக்தி கூறியதைக் கேட்டு உள்ளுக்குள் கோபம் அடைந்த ராஜி வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு "நான் சொல்ல வரத முதல்ல கேளு, அதுக்குப்பிறகு நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் பொறுமையா கேட்டுக்கறேன். என் பக்கமும் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும் இல்ல அதையும் கொஞ்சமாவது காது கொடுத்து கேட்கலாம் அல்லவா?" என்று கேட்டாள்.


அவள் கூறியதை கேட்டவுடன் அங்கிருந்த அனைவர் மனதிலும் "என்ன ஒரு நடிப்பு படத்துல நடிக்கிற மனிதர்கள் கூட தோத்து போயிருவான் போல" என்று எண்ணிக் கொண்டு அமைதியாக நடப்பதை வேடிக்கை பார்த்தனர். அப்போது சாதனா சக்தியை பார்த்து "மாமா கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. நம்ம எல்லாருக்கும் ஏதோ ஒரு என்டர்டைன்மென்ட் தருவதற்காக அவங்க ஏதோ ஒரு கதை சொல்ல போறாங்க. அதையும் பொறுமையாய் இருந்து கேட்போம், நமக்கும் நேரம் போகும் ஏன் நான் எப்படியோ நம்ம வீட்டிலுள்ள எல்லாரும் தூங்கி எழும்பி வருவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு. அதனால அவங்க சொல்லட்டும் என்று கூறிவிட்டு ராஜி இருக்கும் பக்கம் திரும்பி நீங்க சொல்லுங்க" என்று கூறினாள்.


அவ தான் ருத்ரன் தங்கை என்பதைப் புரிந்து கொண்ட ராஜி மனதில் சீக்கிரமே உங்க அண்ணன கல்யாணம் பண்ணிக்கிட்டு உன்னை என்ன கொடுமை படுத்துறேன் பாரு. அதுவரைக்கும் நல்ல ஆடிக் கோ என்று எண்ணி விட்டு வெளியே சாகித்யாவிடம் கூறிய அனைத்தையும் ஒன்று மாறாமல் கூறினாள்.


அனைத்தையும் கேட்டவர்களுக்கு உள்ளுக்குள் கோபம் உச்சத்திற்கு சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த தர்ஷனுக்கு கூட கோபம் உச்சிக்கு சென்றது. ஏனென்றால் சாகித்யா முடிவாக தன்னுடைய பதில் கூறிய பிறகு அவளுடைய நட்பு கூட தனக்கில்லை என்று சிறிது காலம் கழித்து தான் அவனுக்கு புரிய ஆரம்பித்தது. அப்போதே அவன் தான் செய்த தவறை உணர ஆரம்பித்தான்.


ஆனால் அப்போது அவனை சந்தித்த ராஜி சாகித்யாவிற்கு கட்டாய திருமணம் நடந்ததாகவும், அவளை வீட்டில் அனைவரும் கொடுமை படுத்த தான் இந்த திருமணம் செய்து வைத்ததாகவும் ஆனால் அவள் அவர்களை முழுதாக நம்பும் வரை அவளை பார்த்துக்கொள்வதாக அனைவரும் நடிப்பதாகவும் கூறினாள். உண்மையாக நீ சாகித்யா மனதை விரும்பியிருந்தால் நிச்சயமாக நீ அவளை விட்டு பிரிய மாட்டாய் இனி சிறிது காலம் நீயே அமைதியாக இருந்தால் அவர்கள் அனைவரின் உண்மை சுயரூபம் அவளுக்கு தெரிந்து விடும் அப்போது அவள் உன்னை தேடி வந்து விடுவாள். அதனால் நீ அவளை மறக்க முயற்சி செய்யாதே என்று அவனை மூளைச்சலவை செய்து அனுப்பியிருந்தாள். அதனால்தான் அன்று ஹோட்டலில் அனைவரும் சாப்பிடும் போது தர்ஷன் அவ்வாறு கூறி சென்று இருந்தான்.


ஆனால் தற்போது மொத்தமாக ராஜி மாற்றி கூறியதை கேட்ட தர்ஷன் தான் எவ்வளவு முட்டாளாக தன்னுடைய தோழியாகவும், மனதில் காதலியாகவும் நினைத்தவள் வாழ்க்கையை அழிக்க துணிந்து இருக்கிறோம் என்று எண்ணி தன் மேலேயே கோபம் கொண்டான். ஆனாலும் அனைவரும் அமைதியாக இருப்பதற்கு ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு அவன் அமைதியாக நின்று விட்டான்.


ருத்ரன் ராஜியை பார்த்து "இப்ப நீ முடிவா என்ன சொல்ல வர? அதையும் தெளிவா சொல்லிரு எதுக்கு நீ எப்படி போன வந்த அந்த கதை எல்லாம் சொல்லிட்டு இருக்க?" என்று கேட்டான்.


அவர்கள் தன்னை எண்ணி நினைத்து இவ்வாறு பேசுகிறார்கள் என்பது புரியாத ராஜி, தான் கூறியதை அவர்கள் நம்பி விட்டார்கள் என்று எண்ணிக்கொண்டு தன் மனதில் உள்ள ஆசை அனைத்தையும் கூற ஆரம்பித்தாள்.


ராஜி "அன்னைக்கு கல்யாண நடக்க இருந்தப்போ என்ன நடந்துச்சு அப்படின்னு எல்லாத்தையும் நான் ஏற்கனவே சொல்லிட்டேன். நானும் ஒரு தப்பும் செய்யல ஆனா அதுக்காக நீங்க அந்த இடத்துல என்னோட தங்கச்சியை கல்யாணம் பண்ணது தப்பு. அவ படிக்கிற பொண்ணு அவளுக்கு எத்தனை வயசு ஆச்சு? கொஞ்சமாவது யோசித்து இருக்கலாம்ல படிக்கிற வயசுல கல்யாணம் பண்ணா அவளோட வாழ்க்கையே நெனச்சு பாத்தீங்களா? அது மட்டும் இல்லாம அவ ஒரு பையன ஸ்கூல் படிக்கும் போதிலிருந்தே லவ் பண்ணிக்கிட்டு இருந்தா, அவங்க ரெண்டுபேரும் பிரிஞ்சு இருந்தது கூட கிடையாது. அப்படி இருக்கும்போது நீங்க அவளுடைய காதலை அவகிட்ட இருந்து பிரித்து கல்யாணம் செய்தது தப்பு. என் மேல உள்ள கோபத்துல நீங்க இந்த முடிவை எடுத்து இருக்கலாம் ஆனா நான் எந்தவித தப்பு செய்யல அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவிட்டேன், அப்படி பார்க்கும்போது நீங்க இனி என்னோட தங்கச்சி வாழ்க்கையே சரி பண்ணி குடுக்கலாம் அல்லவா? அவள நீங்க உங்களோட உறவிலிருந்து பிரித்து விடுங்க அவளோட வாழ்க்கைய அவ சந்தோசமா வாழட்டும் முதல்ல வீட்டில் முடிவு பண்ண மாதிரி என்னையே கல்யாணம் பண்ணிக்கோங்க" என்று கூறி ருத்ரன் முகம் பார்த்தாள்.


அவள் கூறியதை கேட்ட அனைவரும் மனதிலும் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் அனைவரும் எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் அமைதியாக அவளை பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் சாகித்யா பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்தாள் என்று கூறிய விஷயத்தை அறையிலிருந்து கேட்ட சாகித்யா முழுமையாக உடைந்து போனாள். தன்னுடைய சகோதரி தனக்கு தாய்க்கு சமமாக நினைத்த ஒருத்தி இன்று தன்னைப்பற்றி கூறுவதை கேட்டு மனதில் மிகவும் கலங்கிப் போனாள்.


ருத்ரன் ராஜி முகத்தை பார்த்து "எனக்கு கல்யாணம் அப்படிங்கறது வாழ்க்கையில ஒரு தடவை மட்டும் தான் அதையும் நான் பண்ணியாச்சு. நீ கல்யாணம் அன்னைக்கு ஓடிப்போனது எதுக்கு அப்படி என்கிற காரணத்தை நீ சொல்லிட்டே, ஆனா இப்படி ஒரு பிரச்சனை வரும் போது நீ யாராவது ஒருத்தர் கிட்ட சொல்லி இருக்கலாம் அல்லவா? ஏன் யார்கிட்டயும் ஏ சொல்லாம போன கண்டிப்பா யாராவது ஒருத்தருக்கு தெரிந்து இருந்தாலும் இந்த பிரச்சனைகளை சமாளித்து இருப்பாங்க. இப்போ என்ன கல்யாணம் செய்துகொண்டதால் நிச்சயமா உன்னோட தங்கச்சி வாழ்க்கை நாசமா போகாது. ஏன்னா நான் எடுத்த பொறுப்பை என்னைக்குமே தவறவிட்டது கிடையாது, அதை நான் செய்யவும் மாட்டேன். இப்போ அவ என்னோட பொண்டாட்டி உனக்கு அவகிட்ட பேசணும்னு தோணினா கூட நான் அனுமதிச்சா தான் முடியும். ஏன்னா அவ இப்ப முழுக்க முழுக்க என்னோட பாதுகாப்பில் இருக்கா புரியுதா? நீ இப்ப எங்க வந்து என்ன சொன்னாலும் அதை கேக்குற நிலைமையில இங்க யாரும் கிடையாது. என்னைக்கு எனக்கும் அவளுக்கும் கல்யாணம் ஆச்சோ அன்னையிலிருந்து அவ மட்டும் தான் என்னோட பொண்டாட்டி. நான் சாகுற வரைக்கும் அவ மட்டும் தான் புரியுதா?" என்று கேட்டான்.


அதைக் கேட்டு கோபம் அடைந்த ராஜி வெளிப்படையாக தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தாள். "அப்ப என்னோட வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? உங்களுக்கும் உங்க எதிரிக்கும் பிரச்சனை அப்படின்னு சொன்னா எதுக்கு தேவையில்லாம இதுல என்ன உள்ள கொண்டு வந்தீங்க? நீங்க ஜாலியா எங்க வீட்ல உள்ள இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிட்டு இருக்கீங்க? அவளும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அக்காவை பார்த்த மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி இருக்கோமே அப்படிங்கிற எண்ணம் கூட இல்லாம, உங்க கூட ஒட்டி உரசிக்கொண்டு திரிகிறாள். இதுல என்னோட வாழ்க்கைக்கு என்ன பதில் எனக்கு என்னமோ நடந்தது எல்லாத்தையும் வச்சு பார்த்தா நீங்க ரெண்டு பேரும் தான் பிளான் பண்ணி எல்லாம் பண்ணி இருப்பீங்க அப்படின்னு நினைக்கிறேன்" என்று கோபமாக கத்தினாள் ராஜி.


அவள் கத்தி கோபப்படுவதை ஒரு பொருட்டாக கூட அங்கு யாரும் மதிக்கவில்லை மிகவும் கூலாக சாதனா "நீ பண்ண எல்லா திருட்டு தனத்தையும் தெரிஞ்சிகிட்டு தான் இங்க எல்லாரும் இருக்கிறோம். அதனால தேவையில்லாம மூச்சு பிடிச்சி டயலாக் பேசாத, அது உனக்கு நல்லதல்ல. இங்க இருக்க எல்லாரும் உன் மேல கொலை வெறியில் இருக்கிறோம். ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து கிளம்பி போய் உன்னோட வேலை என்னவோ அதை போய் பார், தேவையில்லாமல் இங்கே இருந்து பேசி எங்களை இன்னும் கோபப்படுத்தாதே" என்று கூறினாள்.


ராஜி ஒரு நிமிடம் அதிர்ச்சியானாள். ஏனென்றால் தான் செய்த திருட்டு வேலை அனைத்தும் இவர்களுக்கு தெரிந்து இருக்கிறது. அதனால் தான் இவர்கள் இவ்வளவு அமைதியாக இருக்கிறார்களா என்று எண்ணிக்கொண்டு அனைவர் முகத்தையும் பார்த்தாள். பின்பு அனைவரையும் பார்த்து ஏளனமாக சிரித்துக்கொண்டு "ஓ அப்போ உங்க எல்லாருக்கும் என்ன பத்தி முழுசா தெரிஞ்சுட்டு அப்படித்தானே?" என்று கேட்டாள்.


அதைப் பார்த்து கோபமடைந்த சக்தி " நீ எல்லாம் என் கூட பிறந்த அப்படின்னு நினைக்கும்போதே எனக்கு அருவருப்பா இருக்கு, நம்ம வீட்ல யாருக்குமே உன்ன மாதிரி ஒரு கேவலமான புத்தி கிடையாது. ஆனா நீ எவ்வளவு கீழ்த்தனமாக இறங்கி இருக்க தெரியுமா?" என்று கேட்டான்.


அவனைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை உதிர்த்த ராஜி "ஏன் உங்க எல்லாருக்கும் என்ன விட அந்த சாகித்தியா தானே எப்பவுமே முக்கியமா பட்டா, அவ என்ன ஆசைப்பட்டாலும் அவ கேக்குறதுக்கு முன்னாடி கிடைக்கும். நான் ஏதாவது சின்னதா செலவு செஞ்சா கூட இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட்டாகாதுனு எனக்கு அறிவுரை கிடைக்கும். ஏன் அப்ப உங்க எல்லாருக்கும் நான் உங்க வீட்ல ஒருத்தி உங்க கூட பொறந்தவ அப்படின்னு தெரியலையா? சரி நீங்க தான் அப்படி இருந்தீங்க அப்படின்னு நெனச்சு எனக்கு வரப் போறவன் என்னோட விருப்பத்தை எல்லாத்தையும் முதலிலேயே தெரிந்து கொண்டு அதை பண்றவன் ஆக இருக்கணும் அப்படி நினைச்சது என்ன தப்பு? நான் எதுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன் அப்படிங்கற விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இப்போ உங்களுக்கு வேற ஆப்ஷன் கிடையாது கண்டிப்பா அவளை விவாகரத்து பண்ணிக்கிட்டு என்ன கல்யாணம் பண்ணி தான் ஆகனும்.. ஏன்னா ஏற்கனவே அவளை காதலிச்சு கொண்டு இருந்த அவருடைய பெஸ்ட் ஃபிரண்ட் மனச மொத்தமாக கலச்சி விட்டாச்சு. இதுல தனியா அவளை வேறு சந்தித்து குழப்பி விட்டாச்சு. இன்னும் ஒரு மூணு தடவை அவளை போய் பார்த்து பாசமா பேசினா அவளே இந்த வாழ்க்கையை விட்டு குடுத்துட்டு போய்கிட்டே இருப்பா. ஆனா நான் பேச போற ஒவ்வொரு வார்த்தையும் அவளை என்ன முடிவு வேணா எடுக்க வைக்கலாம். அதனால யோசிச்சு நல்ல முடிவா எடுங்க" என்று திமிராக கூறினாள்.


அவளது பேச்சைக் கேட்ட அனைவருக்கும் சிரிப்புதான் வந்தது. ருத்ரன் ஒரு மெல்லிய சிரிப்போடு அவளை பார்த்துவிட்டு "உன்னோட தங்கச்சி உனக்காக அவளோட வாழ்க்கையை விட்டு கொடுக்கலாம். ஆனா நான் எதுக்கு என்னோட பொண்டாட்டிய விடணும், ஏற்கனவே நீ இப்படி வருவ ஏதாவது திருட்டுத்தனம் செய்வே அப்படின்னு தெரிஞ்சு தான் எல்லா விஷயத்தையும் கரெக்டா பண்ணிக்கிட்டு இருக்கேன். நாங்களே விவாகரத்து வாங்க நினைச்சா கூட அதுக்கு கண்டிப்பா ஒரு வருஷம் மேலாகும் அதுக்குள்ள கண்டிப்பா ஏதாவது தப்பா முடிவு எடுத்திருந்தால் கூட நான் தெரிஞ்சி கரெக்டா யோசித்து இந்தப் பிரிவு வராமல் தடுத்து விடுவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ அவளுக்கு கூட நாங்க எல்லாரும் இருப்போம். அதையும் மீறி நீ போய் பேசுறதெல்லாம் கேட்டுகிட்டு இருக்குறதுக்கு அவ ஒன்னும் உன்னோட வேஷத்தை பாசம் அப்படின்னு நம்பியிருக்க பழைய சாகித்தியா இல்லை, கண்டிப்பா அது உனக்கு சீக்கிரம் தெரியவரும் அந்த நாள் உனக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும் அதை என்னால கண்டிப்பா உறுதியா சொல்ல முடியும்" என்று கூறினான்.


ருத்ரன் எதற்காக அவ்வாறு கூறுகிறான் என்று புரியாமல் பார்த்த ராஜி மனதில் "சாகித்யா வேஷத்தை பாசம் என்று நம்பி ஏமாறும் சிறு பெண்தான் அதுவும் தன்னை அவளால் எக்காரணம் கொண்டும் எதிர்த்து நிற்க முடியாது தான் வேண்டும் என்று கேட்டால் இது வரை அனைத்தையும் கொடுத்தவள். இதையும் கொடுத்து விடுவாள்" என்று எண்ணிக்கொண்டு அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் எதிர்பாராதவிதமாக அவர் முன்னே வந்து நின்றான் தர்ஷன்.


தர்ஷன் அங்கு இருப்பான் என்று சற்றும் எதிர்பார்க்காத ராஜி அவனுடைய முகத்தை பார்த்தாள். அதன் மூலமே அவனும் பல மணி நேரமாக இங்கேதான் இருந்து இருக்கிறான் என்பதை தெரிந்து கொண்ட அவர் அவனை நோக்கி ஒரு நக்கல் சிரிப்பை உதிர்த்துவிட்டு "என்னடா உனக்கும் எல்லாமே தெரிஞ்சு போச்சா? நீ இன்னும் கொஞ்ச நாள் அவ பின்னாடி சுத்தி கடைசில அவளை வெறுத்து டார்ச்சர் பண்ண ஆரம்பிப்பே அப்படின்னு நினைச்சேன். ஆனா இப்பவே எல்லா உண்மையும் கண்டுபிடிச்சிட்டே" என்று கேட்டாள்.


அவள் கூறியதைக் கேட்ட தர்ஷன் அவளை ஒரு அருவருப்பான பார்வை பார்த்துவிட்டு அனைவரையும் நோக்கி ஒரு மன்னிப்பு கலந்த பார்வை பார்த்தான். அதைப் பார்த்த அனைவருக்கும் மனதில் ஒரு நிம்மதி எழுந்தது. இனி அவனால் எந்தவித பிரச்சினையும் வராது கண்டிப்பாக ஒரு நல்ல நண்பனாக இருந்து அவளுக்கு உறுதுணையாக இருப்பான், என்று எண்ணிக்கொண்டு அனைவரும் அவனைப் பார்த்து சிரித்தனர். அதன்மூலம் அவன் மனதில் இன்னும் குற்ற உணர்ச்சி இருந்தாலும் வெளியே அமைதியாக நின்றான்.


இவ்வளவு நேரம் கீழே ராஜி கூறியது மற்றும் ருத்ரன் கூறியது அனைத்தையும் கேட்ட சாகித்யா இறுதியாக தர்ஷன் முகத்தை பார்த்துவிட்டு ராஜி கூறியதைக் கேட்டு, அவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் மொத்த கோபத்தையும் குத்தகை எடுத்துக் கொண்டு வந்தவள் போல கீழே இறங்கி வந்தாள். ராஜி அவள் வந்ததை கவனிக்காமல் அங்குள்ள வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள். சாகித்யா வந்த தோரணையே அவள் எவ்வளவு கோபமாக இருக்கிறாள் என்பதை அனைவருக்கும் எடுத்துக் காட்டியது. அதனால் யாரும் எதுவும் கூறாமல் தங்களுடைய இடத்திலேயே நின்று அவள் என்ன செய்ய போகிறாள் என்ற ரீதியில் பார்த்தனர்.


யாரும் எதிர்பார்க்காத வகையில் நேராக ராஜியின் முன்பு சென்று நின்றவள் அவள் நிமிர்ந்து தன் முன்பு வந்து நின்ற உருவத்தை உணர்ந்து பார்ப்பதற்குள், சாகித்யா ராஜி கண்ணத்தில் மாறி மாறி மொத்த கோபத்தையும் கொண்டு அறைந்தாள். அங்கிருந்த அனைவருக்கும் இது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது.


சரியாக அந்த நேரத்தில் தான் மதன் அந்த வீட்டிற்குள் நுழைந்தான் உள்ளே நுழைந்தவன் சாகித்யா முகம் பார்த்து அதிர்ச்சியில் நின்று விட்டான்.
மதன் ஏன் அதிர்ச்சி அடைந்தான்?
இனி நடக்கப்போவது என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடை காண்போம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
ஹாய் டியர்ஸ் உங்க எல்லார்கிட்டயும் ஒரு கொஸ்டின் அதாவது நடந்த எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டே சாகித்யா என்ன மாதிரி பனிஷ்மென்ட் கொடுக்கணும்னு நீங்க எல்லாரும் நினைக்கிறீங்க இதுக்கு உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க.
 
Top