• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 15

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சாகித்யா கோபமாக கீழே இறங்கி வந்ததை பார்த்த அனைவரும் அவள் ஏதாவது கத்துவாள் என்று தான் எதிர்பார்த்தனர். ஆனால் அனைவரும் தன்னை ஏமாற்றியதே அவளுக்கு பெரிய அடியாக இருக்க, தன்னுடைய சகோதரி தன் வாழ்வை இன்னும் அழிக்க என்ன எல்லாம் செய்யலாமோ அது எல்லாம் செய்ய காத்து இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டவள், அதற்குமேல் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை சரமாரியாக அறைந்தாள்.


சாகித்யா வந்ததை கவனிக்காமல் நின்றுகொண்டு இருந்த ராஜி அவள் அடித்ததும் யார் தன்னை அடிக்கிறார்கள் என்று நிமிர்ந்து பார்க்க இயலாத அளவிற்கு சாகித்யாவின் அடியின் வேகம் இருந்தது. ஒரு சில நிமிடங்கள் பொருத்த ருத்ரன் தன் மனைவியின் கோபம் எல்லை மீறி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டவன், இதற்கு மேல் விட்டால் கண்டிப்பாக வீட்டில் உள்ள அனைவரும் சாகித்யாவை தான் கடிந்து கொள்வார்கள் என்று எண்ணிக் கொண்டு அவளை இழுத்து தன் கைகளுக்குள் கொண்டு வந்தான்.


ஆனாலும் அவள் அவன் கைகளுக்குள் அடங்காமல் முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தாள். அதைப் பார்த்த ருத்ரன் அவளை இறுக அணைத்து, அவளுடைய தலையை தன்னுடைய மார்பில் வைத்து அழுத்தி, அவளுடைய முதுகை வருடிக் கொடுக்க ஆரம்பித்தான். இவ்வளவு நேரம் அவளுடைய கோபம் மற்றும் அவளை ருத்ரன் அடக்க முயல்வது மட்டுமே அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் சாகித்யா அடித்த அடியால் கீழே விழுந்து கிடந்த ராஜியை யாரும் கண்டுகொள்ளவில்லை.


சாகித்யா ராஜியை அடிக்கும்போது உள்ளே நுழைந்த மதன் சாகித்யா முகத்தைப் பார்த்து அதிர்ச்சியானான். ஏனென்றால் அவன் சாகித்யா முன்பே பார்த்து இருக்கிறான். ஒரு முறை அவள் பள்ளி செல்லும் வழியில் ஒரு வயதானவர் தன்னுடைய உடல் அசதியால் மயங்கி விழுந்துவிட, சுற்றியிருந்த அனைவரும் வேடிக்கை மட்டும்தான் பார்த்தனர். ஆனால் அவ்வழியாக வந்த சாகித்யா அவரைப் பார்த்து அவர் அருகில் சென்று அவரை எழுப்ப முயற்சி செய்தாள். ஆனால் பல நிமிட முயற்சிக்குப் பிறகு அவர் மெதுவாக கண் விழித்தார். அவரைப் பார்க்கும்போதே பசியின் அளவு அதிகமாக இருப்பது அவருடைய முகத்தில் தெரிந்தது. அதனால் தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்கு ஊட்டி விட்டு விட்டு தண்ணீர் கொடுத்து அவரை சிறிது ஆசுவாசப் படுத்தினாள். பின்பு அவரிடம் எந்த விதமான கேள்வியையும் கேட்டு அவரை சங்கட படுத்த விரும்பாமல் அமைதியாக அவரை அழைத்து சென்றாள்.


சாகித்யா அந்த வயதானவருக்கு சாப்பாடு கொடுக்கும் நேரத்தில் தான் மதன் அவன் நண்பனோடு அந்த இடம் வந்தான். இவள் செய்யும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தவன், இறுதியாக அவள் எங்கே அழைத்துச் செல்கிறாள் என்பதை அறிவதற்காக அவள் அறியாமல் அவள் பின்தொடர்ந்தான். அவன் மனதில் இந்த சிறு வயதில் இந்தப் பெண் இவரை எங்கே அழைத்துச் செல்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. சாகித்யா அவரை அழைத்து சென்ற இடம் அவள் படிக்கும் பள்ளிக்கூடம் இவளுடைய குடும்பம் பாரம்பரியமாக குடும்பமாக இருந்ததால், அந்தப் பள்ளியில் இவர்கள் குடும்பத்திற்கு செல்வாக்கு ஜாஸ்தி ஏற்கனவே அனைவருக்கும் அவளை அங்கே உள்ளவர்களுக்கு பிடிக்குமாதலால் சாகித்யா நேரடியாக அவரை அழைத்துக்கொண்டு பிரின்ஸ்பால் ரூம் சென்றாள்.


மதன் பள்ளி உள்ளே செல்ல இயலாமல் வாசலிலேயே நின்றுவிட்டான். வாசலில் உள்ள வாட்ச்மேன் அவனைப்பார்த்து "தம்பி என்ன விஷயமா வந்து இருக்கீங்க? உங்களுக்கு யாரைப் பார்க்கணும்?" என்று கேட்டார். மதன் தன் தவறாக எதற்கும் வரவில்லை என்பதனை புரிய வைப்பதற்காக தான் பார்த்து அனைத்தையும் கூறிவிட்டு "இப்ப அந்த சின்ன பொண்ணு என்ன செய்யப் போகிறா?" என்று கேட்டான்.


அதற்கு அந்த வாட்ச்மேன் மெலிதாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு "தம்பி இப்ப வந்த பெரியவருக்கு இங்க இருக்கிற சின்ன பிள்ளைகள் கொஞ்சம் பேர பார்த்துக் கொள்கிற மாதிரி ஏதாவது வேலை ஏற்பாடு செஞ்சு கொடுப்பாங்க. அவர் தங்களது எல்லாமே இங்கேயே ஏற்பாடு பண்ணுவாங்க. பின்னாடி ஒரு சின்ன ஆசிரமம் இருக்கு அங்கேயே அவர் முழுசா தங்குவதற்கு எல்லா ஏற்பாடும் பண்ணி முடிச்சுட்டு தான், அந்த பாப்பா இனி அதோட கிளாஸுக்கு போகும். இது வழக்கமா இந்த ஸ்கூல்ல யாராவது நல்ல பிள்ளைங்க பண்றதுதான், அதனால நீங்க கவலைப்படாதீங்க அந்த பெரியவர் இனிமேல் நல்லா இருப்பார்" என்று கூறினார்.


அவர் கூறியதைக் கேட்ட மதன் மனதில் சாகித்யா ஒரு அன்பு கலந்த பாசம் உருவானது. எங்கிருந்தாலும் அவள் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அவளுடைய வாழ்வை தான் ராஜி நாசமாக்க வந்துள்ளா என்பதை அறிந்து மிகவும் கோபம் கொண்டான். இப்படிப்பட்ட ஒருத்திக்கு போய் இவள் தங்கையாக பிறந்திருக்கிறாள் என்று எண்ணுவதா? இல்லை ஊர் உலகமே நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு அன்பான உள்ளத்திற்கு இவள் போய் அக்காவாக பிறந்திருக்கிறாள் என்று எண்ணுவதா? என்று எண்ணிக்கொண்டு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்தான்.


ருத்ரன் சாகித்யவை சமாதானப்படுத்துவது வைத்து கண்டிப்பாக அவன் அவளை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை மதனுக்கு வந்தது. அதனால் அவன் மனதில் இருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது போல் இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தன் கோபத்தை விட்டு வெளியே வந்த சாகித்யா மொத்தமாக ருத்ரனை பிடித்துக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தாள். அவளுடைய அழுகை எதற்காக என்று காரணம் புரிந்தவர்கள் கண்களும் கலங்கியது.


ஆனால் ருத்ரன் அவளுடைய தலையையும் முதுகையும் வருடி கொடுத்து "நீ எதுக்கு இப்போ அழுற இப்பவாச்சும் எல்லா விசயமும் உனக்கு தெரிஞ்சு போச்சுல்ல, அதுவரைக்கும் சந்தோஷம் உண்மையாவே உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ற ஐடியா எங்களுக்கு கிடையாது. நீ படிச்சு முடிச்ச பிறகு கல்யாணம் பண்ணனும்னு தான் ஆசைப்பட்டோம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி அமைஞ்சு போச்சு அதுக்காக நாங்க செஞ்ச விஷயமெல்லாம் சரி என்று ஆகிவிடாது, இப்ப அழுகையை நிறுத்து உங்க அக்கா விஷயத்தை முடிப்போம்" என்று கூறி தன் அருகே நின்ற தன் நண்பன் விக்னேஷ்க்கு கண் காட்டினான். ஆனால் அதற்கு முன்பு பாலா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான். அதைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை சிந்திய ருத்ரன் சாகித்யா முகத்தை நிமிர்த்தி தன் கையாலேயே தண்ணீர் பருக வைத்தான். அவளும் அதை குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.


தன்னை ஒரு பொருட்டாக யாரும் மதிக்காததைப் பார்த்த ராஜி அதன்பிறகு நடந்த அனைத்தையும் ஒரு கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னை முழுதாக ஆசுவாசப்படுத்திய சாகித்யா நேராக ராஜி முன்பு வந்து நின்றாள். அவளுக்கு பக்கபலமாக ருத்ரன், சாதனா இருபுறமும் வந்து நின்றனர். அதே போல் மற்றவர்களும் அவள் புறம் வந்து நின்றனர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மதனும் அவர்கள் புறம் வந்து நின்றான். அப்போதுதான் எழுந்துநின்ற ராஜி மதனும் தங்கள் முன்னே வந்து நிற்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்.


ஆனால் சிறிது நேரத்தில் அனைவரையும் கோபமாக பார்க்க ஆரம்பித்தாள் .மதன் வந்தது முதலே அவன் யார் என்று அங்கிருந்த அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர். ஆனால் அவன் தங்கள் பக்கம் வந்து நிற்பான் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ராஜி பற்றி தெரிந்த அனைவரும் அவளுக்கு எதிராக தான் இருப்பார்கள் என்பதை புரிந்து கொண்டவர்கள் அமைதியாக நின்றனர்.


சாகித்யா நேராக ராஜி முகத்தை பார்த்து "உனக்கு எங்க மேல என்ன கோபம் எதுவா இருந்தாலும் நீ நேரடியா என்கிட்ட காண்பித்து இருக்கலாம். ஆனா பாசம் அப்படிங்கற பேர்ல எதுக்கு இந்த மாதிரி பண்ண உன் மனசுல இவ்வளவு வெறி எதுக்கு பதில் சொல்லு" என்று கத்தினாள்.


சாகித்யா முகம் பார்த்த ராஜி நக்கலாக சிரித்துக்கொண்டே "நீ சந்தோஷமா இருக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்கல. அதனாலதான் நான் ஒன்னு ஒன்னும் பண்ணேன் இனிமையும் பண்ணுவேன்" என்று திமிராக கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்டு அவளுக்கு குறையாத திமிருடன் பார்த்த சாகித்யா "நீ என்னோட சந்தோஷத்தை எல்லாம் அழிக்கப் போறே அப்படித்தானே? இதுவரைக்கும் உன்னோட பாசம் எனக்கு வேணும் அப்படிங்கற ஒரே விஷயத்துக்காக மட்டும்தான் நான் அமைதியா இருந்தேன். எப்போ நீ எங்க போனாலும் பரவாயில்லை அப்படிங்கற மாதிரி அப்பா அம்மா தண்ணி தெளிச்சு விட்டார்களோ? அப்பவே உன் மேல இருந்த பாசம் போயிடுச்சு. இனிமே எதுக்காக இந்த மாதிரி எல்லாம் பண்ண அப்படின்னு நெனச்சு கண்டிப்பா வருத்தப்படுவ ஆனா பாரேன், நீ எனக்கு எதிரா பண்ணது எல்லாம் எனக்கு நல்லதா தான் முடிஞ்சு இருக்கு. இதுவே வேற யாராவது உனக்கு மாப்பிள்ளையா வந்து இருந்தாலும் இதே மாதிரி தான் நீ செஞ்சு இருப்பே! அப்போ நீ நினைச்ச மாதிரி எல்லாம் நடந்திருக்கும் ஆனால் பாரேன் இப்ப நா என்னோட புகுந்த வீட்டுல ராணி மாதிரி வாழுறேன். ஆனா இனி இனி ஒவ்வொரு நிமிஷமும் பாசத்துக்காக பணத்துக்காகவும் கஷ்டப்படணும் கஷ்டப்பட வைப்பேன்" என்று நிமிர்ந்து கூறினாள்.


சாகித்யா கூறியதை கேட்டு நக்கலாக சிரித்த ராஜி "நீங்க யாருமே இல்ல அப்படி என்றாலும் நான் படிச்ச படிப்புக்கு நான் தனிக்காட்டு ராணி மாதிரி தான் வாழ்வேன். எனக்கு அவ்வளவு சம்பாத்தியமும் கிடைக்கும் இப்பவும் நான் ஒரு நல்ல வேலையில் இருந்து லீவ் அப்ளை பண்ணி தான் வந்து இருக்கேன். அதனால என்னைக்குமே நான் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு நீங்க யாரு தடையா வர முடியாது" என்று கூறினாள்.


சாகித்யா தன் கைகளை ருத்ரன் மற்றும் சாதனா கையுடன் கோர்த்துக் கொண்டு "உன்னோட வேலை போய் ஒரு நாள் ஆச்சு ஆனால் இதுவரைக்கும் உனக்கு இந்த விஷயம் வந்து சேர்ந்து இருக்காது. சீக்கிரம் போய் உன்னோட மெயில் செக் பண்ணு அதே மாதிரி நீ இப்பவே இந்த வீட்டிலிருந்து கிளம்பலாம் இந்த வீட்டுல இருக்குறது உனக்கு எந்த உரிமையும் கிடையாது, புரியுதா? இது என்னோட புகுந்த வீடு. இவங்க எல்லாரும் என்னோட சொந்தம் மட்டும்தான். நீயா வெளிய போனா உனக்கு நல்லது இல்ல போக மாட்டேன் அப்படின்னு சொன்னா வெளிய இருக்கிறவங்க வச்சி உன்ன கழுத்தை பிடித்து வெளியே தள்ளவும் தயங்க மாட்டேன்" என்று கூறினாள்.


அவள் கூறியதை கேட்டு ஏதோ கூற வந்த ராஜியை கையை நீட்டி தடுத்த சாகித்யா "நாங்க எல்லாரும் கோவில் திருவிழாவை என்ஜாய் பண்ண வந்து இருக்கிறோம். அதனால நீ கெளம்பு ஏற்கனவே எனக்கு தலை பயங்கரமா வலிக்குது, நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு திருவிழா என்ஜாய் பண்ணனும்" என்று கூறியவள், நிற்காமல் அவள் கையை பிடித்து தரதரவென இழுத்து வந்து வீட்டிற்கு வெளியே தள்ளினாள். அதில் கோபமடைந்த ராஜி எழுந்து ஏதோ கூறுவதற்கு முன்பு அங்கு இருந்த வேலை ஆட்களை பார்த்த சாகித்யா "அண்ணா இவள ஊரவிட்டு வெளியே கொண்டு விட்டு வாங்க. இங்க இருந்தா வேற யார் வாழ்க்கையும் நாசமா போக காரணமாய் இருக்க போறா" என்று கூறியவள், சக்தியை பார்த்து ஏதோ கண் காட்டி விட்டு சென்றாள்.


வேலையாட்கள் சாகித்யா கூறியதை செய்வதற்கு ராஜி அருகில் வந்தனர். தற்போது என்ன கூறினாலும் அது தனக்கு எதிராக தான் முடியும் என்பதை புரிந்து கொண்டவள் அமைதியாக சென்றாள், அவர்களுடன் சக்தி சென்றான். ஏனென்றால் அவள் வருணை சந்தித்தால் நிச்சயமாக அடுத்த பிரச்சனையை கிளப்புவார்கள் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் சக்தி பின்னால் சென்றதை பார்த்து எதுவும் கூறாமல் சாகித்யா பின்னே உள்ளே சென்றனர்.

உள்ளே வந்து தன்னுடைய கைகளை கட்டிக் கொண்டு அனைவரையும் ஒரு அழுத்த பார்வை பார்த்த சாகித்யா, தர்ஷனை பார்த்து "நீ என்ன முடிவு எடுத்திருக்க? அதை முதல்ல சொல்லிட்டு அதற்கான பதிலை என் கிட்ட கேட்டுட்டு நீ கெளம்பலாம்" என்று கூறினாள்.


அவள் வந்து நின்ற தோரணை மற்றும் கேட்ட தோரணையை பார்த்த அனைவருக்கும் மனதில் பயம் உண்டானது. ஆனால் ஏற்கனவே ருத்ரன் தெளிவான முடிவு எடுத்து இருந்ததால் அமைதியாக நடப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.


தர்ஷன் அவள் முன்னே வந்து தலை குனிந்து கொண்டே "சாரி சாகித்யா என்ன மன்னிச்சிடு இனி என்னைக்குமே உன்னை நான் காதல் அப்படின்னு வந்து தொந்தரவு படுத்த மாட்டேன். இன்னைக்கு உனக்கு என் மேல நம்பிக்கை வருதோ அன்னைக்கு நீ என்ன உன்னோட பழைய பிரண்டா ஏத்துக்கோ, அதுவரைக்கும் நான் காத்துகிட்டு இருப்பேன்" என்று கூறி அமைதியாக நின்றான்.


அவன் கூறிய தோரணையை அவன் தன்னுடைய தப்பை உணர்ந்து விட்டான் என்று சாகித்யாவிற்கு உணர்த்தியது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்வதற்கு அவளுடைய மனது அனுமதிக்கவில்லை, அதனால் அவனை பார்த்து "என்னால இப்பவே நீ கேட்கிற மன்னிப்பு உண்மை அப்படின்னு நம்பி ஏத்துக்க முடியல. அதனால எனக்கு அத ஏத்துக்கிற மனசு வரவரைக்கும் கொஞ்சம் நேரம் கொடு. அப்படியே நான் உன்னை என்னோட பிரண்டா ஏற்றுக் கொண்டாலும் அது பழைய மாதிரி இருக்கும் அப்படிங்கிற நம்பிக்கையை என்னால் கொடுக்க முடியாது. அதனால் என்னை மன்னித்துவிடு" என்று தன்னுடைய பதிலை கூறினாள்.


அவள் இவ்வளவு கூறியதே தர்ஷன் மனதிற்கு போதுமானதாக இருக்க "கண்டிப்பா எனக்கு நம்பிக்கை இருக்கு நீ என்கிட்ட பழைய மாதிரி நல்ல பிரண்டா இருப்ப அப்படின்னு" என்று அவளிடம் கூறிவிட்டு, மற்ற அனைவரையும் பொதுவாக பார்த்து "நீங்க எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க. இனிமே என்னால எந்தவித பிரச்சனையும் இருக்காது" என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.


அவன் கிளம்பியவுடன் மதன் புறம் திரும்பிய சாகித்யா "நீங்க எப்போ என்ன பார்த்து இருக்கீங்க. அது உங்களோட பார்வையிலிருந்து எனக்கு தெரிஞ்சது, எந்த ஒரு காரணத்திற்காகவும் நாங்க உங்கள தப்பா நினைக்க போறதும் இல்ல. உங்களுக்கு பிரச்சனை பண்ண போறது இல்லை. அதனால நீங்க போய் உங்க வேலைய பாருங்க" என்று கூறினாள்.


இப்போது இருக்கும் சூழ்நிலையில் தான் இங்கே இருப்பது சரியல்ல என்று நினைத்த மதன், நேராக ருத்ரன் இருக்குமிடம் சென்று தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு "இது என்னுடைய கார்ட் இந்த பிரச்சனை எல்லாம் முடிஞ்ச பிறகு என்ன காண்டாக்ட் பண்ணுங்க. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று கூறினான். அதற்கு ருத்ரன் சம்பந்தமாக தலையசைக்க அவனும் அந்த வீட்டை விட்டு கிளம்பி விட்டான்.


அடுத்து தன்னுடைய தோழிகள் அனைவரையும் பார்த்தவள் "உங்க யார் கிட்டயும் நான் கோபப்படபோவதும் இல்லை, எதுவும் சொல்ல போறதும் இல்லை. சோ ரூமுக்கு போறதா இருந்தா போ இல்ல இங்கேயே நின்னு எல்லாத்தையும் பாத்துட்டு தான் போகப் போற அப்படின்னா இங்கேயே நில்லு" என்று கூறினாள்.


அவர்கள் அனைவரும் அமைதியாக கிளம்பி தங்களுடைய அறைகளுக்குச் சென்று விட்டனர் என்றால் இன்னும் இங்கே நின்றால் இனி நடக்க போவதை பார்ப்பதற்கு அவர்களுக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் இன்னும் அங்கு இருப்பவர்கள் அவளது குடும்ப உறுப்பினர்கள் அதனால் அவர்கள் அமைதியாக சென்று விட்டனர்.


அந்நேரம் சரியாக சக்தி அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அனைவரும் அவனைப் பார்க்க "அவன் ராஜியை அவள் ஏற்கனவே இருந்த ஊருக்கு அனுப்பியாச்சு. அவங்க போய் சேருகிறாளாஅல்லது வழியில் இறங்குகிறாளா அப்படிங்கறத பாக்குறதுக்கு கண்டக்டர் கிட்ட சொல்லிட்டு வந்திருக்கேன். அதனால பிரச்சனை இல்லை" என்று கூறினான்.


அனைவருக்கும் அவன் கூறிய பதில் ஒருவித நிம்மதியை கொடுத்தாலும், அடுத்து உன்னோட இன்னொரு தங்கச்சி என்ன செய்ய காத்திருக்கிறது தெரியலையே என்று எண்ணி சாகித்யா முகத்தைப் பார்த்தனர்.
சாகித்யாவும் இப்போது அசோக் விக்னேஷ் இருவரையும் அழைத்து "அண்ணா ரெண்டு பேரும் இவங்க மூணு பேரும்" என்று சக்தி சத்யா மற்றும் பாலா நிற்கும் இடம் பார்த்து "இங்கே வாங்க" என்று கூறினாள். அவர்களும் ருத்ரன் மற்றும் சாதனா முகத்தை பார்த்துவிட்டு அங்கே சென்றனர்.


இப்போது சாகித்யா நடுவே நிற்க ருத்ரன் மற்றும் சாதனா ஒருபுறம் நிற்க மற்றவர்கள் மறுபுறம் நின்றனர்.
முதலில் தன்னுடைய சகோதரர்களைப் பார்த்து சிலவற்றை கூறியவள், பின்பு ருத்ரன் மற்றும் சாதனா புறம் திரும்பி தான் எடுத்த முடிவு அத்தனையும் கூறினாள். அதைக் கேட்ட அனைவர் முகத்திலும் அதிர்ச்சி இருந்தது. ஆனால் ருத்ரன் அவள் கூறியதற்கு பதிலாக சிலவற்றை கூறினான் அதைக்கேட்டு சாதனா அடேய் என்ற ரீதியில் முறைத்துக் கொண்டிருந்தாள்.



இனி நடக்கப் போவதை அடுத்த அத்தியாயத்தில் காணலாம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
ராஜிக்கு எதிராக சாகித்யா கூறியது உங்களுக்கு ஏதேனும் தவறாக தெரிகின்றதா அதே போல் அடுத்த அத்தியாயம் முதல் ருத்ரன் மற்றும் சாகித்யா காதல் மற்றும் சாதனா அசோக் காதல் முதலானவை பார்க்கலாம்.
 
Top