• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 16

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ருத்ரன் மற்றும் சாதனா இருவரையும் ஒரு பக்கம் நிற்க வைத்துவிட்டு, மறுபக்கம் சக்தி, சத்யா, பாலா, அசோக் விக்னேஷ் அனைவரையும் நிற்க வைத்து விட்டு நடுவில் நின்றாள் சாகித்யா.


ருத்ரன் சாதனா இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு மற்றவர்கள் பக்கம் திரும்பியவள் "நீங்க எல்லாரும் என்னோட நல்லதுக்காக மட்டும்தான் இதை செஞ்சீங்க அப்படி என்று எனக்கு தெரியும். ஆனால் இது எல்லாம் செய்றதுக்கு முன்னாடி எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லி இருக்கலாம்ல கல்யாணம் நடக்கும் போது தான் எனக்கே தெரியுது, அந்த அளவுக்கு நான் உங்கள நம்பி இருந்தேன். ஆனால் நீ மூணு பேரும் ஏங்கிட்ட எதுவுமே சொல்லாம எல்லாரையும் மாதிரி என்னோட பயத்தை உங்க மேல வச்ச பாசம், அப்புறம் நம்பிக்கையை பயன்படுத்தி எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டீங்க. நீங்க எங்கிட்ட வந்து எல்லா விஷயத்தையும் சொல்லி இருந்தா அதை புரிஞ்சுக்காம போற அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது. கண்டிப்பா உங்களோட மரியாதை சந்தோஷத்திற்கு எதிரா நான் எதுவுமே பண்ண போறது கிடையாது. ஆனா நீங்க யாருமே அதை செய்யல" என்று சக்தி, சத்யா, பாலா மூவரிடமும் கேட்டவள்.


அசோக் மற்றும் விக்னேஷ் புறம் திரும்பி "உங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கல. ஆனால் கல்யாணம் முடிஞ்ச பிறகு நீங்களும் என்ன உங்க தங்கச்சியா தான் பார்த்தீங்க. நான் உங்களை என்னோட அண்ணன் மாதிரி தான் பார்த்தேன், அப்ப வாட்ச்சும் நீங்க சொல்லி இருக்கலாம் இல்ல?" என்று கேட்டாள்.


சக்தி சத்யா மாலா மூவரும் அவளை வந்து ஒருசேர அணைத்துக்கொண்டு "சாரிடா" என்று கூறினார்கள். பின்பு சக்தி "அன்னைக்கு உன்கிட்ட சொல்லி இருந்தா உன்னோட புருஷன் மேல இருக்கிற பயத்துல நீ கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டியோ அப்படிங்கிற பயத்தில்தான் நாங்க சொல்லலை. எப்படி இருந்தாலும் ராஜி எவ்வளவு தப்பு பண்ணியிருந்தாலும் நம்ம வீட்டுக்கு வந்து அவ அழுதா அதை உண்மை என நம்பி அப்பா அம்மா அவள வீட்டுக்குள்ள விட வாய்ப்பு அதிகம். நம்ம கிட்ட சொன்ன கதை எல்லாத்தையுமே வீட்ல உள்ளவங்க கிட்ட சொன்னா உண்மை தெரியாதவங்க எல்லாரும் நம்ப தான் செய்வாங்க. அதனால திரும்பவும் உன்னோட வாழ்க்கையில் பிரச்சனை தான் வந்து சேரும். அதனாலதான் நாங்க எல்லாத்தையும் உனக்கு தெரியாம பண்ணினோம்" என்று கூறினான்.


சத்யா "உண்மையாவே முதல்ல உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிற முடிவு எங்களுக்கு கிடையாது. மன்னிப்பு கேட்கலாம் அப்படின்னு தான் எல்லாரும் இவங்ககிட்ட போனோம், அப்பதான் நடந்த எல்லா விஷயத்தையும் இவங்க எங்க கிட்ட சொன்னாங்க. அதே மாதிரி ஒன்ன தான் அவங்க வீட்டு மருமகளா நினைச்சு இருக்கிறதையும் சொன்னாங்க. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும், நீ இவங்க கூட இருந்தா எந்த பிரச்சனையும் வராது அப்படி என்கிற நம்பிக்கையில்தான் நாங்க எல்லாத்தையும் செய்தோம்" என்று கூறினான்.


பாலா "உன்ன வீட்டை விட்டு வெளியே யாருக்கும் கல்யாணம் பண்ணி கொடுக்கிற ஐடியா நம்ம வீட்ல யாருக்குமே கிடையாது. சத்யாவுக்கு தான் உன்ன கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா வீட்ல முடிவு செஞ்சு இருந்தாங்க. ஆனா சத்யா உன் பிரண்டு சாந்தினியை லவ் பண்ணிட்டு இருக்கான் அந்த விஷயம் உனக்கே தெரியும். ஆனா வீட்ல உன்னோட கல்யாணத்தை பத்தி பேசின விஷயம் உனக்கு தெரியாது. இந்த உண்மை எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லி இருந்தா கண்டிப்பா சத்யா சாந்தினி வாழ்க்கைக்காகவும் இந்த கல்யாணத்தை பண்ணி தான் இருப்பே. ஆனா அதை சொல்ற அளவுக்கு அன்னைக்கு என்கிட்ட பொறுமை இல்ல இன்னொன்னு நீ அண்ணா நம்ம வீட்டுக்கு மாப்பிள்ளையா வர போறது தெரிந்ததில் இருந்து வேண்டான்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தே, அந்த பயத்தில் தான் நாங்க மூணு பேரும் அப்படி பண்ணிட்டோம் எங்க மூனு பேரையும் மன்னிச்சிரு" என்று கூறினான்.



மூவரும் கூறியதை கேட்டு சிறிது அமைதி அடைந்த சாகித்யா, மூவர் முதுகிலும் தன்னால் முடிந்த அளவு அடித்து தீர்த்துவிட்டு அவர்களை அணைத்துக்கொண்டாள். அவர்களும் அவள் கொடுத்த அடியை இன்பமாக வாங்கிக் கொண்டு பதிலுக்கு அணைத்துக் கொண்டனர் "நீங்க எல்லாரும் எப்பவுமே என்னோட நல்லதுக்காக யோசிச்சு பண்ணுவீங்க, அதனால உங்களை நான் மன்னித்து விடுறேன். ஆனால் இதே மாதிரி வேற ஏதாவது பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன் புரியுதா?" என்று கேட்டாள்.


அவர்களும் புரிகிறது என்று தலையசைத்து சிரித்துக் கொண்டனர்.



அசோக் மற்றும் விக்னேஷ் ஒருசேர "தங்கச்சி உன்கிட்ட சொல்ல கூடாது அப்படின்னு எங்களுக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு. அதை மீறி நாங்க சொன்னா எங்களோட உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. அதனாலதான் நாங்க சொல்லலை மற்றபடி உனக்கு ஒரு பிரச்சனை அப்படின்னா நாங்க எப்பவுமே உனக்கு உறுதுணையாய் இருப்போம். அதனால் எங்களை மன்னித்துவிடு" என்று கூறினார்கள்.



ஏற்கனவே இந்த மாதிரி தான் இருக்கும் என்பதை தெரிந்து வைத்திருந்த சாகித்யா, அவர்களைப் பார்த்து ஒரு மெல்லிய புன்னகை சிந்திவிட்டு "கண்டிப்பா எனக்கு ஏற்கனவே தெரியும் உங்க மேலிடம் கொஞ்சம் பெரிய இடம் அப்படின்னு, அதனால கவலைப்படாதீங்க இனி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு இனி சொல்லாம இருந்தா இவனுங்களுக்கு கிடைத்ததுதான் உங்களுக்கும் கிடைக்கும் புரியுதா?" என்றாள். அவர்களும் சம்மதமாக தலையை அசைத்து சிரித்துக் கொண்டனர்.



இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் கைகளை கட்டிக்கொண்டு ருத்ரன் தன்னுடைய மனைவியை ரசித்துக்கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சாதனா தன் அண்ணன் மேல் சாய்ந்து நின்று நடப்பவற்றை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் சாதனா எதிர்பார்த்தது இதுதான் சாகித்யா எப்போது ஒருத்தர் மேல் தனக்கு உரிமை இருக்கிறது என்ற எண்ணம் வைக்கிறாளோ அப்போதே இது மாதிரியான கோபம் சண்டை அனைத்தையும் வெளிப்படுத்துவாள். இல்லையேல் நீ யாரோ நான் யாரோ என்ற ரீதியில் சென்று விடுவாள். அதனால் அவள் மகிழ்ச்சியாக அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.



இப்போது ருத்ரன் மற்றும் சாதனா புறம் திரும்பினாள் சாகித்யா. அவள் தங்கள் புறம் திரும்பியதை பார்த்த சாதனா மனதில் ஒரு பயம் கிளம்ப தான் செய்தது, இருந்தாலும் தன்னை சமாளித்துக் கொண்டே அவளை நேர் பார்வை பார்த்தாள். அதைப் பார்த்த சாகித்யா மனதில் அவளை மெச்சிக் கொண்டு, அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு பேச ஆரம்பித்தாள் "நீ என்னோட வாழ்க்கையில நடந்த எல்லா விஷயத்துலயும் முக்கிய பங்கு வகித்து இருக்கே! உனக்கு உன்னோட அண்ணனுக்கு என்ன கல்யாணம் பண்ணி வைக்க ஆசை இருந்தா நீ முதலிலேயே என் கிட்ட பேசி இருக்கணும், சரி நான் உன் அண்ணனை ரசித்ததை பார்த்த அதுமட்டுமில்லாம நான் பயந்து போய் இருந்தது உனக்கு தெரியும். என்ன பத்தி ஏற்கனவே உனக்கு தெரியும், இப்படி எல்லாம் தெரிஞ்ச பிறகு எதுக்காக எல்லாத்தையுமே மறைமுகமாக பண்ண? நீ நினைச்சிருந்தா அந்த போட்டோ வரும்போதே எல்லா விஷயத்தையும் சொல்லி இந்த பிரச்சனையை அப்பவே முடித்து இருக்கலாம். ஆனா அதை நீ செய்யல எல்லா விஷயத்தையும் பிளான் பண்ணி பண்ணி இருக்க, உன் இஷ்டத்துக்கு எல்லாரையும் ஆட்டையும் வச்சிருக்க எல்லாமே உன் ஆசைப்படி தான் நடக்கணும் அப்படின்னா நான் ஒரு பொண்ணு இல்லையா? எனக்கும் ஆசை எதுவும் இருக்காதா?" என்று அமைதியாக அதே சமயம் அழுத்தமாக கேட்டாள்.


அவளுடைய அழுத்தமான கேள்வி சாதனா மனதிற்குள் புயலை கிளப்பினாலும் வெளியே "நீ உண்மையாவே வேற யாரையாவது விரும்பி இருந்தா அல்லது என்னோட அண்ணனை உனக்கு பிடிக்காமல் போய் இருந்தாலும் நான் இந்த விஷயத்தை கையில் எடுத்து இருக்க மாட்டேன்" என்று கூறினாள்.


மேலும் அவள் கூறுவதற்கு முன்பு கைநீட்டி தடுத்த சாகித்தியா "நான் உன்னோட அண்ணன ரசிக்க மட்டும் தான் செஞ்சேன். ஊருக்குள்ள யார் வேணா யார் வேணா ரசிக்கலாம், ஆனா அதுக்காக எல்லாரும் எல்லாரையும் கல்யாணம் பண்ணிக்க முடியாது. நீ நெனச்சத எல்லாத்தையும் விசாரிச்சுட்டு இனி என்னோட வாழ்க்கையில நீ செஞ்சதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து நான் ஏதாவது பண்ணனும் இல்ல, அதனால இதுவரைக்கும் ஏங்கிட்ட நீ ஒரு பிரண்டா பழகின அப்படின்னு நான் நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீ உன்னோட அண்ணனுக்கு தங்கச்சியா எனக்கு நாத்தனார் ஆக தான் இவ்வளவு நாள் பழகி இருக்கே. அதனால இனி என்கிட்ட நீ பேசுற வேலை வேண்டாம் நமக்குள்ள இனி எப்பவுமே நாத்தனார் உறவு மட்டும்தான் இருக்க போகுது. அதுவும் எப்பவாது பார்த்தா பேசுகிற மாதிரி தான். காலேஜில நீ என்கிட்ட பேச நினைக்காத எப்பவும் இருக்கிற மாதிரி எல்லாரும் கூட இருந்த மாதிரி நான் இருப்பேன் ,ஆனா பழைய மாதிரி உன் கூட குளோஸ் இருக்க மாட்டேன். என்னைக்கி உன்னோட அண்ணனை மனசார என்னோட கணவனாக நான் ஏத்துக்கிறேன் அப்படின்னு எனக்கு தோணுதோ அன்னைக்கு உன் கிட்டயும் நான் நார்மலா இருப்பேன். அதுவரைக்கும் தயவு செஞ்சு நீ செஞ்சது எல்லாமே என்னோட நல்லதுக்கு அப்படின்னு என்கிட்ட பேச வராத, ஒரே ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு இதே நிலைமைல நீ இருந்து உனக்கு நான் கல்யாணம் பண்ணி வச்சா? நீ அக்சப்ட் பண்ணி வாழ்க்கையை வாழ்ந்து விடுவாயா? அத மட்டும் யோசிச்சு பாத்து அதுக்கு மேல பேசு உன்கிட்ட நான் என்ன வேணா சொல்லி சண்டை போடலாம் என்ன பிரச்சனையை வேண்டுமென்றாலும் கொண்டு வரலாம். ஆனால் அதனால குடும்பத்துக்குள் அவ்வளவு பிரச்சனை வரும் அதற்காக இதோட விடுவோம், நானா சமாதானமாகி வர வரைக்கும் நீ என்னை விட்டு ஒதுங்கியே இரு" என்று கூறி முடித்தாள்.


அப்போதுதான் சாதனா அவள் மனநிலையிலிருந்து யோசிக்க ஆரம்பித்தாள். இது நாள் வரை அவளுக்கு நல்லதுதானே செய்தோம் என்று எண்ணிக் கொண்டு இருந்த சாதனா, தற்போது அவள் கேட்ட கேள்வியில் தான் அவள் நிலைமையில் இருந்தால் எவ்வாறு இருப்போம் என்று யோசித்து அமைதியாக தலை குனிந்து கொண்டாள்.


அங்கிருந்த அனைவருக்குமே அவளுடைய கேள்விக்கான பதில் என்ன கூறுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் இதுநாள்வரை அவளுடைய நிலைமையிலிருந்து யாரும் யோசித்துப் பார்க்கவில்லை, இப்போது யோசிக்கும்போது அவளுக்கு எவ்வளவு ஏமாற்றங்கள் நடந்தது, அனைத்தும் நல்லதாக இருந்தாலும் அனைத்தும் தங்கள் விருப்பப்படி மட்டுமே நடந்தது என்று எண்ணி அமைதியாக நின்று கொண்டனர்.


சாதனா சாகித்யா கூறியதை கேட்டு "சரி அண்ணி நீங்க சொல்ற மாதிரி நமக்குள் அந்த உறவே இருக்கட்டும், நீங்க சமாதானமாகி வர்ற வரைக்கும் நான் கண்டிப்பா காத்திருப்பேன். ஆனா நான் இவ்வளவு நாள் உங்க கூட பிரெண்டா இருந்தது நான் முதலிலிருந்தே ஆசைப்பட்ட விஷயம். அதுக்கு யூஸ் பண்ணிக்கிட்ட விஷயம் தா இந்த கல்யாணம், அதனால எக்காரணம் கொண்டும் உங்க பிரெண்ட்ஸ்ப்ப நான் விட்டுக் கொடுக்க விரும்பல. என் கூடவே இருக்கிறேன் அப்படினு நீங்க சொன்னதே பெரிய விஷயம், நீங்க சமாதானமாகி வர்ற வரைக்கும் கண்டிப்பா நான் காத்திருப்பேன்" என்று கூறி அவள் சாகித்யா கூறியதை அமைதியாக ஏற்றுக் கொண்டாள்.


சாதனா தன்னிடம் மரியாதையாக பேசியது சாகித்யா மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், தான் அனுபவித்த வேதனைகள் அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்து தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள். பின்பு ருத்ரன் புறம் திரும்பினாள். அவனும் அவள் தன்னிடம் என்ன கூற போகிறாய் என்று கேட்க ஆவலாக இருந்தது போல் அவளுடைய முகத்தை பார்த்தான். அதை பார்த்த சாகித்யா மனதில் ரசனை வரத்தான் செய்தது. ஆனாலும் கோபத்தை உள்ளே வைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் பின்னாடி ஒரு நாள் தன்னுடைய வாழ்க்கையில் அது மோசமான நிகழ்வை தரும், என்பதை உணர்ந்து கொண்டவள் போல் அவனிடம் பேச ஆரம்பித்தாள்.


சாகித்யா "இவங்க எல்லாரும் சொல்றத வச்சு பார்க்கும் போது எனக்கு ஒரு விஷயம் நல்லா புரிஞ்சது, உங்களுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்க நிறைய ஆசை இருந்து இருக்கு, அதுக்காகத்தான் உங்களுடைய தங்கச்சி இந்த பிளானை பத்தி சொல்லும்போது அமைதியா இருந்து இருக்கீங்க. உங்ககிட்ட யாரும் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு உயரத்தில் இருக்கும் போது கண்டிப்பா உங்க தங்கச்சியை சமாளிக்க உங்களால் முடியும். அவ சொன்ன ஒரு காரணத்துக்காக உங்களோட வாழ்க்கையே அடமானம் வைக்கிற அளவுக்கு நீங்க எவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லை. ஆக மொத்தம் சாதனா தான் பிளான் பண்ணி செஞ்சா அப்படின்னு வெளியே தெரியுது, ஆனா இது எல்லாத்துக்கும் பின்னாடி அவளுக்கு உறுதுணையாக நீங்கதான் இருந்து இருக்கீங்க. ஆனா நீங்க எங்க வீட்டுக்கு வரும்போது இல்ல அதுக்கு முன்னாடி கூட எங்க வீட்டில் உள்ள எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தை பத்தி பேசி இருந்தீங்க அப்படினா கண்டிப்பா இப்படி ஒரு சூழ்நிலை வந்து இருக்காது.



அதை ஏன் நீங்க பண்ணல ஒருவேளை ராஜி அன்னைக்கு மண்டபத்தை விட்டு போகல அப்படினா என்ன பண்ணி இருப்பீங்க. அவளை தானே கல்யாணம் பண்ணி இருப்பீங்க. எதுக்காக இவ்வளவு செஞ்சு என்னையும் கஷ்டப்படுத்தி வீட்டுல எல்லாரையும் கஷ்டப்படுத்தி அப்படி என்ன கிடைச்சது? உங்க வீட்ல எல்லாருக்கும் எல்லா விஷயமும் தெரிந்து இருக்கலாம். ஆனால் எங்க வீட்ல இந்த எல்லா விஷயத்தையும் நீங்கள் சொல்லும் போது ஒரு நிமிஷம் அவங்க மனநிலையை யோசித்துப் பார்த்தீர்களா? அப்போ என்னோட வாழ்க்கையை பத்தி மட்டும் யோசிச்சு கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க, அவங்க எல்லார்காக மட்டும் தான் இப்ப வர பொறுமையா பேசிகிட்டு இருக்கேன்.



எனக்கு என்னமோ இந்த பிரச்சனையெல்லாம் வராம சந்தோஷமா இந்த கல்யாணத்த நடத்த உங்களால முடிஞ்சி இருக்கும் அப்படின்னு தோணுது. ஆனா நீங்களும் ஏதோ ஒன்றை மனசுல வச்சுதான் இவ்வளவும் பண்ணி இருக்கீங்க. கண்டிப்பா அந்த காரணத்தை இப்ப நான் கேக்குற நிலைமையில இல்லை. அதை கேட்டாலும் என்னால அக்செப்ட் பண்ண முடியுமான்னு எனக்கு தோனல. என்னை கொஞ்ச நாளைக்கு நீங்க எந்த வித தொந்தரவு பண்ணாதீங்க. ஹாஸ்டல் போனா நான் வீட்டுக்கு வரேன் அப்படின்னு சொன்னா மட்டும் வந்து கூட்டிட்டு போங்க. அதுவரைக்கும் எந்த ஒரு விதத்திலும் நீங்க என்ன தொந்தரவு பண்ணாதீங்க. எனக்கான நேரத்தை எனக்காக விட்ருங்க, உங்க தங்கச்சிக்கு சொன்னதுதான் உங்களுக்கும் நான் என்ன சமாதானப்படுத்தி வரும்போது உங்க பக்கம் உள்ள நியாயம் எல்லாத்தையும் நான் புரிஞ்சு இருப்பேன். சோ ப்ளீஸ் ஆனா கண்டிப்பா பெரியவங்க யாருக்கும் இதனால பிரச்சனை வராது வரவும் கூடாது" என்று கூறினாள்.


அவள் கூறிய அனைத்தையும் கைகளை கட்டி கேட்டுக்கொண்டிருந்த ருத்ரன், அவளைப் பார்த்து "நீ சொல்றது எல்லாம் சரிதான். நான் நினைச்சிருந்தா இந்த கல்யாணத்த முதலிலேயே ஸ்டாப் பண்ணி இருக்கலாம். ஆனா ஒரு தடவை உங்க வீட்டுக்கு வந்து உன்ன பாத்துட்டு வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு ரெண்டாவது தடவை அதே வீட்ல வேற பொண்ண வந்து கேட்டா கண்டிப்பா கொடுக்க மாட்டாங்க. அதே மாதிரி எனக்கு உங்க அக்கா அலையன்ஸ் வரும்போதே உன்னையும் நாலு வருஷம் கழிச்சு எங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா அப்படினு ஒரு சின்ன பிட்டு போட்டு பார்த்தோம். ஆனா உன் வீட்ல திட்டவட்டமாகத் சத்யாக்கு தான் கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு சொல்லிட்டாங்க. அது மட்டும் சொல்லல சப்போஸ் சத்யா வேற யாரையாவது காதலிச்சா கூட அவனுக்கு நீ தான் அப்படின்னு சொன்னாங்க. அவங்க பேச்சிலிருந்த உறுதி இந்த மாதிரி எல்லாம் செய்ய வச்சுருச்சு. நீ ஒரு நிமிஷம் யோசிச்சு பாரு நாங்க இப்படி பண்ணது உனக்கு இவ்வளவு கோபம் வருது, இதே இது உன் வீட்ல வந்து நான் பொண்ணு கேட்டு அவங்க தர மாட்டேன்னு சொல்லி உன்ன கடத்திட்டு போய் கல்யாணம் பண்ணி இருந்தா என்ன பண்ணி இருப்ப? இதுக்கு மேல கோவப்பட்டு இருப்ப, அதுக்கு இதுவே பெருசு அப்படின்னு நெனச்சுக்கோ. அப்புறம் அன்னைக்கு உன்னோட அக்கா அந்த மண்டபத்தை விட்டு போகல அப்படினா நானே ஆள் வச்சி அவளை கடத்தி உன்ன கல்யாணம் பண்ணியிருப்பேன். எந்த ஒரு காரணத்திற்காகவும் வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்" என்று நிதானமாக கூறி அவள் முகத்தை பார்த்தான்.


அவன் கூறிய அனைத்தையும் கேட்டவள் கடைசியாக கூறியதை கேட்டு கோபத்தில் பல்லை கடிக்க ஆரம்பித்துவிட்டாள். சுற்றியிருந்த அனைவரும் ருத்ரன் எதற்காக இவ்வாறு பேசுகிறான் என்று எண்ணி கவலை கொண்டனர். ஏனென்றால் ஏற்கனவே கோபத்தில் இருப்பவள் இதையெல்லாம் கேட்டால் இன்னும் கோபத்திற்கு செல்வாள் என்று அனைவருக்கும் தெரிந்து இருந்தது. அதனால் கவலையாக நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.


அவளுடைய கோபம் அதிகமாவதை பார்த்து தான் நினைத்தது சரியாக நடக்கிறது என்று மனதிற்குள் சிரித்த ருத்ரன் இன்னும் சிலவற்றை கூற ஆரம்பித்தான். அதைக்கேட்டு சாகித்யா ஏதோ கூற வர அவளுடைய ஈகோவை தூண்டி விட்டு தான் நினைத்ததை சாதித்தான் ருத்ரன். ஆனால் கண்டிப்பாக அவன் நினைப்பது அனைத்தும் நடந்து விடப் போவது கிடையாது கண்டிப்பாக அவன் மனைவி அதற்கு விடவும் மாட்டாள்.


அப்படி என்ன நடந்தது என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top