• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 17

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ருத்ரன் தன்னுடைய மனைவியின் முகத்திலிருந்து, அவளுடைய கோபம் அதிகரித்துக் கொண்டு இருப்பதை பார்த்து ரசித்துக்கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான் "இனி நீ காலேஜ் ஹாஸ்டல் போகப் போறது கிடையாது. உன்னோட காலேஜ் பக்கத்திலேயே ஒரு வீடு பார்த்தாச்சு. இனி நீ நான் சாதனா 3 பேரும் அங்க தான் தங்க போகிறோம். சாதனா நம்ம கூட தங்குவதில் உனக்கு இஷ்டம் இல்லைனா அவளை ஹாஸ்டலில் கூட சேர்த்துக்கலாம் "என்று ஒரு நமட்டு சிரிப்புடன் கூறி சாகித்யா முகம் பார்த்தான்.


சாகித்யா கோபத்தில் "இப்ப நான் என்ன சொன்னேன், நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்னால எல்லாம் உங்க கூட வந்து தங்க முடியாது. நான் ஹாஸ்டல்ல தங்கி இருப்பேன் வேணும்னா நீங்களும் உங்க தங்கச்சியை கூட்டிக்கிட்டு அங்க தங்கி இருங்க. ஏற்கனவே எல்லாத்தையும் உங்க இஷ்டப்படி தான் செய்து இருக்கீங்க. இதுவும் உங்க இஷ்டபடி செய்ய நினைக்காதீங்க" என்று கூறினாள்.


ருத்ரன் தீர்க்கமாக அவளைப் பார்த்து "நான் எடுத்த முடிவு எடுத்ததுதான் இனி நீ ஹாஸ்டல்ல தங்க போறது கிடையாது. உனக்கு உண்மை தெரியிற வரைக்கும் தான் உன்ன ஹாஸ்டல்ல வைக்கிற ஐடியா இருந்துச்சு. இப்போ உனக்கு எல்லாம் விஷயம் தெரிஞ்சு போச்சு. இனி உனக்கு என்ன செய்யணும்னு தோன்றினாலும் என் கூடவே இருந்துதான் நீ செய்யணும்" என்று கூறினான்.


சாகித்யா "நீங்க சொல்றதுக்கு எல்லாம் என்னால ஒத்துவர முடியாது" என்று அவனுடைய முகத்தை பார்த்து கூறினாள்.


அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த ருத்ரன் "ஏன் எங்க கூடவே இருந்தா நாங்க உன் மேல காட்டுற அன்பு, பாசம் அப்புறம் நான் உன் மேல வச்சிருக்கிற காதல் எல்லாம் சேர்த்து, உன்னோட கோபத்தை கொஞ்ச நேரத்திலேயே போக வைத்துவிடும் அப்படின்னு பயப்படுற போல" என்று கேட்டான்.


அவனைப் பார்த்து சிரித்த சாகித்யா "நீங்க என்ன நினைத்து இப்படி எல்லாம் பேசுற அப்படின்னு எனக்கு நல்லா புரிஞ்சு போச்சு. எப்படி இருந்தாலும் உங்க மேல உள்ள கோவத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தான் போறேன். ஆனா உங்க கூடவே இருந்தா கண்டிப்பா என்னோட கோபத்தை உங்க மேலயும் காட்டுவேன். அதனால எல்லாத்துக்கும் ரெடியா இருங்க, நான் உங்க கூட அந்த வீட்டிலேயே தங்குகிறேன், அதே மாதிரி உங்க தங்கச்சி என் நாத்தனார் அந்த வீட்டிலேயே இருக்கட்டும். இப்ப எனக்கு கொஞ்ச நேரம் ரெஸ்ட் தேவை அதனால நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். எனக்கு இந்த திருவிழா முழுசா என்ஜாய் பண்ண ஆசையா இருக்கு, அதனால எதைப்பற்றியும் பேசி இனி என்னோட மைன்ட டிஸ்டர்ப் பண்ணாம உங்க வேலைய போய் பாருங்க" என்று கூறிவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றுவிட்டாள்.


அவள் சென்ற பிறகு அனைவரும் ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்தனர். அசோக் சக்தியை பார்த்து "உன் தங்கச்சி பார்க்க எவ்வளவு அமைதியா இருக்கா, ஆனால் கோபம் வந்தால் என்னா காட்டு காட்டுகிறா" என்று கேட்டான்.


சக்தி ஒரு மெல்லிய புன்னகையை உதிர்த்து விட்டு "அவளுக்கு யார் மேல எல்லாம் உரிமை இருக்கு அப்படின்னு தோணுதோ, அவங்க கிட்ட மட்டும் தான் கோபத்தை காட்டுவா. அதேமாதிரி இன்னைக்கி ராஜியை அவ பண்ணதெல்லாம் பாத்தீங்க இல்ல, இனி ராஜி நினைச்சாலும் அவ வாழ்க்கைல நுழையமுடியாது. அதுக்கு அனுமதிக்கவும் மாட்டா ஆனால் கொஞ்சம் கொஞ்சமா பழைய மாதிரி மாறிவிடுவா. அதனால இனி அவளை தொந்தரவு பண்ண வேண்டாம்" என்று கூறினான்.


சத்யா ருத்ரனை பார்த்து "எதுக்காக திடீர்னு அவளை ஹாஸ்டல்ல விடாம உங்க கூட தங்க வைக்க முடிவு பண்ணீங்க?" என்று கேட்டான்.


ருத்ரன் "இனி அவளை தனியா விட்டு வைத்தா அது சரியாக இருக்காது. அவ என்கூட இருந்தா தான் என்னோட காதலை அவளுக்கு புரிய வைக்க முடியும். கோபம் கொஞ்சம் கொஞ்சமா குறையும் ஆனா அவளை அவளே சமாதானபடுத்தி என்கூட வாழத்தான் முயற்சி செய்வா. ஆனால் என் கூடவே இருந்தா என்ன புரிஞ்சுக்க முடியும். கோபம் எல்லாத்தையும் என் மேல காட்டிட்டா, பின்னாடி எங்களுக்குள்ள பிரச்சனை வராது. அதுக்காக தான் இந்த முடிவு எடுத்தேன், கண்டிப்பா இந்த முடிவு சரியாக இருக்கும் முடியும் அப்படின்னு நம்புறேன். அவ சொன்ன மாதிரி இந்த திருவிழா எல்லாமே அவ நல்லா என்ஜாய் பண்ணனும், நாம அவளுக்கு செக்யூரிட்டி மட்டும் இருப்போம். இது எங்க ஊரு கோவில் திருவிழா அதனால கடைசி மூன்று நாள் விசேஷம் அப்போ நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா நின்னு செய்ய வேண்டியதிருக்கும், கண்டிப்பா இங்க இருந்து போகும் போது அவளுக்கு ஒரு மன அமைதி கிடைக்கும். இப்போ எல்லாரும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு மத்த வேலையை பார்க்கலாம்" என்று கூறியவன் சாதனா புறம் திரும்பி சாது "நீ உன்னோடு ரூமுக்கு ஷிப்ட் ஆகிக்கோ நான் என்னோட ரூமுக்கு போறேன்" என்று கூறினான்.


அனைவரும் அவன் கூறியது சரியென படவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்றனர். சாதனா அவளுடைய உடைமைகளை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் அவளுக்கு என்று இருந்த அறைக்கு சென்றுவிட்டாள். தன்னுடைய அறைக்கு வந்த ருத்ரன் அங்கு குழந்தை போல் உறங்கும் தன் மனைவியை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு மெதுவாக அவளுடைய நெற்றியில் புரண்ட முடிகளை ஒதுக்கி விட்டு அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தை பதித்துவிட்டு அவளை அனைத்துக் கொண்டு அவனும் தூங்க ஆரம்பித்தான்.


மாலை ஆனதும் ஓய்வெடுக்க சென்ற பெரியவர்கள் ஒவ்வொருவராக கீழே இறங்கி வர ஆரம்பித்தனர். அனைவருக்கும் மாலை நேர சிற்றுண்டி தயாராக இருக்க சிறியவர்கள் அனைவரும் ஓய்வெடுக்க சென்று இருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு, அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டே அந்த சிற்றுண்டியை சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது சிறியவர்கள் மெதுவாக ஒவ்வொருவராக இறங்கி வர ஆரம்பித்தனர். தன்னுடைய அறையில் கண்விழித்துப் பார்த்த சாகித்யா தான் ருத்ரனின் அணைப்பில் இருப்பதைப் பார்த்துவிட்டு அந்த அறையை சுற்றி பார்த்தாள். அப்போதுதான் அவளுக்கு ஒரு விஷயம் நன்றாக புரிந்தது. இது அவளுடைய கணவனின் ரூம் இனி அவனும் இங்கேதான் தங்குவான் என்பதை உணர்ந்து கொண்டவள், மெதுவாக அவனுடைய கைகளில் இருந்து வெளியே வர முயற்சி செய்தாள்.


அவள் அசையும் போதே கண்விழித்த ருத்ரன் அவள் வெளிவருவதற்கு முயற்சி செய்வதை உணர்ந்து இன்னும் இறுக்கமாக அவளை கட்டிக்கொண்டான். அதன் மூலமே அவன் தூக்கத்திலிருந்து விழித்து விட்டான் என்பதை உணர்ந்துகொண்ட சாகித்யா, கஷ்டப்பட்டு அவனை திரும்பிப் பார்த்து "நாம கோவில் திருவிழாக்கு வந்திருக்கோம் ஹனிமூன் வரல ஒழுங்கா இரு" என்று கைகளை தட்டி விட்டு எழ முயற்சி செய்தாள். அவளைப் பார்த்து சிரித்த ருத்ரன் அவள் நெற்றி மற்றும் இரு கன்னங்களிலும் முத்தத்தை வைத்துவிட்டு "நாம திருவிழாக்கு தான் வந்திருக்கிறோம். அதுக்காக இத பண்ண கூடாதுன்னு யாரும் சொல்லல. போ போய் பிரஸ் ஆயிட்டு கீழ போ" என்று கூறிவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.


அவன் இன்னும் அசதியில் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்ட சாகித்யா அதற்குமேல் இந்த வாக்கு வாதத்தையும் வளர்க்க விரும்பாமல், அவளுடைய முகத்தை கழுவிவிட்டு கீழே சென்றாள். அங்கே அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு அவளும் சத்யா அருகில் சென்று அமர்ந்தாள்.


பெரியவர்கள் அனைவருக்கும் கண்டிப்பாக அனைத்து விஷயங்களும் இங்கே பேசப்பட்டிருக்கும் என்ற விஷயம் தெரிந்து இருந்தது. அதனால் அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் அவளிடம் கேட்டு அவளை சங்கடப்பட வைக்க விரும்பாமல் எப்போதும் பேசுவதுபோல் பேசிக்கொண்டிருந்தனர்.


ராணி அவளைப்பார்த்து "ருத்ரன் கிளம்பிட்டானா? இல்லை இன்னும் தூங்கிட்டு தான் இருக்கானா?" என்று கேட்டார்.


சாகித்யா "இல்ல அத்தை அவர் இன்னும் தூங்கிட்டு தான் இருக்காரு" என்று பதில் கூறினாள்.


சாகித்யா அமைதியாக பதில் கூறுவதை பார்த்து அவளது தோழிகள் முழி பிதுங்கி நின்றனர். ஏனென்றால் சாகித்யா ஆடிய ஆட்டத்தை நேரில் பார்த்தவர்கள், அவள் உடனே எப்படி சமாதானம் ஆனாள் என்று எண்ணிக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அப்போது சரியாக சாதனா மேலே இருந்து இறங்கி வர அவள் பின்னே ருத்ரன் வந்து கொண்டிருந்தான். அவர்கள் வருகையை பார்த்த அனைவரும் ஒரு மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு தங்களுடைய வேலைகளை பார்த்தனர். அவளும் பதிலுக்கு ஒரு புன்னகையை கொடுத்து விட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். ருத்ரன் யாரும் எங்களை கவனிக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டு தன் மனைவியை பார்த்து கண்ணடித்து உதடு குவித்து முத்தமிடுவது போல் செய்து விட்டு கீழே வந்தான்.


சாகித்யா மனதில் "அடப் பாவிப் பயலே கொஞ்சமாச்சும் பொண்டாட்டி கோவப்பட்டா, வருத்தப்பட்டாள் அப்படிங்கிற எண்ணம் இருக்கா? இவ்வளவு நாளாக அமைதியாக இருந்த குரங்கு இப்போ அதனால என்ன பண்ண முடியுமோ எல்லாம் பண்ணுது" என்று நினைத்துக்கொண்டே அவனை முறைத்துவிட்டு திரும்பிக்கொண்டாள். இவர்களுடைய கூத்தை பெரியவர்கள் கண்டு கொண்டாலும் கண்டு காணாததுபோல் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.


கீழே வந்த ருத்ரன் சாகி அருகில் ஒட்டிக்கொண்டு அமர்ந்தான். பெரியவர்கள் முன்னிலையில் அவனை எதுவும் கூற முடியாமல் குனிந்து அவன் முகத்தின் அருகில் சென்று "ஒழுங்கு மரியாதையா தள்ளி உக்காருங்க இல்லனா அவ்வளவுதான்" என்று கூறினாள்.


ருத்ரன் அவள் கூறியதை காதில் வாங்காமல் இன்னும் நெருங்கி அமர, இதனால் முகத்தின் அருகே பேசிக் கொண்டிருந்த அவளின் இதழ்கள் அவனுடைய கன்னத்தில் அழுந்த பதிந்தது. இதனால் கடுப்பான அவள் அவனுடைய கால்களை ஓங்கி மிதிக்க முயன்றாள். ஆனால் அதை சாதுரியமாக தடுத்த ருத்ரன் யாரும் அறியாமல் அவளுடைய காலை பிடித்துக்கொண்டான். இதற்கு மேல் விட்டால் கண்டிப்பாக எல்லார் முன்னிலையிலும் தன் மானம் போய்விடும் என்பதை உணர்ந்துகொண்ட சாகித்யா அதன்பின்பு அமைதியாக இருந்து கொண்டாள்.


சிவலிங்கம் அனைவரையும் பார்த்து "இன்னும் ஒரு மணி நேரத்தில எல்லாரும் கோயிலுக்கு போகனும் போய் ரெடி ஆகுங்க" என்று கூறினார். அனைவரும் அவர் கூறியதற்கு தலையசைத்து சம்மதம் தெரிவித்து, தங்களுடைய அறைகளுக்குச் சென்று தயாராக சென்றனர். ருத்ரன் கீழே திருவிழா விஷயமாக பேசிக்கொண்டிருந்தான். சிறிது நேரம் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றான். அங்கு ஏற்கனவே சாகித்யா தயாராகி முடித்து இருந்தாள். உள்ளே சென்றவன் அவள் நெற்றியில் குங்குமத்தை வைத்துவிட்டு தானும் தயாராக சென்றான்.


ஏனோ சாகித்தியாவிற்கும் அவன் குங்குமம் வைப்பது பிடித்துதான் இருந்தது. அதனால் அவளும் எதுவும் கூறாமல் கீழே இறங்கிச் சென்றாள். கீழே பெண்களுக்கு பாட்டி பூத்தொடுத்து வைத்திருக்க அதை அனைவருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். சாகித்யா நேராக பூஜை சாமான்கள் எடுத்துவைக்க சென்று இருக்க அவளுக்கு கொடுக்க வேண்டிய பூ மட்டும் பாட்டி கையில் இருந்தது. அப்போது சரியாக ருத்ரன் வந்து சேர அவன் கையில் பூவை கொடுத்த பாட்டி "நீ இத உன்னோட பொண்டாட்டிக்கு வைத்துவிட்டு விடு" என்று கூறிவிட்டு அவரும் மற்ற வேலைகளை பார்க்க கிளம்பி விட்டார்.


ருத்ரன் தன்னுடைய மனைவியை கண்களாலேயே தேடினான். அவள் மும்முரமாக அனைவருடனும் சேர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்தவன். அங்கே சென்று அவளை நிமிர்த்தி தலையில் பூவை வைத்து விட்டு அவனும் அங்கே வேலை பார்க்க ஆரம்பித்தான். சாகித்யா இதை பெரிதாக கண்டு கொள்ளாமல் வேலைகளில் மும்முரமாக இருந்தாள்.


அனைவரும் ஒன்றாக கோவிலுக்கு சென்றனர். பெண்கள் அனைவரும் அழகு தேவதைகளாக அவர்களை சுற்றி பாதுகாப்பிற்காக ஆண்கள் வந்து கொண்டிருந்தனர். எவ்வளவுதான் நம் ஊரில் நம் சொந்தங்கள் என்று இருந்தாலும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அதிகம் தேவை என்பதை உணர்ந்து இருந்தவர்கள் போல, அவர்கள் அனைவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருந்தனர். சாகித்யா மகிழ்ச்சியாக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொண்டே வந்தாள். அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் ருத்ரன் சக்தி சத்யா யாராவது ஒருவரிடம் கேட்டு வாங்கிக் கொண்டே வந்தாள். அவர்களும் அவளது மகிழ்ச்சியை பார்த்து சந்தோஷமாக உடன் சென்று கொண்டிருந்தனர்.


அன்றைய நாள் மகிழ்ச்சியாக முடிய சாகித்யா முகத்திலிருந்த சந்தோஷத்தைப் பார்த்து பெரியவர்கள் அனைவரும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தனர். அதன் பிறகு வந்த ஒவ்வொரு நாளும் ருத்ரனின் சின்ன சின்ன சேட்டைகள் மட்டும் இருக்க மற்றபடி அனைத்து நிகழ்ச்சிகளையும் மிகவும் உற்சாகமாக பார்த்து ரசித்தாள் சாகித்யா. ஒவ்வொரு வீட்டில் இருப்போரும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்களை வைத்து அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் தருணங்களில், அவர்களது வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டாள்.


பூமிதி திருவிழா என்று ஒவ்வொன்றும் நடக்கும்போது மகிழ்ச்சி மட்டுமல்லாமல் பக்தியுடன் அவள் செய்ததைப் பார்த்து வீட்டில் இருந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது. இறுதி திருவிழாவான மஞ்சள் திருவிழா நடைபெற அனைவரும் தங்கள் கைகளில் மஞ்சள் தண்ணீரை எடுத்துக் கொண்டு வலம் வர ஆரம்பித்தனர். காலை எழும்போது ருத்ரன் மொத்தமாக அவனது தியாவை மஞ்சளால் அபிஷேகம் செய்து விட்டான். அதைப் பார்த்து கடுப்பான சாகித்யா அவனை துரத்த ஆரம்பித்தாள். ஆனால் அவள் கைகளில் சிக்கிக் கொள்ளாமல் அவன் காணாமல் போய்விட்டான்.


இதனால் அந்த ஊர் முழுவதும் அவனை தேட ஆரம்பித்தாள். இங்கே அனைவரும் மஞ்சள் திருவிழாவில் பிஸியாக இருக்க இவள் தனியாக சுற்றிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த வருண் மற்றும் அவரது நண்பர்கள் தியாவை வைத்து ருத்ரனை பழிவாங்க முடிவு செய்தனர். ஏனென்றால் சாகித்யா வருணை கிண்டல் செய்ததை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் அவளை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று திருவிழாவில் ஒவ்வொரு நாளும் எண்ணிக் கொண்டிருந்தான். ஆனால் எப்போதும் யாராவது ஒருவர் அனைவருக்கும் துணையாக இருக்க எதுவும் செய்ய முடியாமல் அமைதி காத்து கொண்டிருந்தான். ஆனால் தற்போது இவள் தனியாக வந்தது அவனுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது.



ஆனால் இது ஏதும் அறியாத சாகித்யா மனதில் தன் கணவனை கண்களால் தேடிக் கொண்டு இருந்தாள். யாரும் இல்லாத இடத்திற்கு அவள் வரும்போது அவளை வருண் மற்றும் அவரது நண்பர்கள் சுற்றிவளைத்தனர். அதை பார்த்து அவள் ஒரு பெருமூச்சை விட்டு விட்டு "டேய் லூசு பயலுகளா உங்களுக்கு இன்னமும் என்ன வச்சி என்னோட புருஷன பழி வாங்க முடியும் அப்படி நம்பிக்கை இருக்கா? எனக்கு அவன் எங்கே இருக்கிறான் அப்படின்னு தெரியாது, அதான் தேடிட்டு இருக்கேன். ஆனா நான் போற இடமெல்லாம் எனக்கே தெரியாம அவன் என் பின்னாடி இல்லைன்னா முன்னாடி வந்துட்டு தான் இருப்பான் லூசு மாதிரி ஏதாவது பண்ணி அவங்கிட்ட அடிவாங்கி சாகாத" என்று கூறினாள்.


அவளைப் பார்த்து நக்கலாக சிரித்த வருண் "என்னம்மா புத்திசாலித்தனமா பேசுறதா நினைப்பா உன்னை இவ்வளவு நேரம் நாங்க பாலோவ் பண்ணிட்டு தான் வருகிறோம். உன்னோட புருஷன் இங்க பக்கத்துல எங்கேயுமே இல்ல நாங்க இப்ப பெருசா ஒன்னும் பண்ண போறது இல்ல உன் மேல கை வைக்க போறோம் என்ன உன்னோட மேல இருக்க மஞ்சள்னால நாங்க கை வச்சு தடம் அப்படியே தெரியும் அதை உன் புருஷன் பார்த்து வெந்து சாகவேண்டும் அதை நாங்க பார்க்கணும்" என்று குரூரமாக கூறினான்.



அவன் கூறியதை கேட்டு உள்ளுக்குள் பயம் வந்தாலும் வெளியே தைரியமாக நின்ற சாகித்யா "தைரியம் இருந்தா நீ சொன்னத செய் டா பாக்கலாம்" என்று சவாலாக கூறினாள்.


அதைக் கேட்டு கடுப்பான வருண் அவளை நோக்கி முன்னேற எங்கிருந்தோ பறந்து வந்த கட்டை அவளுடைய தலையை பதம் பார்த்தது யார் எறிந்தார்கள் என்று அனைவரும் சுற்றி முற்றி பார்க்க அந்த நேரத்தைப் பயன்படுத்திய சாகித்யா கட்டை வந்த திசையை நோக்கி சென்றிருந்தாள். வருண் மற்றும் அவனது நண்பர்கள் சுற்றி முற்றி பார்த்துவிட்டு சாகித்யா இருக்கும் புறம் திரும்ப அங்கே அவளைக் காணாமல் கோபம் அடைந்தனர். அந்த நேரத்திற்குள் ருத்ரன் தவிர மற்றவர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களை பார்த்தவர்கள் மனதில் பயம் இருந்தாலும் வெளியே தைரியமாக நின்று கொண்டிருந்தனர்.


அவர்களின் முகத்தை பார்த்தே அவர்கள் மனதில் உள்ளதை படித்த அசோக், அவர்கள் அனைவரையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். அதன்பிறகு கோபமாக முறைத்து அவர்களை அடிக்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் முதலில் சாகித்யா தனியே செல்லும் போது கவனிக்க தவறிய அவர்கள் சிறுது நேரத்தில் அவளை காணாமல் தேட ஆரம்பித்தனர். தனித்தனியாக அலைந்து தேடிய போது தான் வருண் பேசியது அனைத்தும் அவர்கள் காதில் விழுந்தது. அதனால் கொலைவெறியில் அவர்களை அடிக்க ஆரம்பித்தனர்.


அங்கே கட்டை வந்த திசையை நோக்கி சென்ற சாகித்யா அங்கே தன்னுடைய கணவனை கண்டு கொண்டாள். அவன் எதிர்பார்க்காத நேரம் அவன் மேல் கட்டி மஞ்சளை பூசிவிட்டாள். திடீரென அவள் வருவாள் என்று எதிர்பார்க்காத ருத்ரன் கால் இடறி விழுந்தான். அவனது மனைவி சாகித்யாவும் அவன் கீழே விழுவான் என்று எதிர்பார்க்காத அவள் அவன் மேலேயே விழுந்தாள். ஆகமொத்தம் இருவரும் மஞ்சளால் நிறைந்து காணப்பட்டனர்.


ஒரு சில நிமிடங்கள் தன்னை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பின்பு சுதாரித்து எழுந்து தங்களுடைய வீட்டை நோக்கி புறப்பட்டனர். என்றுமில்லாமல் சாகித்யா மனம் ஏதோ தடுமாற்றம் அடைந்தது. அதைப் புரிந்து கொண்ட ருத்ரன், அவளை எந்தவித கேலியும் செய்யாமல் அமைதியாக வந்தான். வீட்டிற்கு வந்தவர்கள் நேராக தங்களை சுத்த படுத்திக்கொள்ள தங்களுடைய அறைக்கு சென்றனர்.


அங்கே வருண் மற்றும் அவனது நண்பர் அனைவரையும் எவ்வளவு சிறப்பாக கவனிக்க முடியுமோ அவ்வளவு சிறப்பாக தங்களுடைய கைகளால் கவனித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தனர். அன்றைய நாள் மட்டுமே அவர்கள் அனைவரும் அங்கு ஒன்று சேர்ந்து இருக்க முடியும் என்ற காரணத்தினால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடியுமோ, அவ்வளவு மகிழ்ச்சியாக தங்களுடைய நாளை கொண்டாடி முடித்தனர். ருத்ரன் மற்றும் சாகித்யா இருவரும் சிறிது நேரத்தில் அனைவருடனும் ஒன்றாகி தங்களுடைய நேரத்தை இன்பமாக செலவழித்து முடித்தனர்.


அடுத்த அத்தியாயம் முதல் ருத்ரன் மற்றும் சாகித்யா புது வீடு அங்கு அவர்களின் வாழ்க்கை என்று கொண்டு செல்லப்படும்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
 
Top