சரவணன் எவ்வளவோ யோசித்துப் பார்த்தும் தன்னை காதலிக்கும் பெண் யார் என அவனால் கண்டறிய முடியவில்லை. தன்னை பார்த்து சிரித்துக் கொண்டிருந்த சாகித்யா மற்றும் சாதனா புறம் திரும்பியவன் "சத்தியமா அது யாருன்னு எனக்கு தெரியல நீங்களே சொல்லிருங்க ப்ளீஸ்" என்று கேட்டான்.
இவ்வளவு நேரம் அவனுடைய முகத்தில் ஏற்படும் யோசனைகளை பார்த்து சிரித்துக் கொண்டு இருந்த இருவரும் தற்போது அவன் ஒத்துக்கொண்டதை பார்த்து வெளிப்படையாக சிரிக்க ஆரம்பித்தனர். பின்பு மெதுவாக தங்களுடைய சிரிப்பை கட்டுப்படுத்திக்கொண்டு "கண்டிப்பா சாயங்காலம் சொல்றோம் மறக்காம வெயிட் பண்ணு இப்ப நாங்க கிளம்பறோம் பாய்" என்று கூறி விட்டு தங்கள் அருகில் வந்த தங்கள் தோழிகளை இழுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
இவ்வளவு நேரம் நடந்த அனைத்தையும் பார்த்த சரவணனின் நண்பன் ஒருவன் "மச்சி நீ அவள லவ் பண்றத சொல்ல தான் இங்க வந்த, இப்ப என்னடான்னா அவங்க ரெண்டு பேருக்கும் பிரண்டா மாறி இருக்க அவ்வளவுதானா உன்னோட காதல்" என்று கேட்டான்.
அதற்கு சரவணன் ஒரு மெல்லிய புன்னகையை சிந்தித்து விட்டு "மச்சி உண்மையாவே நான் அவளை மனசார காதலித்தேன், அதனாலதான் அவளுக்கு எந்த வித கஷ்டமும் வரக்கூடாது என நினைக்கிறேன். அவ யாரையுமே காதலிக்கலை அப்படின்னா என்ன காதலிக்க சொல்லி கேட்கலாம் ஆனா மூணு வருஷமா வேற ஒருத்தரை உயிருக்குயிரா லவ் பண்ற ஒருத்திய என்ன காதலிக்க சொல்லி கேட்கிறது தப்பு. அதே மாதிரி எல்லா உண்மையையும் என்கிட்டே சொல்லிட்டுதான் போயிருக்கா அவ நினைச்சிருந்தா என்னோட தகுதி தராதரம் எல்லாத்தையும் வெச்சு பேசி என்னை அவமானப்படுத்தி அனுப்பி இருக்கலாம். ஆனால் எதையுமே அவ செய்யல அதே மாதிரி என்ன ஒரு பொண்ணு காதலிக்கிறா அப்படின்னு சத்தியமா எனக்கு தெரியாது, அதனால அந்தப் பொண்ணு யாருனு தெரிஞ்சு அந்த பொண்ணு கிட்ட பேசணும். ஆனா என்னைக்குமே இவங்க ரெண்டு பேருக்கும் நான் துரோகம் பண்ண மாட்டேன் ஒரு நல்ல நண்பனா எப்பவுமே அவங்க கூடவே இருப்பேன். இனி இந்த விஷயத்தைப் பத்தி பேசாத" என்று கூறிவிட்டு தன்னுடைய வகுப்பிற்கு கிளம்பினான். அவன் நண்பர்களும் அவன் கூறியவற்றில் உள்ள உண்மையை உணர்ந்து அமைதியாக அவன் பின்னே சென்றனர்.
இங்கே தோழிகள் அனைவரும் தங்களுடைய வகுப்புகளுக்கு சென்று பாடத்தை கவனிக்க ஆரம்பித்தனர். யாரும் இவர்கள் தனியாக சீனியரிடம் பேசி கொண்டிருந்ததை பற்றி கேட்கவில்லை. ஆனால் அவர்கள் பேசியது அதற்கு சரவணன் தன்னுடைய நண்பர்களிடம் கூறியது என அனைத்தையும் கேட்ட தர்ஷன் தன்னை நினைத்து தலைகுனிந்தான். பழக்கமே இல்லாத ஒருவன் தன் காதலிக்காக எவ்வளவு உண்மையாக மாறி உள்ளான் என்பதை பார்த்தவன், தான் உண்மையாக நட்பை எப்படி இழந்திருக்கிறோம் அதுவும் தான் செய்த மடத்தனத்தை எண்ணி எண்ணி கலங்கி கொண்டே விடுதி வந்து சேர்ந்தான். ஆனால் ஏதோ ஒரு மூலையில் நிச்சயமாக ஒருநாள் தன்னுடைய உண்மையான நட்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பாட சம்பந்தமான வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.
மாலை தோழிகள் அனைவரும் விடுதிக்கு சென்ற பிறகு சாகித்ய சாதனா இருவரும் ருத்ரன் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தனர். சரவணன் அப்போது வரை அங்கு வந்து சேரவில்லை அவன் வரவில்லை என்பதை உணர்ந்த சாதனா மெதுவாக சாகித்யாவை பார்த்து "சாகி நம்ம கூட்டத்துல யாரு சரவணன லவ் பண்றா உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும் ஏற்கனவே உனக்கு சரவணன் தெரியுமா? அப்படி தெரிஞ்சிருந்தா இன்னைக்கு புதுசா பாக்குற மாதிரி பார்த்து இருக்க மாட்டியே" என்று கேட்டாள்.
சாகித்யா "அட நீ வேற சாது எனக்கு சரவணனை யாருனே தெரியாது இன்னைக்கு தான் முதல் முதலா பார்க்கிறேன். ஆனா ஒரு தடவை நாங்க ரூம்ல இருக்கும் போது அர்ச்சனா உன்ன ஒருத்த லவ் பண்றதாவும் டெய்லி வந்து உன்ன பாக்குறதுக்கு மட்டுமே காத்திருப்பதாகவும் ஆனா மதி அவன காதலா பாக்குறதாகவும் சொல்லிட்டு இருந்தா, அப்போ நான் அதை பெருசா கண்டுக்கல. ஆனா இன்னைக்கு சரவணன் சொல்லும்போது அது அவனாகத்தான் இருக்கும் அப்படின்னு தோணுச்சு. அதுமாதிரி நான் சொல்லுறது முன்னாடி மதி சுவாதி ரெண்டு பேரும் வந்துட்டு இருந்தாங்க மதி கண்ல சரவணன் மேல ஒரு ஏக்கம் அப்புறம் காதலை பார்த்தேன். நம்மகிட்ட வராம மதி சுவாதிய வேற வேலையா கூட்டிட்டுப் போய்ட்டா அப்போதே கன்ஃபார்ம் பண்ணிட்டேன் அதனாலதான் தைரியமா சொன்னேன்" என்று கூறினாள்.
சாதனா "அப்படியா நீ சொல்லும்போதே கண்டிப்பா இது நம்ம கூட்டத்தில் யாரோ ஒருத்தங்க அப்படின்னு தெரிஞ்சது, அதனாலதான் நானும் உனக்கு ஏத்த மாதிரி பேசினேன். சரவணன் மதி ரெண்டு பேரும் சேர்ந்தா நல்லாத்தான் இருக்கும் பார்ப்போம் என்ன தான் நடக்கப்போகுது அப்படின்னு, சரவணன் சாயங்காலம் வரதா சொன்னான் என்ன இப்ப வரைக்கும் காணல" என்று கேட்டாள்.
சாகித்யா தூரத்தில் வந்து கொண்டிருந்த சரவணனை காட்டி "அதோ வருகிறார் பார் சார் கண்டிப்பா சரவணன் மதி கிட்ட பேசுவான், அதுக்கப்புறம் அவங்க வாழ்க்கைக்கான முடிவை அவர்களே எடுக்கட்டும் நாம தலையிட வேண்டாம்" என்று கூறினாள்.
சரியாக சரவணன் அவர்கள் பக்கத்தில் வந்து விட இருவரும் அவனைப் பார்த்து சிரித்து விட்டு சாகித்யா சரவணனை பார்த்து "உன்ன லவ் பண்ற பொண்ணு வேற யாரும் இல்லை எங்க கூடவே சுத்துற மதி தான். அவளுக்கு முதல்ல இருந்தே சாதனா லவ் பண்ற விஷயம் தெரியும் அதனால ஃபர்ஸ்ட் உன்ன நெனச்சு பீல் பண்ண தான் செஞ்சி இருப்பா, போகப்போக அவளறியாமல் உன் மேல காதல் வந்து இருக்கு. இப்போ அவ கண்ணுல உனக்கான காதலையும் நீ பார்க்கலாம் கூடவே நீ அவளுக்கு கிடைப்பாயா அப்படிங்கிற ஏக்கத்தையும் பார்க்கலாம் உனக்கு அவகிட்ட பேசணும்னு தோன்றினால், நாளைக்கு இன்னைக்கு நாங்க இருந்த இடத்துக்கு அவளையும் நாளைக்கு எங்க கூட உட்கார வைக்கிறோம். நீங்க ரெண்டு பேரும் பேசி என்ன முடிவு எடுக்கணும் என்று தோன்றினாலும் அதை எடுங்கள் நாங்கள் அதில் தலையிட மாட்டோம்" என்று கூறினாள்.
சரவணன் இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு "கண்டிப்பாக அந்த பொண்ணு கிட்ட எனக்கு ஒரு சில விஷயங்கள் பேசணும் அதனால நாளைக்கு நான் கண்டிப்பா வரேன் உங்க ரெண்டு பேருக்கும் தேங்க்ஸ் சொல்ல ஆசைப்படுகிறேன். என்ன பத்தி எதுவுமே தெரியாம என்ன ஒரு நல்லவனா நம்பி புரிஞ்சுக்கிட்டு எனக்கு புரிய வைத்தது என்று அனைத்திற்கும் ரொம்ப தேங்க்ஸ்" என்று கூறினான்.
சாதனா "தேங்க்ஸ் எல்லாம் சொல்லி எங்கள வயசானவங்க மாதிரி ஆக்கி விடாதே! நாங்க சின்ன பொண்ணுங்க தான் ஃபிரண்ட்ஸ் ஆனபிறகு மரியாதை தேங்க்ஸ் சாரி இதெல்லாம் இருக்க கூடாது புரியுதா?" என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே ருத்ரன் சாதனா மற்றும் சாகித்யா தலையில் இரண்டு கொட்டுகளை பரிசளித்துவிட்டு வந்து நின்றான்.
தங்கள் தலையை தேய்த்த இருவரும் யார் என்று அறிந்ததால் திரும்பிப் பார்க்கவில்லை சரவணன் ருத்ரனை பார்த்து "என்னாச்சு எதுக்கு ரெண்டு பேரையும் அடிக்கிறீங்க பாவம் வலிக்க போகுது" என்று கூறினான்.
இவர்களை பாவம் என்று கூறியதை பார்த்த ருத்ரன் மற்றும் அப்போதுதான் வந்த அசோக் இருவரும் சரவணனை அதிர்ச்சியாக பார்த்தனர். பின்பு அசோக் "உனக்கு இன்னும் இதுங்க ரெண்டும் பத்தி தெரியல அதனாலதான் பாவம்ன்னு சொல்லிக்கிட்டு இருக்கே, உண்மை தெரியும்போது நீயே அதை வாபஸ் வாங்கிக்கிறேன் அப்படின்னு சொல்லுவே என்று கூறியவன்" சாதனா சாகித்யா இருவரையும் முறைத்தான் அவர்களிருவரும் அதையும் கண்டு கொள்ளாமல் நின்று கொண்டிருந்தனர்.
அதைப் பார்த்த சரவணனுக்கு ஆச்சரியமாக இருந்தது பின்பு சாதனா அசோக் மற்றும் ருத்ரனிடம் சரவணனை தங்களுடைய நண்பன் என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அதேபோல் ருத்ரன் மற்றும் அசோக் இருவரையும் சரவணனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். மூவரும் கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர்.
ருத்ரன் சரவணனை பார்த்து "என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள் ஒருத்தருக்கு பிரண்டா இருந்தாலே அவன் வாழ்க்கை கஷ்டம் இதுல நீ ரெண்டு பேருக்கும் வேற பிரண்டா இருக்க ரொம்ப கஷ்டம்! ஏதாவது கஷ்டப்பட்டா தயங்காம எங்க ரெண்டு பேருக்கும் சொல்லு நாங்க உனக்கு ஆறுதலா வந்து இருக்கிறோம், ஏன்னா கண்டிப்பா இவங்க ரெண்டு பேரையும் திருத்த முடியாது" என்று கூறினான்.
சாகித்யா ருத்ரனை முறைத்து பார்த்துவிட்டு சரவணனை பார்த்து "நீ கிளம்பு இவங்க கூட இருந்தா உன்னையும் சேர்த்து மாத்தி விட்டுருவாங்க. இவங்க ரெண்டு பேரும் கூடவும் சேராத ரொம்ப பேட் பாய்ஸ்" என்று கூறி சாதனாவை இழுத்துக்கொண்டு காரில் சென்று அமர்ந்தாள்.
அவர்கள் செல்வதை பார்த்து மூவரும் சிரிக்க ஆரம்பித்தனர் பின்பு சரவணன் அவர்கள் இருவரிடமும் தான் சாதனாவிடம் காதல் சொல்லியது அதற்கு அவர்கள் பேசியது என்று அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறினான். அதைக்கேட்ட ருத்ரன் மற்றும் அசோக் இருவரும் அவன் தோளைத் தட்டி "நாங்க கண்டிப்பா உன்ன தப்பா நினைக்க மாட்டோம் அதே மாதிரி இந்த ஆறு மாச பிராஜெக்ட் நீ எங்க கம்பெனியில வந்து தான் செய்யணும் அத நீ அங்க வந்து செய்யாமல் இங்க இருந்து செய்ய முடியுமா? இவங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் பாதுகாப்பு தேவை நீ இருந்தா நாங்க கொஞ்சம் ரிலாக்ஸா இருப்போம். உனக்கு தேவையான இன்ஸ்டிரக்ஷன் எல்லாத்தையும் நாங்க உனக்கு போன் மூலமாக தருகிறோம் உனக்கு சம்மதமா?" என்று கேட்டான்.
சரவணன் மகிழ்ச்சியாக தலையசைக்க மூவரும் தங்களுடைய தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொண்டு கிளம்பினார்கள். ஏற்கனவே சரவணன் அனைத்தையும் கூறியிருப்பான் என்று தெரிந்ததால் சாதனா சாகித்யா இருவரும் ருத்ரன் அசோக் இருவரிடமும் ஒன்றும் கூறவில்லை, ஏற்கனவே இவர்கள் இருவரும் காலையில் செய்த செயலால் கொஞ்சம் கடுப்பாக இருந்த அசோக் ருத்ரன் இருவரும் இவர்களைக் கண்டு கொள்ளவும் இல்லை.
அப்படி என்னதான் இவர்கள் செய்தார்கள் என்றால் ஸ்கூட்டி பற்றி பேசி 15 நாட்களுக்கு மேல் சென்று இருக்க ருத்ரன் அதைப் பற்றி எதுவும் கூறாமல் இருந்ததால் நேற்று மாலை சாகித்யா ஸ்கூட்டி பற்றி பேச ஆரம்பித்தாள். ஆனால் ருத்ரன் "கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் ஸ்கூட்டில என்னால விட முடியாது. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ நீ எதுவும் பண்ணவும் முடியாது ஸ்கூட்டி இந்த வீட்டுக்கு வரவும் செய்யாது" என்று கூறியவன் தன்னுடைய அத்தை மற்றும் மாமா இருவரிடமும் சாகித்யா ஸ்கூட்டியில் தான் செல்வேன் என்று அடம் பிடிப்பது பற்றி போன் செய்து கூறிவிட்டான்.
ஏற்கனவே அவன் தன்னுடைய வீட்டிலும் அதைப்பற்றி சொல்லி இருக்க இருவருக்கும் அவர்கள் தாய் தந்தை இருவரிடமும் இருந்து சரியாக மண்டகபடி கிடைத்தது. இதனால் கோபமடைந்த இருவரும் காலையில் அவன் அவசரமாக எடுத்து வைத்திருந்த ப்ராஜெக்ட் பேப்பர் அனைத்தையும் மாற்றி வெறும் தாளாக வைத்துவிட்டனர். அதன்பிறகு ருத்ரனிடம் எதுவும் பேசாமல் கோபத்தில் இருப்பது போல் இருந்து கொண்டனர். அவனும் அவசரத்தால் அதை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான்.
அந்த ப்ராஜெக்ட் இவர்கள் புதிதாக ஆரம்பித்திருக்கும் கம்பெனி உடையது. மீட்டிங் ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அசோக் ருத்ரன் இருவரும் அதை ஒரு முறை திரும்பிப் பார்க்க நினைத்து அந்த பைலை திறக்க, மொத்தமாக வெள்ளை பேப்பர் ஆக இருந்ததை வைத்தே இதை யார் செய்து இருப்பார்கள் என்பது இருவருக்கும் தெளிவாக புரிந்தது. எப்போதுமே ஒன்றுக்கு இரண்டு காப்பி வைத்திருப்பது அவர்களின் வேலை அவர்களின் நல்ல நேரமோ என்னவோ நேற்று ருத்ரன் ஒன்றை மட்டுமே வீட்டிற்கு எடுத்து சென்று இருந்தான்.
அதனால் அவசரமாக மற்றதை எடுத்து ஒருமுறை இருவரும் பார்த்துவிட்டு மீட்டிங் அட்டென்ட் செய்ய சென்றனர். அதனால்தான் மாலை இருவரும் கடுப்பாக இருந்தனர். ஒருவேளை இன்னொன்று இருக்காவிட்டால் சரியான நேரத்திற்கு அவர்களால் அதை அட்டென்ட் செய்ய முடிந்து இருக்காது எதில் விளையாடுவது என்று இவர்கள் இருவருக்கும் தெரியவில்லையா என்று எண்ணி கடுப்பாக தான் இருந்தனர்.
ஆனால் சாதனா சாகித்யா இருவருக்கும் அது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்து இருக்க தான் செய்தது, ஆனாலும் தங்களை பெற்றோரிடம் மாட்டிவிட்டது மட்டுமல்லாமல் தாங்கள் எவ்வளவு கெஞ்சியும் மனம் இரங்காத ருத்ரனை நினைத்து கோபத்தில் தான் இவ்வளவு செய்து விட்டனர். அதனால் அவர்கள் இவர்களின் கடுப்பை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
வீட்டிற்கு வந்து சேர்ந்தவுடன் இருவரையும் பார்த்த ருத்ரன் "இந்த மாதிரி ஏதாவது நீ ரெண்டு பேரும் பண்ணிக்கிட்டே இருந்தா என்னைக்குமே இரண்டுபேரையும் ஸ்கூட்டியில் காலேஜுக்கு விடமாட்டேன் எந்தவித சேட்டையும் செய்யாமல் ஒழுங்கா இருக்கிற வழியை பாரு" என்று கூறினான்.
சாதனா "அண்ணா நாங்க இனி இதுமாதிரி பண்ணல ஆனா கொஞ்சம் கன்சிடர் பண்ணு சீக்கிரம் காலேஜுக்கு ஸ்கூட்டியில் போக பெர்மிஷன் தா" என்று கூறி அவள் அசோக் முகம் பார்த்தாள்.
அசோக் அவளை கண்டுகொள்ளாமல் ஏதோ ஒரு வேலையாக இருந்தான், அதிலிருந்தே அவன் கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்த சாதனா அவன் அருகில் அமைதியாக அமர்ந்து விட்டாள். ருத்ரன் அதை கண்டும் காணாதது போல் இருந்தான்.
ஆனால் சாகித்யா சும்மா இருக்காமல் "ஆமா நாங்க எதுவுமே பண்ணாம இருந்தா மட்டும் துரை பெர்மிஷன் தந்து எங்களை வழியனுப்பி வைத்து விடுவார், அடப் போங்கய்யா எல்லா விஷயத்துலயும் பயந்துகிட்டே இருந்தா எதுவுமே நிம்மதியா பண்ண முடியாது. கண்டிப்பா ஏதோ ஒரு பிரச்சனை அதனாலதான் எங்கள போக விடமாட்டேன் அப்படின்னு சொல்ற நீ எங்களை பொத்தி பொத்தி வச்சாலும் எப்ப சின்ன சான்ஸ் கிடைச்சாலும் எங்களுக்கு ஆபத்து வரத்தான் போகுது. அதுக்கு முடிஞ்ச அளவுக்கு எங்கள தனியா விட்டா கண்டிப்பா எங்க மேல கூட கொஞ்சம் அக்கறை உனக்கு இருக்கும் அதனால பெருசா எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை வராது. உன் தங்கச்சி வேணும்னா நீ சொல்றதை கேட்டு அமைதியா தலையாட்டிட்டு இருக்கலாம் ஆனால் நான் அப்படி இருக்க மாட்டேன்" என்று ருத்ரனை பார்த்து கூறி அவளுடைய காலேஜ் பேக்கை தூக்கி அசோக் மேல் போட்டாள்.
அசோக் அந்த புத்தகப்பையை கைகளால் பிடித்து தன் அருகில் வைத்துக்கொண்டு அவள் முகத்தை பார்த்தான். அதைப்பார்த்த சாகித்யா "நான்தான் இத பண்ண சொன்னேன் சாதனா வேணும்னே இது ஒன்னும் பண்ணல அதனால அவகிட்ட மூஞ்சி தூக்கி வைத்துவிட்டு இருக்காதே! இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் எங்களுக்கு பர்மிஷன் கொடுக்காமல் அதை வேண்டாம் இதை வேண்டாம்னு சொல்லிக்கிட்டே இருக்காதீங்க! எனக்கு அவ்வளவு கோபம் வருது என் வீட்டில் இருக்கும் போது கூட என்னுடைய இஷ்டத்துக்கு தான் நான் இருந்தேன். இங்க சின்ன சின்ன விஷயம் கூட ஆசைப்பட்ட மாதிரி பண்ண முடியல என்னதான் வாழ்க்கை" என்று கத்திவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றுவிட்டாள்.
அவள் பின்னே ருத்ரன் சென்றான் இங்கே சாதனா அசோக்கிடம் "என்ன மன்னிச்சுடுடா வேணுமின்னே அப்படி பண்ணல சின்ன வயசுல இருந்தே சுத்தி ஆபத்து இருக்கு அப்படின்னு பார்த்து பார்த்து தான் எல்லாத்தையும் செய்வீங்க. ஆனா இவ்வளவு நாள் சந்தோஷமா சுத்தி வாழ்ந்துட்டு இருந்த அவளுக்கு இது ஏதோ அவளை அடக்கி வைக்கிற மாதிரி இருக்கு அதனால இந்த மாதிரி சின்ன சின்ன வேலைகள் ஏதாவது செய்கிறா நானும் அவ கூட சேர்ந்து செஞ்சா அவ கொஞ்சம் நார்மலாகி ப்ரீயா இருக்கா எப்படியும் நீங்க எக்ஸ்ட்ரா காபி வச்சு இருப்பீங்க அப்படின்னு தெரியும் அதனாலதான் அவ கூட சேர்ந்து இப்படி பண்ணேன் இனிமே இப்படி பண்ணமாட்டேன். ஆனா அவ கேட்கிற மாதிரி ஸ்கூட்டி வாங்கி குடுக்க சொல்லி அண்ணன் கிட்ட சொல்லு வேணும்னா முன்னாடி பின்னாடி பாடிகாட்ஸ் கூட போட்டுக்கோ அவள அவ போக்குல வாழவிடுங்க ப்ளீஸ் அண்ணன் கிட்ட பேசு" என்று கூறினாள்.
அசோக் அவளுடைய கைகளை தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு "உங்க அண்ணன் அதுக்கு தான் எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கான், உங்களுக்கு ஸ்கூட்டி எல்லாம் வாங்கியாச்சு வீட்டுக்கு கொண்டு வந்தால் நீங்க கேட்காமல் வெளியே போயிடுவீங்க அப்படிங்கற ஒரே விஷயத்துக்காக அவன் வீட்டுக்கு கொண்டு வர வைக்காமல் இருக்கான். இன்னும் ரெண்டு நாள்ல உங்களுடைய சேஃப்டி எல்லாத்தையுமே பாத்துட்டு உங்க ஆசைப்படி தான் விட போறான். இனிமே இந்த மாதிரி கிறுக்குத்தனமாக எதுவும் பண்ணாத ஒரு பத்து நிமிஷம் லேட் ஆகி இருந்தா இது வரைக்கும் உங்க அண்ணன் எல்லார்கிட்டயும் வாங்கி வைத்திருந்த நல்ல பேரு டேமேஜ் ஆயிருக்கும் புரியுதா" என்று கூறினான்.
சாதனா தாங்கள் செய்த தவறை உணர்ந்து அவனிடம் கண்களால் மன்னிப்பு வேண்டினாள் அவனும் சிரித்துக் கொண்டே அவளுடைய தலையை தடவிக் கொடுத்தான். அறைக்கு வந்த சாகித்தியா கடுப்பாக அங்கிருந்த மெத்தையில் அமர்ந்து இருந்தாள். பின்னாடியே வந்த ருத்ரன் அவளருகில் வந்து அமர்ந்து அவளை தூக்கி தன் மடியில் அமர வைத்தான், இருக்கும் கோபத்தில் ஏதாவது பேசி விடுவோம் என்று நினைத்த சாகித்யா அமைதியாக இருந்தாள்.
ருத்ரன் அவள் முகத்தை தன்னை நோக்கி திருப்பி "தியா இன்னும் ரெண்டு நாள் டைம் கொடு அதன் பிறகு நீ ஆசைப்பட்டபடி உன்ன ஸ்கூட்டியில் காலேஜ் விடுகிறேன். ஒரு விஷயம் நீ ஆசைப்பட்டா அதை உடனே செய்றதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா எடுத்தோம் கவிழ்த்தோம் அப்படின்னு ஏதாவது செஞ்சு அதனால உனக்கு இல்ல சாதனா யாருக்காவது ஏதாவது ஆபத்து வந்தா என்னால என்னையே மன்னிக்க முடியாது. சோ ப்ளீஸ் புரிஞ்சுக்கோ இந்த மாதிரி நீ ஏதாவது பண்ணா இதுவரைக்கும் நான் வாங்கி வச்ச பேரு மொத்தமா போயிடும் நீயே யோசிச்சு பாரு எல்லாத்தையும் கரெக்டா இருக்கிற நீ இப்ப ஏதாவது தப்பு பண்ணா என்ன சொல்லுவாங்க யோசிச்சு பாரு" என்று கூறினான்.
அவன் கூறிய அனைத்தையும் அவனுடைய முகத்தை பார்த்து கேட்டுக் கொண்டிருந்தவள் பதில் கூற ஆரம்பித்தாள் அவளுடைய பதிலை கேட்ட ருத்ரன் உன் கிட்ட எல்லாம் பொறுமையா பேசினால் வேலைக்கு ஆகாது என்று எண்ணி அவள் முகத்தை பார்த்தான்.
அப்படி என்னதான் சாகித்யா கூறினால் என்பதனை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்