• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 22

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
ருத்ரன் பொறுமையாக அவனுடைய மனைவி தியாவிற்கு புரியவைக்க முயற்சி செய்தான். அவன் கூறிய அனைத்தையும் பொறுமையாக கேட்ட சாகித்யா பின்பு அவனிடம் "பேசாம என்ன விவாகரத்து பண்ணிவிடு நான் என்னோட வாழ்க்கைய சந்தோஷமா வாழ்ந்துட்டு போறேன் ,எனக்கு ஒன்னும் பணக்கார வாழ்க்கை வாழ ஆசை எல்லாம் இல்லை. சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலே போதும் சின்ன சின்ன சந்தோஷம் கூட ஆசைப்பட்ட உடனே செய்ய முடியல அதுக்கு எவ்வளவு நாள் ஆகுது, நீ எல்லா விஷயத்தையும் செக் பண்ணி அதுக்குப் பெறகு ஆசைப்பட்டதை செய்ய சொல்லி கொடுத்தா முதல் முதல்ல ஆசைப்படும் போது இருந்த சந்தோஷம் இருக்குமா? கண்டிப்பா இருக்காது அது மேல ஒரு சலிப்பே வந்துரும் இது என்ன வாழ்க்கை நான் எனக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போறேன் என்ன விட்டுடு" என்று கூறினாள்.




அவள் கூறியதை கேட்ட ருத்ரன் இவளுக்கு பொறுமையாக பேசி புரிய வைத்தால் நிச்சயமாக புரிந்து கொள்ள மாட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவன். அவளுடைய முகத்தை கோபமாக பற்றி "இங்க பாரு நான் செத்தா மட்டும்தான் இந்த வாழ்க்கையை விட்டு உன்னால வேறொரு வாழ்க்கையை வாழ முடியும். இனி நீ ஆசைப்பட்டா அதை உடனே நிறைவேற்றி வைக்க முயற்சி பண்றேன். இந்த விஷயத்துல நான் உடனே எடுத்தோம் கவிழ்த்தோம் அப்படின்னு முடிவு எடுக்க முடியாது. ஏன்னா இன்னும் ரெண்டு வருஷம் நீங்க ஸ்கூட்டியில தான் காலேஜ் போகணும் அதுக்காக நான் எடுத்துக்கிட்ட நாள்தான் இந்த பதினைந்து நாள் இன்னும் ரெண்டு நாள் பொறுத்துக்கோ நீ ஆசைப்பட்டது நடக்கும், அத விட்டுட்டு விவாகரத்து குடு நான் போறேன் வேற வாழ்க்கை வாழ்கிறேன் அப்படின்னு நீ நெனச்சா இப்பவே புருஷனா உன்கிட்ட என்னோட உரிமையை நிலைநாட்ட செய்வேன். நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் பொறுமையாய் இருக்க மாட்டேன் புரியுதா?" என்று ஆவேசமாக அவளுடைய இதழ்களை பற்றி வன்மையாக முத்தமிட ஆரம்பித்தான்.




இதுவரை எவ்வளவு சூழ்நிலையில் அவனிடம் சாகித்யா சண்டையிட்டு இருக்கிறாள். ஆனால் தான் விவாகரத்து பெற்று சென்று விடுவேன் என்று கூறிய ஒரு வார்த்தை அவனை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை அவனுடைய இந்த வன்மையில் உணர்ந்துகொண்ட அவள் தன் உதடுகளில் ஏற்பட்ட வலியினால் தன்னை அறியாமல் கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். அவளுடைய கண்ணீரைப் பார்த்து மனமிறங்கிய ருத்ரன் வெளியே இன்னும் கோபமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சுதா?" என்று கேட்டான். அவள் தலை சம்மதமாக தலையசைக்க அவளை சிறிது நேரம் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்தான்.




ருத்ரன் வெளியே வந்தவுடன் அசோக் அவனைப்பார்த்து "என்னடா சமாதான ஆகலையா?" என்று கேட்டான். அதற்கு ருத்ரன் "இல்லடா சமாதானம் ஆகல கொஞ்ச நேரம் தூங்குறேன் அப்படின்னு சொன்னா தூங்கி எழும்பட்டும் எல்லாம் சரியாகும்" என்று கூறிவிட்டு அவன் அருகில் அமர்ந்து விட்டான். ஏற்கனவே சாதனா தன்னுடைய அறைக்கு பிரஷ்ஷாக சென்றிருந்தாள்.




ருத்ரன் வெளியே சென்றவுடன் அப்படியே படுத்திருந்த சாகித்யா ஆனாலும் இவனுக்கு இவ்வளவு கோபம் ஆகாது உதடு எல்லாம் எரியுது என்று அதை தேய்த்துக் கொண்டவள். பின்பு மனதில் 'எனக்கு என்னமோ பயமா இருக்கு புதுசா ஏதோ ஒரு பிரச்சனை வர போற மாதிரியே தோணுது அது என்னன்னு தெரியல நான் இவனை விட்டு போகிறேன் அப்படின்னு சொன்னது இவனுக்கு இவ்வளவு கோபம் வருது, ஏதாவது ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் உண்மையாவே இவனை விட்டு பிரிஞ்சு போன இவன் என்ன ஆவான் ?கடவுளே அப்படி ஒரு நிலைமை மட்டும் எனக்கு என்னைக்குமே கொண்டு வந்து விடாதே" என்று வேண்டி விட்டு தூங்க ஆரம்பித்தாள். அப்போது உறங்கியவள் இரவு சாப்பாட்டிற்கு தான் எழுந்து வெளியே வந்தாள். அனைத்தும் தயாராக இருக்க அவளும் அனைவருடன் வந்து அமர்ந்து அமைதியாக சாப்பிட்டுவிட்டு இவ்வளவு நேரம் தூங்கியதால் இவ்வளவு நேரம் செய்யாமல் வைத்திருந்த ஹோம் ஒர்க் அனைத்தையும் செய்ய ஆரம்பித்தாள். அவள் முகத்தில் இருந்த தெளிவே இந்த பிரச்சனை முடிந்தது" என்று அனைவருக்கும் காட்ட அனைவரும் அமைதியாக தங்களுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.




இரவு அசோக் விடைபெற்று வீட்டிற்கு சென்று விட மற்றவர்கள் தூங்க சென்றனர் என்றுமில்லாமல் சாகித்யா ருத்ரன் மார்பின் மேலே தலை வைத்து படுத்துக்கொண்டாள். அதைப்பார்த்த ருத்ரன் கண்டிப்பாக ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன். மெதுவாக அவளுடைய தலையை வருடிக் கொடுக்க ஆரம்பித்தான். அதில் தன்னுடைய குழப்பம் கலகம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றாள் சாகித்யா.




அவள் உறங்கி விட்டதை உறுதி செய்த ருத்ரன் மெதுவாக எழுந்து வெளியே வந்தான் அங்கு ஏற்கனவே சாதனா அமர்ந்து இருக்க அவளருகே சென்றான். அவளுடைய முகத்திலும் ஒரு கலக்கம் குழப்பம் தெரிய தன் தங்கையை தன் மடியில் சாய்த்து "என்ன ஆச்சு ரெண்டு பேருமே ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கீங்க" என்று கேட்டான்.




சாதனா தன் அண்ணன் முகத்தைப் பார்த்துவிட்டு "பிரீத்தி பாட்டி ஊருக்கு போய் இருக்கா அண்ணா அங்க போன அவ நம்ம வீட்டுக்கு போகல வருண் வீட்டுக்கு போய் இருக்கா. ஆனா அவங்க என்ன பேசினாங்க ஏது பேசினாங்க எதுவும் தெரியல. வெளிய வரும்போது வருண் திட்டி அனுப்பி விட்டதாகவும் ப்ரீத்தி கோபமா போனதாகவும் அங்க உள்ளவங்க போன் பண்ணி சொல்றாங்க. ஆனா எனக்கு என்னமோ சரியா படல ஏதோ தப்பு பண்ண போறாங்கன்னு தோணுது" என்று கூறினாள்.




அவள் கூறியதை முழுமையாக கேட்ட ருத்ரன் "கவலைப்படாத குட்டிமா எப்பவுமே அவங்க ரெண்டு பேரையும் நம்மளோட கண்ணசைவில் தான் வச்சி இருப்போம். அதுமட்டுமில்லாம கண்டிப்பா உங்க ரெண்டு பேரையும் தனியா விடமாட்டோம், எதப் பத்தியும் யோசிச்சு வீணா குழம்பி கஷ்ட படாத நாங்க எல்லாரும் இருக்கிறோம். உங்கள சுத்தி ஏதாவது தப்பா மறக்காம அதை எங்க கிட்ட சொல்லு சரியா" என்று கூறியவன்.





இன்னும் அவள் முழுமையாக தெளிவு பெறாமல் இருப்பதைப் பார்த்து அவளுடைய தலையையும் மெதுவாக வருடிக் கொடுக்க ஆரம்பித்தான். அவளும் மெல்ல மெல்ல உறக்கத்திற்கு செல்ல ஏனோ அவளை தனியாக படுக்க வைக்க மனது வராமல் தன் அறையில் தூங்கிக் கொண்டிருந்த சாகித்ய அருகில் படுக்க வைத்துவிட்டு அவன் சாகித்யா மறுபுறம் படுத்துக்கொண்டான். அந்த கட்டில் மூன்றுபேர் தூங்குவதற்கு ஏதுவாகத்தான் இருந்தது அதனால் இடப்பற்றாக்குறை வரவில்லை.




காலை முதலில் கண்விழித்த ருத்ரன் அசந்து தூங்கும் இருவரையும் பார்த்துவிட்டு காலை சமையலை கவனிக்க சென்று விட்டான். இருவரும் மெதுவாக தான் கண் விழித்துப் பார்த்தனர். அப்போதுதான் ஒரே அறையில் இருவரும் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து ருத்ரன் வேலையாகத்தான் இருக்கும் என்று எண்ணி சிரித்துக்கொண்டு நேரத்தை பார்த்தனர். அது எட்டு மணியை காட்ட அவசரமாக எழுந்து குளிக்க ஓடினர். இன்னும் சமைக்கவில்லை என்கின்ற விஷயம் ஞாபகம் வர அவசரமாக குளித்துவிட்டு சமயலறை சென்றனர். அங்கு ஏற்கனவே ருத்ரன் அனைத்து வேலையும் முடித்து வைத்திருந்தான்.




அதனால் இருவரும் அமைதியாக சாப்பிட வந்து அமர்ந்தனர். அவர்கள் இருவரும் வந்ததை பார்த்த ருத்ரன் "இரண்டு பேரும் சாப்பிட போறீங்க அப்படின்னா உக்காந்து சாப்பிடு இல்ல ஒரு டென் மினிட்ஸ் வெயிட் பண்ணா நான் குளிச்சிட்டு வந்திடறேன்" என்று கேட்டான்.




சாகித்யா "இல்ல நீங்க குளிச்சிட்டு வாங்க சேர்ந்தே சாப்பிடலாம்" என்று கூறினாள்.




ருத்ரன் "அப்போ ரெண்டு பேரும் சேர்ந்து மதியத்துக்கு சாப்பாடு டிபன் பாக்ஸ்ல எடுத்து வைத்திரு நேத்து சரவணன் ஏதோ மதி கிட்ட பேச போறதா சொல்லிட்டு இருந்தான். அதனால அவளுக்கு சேர்த்தே சாப்பாடு எடுத்து வெச்சு ரெடியா எடுத்து வச்சுட்டு இருங்க அதுக்குள்ள நான் வந்துருவேன்" என்று கூறி விட்டு குளிக்க சென்றுவிட்டான் அவன் கூறியது போல் இருவரும் சென்று மதிய சாப்பாட்டிற்கு எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.




இவர்கள் எடுத்து வைத்து முடித்த நேரத்தில் சரியாக ருத்ரனும் வந்துவிட்டான். அதனால் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர் அதன் பிறகு வழக்கம் போல இருவரையும் கொண்டு கல்லூரியில் விட்டுவிட்டு அலுவலகம் சென்று விட்டான். ருத்ரன் இவர்களும் வேறு எதைப்பற்றியும் சிந்திக்காமல் மதியம்வரை தங்களுடைய வகுப்புகளில் மட்டுமே கவனத்தை செலுத்தினார்கள் மதிய சாப்பாட்டிற்கு நேரம் வந்தவுடன் தோழிகள் அனைவரும் விடுதிக்கு சாப்பிட கிளம்ப ஆரம்பித்தனர்.




மதியை பிடித்த சாதனா சாகித்யா இருவரும் மற்ற அனைவரையும் பார்த்து "நீங்க கிளம்புங்க மதி இன்னைக்கு எங்க கூட சாப்பிடுவா" என்று கூறினார்கள் அதைக்கேட்ட மற்றவர்களும் சரி என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். ஏற்கனவே இதை யூகித்து இருந்ததால் பெரிதாக எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் அவர்களுடன் சென்றாள்.





இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தான் சரவணன் அவனைப் பார்த்த மதி குனிந்த தலை நிமிராமல் சாப்பாட்டில் கண்ணாக இருக்க ஆரம்பித்தாள். அதைப்பார்த்த சரவணன் இருவரையும் பார்த்து இந்த பொண்ணு தானா என்று கண்களால் கேட்டான் அவர்களும் ஆமா என்று தலையசைக்க சரவணன் மதியை பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தான்.




அதற்குமேல் அவனுடைய பார்வை வீச்சை தாங்க முடியாத மதி நிமிர்ந்து சரவணன் முகத்தை பார்த்து அவன் பேசுவதற்கு முன்பு பேச ஆரம்பித்தாள் "உங்களுக்கு ஏற்கனவே நான் உங்கள லவ் பண்ற விஷயத்தை இவங்க ரெண்டு பேரும் உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க. முதல்ல உங்கள பார்க்கும்போது எனக்கு பிடித்து இருந்தது ஆனா நீங்க சாதனாவை காதலா பாக்கும்போது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. அதுக்கு காரணம் நீங்க என்ன பாக்கல அப்படிங்கற விஷயம் இல்ல சாதனா ஏற்கனவே லவ் பண்ற விஷயம் எனக்கு தெரியும். கண்டிப்பா நீங்க ஒரு நாள் ஏமாந்து போவீங்க அதை நினைச்சு கஷ்டமா இருந்துச்சு ஆனால் எத்தனையோ தடவ உங்கள நினைக்க கூடாது அப்படின்னு எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும் என்னால அதை செய்ய முடியல திரும்பத் திரும்ப உங்களுடன் ஞாபகம்தான் எனக்கு அதிகமா வந்துச்சு. கண்டிப்பா என்னைக்காவது ஒரு நாள் நீங்க உங்களோட காதலை வந்து சாதனா கிட்ட சொல்லுவீங்க அப்படின்னு தெரியும், ஆனா நான் உங்ககிட்ட என்னோட காதல இப்ப சொல்ல ஆசைப்படவில்லை பொறுமையா என்னோட படிப்பு முடிஞ்சு நீங்க வேலை செய்ய போற ருத்ரன் அண்ணா கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்து உங்ககிட்ட சொல்லணும்னு நினைச்சேன்.




ஆனா அதுக்கு முன்னாடி இந்த இரண்டு அவசர குடுக்கை உங்ககிட்ட சொல்லிடுச்சு இப்ப நீங்க கண்டிப்பா எனக்கு அட்வைஸ் பண்ண தான் வந்து இருக்கீங்க. உங்க அட்வைஸ் கேட்கிற நிலைமையில் நான் இல்லை அதனால ஒழுங்கா உன்னோட படிக்க முடிச்சுட்டு வேலையை பாருங்க ரெண்டு வருஷம் நான் உங்களுக்கு டைம் தரேன் யோசித்து முடிவெடுங்கள் நீங்க கிடைக்கல அப்படினா நான் வேற ஒரு கல்யாணம் பண்ணாம எல்லாம் இருக்க மாட்டேன் அது எங்க அப்பாவுக்கு நான் செய்ற துரோகம். அதுனால நீங்க ரெண்டு வருஷம் கழிச்சு என்ன முடிவெடுத்து இருந்தாலும் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை" என்று தன்னுடைய முடிவை தெளிவாக கூறினாள்.




மதி முடிவைக் கேட்ட சரவணன் ஒரு நிமிடம் அசந்து தான் போனான். பின்பு அவனுக்கும் அந்த இரண்டு வருட இடைவெளி தேவைப்பட்டதால் அவளைப் பார்த்து "உண்மையா நான் உனக்கு அட்வைஸ் பண்ண தான் வந்தேன் ஏன்னா என்னோட வாழ்க்கையில இன்னொரு காதல் அப்படிங்கற விஷயம் உடனே எல்லாம் வராது. ஆனால் நீ உன்னோட காதலில் ரொம்ப தெளிவா இருக்கே அத நெனச்சு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீ சொல்ற மாதிரி இந்த ரெண்டு வருஷம் எனக்கு தேவைதான் ஆனா கண்டிப்பா உன்ன தவிர வேற யாரையும் நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். நீ எவ்வளவு தூரத்துக்கு என்ன காதலிக்கிற அப்படி என்கிற விஷயமும் நீ பேசுறதை வச்சே எனக்கு தெரியுது, இந்த ரெண்டு வருஷத்துல கண்டிப்பா உன்னை புரிஞ்சுக்கிட்டு காதலிக்க ஆரம்பிப்பேன் அப்படின்னு நம்புறேன். ஆனா ஒரு விஷயம் என்னதான் நான் முதல்ல சாதனாவை காதலித்து இருந்தாலும் இப்போ சாதனா சாகித்யா இருவரும் என்னோட நல்ல பிரண்ட்ஸ் அதை என்னைக்குமே நீ தப்பா நினைக்க கூடாது" என்று கூறினான்.




சரவணன் கூறியதை கேட்ட மதி "கண்டிப்பா தப்பா நினைக்க மாட்டேன் ஏன்னா இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு முன்னாடி இருந்தே என்னோட பிரண்ட்ஸ் இவங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அதனால நீங்க அதை நினைத்து கவலைப்பட வேண்டாம் உங்களோட வேலையை நீங்க கரெக்டா பாருங்க" என்று கூறினாள்.




சாதனா சாகித்யா இருவரும் ஒரு சேர மதியை அணைத்துக் கொண்டனர் அவளும் அதில் ஆனந்தமாக கலந்து கொண்டாள். பின்பு தாங்கள் கொண்டு வந்த உணவை சிறிது சரவணனுக்கும் கொடுத்து விட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு தங்களுடைய வேலையை பார்க்க சென்றனர். இவ்வளவு நேரம் இவர்கள் பேசியது எதுவும் தெரியவில்லை என்றாலும் அனைவரும் ஒன்றாக இருப்பதை தூரத்தில் இருந்த ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தான்.




சரவணன் வரும்போதே அவன் அங்கு இருப்பதை கவனித்து விட்டான். இப்போது வரை அவன் அங்கேயே இருப்பது அவனுக்கு ஒரு சிறு சந்தேகத்தை கொடுக்க அவன் அறியாமல் அவருடைய புகைப்படத்தை தன்னுடைய அலைபேசியில் போட்டோ பிடித்து விட்டு அங்கிருந்து சென்றான். செல்லும் முன்பு சாதனா சாகித்யா இருவரும் தங்களுடைய வகுப்புக்கு செல்வதை பார்த்து விட்டுத்தான் சென்றான்.




தன்னுடைய வகுப்புக்கு சென்றவன் மறக்காமல் அந்த போட்டோவையும் அவன் யார் என்று தெரியுமா என்று ருத்ரனுக்கு அனுப்பிவிட்டு பிராஜெக்ட் சம்பந்தமான இருந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தான்.




அதே நேரம் தன்னுடைய அலுவலகத்தில் அசோக் விக்னேஷ் சக்தி சத்யா நான் அவருடன் இருந்த ருத்ரன் தன்னுடைய அலைபேசி சத்தம் கேட்டு அதை எடுத்துப் பார்த்தான் அதில் சரவணன் அனுப்பிய போட்டோவை அனைவரும் முன்பு வைத்து நேற்று சாதனா மற்றும் சாகித்யா நடந்து கொண்ட முறை அனைத்தையும் தெளிவாக கூறினான்.




ருத்ரன் கூறியதை கேட்ட சக்தி "என்ன மச்சான் சொல்ற இது என்ன புது பிரச்சனை? யார் இதெல்லாம் செய்கிறா இந்த நிலைமையில அவங்க ரெண்டு பேரையும் ஸ்கூட்டில வேற காலேஜ் விட போறேன் அப்படின்னு சொல்ற இது சரியா வருமா" என்று கேட்டான்.




ருத்ரன் "எல்லாம் சரியா வரும் அவங்க சொல்ற மாதிரி அவங்க பாதுகாப்பு தான் முக்கியம் அப்படின்னு அவங்களோட சின்னச் சின்ன ஆசைகளை கூட நிறைவேற்றாமல் இருக்கிறது தப்பு அவங்களுக்கு முன்னாடி பின்னாடி பாதுகாப்புக்கு ஆள்கள் போட்டாச்சு. அது பிரச்சனை இல்ல இப்போ உள்ள காலேஜ்ல இவங்கள யாரோ ஒருத்தங்க நோட் பண்றாங்க அப்படின்னு ஏற்கனவே எனக்கும் அசோக் அப்புறம் விக்னேஷ் மூவருக்கும் தோனி கிட்டே இருந்துச்சு அதான் நேத்து சரவணன் கிட்ட சொன்னேன். இப்போ ஒத்த போட்டோ வந்திருக்கு இது வேற யாரும் இல்ல வருண் கூட சுத்தற ஒருத்தன் ஆனால் வரும் அவ்வளவு தூரத்துக்கு இறங்கி வேலை செய்யறவங்க கிடையாது கண்டிப்பா நமக்கு எதிராக இருந்த எல்லாம் ஒன்று சேர்ந்து இருக்கு எதுக்கும் கொஞ்சம் யோசிச்சு தான் எல்லாத்தையும் பண்ணனும்" என்று கூறினான்.




சத்யா "சரி இப்ப இது எல்லாத்துக்கும் என்ன பண்றது அவங்க ரெண்டு பேரோட சேப்டி சரி பண்ணியாச்சு இருந்தாலும் கொஞ்சம் கவனமா இருக்கணும் கண்டிப்பா இந்த விஷயத்துல பிரீத்தி வருண் மட்டும் சம்பந்தப்பட்ட இருக்கமாட்டாங்க கண்டிப்பா ராஜி இதுல சேர்ந்து இருப்பா" என்று கூறினான்.




விக்னேஷ் "இன்னும் கொஞ்ச நேரத்துல யார் யார் இதெல்லாம் சேர்ந்து இருக்கா அப்படிங்கற விஷயம் நமக்கு தெரிந்துவிடும் அதுக்கு பிறகு என்ன செய்யணும் அப்படிங்கறது எல்லாரும் யோசிச்சு முடிவு எடுப்போம் ஆனால் எதை செஞ்சாலும் பார்த்து செய்யணும் ஏன்னா பாதிப்பு வந்தா நம்ம பக்கம் தான் வரும்" என்று கூறினான்.




அவன் கூறியது போல சரியாக பதினைந்து நிமிடத்தில் யார் யார் இவர்களுக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்ற விஷயம் மொத்தமாக வந்துவிட்டது. அதில் ருத்ரன் எதிர்பார்த்த பெயர்கள் மட்டும்தான் இருந்தது ஆனால் சக்தி சத்யா இருவருக்கும் அதில் இருந்த இரண்டு பெயர்கள் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.




அதன்பிறகு ருத்ரன் மொத்தமாக என்ன செய்ய வேண்டும் என்று தன்னுடைய திட்டத்தை கூறினான் சரவணன் மற்றும் தர்ஷன் இருவருக்கும் போன் மூலமாக அழைத்து செய்ய வேண்டிய அனைத்தையும் கூறினான். என்னதான் தவறு செய்து இருந்தாலும் அவன் உண்மை உணர்ந்து திருந்தி விட்டான் என்பதை அனைவரும் உணர்ந்து இருந்ததால் யாரும் எதுவும் கண்டு கொள்ளவில்லை.




சரியாக ஒரு மாதம் கழித்து இவர்கள் திட்டம்போட்டு இருந்தனர் அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தனர். இதை அறியாத இவர்களின் எதிரிகள் கூட்டம் இவர்களை வீழ்த்த திட்டம் போடுவதாக நினைத்து தாங்கள் அவர்களிடம் மாட்டிக் கொள்ளப் போகும் திட்டத்தை தீட்ட ஆரம்பித்தனர்.



ருத்ரன் தீட்டிய திட்டம் என்ன இவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் யார் யார் அனைத்தும் சரியான முறையில் நடைபெறுமா அல்லது ஏதாவது நினைப்பது போல் நடக்காமல் யாருக்காவது தீங்கு ஏற்பட்டு விடுமா



இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயத்தில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
 
Top