• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 6

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சாகித்யா தனக்கும் தர்ஷன்க்கும் எவ்வாறு பழக்கம் என்று கூற ஆரம்பித்தாள்.


தர்ஷன் சாகித்யா இருவரும் பள்ளியில் இருந்தே நல்ல நண்பர்கள், இருவரும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாகவே படித்து வந்தனர். இவர்கள் தவிர சாந்தினி என்று ஒரு தோழியும் இவர்கள் கூட்டத்தில் உண்டு. மூவரும் ஒன்றாகவே படித்து ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஒருத்தரை ஒருத்தர் எப்பொழுதும் விட்டுக் கொடுத்ததில்லை, படிப்பில் சுட்டியாக இருந்ததால் யாரும் பெரிதாக இவர்களை கண்டு கொண்டது இல்லை.


இதில் சாகித்யா எப்பொழுதுமே ஒரு கெத்தாகவே பள்ளியில் இருப்பாள். அதற்கு காரணம் அவளுடைய வீட்டில் உள்ள அனைத்து வானரங்களும் அவர்களுக்கு சீனியராக படித்துக் கொண்டிருந்தது. அதனால் அவர்களுடைய நண்பர்களும் இவர்களை மிகவும் பாசமாக பார்த்துக் கொள்வார்கள். ஏதாவது ஒரு பிரச்சனை என்றாலும் அவர்கள் அனைவரும் வந்துவிடுவதால் எப்பொழுதும் ஏதோ கொள்ளைக் கூட்டத்தின் தலைவி போலே திரிவாள் சாகித்யா.


வருடங்கள் செல்ல செல்ல ஒவ்வொருவராக பள்ளி முடித்து கல்லூரிக்கு சென்றாலும் சாகித்யாவிற்கு அந்த பள்ளியில் மதிப்பு குறைந்தது இல்லை. இவர்கள் மூவரும் அவர்களால் முடிந்த அளவு சேட்டைகள் செய்தாலும் பள்ளி சார்பாக வெளியே நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளியின் பெயரை நல்ல நிலைமையில் கொண்டு வந்திருந்தனர். அதனால் அனைவருக்கும் இவர்கள் செல்லப் பிள்ளைகள் தான்.
இப்படியே மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்வில், 11ஆம் வகுப்பு படிக்கும்போது தர்ஷனின் சாகித்யா மீதான பார்வை ரசனையாக மாற ஆரம்பித்திருந்தது. இதை முதலில் கண்டுபிடித்தது சாந்தினி. அவள் அவனிடம் இதைப்பற்றி பேச முடிவு செய்தாள், அதற்காக சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கவும் ஆரம்பித்தாள். ஒருநாள் சாகித்யா உடல்நிலை சரியில்லாமல் விடுமுறை எடுத்து விடவே அன்றே தர்ஷனிடம் பேச முடிவு செய்து மதியம் சாப்பிடும்போது அவனிடம் பேச ஆரம்பித்தாள்.



சாந்தினி "தர்ஷா நீ இப்போ வரவர சாகியை பார்க்கும் பார்வை வேற மாதிரி தெரியுது, என்ன விஷயம்? ஒழுங்கா சொல்லு இல்லனா அவங்க அண்ணன் கிட்ட சொல்லிடுவேன்" என்று மிரட்டினாள்.


இவள் எப்படிக் கண்டு பிடித்தாள் என்று முதலில் புரியாமல் முழித்த தர்ஷன் பின்பு அவளை மிரட்டியது பயத்தை உண்டு பண்ணியது. ஏனென்றால் சக்தி அல்லது சத்யா யாராவது ஒருவருக்கு தெரிந்தால் நிச்சயமாக தனக்கு என்ன நடக்கும் என்பது அவனுக்கு தெரியும். ஏனென்றால் சாகித்யா அவனை காதலிக்க வில்லை சாகி காதலித்தால் அவர்கள் அவளுடைய மகிழ்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதால் சாந்தினி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயாரானான்.


தர்ஷன் "எனக்கு சாகித்யாவை ரொம்ப பிடித்து இருக்கு நான் அவளை காதலிக்கிறேன், அவளைத்தான் கல்யாணமும் பண்ணிக்க போறேன். கண்டிப்பா அவளும் இதுக்கு ஒத்துக்க தான் செய்வா அதனால நீ இதுல தலையிடாதே" என்று கூறினான்.



அவன் கூறியதை முழுமையாக கேட்ட சாந்தினி "நீ அவளை உண்மையா லவ் பண்ணல அப்படி நீ பண்ணி இருந்தா கண்டிப்பா இப்படி எல்லாம் பேச மாட்டே, அவ இன்னைக்கு வரைக்கும் உன்ன ஒரு நல்ல பிரண்டா தான் பார்க்கிறா அது ஏன் உனக்கு புரிய மாட்டேங்குது. நீ அவகிட்ட காதலை சொன்னாலும் அவ அதுக்கு பெருசா எதுவும் ரியாக்சன் கொடுக்க மாட்டா ஏன்னா அவ இப்ப வரைக்கும் உன்ன ஒரு நல்ல பிரண்டா பார்த்துக்கிட்டு இருக்கா. ஒருவேளை நான் உன்னுடைய அன்பை தப்பா புரிஞ்சு இருந்தா நீ சொல்ற மாதிரி உண்மையாவே அவளை லவ் பண்ணினா அவ படித்து முடிக்கிற வரைக்கும் அமைதியா இரு. அவளை எந்தவித தொந்தரவும் பண்ணாத அதன்பிறகு பொறுமையா அவகிட்ட சொல்லி அவ சம்மதத்தை வாங்கி கல்யாணம் பண்ணிக்கோ" என்று கூறினாள்.


அதைக்கேட்ட தர்ஷன் சிறிது நேரம் யோசித்துவிட்டு "கண்டிப்பா நான் அவளை எந்த தொந்தரவு பண்ணமாட்டேன். இப்ப இருக்கிற மாதிரி ஒரு நல்ல பிரண்டா அவ கூடவே இருப்பேன். ஆனால் அவ படிப்பு முடிந்தவுடனே கண்டிப்பா என்னோட காதலை சொல்லி புரிய வச்சு அவளை என்னோட மனைவியா மாற்றிக் காட்ட தான் போறேன். அதையும் நீ பார்க்கத்தான் போகிறாய்" என்று கூறினான்.
அவன் கூறியதைக் கேட்ட சாந்தினி மனது நிம்மதியானது. ஏனென்றால் இவன் இடையில் ஏதாவது கூறி அவளுடைய மனதை கலைத்து விடுவானோ என்று எண்ணி தான் அவள் யோசித்தது. நிச்சயமாக சாகித்யா இவனுக்கு இல்லை என்பது சாந்தினிக்கு நன்றாக தெரிந்திருந்தது. அதனால் அவளும் அப்படியே அமைதியாகி விட்டாள்.


அதன்பிறகு நாட்கள் அப்படியே செல்ல வழக்கம் போல எந்தவித மாற்றமும் இல்லாமல் மூவரும் ஒன்றாக இருந்தனர். நட்பு என்ற ரீதியில் அவர்கள் எந்தவித பிரச்சனையும் வந்தது கிடையாது, அதனால் அவர்கள் பள்ளிப்படிப்பு எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சென்று முடிந்தது. பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு சேரவேண்டும் என்ற நிலைமை வரும்போது சாந்தினி வெளியூரில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததால் சொந்த ஊரிலேயே படிக்க முடிவு செய்துவிட்டாள்.


சாகித்யாவும் அவளை வற்புறுத்த விரும்பாமல் தனக்கு விருப்பமான படிப்பை தன்னுடைய வீட்டில் சொல்லி வெளியூரில் தங்கி படிக்க அனுமதி வாங்கி அங்கே சேர்ந்துவிட்டாள். இவர்கள் இருவரும் தர்ஷனை பத்தி யோசிக்கவில்லை அவன் யார் மூலமாகவோ சாகித்யா படிக்கும் கல்லூரியை தெரிந்துகொண்டு அங்கே சேர்ந்துவிட்டான், இது யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.



சாகித்யா கல்லூரிக்கு முதல்நாள் சென்றபோதுதான் தர்ஷனை பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது, ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏன் என்றால் யார் என்றே தெரியாத இடத்தில் தன்னுடைய நண்பன் படிப்பது அவளுக்கு ஒரு ஆறுதலாகவும் இருந்தது. அதனால் அவனிடம் சென்று "ஏன்டா நீ இந்த காலேஜ்ல சேர்ந்த விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்ல முன்னாடியே தெரிஞ்சிருந்தா ரொம்ப சந்தோஷ பட்டு இருப்பேன்" என்று கேட்டாள்.



அதற்கு தர்ஷன் சிரித்துக்கொண்டே "இப்ப நீ ஒரு ரியாக்ஷன் கொடுத்த அத பார்க்கிறதுக்காக தான் உன்கிட்ட சொல்லாம இருந்தேன் நானும் இந்த காலேஜ்ல தான் படிக்கிறேன். ஏதாவது தேவனா மறக்காம என்கிட்ட கேளு" என்று கூறினான். அவளும் தன்னுடைய நண்பனிடம் சம்மதமாக தலையை அசைத்து சிரித்துவிட்டு தன்னுடைய வகுப்பிற்கு சென்றாள்.


அதன்பிறகு முதல் வருடம் அனைவருக்கும் அவரவர் நண்பர்களுடன் சந்தோஷமாக சென்றது. விடுதியில் அர்ச்சனா மற்றும் சந்தியா தேவையில்லாமல் சாதனா மற்றும் அவள் தோழிகளுடன் சண்டை இழுத்து சாகித்யா சென்று தான் சமாதானம் பேசி வருவாள், மற்றபடி வேறு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் சென்றது. இரண்டாம் பருவம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் சாகித்யா பின் சீனியர் ஒருவன் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் சாகித்யாவை காதலிப்பதாக கூற அதற்கு அவள் "அண்ணா தயவு செஞ்சு என்ன மன்னிச்சுடுங்க. எனக்கு உங்க மேல எந்த விதமான எண்ணமும் வந்தது இல்லை, நான் அண்ணனா பாக்குற யாரையும் இந்த மாதிரி நான் யோசிக்கவே மாட்டேன். கடைசி வரைக்கும் நான் உங்களுக்கு ஒரு நல்ல தங்கச்சியா கண்டிப்பா இருப்பேன். நீங்களும் என்ன ஒரு தங்கச்சியா நினைச்சு பழகினா கண்டிப்பா நானும் பழகுவேன் இல்லனா வேணாம். உங்களுக்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ள வேண்டுமோ எடுத்துக் கொண்டு முடிவு செய்து வாருங்கள்" என்று அமைதியாக கூறிவிட்டு அந்த இடத்தை கடந்து சென்று விட்டாள்.



அவனுக்கு சாகித்யா கூறியது வருத்தமாக இருந்தாலும் அவளை அதற்கு மேல் தொந்தரவு செய்ய விரும்பாமல் அமைதியாக இருந்துவிட்டான். ஆனால் அவள் கூறியதை யோசிக்க அவன் மறக்கவில்லை. ஆனால் இந்த விஷயம் தர்ஷன் காதிற்கு செல்ல அவன் இதற்கு மேல் விட்டால் தன்னுடைய காதல் பறிபோய்விடும் என்று எண்ணிக்கொண்டு இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தான். பின்பு மெதுவாக சாகித்யாவை சந்திக்க சென்றான்.


சாகித்யா தர்ஷன் அவளுக்காக காத்து இருப்பதைப் பார்த்துவிட்டு தன் தோழிகளிடம் கூறி விட்டு அவனிடம் சென்றாள். அர்ச்சனா மற்றும் சந்தியா அவளை கேலியாக பார்த்துவிட்டு "நடத்து நடத்து நாங்க பக்கத்தில வெயிட் பன்றோம் சீக்கிரம் பேசிட்டு வா" என்று கூறி விட்டு பக்கத்தில் காத்திருந்தனர்.
சாகித்யா தன்னருகில் வந்ததை பார்த்த தர்ஷன் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அதை பார்த்த சாகித்யா "என்னடா ஏதாவது முக்கியமான விஷயமா? அமைதியா இருக்க" என்று கேட்டாள்.



அவளிடம் பார்த்து ஒரு பெரு மூச்சை இழுத்து விட்ட தர்ஷன் "சாகி உன்னை நான் மூணு வருஷமா லவ் பண்றேன், இது ஏற்கனவே சாந்தினிக்கு தெரியும் உன்னோட படிப்பு முடியுற வரைக்கும் உன்ன தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு சொன்னா. ஆனா உன்கிட்ட சொல்லாம இருந்தா என்னோட காதல் என்ன விட்டுப் போயிட கூடாதுன்னுதான் இப்போ உன் கிட்ட சொல்றேன். நான் உன்னை காதலித்து கொண்டு இருந்தாலும் எப்பவுமே உனக்கு நான் ஒரு நல்ல நண்பனா தான் இருந்தேன். அதனால உன்னோட பதிலை யோசிச்சு சொல்லு ஆனா எக்காரணம் கொண்டும் என்னோட நட்பு எப்பவுமே உன்னை விட்டு போகாது" என்று கூறி கிளம்ப முயற்சித்தான்.



அவன் கூறியதை கேட்ட சாகித்யா தன்னுடைய நண்பனா இவ்வாறெல்லாம் பேசுகிறான் என்று புரியாமல் ஒரு நிமிடம் யோசித்தவள். பின்பு தீர்க்கமாக அவனைப்பார்த்து "சாந்தினி சொன்ன மாதிரி படித்து முடிக்கிற வரைக்கும் இந்த காதல் இத பத்தி எல்லாம் பேசி தேவையில்லாம பிரச்சனை வேண்டாம். படிச்சு முடிச்ச பிறகு இதே காதலோட நீ இருந்தா எங்க வீட்ல பேசு அவங்க எல்லாருக்கும் எந்தவித பிரச்சினையும் இல்ல அப்படின்னா எனக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை. என்னுடைய உயிர் நண்பன் உண்மையான அன்போட எனக்கு கணவனாக வந்தா எனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை, ஆனால் படிப்பு முடியும் வரை நீ என்னை தொந்தரவு பண்ணக் கூடாது, எப்பவும் போல் என் நண்பனாக மட்டுமே இருக்க வேண்டும். அது மட்டும் இல்ல இந்த மூணு வருஷத்துல என்ன வேணா நடக்கலாம் எது நடந்தாலும் நீ தேவையில்லாம பிரச்சனை பண்ணாம என்னோட நிம்மதியைக் கெடுக்காமல் இருக்கணும்" என்று கூறினாள்.


இவர் கூறியதை ஒருபக்கம் இவளுடைய தோழிகள் கேட்டுக் கொண்டிருக்க மறுபக்கம் இவளுக்கு தெரியாமல் சாதனா மற்றும் அவளுடைய தோழிகள் கேட்டுக்கொண்டிருந்தனர். இதில் அர்ச்சனா சந்தியா மற்றும் தர்ஷன் தவிர அனைவரும் புரிந்து கொண்ட ஒரு விஷயம் "சாகித்யா தர்ஷனை காதலிக்கவில்லை தன்னுடைய நண்பன் தன்னிடம் கூறியதை கேட்டு படிப்பு முடிந்தவுடன் பார்த்துக் கொள்ளலாம் அதுவும் அவளுடைய வீட்டினர் சம்மதம் இருந்தால் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்ற ரீதியில் தான் பதில் கூறினாள். ஆனால் அம்மூவரும் சாகித்யா காதலுக்கு மறைமுகமாக சம்மதம் சொல்லி விட்டதாக எண்ணி கொண்டு இருந்தனர்.


தர்ஷன் மனதிற்குள் சிரித்துக்கொண்டு "கண்டிப்பா நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் ஒத்துக்குறேன்" என்று கூறி விட்டு அமைதியாக கிளம்பி விட்டான். சந்தியா அர்ச்சனா இருவரும் அவளை கேலி செய்ய அவள் எதையும் கண்டுகொள்ளாமல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள்.



அவள் மனதில் "ஒரு வேளை நம்ம தான் ஏதாவது தப்பு பண்ணி இருப்போமோ? என்னைக்குமே அவன என்னுடைய உண்மையான நண்பனாக தானே பார்த்தேன். அவனுக்கு எப்படி என் மீது காதல் வந்தது அடுத்தவரிடம் கூறுவது போல் முகத்தில் அடித்தது போல் கூறிவிடலாம். ஆனால் இவ்வளவு நாள் இருந்த நட்பு காணாமல் போய்விடும் அதனால் தான் இந்த மூன்று வருட இடைவெளியில் கண்டிப்பாக அவனுக்கு உண்மை புரிந்து என்றுமே என்னுடைய நண்பனாக இருந்து விடுவான்" என்று எண்ணிக்கொண்டு விடுதி நோக்கி சென்றாள்.



அதன்பிறகு தர்ஷன் சந்தியா மற்றும் அர்ச்சனா மூவர் தயவால் தர்ஷன் மற்றும் சாகித்யா காதலிப்பதாக பரவ ஆரம்பித்தது. ஆனால் சாகித்யா அதை கண்டுகொள்ளவே இல்லை "ஏனென்றால் தேவையில்லாத விஷயத்திற்கு எதிர்வினை செய்தால் கண்டிப்பாக பிரச்சினையாகி விடும். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய நிம்மதியும் சென்றுவிடும்" என்பதை புரிந்து கொண்டு அமைதியாக இருந்துவிட்டாள்.



அதுவே அவர்களுக்கு சாதகமாக போய்விட அவர்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தனர். அவ்வப்போது அர்ச்சனா சந்தியா தர்ஷன் பற்றி ஏதாவது கூற சாகித்யா அதை காதிலேயே வாங்காமல் தன்னுடைய வேலையில் குறியாக இருப்பாள். ஆனால் அவளுடைய அமைதி அவள் காதலிக்கிறாள் அதனால்தான் அமைதியாக இருக்கிறாள் என்ற எண்ணம் கல்லூரி மாணவ மாணவியர் இடையே பரவியிருந்தது.



இந்த ஆறு மாதத்தில் தான் அவள் ருத்ரனை சந்தித்தது மற்றும் ராஜியின் திருமண ஏற்பாடு ஆரம்பமானது கடைசியில் இதோ திருமணம் முடிந்து அவளும் வந்து விட்டாள்.



"இதுதான் நடந்துச்சு உண்மையாவே தர்ஷன் எனக்கு ஒரு நல்ல நண்பன். அதைத் தவிர எனக்கு வேற எதுவும் யோசிக்க தோணுது இல்ல. அதே மாதிரி என்னோட ஹஸ்பண்ட் ஃபர்ஸ்ட் பார்த்தது அப்பவே நான் அவர என்ன மறந்து சைட் அடிச்சேன். ஆனா தப்பா புரிஞ்சுகிட்டு அவரையே நான் அடிச்சேன். அது பிந்துவிற்கு மட்டும்தான் தெரியும் நான் அன்னைக்கு அவர் செய்யாத தப்புக்கு அடித்தது நால தான் இன்னைக்கு வரைக்கும் அவர நினைச்சு பயப்படுகிறேன். இன்னைக்கு அவரை இல்ல யாரை நான் கல்யாணம் பண்ணி இருந்தாலும் கண்டிப்பா அந்த உறவுக்கு நான் மரியாதை கொடுப்பேன். அதை இடையில விட்டுட்டு அடுத்தவனை தேடி போறது எனக்கு பிடிக்கவும் செய்யாது, அது எனக்கு பழக்கமும் இல்ல நாளைக்கு தர்ஷன் கண்டிப்பா ஏதாவது தேவையில்லாம பேசுவான். ஆனால் அவன் பேசுவதை எல்லாம் பெருசா எடுத்துக்கிட்டா எனக்கு நிம்மதி இல்லாமலேயே போய்விடும் முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையே முடிக்க பார்ப்பேன் இல்லனா அவன் அவனோட நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காதலுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தா நாளையோட அவனுக்கும் எனக்குமான நட்பு முடிஞ்சுரும் அவ்வளவுதான்" என்று அனைவரிடமும் கூறி முடித்தாள்.



அதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவருக்கும் சந்தியா அர்ச்சனா தவிர மகிழ்ச்சியாக இருந்தது. தெளிவான முடிவை எடுத்திருக்கிறா கண்டிப்பாக தர்ஷன் ஏதாவது குழப்பினாலும் சமாளித்துக் கொள்வாள் என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர்.



சாதனா சாகித்யாவை பார்த்து "இவ்வளவு தெளிவா யோசிக்கிற நீ ஏன் உன் கல்யாணம் அப்போ யோசிக்கவே இல்ல இல்லை இது எல்லாத்தையும் உனக்கு யாராவது தெளிவா புரிய வச்சாங்களா?" என்று கேட்டாள்.



"இல்லப்பா சக்தி நீயே யோசிச்சு பாரு அப்படின்னு எனக்கு சொல்லிட்டான். அதனால நானே யோசிச்சு தெளிவாயிட்டேன். கல்யாணம் நடந்தபோ நான் எப்படியாவது ருத்ரன் கண்ணுல மாட்ட கூடாதுன்னு சுத்திக்கிட்டே வந்தேன். எப்பவுமே எங்க வீட்ல இப்படி மாத்தி மாத்தி டிரஸ் அசிங்கப்படுத்தி விட்டிருக்கோம் அதுமட்டுமில்லாம எங்க வீட்டில இருக்கிற அந்த மூன்று ஜந்துக்களையும் நான் ரொம்ப நம்பிட்டேன்.


அதான் பெரிசா கண்டுக்கலை என் கல்யாணம் நடந்தது மொத்தத்திலே நான் கல்யாணம் பண்ண என்னோட ஆத்துக்காரனை அதாவது அந்த காண்டாமிருகத்தை நெனச்சி பயத்தில சுத்திகிட்டு இருந்தனாலதான் எல்லாம் நடந்துச்சு. கொஞ்சம் அமைதியா இருந்து இருந்தாலே நான் எல்லாத்தையும் யோசிச்சு பண்ணிருப்பேன். ஆனால் என்னோட நிலைமையை என்னோட நாத்தனார் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கா எங்க வீட்டில் உள்ள எல்லாரும் இதுக்கு சம்மதம் சொல்லி இருக்காங்க. அதுக்கு என்னோட நாத்தனார் அப்புறம் என்னோட புருஷன் என்னமோ ஒரு விஷயம் பெருசா சொல்லி இருக்காங்க. அதனாலதான் எல்லாம் நடந்து முடிஞ்சுது இனி அதை பத்தி பேசி என்ன ஆகப் போகுது வெளியே சொன்னால் கேவலம் இனி அதைப் பற்றி பேசி தயவு செஞ்சு என்ன அசிங்க படுத்தாதே! இப்ப நேரமாவது எல்லாரும் தூங்குவோம் வாங்க" என்று கூறிய சாகித்யா தன்னுடைய இடத்தில் படுத்து விட்டாள்.



அனைவரும் தூங்க சென்றவுடன் தன்னுடைய அலைபேசியுடன் வெளியே வந்த சாதனா ஹலோ என்றாள். மறுபுறம் அனைவரும் தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தனர். பின்பு மெதுவாக அசோக் அதாவது சாதனாவின் காதலன் "சாது உன் அண்ணியார் உன்மேல கொலைவெறியில் இருக்கா கைல மாட்டுனா கைமாதான்" என்று கூறினான்.



சக்தி "சாதனா அவ தெளிவா தான் இருக்கா ஆனால் வேற யாரும் அவளை குழப்பி விடாம நீதான் கொஞ்சம் பாத்துக்கணும்" என்று கூறினான்.



விக்னேஷ் "தங்கச்சி பாவம் ஏற்கனவே அந்தப் பிள்ளை உன்ன நினைச்சு பயந்து போய் இருக்கு, இதுல இன்னும் நீ முகத்தை காட்டாமல் வேலையை பாக்குறே பாவமா இருக்கு சீக்கிரம் எல்லாத்தையும் சொல்லிரு" என்று கூறினான்.



ருத்ரன் "சாது நாளைக்கு நீ தியா கூட போ ஆனா நீ அங்க எதுவுமே பேசாத பிரச்சனை கைமீறி போச்சுன்னா நீ உள்ள போ இல்லனா அவளையே இந்த பிரச்சனையை முடிக்க வை. அப்படி என்றால் தான் பின்னாடி அவளுக்கு பிரச்சனை வராது எதுக்கு ரெண்டு பேரும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு" என்று கூறினான்.



சத்யா எதுவும் கூறாமல் இருக்க சாதனா "சத்யா அண்ணா உங்க லவ்வர் சாந்தினி பற்றி உங்க அத்தை பொண்ணு பேசினதும் எல்லாத்தையும் மறந்து டூயட் பாட போயிட்டீங்க போல கொஞ்சம் கீழே இறங்கி வாங்க" என்று கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்டு அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர். பின்பு பொதுவாக "நீங்க சொல்ற படி எல்லாம் செய்கிறேன் நாளைக்கு அவன்கிட்ட பேசும்போது கண்டிப்பா எல்லாரையும் கான்பிரன்ஸில் போடுறேன். இப்ப எல்லாரும் போய் தூங்கு நானும் தூங்க போறேன்" என்று கூறிவிட்டு போனை கட் செய்துவிட்டு சென்றாள்.


மறுநாள் மாலை தர்ஷன் கோபமாக சாகித்யா எதிரில் நின்று கொண்டிருந்தான்.


தர்ஷன் ரியாக்சன் எப்படி இருக்கும்?
சத்யாவின் காதலி சாந்தினி தானா அப்படி என்றால் அது எப்போது இருந்து ஆரம்பித்தது.
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top