• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 7

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
மறுநாள் காலை விடுதியில் வழக்கமாக நேரத்திற்கு எழுந்த சாதனா மற்றும் சாகித்யா இருவரும் தூங்கும் தன் தோழிகளை பார்த்து சிரித்துவிட்டு குளிக்க சென்றனர். அரை மணி நேரம் கழித்து அவர்கள் இருவரும் அறைக்குள் வரும்போதும் யாரும் தூக்கத்திலிருந்து எழும்புவதற்கான அறிகுறி இல்லை, அதனால் அவர்கள் அனைவரையும் எழுப்பி குளிக்க துரத்தி விட்டு விட்டு கல்லூரிக்கு எடுத்துச் செல்வதற்கு தேவையான அனைத்தையும் எடுத்து வைக்க ஆரம்பித்தனர்.


ஒரு வழியாக அனைவரும் குளித்து முடித்து விட்டு வர எப்பொழுதும் தனித்தனியாக செல்லும் இவர்கள் கூட்டம் இன்று ஒன்றாக சாப்பிட சென்றது. அதுவே அங்கிருந்த பலருக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தும் ஒற்றுமையாக இருந்தால் சந்தோசம் தான் என்று எண்ணிக் கொண்டு தங்களுடைய வேலைகளில் கவனமாக இருந்தனர்.



அனைவரும் தயாராகி கல்லூரிக்கு கிளம்பும் சமயம் சாகித்யா நெற்றி வகிட்டில் குங்குமம் வைக்காததை பார்த்த பிந்து "சாகி நீ ஏன் குங்குமம் வைக்காம வர்ற என்ன ஆச்சு மறந்துட்டியா?" என்று கேட்டாள்.
அப்போதுதான் அனைவரும் அவள் குங்குமம் வைக்காமல் வருவதை பார்த்து அவளை கேள்வியாக பார்த்தனர். அவர்கள் தன்னை பார்ப்பதை பார்த்து தலையில் அடித்துக்கொண்ட சாகித்யா ஏதோ கூற வருவதற்குமுன் அர்ச்சனா சும்மா இருக்காமல் "ஆமா அந்த அளவுக்குத்தான் அவ இந்த கல்யாணத்த ஏத்துக்கிட்டு இருக்கா. நேத்துதான் ஏதோ பெருசா பேசினா ஆனா எனக்கு என்னமோ அப்படி தெரியல அவ மனசுல இன்னும் தர்ஷன் தான் இருக்கான் போல" என்று கூறினாள்.



அர்ச்சனா கூறியதைக் கேட்டு சந்தியா சிரிக்க சாதனா முறைக்க ஆரம்பித்தாள். அதைப் பார்த்து இன்னும் சந்தியா மற்றும் அர்ச்சனா நக்கலாக சிரிக்க ஆரம்பித்தனர். அர்ச்சனா பேச ஆரம்பித்த இடைப்பட்ட நேரத்தில் சென்று குங்குமம் வைத்து வந்த சாகித்யா அனைவரையும் பார்த்து "சாரிப்பா மறந்துட்டேன்" என்று கூறி விட்டு அனைவரையும் பார்த்து "இப்ப கிளம்பலாமா?" என்று கேட்டாள்.



அர்ச்சனா சந்தியாவின் கேலி பார்வை தன்னை தொடர்வதை பொறுத்துக்கொள்ள முடியாத சாதனா சாகித்யாவை பார்த்து "சாகி உனக்கு கல்யாணம் முடிஞ்சு பதினஞ்சு நாள் ஆச்சு தானே? இவ்வளவு நாள் வீட்டில் வைத்துவிட்டு தானே இருந்திருப்பே இன்னைக்கு என்ன உனக்கு மறந்து போச்சு?" என்று கேட்டாள்.
அதற்கு சிறிதும் யோசிக்காமல் சாகித்யா "இவ்வளவு நாள் அதாவது கல்யாணம் முடிஞ்சு அன்னையிலிருந்து எனக்கு குங்குமம் வெச்சு விட்டது ருத்ரன் தான். அதனால நான் அத பெருசா யோசித்தது இல்லை, எப்பவுமே காலையில அந்த லூசு தான் எனக்கு வைத்துவிடும் அந்த ஞாபகத்துல இங்கேயும் இருந்துட்டேன் இனி நானே வச்சிக்கிறேன் சரி வாங்க நேரமாச்சு" என்று கூறி முன்னே நடந்தாள்.



அவள் கூறிய பதிலில் சந்தியா மற்றும் அர்ச்சனா முகம் சுருங்கிவிட்டது. ஆனால் மற்ற அனைவர் முகமும் மகிழ்ச்சியில் விரிய ஆரம்பித்தது. அதன்பிறகு அவரவர் அவரவர் வகுப்புகளுக்கு சென்று அமர்ந்தனர்.
சாகித்யா வகுப்பில் அவளுக்கு கல்யாணம் ஆனது விடுதியில் உள்ள மற்றவர்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. அனைவருக்கும் பொதுவாக நடந்த அனைத்தையும் கூறி விட்டு அமைதியாக அமர்ந்துகொண்டாள். அனைவரும் ஒருசேர அவளிடம் ட்ரீட் என்று கேட்க ஏற்கனவே அவர்கள் அதற்காக வாங்கி வைத்திருந்த இனிப்பு வகைகளை கொடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டாள். அவள் வகுப்பில் யாரிடமும் எந்தவித வம்பு சண்டை இழுத்து வைக்காத காரணத்தினால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதேபோல் தர்ஷன் விஷயத்தை அவளுடைய வகுப்பு ஒருபோதும் நம்பியது இல்லை, அதனால் அவர்களுக்கு எதுவும் பெரிதாக தெரியவில்லை.



அதன் பிறகு வழக்கமான வகுப்பு சேட்டை என்று அன்றைய நாள் வகுப்பு முடிய, விடுதிக்குச் செல்லும் வழியில் வழக்கமாக காத்திருக்கும் இடத்தில் தர்ஷன் காத்துக் கொண்டிருந்தான். சாகித்யா அவள் தோழிகளுடன் அங்கு வந்து கொண்டிருந்தாள். எப்பொழுதும் மூவர் மட்டுமே உடன் வருவர், ஆனால் இப்பொழுது புதிதாக சேர்ந்திருக்கும் நட்பு வட்டத்தால் ஏழு பேராக அவளுடன் வந்தனர்.



தூரத்திலிருந்து அவள் வரும்போதே அவள் கழுத்தில் இருந்த தாலி நெற்றியில் இருந்த குங்குமம் ,காலில் அணிந்திருந்த மெட்டி அனைத்தும் தர்ஷன் உள்ளே இருந்த கோபத்தை இன்னும் அதிகரித்துக் கொண்டிருந்தது.



சாகித்யா அனைவருடனும் தன் அருகில் வருவதைப் பார்த்த தர்ஷன் அவள் வந்தவுடன் "நான் உன்கிட்ட தனியா பேசணும்" என்று கூறினான். அதைக்கேட்ட சாகித்யா மற்றவர்களைப் பார்த்து "நீங்க கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நான் பேசிட்டு வரேன்" என்று கூறினாள். அவர்களும் புரிந்து கொண்டு சற்று தொலைவில் நின்றுகொண்டனர்.



சாகித்யா "சொல்லு தர்ஷன் இப்போ உனக்கு என்ன தெரிஞ்சாகணும்?" என்று கேட்டாள்.
தர்ஷன் கோபத்தை உள்ளே அடக்கிக் கொண்டு "ஏன் சாகி நீ உனக்கு கல்யாணம் நடக்க இருந்த போது என்கிட்ட சொல்லவே இல்ல. ஏங்கிட்ட நீ சொல்லி இருந்தா நான் இந்த கல்யாணத்தை எப்படியாவது தடுத்து நிறுத்தி இருப்பேனே! நீ என்ன எந்த அளவுக்கு காதலிக்கிறாய் அப்படின்னு உனக்கு இன்னும் புரியலை எனக்கு அது நல்லா தெரிஞ்சது, உன்னை ஏமாற்றி கல்யாணம் பண்ணி இருக்காங்க. இந்தத் தாலியை உன்னுடைய கழுத்துல கட்டிட்டா நீ அவனுக்கு உரிமையானவளா மாறி விடுவாயா? என்னை மறந்து நீ இன்னொரு வாழ்க்கைய கண்டிப்பா வாழ்ந்து விட மாட்டே, அதனால நான் சொல்றதை கேளு உன்னோட புருஷன் கிட்ட சாரி சாரி உன்னோட கழுத்தில் தாலி கட்டினவன் கிட்ட சொல்லி விவாகரத்து வேணும்னாலும் வாங்கிக்கலாம். அதற்குப் பிறகு நீ படிச்சு முடிச்ச பிறகு நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கலாம் கொஞ்சம் யோசிச்சு பாரு" என்று கூறினான்.



சாகித்யா தனியா செல்லும்போதே சாதனா அனைவருக்கும் கான்பரன்ஸ் கால் போட்டு விட்டாள். அங்கே நின்று கொண்டிருந்த உண்மையான தோழிகள் மற்றும் கான்பரன்ஸ் காலில் இருந்த அனைவருக்கும் மிகவும் கோபமாக வந்தது. ஆனால் சாகித்யா இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று அனைவரும் அமைதி காத்தனர்.



அவன் கூறிய அனைத்தையும் கேட்ட சாகித்யா ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து "நீ ஒரு விஷயத்தை முதல்ல புரிஞ்சுக்கோ, நீ அன்னைக்கு என்கிட்ட உன்னோட காதலை சொல்லும்போது நான் உன்கிட்ட என்ன சொன்னேன். இந்த மூணு வருஷத்துல என்ன நடந்தாலும் நீ அதை ஏற்றுக்கொண்டுதான் ஆகணும்னு சொன்னேனா இல்லையா? அது மட்டும் இல்ல என்னோட அக்கா கல்யாணத்துக்கு என்னோட ஃப்ரண்டா உன்ன நான் கூப்பிட தான் செஞ்சேன். நீதான் வரலை வந்து இருந்திருந்தா என்னோட கல்யாணத்தை நீ நேர்ல பார்த்து இருக்கலாம், அதை நீ செய்யல இந்த வாழ்க்கை என்னோட வீட்டுல எனக்காக ஏற்படுத்திக் கொடுத்தது. அது மட்டும் கிடையாது எனக்கு கல்யாணம் முடிஞ்சு பதினைந்து நாள் ஆச்சு எங்களுக்குள்ள எதுவுமே நடக்கல அப்படின்னு உனக்கு தெரியுமா? சும்மா தேவையில்லாம பேசாதே சப்போஸ் என்னுடைய புருஷனுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லைனா கூட இனி நான் இன்னொரு கல்யாணத்தை பண்ணிக் கொள்கிறே ஐடியா கிடையாது.



அதுவும் நிச்சயமாக உன்னை நான் செய்து கொள்ள மாட்டேன். அதற்கு நீ ஆசைப்படாதே கண்டிப்பாக எனக்கு விவாகரத்து எல்லாம் நடக்காத காரியம் அப்படி நடக்கும் என்று எண்ணி தேவையில்லாமல் ஆசை வளர்க்காதே, கடைசியாக உன்னை நான் என்றுமே காதலித்தது கிடையாது. நீ என்னிடம் காதலை கூறும்போது ஒரு உண்மையான நட்பை இழந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் தான் உன்னை அமைதியாக இருக்க கூறினேன். ஆனால் நீ எவ்வாறெல்லாம் உன் மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாய் என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இன்றுமுதல் உனக்கும் எனக்குமான நட்பு முடிவடைந்துவிட்டது ஏன் என்றால் கண்டிப்பாக நீ என்னுடன் உண்மையான நட்புடன் பழக மாட்டாய் என்பதனை நான் புரிந்து கொண்டேன். அதனால் இனியன் முன் வந்து நின்று பேசும் பழக்கத்தை வைக்காதே" என்று கூறினாள்.



அவள் கூறியதைக் கேட்ட தர்ஷன் வெளிப்படையாக கோபத்தை காட்ட ஆரம்பித்தான் "நீ என்கிட்ட பொய் சொல்ற கண்டிப்பா நீ சொல்ற நான் நம்ப மாட்டேன். உன் வீட்டில் போய் நான் இத பத்தி பேசி நானே உன்னை வந்து கூடிய சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்வேன். நான் உன்னிடம் காதலை கூறும் போதே நீ என்னை வேண்டாம் என்று நிராகரித்து இருந்தால் நிச்சயமாக நான் உன்னை தொந்தரவு செய்து இருக்க மாட்டேன். ஆனால் நீ என்னை மூன்று வருடம் அமைதி காக்க தானே கூறினாய்? அதனால் கண்டிப்பாக நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதே மாதிரி கண்டிப்பாக இந்த பதினைந்து நாள் எதுவும் நடந்து இருக்காது நீ நீயாகத்தான் இருப்பாய், ஏனென்றால் உன்னால் என்னைத் தவிர வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று திமிராக கூறினான்.



அவன் கூறியதை கேட்டு கடுப்பான சாகித்யா "டேய் மட சாம்பிராணி நான் முழுசா மிஸஸ் சாகித்யா சிவ ருத்ரன். நீ என்ன வேணா பண்ணிக்கோ என்னுடைய வீட்டை பற்றி எனக்கு நல்லாவே தெரியும் உன்னால முடிஞ்சதா நீ செஞ்சுக்கோ. ஆனா நீ நினைக்கிற மாதிரி என்னுடைய புருஷன் ஒன்னும் லூசு கிடையாது. அவன் கல்யாணம் நடந்த அன்னைக்கு இரவே என்னை முழுசா மிஸஸ் சிவ ருத்ரனாக மாற்றிவிட்டான். இதற்கு மேல் உன்னுடைய பாடு ஆனால் இனி என்னை நீ தொந்தரவு செய்தால் என்ன நடக்கும் என்பது உனக்கே தெரியும், ஏற்கனவே எனக்கு பாதுகாப்பு அதிகம் இப்போது புதிதாக எனக்கு புருஷன் அப்படிங்கிற போஸ்ட்ல ஒருத்தன் அண்ணன் அப்படிங்கிற போஸ்ட் ல ரெண்டு பேர் சேர்ந்து இருக்காங்க எல்லாரும் சேர்ந்து உன்னை என்ன ஆக்குவார்கள் என்று யோசித்து முடிவெடு! இனி நானும் இதுபோல் ஒருபோதும் பொறுமையாக பேசிக் கொண்டிருக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு தன்னுடைய தோழிகள் அனைவரையும் பார்த்தாள். அவளுடைய பார்வையை புரிந்து கொண்ட அனைவரும் அவளை பின்தொடர தயாரானார்கள். ஆனால் சந்தியா மற்றும் அர்ச்சனா கிளம்பாமல் இருப்பதை பார்த்த சாதனா மற்றும் பிந்து அவர்களையும் பிடித்து இழுத்துக் கொண்டு கிளம்பினார்கள்.



தர்ஷனால் சாகித்யா முழுமையாக ருத்ரனின் மனைவியாக மாறிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, இதனால் கோபமாக தன்னுடைய காலை தரையில் உதைத்து விட்டு தன்னுடைய விடுதி நோக்கி புறப்பட்டான்.



இங்கே விடுதிக்கு சென்று கொண்டிருந்த சாகித்யாவை பார்த்த அர்ச்சனா மற்றும் சந்தியா "சாகி நீ தர்ஷன் கிட்ட சொன்னது உண்மையா உண்மையாகவே நீ கல்யாண வாழ்வை முழுமையாக வாழ ஆரம்பித்து விட்டாயா?" என்று கேட்டார்கள். மற்றவர்கள் இவள் என்ன கூற போகிறாளோ என்று பயத்துடன் பார்த்தனர். ஏனென்றால் போனில் இருந்த அனைவருக்கும் மற்றும் அல்லாமல் அங்கே இருந்த சாதனா மற்றும் அவள் தோழிகள் அனைவருக்கும் அவள் இன்னும் அவளாகவே இருப்பது தெரியும், ஏனென்றால் ருத்ரன் தேவை இல்லாமல் எந்தவித சிக்கலும் வரக்கூடாது என்பதற்காக அவர்களிடம் தெளிவாகக் கூறி விட்டான். இதனால்தான் அனைவரும் கலக்கமாக அவள் முகத்தை பார்த்தனர். அதற்கு முக்கிய காரணம் அர்ச்சனா அல்லது சந்தியா இருவரும் கண்டிப்பாக உண்மை தெரிந்தால் தர்ஷனுக்கு சொல்லி விடுவார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருந்ததால் தான் பயப்பட ஆரம்பித்தார்கள்.



ஆனால் அனைவரது பயத்தையும் தவிடுபொடியாக்கிய சாகித்யா "ஆமா லூசு கல்யாணம் பண்ணா எல்லாம் நடக்கத்தான் செய்யும் இது என்ன புதுசா என்னோட வீட்டுல கல்யாணம் பண்ணி போகும் போது என்னோட மாமியார் வீட்ல என்ன சொன்னாலும் அதைக் கேட்டு ஒழுங்கா நடக்க தான் சொன்னாங்க. என்னுடைய புருஷனை நல்லா பாத்துக்கன்னு சொன்னாங்க. அதனால நானும் அவங்க சொன்ன மாதிரி நல்லவிதமா நடந்துகிட்டேன். ஏற்கனவே உங்க எல்லாருக்கும் தெரியும் நான் ரொம்ப நல்ல புள்ள வேற, வீட்ல என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வேன் அதனால இதுலயும் என்னுடைய புருஷனுக்கு நல்ல பொண்டாட்டியாவே இருந்தேன்" என்று அசராமல் இருவர் தலையிலும் இடியை இறக்கி விட்டு சென்று விட்டாள். மற்ற அனைவருக்கும் தான் சிரிப்பை அடக்க முடியாமல் போனது.


அனைவருக்கும் தெரியும் இந்த 15 நாட்களும் அவள் காலை 9 மணிக்கு எழும்பி ஒரு வேலை செய்யாமல் நன்றாக என்ஜாய் செய்து விட்டு இரவு 9 மணிக்கு தூங்கி அனுபவித்து வாழ்ந்தாள். ஆனால் இங்கே அத்தனையும் மாற்றி கூறியதை நினைத்து சிரித்துக் கொண்டே சென்றனர்.


அனைவரும் விடுதிக்கு செல்ல சாதனா சற்று பின்தங்கி போனை காதில் வைத்து "அண்ணா என்கிட்ட சொல்லவே இல்ல கூடிய சீக்கிரம் என்னை அத்தையாக வைத்து விடுவாய் போல" என்று தன்னுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டாள்.


மற்றவர்கள் தங்களை கட்டுபடுத்த முடியாமல் சிரிக்க ஆரம்பித்தனர். ருத்ரனுக்குமே சிரிப்பை அடக்கவே கஷ்டமாகத்தான் இருந்தது, இருந்தாலும் முயன்று தன்னைக் கட்டுப்படுத்தி "ஆனாலும் உன்னோட பிரண்ட் இவ்வளவு தூரம் பேசுவா அப்படின்னு நான் யோசிக்கவே இல்லை. ஆனாலும் எல்லாரும் நினைச்சி பயந்த விஷயத்தை அசால்டா சொல்லிட்டு போயிட்டா இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு. தர்ஷன் இதோட போறமாதிரி தெரியல, இங்க வந்தா நாங்க பார்த்துக் கொள்வோம். ஆனால் அங்கு ஏதாவது என்றால் நீங்கள் தான் சமாளிக்க வேண்டும் அதை மீறி போச்சு அப்படின்னா உடனே எங்களுக்கு சொல்லி விடு" என்று கூறினான்.



சத்யா "அண்ணா நீங்க அவ கிட்ட பேசாம இருக்காதீங்க, டெய்லி பேசுங்க நாங்களும் பேசுறோம். கண்டிப்பா அவ எல்லாத்தையும் எங்க கிட்ட சொல்ற பழக்கம் இருக்கு, அதே மாதிரி உங்க கிட்டயும் வந்துவிட்டா என்ன ஒரு பிரச்சனையா இருந்தாலும் அவ சமாளித்த பிரச்சனையா இருந்தாலும், நமக்கு தெரிஞ்சு இருந்தா பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்தா பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறினான்.



ருத்ரன் "கண்டிப்பா பேசறேன் ஆனா உன் அத்த பொண்ணு கிட்ட நான் கொஞ்சமாச்சும் டெரரா இருந்தா தான் அவளை சமாளிக்க முடியும். எவ்வளவுக்கு எவ்வளவு அவள் தெளிவா இருக்கிறாளோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளுக்கு குறும்புத்தனம் உண்டு என்பது எனக்கு தெரியும். அதனால் நான் பார்த்துக்கொள்கிறேன், ஆனால் எக்காரணம் கொண்டும் நீங்களும் அவளை விட்டு விலகி விடாதீர்கள்" என்று கூறிவிட்டு சாதனாவிடம் "சாது நீ கிளம்பு உனக்கு எப்போ அவ கிட்ட சொல்ல விருப்பம் இருக்கோ அப்போ சொல்லிரு ஏன்னா இத வச்சு பிரச்சனை வந்துவிடாமல் பார்த்துக் கொள்" என்று கூறினான்.
சாதனா "சரி அண்ணா நான் பார்த்துக்கொள்கிறேன். நேரமாகிவிட்டது எல்லாரும் விடுதிக்கு சென்று விட்டார்கள் நானும் செல்கிறேன், ஏதாவது பிரச்சினை என்றால் கண்டிப்பாக சொல்கிறேன்" என்று பொதுவாக கூறிவிட்டு போனை வைத்தாள்.



அதன் பிறகு விடுதிக்கு சென்று வழக்கமான வேலைகளை பார்த்துவிட்டு இரவு சாப்பிட்டுவிட்டு அனைவரும் தூங்க ஆரம்பித்தனர். தூங்கப் போவதற்கு முன்பு நடந்த அனைத்தையும் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து சக்தி, பாலா, சத்யா, சாந்தினி மற்றும் ருத்ரன், அஷோக், விக்னேஷ் அனைவருக்கும் அனுப்பிவிட்டு சாகித்யா தூங்க சென்று விட்டாள். அனைவரும் அவள் அனுப்பிய வாய்ஸ் ரெக்கார்ட் பார்த்தது அவள் தங்களை எந்த நிலைமையில் வைத்து இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.



அதன் பின் வந்த நாட்களில் தர்ஷனுக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் வெளியே அமைதியாக இருந்தான். அதேபோல் அர்ச்சனா மற்றும் சந்தியா கொஞ்சநாள் அடக்கி வாசித்தனர். இவர்களின் வழக்கமான சேட்டை மற்றும் படிப்பு, வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவது என்று அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியாக சென்றனர். சாகித்யா ஓரளவிற்கு ருத்ரவிடம் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாள். ஆனால் அவள் சகஜமாக பேச ஆரம்பிக்க ஆரம்பிக்க அவளுக்குள் பல குழப்பங்கள் உருவாக ஆரம்பித்தது. அவளை இன்னும் குழப்புவதற்கு மட்டுமல்லாமல் அவளுடன் சேர்ந்த அனைவருக்கும் அதிர்ச்சியை தரும் விதமாக வர இருந்தது ஒரு புதுவரவு.



சாகித்யாவின் குழப்பம் என்ன?
யார் அந்த புதுவரவு அந்த புது வரவால் வரவிருக்கும் பிரச்சனைகள் என்னென்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்து அத்தியாயத்தில் உடைகள் அவர்களுடைய கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்களுக்கு என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top