• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 8

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
சாகித்யா மற்றும் சாதனாவின் கல்லூரி வாழ்க்கை மிகவும் நன்றாக சென்று கொண்டு இருந்தது. கல்லூரி விடுதி வந்து சேர்ந்து ஒரு மாதம் ஆகியும் சாகித்யா வீடு செல்லவில்லை ஆனால் தினமும் ருத்ரன் ராணி சிவலிங்கம் மற்றும் தன்னுடைய வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசிக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் ருத்ரன் இடம் பேசும்போது அவளுக்கு நிறைய குழப்பங்கள் வந்தது. ஆனால் அதை தெளிவுபடுத்தும் வழிதெரியாமல் தனக்குள்ளேயே யோசித்துக் கொண்டிருந்தாள்.


அவளுடைய குழப்பம் என்னவென்று தெரியாமல் இருந்தாலும் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பது அவளுடைய தோழிகள் மற்றும் சாதனாவிற்கு தெரிந்தது. அவளாக கூறும் வரை நான் எதுவும் கேட்க வேண்டாம் என்று அமைதி காத்தனர். அதற்கு முக்கிய காரணம் அவள் படிப்பில் எப்பொழுதும் இருப்பது போலே நன்றாகவே இருந்தாள். அதனால் அவர்களும் அவள் பெரிதாக எதையும் நினைத்து குழப்பிக் கொள்ள வில்லை என்று நினைத்து அமைதி காத்தனர்.



அந்த வாரம் வார இறுதி நாட்களில் வீட்டிற்கு வருமாறு ருத்ரன் சாகித்யாவிடம் கூறினான். அதற்கு அவள் "எதுக்கு ஏதாவது முக்கியமான விஷயமா திடீர்னு வீட்டுக்கு வரச்சொல்லி கூப்பிடுறீங்க?" என்று கேட்டாள்.
ருத்ரன் "தியா நீ ஹாஸ்டல் போய் ஒரு மாசம் முழுசா முடிஞ்சது இந்த வாரம் உனக்கு ரெண்டு நாள் லீவு இருக்குல்ல வெள்ளிக்கிழமை நான் உன்னை ஈவினிங் வந்து பிக்கப் செய்து கொள்கிறேன். சனிக்கிழமை ஃபுல்லா இங்க இருந்துகிட்டு ஞாயிற்றுக்கிழமை உன்னோட வீட்டுக்கு போயிட்டு வந்து ஹாஸ்டல் கொண்டு வந்து விட்டுவிடுகிறேன். அதனால கிளம்பி ரெடியா இரு" என்று கூறினான்.



சாகித்யா "சரி வெள்ளிக்கிழமை பார்க்கலாம் இப்ப கொஞ்சம் வேலை இருக்கு நான் அப்புறமா பேசறேன்" என்று கூறிவிட்டு போனை கட் செய்து அதனிடத்தில் வைத்துவிட்டு அனைவரும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றாள்.


அவள் பலநாள் குழப்பத்தில் சுற்றிக் கொண்டிருப்பதை காண முடியாத சாதனா அவளிடம் "சாகி உனக்கு ஏதாவது பிரச்சனையா எப்ப பாரு ஏதாவது ஒரு குழப்பத்தில் இருக்குற மாதிரியே இருக்கிறாய்" என்று கேட்டாள்.



சாகித்யா "எனக்கு குழப்பம் இருக்கிறது உண்மைதான் ஆனா இந்த வாரம் நான் ஊருக்கு போறேன் போயிட்டு வந்து உங்ககிட்ட நான் சொல்றேன். அதுவரைக்கும் இதைப்பற்றி எதுவும் கேட்காதீங்க" என்று கூறினாள். அதற்கு மேல் யாரும் அவளிடம் எதைப்பற்றியும் கேட்கவில்லை, ஆனால் அவள் ஊருக்கு செல்கிறேன் என்று கூறியதைக் கேட்ட சந்தியா "என்ன சொல்ற இந்த வாரம் ஊருக்கு போறியா? இந்த வாரம் எல்லாரும் சேர்ந்து அவுட்டிங் போறதா தானே ப்ளான் பண்ணியிருந்தோம் இப்ப திடீர்னு வந்து ஊருக்கு போறேன்னு சொல்றே" என்று கேட்டாள்.



ஏற்கனவே குழப்பத்தில் இருந்த சாகித்யா இவர்கள் கூறியது இன்னும் கடுப்பேத்த "ஏன் தர்ஷன வரச்சொல்லி இருந்தீங்களோ நான் வரலைன்னு சொல்றதுக்கு இவ்வளவு வருத்தப்படுகிறாய் உனக்கும் அர்ச்சனாகும் நிறைய விஷயம் மறந்து போச்சு நினைக்கிறேன். எனக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு நான் இங்க வந்து ஒரு மாசம் ஆச்சு ஆனா நான் இன்னும் வீட்டுக்கு கூட போகல, அதனால என்னோட புருஷன் வீட்டுக்கு வரச்சொல்லி கேட்டிருக்காங்க நானும் வீட்டுக்கு போறேன். இனி தேவை இல்லாத வேலை ஏதாவது நீ ரெண்டு பேரும் பாக்குறது தெரிஞ்சது உண்டு இல்லை என ஆகிவிடுவேன்" என்று பட படவென பொரிந்து விட்டு தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.



சாகித்யா சொல்லி சென்றது அர்ச்சனா மற்றும் சந்தியா இருவருக்கும் அதிர்ச்சியாக இருக்க சாதனா தவிர மற்றவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சாதனா ஏதோ யோசனையில் இருப்பதை பார்த்த சுவாதி மற்றும் மதி அவளை திரும்பி பார்த்தனர். அனைவரும் சிரிப்பதைப் பார்த்த அர்ச்சனா, சந்தியா பொறுக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு கிளம்ப அபிஷா மற்றும் பிந்து வேலை இருப்பதாக கிளம்பி சென்றனர். மீதி இருந்த மூவரும் அமைதியாக இருந்தனர் பின்பு சுவாதி "சாது என்ன பிரச்சன நீ எதுக்கு யோசனையாய் இருக்க?" என்று கேட்டாள்.



சாதனா "இல்லடா நம்ம நினைக்கிற மாதிரி இல்ல சாகித்யா ரொம்ப பெரிய குழப்பத்தில் இருக்கா கல்யாணம் நடந்த விஷயத்தை யோசிக்க ஆரம்பிச்சுட்டா. அதே மாதிரி அண்ணன் அவகிட்ட நார்மலா பேசுறது வச்சு இன்னும் குழம்புகிறாள். இந்த வாரம் வேற எங்க வீட்டுக்கு உங்களோட அத்தை பொண்ணு ப்ரீத்தி வருவா போல, இதுவரைக்கும் அவ வருவது கன்ஃபார்ம் ஆகவில்லை அவ வந்தா கண்டிப்பா அண்ணா தியாவை வீட்டுக்கு கூட்டிட்டுப் போக மாட்டான். இவ கிளம்பிப் போன பிறகு அவ வந்துவிட்டா, இன்னும் சாகிய நல்லா குழப்பி விட்டுட்டு போவா அதுதான் யோசனையா இருக்கு" என்று கூறினாள்.



மதி "என்ன சொல்ற சாதனா அந்த பிரீத்தி ஏற்கனவே ருத்ரா அண்ணா பின்னாடி சுத்திக்கிட்டு இருந்தா தானே! அண்ணா அவள ஒரு பொண்ணா கூட மதித்தது கிடையாது. முதல்ல எங்கள மாதிரி தான் அவளையும் பார்த்தாங்க ஆனா அவளோட இன்டென்ஷன் வேற மாதிரி இருந்ததால, அண்ணா அவளை ரொம்ப திட்டி விட்டுட்டாங்க. நம்மள விட மூணு வயசு பெரியவ ஆனா கொஞ்சம் கூட அவளுக்கு அறிவே கிடையாது. இந்த வாரம் அவ வீட்டுக்கு வந்தா சாகித்யாவை நினைச்சு பயமா இருக்கு" என்று தன்னுடைய ஆதங்கத்தை கூறினாள்.



சாதனா "நீ நினைக்கிற மாதிரி அவ ஏதாவது பண்ணா சாகித்யா அவள சும்மா விடமாட்டா அண்ணாவும் சும்மா விடமாட்டான். ஆனா கண்டிப்பா இன்னும் அவளோட குழப்பம் ஜாஸ்தியாகும், அது எப்படி இருக்கும்னு இவ வீட்டுக்கு போயிட்டு வந்த பிறகு தான் நமக்கு தெரியும் நல்லதே நடக்கும்னு நம்புவோம்" என்று கூறினாள்.



சுவாதி "சரி எப்படியும் இன்னும் மூணு நாள்ல எல்லாம் தெரிஞ்சு விடும், அதனால இப்போ எதையும் கண்டுக்காம நம்முடைய வேலை எல்லாத்தையும் பார்ப்போம்" என்று அவர்கள் இருவரையும் சேர்த்து அழைத்துக்கொண்டு வேலையை பார்க்க சென்றாள்.



அதன்பிறகு அன்றைய வாரம் அவ்வாறே முடிய சரியாக வெள்ளிக்கிழமை மாலை சாகித்யாவை அழைத்து செல்ல ருத்ரன் வந்துவிட்டான். அனைவரிடமும் பொதுவாக விடைபெற்று ருத்ரன் உடன் வீட்டிற்கு கிளம்பி சென்றாள் சாகித்யா. செல்லும் வழியில் ஏதும் பேசாமல் சாகித்யா உறங்கிவிட ருத்திரனும் எதுவும் கூறாமல் அமைதியாக வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சரியாக வீட்டிற்கு அருகில் வரும் நேரத்தில் சாகித்யா கண்விழித்தாள்.



கார் வீட்டிற்கு வந்து விட்டதை அறிந்தவள் தன்னுடைய பேக்கை எடுக்க சென்றாள். ஆனால் ருத்ரன் "நீ ரொம்ப டயர்டா தெரிகிற நீ வீட்டுக்குள்ள போய் சாப்பிட்டு படு நான் எடுத்துட்டு வரேன்" என்று கூறினான் அதற்கு சாகித்யா "நீங்களும் வாங்க சேர்ந்து போய் சாப்டுட்டு, நான் தூங்க போறேன் நீங்க பேசிட்டு தூங்குவதற்கு வாங்க" என்று கூறினாள்.



முதலில் சாகித்யா உள்ளே செல்ல பின்னே ருத்திரனும் வந்தான். வீட்டிற்குள்ளும் இவர்களுக்காக ராணி மற்றும் சிவலிங்கம் காத்துக்கொண்டிருந்தனர். இருவரையும் பார்த்தவள் ஓடிச்சென்று அணைத்துக்கொண்டு "எப்படி இருக்கீங்க? நான் இல்லாம இந்த ஒரு மாசம் ரொம்ப ஜாலியா இருந்து இருப்பீர்கள் அப்படித்தானே?" என்று கேட்டாள்.



இருவரும் ஒருசேர "நீ இல்லாம கொஞ்சம் கஷ்டமாதான் இருந்துச்சு ஆனாலும் நீ படிக்கணும் இல்ல அதனால நாங்க அமைதியா இருந்தோம். சரி முதல்ல வா வந்து சாப்பாடு அப்புறம் போய் ரெஸ்ட் எடு நாளைக்கு மத்ததை பேசிக்கலாம்" என்று கூறினார்கள்.



அதன்பிறகு நால்வரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். காலையில் தியா மற்றும் ருத்ரன் கண்விழித்தது, கீழே கேட்ட ஏதோ ஒரு சத்தத்தில் தான் அதில் கடுப்பான சாகித்யா "எந்தக் எருமமாடு இந்த காலைல கத்திட்டு இருக்கு" என்று கடுப்பாக எழுந்து வெளியே சென்றாள். அவள் பின்னே ருத்ரனும் சென்றான்.


கீழே வந்த சாகித்யாவை பார்த்து ராணி மற்றும் சிவலிங்கத்திற்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் ப்ரீத்தி மற்றும் அவளுடைய தாய் வசந்தா இருவருக்கும் முகத்தில் ஈயாடவில்லை, ஏனென்றால் நம் அம்மணி வந்த கோலம் அப்படி நன்றாக உருண்டு பிரண்டு உறங்கியதில் தலையெல்லாம் கலைந்து குங்குமம் நெற்றி பொட்டு அழிந்து உடை கசங்கி வந்து கொண்டிருந்தாள். அவள் பின் வந்த ருத்ரன் எதற்காக தன் தாய் தந்தை சிரிக்கிறார்கள் என்று யோசித்த படியே வந்தான்.



சாகித்யா நேரே கீழே வந்தவள் ப்ரீத்தியிடம் சென்று "ஏம்மா உனக்கு என்ன லூசா காலையிலேயே இந்த கத்து கத்து கிட்டு இருக்க. வீட்ல இருக்கிறவங்க எல்லாம் எங்க போறது ஏதாவது கத்தனும் என்றால் வெளியே போய் கத்து சும்மா தூங்கிக்கிட்டு இருக்க மனுஷியை தொந்தரவு பண்ணிக்கிட்டு" என்று கத்திக் கொண்டிருந்தாள். ருத்ரன் அவள் கத்துவதை கண்டுகொள்ளாமல் தன் தாய் தந்தையிடம் எதற்காக சிரித்தீர்கள் என்று பார்வையாலேயே கேட்க ஆரம்பித்தான். அதற்கு அவர்கள் கண்களாலேயே சாகித்யாவை பார்க்கும் படி கூறினார்கள்.



எதற்காக தன் மனைவியை பார்க்க கூறுகிறார்கள் என்று யோசித்த ருத்ரன் அவளுடைய கோலத்தை பார்த்து தலையில் அடித்துக்கொண்டு, கத்தி கொண்டிருந்தவளின் அருகில் சென்று ஒரு கையால் அவளுடைய வாயை பொத்தி மறு கையால் அவளை தூக்கி கொண்டு தங்களுடைய அறைக்கு சென்றான். அதை பார்த்து இன்னும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்தனர், ராணி மற்றும் சிவலிங்கம் இருவரும். முதலில் தூக்கும்போது திமிரிய சாகித்யா ருத்ரன் அவள் காதுகளில் "நீ தூங்குற இலட்சணம் உனக்கே தெரியும். ஒழுங்கா அமைதியா வா, நீ இப்படியே தான் கீழே போய் நின்னு இருக்கே அதனால அமைதியா வா" என்று கூறினான்.



அதன்பிறகுதான் எப்படி காலையில் இருப்போம் என்பதை உணர்ந்துகொண்ட சாகித்யா அமைதியாக அவனுடைய கைகளில் இருந்தாள். அறையில் சென்று இறக்கி விட்ட ருத்ரன் அவளை குளிக்க அனுப்பி விட்டு தன்னுடைய உடற்பயிற்சி செய்ய சென்றுவிட்டான். அவள் குளித்து முடித்து வெளியே வரவும் அவன் உடற்பயிற்சி முடித்து வரவும் சரியாக இருந்தது பின்பு அவன் குளிக்க சென்றான் இவள் தன்னை தயார்படுத்த சென்றாள்.



சாகித்யா தயாராகி கொண்டிருக்கும்போதே வெளியே வந்த ருத்ரன் அவளுடைய நெற்றி வகிட்டில் குங்குமம் வைத்து விட்டு அவன் தயாராக சென்றான். அவன் குங்குமம் வைத்து பார்த்து ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தாள் சாகித்யா. பதிலுக்கு அவனும் புன்னகைத்துவிட்டு சென்றான், இருவரும் தயாராகி ஒன்றாகவே கீழே வந்தனர்.



கீழே சென்றவுடன் நேராக ராணியிடம் சென்ற சாகி "அத்தம்மா எனக்கு பசிக்குது வாங்க என்ன சமைச்சு வச்சு இருக்கீங்க?" என்று கேட்டாள்.



ராணி "உனக்கு ரொம்ப பிடிச்ச ஆப்பமும் சன்னா மசாலா செஞ்சு வெச்சிருக்கேன். வா வந்து சாப்பிடு ருத்ரா நீயும் வா" என்று கூறி அழைத்துச் சென்றார் ப்ரீத்தி சும்மா இருக்காமல் அவளும் சாப்பிட சென்றாள்.
சாகித்யா மற்றும் ருத்ரன் அவளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை இருவரும் சாப்பிடுவதில் கவனமாக இருந்தனர். ஏனென்றால் ருத்ரனுக்கு ஏற்கனவே ப்ரீத்தி பத்தி தெரியும் ஆதலால் அவன் அமைதியாக இருந்தான். சாகித்யாவிற்கு ஏனோ அவள் மேல் நல்ல எண்ணம் தோன்ற வில்லை அதனால் அவளும் அவனை மதிக்கவில்லை.



இருவரும் தங்களை கவனிக்காமல் இருப்பதை பார்த்து கடுப்பான ப்ரீத்தி ருத்ரனை பார்த்து "என்ன மாமா அக்கா ஓடிப்போய் உங்கள் அசிங்கப்படுத்தி இருக்கா. அவ தங்கச்சிய போய் கல்யாணம் பண்ணி இருக்கீங்க? இவள் என்னைக்கு உங்களை ஏமாற்றி ஓடி போக போறாளோ தெரியல எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்" என்று நக்கலாகவே கூறினார்.



அதைக்கேட்ட ருத்ரன் மற்றும் அவனது பெற்றோருக்கு கோபமாக வந்தது. வசந்தாவும் சும்மா இராமல் "ஆமா உலகத்திலேயே இல்லாத பொண்ணா நம்ம குடும்பத்திலேயே எத்தனை பேர் இருக்காங்க, ஏன் என்னோட பொண்ணு கூட இருக்கா அப்புறம் எதுக்கு அந்த குடும்பத்தில் போய் அசிங்க பட வேண்டும். இப்ப பாருங்க வீட்ல ஒரு வேலை செய்வது இல்லை நீங்க சமைச்சு சாப்பிட்டு விட்டு உங்களை அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கா" என்று தன் பங்கிற்கு பேசினார்.



தன் கோபத்தை அடக்க முடியாத ருத்ரன் ஏதோ பேச வாய் எடுக்கும் முன் சிவலிங்கம் "அக்கா கொஞ்சமாச்சும் வார்த்தையை அளந்து பேசுங்கள். அவ எங்க வீட்டு பொக்கிஷம் தேவையில்லாம அவளை பத்தி பேசி அசிங்கப்பட்டு போயிடாதீங்க" என்று கூறினார்.



சாகித்யா பொறுமையாக அனைவரின் முகத்தையும் பார்த்துவிட்டு கடைசியாக ப்ரீத்தி முகத்தைப் பார்த்து "எங்க கல்யாணம் நடந்தப்போ உன்னையும் உன்னோட அம்மாவையும் நான் பார்க்கவே இல்லையே! நீ ஒழுங்கா இருந்தா எதுக்காக என்ன கேட்க போறாங்க நீ வந்ததுல இருந்து என்னோட அத்தை மாமா அப்புறம் என்னோட புருஷன் முகத்துல ஏதோ ஒரு வெறுப்பு இருக்கு. கண்டிப்பா நீ என்னமோ பெருசா பண்ணியிருக்கே அது மட்டும் நல்லா தெரியுது, எங்க அக்கா ஓடிப்போனா அது அவளோட முடிஞ்சது. அதை நான் செய்யணும்னு எந்தவித சட்டமும் இல்லை. இவங்க என்னோட குடும்பம் இங்க வந்து பேச உனக்கு உரிமை இல்லை. இனி தேவையில்லாம இப்படி அசிங்க படுற மாதிரி பேசுனா அப்படின்னா நான் பேசமாட்டேன் இவங்க மூணு பேரும் உங்க மேல எவ்வளவு பாசமா இருப்பாங்க அப்படிங்கற விஷயத்தை டெஸ்ட் பண்ண உன்னை யூஸ் பண்ணிப்பேன் அவ்வளவுதான்" என்று கூறி முடித்தாள்.



அவள் கூறியதைக் கேட்டு மூவருக்கும் மனம் மகிழ்ந்து போனது. ஆனால் ப்ரீத்தி மற்றும் வசந்தா இருவருக்கும் பயம், கோபம் கலந்த வந்தது. ஏனென்றால் இவளை தன்னுடைய பொக்கிஷம் என்று கூறும்போது கண்டிப்பாக இவளை சாதனாவிற்கு சமமாக வைத்துள்ளார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள். அதனால் இதற்குமேல் ஏதாவது பேசினால் நிச்சயமாக முதலுக்கே மோசமாகிவிடும் என்பதை புரிந்து கொண்டு கொஞ்சம் ஆறப்போட்டு இதை கவனிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே அமைதி காத்தனர்.



அதன் பிறகு அந்த நாள் மகிழ்ச்சியாக சென்றது. சிலநேரம் சாகித்யா ருத்ரனை குழப்பமாக பார்ப்பதை வீட்டில் உள்ள அனைவரும் கண்டு கொண்டனர், ஆனாலும் பொறுமை காத்தனர். ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே அசோக் மற்றும் விக்னேஷ் வந்துவிட இருவரிடமும் சாகித்யா சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தாள். பின்பு நால்வரும் கிளம்பி அவள் வீட்டிற்கு சென்றனர். அங்கு சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு சக்தி, சத்யா, பாலா மூவரையும் அழைத்துக் கொண்டு சுற்றி பார்க்க சென்றனர்.
மாலை வரை ஒன்றாக சுற்றி விட்டு இரண்டு வீட்டிலும் கூறி விட்டு அவளை ஹாஸ்டலில் கொண்டு போய் விட்டு வந்தான் ருத்ரன். ஹாஸ்டல் வந்ததால் தன்னுடைய தோழிகளுக்கு வாங்கி வந்த அனைத்தையும் கொடுத்துவிட்டு அமைதியாக தூங்க சென்று விட்டாள். அவளுடைய அமைதியே சாதனாவிற்கு கலக்கத்தை உண்டு பண்ணியது இருந்தாலும் எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணி கொண்டு தன் அண்ணன் கூறிய விஷயங்களை யோசித்துக்கொண்டு இருந்தாள். வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ருத்ரன் கூறியிருந்தான்.



அசோக் போன் செய்து சாதனாவிடம் பேசியபோது "சாது சாகித்யா ஏதோ பெரிய குழப்பத்தில் இருக்கா அத தெளிவா கேட்டு யோசிச்சு பேசு" என்று கூறினான்.



சாதனா "கொஞ்சம் பயமாத்தான் இருக்கு வீட்டுக்கு போயிட்டு வந்து பேசுறேன் அப்படின்னு சொன்னா ஆனா வந்து அமைதியா படுத்துட்டா. சரி என்ன பேசுறா அப்படின்னு கேட்டுட்டு சொல்றேன்" என்று கூறி போனை வைத்தாள்.



அனைவரும் தூங்க செல்லும் நேரத்தில் சாகித்யா சாதனாவை பார்த்து "சாதனா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா மதி நீயும் வேணும்னா கூடவா மத்த எல்லாரும் உங்க வேலைய பாருங்க பேசலாமா?" என்று கேட்டாள்.



அவள் கேட்ட தோரணையில் ஏதாவது தெரிந்திருக்குமோ என்று மற்றவர்களுக்கு பயம் வந்தாலும் சாதனாவிற்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று முழுமையாக நம்பினாள். ஆனால் வீட்டிற்கு தெரியாமல் வேறு ஏதோ 1 நடந்து இருக்கிறது என்பதை ஊகித்து கொண்டவள். "சரி பேசலாம் வா" என்று மதியை உடன் அழைத்து சென்றாள். மற்றவர்கள் அனைவருக்கும் ஏதோ கலக்கமாக இருந்தாலும் சாதனா தான் பார்த்துக் கொள்வதாக கூறிய கண்ணசைவில் அமைதி காத்தனர்.



தனியாக சென்று சாகித்யா கேட்ட கேள்விகளில் சாதனா என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி தான் போனாள். சாகித்யா தனக்கு இருந்த குழப்பங்கள் அத்தனையும் கேள்வியாக அவள் முன் வைத்தாள்.



சாகித்யா கேட்ட கேள்விகளுக்கு என்ன அதற்கு சாதனாவின் பதில்கள் என்னவாக இருக்கும்?
ப்ரீத்தி பிரச்சனை இதோட முடிந்துவிடுமா?



இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top