• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி 9

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
தனியாக பேச வேண்டும் என்று சாதனா மற்றும் மதியை அழைத்து வந்த சாகித்யா சிறிது நேரம் எதுவும் பேசாமல் அமைதி காத்தாள். அவளுடைய அமைதி மற்ற இருவருக்குள்ளும் ஒரு புயலைக் கிளப்பி விட்டிருந்தது. சிறிது நேரம் பொறுத்து பார்த்த மதி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் "என்னாச்சு என்ன பேசணும் எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு, பேசணும்னு கூட்டிட்டு வந்து அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?" என்று கேட்டாள்.


இருவரையும் பொதுவாக பார்த்த சாகித்யா சாதனாவைப் பார்த்து "உன்ன மாதிரியே வேற யாராவது இருக்காங்களா? உன்னோட முக அமைப்பு மாதிரி நீ யாரையாவது பார்த்து இருக்கியா?" என்று கேட்டாள்.
அவள் கேட்டது இருவருக்கும் உள்ளுக்குள் பக்கென்று இருந்தாலும் வெளியே அமைதியாக பார்த்த சாதனா "இல்ல சாகித்யா அப்படி யாரையும் நான் பார்த்ததில்லை. ஆனால் என்ன மாதிரி கண்டிப்பா வேற யாராவது இருக்கலாம். ஒருத்தர் மாதிரி இந்த உலகத்துல ஏழு பேர் இருப்பாங்கன்னு சொல்லி இருக்காங்க அல்லவா சரி நீ எதுக்காக இந்த கேள்வி கேக்குற?" என்று பதில் கேள்வி கேட்டாள்.



சாகித்யா "நீ கேட்ட கேள்விக்கு பதில் கடைசியா சொல்றேன். உங்க ரெண்டு பேருக்கும் என்னோட புருஷன் ருத்ரனை முன்னாடியே தெரியுமா காலேஜில வச்சுதா முதல்தடவை பார்த்தீர்களா?" என்று கேட்டாள்.
சாதனா "இதுக்கு முன்னாடியே தெரியும் நீ அந்த அண்ணாவ அடிச்ச அன்னைக்கு நாங்க அங்க தான் இருந்தோம். நீ தப்பா புரிஞ்சுகிட்ட விஷயத்தை நாங்க பதறிப்போய் சொன்னோம். ஆனா அதுக்கு முன்னாடியே அந்த அண்ணா புரிஞ்சு வச்சிருந்தாங்க. அதனால பேச ஒன்னும் பிரச்சனை இல்ல" என்று கூறினாள்.



மதி "என்னதான் பிரச்சனை எதுக்கு இப்ப இந்த விஷயம் எல்லாம் எங்க கிட்ட கேட்டுட்டு இருக்க. உன் மனச திறந்து இருக்கிற போல குழப்பத்தையெல்லாம் சொல்லு எங்களால முடிஞ்சா பதில நாங்க சொல்றோம்" என்று கூறினாள்.



சாகித்யா இருவரையும் பார்த்துவிட்டு "என்னோட கல்யாணம் பிளான் பண்ணி பண்ண கல்யாண மாதிரி தெரியுது, என்னோட அக்கா ராஜியை பற்றி முழுசா தெரிந்து பிளான் பண்ணி பண்ணி இருக்காங்க. அது மட்டும் இல்ல அவ வெளியே போனது கூட அவங்களுக்கு தெரிஞ்சுக்க இருக்க வாய்ப்பு இருக்கு. எனக்கு தெரியாமல் என் கூட இருக்கிறவங்களே எல்லாம் செய்றாங்க எனக்கு தான் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடித்து கொண்டே இருக்கிறார்கள்.



ராஜி ஓடி போனதுக்கு யாருக்கும் எந்தவித வருத்தமும் இல்ல ,அதே மாதிரி அவ எங்க இருக்கா அப்படிங்கற விஷயம் என்னோட மாமியார் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கு. என் வீட்ல உள்ளவங்களுக்கு கூட தெரிஞ்சு இருக்கு ஆனா அவங்களும் அதை பெரிசா கண்டுக்கலை, இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னோட நாத்தனார். அவ யாரு? என்ன பத்தி எல்லாம் தெரிஞ்சு இந்த கல்யாணத்தை பண்ணி வெச்சு இருக்கா? ஆனால் என்னோட கண்ணுல மாட்டவே கூடாது அப்படிங்கிற ஒரே விஷயத்துக்காக வீட்டுக்கு நான் போகும்போது வர்றது கிடையாது.



ஏன் அவளோட ஒரு போட்டோ கூட வீட்ல இல்ல அவளுடைய ரூம் கூட பூட்டு போட்டு தான் வச்சு இருக்காங்க. நானும் வாய்விட்டு கேட்டு பார்த்தாச்சு ஆனாலும் அப்புறமா தாரேன் அப்படி சொல்லி மொத்தமா அவ யாருன்னு தெரியாம என்னென்ன வேலை பண்ண முடியுமா அவ்வளவு பண்றாங்க. எனக்கு அதை நினைக்க நினைக்க என்னை சுத்தி நடக்குற விஷயம் எல்லாம் வேற விதமா தெரியுது. முக்கியமா என்னோட புகுந்த வீட்டில் யாருமே ஒரு சின்ன முகச்சுளிப்பு கூட காட்டவே இல்லை, ஏன் எதற்காக இப்படி ஏமாற்றி கல்யாணம் பண்ணனும் என்னதான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு நினைச்சு இருந்தா நான் படித்து முடிக்கிற வரைக்கும் பொறுமையா இருந்து பண்ணி இருக்கலாம் அல்லவா? ஏன் அதை எதையும் செய்யவில்லை எதற்காக இந்த நாடகம்.



எனக்கு ஒண்ணுமே புரியல ருத்ரனை கல்யாணம் பண்ணிக்க ப்ரீத்தி ரெடியா இருந்து இருக்கா, அப்புறம் எதுக்காக பொண்ணே கிடைக்காத மாதிரி என்ன கேட்கணும் நான் அவன அடிச்சதுக்கு பழி வாங்குற மாதிரி சுத்தமா தெரியல கல்யாணமான அன்னைக்கே நீ என்னோட புரோபர்டி அப்படிங்கற மாதிரி எல்லாத்தையும் செஞ்சு முடிச்சிட்டான்.



ஆனா அதுக்கு பிறகு எந்த ஒரு வகையிலும் என் அவன் தொந்தரவு பண்ணல அதையெல்லாம் யோசிக்க யோசிக்க நான் முழு பைத்தியமா மாறிவிடுவேன் போல! இதிலிருந்து ஒரு விஷயம் எனக்கு நல்லா தெரியுது என்ன தான் கல்யாணம் பண்ணனும் அப்படின்னு பிளான் பண்ணி தான் எங்க கல்யாணம் நடந்து இருக்கு. இதே இதில் ராஜி ஓடிப் போகாமல் இருந்தால் அவளை கடத்தி காணாமல் போக வைத்தது இந்த கல்யாணத்தை நடத்தி இருப்பார்கள்.



இதுக்கு எல்லாம் ஒரே விடை என்னோட நாத்தனார் தான். ஆனால் அவ யார் அப்படின்னு அவ்வளவு சீக்கிரம் எனக்கு தெரிய வாய்ப்பு இருக்காது. இந்த ரெண்டு நாள் லீவ்ல அவளோட சின்ன வயசு ஸ்கூல் போட்டோ பார்த்தேன், அதுல அவ முகம் சாதனா முக சாயலில் இருந்துச்சு அதனாலதான் உன் கிட்ட கேட்டேன். அதே மாதிரி முதல் நாள் நான் என்னோட கணவரை அறிமுகப்படுத்தும்போது உங்க ரெண்டு பேர் கண்களையும் ஒரு சந்தோஷத்தை தான் பார்த்தேன். அதனாலதான் உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டேன், வேறொரு காரணமும் இல்லை ஆனால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ராஜி இருக்கிற இடத்தை தெரிந்து கொண்டு அவளிடம் ஒரு சில கேள்விகளை கேட்டு தெளிவு பெற வேண்டும். எனக்குத் தெரிந்து மொத்தத்தில் எனக்கே தெரியாமல் என் வாழ்வில் என் திருமணம் நிறைய சூழ்ச்சியால் நடந்திருக்கிறது. ஆனால் அதையெல்லாம் கண்டு பிடிப்பதற்குள் நான் ஒரு வழி ஆகி விடுவேன் என்று நினைக்கிறேன்" என்று கூறிக்கொண்டே தன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.




அவள் கூறியதை முழுமையாக கேட்டே சாதனா மற்றும் மதி மனதிற்குள் "அடிப்பாவி கொஞ்சம் யோசிச்சு இருப்ப அப்படி என்று நெனச்சா மொத்தமாகவே நாங்க பண்ண வேலை எல்லாத்தையும் யோசிச்சி இருக்காளே, இவளை எப்படி சமாளிக்க ஆனா கண்டுபிடித்தா நாம கைமாதான்" என்று எண்ணிக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தனர்.



மதி "இங்க பாரு சாகித்தியா உன்னுடைய கேள்வி எல்லாத்துக்கும் கண்டிப்பா ஒரு விடை கிடைக்கும், அதுக்காக இவ்வளவு குழம்பி உன்னுடைய ஹெல்த் நீ பாக்காம விட்டுவிடாதே! இப்போதைக்கு படிப்புக்கு முக்கியத்துவம் கொடு இந்த செமஸ்டர் லீவுல எப்படியும் உனக்கு ஒரு ரெண்டு மாசம் லீவு கிடைக்கும் அதுல உனக்கு இருக்கிற எல்லா குழப்பமும் சரியாகும் கவலைப்படாதே" என்று கூறியவள் சாதனா முகம் பார்த்தாள்.



சாதனா கண்மூடி அமைதி படுத்தி விட்டு சாகித்யாவை பார்த்து "இந்த செமஸ்டர் லீவுல எங்க பாட்டி ஊருல குலதெய்வ கோவில் திருவிழா நடக்கும், அந்த கோயில் திருவிழாவில் கலந்துகொண்ட எல்லாருக்கும் நல்லதே நடக்கும். அதனால நீ என் கூட அந்தத் திருவிழாவிற்கு வா நம்ம ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் வருவாங்க அங்க உனக்கு ஒரு அமைதியும் கிடைக்கும். உன்னுடைய கேள்விக்கான எல்லா பதிலும் கிடைக்கும், என்னை நம்பு அதுவரை மதி சொல்ற மாதிரி எதைப் பத்தியும் யோசிச்சு வீணா கஷ்ட படாதே நீ உன்னோட படிப்பில ஏதாவது தப்பு பண்ணினாலும் அது நீ கல்யாணம் பண்ணிக்கிட்டதனால தான் அப்படின்னு சொல்லுவாங்க. எங்க எல்லார் கூடவும் சேர்ந்து என்ஜாய் பண்ணி இந்த ரெண்டு மாசம் சந்தோஷமா இருந்துகிட்டு அப்புறமா உன்னுடைய கேள்விக்கெல்லாம் விடை கிடைக்க நாங்க எல்லாரும் உன் கூடவே இருப்போம். அதே மாதிரி ஒரு விஷயம் நல்லா ஞாபகம் வச்சுக்கோ உன்னோட வீட்டில எடுக்கிற முடிவு எல்லாம் கண்டிப்பா உன்னோட நல்லதுக்கு தான் இருக்கும் அதனால கவலைப்படாதே இப்போ போய் தூங்குவோம்" என்று அழைத்தாள்.




இருவரும் பேசியதில் சிறிது தெரிந்தவன் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக நமக்கு தெரியாமல் போகாது என்று எண்ணிக்கொண்டே ஒரு தெளிந்த முகத்துடன் அவர்கள் இருவரையும் பார்த்து ஒரு சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு "உங்க ஊரு திருவிழாக்கு நான் வரணும்னா நீதான் எல்லார்கிட்டயும் பெர்மிஷன் வாங்கிகனும், நான் கேட்க மாட்டேன் புரியுதா?" என்று கேட்டாள்.



அவள் முகம் தெளிந்ததே இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. சாதனா குறும்பாக "நீ கவலைப்படாத உன்னோட வீட்ல பர்மிஷன் கேட்க வேண்டியது என்னோட பொறுப்பு. உன்னோட வீட்டில உனக்கு எதுவும் ஆகாமல் பத்திரமா கூட்டிட்டு வந்துர்றேன், அப்படின்னு பெர்மிஷன் வாங்கி தருகிறேன் சரியா இப்ப வா" என்று அவளுடன் சேர்ந்து தங்கள் ரூமிற்கு சென்றனர்.



மறுநாள் காலை சாகித்யா குளிக்க சென்ற நேரத்தில் சாதனா அனைவருக்கும் போன் செய்து நடந்த அனைத்தையும் கூறினாள். அதை கேட்ட அனைவருக்கும் சாகித்யாவை நினைத்து மெச்சிக் கொள்ள தோன்றாமல் இல்லை, ஏனென்றால் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் தாங்கள் செய்த அனைத்தையும் கண்டு கொண்டாள் என்று நினைத்து பெருமிதம் கொண்டனர். இனி திருவிழாவில் தான் அனைத்து கச்சேரியும் இருக்கப்போகிறது என்று நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டனர்.
சக்தி "சாதனா ராஜி இப்போ ரொம்ப தீவிரமா சாகித்யா கூட பேசதான் முயற்சி செய்கிறா முடிஞ்சா அளவு அதை நடக்க விடாமல் பாத்துக்கோ, வெளியே எங்கேயாவது போனாலும் கொஞ்சம் கவனமா இருங்க" என்று கூறினான்.




ருத்ரன் "ராஜி அவளைப் பார்த்தா எப்படி அவளை குழப்பி விடுவா அப்படின்னு நாம அதை கணிக்க முடியாது. அதனால எதுக்கும் கொஞ்சம் கவனமா இரு இனி ரெண்டு மாசம் அவளது வீட்டுக்கு கூட்டிட்டு போறதா இல்ல, ஆனா ரெண்டு வாரம் கழிச்சு நீ வீட்டுக்கு வா அம்மாவும் அப்பாவும் என்ன பாக்கணும்னு சொல்றாங்க" என்று கூறினான்.



சாதனா "சரி அண்ணா நான் கண்டிப்பா அடுத்த வாரம் வீட்டுக்கு வரேன் வீட்டுக்கு வரும் போது எல்லாரும் வாங்க ஒரு சில விஷயங்கள் பேச வேண்டியது இருக்கு, இன்னும் கொஞ்ச நேரத்துல சாகித்யா குளிச்சிட்டு வந்து விடுவாள். அதனால நான் போனை வைக்கிறேன்" என்று கூறினாள். அனைவரும் அதற்கு சரி என்று கூற அவள் போனை வைத்துவிட்டு குளிக்க சென்றாள்.



அதன் பிறகு அவர்களுடைய கல்லூரி வாழ்க்கை மிகவும் இன்பமாக சென்றது. தர்ஷன் இடையிடையே சாகித்யாவிடம் பேச முயற்சி செய்து அது தோல்வியில் முடிந்தது. எப்போதாவது சந்தியா அல்லது அர்ச்சனா தர்ஷன் பற்றி ஏதாவது கூறினாலோ இல்லை அவனுக்கு சப்போர்ட் செய்து ஏதாவது பேசினாலோ அவர்களை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவாள் சாகித்யா. அதனால் அவர்களும் கொஞ்சம் அமைதியாக இருந்தனர்.



ஒருமுறை தர்ஷன் நாம் பழையபடி நண்பர்களாகவே இருப்போம் என்று சாகித்யாவிடம் கூறி பார்த்தான். ஆனால் அவன் கண்களில் உண்மை இல்லாததால் அவள் அவனை கண்டுகொள்ளாமல் கிளம்பி விட்டாள். அது இன்னும் தர்ஷனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.




இப்படியாக இரண்டு வாரம் சென்றிருக்க சாதனா வீட்டிற்கு செல்லும் நாளும் வந்தது. சாதனா கிளம்பும்போது மதி மற்றும் ஸ்வாதி அபிஷா மற்றும் பிந்து நான்கு பேரிடமும் "ஞாயிற்றுக்கிழமை எங்கேயாவது வெளியே செல்வதாக இருந்தால் சாகித்யா யாரிடமும் தேவையில்லாமல் பேசினால் அவளுடன் இருங்கள். அவளைத் தனியே விட்டு விட்டு எங்கும் சென்று விடாதீர்கள். கண்டிப்பாக இந்த வாரம் தர்ஷன் வர வாய்ப்பே இல்லை .அதனால் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு கிளம்பி சென்றாள்.




வீட்டிற்கு சென்ற சாதனா தன் தாய் தந்தை இருவரையும் பார்த்து "என்ன அப்பா அம்மா ரெண்டு பேரும் உங்க மருமக கூட ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல?" என்று கேட்டாள்.
ராணி "போடி போக்கிரி பாவம் புள்ளை நிறைய விஷயம் தெரியாமல் குழம்பி போய் இருக்கு. உண்மை தெரியும்போது எந்த மாதிரி யோசிப்பா அப்படின்னு கூட நெனச்சுப் பார்க்க முடியல நல்லவிதமா யோசிச்சா நல்லதுதான், ஆனால் ஏதாவது தப்பா யோசிச்சா அது வேற மாதிரி போயிரும்" என்று கவலையாக கூறினார்.



சாதனா தன் அன்னையை கட்டிகொண்டு "அம்மா கவலைப்படாதே இந்த தடவை ஊர்ல நடக்கிற திருவிழாக்கு அவளையும் கூட்டிட்டு போறே.ன் நான் காலேஜிலிருந்து போயிருவேன், நீங்க அதுக்கு பிறகு கிளம்பி வாங்க அங்க வச்சு அவளுக்கு எல்லா விஷயத்தையும் அவளுக்கு புரிய வைத்துவிடலாம். சோ இந்தப் நீ பெத்த பிள்ளையை கொஞ்சம் கவனி போகும்போது உன் மருமகளுக்கு தேவையான அனைத்தையும் செஞ்சு கொடு, நான் கொண்டு போய் அவகிட்ட கொடுத்துவிடுகிறேன் புரியுதா. என் மம்மி எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் எதை நினைத்து கவலைப்பட கூடாது அதெல்லாம் சரி பண்ண தான் நாங்க மூணு பேரும் இருக்கிறோம்" என்று கூறினாள்.




அவள் கூறியதைக் கேட்ட ராணி பாசமாக அவள் தலையை தடவிக்கொண்டே "சரிடா கண்ணா வா வந்து சாப்பிடு சாப்பிட்டு முடிச்சிட்டு போய் ரெஸ்ட் எடு" என்று கூறினார். அதன் பிறகு சிறிது நேரம் அவள் தந்தையுடன் செல்லம் கொஞ்சி விட்டு சாப்பிட சென்றாள்.



அதன் பிறகு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு சாகித்தியா பற்றி பல விஷயங்களை பேசி கொண்டிருந்தனர். அவளைப் பற்றி பேசும்போது ருத்ரன் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்து அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த கல்யாணம் நடப்பதற்கு அவர்கள் செய்த அனைத்து வேலைகளையும் நினைத்து ஒருபுறம் சிரிப்பாகவும், ஒருவரும் கவலையாகவும் இருந்தது.



மறுநாள் காலை வழக்கம் போல் தன் பெற்றோருடன் அரட்டை அடித்து முடித்து விட்டு தன் அண்ணனை மட்டும் அழைத்துக்கொண்டு ஒரு இடத்திற்கு சென்றாள். அங்கு ஏற்கனவே அசோக், விக்னேஷ், சக்தி, சத்யா, பாலா மற்றும் சாந்தினி நின்று கொண்டிருந்தனர். விஷ்வா தன்னுடைய ஆசை காதலியை கண்களால் பருகிக்கொண்டே நின்று கொண்டிருந்தான். அவளும் அவனைப் பார்த்துவிட்டு ஒரு புன்னகையை சிந்திவிட்டு அவன் மற்றும் ருத்ரன் இருவருக்கும் இடையில் அமர்ந்தாள்.



அவள் அமர்ந்தவுடன் அசோக் அவளுடைய ஒரு கையை எடுத்து தன்னுடைய கைகளில் வைத்துக் கொண்டான். அவளும் அதை பார்த்து விட்டு மனதில் புன்னகைத்துவிட்டு அனைவரையும் பார்த்து ஒரு சில விஷயங்களை கூற ஆரம்பித்தாள். அனைத்தையும் கேட்டு முடித்தவர்கள் முகத்தில் ஒரு திருப்தியான புன்னகை இருந்தது சாந்தினி முகத்தில் ஒரு பெருமிதம் இருந்தது.
அதன்பிறகு அனைவரும் அன்றைய நாளை ஒன்றாக சுற்றி விட்டு உணவு அனைத்தையும் முடித்துவிட்டு வீடு சென்றனர்.



எங்கே கல்லூரியில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவுட்டிங் சென்றனர். அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் யாரோ ஒருவர் வெகுநேரமாக சாகித்யாவை பின் தொடர்ந்து கொண்டிருந்தார். ஆனால் அதை இவர்கள் அனைவரும் கவனிக்கத் தவறி விட்டனர்.



அனைவரும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த நேரத்தில் சாகித்யாவை பின் தொடர்ந்த அந்த நபர் அவளிடம் பேச சென்றார். அப்போதுதான் மற்றவர்கள் அனைவரும் ஏதேதோ வாங்குவதற்காக சென்றுவிட இவள் மட்டும் தனியாக நின்று கொண்டிருந்தாள். யாரோ தன்னை அழைப்பதைப் பார்த்து திரும்பி பார்த்த சாகித்யா தன்னை அழைத்த நபரை பார்த்து மகிழ்ச்சி, குழப்பம் ,பயம் என்று எதை முதலில் காட்டுவது என்று தெரியாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



அந்த நபர் ஏதோ அவளிடம் பேச இவள் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். சரியாக மதி அந்த இடம் வர சாகித்யா விடம் பேசிக்கொண்டிருந்தவர் யார் கண்ணிலும் அகப்படாமல் சென்றுவிட்டார். அதனால் யாருக்கும் இந்த விஷயம் தெரியாமல் போனது. ஆனால் சாகித்யா முகம் ஏதோ ஒரு குழப்பத்தில் இருப்பதை பார்த்த மதி ஹாஸ்டல் சென்று பேசிக்கொள்ளலாம் என்று அமைதி காத்தாள்.



சாகித்யாவை சந்தித்த நபர் யார் அவர் என்ன பேசி சென்றார்?
சாதனா அனைவரிடமும் எந்த திட்டத்தை பற்றி கூறினாள்?
திருவிழாவில் நடக்கப்போவது என்ன?
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்தடுத்த அத்தியாயத்தில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
 
Top