• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்னுள் நிறைந்தவள் நீயடி

Aashmi S

Active member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
156
மறுநாள் விடுமுறை முடிந்து கல்லூரி திறப்பு என்ற நிலை ருத்ரன் சாகித்யாவை அழைத்து "தியா உனக்கு நாளைக்கு காலேஜ் திறக்கிறது அல்லவா அதற்கு ஒருசில பார்மலிடீஸ் இருக்கிறது உன்னுடைய ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஹாஸ்டல் வந்துட்டாங்களா அப்படின்னு கேளு அவங்க எல்லாரும் வந்து இருந்தா இன்னைக்கு போய் எல்லாத்தையும் முடிச்சுட்டு அங்கேயே உன்னை விட்டு விட்டு வருகிறேன் இல்லை என்றால் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டு நாளை மறுபடி அழைத்து செல்கிறேன்" என்று கூறினான்.


"சரி நான் என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட கேட்டு சொல்றேன் அப்படி இன்னைக்கு வீட்டுக்கு வர மாதிரி இருந்தா எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும் அதையெல்லாம் போகும்போது வாங்கிட்டு போயிடலாம்" என்று கூறிய சாகித்யா தன்னுடைய தோழிகளுக்கு அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டாள். அவர்கள் அனைவரும் இன்றே வந்துவிடுவதாக கூறினர் அதைக் கேட்டவன் ருத்ரன் புறம் திரும்பி "எல்லாரும் இன்னைக்கே வந்துவிடு வாங்கலாம் அதனால நீங்க என்னை விட்டு விட்டு வாங்க" என்று கூறினாள்.


"சரி கிளம்பி ரெடியா இரு இன்னும் ஒரு மணி நேரத்தில கிளம்பலாம்" என்று சொல்லிவிட்டு தனக்கு இருந்த சில வேலைகளை பார்க்க சென்றிருந்தான் ருத்ரன். கீழே சென்ற சாகித்யா தன் மாமா அத்தையிடம் நான் கல்லூரி செல்லும் விவரங்களை கூறி விட்டு மறுபடி தன்னுடைய அறைக்கு சென்று கிளம்பி சென்றாள். கிளம்பிய முடித்தவுடன் தன்னுடைய அண்ணன் சக்திக்கு போன் செய்து "நான் இன்னைக்கு காலேஜ் கிளம்ப போறேன் இனி லீவுக்கு எப்ப வருவேன்னு தெரியாது வரும்போது அங்க வரேன் சரியா தங்கச்சியை பாக்க முடியல அப்படின்னு ரொம்ப வருத்தப்பட கூடாது சரியா" என்று கூறினாள்.


அவள் கூறியதைக் கேட்ட சக்தி "அடியே அறிவாளி நீ முதல்ல ஒழுங்கா போய் படி யார் என்ன சொன்னாலும் பைத்தியம் மாதிரி ஏதாவது யோசித்து ஒரேடியா ஏர்வாடி இல்லனா கீழ்ப்பாக்கம் போய் சேர்ந்துட்டாதே புரியுதா நீங்க வரல அப்படின்னு யாருமே வருத்தப்பட போறது இல்ல அதனால மேடம் ரொம்ப பீல் பண்ண வேண்டாம்" என்று கூறி போனை வைத்து விட்டான்.


சாகித்யா மனதில் "அடப்பாவி பயலே ஒரு மரியாதைக்காக உன்னை நான் மிஸ் பண்றேன் அப்படின்னு பொய் சொன்னா குறைஞ்சா போயிருவ இப்படி பட்டுனு சொல்லிட்டியே" என்று எண்ணிக்கொண்டு வெளியே பார்த்த நேரம் ருத்ரன் வாசலில் நின்று கொண்டிருந்தான் அதை பார்த்த சாகித்யா ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தாள்.


ருத்ரன் அவளைப் பார்த்து சிரித்து விட்டு "கிளம்பலாமா லேட் ஆகிவிட்டது" என்று கூறினான். அவளும் அதற்கு சரி என்று கூறிவிட்டு அவன் பின்னே சென்றாள். கீழே வந்த இருவரும் அங்கிருந்த இருவரிடமும் கூறி விட்டு கல்லூரிக்கு கிளம்பி சென்றனர்.


செல்லும் வழியில் ஒரு மால் இருக்கும் இடத்தில் காரை நிறுத்திய ருத்ரன் "தியா உனக்கு என்னென்னமோ வாங்கனும்னு சொன்ன இல்ல அதை எல்லாம் இங்கேயே வாங்கிவிட்டு போய் விடுவோமா" என்று கேட்டான்.


"சரிங்க எல்லாத்தையும் இங்கே வாங்கிட்டு போயிடலாம்" என்று கூறிய சாகித்யா அவனுடன் அந்த மால் உள்ளே சென்றாள் அங்கு அவளுக்கு தேவையான சில சுடிதார்கள் மற்றும் கல்லூரிக்கு தேவையான ஸ்டேஷனரி ஐட்டம்ஸ் அப்புறம் கொஞ்சம் ஸ்நாக்ஸ் என்று வாங்கினாள் ருத்ரன் அவன் பங்கிற்கு சிலவற்றை வாங்கி கொடுத்தான். அவளுடைய தோழிகள் கண்டிப்பாக திருமணம் ஆனதற்கு ஏதாவது கேட்பார்கள் என்பதால் அவர்களுக்கு சில ஸ்நாக்ஸ் ஐட்டம் வாங்கியவன் சாகித்யாவிற்கு தெரியாமல் அவளுக்கு வாங்கியது போல் இன்னொரு செட் வாங்கினான்.


அதன் பிறகு அமைதியாக கல்லூரி வந்து சேர்ந்தனர் அங்கு இவளுக்கு திருமணம் ஆனது தெரிந்தவுடன் சிலபல ஃபார்மாலிட்டீஸ் முடிக்க சொன்னார்கள் அவை அனைத்தையும் மிகவும் பொறுமையாக செய்து முடித்த ருத்ரன் அவளை அழைத்துக் கொண்டு கல்லூரி விடுதிக்கு சென்றான் ஏனென்றால் அங்கேயும் ஒரு சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டி இருப்பதால் இவன் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது. அதனால் பொறுமையாக விடுதியில் உள்ள ஆபீஸ் அறையில் செய்யவேண்டிய வேலை அனைத்தும் செய்து முடித்துவிட்டு வெளியே வந்து விடுதியை நெருங்கும் நேரத்தில் விடுதிக்குள் இருந்து வெளியே வந்தனர் பிந்து அர்ச்சனா சந்தியா. அவர்கள் மூவரையும் பார்த்த சாகித்யா ருத்ரனை திரும்பிப் பார்த்தாள்.


அந்த நேரத்திற்குள் சாகித்யா வருவதை கண்டுகொண்ட மூவரும் அவசரமாக அவளை நோக்கி வந்தனர் அவர்கள் வந்து சேர்ந்த உடன் ருத்ரனை பார்த்து" இவங்க மூணு பேரும் தான் என்னோட பிரண்ட்ஸ் இவ பிந்து இவ அர்ச்சனா இவ சந்தியா என்று அறிமுகப்படுத்தியவள் அவர்கள் மூவர் புறமும் திரும்பி இவர் தான் என்னோட ஹஸ்பண்ட் பெயர் சிவருத்திரன்" என்று அறிமுகப்படுத்தி வைத்தாள். அப்போது என்ன கூறினாலும் அது தவறாக போய்விடும் என்று தெரிந்த மூவரும் அமைதி காத்தனர். பொதுவாக ஒரு சிறு சிரிப்பை மாற்றி மாற்றி உபயோகப் படுத்திக் கொண்டனர் பிந்துவிற்கு மனம் நிறைவாக இருந்தது ஆனால் மற்ற இருவருக்கும் ருத்ரனின் தீர்க்கமான பார்வை இனி ஏதாவது வம்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என்பதை சொல்லாமல் சொல்லியது ஆனாலும் இங்கு நடப்பதை சாகித்யா கண்டிப்பாக சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில் அமைதியாக இருந்தனர்.


பொதுவாக மூவரையும் பார்த்த ருத்ரன் பிந்துவை பார்த்து ஒரு மென்மையான சிரிப்பை உதிர்த்துவிட்டு "தியா நீங்க நாலு பேரும் தான் ஒரே ரூம்ல இருக்கீங்களா இல்ல உன்னோட ரூம்ல வேற யாராவது இருக்காங்களா" என்று கேட்டான்.


"இல்லங்க எங்க ரூம்ல மொத்தம் எட்டு பேர் நாங்க நாலு பேர் இன்னும் நாலு பேர் இருக்காங்க நீங்க அவங்கள பாக்கணுமா" என்று கேட்டாள் தியா.


ருத்ரன் "அவங்களும் வந்திருந்தா கூப்பிடு பார்த்துட்டு போயிடுறேன் ஏனென்றால் உன்னோட சேஃப்டி எனக்கு முக்கியம் இதுல உனக்கு விருப்பம் இல்லேன்னா கூப்பிட வேண்டாம்" என்று கூறி முடித்தான்.
அவன் ஏதாவது தவறாக நினைத்து விட்டானோ என்று எண்ணி பதறிய சாகித்யா "அப்படி எல்லாம் ஒன்னுமில்ல அவங்களும் வந்து இருப்பாங்க நான் போய் கூட்டிட்டு வரேன் நீங்க இருங்க என்று கூறி திரும்பிய போது சரியாக நால்வரும் இவர்கள் இருக்கும் புறம் வந்துகொண்டிருந்தனர். அவர்களை கை காண்பித்து அருகே அழைத்தவவள் ருத்திரனைப் பார்த்து இவங்க நாலு பேரும் தான் அது நாங்க 8 பேரும் சேர்ந்து தான் இருக்கோம் என்று கூறியவள். அவர்கள் நால்வரும் கேள்வியாக பார்ப்பதைப் பார்த்து என்னோட ஹஸ்பண்ட் திடீரென மேரேஜ் முடிஞ்சிடுச்சு மொத்தமா ரூம்ல போய் சொல்றேன்" என்று கூறினாள்.


அவர்கள் நால்வரும் கோரசாக "ஹாய் அண்ணா நாங்க உங்க பொண்டாட்டி கூட தான் தங்கி இருக்கிறோம் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை அவளை நாங்கள் பத்திரமாக பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறினார்கள். அதை கேட்டு சிரித்த ருத்ரன் சாகித்யாவை பார்த்து "தியா திங்க்ஸ் எல்லாம் கொண்டு போய் வச்சுட்டு வா எவ்வளவு நேரம் கையிலேயே தூக்கி வைத்து விட்டு நின்னுகிட்டு இருப்பே" என்று கூறினான். அவன் கூறியதைக் கேட்ட சாகித்யா மனதில் "எப்பா ராசா இப்பவாச்சும் உனக்கு இந்த வார்த்தை சொல்லணும்னு தோணிச்சுல அதுவே பெரிய விஷயம்" என்று எண்ணிக் கொண்டே அவனிடம் சம்மதமாக தலை அசைத்துவிட்டு மற்றவர்களை பார்த்து பேசிட்டு இருங்க இதோ வந்துவிடுகிறேன்" என்று கூறிவிட்டு விடுதியின் உள்ளே சென்றாள்.


அவள் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட "நால்வரும் அண்ணா எப்படி இருக்கீங்க கல்யாண வாழ்க்கை எப்படி போகுது தியா அப்படின்னு செல்ல பெயர் வைக்கிற அளவுக்கு ஜாலியா போகுது போல" என்று கிண்டலாக ஆரம்பித்தனர்.


ருத்ரன் "ஆமா மரண மாஸாக போகுது ஆனா உங்க பிரெண்டு எல்லாம் என்ன டிசைனோ தெரிய மாட்டேங்குது" என்று கூறியவன் அந்தக் கூட்டத்தில் தலைவி என்று சாகித்யாவால் கூறப்பட்டவளை தன்னருகே கையைப் பிடித்துக் கொண்டு வந்து அவள் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே மாலில் அவன் வாங்கிய இன்னொரு செட் பொருள்களை கொடுத்தான் அவளும் அதை மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டு அவன் கண்ணத்தில் அன்பு முத்தம் வைத்தாள் இதை சாகித்யா தோழிகள் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


அவர்களின் அதிர்ந்த முகத்தை பார்த்து ருத்ரன் மற்றும் புதிதாக வந்த நால்வரும் சிரித்துக்கொண்டு பார்த்துக் கொண்டிருந்தனர். மூவரையும் பார்த்த ருத்ரன் தன் கைகளுக்குள் இருந்தவளை காண்பித்து "இவதான் என்னுடைய செல்ல உடன்பிறப்பு தியாவின் தெரியாத நாத்தனார் எங்கள் வீட்டின் கடைக்குட்டி படிப்பு முடிந்தவுடன் என் நண்பனின் மனைவி இப்போது அவனின் காதலி எங்கள் செல்ல சாதனா என்று கூறியவன் மற்ற மூவரையும் பார்த்து இவர்கள் மூவரும் என் உடன் பிறவா தங்கைகளான சுவாதி அபிஷா மற்றும் மதி என்று கூறியவன் அதிர்ந்து நின்ற பிந்துவை பார்த்து இன்னைல இருந்து நீயும் அந்தக் கூட்டத்தில் ஒருத்தி மற்ற இருவரையும் பார்த்து இனி நீங்க தேவை இல்லாமல் எந்த வேலையும் பார்க்க மாட்டீங்கன்னு நம்புறேன்" என்று கூறியவன். தியா வருவதை பார்த்து எதுவும் நடவாதது போல் நின்று கொண்டான்.


பின்பு மனதில் "இனி சாகி தேவையில்லாமல் எந்த பிரச்சினையிலும் மாட்ட மாட்டா அதுக்கு கண்டிப்பா சாதனா விடவும் மாட்டா இனியாச்சும் மதப் பிரச்சினை இல்லாம சந்தோஷமா இருந்தாலே நிம்மதிதான்" என்று எண்ணி விட்டு எதுவும் நடவாதது போல் நின்றுகொண்டாள்.


மற்ற இருவரும் தான் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை அவர்கள் இருவரும் முகத்தை பார்த்த தியா என்னாச்சு இப்படி அதிர்ச்சி அடைந்து போய் நிக்கிறீங்க என்று கேட்டாள் அதற்கு பிந்து "இல்ல சாகி அண்ணா எல்லார்கிட்டயும் எல்லாருமே ஒரே ரூம்ல தானே இருக்கீங்க அதனால எந்த பிரச்சனையாக இருந்தாலும் மறந்துவிடு ஒருத்தருக்கு ஒருத்தர் பேசி சந்தோஷமா இருங்க அப்படின்னு சொன்னாங்க அதுதான் அவங்க ரெண்டு பேருக்கும் பிடிக்காதே அதான் இப்படி அதிர்ச்சியாகி போயிருக்காங்க கூடிய சீக்கிரம் சரி ஆயிடுவாங்க" என்று கூறினாள்.


சந்தியா அர்ச்சனா தவிர மற்ற யாருக்கும் அவளுடைய பதில் அதிர்ச்சியைத் தரவில்லை ஏனென்றால் பிந்துவைப் பற்றி ஏற்கனவே நன்றாக தெரிந்து வைத்து இருந்தனர் அனைவரும் அதனால் யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை சாகித்யா அவளைப் பார்த்து சிரித்துவிட்டு "கண்டிப்பா இனி எல்லாரும் ஒன்னா இருக்க ட்ரை பண்ணுவோம் என்று கூறிவிட்டு ருத்ரன் புறம் திரும்பி நீங்க கிளம்பலையா ஏற்கனவே ரொம்ப லேட் ஆச்சு பார்த்து வீட்டுக்கு போங்க வீட்டுக்கு போனபிறகு அத்தை மாமா கிட்ட மறக்காம உங்க தங்கச்சி போட்டோவை அனுப்ப சொல்லுங்க நானும் இந்த பதினைந்து நாள் கேட்டுகிட்டே தான் இருக்கிறேன் சில நேரம் அவங்க மறந்து விடுகிறார்கள் சில நேரம் மறந்துவிடுகிறேன் சப்போஸ் அவங்க மறந்துட்டா நீங்களாவது அனுப்பிவிடுங்க இதுவரைக்கும் நான் யாருன்னு பார்த்ததே இல்லை" என்று கூறினாள்.


ருத்ரன் சாதனாவை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துவிட்டு "நீ வீட்டுக்கு வரும்போது கண்டிப்பா உனக்கு நான் காட்டுறேன் அவளையும் வேணும்னா கூட்டிகிட்டு வர்றேன் அதுவரைக்கும் போட்டோ பார்த்து என்ன பண்ண போற அமைதியா இரு" என்று கூறினான்.


அவரிடம் சம்மதமாக தலையசைத்துவிட்டு அமைதி காத்தாள் பின்பு நேரமாவது உணர்ந்து அவனும் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினான். அவன் கிளம்பும் வரை நின்று பார்த்துக் கொண்டிருந்த சாகித்யா அவன் கிளம்பி சென்றவுடன் தன்னுடைய அறைக்கு சென்று கட்டிலில் தொப்பென விழுந்தாள்.


அவள் பின்னே வந்த அனைவரும் அவருடைய செய்கையை பார்த்து யாரும் அறியாமல் சிரித்துக்கொண்டனர். ஆனால் சந்தியா பொறுக்கமுடியாமல் "அடியே எப்படி உனக்கு திடீர்னு கல்யாணம் ஆச்சு உன்னோட நாத்தனார் கூட உனக்கு தெரியாதுன்னு சொல்ற உன்னை ஏமாற்றியா கல்யாணம் பண்ணி வெச்சாங்க தர்ஷன என்ன பண்ண போற அவன் உன்ன நினைச்சு கிட்டு பைத்தியமா அறையப் போறேன் நீ ஒருத்தனோட வாழ்க்கையைக் கெடுத்து விட்டு சந்தோசமா இருக்க" என்று வாயில் வந்தபடி பேசினாள் அர்ச்சனா தவிர மற்றவர்களுக்கு கோபமாக வந்தது சாதனாவிற்கு கோபம் தலைக்கு மேல் ஏறியது இருந்தும் சாகித்யா பதிலுக்காக அமைதி காத்தாள்.


அவள் கூறியதைக் கேட்ட சாகித்யா சலித்தபடி எழுந்து அமர்ந்தாள் பின்பு தன்னுடைய கல்யாணம் நடந்த முழு விபரத்தையும் கூறியவள் "என்னோட நாத்தனார் எங்கேயோ தங்கி படிக்கிறா அதனால அவளை பார்க்க முடியல அவ்வளவுதான் ஆனா அந்த மகராசி தான் என் கல்யாண நடக்கவே காரணம் அதான் அந்த மகராசி யார் என்று பாக்கணும்னு ஆசை அப்படி என்ன நான் அவளுக்கு செஞ்சேன்னு தெரியல தன்னோட அண்ணன் அந்த ஸ்ட்ரிக்ட் ஆபிசர் கிட்ட மாட்டி விட்டா இனி அவன் கிட்ட இருந்து ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. அது என்னோட புருஷனை பார்க்கும்போதே தெரிந்திருக்குமே அதுபோல நான் இதுவரைக்கும் சைட் அடிச்ச ஒரே ஆள் என்னோட புருஷன் மட்டும் தான் தர்ஷன் ஸ்கூல்ல படிக்கும்போது இருந்தே என்னுடைய பிரண்ட் அதனால அவன இதுவரைக்கும் எனக்கு சைட் அடிக்க தோணுது கூட இல்லை. அதே மாதிரி வாழ்க விஷயத்துல தர்ஷன் பத்தி எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு அவன் போன் செய்தான் அப்பவே நான் எனக்கு கல்யாணமான விஷயத்தை சொல்லிட்டேன் இதுக்குமேல அவனோட வழிய அவன் தான் பார்த்துட்டு போகணும் நான் ஒண்ணுமே பண்ண முடியாது இதுதான் என்னோட வாழ்க்கை அதே மாதிரி தர்ஷன் லவ் விஷயத்துல நடந்த எல்லாமே உங்களுக்கு தெரியும் இதுல நான் எதுவுமே சொல்ல போறது இல்ல ஆனா நான் லீவு கெல்லாம் வீட்டுக்கு போற ஐடியா இல்லை இங்கு இருந்து சந்தோஷமாக கழிக்க போறேன் இதுக்கு மேல ஏதாவது பேசினா டென்ஷன் ஆயிடுவேன் பேசாம போய் உன்னோட வேலையை பாரு" என்று கூறி விட்டு தூங்க ஆரம்பித்துவிட்டாள்.


அவள் தூங்கி விட்டதை உறுதிப்படுத்திக் கொண்ட சாதனா அர்ச்சனா மற்றும் சந்தியாவை பார்த்து "உங்க ரெண்டு பேருக்கும் வேற வேலையே இல்லையா நீங்க அவள தேவையில்லாமல் தர்ஷன் விஷயத்துல குழப்பி விட்டதால்தான் இப்ப அவ பிரச்சனையில இருக்கா கல்யாண விஷயத்துல நான்தான் இவளை எனக்கு அண்ணியா கொண்டு வந்தேன் அது பத்தி ஆறு மாசம் முன்னாடியே நான் முடிவெடுத்துவிட்டேன் அதனாலதான் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த ரூம் உங்களுக்கும் எங்களுக்கும் சேர்த்து போட வச்சு எல்லாம் செய்தேன் ஆனா எதுக்கு அப்படிங்கற காரணம் கண்டிப்பா உங்களுக்கு நான் சொல்ல போறது இல்லை இனி தேவை இல்லாம அவ வழியில் நீங்க போனா உங்களுக்கு பின்விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும் புரியுதா" என்று கூறியவள் தன்னுடைய வேலையை பார்க்க சென்றுவிட்டாள்.


அதன் பிறகு இரவு உணவுக்கு மட்டுமே சாகித்யா எழுந்தாள் ஏற்கனவே அனைவருக்கும் சேர்த்தே ருத்ரன் உணவு வாங்கிக் கொடுத்ததால் சாதனாவை அழைத்த சாகித்யா உங்களுக்கும் சேர்த்து தான் சாப்பாடு வாங்கிட்டு வந்து இருக்கேன் வரீங்களா சேர்ந்து சாப்பிடலாம் என்று அழைத்தாள் மறுப்பு சொல்லாமல் அவர்களும் வந்து சாப்பிட அமர அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர் சந்தியா அர்ச்சனா இருவருக்கும் நடப்பது எதுவும் பிடிக்கவில்லை என்றாலும் எதுவும் கூற முடியாமல் அமைதி காத்தனர்.


அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு ஓய்வாக அமர்ந்து நேரம் சாகித்யாவைப் பார்த்த சாதனா "சாகி உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா" என்று கேட்டாள்.


சாகித்யா "எதுக்கு இப்ப யோசிச்சு கேக்குற எதுவா இருந்தாலும் தயங்காம கேளு எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல" என்று கூறினாள்.


சாதனா "நீ உண்மையிலேயே தர்ஷன லவ் பண்ணியா உனக்கும் தர்ஷனுக்கும் எப்படி பழக்கம் நாளை அவனுக்கு என்ன பதில் சொல்லப் போறே" என்று கேட்டாள்.


மற்றவர்களும் அவளுடைய பதிலுக்கு ஆவலாக அவளுடைய முகத்தைப் பார்த்தனர் சாதனா முதலிலேயே தன்னுடைய அண்ணன் மற்றும் தன்னுடைய காதலன் மற்றும் சக்தி சத்யா பாலா அனைவரையும் கான்பரன்சில் கனெக்ட் செய்து போனில் வைத்திருந்தாள். ஒரு பெருமூச்சை வெளியிட்ட சாகித்யா நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தாள்.


சாகித்யா உண்மையில் காதலித்தாளா அப்படி அவள் உண்மையில் காதலித்து இருந்தால் ருத்ரன் நிலைமை என்னவாகும்?
தர்ஷன் என்ன நிலைமையில் இருக்கிறான்
இதுபோன்ற கேள்விகளுக்கு அடுத்த அத்தியாயத்தில் விடை காண்போம் தங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் தோழி என்னுடைய பதிவுகளில் ஏதேனும் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
 
Top