• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்றும் உந்தன் நெஞ்சோரம் டீசர்....

Balatharsha

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
665

"கௌதம்......" என அழைத்தவாறு கையில் பெட் காஃபியுடன் கௌதமன் அறை புகுந்தாள் வசந்தி.



"ஓ..... சீக்கிரமாவே எழுந்தாச்சா? இன்னைக்கு ஞாயிற்று கிழமை. கொஞ்சம் லேட்டாவும் எந்திரிச்சிருக்கலாம்..." என்றவளை மேலிருந்து ஆராந்தான் கௌதமன்.



அவளை புன்னகை நிறைந்த முகத்துடன் அளவிட்டு,



"எப்பவும் போல அழகா இருக்க வசந்தி...! லவ் யூ சோ மச்.....!" என உதடுகுவித்து முத்தம் வைப்பது போல் செய்தவாறு காஃபியினை எடுத்து கொண்டவன் கன்னத்தை செல்லமாக கிள்ளியவளோ!



"எத்தனை வாட்டிடா அம்மாவ பெயர் சொல்லி கூப்பிடாதேன்னு சொல்லுறது.....?" என்று கடித்து கொண்டவருக்கும் மகன் தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவது பிடிக்காதென்று இல்லை... ஆனால் பெரியவராய் இருந்து கண்டிக்க வேண்டுமே!



"பெயர் வைக்கிறதே கூப்பிட தானே வசந்தி!" என்றவன் எங்கு அவள் கையில் அகப்பட்டால் காலையிலேயே அடிவாங்க நேருமோ என்று குளியலறை புகுந்து கதவடைத்து கொண்டான்.



அவன் கதவடைக்கும் வரை முறைத்திருந்தவரோ அவன் ஒழிந்து கொண்டதும் பொய் கோபம் புன்னகையாய் விரிந்தது.



ஆம் பெற்றவளுக்கும் மகனுக்குமான இந்த செல்ல ஊடல் எப்போதாவது ஒரு நாளில் தான் நடக்கும்.



அதை ரசிக்க மாட்டாரா?





குளித்து முடித்து தயாராகி கீழே வந்தவனை கண்ட ஈஸ்வரமூர்த்தி,



"சண்டே அதுவுமா எங்க கிளம்பிட்ட கௌதம்?" என்றார்.



அதவரை இயல்பாக இருந்தவன் முகமோ தந்தையில் கேள்வியில் சோகத்தை வெளிப்படுத்தியது.



"சிவனேசன் இறந்து ஒரு மாதத்துக்கு மேல ஆகுது டாட்...!



எப்பவும் என் வலது கையா என்கூட இருந்தவரு ஹார்ட் அட்டாக்கில இறந்தப்போ, பாரின்ல நான் இருந்ததனால காரியத்துக்கு போக முடியல, ஆப்புறம் ஆஃபீஸ் பழு அதிகமானதனால நாளைக்கு நாளைக்குன்னு தள்ளி போட்டிட்டே போயிட்டேன்.



நமக்காக உழைச்சவரு இறந்துட்டாருன்னு தெரிஞ்சும் இன்னமும் போகாம இருந்தா நாம மனுஷங்களே இல்லப்பா..!



அவருக்கு இருக்கிற ஒரே சொந்தம் அவரு பொண்ணுன்னு நிறைய வாட்டி சொல்லிருக்காரு...



இப்போ அவரும் இறந்து போயிட்டதனால பாவம் அந்த பொண்ணு ரொம்ப கஷ்டப்பட்டிட்டு இருப்பா,



ஆறுதலா நாலு வார்த்தை சொல்லிட்டு என்னால முடிஞ்ச உதவி ஏதாவது செய்திட்டு வந்திடுறேன்." என்றவன் கார் சாவியினை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

காரில் ஏறியவன் நினைவுகளோ சிவனேசன் தன்னுடன் இருந்த காலங்களை நினைவுகளை அசைபோட்டது.



உண்மையில் சிவனேசன் ஒரு நல்ல விசுவாசி என்பதை விட, நல்ல மனிதன் என்றே சொல்லவேண்டும். தந்தை காலத்திலிருந்து அந்த குடும்பத்திற்காக உழைத்தவர்.


மிகவும் திறமையானவர், இதுவரை அவனை பெயர் சொல்லி அழைத்தறியாதவர், சிறுவயதிலிருந்தே அவனை தெரியும் என்பதால் தம்பி என்று தான் அழைப்பார்.



அதில் அன்புடன் கூடிய ஓர் மரியாதை கலந்திருக்கும்.



பல இடங்களில் அவனே தடுமாறும் போதும் அவர் தான் அவனை வழிநடத்துவார்.



சொல்லப்போனால் அவனது வலது கை என்றே அவரை கூறலாம்.



அவர் இப்போது இல்லை என்ற கவலை ஒரு புறமிருந்தாலும், அவர் மகளை சந்திக்கப்போகுறோம் என்றதும் அவன் உள்ளம் அவனையே அறியாது பரவசமாகி உள்ளே குளிரை பரப்பத் தொடங்கியிருந்தது.



இந்த உணர்விற்கு பெயர் என்னவென கேட்டால் சத்தியமாக அவனுக்கு தெரியாது. சொல்லப்போனால் இதுவரை அவளை அவன் பார்த்ததில்லை.



அத்தி பூத்தாற்போல எப்போதாவது தான் தன் குடும்பத்தை பற்றி கூறுவார் சிவநேசன். அதில் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது விகுதம் அவர் மகளைபற்றியதாகத்தான் இருக்கும்.

அதனாலேயே


அவளை பார்க்க வேண்டும் என்று எத்தனையோ தடவைகள் அவனுக்கு தோன்றியதும் உண்டு.



ஆனால் அதை கேட்டால் தவறாக நினைத்து விடுவாரோ என்ற பயத்தில் அவன் கேட்டதில்லை. இன்றுதான் அவளை பார்க்கப்போகிறான்.


"இங்க எங்கேயோ தானே சிவனேசன் வீடு இருக்கிறதா சொன்னாரு....?" என வண்டி ஓட்டிவாறு இடமும் புறமும் திரும்பி பார்த்தவாறு சென்றவன் காரானது குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.



"யாரையாச்சும் விசாரிச்சு போவோம்." என வண்டியை சற்று வேகமாக ஓட்டியவன் கவனிக்கவில்லை, அந்த நேர்சாலையினை ஒட்டினாற்போல சில கிளை சாலைகள் பிரிந்து செல்வதை.



திடீரென அந்த குறுக்கு சாலையினிலிருந்து வேகமாக ஓடிவந்த பெண்ணொருத்தி அவன் காரில் மோதியதும் சடேன் பிரேக்கிட்டு காரை நிறுத்தியவன் பதட்டமாய் ஓடிவந்து விழுந்து கிடந்தவளை பார்த்தான்.



தலையில் இரத்தம் வடிய மயக்கமாகிக்கிடந்தவளை பார்த்ததும் பதறியவன், அவளை கைகளில் ஏந்தி காரில் போட்டுக்கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தவன் அவளை ஐசியூவில் சேர்த்து விட்டு அவள் விழித்துக்கொள்ளும் தருணத்திற்காக அங்கேயே தவமிருந்தான்.



அவனும் எத்தனையோ தருணங்களை எதிர்காெண்டிருக்கிறான், ஆனால் இப்படி ஒரு தருணத்தினை அவன் எதிர்பார்க்கவில்லை.



அதுவும் அவளை கைகளில் ஏந்தும்போது அவள் தொய்ந்த உடல் அவனை இன்னும் பயமுறுத்தியிருந்தது.



தன்னால் ஒரு உயிர் போராடுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்தின் பின்னர் வெளியே வந்த மருத்துவர் குழாமை பற்றிக்கொண்டவன்,



"டாக்டர் அந்த பொண்ணுக்கு....." என தயக்கமாக வந்த அவனது குரலிலேயே அவன் பதட்டம் புரிந்தவரோ...



"பயப்பட எதுவுமில்லை மிஸ்டர் கௌதமன்...., தலையில பலத்த காயம், ஆபரேஷன் பண்ணிருக்கோம். மத்தம்படி உள் காயம்ன்னு தெரிஞ்சுக்கணும்ன்னா மயக்கம் தெளிஞ்சா தான் சொல்லமுடியும். இன்னும் ரெண்டு மணிநேரமாவது ஆகும்.' என அவர் சென்றுவிட்டார்.



இப்படி அப்படி என்று அவர் சொன்ன இரண்டு மணிநேரத்துடன் அதிகமாக அரைமணிநேரம் கடந்திருந்தது.



திடீரென உள்ளிருந்து வெளியே ஓடிய நர்ஸின் பதட்டம் கண்டு அவனுமே பயந்து போனான்.



ஓடிய நர்ஸ் வரும்போது மருத்துவருடனே வந்தாள்.



அவர் போய் இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை,



அவனையும் உள்ளே வர சொன்னதாக நர்ஸ் அழைக்க, உள்ளே சென்றவன் அங்கு கண்ட காட்சியை கண்டு அதிர்ந்தே போனான்.










 
Top