• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என்றும் மாறா உன் அன்பு - தசீயகுமார் டனேஸ்ரி

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
❤️❤️அன்பு....❤️❤️

அதிகாலை ஆதவன் அவனியினரை துயிலெழுப்பியபடி எழுந்து வந்தான். ஆதவன் அவனின் வரவினைக் கண்டு ஆர்ப்பரித்தபடி தங்களது கடமையில் கண்ணாயினர் மக்கள்.

ஆதவனும் வழமைபோன்று நித்யகல்யாணியின் கோலத்தை இரசித்தபடி இருந்தான். நித்யகல்யாணி ஆம் நம் கதையின் நாயகி.

எங்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாக பச்சைப் பசேல் என காணப்படும் வயல்வெளிகள். மலைமீது ஊற்றெடுக்கும் நதியவள் பாய்ந்து ஓடிவரும் அருவிகள் ஒருபுறமென கண்களுக்கு விருந்தளிக்கும் கிராமமே ஆனந்தபுரம். பெயருக்கு ஏற்றாற்போல் ஆனந்தம் மட்டுமே நிறைந்த கிராமம்.

ஆனந்தபுரம் கிராமத்திற்கு தலைவர். ராஜகோபால். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு மகன், ஒரு மகள். மகன் மருதபாண்டியன். இவரின் மனைவி முத்துலெட்சுமி. இவர்களின் ஒரே மகன் ருத்ரபாண்டியன். இவருதான் நம்ம ஹீரோ.

ராஜகோபால் பார்வதியினரின் மகள் சாந்தரூபி. இவரது கணவன் நாராயணன். இவர் நித்யகல்யாணி பிறந்து சில தினங்களிலே ஒரு விபத்தில் இறந்துவிட்டார். சாந்தரூபியின் உயிர்ப்புக்கு காரணமே அவர்களது மகள் நித்யகல்யாணி. நம்ம ஹீரோயின்.

இவர்கள் கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வந்தனர். முத்துலெட்சுமிக்கு சாந்தரூயை பிடிக்காது. காரணம் அவர் அவளை விட மிகவும் அழகானவர். அதனால் முத்துலெட்சுமிக்கு அவரைப்பிடிக்காது. அதை யாருமற்ற வேளையில் அவரிடம்காட்டுவார். சாந்தரூபி பெயருக்கு ஏற்றாற்போல் சாந்தமானவர். அவரைப் பொறுத்துப்போவார்.

ருத்ரபாண்டியன். ஆறடி அழகன். ஆண்மையின் அடையாளம் அவன். அவனது முறுக்கிவிட்ட மீசைக்கு பலர் ரசிகர்கள். ராஜகோபாலின் மறுவடிவம் இவன். கோபத்தில் சிவனைப்போன்றவன். விவசாயத்தையே உயிர்மூச்சாகக் கொண்டவன். சாந்தரூபியை இவனுக்கு மிகவும் பிடிக்கும். தாயிடம் இருந்ததை விட அதிகமாக அவரிடமே வளர்ந்தவன். பி.ஏ அக்ரி (விவசாயம் ) படித்தவன். நம்ம நித்யகல்யாணியை அளவுக்கு அதிகமாக காதலிப்பவன்.

நித்யகல்யாணி. தாயின் அழகையும் குணத்தையும் கொண்டு பிறந்தவள். முத்துலெட்சுமியின் சுடுசொல்லை தாங்கிக்கொண்டு நடமாடுபவள். பத்தாம் வகுப்பு வரைதான் படித்தாள். வீட்டுவேலைகள் அனைத்தும் தெரியும். பார்வதி சொல்லுவார் "நீ ஏன்மா வீட்டுவேலை எல்லாம் செய்ற? அதுக்குத்தான்ன நெறையப்பேர் இருக்காங்களேடா" என்பார். "நம்ம வேலைய நம்மதான் பாட்டி செய்யணும் "என்பாள். மாமா ருத்ரன் என்றால் உயிர் இவளுக்கு.

"நித்யா......"

"இதோ வந்திட்டன் தாத்தா"

"நித்யாமா தாத்தாவும் மாமாவும் ஒருவேலையா பட்டணம் வரைக்கும் போயிட்டு வர்றம் ருத்ரன் வந்தா இந்த பணத்தை கொடும்மா " என்றபடி பத்தாயிரம் ரூபாயைக் கொடுத்தார்.

"சரி தாத்தா" என்றவள் அதை எடுத்து பெட்டியில் வைத்தாள்.

எல்லாரும் அவரவர் வேலையில் இருக்கும் போது முத்துலெட்சுமி மெதுவாக வந்து பணத்தை எடுத்து நித்யாவின் ஆடைகளுக்கிடையில் வைத்தாள்.

(லெட்சுமிக்கு (முத்துலெட்சுமி) நித்யாவைப் பிடிக்காது. ருத்ரனுக்கு நித்யாவைதிருமணம் செய்யவே அனைவரும் விரும்புவது தெரியும். இவருக்கு இவரின் அண்ணன் மகள் பிருந்தாவை திருமணம் செய்துவைக்க விருப்பம். இவள் ருத்ரனைப்போல பி.ஏ படித்தவள். ஆகையால் பத்தாம் வகுப்பு படித்த நித்யாவை விட பிருந்தாவையே இவருக்கு பிடிக்கும். எப்பிடியாவது நித்யாவுக்கு கெட்ட பேரை ஏற்படுத்த வேண்டும் என்றே நினைத்தார்.)

நித்யா சமையல் வேலையில் ஈடுபட்டவள்.பணத்தை மறந்துவிட்டாள். வயலில் அதிக வேலை காரணமாக பணம் வாங்குவதற்கு வரவில்லை. மாலைநேரமானதும் அனைவரும் வீடு வந்துசேர்ந்தனர்.

இரவு உணவு முடிந்ததும் கூடத்தில் அனைவரும் கூடியிருந்தனர். அப்போது ராஜகோபால் பேச ஆரம்பித்தார்.

"ருத்ரா உரம் வாங்க பணம் போதுமாப்பா?"

"என்ன பணம் தாத்தா?"

"நான் நித்யாகிட்ட கொடுத்து உன்கிட்ட கொடுக்க சொன்னனேப்பா"

"இல்லப்பா நான் வயல்ல வேலை அதிகமா இருந்திச்சு அதனால வரலப்பா"

"நித்யா"

"தாத்தா பணம் பெட்டியிலதான் இருக்கும். நான் எடுத்திட்டு வர்றன் தாத்தா."

"சரிமா"

பெட்டியைத் திறந்து பார்த்த நித்யாவுக்கு அதிர்ச்சி. பணத்தைக் காணவில்லை. என்ன செய்வதென்று அறியாமல் கூடத்திற்கு வந்தாள்.

"என்னம்மா?"

"தாத்தா அதுவந்து....."

"என்னம்மா ?"

"பணத்தை காணோம் தாத்தா"

"என்ன நித்யா சொல்ற? பணம் உங்கிட்ட தந்தது யாருக்கும் தெரியாதேமா"

"பெட்டிக்குள்ள வைச்சனான் தாத்தா இப்போ காணோம்."

"நல்லா இருக்குடிமா உன்னோட கதை. பத்தாயிரம் ரூபா சும்மா போயிட்டுதா?"

"இல்ல அத்தை நான் பெட்டிக்குள்ளதான் வைச்சன்"

"பெட்டிக்குள்ள வைச்ச பணம் எப்பிடி போச்சு? நீ தான் திருடிட்டியா?"

"அம்மா"

"நீ சும்மா இரு ருத்ரா. பணம் இவதானே வச்சிருந்தா பிறகு எப்பிடி காணாமபோகும்?"

"இல்ல அத்தை நான் எடுக்கல அத்தை" என்று அழுதாள்.

"அழுது சமாளிக்காத. மாமா இவளோட அறைய சோதனை பண்ணுங்க"

"நிறுத்து லெட்சுமி. நித்யா இந்த வீட்டுப் பொண்ணு பணம் வேணும்னா அவ கேட்டு எடுப்பா ஏன் கேக்காமலே எடுப்பா நீ பேசாத"

"மாமா நான் இந்த வீட்டு மருமக கேக்க உரிமை இருக்கு"

"எல்லாரும் போங்க போய் தூங்குங்க."

"என்ன மாமா பத்தாயிரம் ரூபா காணாம போயிருக்கு சாதாரணமா போகச்சொல்றீங்க?"

"நான் சொன்னத செய்ங்க" என சத்தமிட அனைவரும் தத்தமது அறைக்குச் செல்ல நித்யா,ருத்ரன் , தாத்தா மட்டும் அங்கே நின்றனர்.

"நித்யாமா அழதடா"

"இல்ல தாத்தா நான் எடுக்கல" என்று அழுதவளைப் பார்த்த தாத்தா

"ருத்ரா நித்யாவ சமாதானப்படுத்துப்பா" என்றவர் தனது அறைக்குச் சென்றார்.

"வாடாம்மா" என்றவன் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான்.

"மாமா நான் எடுக்கல மாமா" என்று அழுதவள் கண்ணீரை துடைத்துவிட்டான்.

"நிதிமா எனக்கு உன்னப் பற்றி தெரியும்டா கண்ணா நீ அப்பிடி பண்ணிருக்க மாட்டடா"

"எப்பிடி மாமா நீ எப்பவும் இப்பிடி இருக்க? சின்னவயசில இருந்து இப்ப வரைக்கும் உன்னோட அன்பு மாறவே இல்ல மாமா"

"நீ என்னோட நிதிடா உன்மேல நான் வைச்சிருக்க அன்பு என்றும் மாறா அன்புடா. "

"எப்பவும் இந்த அன்பு இருக்குமா மாமா?"

"கண்டிப்பாடா கண்ணா"

"மாமா பணம் எங்க போயிருக்கும்?"

"என்ன பெத்தவதான் எடுத்து உன்னோட அறையில வைச்சிருப்பாங்க"

"எப்பிடி மாமா சொல்ற?"

"தாத்தா கேக்கும் போது அம்மா உன்னப் பார்த்து கேலியா சிரிச்சாங்கடா. அப்பவே நான் கெஸ் பண்ணிட்டன்."

"ஏன் மாமா அத்தைக்கு என்ன பிடிக்கல?"

"அத்தைக்கு பிடிகாட்டி என்னடா அதுதான் அத்தை மகனுக்கு பிடிச்சிருக்கே"

"போ மாமா "

"சரி போய் நிம்மதியா தூங்குடா நிதிமா. அம்மாகிட்ட பத்திரமா இருக்கணும் சரியாடா?"

"சரி மாமா" என்றவளை அனுப்பி வைத்தவன். சிறிது நேரம் யோசனை செய்தவன் ஒரு முடிவுடன் உறங்கச் சென்றான்.

பல திருப்பங்களுடன் புதிய நாளில் புன்னகையுடன் எழுந்த சூரியன் வழமை போல் நித்தியாவின் புள்ளிக்கோலத்தை சைட் அடித்தபடி இருந்தான்.

"தாத்தா "

"வாடாம்மா"

"இந்தாங்க தாத்தா பணம்"

"எங்கம்மா இருந்தது?"

"என்னோட ரெஸ்க்கு அடியல தாத்தா"

"நான் எதிர்பார்த்தன்டாமா"

"எப்பிடி தாத்தா"

"உன்னோட வயசு என்னோட அனுபவம்டாமா "

"அத்தைய எதுவும் சொல்லாதீங்க தாத்தா"

"நீ இப்பிடித்தான் சொல்லுவனு தெரியும்மா நான் அதுக்கு வேற முடிவு எடுத்திருக்கன்மா. நீ போடா"

"சரி தாத்தா"

"தாத்தா"

"வா ருத்ரா உன்னத்தான் வரச்சொல்லணும்னு நெனச்சன் நீயே வந்திட்ட"

"நான் உங்ககிட்ட ஒரு விசயம் சொல்லணும் தாத்தா"

"சொல்லுப்பா "

"தாத்தா நான் சுத்தி வளைக்க விரும்பல எனக்கும் நிதிக்கும் சீக்கிரமா கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க தாத்தா"

"ஏன் ருத்ரா?"

"அம்மாவால அவபடுற கஸ்ரத்தை என்னா பார்க்க முடியல தாத்தா நேற்று திருட்டுப்பட்டம் கட்டிடாங்க"

"நானும் அதைத்தான் யோசிச்சன் ருத்ரா. "

"உண்மையாவா தாத்தா?"

"ஆமாப்பா வா போலாம் நான் இப்பவே பேசுறன்"

"சரி தாத்தா"

எல்லோரையும் கூடத்துக்கு அழைத்தார்.

"பார்வதி நான் நம்ம நித்யாக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்திருக்கன் நீ என்ன சொல்ற?"

"நல்லதுங்க நீங்க சொன்னா சரிதான்ங்க"

"எல்லாருக்கும் சம்மதம் தானே"

"சம்மதம் " என்றனர் அனைவரும். லெட்சுமி மட்டும் " மாப்பிள்ளை யாரு மாமா?"எனக் கேட்க

"வேற யாருமா நம்ம ருத்ராதான்" என்றார்.

"என்ன சொல்றீங்க மாமா?"

"அவன்தானே முறைப்பையன் "

"அதுக்காக பத்தாவது மட்டும் படிச்ச இவளுக்கு என்னோட பையன் வேணுமா. அதெல்லாம் முடியாது என் பையனுக்கு என்னோட அண்ணன் பொண்ணு பிருந்தாவத்தான் கட்டி வைப்பன்"

"ருத்ராதான் வாழப்போறான் அவனுக்கு யாரை கட்டிகணும்னு தோணுதோ அவங்களையே கல்யாணம் பண்ணிக்கட்டும். ருத்ரா நீ சொல்லுப்பா"

"எனக்கு நித்யாவ கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தாத்தா அதுவும் ஒரு வாரத்தில நடக்கணும்"

"ருத்ரா என்ன சொல்ற?"

"நீங்க பேசாதீங்கம்மா"

"சரிப்பா ருத்ரா அப்பிடியே செஞ்சிடலாம் " என்றார் தாத்தா.

லெட்சுமியால் எதுவும் செய்ய முடியாமல் போனது. கல்யாண வேலைகள் ஆரம்பித்தன. லெட்சுமி ஒரு திட்டம் தீட்டினார். அதன்படி
நாட்களும் செல்ல கல்யாணத்துக்கு முதல்நாள் சம்பிரதாயப்படி கோயிலுக்குச் சென்ற நித்யாக்கு விபத்து ஏற்பட்டது.

வைத்தியசாலையில் அவசரச்சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள் நித்யா. அனைவரும் அவசரச்சிகிச்சை பிரிவுக்கு முன்னால் கூடி இருந்தனர். லெட்சுமி உள்ளே மகிழ்ந்தபடியும் வெளியே கவலையாகவும் இருக்க மற்றைய அனைவரும் அழுதபடி இருந்தனர். ருத்ராவோ இறுகிய முகத்துடன் இருந்தான்.

சிலமணி நேரங்களுக்கு பின் வெளியே வந்த டாக்டரிடம் "எப்பிடி இருக்கா டாக்டர்?"

"என்னால இப்ப எதுவும் சொல்ல முடியாதுங்க மூணுமணி நேரத்திற்கு பிறகுதான் ஏதாவது சொல்ல முடியும்" என டாக்டர் நகர்ந்தார்.

இதனைக் கேட்ட அனைவரும் மீண்டும் அழ ஆரம்பித்தனர். லெட்சுமி மட்டும் அங்கிருந்து தனது போனுடன் நகர்வதைக் கண்ட ருத்ரன் அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்தான்

"ஹலோ பிருந்தாமா"

"சொல்லுங்க அத்தை"

"நம்ம ஏற்பாடு செஞ்சவன் நித்யாவ அக்சிடன் பண்ணிட்டான்மா அவனுக்கு மேல பணத்தை போட்டுக் கொடுத்திருடா"

"சரி அத்தை"

"சரிமா அவ பொளைக்கிறது கஸ்ரம்னு சொல்லிட்டாங்க அந்த சந்தோசமான விசயத்தை சொல்லத்தான் உனக்கு போன் பண்ணினன். நான் அப்புறமா பேசுறன்மா"

"சரி அத்தை"

இதைக் கேட்ட ருத்ரனுக்கு எல்லையில்லா கோபம் வந்தது. அவர் அறியாது அங்கிருந்து வெளியேறியவன் வீட்டிற்கு வந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்தான்.

"தாத்தா டாக்டர் என்ன சொன்னாங்க?"

"தெரியலப்பா மூணுமணிநேரம் முடிஞ்சிட்டு ருத்ரா"

வெளியே வந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தவன் "டாக்டர் நிதிக்கு எப்பிடி இருக்கு?"

"sorry Mr. ruthran. அவங்க கோமாக்கு போயிட்டாங்க " என்றார்.

"எப்போ நினைவு வரும் டாக்டர்?"

"அது சரியா சொல்ல முடியாது ருத்ரன். நாளைக்கு வரலாம் இல்ல ரெண்டு மாசம் கழிச்சு வரலாம் ஏன் வராமலும் போலாம்"

"டாக்டர் இங்க வைச்சிருந்துதான் ரீட்மென்ட் பார்க்கணுமா?"

"இல்ல வீட்ல வைச்சும் பார்க்கலாம் "

"இப்ப நாங்க உள்ள போய் பார்க்கலாமா டாக்டர் "

"பார்க்கலாம்"

எல்லாரும் உள்ளே சென்றனர். சாந்தரூபிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எப்பிடி இருந்த மகள் அவள். என நினைத்து வருந்தினார்.

"நாளைக்கு கல்யாணம் இப்ப கல்யாணம் நின்னா ஊர்ல என்ன பேசுவாங்க. பேசாம பிருந்தாவையே அந்த முகூர்த்தத்தில ருத்ரனுக்கு கட்டிவைச்சிடுவம்" என ஏனையோரின் மனநிலைக்கு மாறாக பேசிய லெட்சுமியை கனல் பார்வை பார்த்தார்.

நித்யாவின் அருகில் வந்த ருத்ரன் யாரும் எதிர்பாரா நேரத்தில் படுத்திருந்த நித்யாவுக்கு தாலி கட்டினான். அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.

"தாத்தா நான் நிதிக்கு வீட்ல வைச்சு வைத்தியம் பார்த்துக்கிறன்"

"சரிப்பா"

"உனக்கு என்னடா பைத்தியமா?"

"இனிமேல் உங்களுக்கும் எனக்கும் இடையில எந்த உறவும் இல்ல. தாத்தா நான் டாக்டரிட்ட பேசிட்டு வர்றன். "

டாக்டர் ஐந்து நாட்களின் பின் வீட்டிற்கு கூட்டிச் செல்லுமாறு சொல்ல ருத்திரனே அழைத்து வந்தான். திருமணம் செய்ததிலிருந்து நிதிக்குரிய அனைத்தையும் அவனே செய்தான். இதைப் பார்த்தவர்களுக்கு நித்யா நல்லாயிடணும் என்று தினமும் வேண்டினர் கடவுளிடம்.

ஒருமாதமாகிவிட்டது. நிதியிடம் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. ருத்திரன் தாயுடன் பேசுவதையே நிறுத்திவிட்டான். அவரும் போராடிவிட்டார். முடியவில்லை.

ஒருநாள் இரவு நிதியின் அருகில் படுத்திருந்த ருத்திரன் வழமைபோல அன்று நடந்தவற்றை நித்யாவிடம் கூறிக்கொண்டிருந்தான்.

(அவள் கோமாவுக்கு சென்றதிலிருந்து தினமும் நடப்பவற்றை அவளிடம் இரவில் கூறுவான்.)

"நிதிமா இன்னைக்கு வயல்ல ரொம்ப வேலைடா. அப்புறம் இளநீர் சீவினன்டா அருவா கைய சீவிப்போட்டுதுடா. மாமாக்கு வலிக்குது நிதி. நீ இருந்தா மருந்து போட்டுவிடுவடா" என கூறியவன் அவளைப் பார்த்தான். அவளது கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. அதைப் பார்த்த ருத்திரன் உடனடியாக டாக்டரை அழைத்தான்.

டாக்டர் நித்யாவை பரிசோதித்துவிட்டு " mr. ruthran. அவங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமா நினைவு திரும்பிக்ககொண்டிருக்குது." என்றார்.

"சீக்கிரமா சரியாயிடுவாளா டாக்டர்.?"

"ஆமா ருத்ரன் வாய்ப்பு நிறையவே இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் மெடிசின் மட்டுமல்ல உங்க அன்பும்தான் காரணம்."

"எனக்கு அவ பழையபடி கிடைச்சிட்டா போதும் டாக்டர்."

"ok ruthran ஏதாச்சும்னா போன் பண்ணுங்க நான் வர்றன்"

"சரி டாக்டர்."

நித்யாவின் அருகிலிருந்து அவளது தலையை தடவிவிட்டபடி பேசிக்கொண்டிருந்தவன் அப்பிடியே தூங்கிவிட்டான். எல்லோரும் நித்யாவின் அருகிலிருந்து தினமும் பேசத்தொடங்கினர். அவர்கள் பேச்சில் ருத்ரனைப் பற்றி வந்தால் நித்யாவின் விழிகளில்ல இருந்து கண்ணீர் வருவதை அவதானித்த ருத்ரன் நித்யாவை குணப்படுத்த ஒரு வழியை நினைத்தான்.

கதிரவனும் நித்யாவின் கோலத்தைக் காணாது கண்ணீரை மழையாகப்பொழிந்தான். ருத்ரன் வீட்டில்ல அனைவரையும் அழைத்தவன் தனது திடடத்தைச் சொல்லி அவர்களது அறைக்குள் அழைத்துச் சென்றான்.

"ருத்ரா ஏன்பா இப்பிடி சாப்பிடாம இருக்க? உடம்பு என்னவாகும்?"
(ருத்ரன் பேரைக் கேட்டதிலிருந்து கண்ணீர் வந்தது நித்யாவுக்கு)

"கொஞ்சமாவது சாப்பிடுபா"

"நான் உயிரோடு இருந்து என்ன பயன் பாட்டி என்னோட நிதிய இப்பிடிப் பார்க்க முடியல பாட்டி " என்றவன் அழுகுரலைக் கேட்ட நித்யாவின் விழிகள் காவிரி போல் கண்ணீரை வடித்தன.அதைக் கண்டு ஆனந்தமடைந்த ருத்ரன் மேலும் பேசினான்.

"நிதி நீ இப்போ கண்ண தொறந்து மாமானு கூப்பிடல நான் செத்துருவன்டா. என்னால இப்பிடி உன்ன பார்க்க முடிலடி. பிளீஸ்டா மாமாகிட்ட வந்திருடாமா " என்று அழுதபடி அவளது கரங்களைப் பற்றினான்.

நித்யாவின் கண்மணிகள் அசைவதைப் பார்த்தவன் டாக்டரிடம் போன் பண்ணிவிட்டு மீண்டும் நிதியிடம் பேசினான்.

"நிதிமா மாமா அழுறன்டா. ரொம்ப வலிக்குதுடி மாமாக்கு நீ இப்பிடி இருக்கிறது. அதனால நான் போறன்றன நிதிமா. மாமா கைல இப்ப விஷம் இருக்கு நான் குடிச்சிட்டு செத்திடுறன்டா"

"வேணாப்பா" என மற்றையவர்கள் அழுதனர்.
அப்போது

"மாமா" என்ற சத்தத்துடன் எழுந்தமர்ந்த நித்யா ருத்ரனை அணைத்துக்கொண்டு
"மாமா என்ன விட்டு போகாத மாமா. நான் பாவம் மாமா என்ன விட்டு போகாத மாமா" என அழுதாள்.

"நிதிமா மாமாக்கு ஒண்ணுமில்லடா நீ சரியாகிட்டடா" என்றவன் அவளை இறுக அணைத்துக்கொண்டான். அப்போது டாக்டர் வர
" வாங்க டாக்டர்"

"மாமா எதுக்கு டாக்டர் வர்றாரு?"

"கொஞ்சம் இருடா தங்கம் மாமா அப்புறம் சொல்றன்"

"சரி மாமா" என்றவளை விட்டு எழுந்து நின்றான்.

" ருத்ரன் இவங்க குணமாயிட்டாங்க சில டெஸ்ட் எடுக்கணும் hospital கூட்டிட்டு வாங்க "

"சரி டாக்டர் "என்றவன் நிதியை அழைத்துச்சென்று டெஸ்ட் எடுத்துவிட்டு வீட்டிற்கு அழைத்து வந்தவனை ஆரத்தி எடுத்து வரவேற்றார் பாட்டி.

எள்லாரும் கூடத்தில் இருந்தனர். நிதி தாயின்ன அருகில் அமர்ந்துகொண்டாள். நடந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்தான் ருத்ரன். அவற்றைக் கேட்ட நித்யா அழுதாள்.

லெட்சுமி அனைவரிடமும் "நான் இப்பிடி ஆகும்னு நினைக்கல. சின்னதா காயம் வரும்னுதான் நெனச்சன். என்ன மன்னிச்சிடுங்க " என மன்னிப்புக்கேட்டவரை ருத்ரனை தவிர அனைவரும் மன்னித்தனர்.
"இனிமேல் ஒழுங்கா இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன்."

"மாமா அத்தைய மன்னிச்சிடு மாமா"

"இல்ல நிதிமா என்னால மன்னிக்க முடியாதுடி அந்த விபத்துனால உனக்கு ஏதாச்சும் நடந்திருந்தா நான் செத்திருப்பன்டி"

"மாமா எனக்காக மன்னிச்சிடு பிளீஸ்" என்று கேட்டவளது முகத்தைப் பார்த்தவன்

"சரி உனக்காக என்னோட நிதிக்காக நான் மன்னிக்கிறன் " என்றவன் அறைக்குள் சென்றான்.

" போடாம்மா ருத்ரன் கூட பேசு. உனக்கு இப்பிடியானதும் ரொம்ப உடைஞ்சிட்டான்ம"

"சரி மா "என்றவள் அறைக்குச் சென்றாள்.

பால்கனியில் நின்றிருந்த ருத்ரனை நெருங்கியவள் பின்னாலிருந்து அவனை அணைத்துக்கொள்ள. ருத்ரனோ தன் கையை அவள் இடையில் கொடுத்து முன்னால் இழுத்து அணைத்துக்கொண்டான்.

அவனது இறுகிய அணைப்பே சொன்னது அவனது வேதனையை. சிறிது நேரம் அவ்அவ அணைப்பில் இருந்தவள் தோளில்ல ஈரம் உணர்ந்து விலகினாள்.

"மாமா அழாத மாமா"

"நிதிமா இது ஆனந்தக் கண்ணீர்டா தங்கம். நீ எனக்கு திரும்ப கிடைச்சிட்டடா"

"மாமா ஏன் மாமா தாலி கட்டின நான் குணமாகாம போயிருந்தா "

"நீ குணமாயிடுவனு தெரியும்டா ஒருவேளை நீ குணமாகலனா நான் சாகுறவரைக்கும் உன்ன அப்பிடியே பார்த்திட்டு இருந்திருப்பன்டா. எனக்கு என்னோட நிதி என்கூடவே இருக்கணும் அது போதும்டா"

"மாமா உன்னோட அன்பு என்றும் மாறா அன்பு மாமா" என்று அவனை அணைத்துக்கொண்டாள். அவனும் தனது நிதியை ஆனந்தத்துடன் அணைத்துக்கொள்ள வெண்ணிலாவும் இவர்களது அன்பைக் கண்டு வாழ்த்திச் சென்றது.....

🌹🌹அன்பு நிறைவுற்றது🌹🌹🌹

எனது முதல் சிறுகதை பிரண்ட்ஸ் எப்பிடி இருக்குனு படிச்சிட்டு சொல்லுங்க பிரண்ட்ஸ். உங்க ஆதரவுதான் என்ன மேலும் மேலும் எழுதத் தூண்டும் பிரண்ட்ஸ்😀😀😀.

உங்கள் கருத்துக்களையும் மதிப்பீடுகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்
உங்கள் தோழி
✒️ தசீயகுமார் டனேஸ்ரி. ✒✒
 
Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
414
Nice ma
very emotional story
 
மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87

முதல் கதை ன்னு படிச்சதும் தெரிஞ்சது மா... வாழ்த்துக்கள்... இன்னும் நிறைய எழுதுங்க கண்டிப்பா வார்த்தைகள் வசப்படும்...
எழுத்து மெருகேறும்...
வெல்கம் to வைகை
 
Top