• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் தேடலானவளே 15

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
15

ஐசியூ விலிருந்த வந்த மருத்துவரை இருவருமே பதட்டத்துடன் அனுகினர். அவரோ "சாரி சார்... அவங்களுக்கு இருந்த அதிர்ச்சியில அடிபட்டதும் சேர்ந்து அவங்களை சுயநினைவு இல்லாத ஆக்கிடுச்சி.. அவங்க சீக்கிரம் கண்முழிச்சி பேசிட்டாங்கன்னா ஷி ஈஸ் பர்பெக்ட்லி ஆல்ரைட்.. அப்படி இல்லைன்னா கோமா ஸ்டேஜ்க்கு போறதுக்கும் வாய்ப்பு இருக்கு...கடவுளே வேண்டிக்கோங்க.. நம்மளை மீறின சக்தி இருக்கு..‌ உங்க வொய்ப் நிச்சயம் மீண்டு வருவாங்க.." அவனின் தோளை தட்டிவிட்டு சென்றுவிட்டார் மருத்துவர். அவர் சொன்ன செய்தியில் அவனின் ஜீவன் துடித்தது. அவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவனை உடனே கொல்லும் அளவு ஆக்ரோஷத்தும் வந்தது.

அவளின் நிலையில் அவனுக்கு இருக்கும் வலியும் மறந்தான்.. அதை மறந்தவனுக்கு அந்த விஷம் தடவிய கத்தி தனது வேலையை காட்ட துவங்கியது. தன்னை வளர்த்தவரிடம் சென்றவன்,

"அப்பா நீங்க என் யாழுவ நல்லபடியா பாத்துக்கோங்கப்பா... நான் சீக்கிரம் வந்துருவேன்பா.. என் பாப்புவோட நிலமைக்கு காரணமானவன இனிமேலும் நான் உயிரோட விடப்போறதில்லைப்பா.. என் யாழு திரும்ப வருவாப்பா... என்மேல அவளுக்கு காதல் அதிகம்பா.. இல்லைன்னா அவ குடும்பத்த விட்டு இவ்வளவு தூரம் எனக்காக வந்திருக்க மாட்டா.. என் குழந்தைய நல்லபடியா பெத்தெடுக்காவாது அவ உயிரோட தான் இருப்பா.." என்றான்.

அவரோ "மித்ரா கண்விழிச்சதுக்கு அப்புறமாவது போலாம் இல்லைபா"

"இல்லைப்பா இனி அவன் எங்கேயும் தப்பிக்க கூடாது.. நான் போயே ஆக வேண்டிய கட்டாயம்பா.." அவரிடம் கூறியவன் அங்கே வந்த செவிலியரிடம் தன்னவளை காண அனுமதி வாங்கி உள்ளே சென்றான்.

அங்கே அவனவள் வாடிய கொடியாய் செயற்கை சுவாசத்துடன் ஒயர்களுக்கு நடுவில் படுத்திருந்தாள். அவளுடன் கொஞ்சி பேசியதும் அவளுடன் உறவாடிய தருணமும் அவன் நினைவைக் கொன்றது.

"ஏன்டி... ஏன் வந்தே என் வாழ்க்கையில.. நான் நினைக்கவே இல்லைடி இப்படி ஒரு தேவதை எனக்கு கிடைப்பான்னு.. ஆனா இவ்வளவு நாளா நான் உன்கிட்ட சொன்னதில்லைடி இப்போ சொல்றேன்... உன்னை என்னைக்கு பார்த்தனோ அப்போ நினைச்சேன் டி... உன்னை மாதிரி ஒருத்தி தான் என் வாழ்க்கையா கிடைக்கனும்னு.. ஆனா நான் எதிர்பார்க்காத நீயே எனக்கு கிடைச்ச.. உன்னை விடவும் முடியாம ஏத்துக்கவும் முடியாம என்னோட சூழ்நிலை தடுத்துச்சி.. அதை மீறியும் நீ என் வாழ்க்கைக்குள்ள வந்த என் தேவதை டி.. நீ என்னோட தேடலுக்கு கிடைச்ச வரம்டி.. என் தேடலானவள் டி.. ரோஜா பூவை விட மென்மையானவடி.. உன்னை இன்னைக்கு இந்த நிலைக்கு ஆளாக்கனவனா கண்டிப்பா நான் விடமாட்டேன் டி.. ஐ லவ் யூ டி... பாப்பு நம்ம குழந்தை உனக்குள்ளே இருக்காடி.. அவளுக்காக வந்துருடி என் செல்லம்மா... நான் இப்போ போறேன் டி.. நான் நிரந்தரமா இல்லாம போற நிலமை வந்தா கண்டிப்பா உன்னையும் கூட்டிட்டு தான்டி போவேன்.. நான் இல்லாமல் நீ இருக்க மாட்டே டி.. ஆனா உன் அண்ணன்கிட்டயும் உன் குடும்பத்துக்கிட்டயும் கண்டிப்பா மன்னிப்பு கேட்கனும்டி.. அவங்களோட இளவரசிய கடத்திட்டு வந்து கல்யாணம் செய்ததுக்கு.. என்னோட சுயநலத்துக்காக உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டேன்டி.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் டி.. உன்னோட ஒவ்வொரு அசைவிலேயும் உன்னோட குழந்தை தனத்தை ரசிச்சிருக்கேன்டி.. எனக்கு ஜென்மத்துல நம்பிக்கை இல்லைடி.. ஆனாலும் சொல்றேன்... அடுத்த ஜென்மத்துல நீதான் என் மனைவியா வரனும் டி.. எப்பவும் என்னை மயக்குற என்னோட தேவதையா நீதான் டி வேணும்.. உன்னோட தோழிக்கு உன் மேல பாசம் அதிகம்டி.. அவ என்னோட தங்கச்சியாத்தான் பாக்குறேன்.. நீங்க இதே சொந்தத்தோட எனக்கு வேணும்டா கண்ணம்மா.. சொல்றதுக்கும் பேசுறதுக்கும் நிறைய இருக்குடி.. ஆனா நீ மீண்டு வா நிறைய பேசலாம்டி.." அவன் பேச்சை கேட்டு அவளின் கண்களில் நீர் வழிந்தது அவளின் மனம் அவன் சொன்னதை உணர்ந்தது போல. அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான் அவன் காதலை உணர்த்தும் விதமாக அழுத்தமாக.

வெளியே வந்தவன் பெரியவரிடம் கூறிவிட்டு தனது இறையைத் தேடிச் சென்றான். அவன் அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறும் போதே அவன் நடை தள்ளாடி கண்கள் இருண்டு கொண்டு வந்தது.

அவன் சென்று இருநாட்கள் ஆகியும் அவனைப் பற்றிய எந்த தகவலும் இல்லை.. அவனவளும் கண்களை திறக்கவில்லை.. பெரியவர் அவளை தான் இருக்கும் இடத்திற்கே அழைத்துச் சென்றார் மருத்துவ உபகரணங்களுடன். மித்ராவும் அடுத்த இருமாதங்களில் கண் விழித்தும் சுயநினைவு இல்லை.. பெரியவரும் அவளை யாரை நம்பியும் அனுப்பாமல் ஆசிரமத்திலே தங்க வைத்துக்கொண்டார்.. அவளை பற்றி வெளியே யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார்.

தன் நினைவு இல்லாதவளுக்கு குடும்பத்தை பற்றிய நினைவுதான் இருக்குமோ... ரூபவாஹினி இரண்டு நிலை தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள தன் தோழியை தேடி வந்தாள்.. வந்தவளை பூட்டிய வீடு வரவேற்றது.. அவள் ஹாஸ்டலில் இருப்பாள் என்ற நம்பிக்கையில் தன்னிடம் உள்ள சாவியால் கதவைத் திறந்து உள்ளே சென்றவளை வரவேற்றது என்னவோ டேபிளில் இருந்த காகிதம் தான்.. என்னவென்று புரியாமல் அதை எடுத்தவளை ஈர்த்தது மித்ராவின் அழகான கையெழுத்து. அதை வாசிக்க வாசிக்க அவளுக்கு தன்மேலே கோபம் வந்தது அவளை கவனிக்காமல் விட்டதற்கு... மித்ரா அதில் தான் தேர்ந்தெடுத்த வாழ்க்கையையும் தேர்ந்தெடுத்த நபரையும் பற்றி விரிவாக விளக்கியிருந்தாள். ஆனால் அவர்கள் போகும் இடம் சரியாக அவளால் விளக்கமுடியவில்லை.. அவளுக்கே தெரியாத போது எப்படி அதை கூறுவாள்.

அவள் கடிதத்தை படித்ததும் முதலில் தன்னவனுக்கு கால் செய்தாள்.. ஆனால் அவனுக்கே கால் போகவில்லை.. ஏன் மெசேஜ் அவனுக்கு சேரவில்லை.. ஒன்றும் புரியாதவள் தனது தோழியை தேடி கிளம்பிவிட்டான். அதற்கு முன்பாக இதை மித்ராவின் பெற்றோரிடம் சொல்ல வேண்டும் என்ற நினைவில் அவர்களை தேடி சென்றாள்.. சென்றவளுக்கு அவமானமே மிஞ்சியது.

மித்ராவின் தாய் தந்தையான ராமநாதானும் கல்பனாவும் அவளை சொல்லால் அவமானப்படுத்தி அனுப்பினர். அவர்களை அங்கே சந்திக்க சென்றதும் ஒரு மணிநேரம் கழித்தே அவளை பார்க்க வந்தனர் மித்ராவின் பெற்றோர்கள். வந்தவர்களின் முகத்தில் சிறிதும் நட்புணர்வு இல்லை. எடுத்தவுடன் அவளிடம்

நீயா... நீ எங்கே வந்த.. ஏன் வந்த யாரை பாக்கனும்.. ஏன் உனக்கு வலைச்சிபோட எந்த பணக்காரனும் கிடைக்கலையா.. என் பையன் தான் கிடைச்சானா..இல்லை பணத்துக்கு மட்டும் இவனா.. ஆனா எம்பொண்ணும் உன்னைத்தான் ஏதோ உலகத்துல இல்லாத பிரண்ட் மாறி பேசறா... என்னை வசியம்டி பண்ணி வச்ச ரெண்டு பேரும் உன் மேல இப்படி பைத்தியமா இருக்காங்க.. நீ எவ்வளவு கேவலமானவா.. உனக்கு என் பையன் கேட்குதா... அதுக்கு நீ ******** அந்த மாறி தொழில் செய்யலாம்.." என்று இருவருமே நாக்கில் நரம்பில்லாமல் பேசினார்கள். ஆனால் அவள் கூறவருவதை இருவரும் கேட்க
தயாராயில்லை. அவளை தங்களது பேச்சில் விரட்டி விட்டனர்.

அவர்களின் பேச்சில் மனம் வழித்தாலும் மனது கேட்காதவளோ தன் தோழியை தேடிச் சென்றாள். ஆனால் அவள் அங்கே இருந்ததற்கான் எவ்வழியும் அவளுக்கு கிடைக்கவில்லை.. காவல் நிலையத்தில் நேத்ரன் பற்றி விசாரித்ததிற்கும் அவளுக்கு சரியான பதிலில்லை.. அப்படி ஒருவன் இருந்ததற்கான எந்தவிதமான அடையாளமும் இல்லை. அத்தனையையும் தனது தந்தை பெயரையும் பணத்தையும் வைத்து மறைத்திருந்தான் ரஞ்சித். ஆனால் இவை எதுவும் தனது தந்தைக்கு தெரியாமல் செய்தது தான் அவனின் பெரிய சாமர்த்தியம்.

அவளுக்கு எந்த ஒரு தடயமும் இல்லாமல் அதே வீட்டிலே என்று இருந்தாலும் தோழி வருவாள் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாள்.. அப்பப்போ தன்னவனுக்கு மெசேஜ் செய்து பார்த்தாள்.. ஆனால் அவை எதுவும் அவனுக்கு சென்று சேரவில்லை. அதிலே சிறிது தளர்ந்து தான் போனாள் பெண்ணவள்.

மாதங்கள் தேய்பிறையாய் தேய ஆனால் தோழியைப் பற்றி சிறிதும் அவளுக்கு கிடைக்கவில்லை.

நிகழ்விற்கு வந்தவள் தன்னவன் கைகளை பற்றிக் கொண்டு "நானும் எவ்வளவோ தூரம் முயற்சி பண்ணியும் என்னால மித்து இருக்குற இடத்து கண்டுபிடிக்க முடியலை... உங்களையும் என்னால கான்டக்ட் பண்ண முடியல.. என்ன செய்யறதுன்னு தெரியாத இருக்கும் போது தான் ஒரு பார்ஷல் வந்துச்சி.. அதுல மித்துவோட கையெழுத்து மட்டும் பாத்தேன்.. அதை பிரிச்சி பார்த்ததுல ஒரு பென்டிரைவ் மட்டும் இருந்துச்சி.. அதுல அவளுக்கும் நேத்ரன் அண்ணாவுக்கும் இருந்த நேசத்துல இருந்து அவங்க வாழ்ந்த வாழ்க்கை அவங்களோட பிரிவு அத்தனையும் சொல்லியிருந்தா.. அவளுக்கு குழந்தை பிறந்த பிறகு தான் சுயநினைவு வந்துச்சின்னும் சொல்லியிருந்தா... அவ பாதி பேசும் போதே வீடியோ ஆஃப் ஆயிடுச்சி.. எனக்கு புரியலை.. சரி நீங்க வந்துருப்பீங்க.. உங்களையும் உங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி உங்க எல்லோரடவும் அவளை பாக்க போகனும்னு நினைச்சி தான் உங்க வீட்டுக்கு வந்தேன்... ஆனா அங்க.." அதற்கு மேல் சொல்ல முடியாமல் தலை குனிந்தாள்.

"சொல்லு ஹனி... என்னை பார்க்கவும் விடாம அவங்க உன்னோட பெண்மையை இழிவு படுத்தனதும் இல்லாம மித்துமாவோட சாவுக்கும் அவ யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி குழந்தை பெத்ததுக்கும் நீ தான் காரணம்னு உன்னை அசிங்கபடுத்தி இந்த ஊரவிட்டே நீ போகலைன்னா தன்னோட பையனையும் கொலை பன்னிடுவாங்கன்னு உன்னை பயமுறுத்தி அனுப்பி வச்சாங்கன்னு சொல்லு.. நீ அவங்க சொன்னதுக்காக மட்டும் போகலை.. மித்ரா இப்படி பண்ணதுக்கு நீயும் ஒரு காரணம்னு நினைச்சி தான் போயிருக்க ரைட்.. ஆனா ஹனி என்னைப்பத்தி நீங்க ரெண்டு பேருமே யோசிக்கலையா.. அவ அவளோட காதலை நீருபிக்க என்கிட்ட சொல்லாம போனா.. நீ உன் தோழிக்காகவும் என் உயிருக்காகவும் என்னை விட்டு போன.. உனக்கும் நான் முக்கியம் இல்லை.. அவளுக்கும் நான் முக்கியம் இல்லை.. என் மனசு தவிச்சுதுடி.. ஒவ்வொரு நாளும் என் ஹனி என்னை நினைப்பாளா.. தேடுவாளா.. உனக்கே தெரியும் எனக்கு உன்னைப் பத்தி நிறைய தெரியாது.. ஆனா ஒன்னு தெரியும் என் ஹனி தைரியமானவ துனிச்சலானவ.. என்கிட்ட வருவான்னு... உன்னை தேடாத இடம் இல்லைடி... இன்னைக்கு கிடைப்ப நாளைக்கு கிடைப்பன்னு பைத்தியக்காரனா உன்னை தேடிருக்கேன்.. ரொம்ப வலிக்குதுடி.." என்றான் தனது நெஞ்சைக் சுட்டிகாட்டி. அவனின் குரலின் அழுத்தத்தில் அவன் வலியை உணர்ந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.. இனி வாழ்நாள் முழுவதும் அவனுக்கு சொந்தமானவளே.



தேடல் எல்லாருரின் வாழ்விலும் நடக்கும் நிகழ்வே//
நேத்ரன் தேடியது தாயின் அரவணைப்பு காதலியின் அன்பு//
மித்ரா யாழினி தேடியது தன்னவனின் முழுமையான காதல்//
ரூபவாஹினியின் தேடல் தோழி காதல் இரண்டிலும் பாதுகாப்பு அரவணைப்பு நேசம்//
வி கே தேடியது பார்க்காத காதலி சொல்லாமல் சென்றாள்.. பிரிவுதான்
ஆனால் நிரந்தரமற்றது என உணர்ந்ததால் அவளையன்றி அவன் தேடல்கள் இல்லை..



கண்களின் தேடல் இதயத்தில் முடியும்//
ஆதவனின் தேடல் தன்னவள் ஒளிர்விட தூண்டும்//
மலரின் தேடல் மங்கையின் கூந்தலில் முடியும்//
புத்தகத்தின் தேடல் ஞானத்தில் முடியும்//
அவனின் தேடல் அகத்தை கண்டவளின் முகத்தை கானவே//
அகத்தை கண்டு காதல் கொண்டான்//
முழுமையாக தன்னவளாக மாற்றும் ஆசையுடன் வந்தவனுக்கு ஏமாற்றத்தை பரிசளித்து விட்டாள் பெண்பாவை//




வணக்கம் செல்லம்ஸ் 💕💞 கதையோட போக்கு உங்களுக்கு ஓகேவா.. எதாவது குறைகள் இருந்தா சொல்லுங்க.. அதை உடனே பூர்த்தி செய்யறேன்.. படிக்கிறீங்க எப்படி இருக்குன்னு கமெண்ட் பண்ணுங்க அப்போ தான எங்களுக்கு உத்வேகம் கிடைக்கும்.. கதையோட பாதையும் தெரியும்... கமெண்ட் பண்ணுங்க செல்லம்ஸ்.. அப்படியே கொஞ்சம் ஸ்டார்ஸ் கொடுங்க.. இதோட கமெண்ட் சொல்லுங்க அப்போதான் இனி அடுத்த பகுதி டியர்ஸ்..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐




தேடல் தொடரும்...✍️
 
Top