• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் தேடலானவளே 2

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
தந்தை மகள் இருவரும் அந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முழுவதும் சுத்தி வந்தனர்... இதில் விவேக் அவனுக்கு வாங்கியதை விட அவன் தேவதைக்கு வாங்கியதே அதிகம்... விடுவாளா அவனின் தேவதை... அவளுக்கு பிடித்ததையெல்லாம் தந்தையானவனுக்கு வாங்கினாள்.
அவளைப் பொறுத்தவரை அவன்தான் அவளுக்கு எல்லாம்.... மொத்தத்தில் அவளுக்கு தாயுமானவன் அவனே... இருவரும் ஷாப்பிங் முடித்துவிட்டு சாப்பிட அந்த மாலில் உள்ள ரெஸ்டாரன்ட்க்குள் சென்றனர்.... இருவரும் கைக்கோர்த்து செல்லும் போது விவேக்கின் மொபைல் அடித்தது... அதை எடுத்தவன் நேத்ராவின் கையைப் பிடித்தவாறு பேசிக்கொண்டிருந்தான்... அது அவனின் பிஸ்னஸ் கால்... கால் பேசிக்கொண்டடிருந்த விவேக்கின் கைப்பிடியிலிருந்து நழுவினாள் நேத்ரா. தனது வேலையில் கவனமாயிருந்த விவேக்கும் இதை கவனிக்கவில்லை... அவர்களை சுற்றியிருந்த பாடிகார்ட்ஸிம் இதை கவனிக்கவில்லை. மெல்ல மெல்ல அவனிடமிருந்து விலகிய நேத்ரா சிறிது நேரத்தில் மாயமானாள்.
தனது வேலையை பேசி முடித்த விவேக் அப்பொழுது தான் நேத்ராவை தேடினான். அருகிலிருந்து தனது பாடிகார்ட்ஸிடம் கேட்டான்... அவர்களும் பார்க்கவில்லை என்றதும் அவனின் மனம் பதைத்து தான் போனது... எல்லா சூழ்நிலைகளிலும் இயல்பாக கையான்டவனால் தனது மகள் எனும் வரும்போது அவன் மூளை வேலை நிறுத்தம் செய்தது... ஒரு நிமிடம் தான் அத்தனையும் விவேக்காக இல்லாமல் வி கே வாக யோசித்தவன் தனது கார்ட்ஸை அழைத்து மால் முழுவதும் அவர்கள் கன்ட்ரோல் கீழ் கொண்டு வந்தவன் அடுத்த நிமிடம் அவளை தேடுவதற்கு தொடங்கினான்.
எல்லா இடங்களிலும் தேடியவர்கள் கடைசியாக அந்த மாலின் விளையாட்டு திடலில் தேட வந்தனர்... அங்கே இருந்தாள் அவனின் தேவதை.... அவளின் சிரிப்பால் அவளுக்கு அழகா... இல்லை அவளால் அந்த சிரிப்பிகு அழகா என என்னும் படியாக சந்தோஷமாக விளையாடியபடி பக்கத்தில் இருந்தவளிடம் தன் முத்து பற்களை காட்டி சிரித்துக்கொண்டு கொஞ்சி கொண்டிருந்தாள் நேத்ரா.
அவளை கண்டதும் தனது கார்ட்ஸிடம் தெரிவித்து விட்டு யாரையும் வரவேணாம் என்று சொல்லிவிட்டு தான் மட்டும் தன் மகளிடம் நெருங்கினான்... அவர்களை நெருங்க நெருங்க ஏனோ அவன் மனம் துடித்தது... இதுவரை இதுபோல நடந்தது இல்லை... ஏனென்ற காரணமும் விலங்கவில்லை. படபடக்கும் இதயத்துடன் அவர்களை நெருங்கினான். "டார்லிங்..."என்ற அழைப்புடன் அவர்களை நெருங்கினான். அவனின் அழைப்பை கேட்டு இருவரும் திரும்பினர்.
அவனைப் பார்த்ததும் அவனின் மகள் "டார்லிங்..." என்று வேகமாக அழைத்துக் கொண்டே அவன் கால்களை கட்டிப்பிடித்தாள். அவளைப் பார்த்ததும் தன் கால்களை விட்டு பிரித்தெடுத்து தூக்கி அனைத்துக் கொண்டான்... பின்னே இவ்வளவு நேரமும் அவளைக் காணாமல் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு அல்லவோ தெரியும். அவனை மரணத்தில் விளிம்பில் நிறுத்தினாலும் அவன் கவலை கொள்ள மாட்டான்... ஆனால் அவன் மகளை காணுவதற்குள் ஆயிரம் முறை செத்து பிழைத்து விட்டான். அவர்கள் இருவரும் தங்கள் உலகத்தில் இருந்தனர். பக்கத்தில் இருந்தவளை இருவரும் கவனிக்கவில்லை.
" டார்லிங் ஏன் டாடி விட்டு வந்தீங்க... டாடி உங்கள் எங்கெல்லாம் தேடனேன் தெரியுமா... டாடி கிட்ட சொல்லாம எங்கேயும் போகக் கூடாதுடா தங்கம்..." என்று சற்று ஆதங்கத்துடனே கேட்டான் அவனின் குட்டி ராட்சசியிடம்.
அவன் குரலின் வேறுபாடு அவன் மகளுக்கு புரிந்தோர் இல்லையோ அருகிலிருந்தவளுக்கு நன்றாகவே புரிந்தது...இவ்வளவு நேரமும் தனது மகளுக்காக அவன் தவித்த தவிப்பை. அதில் ஏனோ அவளுக்கு சிறிது பொறாமையையும் உண்டு பண்ணியது. அது ஏன் என்று தான் அவளுக்கும் தெரியவில்லை. அவர்களின் இருவரின் குரலும் அவளை நினைவுக்கு கொண்டு வந்தது.
"சாரி டாடி... நான் டாய்ஸ் பாத்துட்டு வந்தனா அப்போ வழி தெரியல... நீங்க எங்க இருக்கீங்கன்னு மறந்துட்டனா... எனக்கு அழுக அழுகையா வந்துச்சி... அப்போ இவங்க தான் என்ன அழுகையை நிறுத்த இங்க கூட்டி வந்தாங்க..." என்று தனது மழலை மொழியில் கூறினாள். அவள் கூறியதில் பாதி அவனுக்கு புரியவில்லை... கேள்வியுடன் அருகிலிருந்தவளை பார்த்தான்.
அவன் பார்வையில் அங்கு நடந்ததை கூறினாள் அவள்... நடந்தது இதுதான்... விவேக் ஃபோன் பேசும் போது நேத்ரா அந்த இடங்கள சுத்தி பாக்குறா பாக்கும் போதுடாய்ஸ் ஷாப்ல ஒரு அழகான பர்பி டால் தெரியுது... அதை பார்த்ததும் அவளோட அப்பா கையவிட்டுட்டு அதை பாக்க போயிர்றா... (விவேக் பிஸ்னஸ் கால்ங்குறதால அவ இல்லாதத கவனிக்கல.... அவன் தான் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனாச்சே.. வேலைன்னு வந்துட்டா அதுக்குள்ளேயே மூழ்கிடுவான்... நேத்ரா பக்கத்தில் இருக்கும் போது மட்டும் அதைப்பத்தி யோசிக்க மாட்டான்.. ஆனா சிலசமயம் இது மாதிரி அப்பப்போ ஓர்க் வந்துடுது... அதுவும் பாரின் கால்... இதற்கு அவன் பதில் சொல்லவில்லை என்றால் அவனுக்கு அதில் சில கோடிகள் நஷ்டம் தான்.. அவன் பணத்தை பற்றி கவலைபடவில்லை...ஆனால் இதை நம்பியிருக்கும் தனது ஊழியர்களுக்கு நிலை... அந்த நினைவுடன் தான் அவன் அந்த ஃபோன் காலிற்கு பதில் சொல்ல வேண்டியதாகிவிட்டது.. அதை முடித்து வருவதற்குள் அவன் மகள் அவனைதவிக்கவிட்டாள்.) அந்த பர்பி டால் பார்த்ததும் அவ அப்பாவ விட்டு விலகி போகும் போது வழிய மறந்துடுறா.. அவ அப்பாவ நினைச்சு அழும் போது வந்து சமாதானம் பண்ணி இங்க கூட்டி வந்ததாகவும்... இப்பொழுது அந்த காம்ப்ளக்ஸ்ல இருக்கற சிசி புட்டேஜ் பார்த்து அவன்கிட்ட ஒப்படைக்கனும் நினைச்சதாகவும் சொல்றா... அதுக்கு முன்னே அவ அழுகையை நிப்பாட்டதான் இங்கே அழைத்துக் கொண்டு வந்ததாதகவும் சொல்றா அந்த புதியவள்.
அவளை ஒரு நொடி பிஸ்னஸ் மேன் வி கே வாய் அளவிட்டான்.. எளிமையான காட்டன் வண்ண புடவையில் கண்களில் நேர்மையுடனும் முகத்தில் கம்பீரத்துடனும் இருப்பவற்றை பார்த்து அவள் பொய் சொல்லவில்லை என்று தெரிந்தது... அவன் அளவிடும் பார்வையில் இருக்கும் விசாரணை அவளுக்கும் தெரியாமலில்லை... இல்லையெனில் இவ்வளவு தடைகளை தாண்டி அவளும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பாளா.
" டாடி... "என்ற நேத்ரா வின் குரலில் அவர்கள் இருவரும் தத்தம் நினைவுகளிலிருந்து வெளிவந்தனர்.
"சொல்லுடா பிரின்ஸஸ்..." என்று மகளுடன் உறவாட துவங்கிவிட்டான்.
அவனது உடையும் கம்பீரமுமே சொன்னது வசதி படைத்தவன் என்று..
"எஸ்கியூஸ்மி சார்... நான் கிளம்புறேன்.. உங்க பொண்ண உங்ககிட்ட விட்டாச்சு.. வரேன்..." என்று இருவரிடமும் விடைபெற கூறினாள். அவள் கிளம்பும் சமயம் நேத்ரா விடமிருந்து வந்த அழைப்பு அவளை நிலைகுலைய செய்தது அதே இடத்தில் சிலையாய் நிற்க வைத்தது. அவளுக்கு மட்டுமல்ல விவேக்கிற்கும் தான். அவன் அதிர்ச்சியுடன் நேத்ராவை பார்த்தான்... அவள் இதுவரை வெளிப்படுத்தாத வார்த்தை.. அவள் அவனிடம் இதுவரை கேட்காத வார்த்தை. ஆம் அவள் அந்த புதியவளை 'அம்மா' என்று அழைத்தாள்.
"அம்மா...எங்க போறிங்க என்ன விட்டுட்டு..."
விவேக் அப்புதியவளின் முகத்தை கூர்மையான பார்வையுடன் அளவிட்டான். அவளோ அவனிற்கும் மேலாக அதிர்ந்து நின்றாள். அதிலேயே அவனுக்கு முழுவதுமாய் புரிந்தது அவள் தன் தேவதையை காத்தவளென்று.... அவனுக்கு இருந்த சந்தேகமும் பறந்து போனது... உடனே தன் மகளிடம் திரும்பியவன் "டார்லிங் இவங்க உங்க அம்மா இல்லைடா..." என்றான் அவளை சமாதான படுத்தும் நோக்கத்துடன்.
" நீ பொய் சொல்ற டார்லிங்... இவங்க தான் என்னோட அம்மா... என் ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க யாராவது அழுதா அவங்கவங்க அம்மா வந்து அழ விடமாட்டாங்களாம்... நாம அழுதா விளையாட்டு காட்டி சிரிக்க வைப்பாங்களாம்...அப்போ இவளோ நேரம் இவங்கதான என்ன அஅழவிடாம பாத்துகிட்டாங்க...அப்போ இவங்க தான எங்க அம்மா..." என்று அவளுக்கு தெரிந்த வகையில் வாதாடினாள் தனது தந்தையானவனிடம்.
அவனுக்கு எப்படி அவளை சமாதானம் செய்வது என்று புரியவில்லை... உண்மையில் இத்தனை நாள் அவள் தனது தாயை தேடவில்லை.. அவள் தேடும் அளவிற்கு விவேக்கும் விடவில்லை... அலுவலகத்தை தவிர வேறெங்கும் தனது மகள் இல்லாமல் சென்றதில்லை... அதனால் அவள் தன் தாயை நினைப்பதில்லை என்று நினைத்தான்... ஆனால் அவள் மனதில் ஆழமாய் தாய் நினைப்புள்ளது என்பதை நினைத்து வேதனைப்பட்டான். எவ்வளவு முயன்றும் தாயின் இடத்தை தந்தையால் நிரப்ப முடியாதா... என் நேது குட்டியின் ஆசை நிறைவேறாது என்று எப்படி சொல்வது கலங்கிய மனதை வெளிகாட்டாமல் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு தனது மகளை சமாதானப்படுத்த முயன்றான்.
" டார்லிங் அவங்களுக்கு முக்கியமான வேலை வந்துடுச்சாம்டா... அதான் அவங்க போறாங்க... இன்னொரு நாள் கண்டிப்பா வருவாங்கடா... டாடி சொன்னா கேட்பீங்க இல்லை.. நீங்க டாடியோட பிரின்ஸஸ் தான..." என்று சமாதானப்படுத்தினான்.
அவளும் தன் தந்தை அருகிலிருக்கும் நினைவிலும் தாயை கண்ட சந்தோஷத்திலும் தந்தை சொன்னதற்கு ஒப்பக்கொண்டாள். பொதுவாக பெண் குழந்தைகள் தந்தையின் அருகாமையிலும் ,செல்வாக்கிலும் தந்தை சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்வர்...இதற்கு நேத்ராவும் விதிவிலக்கல்ல... சந்தோஷமாகவே ஒப்புக் கொண்டாள்... விரைவில் தன்னை கான வரவேண்டும் என்ற நிபந்தனையுடன்... தந்தைக்கும் மகளுக்கும் நடந்த வாக்குவாதத்தில் பார்வையாளராகவும் இல்லாமல் அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள் புதியவள்.
விவேக் மெதுவாக நேத்ரா வை சமாதானப்படுத்தி விட்டு புதியவளை பார்த்தான்... அவள் அதிர்ச்சியிலிருந்து விலகவில்லை என்று அறிந்தவன் மெதுவாக நேத்ரா வை இறக்கி விட்டு தன் கண்பார்வையிலே விளையாட சொன்னான்... அவள் அங்கிருந்த சிறு ஊஞ்சலில் அமர்ந்து விளையாடவும் தான் புதியவளிடம் திரும்பினான்.
"மேடம்... ஹலோ.."என்று அவளை தன்புறம் திரும்ப்பினான்.
அவனின் குரலில் வெளிவந்தவள் சொல்லுங்க "சார்.. சாரி பாப்பா ஏன் அப்படி சொன்னானு தெரியல... "என்றாள் ஒரு நிமிர்வுடனே.
" சாரி நான்தான் சொல்லனும்... என் பொண்ணு சொன்னதுக்கு.. தேங்க்ஸ் நீங்க பன்ன உதவிக்கு... பை த வே ஐ ஆம் 'விவேக் கண்ணா'...."
"ஐ ஆம் ரூபவாஹினி... தேங்க்ஸ் சொல்ல தேவையில்லை... அது என்னோட கடமை..." என்றாள் ரூபி
அவன் புரியாமல் அவள் முகத்தை கூர்ந்து பார்க்கவும் "சிட்டி கலேக்டர்... " அவன் பார்வைக்கு விளக்கம் கூறினாள்.
இருவர்க்குள்ளும் சிறு தடுமாற்றம் தோன்றியது... ஆனால் இருவரும் அதை வெளிகாட்டவில்லை... மன உணர்வுகளை முகத்தில் இருவரும் கொண்டு வரமாட்டார்கள்..அதில் இருவரும் கைதேர்ந்தவர்கள்... சிறிது நேரத்தில் அவனிடம் தலையசைப்புடனும் ஓர விழியில் நேத்ரா வை பார்த்தும் விடைபெற்றாள் ரூபி. அவனும் தனது மகளுடன் வீடு வந்து சேர்ந்தான்.. அலைந்து திரிந்த அசதியில் வரும்போதே நேத்ரா உறங்கி விட்டாள்... அவளை தூக்கி வந்து உடைமாற்றி படுக்கையில் கிடத்தினான். தானும் உடைமாற்றிவிட்டு தனது மகளின் அருகில் படுத்தான். இத்தனை நாளில் படுத்ததும் அவன் உறங்கியதில்லை... அவன் சரியாய் உறங்கி நாலைந்து ஆண்டுகள் கடந்துவிட்டது... ஆனால் இன்று உறக்கம் வருவது போல் இருந்தது... அதனால் உடனே படுத்துவிட்டான்... இத்தனை நாளாக கண்ணாமூச்சி காட்டிய நித்ராதேவி இன்று உடனே வந்துவிட்டாள்... இவனுக்கு நிம்மதியான உறக்கத்தை அளித்தவளின் தூக்கம் பறிபோனது என்னவோ உண்மை.
படுத்தவுடன் உறங்கிவிடுபவளும் அல்ல தான்... ஆனால் இப்படி தவிப்பவள் அல்ல... இன்றோ அவள் பார்த்துவிட்டு வந்த அந்த மகள் தந்தையை பற்றியே யோசித்தாள்... ஏனென்று அவளுக்கு விளங்கவில்லை...
இன்று அலுவலகத்திலிருந்து வந்ததும் சில அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைக்கு சென்றிருந்தாள். அப்பொழுது அவளின் ஐஏஎஸ் பயிற்சியின் போது நண்பனான ஐபிஎஸ் ஆபிஸர் கரண் கால் செய்து இந்த ஷாப்பிங் மால் வர சொன்னான்.. அவளின் நண்பன் மட்டுமல்ல அவளைப் பற்றி முழுவதும் அறிந்தவன்.. அவளுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உடன் இருப்பவன்.. அவளின் பக்கபலம் அவன்... உறவுக்கு உறவும் நண்பனுக்கு நண்பனும் ஆவான். அவனை சந்தித்துவிட்டு வரும் போது தான் நேத்ரா வை சந்தித்தாள்.. அவளின் அழகு முகம் வளர்பிறையாய் வளர்ந்து வரும் நிலவை ஒத்திருந்தது... அழகான விழிகள்... சிரித்தால் அழகாக குழி விழும் கண்ணங்கள்... இவ்வாறு அந்த முழுநிலவின் அழகில் விழுந்தவள் அவளே அறியாமல் பின்தொடர்ந்தாள்.
அப்பொழுது தான் கவனித்தால் குழந்தை மட்டும் தனியே இருப்பதை கண்டு.. யாருடன் வந்தாள் என்று அறிய அவள் அருகில் செல்லும்போது அக்குழந்தை அழுதது. அக்குழந்தை அருகில் சென்று "ஹேய் ஏஞ்சல் ஏன்டா அழறிங்கா... பாப்பா யாரோட வந்தீங்க... பாப்பா அழாம சொன்னா ஆண்டி பாப்பாவோட அப்பா அம்மாகிட்ட சேர்த்திருவன்டா தங்கம்மா... சொல்லுங்க பாக்கலாம்.." என்று கொஞ்சி கொண்டே அக்குழந்தையின் விவரமறிய முற்பட்டாள். ஆனால் சிறியவளே அவளின் சமாதானத்திற்கு அடங்கியவள் 'டாடி' என்ற வார்த்தையை தவிர வேறெதுவும் சொல்லவில்லை.
முதலில் குழந்தையை சமாதானம் செய்து விட்டு அதன் பின்பு அவளது பெற்றோரை இங்கிருந்து பாதுகாப்பு கேமராவில் கண்டறிந்து விடுவதே அவளது நோக்கம்... குழந்தையை விளையாட்டு திடலுக்கு அழைத்து சென்றாள்... குழந்தை ஓரளவு விளையாட்டில் சமாதானம் அடையவும் அவளை அழைத்து கொண்டு செல்லலாம் எனும் போது தான் வாலிபனின் பிரவேசம் நடந்தது..அவனைக் கண்டதும் சிறியவளின் முகம் மலர்ந்ததும் வந்தவன் அவளைக் கண்டு தன்னை அறியாமல் பெருமூச்சு விட்டு டார்லிங் என்று அழைத்து அவளருகில் வரவும் கண்டுவிட்டாள் குழந்தையின் தந்தை என.அதன் பின்பு அவனிடம் பேசியதை நினைவு கூர்ந்தாள்.
வணக்கம்... இந்த குழந்தை உங்களோடதா...
எஸ் மேம் தேங்க்யூ நீங்க செஞ்ச உதவிக்கு.. உங்ககிட்ட எப்படி பாப்பா வந்தா
நான் என்னோட வேலைய முடிச்சிட்டு போகும் போது குழந்தை அழற சத்தம் கேட்டுச்சு வந்து பார்த்தால் ஏஞ்சல் அழுதுட்டு இருந்தா முதல்ல கேட்டேன் ஆனா அவளுக்கு சரியா பதில் சொல்ல தெரியல டாடி ன்னு மட்டும் தான் சொன்னா தொடர்ந்து அழவும் தான் சரி முதல்ல குழந்தைய சமாதானம் பண்ணிட்டு கேமரா பார்த்து உங்ககிட்ட சேக்கலாம்னு நெனச்சேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க... எனிவே நீங்க இனி பத்தரமா பாத்துக்கோங்க.. ஏனா இப்போ குழந்தைக்கும் திருட்டுதான் இப்போ அதிகம்... என்று அவனிடம் சொல்லிக்கொண்டு விடைபெறும் போதுதான் முழுநிலவானவள் அவளை அம்மா என்று அழைத்தது. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தாய்மை உண்டு. பெற்றால்தான் பிள்ளை இல்லை. அம்மா என்ற வார்த்தையை அர்த்தத்தை முழுமையாய் உணர்ந்தவர்கள் அந்த வார்த்தையில் இருக்கும் அன்பை உணர்வார்கள்.
அப்படித்தான் அவளுக்குள்ளும் இருந்த தாய்மை விழித்தது...முதல் முறை பார்த்த ஒரு குழந்தை இதுவரை தன்னை பாராத குழந்தை பார்த்த முதல் நாளிலே பழகிய சில நிமிடத்திலே அம்மா என்று அழைத்தது அவளை நிலைகுலைய செய்தது. நடந்த நிகழ்விலேயே இருந்தவளின் தூக்கம் பறிபோனது...


பெற்றவர் உற்றவர் கூடி
திருமணம் நடைபெறவில்லை...
காதலும் ஊடலுமான தாம்பத்யம்
நடைபெறவில்லை...
மனமகிழ்வுடன் கருவறை
சுமக்கவில்லை...
பிள்ளை வலி கண்டு
பெற்றெடுக்கவில்லை...
உதிரத்தை கலந்து பாலாக்கி
உன் பசியாற்றவில்லை...
ஓர் நொடிக்குள் அம்மா
என்ற சொல்லில் அடைக்கலம்
தந்தாயடி கிளியே....


இவளின் நினைவு அவர்கள் இருவரை சுற்றியே இருந்தது..

அங்கே ஒருவன் இன்னொருவனிடம் "ஏன்டா அவள பாத்துட்டு கொல்லாத வந்த நம்ம இவ்வளவு நாள் காத்துகிட்டு இருந்தது வீன் போகலை...அவளை நாம தேடிட்டு இருந்தோம்..அவளே நம்மள தேடி வந்துட்டா... அடியே ரூபவாஹினி உன்னோட முடிவு ஆரம்பிச்சுடுச்சிடி.. என்னால நீ நிறைய இழந்துருக்க... இப்போ உன்னோட உயிரும் இழக்க ரெடியாயிக்கோ..." என்று கொக்கரித்தான்.
யார் யாரைத் தேடி வந்தது என்று இறைவனையன்றி வேராறிவாரோ....
 
Top