• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

என் தேடலானவளே 3

ரமா

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jan 11, 2023
Messages
25
ஆளரவமில்லா அந்த பங்களாவில் அவனின் சத்தம் மட்டும் அதிகமாகி ஒழித்தது... "என்னடா சொல்றீங்க அவதானா நல்லா பாத்தீங்களா டா..."என்று போனில் ஆக்ரோஷத்துடன் கத்தினான்.
" ஆமா பாஸ்... அவதான் ஆனா அப்போ இருந்த மாதிரி இல்லை பாஸ்.. இப்போ நாம நெனச்சாலும் அவள நெருங்கறது கஷ்டம் பாஸ்.. இப்போ எந்நேரமும் அவளோட போலிஸ் செக்யூரிட்டி இருக்கு பாஸ்... "என்று மறுமுனையில் இருந்து பதில் வந்தது.
" டேய் அவள பார்த்ததும் போட்டுத்தள்ளாம என்கிட்ட கதை பேசிட்டு இருக்கீங்களா டா... அடியே ரூபவாஹினி விட மாட்டன்டி உன்னை... உன்கிட்ட இருந்து அத்தனையும் பரிச்சவன்... இப்போ உன்னோட உயிரும் இழக்க ரெடியாயிக்கோ... உன்கிட்ட இருக்க உயிர் அதையும் பறிக்க போறேன் டி..." என்ற கோபத்துடன் தனது ஃபோனை சுவற்றில் அடித்து உடைத்தான்.
அவன் ரஞ்சித் குமார்... பரமேஸ்வரன் குருஃப் ஆஃப் கம்பெனிஸ் ஓனர் பரமேஸ்வரனின் ஓரே தவப்புதல்வன்... தந்தை எல்லோருக்கும் நல்லது செய்தால் இவன் அத்தனை கெட்ட குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளவன்.. மது மாது போதை வஸ்து இவை அனைத்தும் இவனின் நிழல் தொழில்கள்... இவை செய்வதற்கென தனியாக இந்த பங்களாவை வாங்கி இதில் தனது அத்தனை தப்பான நிழல் வேலைகளையும் செய்பவன்... ஆனால் இவை அனைத்தையும் தனது குடும்பத்திற்கு தெரியாமல் நடத்துபவன்.. குடும்பத்திற்கு நல்ல பிள்ளை.. கொலை செய்வதற்கும் அஞ்சாத மகாபாதகன்... இவனுக்கும் ரூபவாஹினிக்கும் நடக்கும் இந்த போட்டி நேர்மைக்கும் பொய்மைக்கும் நடக்கும் போட்டி...இதில் வெற்றி வாகை சூடுவது யாரோ...??
ஆதவன் முழுமதி யின் முகத்தை தன் கரம் கொண்டு மறைந்தான்... தன்னவளை யாரிடமும் விட்டுத்தர மனம் இல்லாமல்... முழுமதி அவளோ தன்னவனின் சொல்லிற்கு அடிபணிந்து தன்னை அவன் கரங்களுக்குள் சேர்பித்துக் கொண்டாள். முதலில் எழுந்த விவேக் தனது மகளின் பிறை நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு எழுந்து முதலில் தன்னை சுத்தம் செய்து கொண்டு அவனின் ஜிம் க்கு சென்று ஓர்க் அவுட் செய்ய ஆரம்பித்தான்.. கால் மணி நேரத்தில் தனது வேலையை முடித்துக்கொண்டு அறைக்கு வரவும் அவனின் நிலவுப் பெண்ணோ இன்னும் துயில் கலையாமல் உறங்கி கொண்டிருந்தாள். அவளை பார்த்து சிரித்துவிட்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.. குளித்து விட்டு வெளியில் வரவும் நேத்ரா எழுந்து அமர்ந்தாள்.
"குட்மார்னிங் பிரின்ஸஸ்... "என்றான்
" வெரி குட் மார்னிங் டார்லிங்..." என்று அவன் கழுத்தை கட்டிக் கொண்டே அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து உரசிக் கொண்டே கூறினாள்.
"பிரின்ஸஸ் வாங்க போய் பிரஸ் ஆகிட்டு பாப்பாவோட ஹெல்த் டிரிங் குடிக்கலாம்.." என்று அவளை குளியலறையில் விட்டு விட்டு போன் எடுத்து அவனுக்கு காஃபியும் நேத்ராவிற்கு ஹெல்த் டிரிங்கும் கொண்டு வரச் சொன்னான். அதற்குள் குளியலறையிலிருந்து மகளின் குரல் கேட்கவும் அங்கே சென்றவன் அவளை குளிக்க வைத்து உடைமாற்ற வைத்து அவளின் தலையை வாரவும் டோர் பெல் அடித்தது.. அவன் சென்று காஃபி டிரிங் இரண்டையும் வாங்கியவன் அங்கிருந்த பால்கனிக்கு எடுத்து கொண்டு மகளையும் அழைத்துச் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அமர வைத்து ஹெல்த் டிரிங் கை அவளிடம் கொடுத்து விட்டு காஃபியை அவன் எடுத்துக்கொண்டான். இருவரும் தங்களதுடையதை அருந்தி விட்டு அவளை அழைத்துக்கொண்டு கார்டன் வந்தான்... அங்கே அவளை அவன் கண்பார்வையில் விளையாட விட்டு தனது அலுவலக வேலையை கவனித்தான்... அப்பொழுது குருபரனும் வந்து சேர்ந்தான்... அவனும் இதே காம்பவுன்டில் தான் உள்ளான்... அவனுக்கு தாய் தந்தை யாருமில்லை... அவன் விவேக்கிடம் வேலைக்கு வந்த சிறிது நாளிலேயே இருவரையும் ஒரு விபத்தில் பறிகொடுத்தவன்... அவர்கள் இறக்கவும் சொந்த பந்தங்கள் அவர்களிடம் வாங்கிய கடனுக்கு இருக்கும் வீட்டையும் பறித்துக்கொண்டு அவனை வெளியில் அனுப்பினர்... அதுவரை சொந்தங்கள் என்ன செய்தாலும் நம் நன்மைக்கு தான் என்று நினைத்தவனின் நம்பிக்கை முற்றிலும் சிதைந்து போனது... போக்கிடம் இல்லாமல் வாடகைக்கு அறையில் தங்கியிருந்தவனை அவன் எதுவும் சொல்லாமலே அவனைப் பற்றி தெரிந்து கொண்டு விவேக் சென்று தனது இல்லத்திற்கே அழைத்து வந்தான்.. அன்றிலிருந்து இங்குதான் உள்ளான்.. ஆனால் அவனுக்கும் கூட விவேக் பற்றிய முழுமையான விவரம் தெரியாது...
" குட்மார்னிங் பாஸ்..." என்றான் குரு
அவனின் அழைப்பைக் கண்டு முறைத்தான்... அவன் முறைப்பதைக் கண்டு மனதினுள் 'அச்சோ ஆஃபிஸ்னு நெனச்சு சொல்லிட்டமே... இப்ப என்ன சொல்றது.. கடவுளே அங்கங்கே ரெண்டு மூனு பாஸ் வைச்சுக்கூட குப்பை கொட்றாங்க... ஆனா இவரு ஒருத்தர வச்சுக்கிட்டு நான் படற நாடு இருக்கே.. முடியல...' என்ற மனதினுள் தன்னையும் கடவுளையும் இணைத்தே திட்டியவன் "சாரி அண்ணா...என்று அசடு வழிந்தான்.
அவன் சொல்லிய விதத்திலும் முகம் போன போக்கையும் கண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே அவனின் கூற்றுக்கு தலையாசைத்தான்.
"இன்னொரு டைம் இப்படி நடந்துச்சின்னா மறந்து சொல்றதுக்கு வாய் இருக்காது பாத்துக்கோ..." என்று மிரட்டினான் அன்பையும் முரட்டுத்தனமாய் காட்டும் அந்த முரடன்.
அப்பா...தப்பிச்சோம் என்று மனதினுள் சொல்லிக் கொண்டவன் நேத்ரா விடம் திரும்பினான்.
"யாழு மா....என்ன பண்றீங்க.."
"குரு சித்தப்பா உங்களுக்கு கொஞ்சமும் அறிவு இல்லையா..." அவனை அப்படித்தான் அழைப்பாள் அது விவேக்கின் வார்த்தை... அதுமட்டுமல்லாமல் குருவும் அவளின் மேல் அதீத பாசம் வைத்துள்ளான்... அவனின் கடந்த காலத்தை மறக்கச் செய்த தேவதை அவள்.
" ஏன்டா...சித்தப்பா என்ன பன்னேன்... இப்படி சொல்றீங்க..." என்றான் புரியாமல்.
அதற்கு அவளோ "விளையாடறன்னு தெரியுது இல்லை... அப்புறம் என்ன என்ன பன்றன்னு கேள்வி வேற..." என்று தந்தைக்கு மகளென நிருபித்தாள்.
'ஆத்தாடி இந்த புள்ளை அப்பனை கொண்டிருக்கியா... பாத்து தான் பேசனும்' என்று மனதினுள்ளே சொல்லிக் கொண்டவன் "இல்லை டா சித்தப்பாவும் விளையாட வரலாமான்னு கேட்டேன் டா..."
அவனை மேலும் கீழுமாக பார்வையில் அளந்தவள் "நீங்க பிக் பாய் தான... நான் குட்டி பொண்ணு... என்கூட விளையாட போறிங்களே.... அப்போ நீங்க வளரவே இல்லையா சித்தப்பா..." என்றாள் சிரிப்புடனே.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தன் அலுவலக பணிகளிலும் கவனமாயிருந்தான் விவேக். அப்பொழுது தான் நேத்ரா நேற்று நடந்ததை நினைவு படுத்தினாள்.
" சித்தப்பா நான் நேத்து அம்மாவ பார்த்தேனே..." என்று சந்தோஷத்துடன் கூறினாள்.
அவள் அப்படி கூறியதும் தான் செய்த வேலையை விவேக்கின் கைகள் தானாக நிறுத்தியது. நேற்றுடன் அந்நினைவை மறப்பாள் என்று நினைத்திருந்தாள் அவளோ அதன் நினைவை சுமந்து கொண்டிருந்தாள். அவனுக்குமே நேற்று பார்த்தவளின் நினைவு தோன்றியது. ஆடம்பரமான அலங்காரமும் இல்லாமல் பகட்டான உடையும் இல்லாமல் எளிமையான காட்டன் புடவையில் முகத்திற்கு பவுடர் பூச்சும் இல்லாமல் எளிமையாக இருந்தவளின் தளிர் முகம் மனதில் பதிந்து போனது... அது ஏன் என்று அவனும் ஆராயவில்லை.. ஏன் அதுபற்றி மீண்டும் நினைவுகள் தன் மனதில் தங்கக்கூடாது என்ற உறுதியில் இருந்தான்.
குருவும் ஆச்சரியத்துடன் "யாழுமா என்ன சொல்றீங்க... அம்மாவா... எங்கடா பாத்தீங்க..." என்று விவேக்கை பார்த்துக் கொண்டே கேட்டான். அவனின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தவன் வேறெதுவும் சொல்லாமல் "பிரின்ஸஸ் நீங்க போய் உங்க டாய்ஸ் போய் உங்க பிலே ரூம்ல வச்சிட்டு வாங்க.." என்றான் அந்த பேச்சின் திரும்பவும் தொடரக்கூடாது என்பதில் உறுதியானான்.
குருவுக்கும் புரிந்தது அவன் அந்த பேச்சை தொடரக்கூடாது என்பதால் தான் பாதியில் நிறுத்தினான் என்பது. ஆனால் அவனுக்கு புரியாத விஷயம் நேத்ராவின் தாய் இருக்கிறார்களா... ஏன் அவர் இவர்களுடன் இல்லை... என்ற கேள்வி அவனின் முன்பு நின்றது. அவன் அப்படியே நிற்கவும் " நீ என்ன நின்னுட்டு இருக்க... ஆஃபிஸ் போலாமா இல்லை இப்படியே நிக்கலாமா...போ போய் சமையல் முடிஞ்சிருச்சான்னு பாரு போ.." என்று அவனையும் விரட்டினான்.
மூவரும் சாப்பிட்டு விட்டு நேத்ரா வை பள்ளியில் விட்டுட்டு இருவரும் அலுவலகம் வந்தனர். நேத்ராவை பள்ளியிலிருந்து மதியம் அவளின் பாதுகாவலர்கள் அவளை கவனிக்க நியமித்திருக்கும் வேலையாளும் வந்து அழைத்து செல்வர்... அலுவலகம் வந்ததும் விவேக்கின் அன்றாட ஷெட்யூலை அடுக்கியவன் "பாஸ் இன்னைக்கு சிட்டிக்கு புதுசா வந்த கலெக்டர் பாக்க போகனும்.. அப்பாயின்மென்ட் வாங்கிருக்கு பாஸ்.. அந்த கவர்மெண்ட் டெண்டர் விஷயமா... நம்ம கம்பெனி செலக்ட் ஆகியிருக்கு... உங்கள ஒரு தடவை நேர்ல பார்க்க சொல்லியிருக்காங்க பாஸ்.." என்றான்.
சரி ஒகே... போலாம் டைம் என்ன..
லெவன் தேர்ட்டிக்கு பாஸ்...
ம்ம்..ஓகே போலாம்... என்றதுடன் வார்த்தையை முடித்துக் கொண்டான்.
குருவுக்கும் தெரியும் இனியும் அவனிடம் எதுவும் வாங்க முடியாது என்று...' அய்யோ இந்த அப்பாவும் பொண்ணும் படுத்துற பாட்டுல நான் சீக்கிரம் கீழ்பாக்கம் போக வேண்டியது தான்..' என்று புலம்பிக் கொண்டே அவன் வேலையை பார்க்க சென்றான்.
இங்கே காலையில் எழுந்ததில் இருந்து மனம் நிலைக்கொள்ளாமல் தவித்தது ரூபிக்கு... ஏனென்று அவளுக்கு புரியவில்லை... காரணமில்லாமல் நேற்று தன்னை அம்மா என்று அழைத்த நேத்ராவின் நினைவு தோன்றியது...ஆனால் இனி தன்னிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை.. வாழ்வில் எல்லாவற்றையும் இழந்தாயிற்று.. எனக்கென்று நெருக்கமானவர்கள் இப்பொழுது யாரும் தன்னிடமில்லை.. இறைவா எதையும் தாங்கும் மனவலிமையை தந்துவிடு போதும்..' அதன் போக்கில் நேரம் நகர கிளம்பி அலுவலகம் வந்தாள்..
தனது அலுவலகத்தில் வேலையாய் இருந்தவளை கலைத்தது அவளின் தொலைபேசி... கரண் காலிங் என்று மின்னியது.
"சொல்லு கரண்... "என்றாள் புன்னகையுடன்.
"சாப்பிட்டியா வாஹி..." என்றான் கனிவுடன்.
"ம்ம்.. ஆச்சு டா... என்ன திடிர்னு இப்போ கால் பண்ணியிருக்க.. எதாவது உதவி தேவைப்படுதா ஸார்.." என்றாள் நக்கலுடன்.
"கண்டுபிடிச்சிட்டியா... ஈஈஈ..."என்று அசடு வழிந்தான் அவன்.
"வழியாத சொல்லுடா.." என்றாள் அதிகாரத்துடனே.
"வாஹி ப்ளிஸ் டி... அம்மாகிட்ட சொல்லுடி... நான் இன்னும் மேக்னா கிட்ட சொல்லலடி.. இப்போ மட்டும் தெரிஞ்சுது சாமி ஆடிடுவாடி...நீ சொன்னா அம்மா ஒத்துப்பாங்கடி..." என்று அவளிடம் வேண்டினான்.
"நீயெல்லாம் ஐபிஎஸ் ன்னு சொல்லாத டா வெளிய... அம்மாகிட்ட நீ சொன்னாவே ஒத்துப்பாங்கடா... ஆனா நீ என்கிட்ட கேட்கற.. எல்லாம் என் நேரம்...சரி வைச்சு தொலை ஈவ்னிங் வரேன்..."
கரண் தனது கல்லூரி தோழியான மேக்னா வை விரும்புகிறான்... ஆனால் அவனின் தாயோ மகன் மேல் உள்ள நம்பிக்கையில் தனக்கு தெரிந்த பெண்ணை பார்த்து அவனுக்கு திருமண ஏற்பாட்டில் இறங்கிவிட்டார். அதை முடியாது என்று சொல்லி திருமணத்தை நிறுத்த ஒரு நொடி போதும்...ஆனால் தாயின் மேல உள்ள பாசம் இத்தனை நாள் யாருமில்லாமல் தனியே தன்னை வளர்த்து ஆளாக்கிய தாயை எதிர்த்து பேச அவனால் முடியவில்லை. அதற்கு தான் தன் தோழியும் உடன்பிறவா சகோதரியை உதவிக்கு அழைக்கிறான்.
தனது வேலையை பார்த்து கொண்டிருந்தவளை பியூனின் அழைப்பு நிமிர்த்தியது.." சொல்லுங்க அண்ணா.."
" மேடம்... அந்த டெண்டர் விஷயமா பேச வி கே குருஃப் எம் டி வந்துருக்காரு மேடம்.. "
"அவங்கள அனுப்பி வைங்க அண்ணா..."
" ஓகே மேடம்..." என்று அவன் வெளியே சென்றான்.
சிறிது நேரத்தில் காலடி சத்தம் கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்... வந்தவனை பார்த்தவள்" நீங்களா..."அதிர்ச்சியில் எழுந்து நின்றாள்
அதே நேரத்தில் பள்ளியில் நேத்ரா ரத்தவெள்ளத்தில் மிதந்தாள்.

தேடல்கள் இல்லா வாழ்வில்லை...
சிலருக்கு படிப்பின் மீதான
தேடலிருக்கும்..
சிலருக்கு பணத்தின் மீதான
தேடலிருக்கும்....
சிலருக்கு பாசத்தின் மீதான
தேடலிருக்கும்...
சிலருக்கு காதலின் மீதான
தேடலிருக்கும்...
சிலருக்கு எதை தான் தேடுகிறோம்
என்றே புரியாது...
தேடல் நிறைந்த வாழ்வில்
சிலரின் தேடல் முடிவு பெற்றிருக்கும்..
சிலரின் தேடல் தொடர்கதையாய்
நீண்டிருக்கும்....
 

Joss uby

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 1, 2021
Messages
415
Nice ma
kavithai super
 
Top